Sunday, October 7, 2012

Piles, Empty Bottle and Me


கழுவி ஊத்துதல் நிமித்தமாக கோவை அவுட்டர் கிராமம் ஒன்றில் வாழும் என் நண்பரிடமிருந்து  எனக்கு ஒரு கடிதம் வந்தது. சமீபத்தில் அவர், புளியம்பட்டி, நம்பியூர், சேவூர், லூர்து புரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்ததாக எழுதியிருந்தார்.  அதோடு நிறுத்தியிருந்தால் இந்தப் பதிவை நான் எழுதியிருக்க மாட்டேன்.  என் மீது அவர் கொண்ட அதீதமான அன்பினால் மேலும் ஒரு வாக்கியம் எழுதியிருந்தார்.  “May be one day we can travel together to these places.”
அவருடைய எகத்தாளத்தை நான் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் என்னுடைய நிலைமையையும் கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  கடந்த 25 ஆண்டுகளாக இந்த வாக்கியத்தை (”May be one day we can travel together to these places”) பல்வேறு நண்பர்களிடமிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.  ஆமாம்.  கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறேன்.  அப்படிச் சொன்னவர்களை நான் இங்கே புண்படுத்துவதாக தயவுசெய்து எடுத்துக் கொள்ளக் கூடாது.  என் இடத்தில் இருந்து இதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.  கடந்த 25 ஆண்டுகளாக – இடையில்  விசாரணைக் கைதியாக சேலத்துக்கும் பாளையங்கோட்டைக்கும் போலீஸ் வேனில் போய்வந்தது  நீங்கலாக – எந்த ஊருக்கும் செல்ல முடியாமல் –- ஆனால் தொடர்ந்து இது போன்ற வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு எப்படி குடையும்?
இந்த டிஸம்பரில் எனக்கு 60 வயது தொடங்குகிறது.  சாப்பிடும் விஷயத்தில் மட்டும் உடம்பு 25 வயதுக்குரிய ’திறனுடன்’ இருந்தாலும் வேறு பல விஷயங்களில் மக்கர் பண்ணுகிறது.  உதாரணமாக, என்னால் இனிமேல் குப்பியடிக்க முடியாது.  கண்ட கண்ட சரக்குகளையும் அருந்த முடியாது.  பைல்ஸ் என்ற நாசமாய்ப் போன கொழுப்பு கன்னாபின்னா என்று பிதுங்கி விடுகிறது.  ஒரே ஒரு நாள் பழம் சாப்பிடாவிட்டாலும் போதும், மறுநாள் காலையில் நான்கு சுவரடைத்த 4*4 ரூமில் நான் கத்தும் ஓலம் ஊரையே கூட்டிவிடுகிறது  .  இதற்காக எங்கே போனாலும் பொட்டாசியம் பர்மாங்கனேட்டைத் தூக்கிக்  கொண்டு போக வேண்டியிருக்கிறது.  இது போக பூவன் பழத்தின் விலை இங்கே இந்தியாவில் 4 ரூ.
இந்த நிலையில் இன்னும் பயணங்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் எழுபது வயதிலா போக முடியும்?  பயணம் செல்லத் தடையாக இருப்பது பைல்ஸ் என்ற ஒன்றே ஒன்றுதான்.  எம் எஸ் வேர்ட் 50,000 டிக்கெட்கள் விற்கும்; உடனடியாக சேலம் கிளம்பி விடலாம் என்று நினைத்தேன்.  ம்ஹும்.  அதற்கெல்லாம் இன்னும் பல நூற்றாண்டுகள் போக வேண்டும் போல் இருக்கிறது.
ஆக, பயணம் பற்றி எனக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.  60 வயதில்தான் பக்கத்தில் இருக்கும் வாணியம்பாடி அக்பர் கவுசரிடமே  செல்ல முடிகிறது.
நண்பர் குப்புராஜ் வசிக்கும் ஒகேநக்கல்  போய் வரலாம், ஏதாவது ஒரு ப்ளாட்பார்மில்  பத்து நாட்கள் தங்கலாம் என்று நினைத்தேன்.  கனவு கண்டேன் என்று கூட சொல்லலாம்.  ஒகேநக்கல் இந்தப் பூவுலகின் சொர்க்கம்.  ஆனால் இந்தியக் காசில் முன்னூறு ரூபாய் தேவைப்படுகிறது.  பஸ் டிக்கட்டே மலைப்பை ஏற்படுத்துகிறது.  பயணம் என்பதே சொந்தக்காசில் செலவு செய்பவர்களுக்காக இருந்து வருகிறது. என் நண்பரைப் போல் உழைத்து சம்பாதித்தால் மட்டுமே  ஊர் ஊராய் சுற்றிப் பார்க்கலாம் என்று இருந்தால் என்னைப் போல் இந்தியாவில் வாழும் பிச்சைக்காரர்களின் நிலை என்ன?
