Monday, January 21, 2013

கார்த்தி எனும் காவிய நாயகன்!

மாதவன்னு ஒரு நடிகர் இருந்தாப்ல! இப்ப படம் ஒண்ணியும் பெருசா நடிக்கக் காணோம்! அவரு ஏன் இப்பிடி மார்கெட் இல்லாம போனாருன்னு தெரில! கொஞ்சம் சூடு சொரணை இருக்கறது கூட காரணமா இருக்கலாம் போல!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஒரு விழா மேடையில ( விழா பாம்பேல நடக்குது!) நின்னுட்டு கீழ உக்காந்திருக்கற மாதவன எழுப்பி நக்கல் அடிக்கறாரு! கூடவே சைப் அலிகான். ஆர் மாதவன்ல ஆர்னா என்ன ரேட்டடானு கேக்கறாங்க! இல்ல ரங்கநாதன்னு சொல்றார் மாதவன். தொடர்ந்து  தமிழ்ல பேசச் சொல்லி விளையாடறாங்க! மாதவனும் இவனுகள மதிச்சு தமிழ்ல பேசுனா என்னான்னே புரியாம கெக்கே பெக்கேனு இளிக்கவும் அரங்கமே சிரிக்கிது! மாதவன் கடுப்பாகி போங்கடா கிறுக்க்குக் கதாநாயகனுகளான்னுடறாரு! இந்த வீடியோ கீழே!


இப்போதைக்கு தமிழ் சினிமாவுல அதகளம் பண்ணிகிட்டிருக்கற சிவக்குமார் சன்ஸ் சூர்யா கார்த்தி ஆகியோரின் வெற்றிப்பாதை தொடர்வதன் சூட்சமம் என்னான்னு தெரியல! ஒரு சாம்பில்! இதா கூட இருக்கலாம்! 

ஆந்திரால ஒரு சினிமா விழா! மொத வரிசைல கார்த்தி உக்காந்திருக்காரு! விழாவ தொகுக்கற அம்மணி வந்து எப்படி இருக்கீங்கனு தமிழ்ல கேக்குது! நம்மாளு ‘பாக உன்னாருன்னோ என்னமோ தெலுகுல பேசி அப்ளாஸ் அள்றாரு! அடுத்து அந்த அம்மணி தமிழ் ஆடியன்ஸ் புடிக்குமா தெலுகு ஆடியன்ஸ் புடிக்குமான்னு கேக்குது! நம்மாளு டெபனட்லி தெலுகு ஆடியன்ஸுதான்னு சொல்லிட்டு ஒரு வழி வழியறாரு பாருங்க! யப்பப்பப்பா! மிடியல! தெலுகு ஆடியன்ஸ் புடிக்கும்னா முடிஞ்சுது டெபனட்லின்னா என்னாபா! அதுக்கப்பறம் ஒரு வெளக்கணாட்டம் வேற! விடியோ கீழே!



இது பொழைக்கற புள்ள தொழில் கத்துக்கற மொற! இந்த மாதவனும் தான் இருக்காரே! ச்சை! எதுக்குய்யா கோவப்படணும்! தொழில்ல பொறும தான முக்கியம்!