பேரென்னவோ வெசாழக்கிழமைச் சந்தைதான். அவளுக்கோ வருசம்
முன்னூத்தி அறுவத்தஞ்சு நாளும் வியாபாரம் உண்டு. சந்தை மேட்டுக்கு பொறவால ஏரி. தண்ணீரெல்லாம் வத்தி வருசக்கணக்காச்சு.
ஆக இப்போது ஏரிப்பள்ளம். சந்தைத் திடல் முடிந்து ஏரிக்கு நடக்கும் ஒத்தயடிப்பாதை
தொடங்குமிடத்தில் சாலை போட்டு வேலை நடந்தது அவளுக்கு.
உள்ளூர் குடியானவ வலுசல்களுக்கு ஓசிச்சோறு என்றால்
ஒரு கிறக்கம். அந்தச் சந்தையில் ஆண்களுக்கு ஆசையான பண்டம் அவள். தொட்டு மை
வைத்துக்கொள்ளலாம். அப்படி யொரு மின்னும் கருப்பு. அரை மப்பென்பது போல் மயங்கி
நிற்கும் கண் ரெண்டும் . உடம்பு வாகுக்குப் பொருந்தாமல் குத்திட்டு நிற்கும் கனத்த
முலைகளை பக்கவாட்டிலிருந்து பார்த்தாலே போதுமாம்.
எல்லாவற்றையும் விட, படுத்து எழுந்தால் காசு கொடுக்கத்தேவையில்லை. என்னவும்
செய்யலாம், இழுத்த இழுப்புக்கு வருவாள். வெறி தீரச் சுமை இறக்க அந்த சுத்து
வட்டாரத்தில் இது போல் இளிச்சவாய்த் தொடுசு அகப்படாது. சமயத்தில் சேக்காளிகள்
சேர்ந்து இருவர் மூவரெனப் புணர்ந்து ரணமாக்கிவிடுவர். அப்போதும் கூட
மயங்காத்தாளிடமும் செருப்படி வாங்கிக்கொள்வாளே ஒழிய யாரையும் நொந்து கொள்வதில்லை.
முயங்க முயங்கவே கழட்டி வைத்த டவுசரிலிருந்து சில்லறை திருடுவதெல்லாம் அவளுக்குத்
தெரியாது. வர்றவன் இவள் கொலுசை, கம்மலை கழட்டிச் செல்லாமலிருந்தால் சரி.
ஒரே விசயம் அவங்காத்தாள் கண்ணுக்குச் சிக்காமல் இழுத்துப் போய் விட வேண்டும். வரமறுப்பவளுமில்லை வம்பில் கையைப் பிடித்து
இழுப்பாளுமில்லை. அது ஒரு தனிரகம். பாவமென்று சொன்னாலும் பத்தாது. மீறி மயங்காத்தாள் கண்ணில்
அகப்பட்டால் போச்சு. குடியானவனென்றால் வாய்வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டு, மனசுக்குள் வார்த்தை பேசியவாறே ஊமச்சியை அடித்து இழுத்துச் சென்றுவிடுவாள். பலவட்ட சாதியென்றால் முடிந்தது சோளி..
ஊட்டு வாசலேறி ஆத்தாள் அப்பனையெல்லாம் இழுத்துக் காசைப்பிடுங்காமல் விடமாட்டாள் மயங்காத்தா.
இழுப்பாளுமில்லை. அது ஒரு தனிரகம். பாவமென்று சொன்னாலும் பத்தாது. மீறி மயங்காத்தாள் கண்ணில்
அகப்பட்டால் போச்சு. குடியானவனென்றால் வாய்வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டு, மனசுக்குள் வார்த்தை பேசியவாறே ஊமச்சியை அடித்து இழுத்துச் சென்றுவிடுவாள். பலவட்ட சாதியென்றால் முடிந்தது சோளி..
ஊட்டு வாசலேறி ஆத்தாள் அப்பனையெல்லாம் இழுத்துக் காசைப்பிடுங்காமல் விடமாட்டாள் மயங்காத்தா.