ஒரு தமிழன் தமிழ் மண்ணையும் தமிழ் சினிமாவையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் சுவாசிப்பதைப் போல் நான்  ஆயில் மசாஜ் பற்றி 40 ஆண்டுகளாக சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.  கொடிவேரி போக வேண்டும். ராதாரவி, குஷ்பு  வாழ்ந்த சின்னத்தம்பி பங்களாவைப் பார்க்க வேண்டும்.  அந்த வீட்டு வாசலில் வாத்துகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன என்று ஒரு நண்பர் எனக்குச் சொன்னார்.  கொடிவேரி  பற்றி நான் எழுதியதையெல்லாம் படித்து விட்டு உத்வேகம் அடைந்து அவர் அங்கே போனார்.   வீட்டு முன்னே நின்று கொண்டு என்னை போனில் அழைத்து ‘அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே’ என்று பாடிக்காட்டினார்.  எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது.  பாயாசமாகவும் இருந்தது.  நான் எப்போது அங்கே போக முடியும்?  அதேபோல் பொள்ளாச்சி போக வேண்டும்.  அங்கே  ”சூரியவம்சம்” படத்தில் லேடி கண்டக்டர் போட்ட சக்திவேல் கவுண்டர் ட்ரான்ஸ்போர்ட்ஸ் பஸ் உலகப் பயணிகளின் காட்சிப் பொருளாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.  அந்த  பஸ்சின் கண்டக்டர் சீட்டில் அமர்ந்து பொள்ளாச்சி டு புளியம்பட்டி ட்ரிப் அடிக்க வேண்டும்.   எஜமானில் ரேக்ளா ரேஸ் ஓடும் அத்தனை இடங்களையும் பார்க்க வேண்டும்.  சூரியன் படத்தில் நீலகிரியின் வரலாற்றையே சொல்லியிருப்பார் கவுண்டர்.   அந்த ஊரின் ஒவ்வொரு தெருப் பெயரும் எனக்கு அத்துப்படி.  அந்த படத்தைப் பார்த்தால் கெட்டியிலேயே 20 ஆண்டுகள் வாழ்ந்தது போல் இருக்கும்.  அந்த ஊரை  எப்போது பார்ப்பது?
ஜீனோவிடம் அடிக்கடி சொல்வேன்.  இதையெல்லாம் முடிக்காமல் நான் இறந்து போனால் பைத்தியம் பிடித்த ஆவியாக அலைவது மட்டும் அல்ல; எழுத்தாள  ஆவியாகவும் அலைவேன்.  பைத்தியம் பிடித்தாலே தாங்க முடியாது.  எழுத்தாளனுக்கு  பைத்தியம் பிடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…
சில தினங்களுக்கு முன்பு என் நண்பர் பொன்னுச்சாமி உங்களுடைய  பயணத்துக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி காரிலிருந்து திடீரென்று என் மூஞ்சியில் 50 பைசாவை  வீசிச்சென்றார்.  அதில் கையையே வைக்காமல் கோழி அடை காப்பது போல் அடியில் வைத்து பாதுகாத்திருக்கிறேன்.  அந்தப் பணம் குஞ்சு பொரித்ததும்  சேலம் கிளம்பி விடலாம்.  ஆனால் அதற்குள் எனக்கு மீண்டும் பவித்ர மூலம் வந்து விடக் கூடாது.  2001 இலும், பிறகு 2006-இலும் அறுத்துப் போட்டேன்.  அதற்குப் பிறகு இன்னும் மூலம் பவுத்திரம் பக்கமே  போகவில்லை.  சேலம் சிவராஜ் மருத்துவசாலை  அதை விடவும் ரொம்ப தூரம். என்  படங்கள் மலையாளத்தில்  வந்தால் ஓரளவு நான் நம்பிக்கை கொள்ளலாம்.
