Saturday, January 12, 2013

அலெக்ஸு பாண்டியன் - ஆஸ்கார் சினிமா

தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிப்போடுவதற்கென்றே வந்துள்ள திரைப்படம் தான் கார்த்தி நடிப்பில் ரிலீசாகியுள்ள அலெக்ஸு பாண்டியன். ஒரு நாலு வாரமாவே ஒரு சேனல் பக்கம் கூட போவ முடியாதபடிக்கு வெளம்பரம் போட்டு டார்ச்சர் பண்ணி ஒரு வழியா ரிலீசுமாகிடுச்சு.இந்தப்படம் ஹிட்டுன்னா கார்த்திதான் கன்பார்மா அடுத்த ஜூப்பரு ஸ்டாரு! 

இப்ப நாம சினிமாவுக்குள்ள போவோம்.

சந்தானத்தின் தங்கைகளாக வரும் மூன்று பிகர்கள் 1.கோடான கோடி நிகிதா 2. அது யாரு என்னான்னு தெரில இருந்தாலும் தேனட! 3. ரேணிகுண்டாவில் வரும் பொண்ணு. இவர்களின் மாமனாக கார்த்தி. 

இந்த மூன்று பிகர்களும் மாமனை கொஞ்சிக் கொஞ்சி கவனித்துக் கொள்வதில் காண்டாகும் சந்தானம் போர்ஷனுக்காக, கன்னிராசி மற்றுமொரு ராமராஜன் படம் ஆகியவற்றில் வரும் காமெடிகளை உல்டா புல்டா போட்டு எடுத்திருக்கிறார்கள்.

மூன்று முழாம்பழ பிகர்களும் ஷிப்ட் போட்டு  கார்த்தியைக் கொஞ்சுவதைப் பார்க்கும் நமக்கே அடிமுதல் முடிவரை பக பகவென எரியும் போது சந்தானம் அந்தப் பிகர்களின் அண்ணன் வேறு இதை வைத்துக் காமெடி! அதுவும் உங்கூட்டுக்காமெடி எங்கூட்டுக் காமெடி இல்லை உலகக் காமெடி! 

மூன்றாவது தங்கையை நாம் அம்மன் படத்தில் வரும் பொண்ணு போல மங்களகரமாக நினைத்திருந்தால் பீப்பி பிப்பிப்பீ டும் டும் டும் அடிப்பேன் டம் டம் டம் பாடலில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறது பாப்பா. மூன்று பேருக்கும் டூ பீஸ் கார்த்திக்கு லெக் பீஸ் நமக்கு கில்பீஸ். பாடல் முழுக்க கண்ணிமைக்கவே இல்லை நான். படம் பார்க்கப் போகும் முன் குடித்தது பகார்டி லெமனா அல்லது பாற்கடலமுதமா என்று சந்தேகமே வந்துவிட்டது. டங்ஸனோ டங்ஸன்.

இந்தக் கெட்ட ஆட்டத்துக்குப் பிறகுதான் அந்த மூன்றாவது தங்கை முழுகாம ச்சை இது... வயசுக்கே வருது! அவ்வ்வ்வ்வ்! அடேய்ய் வயசுக்கு வராத புள்ளையப் புடிச்சுட்டாடா இந்த ஆட்டம் போட்ட! 

இதற்கிடையில் லோக்கல் ரவுடிகளுடன் ஒரு டைம் பாஸ் பைட்டு! கார்த்தியிடம் ஒரு ஆறுதலான சமாச்சாரம் ஆன்னா ஊன்னா அவங்கண்ணனாட்டம் சட்டையக் கழட்டி சிக்ஸ் பேக் காட்ட மாட்டார்! ஆனா அடியொண்ணொன்னும் இடிதான்யா!  ஒரு அல்லக்கை வில்லன் வந்து என் மடிலயே உளுந்துட்டான் அண்ணாத்த ஒதச்ச ஒதைல!

அடிச்சு முடிச்சுட்டு அந்த குட்டி தாதாவ (மெயின் தாதா தம்பி) குமிய வெச்சு 13 செகண்ட்ல க்ளீனா மொட்டையடிச்சு உட்டுடறாப்டி நம்ம அலெக்ஸு! மொட்டையடிச்சுட்டு தாடிய செரச்சு உடாம போற கார்த்திய பாத்து அந்த குட்டி தாதா கேக்குறான் ‘ டேய் நீ யார்கிட்ட விளாடிருக்க தெரியுமா’ன்னு. அதுக்கு கார்த்தி சொல்றார் ‘யாருன்னு தெரியத் தேவையில்லடா விளையாடத்தெரிஞ்சா போதும்’’னு. இத இன்னைக்கு மேட்ச தோத்துட்டு சாணியடி வாங்குற தோனி காதுல ஓதணும் போல இருந்துச்சு.

இந்த ரவுடி கடுப்பாகி அவங்கண்ணன் பெரிய தாதா பெயில்ல வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி அவர ( குண்டு சரவணன்) கூட்டியாந்து கார்த்தி கிட்ட காட்டுனா ‘என்னா சித்தப்பு செளக்கியமா’ன்னு கார்த்தி சொல்ல ‘மவனே நீ எங்கடா இங்க’ன்னு சரவணன் சொல்ல டக்குனு நாமளும் அந்த மொட்டத்தம்பியும் லுச்சாப்பயலுகளாயி பெப்பரப்பேனு முழிக்கறோம்..