மயங்காத்தாள் கண்பார்வையிலிருந்து இவள் அங்குமிங்கும் நகர்வதே கடுசு.கிழவி நகரும் நேரம் வாய்த்தாலும் அந்தக்குடிசைக்குள் புகுந்து சோளி
பார்க்கவும்,பயல்களுக்கு சாதி கவுரவம் இடங்கொடுக்காது. ஆக அவள்
குப்பை கொட்டவோ காடு கரைக்கு பேளப்போகையிலோ ஏரியோரம்
இழுத்துச் சென்றால் தானுண்டு.
பார்க்கவும்,பயல்களுக்கு சாதி கவுரவம் இடங்கொடுக்காது. ஆக அவள்
குப்பை கொட்டவோ காடு கரைக்கு பேளப்போகையிலோ ஏரியோரம்
இழுத்துச் சென்றால் தானுண்டு.
அப்படியும் புதரோரம் வைத்துப் புணர்க்கையில் கிழவி பின்னாலேயே மோப்பம் பிடித்து வந்து அவளை அடித்து இழுத்துப்போவதுண்டு.
.
‘கழுத முண்ட, ஒட்டனூட்டு நாயி ஓலுக்குக் காத்தாப்பிடி அரிப்பெடுத்தே அலையுறா? கூப்புட்டான்னா பொறவுக்கே போயிருவியா?’
‘கழுத முண்ட, ஒட்டனூட்டு நாயி ஓலுக்குக் காத்தாப்பிடி அரிப்பெடுத்தே அலையுறா? கூப்புட்டான்னா பொறவுக்கே போயிருவியா?’
‘காசுதராட்டியும் போச்சாதுன்னு உட்டா, சில்றத்தாயோளிக கொலுசு மொதக்கொண்டு உருவ மட்டும் விரிச்சுட்டு மல்லாந்துருக்கா பாரேன்’
‘எட்டுக்குத்துக்கு எளையவனெல்லாம் ஏமாத்தி இழுத்துட்டுப்போறான் தட்டுவாணி முண்டைக்கு எப்ப புத்தி மசுரு வந்து புளுதண்ணி குடிக்கப்போறானு தெரியல’
வார்த்தை வாங்காத நாளென்று எதுவுமில்லை. இருந்தும் இவை எதுவும் என்றேனும் அவள் செவிப்பறையில் ஏறியதுண்டா என்றால் கிடையாது. பிரமை பிடித்தாற் போலொரு இருப்பு. இன்னும் மீறிப்போனால் நாலைந்து வருசமிருக்குமா உடம்புக்கட்டு., அதுக்குள்ளாரயுமே எந்தக்குடிகார நாயிகிட்டயாச்சும் சீப்பாரத்து சீலபரி வாங்கி நாசமாப்போய் விடுவாளோ என்பதுதான் கிழவி கவலையெல்லாம்.
சொல்லப்போனால்,இவள் இப்படியே பிறவியல்ல. வயசுக்கு வந்திருந்த
காலத்தில் வம்படியாய்த் தூக்கிப்போய் ஏரியோரம் வைத்துப் புணர முயன்ற பொரிக்காரன் ஒருவனின் உறுப்பை வெங்கச்செங்கல்லால் நசுக்கித் துரத்தினாள் என்றொரு பேச்சு உண்டு ஊருக்குள். அதிலிருந்துதான் புத்தி பிசகென்று கதை கிளம்பியது.
காலத்தில் வம்படியாய்த் தூக்கிப்போய் ஏரியோரம் வைத்துப் புணர முயன்ற பொரிக்காரன் ஒருவனின் உறுப்பை வெங்கச்செங்கல்லால் நசுக்கித் துரத்தினாள் என்றொரு பேச்சு உண்டு ஊருக்குள். அதிலிருந்துதான் புத்தி பிசகென்று கதை கிளம்பியது.
ஆத்திரத்தில் செய்வதற்கு அர்த்தம் சொல்லாது போனால் புத்தி பிசகென்றுதானே பொருள்; அதைத்தான் அவளும் நினைத்தாளோ என்னவோஅப்படியே இருந்துவிட்டாள். அர்த்தம் சொல்லாததால் அர்த்தமில்லாமலில்லை என்பதொருபுறம்.