தன்னுடைய நேரத்தையெல்லாம் சமூக சேவைக்காகவே செலவிட்டுக் கொண்டிருக்கும் என்  தோழர்  ஒருவருக்கு (மிக நன்றாக மலையாளம் அறிந்தவர்) சற்று முன்னர் தான் ஒரு கடிதம் எழுதினேன்.  ”உங்களுடைய ஒரு இரவில் எனக்கு ஒரு மணி நேரம் தேவைப் படுகிறது.   என் வாழ்நாளுக்குள் என் படங்களை மலையாளத்தில் பார்த்து விட வேண்டும்.  அதற்கு என் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகள் மனம் வைக்க வேண்டும்.  என் படம் மலையாளத்தில்  வெளிவந்தால் மட்டுமே இன்னும் பத்து ஆண்டுகளிலாவது என்னால்  கொஞ்சம் சில்லறை  பார்க்க முடியும்.” இதுதான் நான் எழுதிய கடிதத்தின் சுருக்கம்.
என் பிட்டுப் படங்களின் டிக்கெட்டுகள் தமிழில் அதன் தகுதிக்கு ஏற்ப இங்கே விற்பனை ஆகவில்லை; பேசப்படவில்லை; விவாதிக்கப்படவில்லை; ஏன், ஒரு எதிர்ப்பு கூட எழும்பவில்லை.  நான் எந்தத் தேவடியாள் வீட்டுக்குப் போனேன்; யாரோடு படுத்தேன் என்பது பற்றித்தான் சில பத்திரிகைகள் கவலைப்பட்டனவே ஒழிய (அது என் மனைவி கவலைப்பட வேண்டிய விஷயம் அல்லவா?) என் படங்களை யாருமே விவாதிக்கவில்லை.
ஆனால் எவ்வளவுதான் அவசரகதியில் டப்பிங் வேலைகள் நடந்தாலும் அதெல்லாம் மலையாளத்தில்  வந்து நான் ஊர்மேயப் போவதற்குள் என் வயது எழுபது ஆகி விடும் என்று தோன்றுகிறது.  எனவே பிச்சை புகினும் இச்சை நன்றே என்று சொன்னது போல் நண்பர்களிடம் பணம் பெற்று மேயப் போகலாம் என்று நினைத்திருக்கிறேன். திடீரென்று ஒரு நண்பர் வந்தார்.  ”இனிமேல் நீங்கள் பயணம் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.  மாதம் 30 காலி பாட்டில்  தருகிறேன்.  அதை சேர்த்து வைத்து எடைக்குப் போட்டு எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள்” என்றார்.  சொன்னதோடு மட்டும் அல்ல; சொன்னதை செய்யவும் செய்தார்.  மூன்று மாதங்கள் அந்தப் பாட்டில்களை பயபக்தியோடு சேர்த்தேன்.  இன்னும் கொஞ்சம் சேர்ந்தால் ஒகேநக்கலுக்கு டிக்கட் வாங்கி விடலாம்.  ஆனால் திடீரென்று பாட்டில் வரத்து நின்று விட்டது.  ஏன் என்றும் தெரியவில்லை.  நண்பரை அவ்வப்போது பார்க்கவும் செய்கிறேன்.  கேட்பதற்குக் கூச்சம்.  (வேறு யாராவது பிச்சைக்காரன் ஆட்டையைப் போட்டிருப்பானோ? )
சரி, மீண்டும் பணம் கேட்க ஆரம்பித்து விட்டேன்.  என் பயணச் செலவுக்கு.  முடிந்தவர்கள் அனுப்பலாம்; எவ்வளவு குறைந்த தொகையாக இருந்தாலும் சரி.  இது ஒரு உண்டியல்.  அவ்வளவுதான்.  மற்றபடி ப்ளாகில் திட்டுபவர்கள் திட்டவும் செய்யலாம்.  சென்றமுறை எழுதியதற்கு ப்ளாகில் ஒருவர் திட்டியிருந்தார்.  ஏன் சகோதரரே, என்னை என்னை விட ஒருத்தவர் மட்டமாகத் திட்ட முடியுமா?  நானே என்னைப் பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்கிறேன்.  அதை விடவா நீர் என்னைத் திட்டி விட முடியும்?
My தனலட்சுமி  bank account No.
9842291648
Account holder’s name: அறிக்கி என்கிற அறிவழகன்
Branch: கள்ளுக்காரன் தெரு, Mylapore,
Chennai
IFSC Code:    UTIB0245458
MICR Code:    8914561454
branch code:    0000007