Sunday, January 15, 2012

வேட்டை - ஓட்டை

பாக்யராஜ், எம் ஜி ஆர், சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்து 1990ல் வெளியான அவசர போலீஸ் 100 படத்தின் ரீமிக்ஸ் தான் லிங்குசாமி இயக்கி விட்டிருக்கும் வேட்டை! 

புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி நடைபெறும் அமைதிப்பூங்காவாம் தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் ரத்த ஆறு ஓடுவதாகவே அண்ணன் சர்வகாலமும் சிந்தையில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதற்கு எதாகிலும் இஸ்மா சட்டம் போட்டு தடுத்தாகவேண்டும் போலிருக்கிறது. இந்தவாட்டி தூத்துக்குடி! 


போலீஸ் பரம்பரையின் சமகால வாரிசுகளான மாதவன் ஆர்யா இருவரில் மாதவன் பயந்த பாக்யராஜ் (அதாவது சிலுக்கின் புருசன்) வேடத்தையும், ஆர்யா கண்ணாடி போடாத பாக்யராஜ் வேடத்தையும் ஏற்றிருக்கின்றனர். பயந்தாங்கொள்ளி மாதவனுக்கு அசைன்மெண்ட்டுகளை ரெயின் கோட்டு போட்டு முடித்துக் கொடுக்கும் அடியாள் ச்சை... சாரி!  அடிபோலீஸ் வேலையைப் பார்க்கிறார் ஆர்யா. தூத்துக்குடியில் இரு தாதாக்கள். இருவருக்கும் லடாய். முதல் பாதி முழுக்க இருவருமே சோதாக்கள்! காமெடியன் இல்லாத குறையைத் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தனர். 

மெயின் தாதாவுக்குஅண்ணாச்சின்னு பேரு! பாத்தா ஜுலூல் சேட் கணக்கா இருந்தான்! ஆனா எல்லா டையலாக்குலயும் எண்டுல வே சேத்துகிட்டதால அண்ணாச்சின்னு ஒத்துக்குவோம்வே!) . இன்னொருத்தன் மாரி(சோ). ரெண்டு தாதா ஆளுக மேலயும் மாதவனோட சப்ஸ்டியூட்டா ஆர்யா கைவெச்சுடறார். மொதல் தாதாவோட சரக்கு 4 லாரிய ( லாரிதான் சரக்குன்னு நெனச்சுட்டேன் நான்! கடசீ வரைக்கும் லோடு என்னன்னே சொல்லல அவ்வ்வ்!) ஆர்யா ரெய்ன் கோட் சகிதம் ச்சீஸ் செய்து மாதவனிடம் தர; அவர் கோர்ட்டில் ஒப்படைக்கிறார்! சண்டை முற்றுகிறது. ரெண்டு தாதாஸும் அண்ட் கோ போட்டு ஒரிஜினல் ஃபைட்டர் ஆர்யாதான் மேடி டம்மி என கண்டு பிடிக்கின்றனர்.

பின்னர் மாதவனை அடித்து துவைத்து பிராட்கேஜ் தண்டவாளத்தில் வீசிவிட ட்ரெய்ன் கிராஸ் ஆக 1/2 நொடி இருக்கையில் ஆர்யா மாதவன் பாடியை காப்பாற்றிவிடுகிறார். கால் கை உடைந்த காயங்கள் ஆறியதும் மாதவன் வெறிகொண்ட வேங்கையாகி வேட்டையாடுகிறார். ரெண்டு வேட்டையர்களும் தூத்துக்குடியின் ரவுடி சமூகத்தையே அழித்தொழிப்பதே மீதி கதை.


இந்த புதுவகையான கதையோட்டத்தினிடையே, மூன்று பாடல்கள் முடிந்து விடுகின்றன. மூன்றாவது நாயகன் சமீரா ரெட்டியும், ஹீரோயின் அமலாபாலும் அக்கா தங்கை. அரேஞ்சுடு மேராஜாக மாதவன் - சமீரா கன்னாலம் முடிந்துவிட, அமலா பால் - ஆர்யா காதல் தொடங்கித் தொடர்கிறது.