இன்னொரு கார்ச்சேங் பைட்டு இருக்கு! ஆங் ட்ரைலர்ல பாத்துருப்பீங்களே பன மரத்துல வெள்ள சுமோ சொருகிகிட்டு வெடிக்குமே அதே பைட்டுதான்! 
வக்காளி என்னா பைட்டுன்றீங்க! ஒரு ஆம்னில கார்த்தி ட்ரைவர் சீட்ல, பக்கத்துல சந்தானம் பொறவால அனுஷ்கா! ஆம்னிக்கு பின்னாடி ஒரு இன்னோவால சுமன் அது போக ஒரு 30 கறுப்பு கலர் ஸ்கார்பியோ! 

ஆம்னி கிட்ட கூட அந்த வண்டிகளால நெருங்க முடியல. அப்பிடி ஒரு ஸ்பீடு! அந்த ரணகள பைட்டுல கூட கார்த்தி சந்தானத்துகிட்ட ‘ஏண்டா மச்சான் ஏசிய ஆப் பண்ணுன’ன்னு கேப்பாரு அப்பிடி ஒரு அசால்ட்டு ஆறுமுகம் அவரு! ஆம்னில ஏசியா? எதோ பலான தொழிலுக்கு யூஸ் பண்ண ஸ்பெசலா ரெடி பண்ணிருப்பானுக போல!  


அருவாள எடுத்து எதுத்தாப்ல வர்ற ஸ்கார்பியோ டயர்ல உட்டு அப்பிடியே அந்த வண்டியத் தூக்கி வானத்துல வீசிப்புட்டாருய்யா கார்த்தி! ங்கொக்கா மக்கா ஆடியன்சு பூரா ஆர்ப்பரிச்சுட்டான்னா பாத்துக்குங்க! 


ஆம்னியாலயே  ( ஆம்னி பஸ்ஸில்ல சோப்பு டப்பா ஆம்னி வேன் தான் )  எல்லா வண்டிகளையும் இடிச்சு துவம்சம் பண்ணி தப்பிச்சு போயிர்றாங்க! 

இந்த மெயின் வில்லன் அதாவது டானுக்கெல்லாம் டானுக ரெண்டு பேரு! சுமனும் இன்னொரு பயலும்! யாத்தே! செம வில்லனுகய்யா!  கிளைமேக்ஸுல ஒரு டீல் கையெழுத்தாக 1 மணி நேரம் இருக்குன்னு போரடிக்காம இருக்க ஓரமா கட்டிப் போட்டு வெச்சிருக்கற கார்த்தி கூட புட்பால் விளையாடி அடிக்கறாங்க. மிஸ்டர் லயோனல் மெஸ்ஸி அண்ட் டேவிட் வில்லா! அப்ப தெக்கு மூலைல தொங்கற அனுஷ்கா ஆம்பளையா இருந்தா அவுத்து உட்டு அடிங்கடான்னு கத்துறாங்க! ஆம்பளைன்னு நிரூபிக்கறதுக்காக கார்த்திய அவுத்து உட்டுடறாங்க வில்லன்ஸ்! அனுஷ்காவுக்கு தங்களோட ஆண்மைய நிரூபிக்க ஏன் கார்த்திய அவுத்து உடணும்னு கேக்காதீங்க! 

அப்பறம் நம்ம கார்த்தி நூறு நூத்தம்பது பேர அடிச்சுத்தொவச்சு 2 டொங்கல் பீஸ் வில்லனுகளையும் கொன்னுட்டு அனுஷ்காவ கட்டிப்புடிச்சுக்கறாரு! சுபம்.

படத்துல விசுதான் சி எம்! சிறப்பு! அருணாச்சலத்துல இருந்து இது மாதிரி பிம்பிளிக்கி பியாப்பி கேரக்டரா குடுக்குறாய்ங்கய்யா இவருக்கு! ராஜ் கபூரு கமிசனரு, பிரதாப் போத்தன் சிஎம் பிஏ! 

உலகம் முழுக்க நடக்கற போலி மருந்து வியாபரத்தின் கொடுமைகளைத் தடுக்கறதுதான் கதையோட பேஸ்மெண்ட்டுனா பாத்துக்குங்களேன்! 

சந்தானத்த வெச்சு கொஞ்சம் ஒப்பேத்திட்டாங்க ஃபர்ஸ்ட் ஆப! மொக்க தான் ஆனாலும் நெறைய டபுள் மீனிங் டயலாக்லாம் வந்து குஷிப் படுத்தீருது.

அனுஷ்காவுக்கு வயசு ரெம்ப ஆகிப்போச்சு! கோச்சடையான் முடியட்டும் அடுத்த படத்துல தலைவருக்கு அம்மாவாக்கிரலாம்! 

பிரதாப் போத்தனும் கடசீல டெரர் வில்லன்னு சொன்னாங்க சரிங்கன்னுட்டு வந்துட்டேன்!

பாட்டெல்லாம் ஒண்ணும் வேலைக்காவல அந்த மூணு பிகரு குத்துப்பாட்ட தவிர!  நடுவுல ஒருபாட்டுல டிஎஸ்பி மைக்க புடிச்சுட்டு காலு காலுனு கத்தீட்டு கெடந்தாப்ல! எவனும் கண்டுக்கல.

ஆக மொத்தத்துல படம் சூப்பரு! ஆஸ்கருக்கு தைரியமா அனுப்பலாம்!