ஊர் மேயும் ஆட்களுக்கு இந்த ஊமைக்கோட்டான் வசதிதான் என்றாலும் கொஞ்ச நாள் பயந்து போய் ஒரு பயலும் கிட்டே நெருங்காதிருந்தான். அதுவும் கல்லால் நசுக்கிய கதை கேள்விப்பட்டவெனெல்லாம் உனக்கொன்று உன் சாமானத்திற் கொன்று என பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு ஓடினான்.
அதுபோக,அந்தச்சந்தைக்கு அவள் வந்து சேர்ந்த கதை ஒன்று இருக்கிறது. ஏழெட்டு பிராயம் தானிருக்கும். வெய்யில் சாயும் நேரமாய் வந்து சந்தை நடுவே கூட்டத்தில் கையுதறிச் சென்றிருக்கிறான் அப்பங்காரன். பொழுது போனதும் கடையெல்லாம்
சுருட்டிக்கொண்டு ஆளாளுக்கு நடையைக் கட்டிக்கொண்டிருக்க, போறவன் எவனும் புழங்க வருவானா என்று காத்திருந்த மயங்காத்தா கண்ணில்
இந்தப் பொடிமனுசி விழுந்தாள். கண்ணீர் வழிந்து, மூக்குச்சளியொடு கலந்து கொண்டிருக்க நின்றவளின் அருகில் போனாள் மயங்காத்தா.
சுருட்டிக்கொண்டு ஆளாளுக்கு நடையைக் கட்டிக்கொண்டிருக்க, போறவன் எவனும் புழங்க வருவானா என்று காத்திருந்த மயங்காத்தா கண்ணில்
இந்தப் பொடிமனுசி விழுந்தாள். கண்ணீர் வழிந்து, மூக்குச்சளியொடு கலந்து கொண்டிருக்க நின்றவளின் அருகில் போனாள் மயங்காத்தா.
‘யாரு புள்ளடி நீயி...இதேன் நின்னுட்டு அழுவற… ஆரு கூட வந்த’
கேட்கப்பட்ட தொனியிலேயே மிரண்டாள் சிறுமி.
இன்னொரு மூச்சு அதற்கே அழுவாள் போல் தெரிந்ததும், மூக்கைச்சிந்திவிட்டு முந்தானையில் முகந்துடைத்துவிட்டு
சந்தை முழுவதும் அவளைத்தூக்கிக் கொண்டு ஒரு நடை போனாள் மயங்காத்தா.
கேட்பாராரும் இல்லை. பிறகு மீண்டும் தன் சாலைக்கு உள்ளே கூட்டிப்போய் அமர்த்தித் தண்ணீர் கொடுத்தாள். அடுத்தடுத்து கேட்டகேள்வியெதற்கும் பதிலில்லை. மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரெனக் . கட்டைக்குரலில் கரைந்தாள். ஊமச்சியென்பது தெளிவானது. ஆக தொலைப்பதற்காகவே சந்தைக்கு கொண்டு வரப்பட்ட பண்டமிது.
இன்னொரு மூச்சு அதற்கே அழுவாள் போல் தெரிந்ததும், மூக்கைச்சிந்திவிட்டு முந்தானையில் முகந்துடைத்துவிட்டு
சந்தை முழுவதும் அவளைத்தூக்கிக் கொண்டு ஒரு நடை போனாள் மயங்காத்தா.
கேட்பாராரும் இல்லை. பிறகு மீண்டும் தன் சாலைக்கு உள்ளே கூட்டிப்போய் அமர்த்தித் தண்ணீர் கொடுத்தாள். அடுத்தடுத்து கேட்டகேள்வியெதற்கும் பதிலில்லை. மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரெனக் . கட்டைக்குரலில் கரைந்தாள். ஊமச்சியென்பது தெளிவானது. ஆக தொலைப்பதற்காகவே சந்தைக்கு கொண்டு வரப்பட்ட பண்டமிது.