சமீரா ரெட்டி இதில் பெண் வேடம் போட்டு நடித்தாலும் மேக்கப் காட்டிக் கொடுத்து விடுகிறது. கிளைமேக்ஸில் பிரசவ வலியில் இருக்கும் அவரை ஆஸ்பத்திரிக்கு மாதவன் அழைத்துச் செல்ல முற்பட, ‘வேணாங்க நான் வலியப் பொறுத்துக்கறேன், நம்ம வீட்டுக்குள்ள நொழஞ்ச ஒரு வில்லன் கூட உசுரோட போவக்கூடாது அடிச்சுக்கொல்லுங்க, பாத்துட்டே போறேன்’னு சமீரா சொல்லும்போது, கல் நெஞ்சம் கொண்ட நானே ஒரு நிமிடம் கதறியழுதுவிட்டேன் :-( 


அமலா பால்! தனது முதற்படமான சிந்து சமவெளிக்குப் பின்னர் பெரிதாக(!) திறமை காட்ட வாய்ப்புகள் கிடைக்காததால், வேட்டையில் பெரிய அளவில் திறமை காட்ட முற்பட்டிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் தன்னிடம் இருப்பதில் ஓரளவு காட்டியே விட்டார் என்று சொல்லலாம். சில பல லிப் கிஸ்ஸுகள்; குளித்த ஈரத்துடன் டர்க்கி டவலை அவிழ்த்து தன்னழகைத்தானே ரசிப்பது; எதிர்ப்புறமிருந்த கண்ணாடி வழியே ஆர்யாவும் அதை ரசித்து விட்டதை அறிந்து வெட்கத்தால் நாணிக்கோணுவது என ஒரு மாதிரியாக செய்திருக்கிறார். 

மாதவன் முதல் பாடலில் டான்ஸ் ஆடுவதை பார்க்க ஆஞ்சநேயா அஜித் போலவே இருந்தது. படம் முழுக்க ஆர்யாவுக்கு அல்லக்கையாக நடித்து விட்டார். ஆர்யா கால்ஷீட் பிரச்சனையால் செகண்ட் ஹாஃபில் சில ஃபைட்டுகள் மாதவனுக்கு தரப்பட்டு இருகின்றன போலும்! இத இந்திக்காரனுவ பாத்தா அங்க அண்ணனுக்கு இருக்கற மருவாதி நாறிடும்!

ஆர்யா - ஒருத்தனுக்கு ஒரு அடி எனும் வியூக முறையில் படம் முழுக்க பலவிதமான WWE ஸ்டைல் சண்டை போடுகிறார். இடையில் அன்னாரது பஞ்ச் டயலாக்குகளும் விரவிக்கிடக்கின்றன! 

பாடல்கள் என்ற பெயரில் படு த்ராபையான சம்பவங்கள் நடந்தேறின.ஒன்று கூட தேறாது என்பது நிச்சயம்!


படத்தின் 90% காட்சிகள் பின்னிமில்லில் தான் நடை பெறுகின்றன! மீதம் இருப்பவை போலீஸ் ஸ்டேசன் செட்டும், ஒரு செட்டி நாடு டைப் வீடும் தான். ஆர்யா - அமலா பால் பாடல் ஒன்றை மெட்ராசில் எதோ ஐடி கம்பேனி வாசலிலேயே முடித்துவிட்டனர். (உள்ளார விடல போல!)

இளம் ஹீரோக்கள் படங்களில் இப்போதெல்லாம் அஜித் படம் சினிமாதியேட்டரில் ஓடுவது போல காட்சி வைத்து ‘தல தல’ன்னு அஜித்தை புகழ்வது மோஸ்தராகிவிட்டது. தல மன்றத்தில் ஆர்யாவும் அட்டனென்ஸ் போடுகிறார்.

ஓட்டையா படம் எடுத்து வேட்டைன்னு பேரு வெச்சிருக்காங்க!

மொத்தத்தில் லிங்குசாமியின் மொக்கைப் பட வரிசையில் இந்த ஓட்டை விழுந்த வேட்டையையும் சேர்த்திக் கொள்ளலாம்!

11 comments:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

/இந்த புதுவகையான கதையோட்டத்தினிடையே, மூன்று பாடல்கள் முடிந்து விடுகின்றன.

ஆர்யா - ஒருத்தனுக்கு ஒரு அடி எனும் வியூக முறையில் படம் முழுக்க பலவிதமான WWE ஸ்டைல் சண்டை போடுகிறார். இடையில் அன்னாரது பஞ்ச் டயலாக்குகளும் விரவிக்கிடக்கின்றன!

இளம் ஹீரோக்கள் படங்களில் இப்போதெல்லாம் அஜித் படம் சினிமாதியேட்டரில் ஓடுவது போல காட்சி வைத்து ‘தல தல’ன்னு அஜித்தை புகழ்வது மோஸ்தராகிவிட்டது. தல மன்றத்தில் ஆர்யாவும் அட்டனென்ஸ் போடுகிறார். /

Super.. :)

அக்கப்போரு said...

ஹா ஹா ஹா ... நீ நடத்து சித்தப்பு

ஸ்ரீதர்கண்ணன் said...

சமீரா ரெட்டி இதில் பெண் வேடம் போட்டு நடித்தாலும் மேக்கப் காட்டிக் கொடுத்து விடுகிறது. :)))))))))

கார்க்கி said...

ஹாஹாஹா

ubaisaji said...

//மூன்றாவது நாயகன் சமீரா ரெட்டியும், ஹீரோயின் அமலாபாலும் அக்கா தங்கை. அரேஞ்சுடு மேராஜாக மாதவன் - சமீரா கன்னாலம் முடிந்துவிட, அமலா பால் - ஆர்யா காதல் தொடங்கித் தொடர்கிறது///

இது "பாஸ் என்கிற பாஸ்கரன்"...

//மூன்றாவது நாயகன் சமீரா ரெட்டியும்// - ஹா...ஹா...ஹா.

ஆகாயமனிதன்.. said...

லிங்குசாமியின் வேட்டை'க்கு ஒரு extra கால் போட்டு 'வோட்டை' ஆக்கிட்டீங்க...

வடக்குபட்டி ராம்சாமி said...

என்னது சமீரா ரெட்டி பொம்பளையா?புது தகவல்!சின்மயியின் கட்டை ஆண் குரலுக்கு பொருத்தமானவர் சமீரா!ஆமா இந்த படத்திலும் "ஆண்" சின்மயி தான் டப்பின்கா?அப்படி இருந்தா படமே பாக்க மாட்டேன்!
************************************
முதல் பாடலில் டான்ஸ் ஆடுவதை பார்க்க ஆஞ்சநேயா அஜித் போலவே இருந்தது///
.
.
அது பாவம்யா!பெரிய தொப்பைய வச்சிக்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாழ்க்கைன்னு வேர்க்க விருவிருக்க அஜீத்து ஆடுவது பாவமா இருந்தது!வனவிலங்கு கொடுமை தடுப்பு சட்டம் போல இவரை டான்ஸ் ஆட சொல்லி வதைப்பதை தடுப்போம்!

தமிழ் திரை said...

பெரிய்ய்ய வெங்காயம் மாதிரி தோனினதெல்லாம் எழுதிடக் கூடாது ராசா....காலங்காலமா சூரியன அந்நாந்துதான் பார்த்துட்டு இருக்கோம். புதுசா பாக்கனும்னுட்டு புட்டத்து வழியாவா பாக்குறோம்....அதனால பாக்கும்போது பாக்குற பொருள புதுசா பாக்க நீங்க கத்துக்குங்க...தினந்தோறும் படுக்கையில பொண்டாட்டிய பாக்குற மாதிரி...அப்பதான் படம் நல்லா இருக்கும்!!!!!!!!!!!!

விடுதலை கரடி said...

@தமிழ் திரை
சரியா சொன்னீங்க!பழசு எதுவுமே இருக்க கூடாதுன்னா எதுக்கு இவனுங்க பல்லு வெலக்குரானுங்க?இப்ப இது ஒரு பேஷன்!ஒலக சினிமா பாத்தா மிதப்பு!இவனுங்க பத்து வருஷத்துக்கு முன்ன சிட்டிசன் தீனான்னு பார்த்தவனுங்க!இப்போ ஓவரா அளப்புரானுங்க!

மனித புத்திரன் said...

ஏம்பா ராசாதி ராசா!வழக்கமான காட்சி எதுவும் இருக்க கூடாதுன்னா நீ ஆகா ஓகோன்னு புகழ்ந்த கொசு தனுசு நடித்த மயக்கம் என்ன படத்துல குசு உடுவானே!குசு உடுவது வழக்கமான காட்சி ஆகாதா?
பார்த்திபனின் தோற்றத்தை கிண்டல் செய்த நீ தனுசின் அழகை பற்றி சொல்லவே இல்லையே!

Balas Sun said...

Thaimizh thirai you are right.