பொட்டப்புள்ள, பாக்கவும் நொட்டையில்ல., தொப்ப
தள்ளி மாரும் வயிறும் தொங்கத்தொடங்கியிருந்த மயங்காத்தாளுக்கு ஊமச்சியை கூடவே
வைத்துக்கொள்ள பிரியம் தான். பின்னும் சில வாரங்களுக்கு பொத்திப்பொத்தி வைத்தாள்
குடிசைக்குள்ளேயே… தேடி யாரும் வரவில்லை என்று உறுதியாகும் வரை நெஞ்சு
படபடத்துத்தானிருந்தாள் அவள்.
அதற்கடுத்த வருசங்களில் கண்ணைத்தின்னவனெவனும் சாராய
மயக்கத்தில் வந்தால் தான் உண்டு, என்றானது கிழவி பிழைப்பு. பழையபடிக்கு போக்கும் வரவுமில்லை. வருமானம் போதாமல் முறுக்கு சுட்டு விற்கத்தொடங்கினாள். ஊமச்சியை வைத்து
சீவக்கட்டை முடையச் செய்தாள். பேருக்கு எதோ சீவனம்
ஓடிக்கொண்டிருந்தது.
மயக்கத்தில் வந்தால் தான் உண்டு, என்றானது கிழவி பிழைப்பு. பழையபடிக்கு போக்கும் வரவுமில்லை. வருமானம் போதாமல் முறுக்கு சுட்டு விற்கத்தொடங்கினாள். ஊமச்சியை வைத்து
சீவக்கட்டை முடையச் செய்தாள். பேருக்கு எதோ சீவனம்
ஓடிக்கொண்டிருந்தது.
வருடம் போகப் போக, பருவம் வந்த ஊமச்சியை பக்குவம் சொல்லிப் பண்டமாக்கினாள் கிழவி. வெசாழக்கிழமையென்றால் அந்த ஜில்லா முழுவதுமிருந்து
சந்தைக்காரர் கூட்டம் குழுமிவிடும்.வாரத்தில் ஒரு நாள் பொருள் வித்த களைப்பிலும் காசுமூட்டை நிறைந்த திருப்தியிலும் வரும் கடைக்காரர்களில் ஒருவருக்கேனும் மயங்காத்தா மகளுக்கு காசிறைப்பதற்கு கசக்காது தான். மீதமிருக்கும் ஆறு நாளும் உள்ளூரில் ஓசிச்சோறாகாமல் பொத்தி வைக்கவேண்டியிருக்கும் ஊமச்சியை.
சந்தைக்காரர் கூட்டம் குழுமிவிடும்.வாரத்தில் ஒரு நாள் பொருள் வித்த களைப்பிலும் காசுமூட்டை நிறைந்த திருப்தியிலும் வரும் கடைக்காரர்களில் ஒருவருக்கேனும் மயங்காத்தா மகளுக்கு காசிறைப்பதற்கு கசக்காது தான். மீதமிருக்கும் ஆறு நாளும் உள்ளூரில் ஓசிச்சோறாகாமல் பொத்தி வைக்கவேண்டியிருக்கும் ஊமச்சியை.
அரிசிக்காரக் கிழவனுக்கு எழுபதைத் தொடுகிறது வயது.
மயங்காத்தாள் மடியில் வந்து கிடப்பது பல வருடப் பழக்கம். இப்போது நாடி செத்துவிட்டது;
நாக்கைக் கூட நீட்ட முடியாதுதான் என்றாலும் அம்மணத்தைப் பார்ப்பதில் அவனுக்கு ஆசை
கொஞ்சம் தணிந்துவிடுகிறது போல.
சந்தை நாளென்றால் விடியாலையே வந்துவிடுவான்
லாரியோடு. மயங்காத்தாள் குடிசையை ஒட்டி நிறுத்திவிட வேண்டியது. தார்ப்பாய்களை
எடுத்துக் கடை போடச் சொல்லி ஆட்களை அனுப்பிவிட்டால் ஆயிற்று. மகன் வந்து போனி
தொடங்க எப்படியும் மணி எட்டு ஒன்பது ஆகிவிடும் அதுவரை மூடாக்குப் போட்ட லாரிக்குள்
கிழட்டு மோளம் தான்.
லாரிக்கு நேரெதிர் நிற்கும் புளிய மரக்
கொம்பில் இந்தக்கூத்தைப் பார்ப்பதற்கென்றே சில்வண்டுகளின் கூட்டம் வேறு.
சந்தையென்ன ஊரா, சேரியா? வாரமொருதரம் வந்து போகும் காடுதானே. அதனால் கிழவியையும்
கேப்பார் மேப்பார் யாருமில்லை. கிழவனுக்கோ அவள் சாலைக்குள் கால் வைப்பது தான்
அசிங்கமாய்த் தோன்றுமே அல்லாமல் குஞ்சு குளுவான்கள் பார்த்துச் சிரிப்பதில்
எதுவும் பிரச்சனை இருந்ததில்லை.
மகன் வந்ததும் கடையில் சோளி... ஒன்றும் பெரிதாகப்
புடுங்கப்போவதில்லை கிழவன். காசை எண்ணி எண்ணி வைப்பது மட்டும் தான். உச்சி
ஏறிவிட்டதா… மீண்டும் சோத்துப்போசியோடு லாரிக்குச் சென்று கிடப்பு. மயங்காத்தாளுக்கோ தனக்கென வரும் ஒரே கிராக்கியை விட்டு விடவும்
மனசொப்பாது. ஊமைக்கோட்டானை தனியே விட்டாலும் பொழப்பு கிழிந்துவிடும் என்ற பயம். அதனால் அரிசிக்கடையில் போய் உக்காரச் சொல்லிவிடுவாள்.
அப்படி அரிசிக்கடையில் கிழவன் மகனைப் பார்த்துதான்
ஆம்பிளை ஆசை முதல்முறை கிளம்பியது இவளுக்கு. விரைத்த சாமான்
சிக்கிக்கொண்டால் பல்லை வெறுகி நிற்கும் நாயின் முகமாகத்தான் மீசை வைத்த எந்த முகமும் அவளுக்குத்
தோன்றியிருக்கின்றது. தன்னை அடிப்பதற்கும், உதைப்பதற்கும், புணர்ந்து புணர்ந்தே
கொல்வதற்கும் உரிமை கொண்ட எசமானர்கள் என்பது தாண்டி அவள் ஆசைப்பட்ட ஒரே ஆண் அவன்
தான்.
எத்தனையோ நாட்களாய் பொருமியிருக்கிறாள்
மனதுக்குள். அவன் வந்து கையைப்பிடித்து இழுத்துப்போக மாட்டானா என்று. ஊமச்சியை
மட்டும் சொல்லக்கூடாது. ஆசையை கிளப்பிவிட்டவனும் அவன் தான். முனுக்கு முனுக்குனு
இருந்தாலும் முன்னூறு குசும்பு செய்வான். சொந்தக்காரக் கைத்தடி ஒருவன்
கூடவே இருப்பான். அப்பவும் மூத்திரம் போக எழுந்தால் கூட இவளைத்தான் உக்காரவைப்பான் கடை நடுவில். போகிற போக்கில் உரசுவதும், மூட்டை தூக்கித் தரச் சொல்லி முலைகளோடு
முதுகையும் தோளையும் ஒட்டுவதுமாய்க் கிளப்பி விட்டிருந்தான். அவளுக்கென்னவென்றால், வான்னா வரப்போற தன்னையும் பாங்காப்
பார்க்கிறானே மனுசன் என்று உச்சி குளுந்துபோகும். அரிசிக்கடையோரம்
நிலைக்கல்லில் உட்கார்ந்து நேரம் போவதறியாது அவனைப்
பார்த்துக்கொண்டிருப்பாள். சப்பணங்கால் போட்டு உட்கார்ந்து அவன் படியளந்து
போடுகையில் கண்கள் சொக்கும் அவளுக்கு. சிவந்த உடம்பும், உடம்பெல்லாம் மயிருமாய்
அவனுடம்பு ஊமச்சியைக் கட்டிப்போட்டிருக்கும்.புருவமிரண்டும் இடைவெளியில்லாமல்
சேர்ந்திருக்கும் இடத்தில் முத்தமிடுவதாய்க் கற்பனை செய்துகொள்வாள். நெஞ்சின்
மயிரை அளைவதாக இவள் விரல்கள் காற்றில் நெளிந்து கொண்டிருக்கும். காசை வாங்கி தொடைக்குக் கீழே சாக்கிற்குள் வீசும் ஒரு நொடி; விலகும் அவன் வேட்டியின் இருட்டினுள் தனக்கான சொர்க்கம்
இருப்பதாய் உணர்ந்தாள்.அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே புழைக்கந்தின் முனையில்
ரத்தம் பாயும் அவளுக்கு.
அரிப்பைச் சொல்லக் கூசாத ஆட்களை பார்த்தவளுக்கு
ஆசையைச் சொல்லத்தயங்குபவன் மேல் பிரியம் பொங்கியது. அவளுக்குச் சொல்ல
முடியாதென்று விசனம்; அவனுக்கோ தான் சொன்னாலும் ஊமச்சிக்குப் புரியாதோ என்று
விசனம். வயசென்று பார்த்தால் அவளை விட மூத்தவனாய் நிச்சயம் இருக்கமாட்டான் அவன்.
ஊர்ப்பேச்சுக்கு பயந்த சுபாவம். அப்பனைப்போல் இல்லை. கூழுக்கும் மீசைக்கும் ஆசை
அவனுக்கு. ஆட்கள் கண்ணுக்கும் சிக்காமல் அப்பனுக்கும் தெரியாமல் அவளைப்
புழங்கவேண்டும். கிழவியிடம் சொல்லிவிடுவாளோ என்றும் பயம். முன்னமே கிழவியையும்
இவளையும் பற்றிக் கொஞ்சமாகக் கேள்விப்பட்டிருந்தான். அப்படியும் கூட, ஆவது ஆகட்டுமென
முந்தின வாரம் ஒரு மாதிரியாகச் சொல்லியே விட்டான். அடுத்த சந்தையன்னைக்கு சாப்பிட
வாரேன் என்று...
ஊமச்சிக்கோ தலைகால் புரியவில்லை. மகள் போல
வளர்த்தாள் என்றாலும் கிழவி தன் வீட்டு அடுப்படியை நெருங்கவிட்டதில்லை ஊமச்சியை.
தனக்கும் புழங்காத சாதியோ கூட்டமோவென்று ஒரு சந்தேகம் தான். பருவம் வந்து அவளாய்ப்
பழகிய வரையிலும் தனியே தட்டும், சொம்பும், உண்டு கழுவ ஒரு மூலையும் என்று
ஒதுக்கித்தான் பார்த்தாள் கிழவி.
வளர்ந்த பிற்பாடு தான் தனியடுப்பு வைத்துக்
கொண்டாள் ஊமச்சி., அவள் கை ருசி அவளுக்கே மிதப்பைத் தந்தது. கிழவியிடம் உண்ட சோறு
மண்ணுக்கும் பொறாதது. கிழவியின் குழம்பும் ரசமும் கழுதை மூத்திரம் இதுதானோ
என்றிருக்கும். பிறகு தான், கூழோ களியோ தனக்கென சமைத்துக்கொண்டாள். அதன் ருசி அவள்
தவிர யாரும் அறிந்ததில்லை. நாய்க்கு வைப்பாள்; முழுசாய் நக்கிவிட்டு திரும்பிப்
படுத்துக்கொள்ளும் அவளைப்போலவே. சோறு மீந்தால், கொட்டிவைத்து காக்கை தின்பதை
வெறித்துப் பார்த்திருப்பாள்.
பொசுக்கென்று சோறுண்ண வாரேன் என்றல்லவா
சொல்லிவிட்டான் பாவி. வேறென்ன வேண்டும் இனிமேல். அவன் உண்ணட்டும் அப்படியே அவன்
கால் ரெண்டையும் பிடித்துக்கொண்டு அழவேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். அவன்
தொண்டையில் முதல் கவளம் இறங்கும் போதே செத்துவிட்டாலும் பாவமில்லை என்று
தோன்றியது. ஊமச்சிக்கு.
அந்த வாரம் முழுக்க வந்தவனிடமெல்லாம் அவன்
நினைப்போடே படுத்தெழுந்தாள். காய்ந்த மட்டை போலக் கிடக்கும் ஊமைச்சியா இதுவென்று
வியந்து தான் போனான் ஒவ்வொருவனும். ஒரு நாளுமில்லாமல் காசு வேண்டுமென்று கேட்டாள்
வந்தவனிடமெல்லாம். மறுப்புசொல்லாமல் கொடுத்தவன் நிறைய. காசுக்குத் தனியென்று
மாரைக் கடித்தான் ஒருவன். ரத்தம் பீறிட்டது. காயம் வலிக்கவில்லை அவளுக்கு.
ரத்தத்தின் சம்பளம் வலியை மறக்கடித்தது.
இன்னொருவன் சாராயம் குடித்தால் தானுண்டென்று
காசைக்கண்ணில் காட்டியே குடிக்க வைத்தான். மயங்கியவளை என்ன செய்தானென்று
தெரியவில்லை. உறுப்பெல்லாம் ரணமாக்கியிருந்தான். முட்புதருக்குள் அம்மணமாய்க்
கிடக்கவிட்டு அப்படியே ஓடியிருந்தான்.
அத்தனையும் பொறுத்திருந்தாள் ஊமச்சி. சந்தைநாளும்
வந்தது. உச்சிப்பொழுதுக்கு முன்னமே கிழவி போய்விட்டாள். வெளியடுப்பில் சமைக்க
முடியாது., பார்த்தாலும் பார்த்துவிடுவாள் கிழவி. அத்தனை வருசத்தில் முதல் தடவையாக கிழவியின் அடுப்படியில் உட்கார்ந்தாள். பயம்
பிடுங்கித்தின்றது. அரிசியும் பருப்புஞ்சோறு. ஆட்டுக்கறியும் சமைத்தானது. புதுசாய்
வாங்கிய தூக்குப்போசியில் சோறும் கறியும் நிரப்பி வைத்தாள். பின் எல்லாம் கழுவிக் கவிழ்த்தினாள். அத்தனை வருட வலியும்,
காயமும் அந்தச் சோற்றுப்போசியில் நிறைந்திருந்தது போல் நினைப்பு. அதையவன்
உண்டாலும் போதும் பொறந்த பொறப்பிற்கு அர்த்தம் என்று கொண்டாள். கிழவி திரும்பும்
நேரம் ஆனதும் போசியை முந்தானையில் மறைத்துக்கொண்டு சாலையிலிருந்து வெளியே வந்தாள்.
அரிசிக்கடையில் ஆளைக் காணவில்லை. இவளுக்கு முன்பாக
ஒத்தயடிப்பாதையில் காத்திருந்தான் அவன். சுற்றும் முற்றும் பார்த்தவள் வெடுக்
வெடுக்கென ஓட்டமும் நடையுமாய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஏரிப்பள்ளத்தின் நடுவே
கூட்டிப்போனாள். உச்சியில் இருந்தது வெய்யில்.மொட்டைப்பாறையின் ஓரமாகப் போசியை
வைத்துவிட்டு உட்கார்ந்தாள். வேர்த்துப்பூத்திருந்தது உடம்பெல்லாம். அவனுக்கோ மேல்
மூச்சு கீழ்மூச்சு. போசியைத் திறக்கப்போனவளை மறித்தவன் மாரைப்பிடித்து மேலே
சாய்ந்துகொண்டான். நினைவே தப்பிவிட்டது அவளுக்கு. ஊமச்சியின் முனகலில் ஒரு கணம்
பயந்துதான் போனான் அவன். காயம்பட்ட மாரைக் கசக்கிய கையைப் பற்றினாள்.
இன்னும் இன்னும் அழுந்தத் தேய்த்தாள்., வலியில்லை அதை வரம் என்று கொண்டாள்.
கால்கள் விரித்து அவன் கால்களொடு பின்னி, அவனைப்
பின்னிருந்து அழுத்தினாள். ஏறி முயங்கத் தொடங்கியவனுக்கு பாறையில் தேய்ந்து
முழங்கால் நோவது அறிந்தவள் சட்டெனத் தான் மேலேறினாள்; ஜென்ம வெறி. நனைந்து
கசகசத்தது தேகம் இரண்டும். ரத்தம் கசிந்த முட்டிகளில் பாறைமணல் துகள் ஏறி நற
நறவென்றரைந்தது. இன்னும் இன்னும்.. போதுமில்லை இருவருக்கும். பீய்ச்சிய
நீரனைத்தும் சூல்பையில் நிறையட்டுமென்று இறுக்கியணைந்தாள் அவன் மேல்.
அடித்த வெயிலில் கண்கள் திறக்கவழியில்லை. அவன் மாரின் மயிரெலாம் அளைந்தாள்.
கலவிக்கழிவை நாவால் துடைத்தாள். இடுப்பைப் பற்றிய கைகளை மெதுவாய் உதறி எழுந்தான்
அவன். அப்படியே மல்லாந்து கிடந்தாள் ஊமச்சி. உடல் அவளிடமில்லை என்றானது.
ஆசையென்றால் இன்னதென்றில்லை. அத்தனையும் தீர்ந்த திருப்தி.
புதர் மறைப்புக்குச் சென்றவன் உடுத்தித்
திரும்பினான். உள்ளபடியே மயங்கிக் கிடந்தாள் அவள். எழுப்ப நினைத்தவன்
சட்டெனத்திரும்பி நடக்கலானான். அவளுக்கோ எழ மனமில்லை. இன்னமும் மேலே
படர்ந்திருக்கிறான் அவன் என்பதாய்ப் பிரமை. உள்ளே சேர்ந்த வெம்மை உடனே கைகால்
முளைத்துப் புரள்கிறது அவளுள். சட்டென விழித்தாள்... சோறு?! விரசாய் எழுந்து
ஒண்ணுக்கு ரெண்டாய்ச் சீலையச் சுற்றிக்கொண்டு போசியுங்கையுமாய்த் துரத்தினாள்.
அவன் தூரம் சென்றுவிட்டான். கூப்பிடு தூரம் தான். ஊமச்சி என்ன செய்வாள்? எந்த வலியிலும்
குரலெடுக்க முயலாதவள் இரைந்து கூப்பிட்டாள். எவரையும் திடுக்கிட வைக்கும் சத்தமது.
திரும்பினான்., போசியைக்காட்டினாள். நின்றவனை
நோக்கி ஓட்டமாய்ப் போயடைந்தாள்.
’சுத்தி வா இல்லாட்டி இங்கயே இருந்துட்டு பொழுதோட
வா.. பொறவாலயே வராத....’ படபடவென்று பொரிந்து தள்ளினான்.
சரியென்று தலையாட்டிவிட்டு போசியை நீட்டினாள்.
வாங்கிக்கொண்டு விருவிருவென்று நடக்கத்தொடங்கிவிட்டான். அப்படியே அமர்ந்தவள் தான்.
நேரம் காலம் நகர்வது தெரியவில்லை. பொழுது சாயத்தான் திரும்பி வந்தாள்.
ஒத்தயடிப்பாதையினோரம் வெள்ளவேலாமரத்தடியில் போசி வீசிக்கிடந்தது.
கறுப்பெரும்புக் கூட்டம் படையெடுத்திருந்தது சோறெல்லாம்.
மூச்சடைத்தது அவளுக்கு. அழக்கூட முடியவில்லை.
எறும்பெல்லாம் தலை திருப்பிப் பார்ப்பது போலிருந்தது. தன்னைப் புணர்ந்த ஒவ்வொரு
முகமும் பல்லிளித்து அள்ளித்தின்றது சோற்றை. அடித்தொண்டையிலிருந்து கதறினாள்.
ஊமைச்சியின் பேச்சு அது. மனிதமிருகம் மறந்திட்ட உறுமல் அது. ஆயுசுக்கும்
பொத்திவைத்த அழுகையெல்லாம் உடைந்து பெருகியது. மண்டி போட்டு விழுந்தாள்.
மண்ணையள்ளி அள்ளி வீசினாள் சோற்றின் மேல். எறும்புக்கூட்டம் சிதறிச்சென்றது.
மடலிட : rajan@rajanleaks.com