Friday, January 13, 2012

நண்பன் - Almost well !!!

விஜய் படம் என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என சிரிப்பவர்களுக்கு நண்பன் ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது. ஹிந்தியில் ஆல்ரெடி ஹிட்டடித்த 3 இடியட்ஸின் ஜெராக்ஸ் தான் என்றாலும், சமீபத்தில் டபாங்கெல்லாம் கொடூரமாக கவட்டைக்கிடையில் உதைபட்டிருந்தபடியால் இதுவும் பணாலாகிவிடாதா என்ற ஒரு சின்ன நப்பாசை தான் நமக்கும்! ஆனால் நண்பன் - ஆல் மோஸ்ட் வெல்!


ஆமீர்கான் இடத்தில் விஜயா? என்னைக் கேட்டால், இதற்கு ஆமீர்கான் தேவையே இல்லை விஜய் போதும்! இன்னுஞ்சொல்லப்போனால் விஜய் பொருத்தம். ஆனால், அவரது ரசிகர்களுக்கு அன்னார் அருவாளுக்கு சாணை பிடிக்கும் பாத்திரமாக நடித்து பெண்டெடுத்தால் தான் நிரம்பக் குஷி.


விஜய்க்கு அடுத்து ஆட்களைப் பிடிப்பதில்தான் கொஞ்சம் சறுக்கல். முதலாவதாக, இலியானா! ஒண்ணுமே இல்லை (அதாவது சொல்றதுக்கு)  அம்மணி கிழடு தட்டிப்போய் அம்மணத்துறவி பூனம் பாண்டே சாயலில் இருக்கிறார். டப்பா படமான கேடியில் கூட பார்க்கும்படியாக இருந்தார்; படம் துவங்கி அரைமணி நேரம் கழித்து அம்மணி ஒரு சப்பை சீனில் அறிமுகமாகையில் அட, ஆமால்ல! படம்னு ஒண்ணு இருந்தா ஹீரோயின்னு ஒண்ணு இருக்கும்லன்னு தோணுச்சு. அப்புறம் கடைசில பார்த்தா, இதுக்கு இல்லாமலே இருந்திருக்கலாம்னு தோணவெச்சிடுச்சு.  

ஜீவா.. நன்றாக காமெடி செய்யும் பயபுள்ளைக்கு கொஞ்சம் சீரியஸ் ரோலாகக் கொடுத்து விட்டார்கள்.

ஸ்ரீகாந்த்துக்கு கதிர், சசி போன்ற விக்ரமன் வழித்தோன்றல்கள்தான் லாயக்கு. இன்னமும் 1990 ரக நடிப்பையே சாறு புழிந்துகொண்டிருக்கிறார். ஆல் ஈஸ் வெல் என்ற அலையில் இந்த மட்டை கரை ஏறிவிடுகிறது.

சத்யன் - கொஞ்சம் சீரியஸாகவும் இருந்திருக்க வேண்டிய கேரக்டர் முழுக்கவும் காமெடி பீஸாகிவிட்டது.

சத்யராஜ் - சூப்பர் செகண்ட் இன்னிங்ஸ். ஹேர் ஸ்டைல், பாடி லேங்குவேஜ் என வெளுத்து வாங்கியிருக்கிறார்! வயசான ப்ரொபசர்களுக்கே உண்டான மொக்கை இங்கிலீஷ்! ஷ என்ற வார்த்தையை உச்சரிக்கையில் நாக்கை மேலண்ணத்தில் அழுத்தும் மேனரிசம் என பட்டைய கிளப்புகிறார். நெடுக டெரராக வந்தாலும், கடைசியில் கண்ணைக் கசக்கிக் கொண்டு திருந்தி விடுகிறார்.

எஸ் ஜே சூர்யா - 5 நிமிசத்துல நம்மள ஆள விட்டுடறார்; அந்த விதத்துல பாராட்டலாம்.

இது போக தெரிஞ்ச மூஞ்சிகளே இன்னும் 10க்கு குறையாம இருக்கும். அதனாலயே பாதி நியாபகமில்ல இப்போ.


ஃப்ரிஜ்ஜைத் திறந்தது போல ஃப்ரெஷ்ஷான ஒளிப்பதிவு விஜயை காலேஜ் பையனாகவே நம்ப வைத்துவிடுகிறது. அனேகமாக எல்லா கேரக்டரிடமும் அறை வாங்கிவிடுகிறார் விஜய்... நண்பர்கள், தலைவா என காலில் விழும் காட்சிகள் தவிர சுத்தமாக பில்ட் அப்புகள் தடை செய்யப் பட்டிருக்கின்றன. நல்ல விசயம். சீரியஸான இடங்கள் அனைத்துமே காமெடியாக்கப் பட்டிருக்கின்றன அல்லது காமெடி புகுத்தப் பட்டிருக்கின்றன.
ஐஐடி ரக இஞ்சினியரிங் காலேஜ்களையும் அரதப்பழசான மனனம் செய்து வாந்தியெடுக்கும் கல்வி முறையையும் ஏகத்துக்கும் விமர்சிக்கிறது நண்பன். ரொம்ப நாட்களுக்குப் பின் கல்லூரி கேம்ப்பஸ் படம், அதனாலேயே ஒரு கிக்.
காலேஜ் பிரின்சிபலை மூக்குடைக்கும் ஹீரோ சரடை, வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸில் நன்றாக கிண்டிக் கெழங்கெடுத்துவிட்டதால் நண்பனில் இப்போது புதுசாக தெரிவதில்லை! குஞ்சாமணிக்கு ஷாக் வைப்பது, பரிட்ச்சை பேப்பர்களைக் கலைத்துவிடுவது, புக் என்பதற்கு விளக்கம் சொல்வது போன்ற காட்சிகளில் விஜய் பிரித்து மேய்கிறார்.

  கிளைமேக்ஸில், ’’’அந்தக்க்க்க்கொழந்தைய்ய்ய்ய்ய்யே நீங்கதான் சார்’’’ ரேஞ்சில் விஞ்சாணியாக்கிவிட்டார்கள் விஜயை! படம் முழுக்க பஞ்சவன் பாரிவேந்தன்னு பேர் வெச்சிருந்தாங்க! இடைல பப்பூன்னாங்க கடசீல எதோ ஜப்பான் நாட்டு பேர சொல்லி இதான் ஒரிஜினல்னானுக! அந்தக் கெரகம் வேற இப்ப எனக்கு நியாபகம் வரமாட்டீங்குது! ‘கொசாசி பஞ்சமுஞ்சு’ன்னு நெனைக்கறேன்! சின்னச்சின்ன மொக்கைகள்,லாஜிக் மீறல்கள் ஆகியவற்றை விஜய் தனது ஸ்க்ரீன் ப்ரெசென்ஸினால் சரிக்கட்டிவிடுகிறார். ஒரு ஜனரஞ்சக சினிமாவாக நண்பன்- பொங்கல் பட்டாசு!

ஷங்கர் சினிமாவை விமர்சிக்கும் ரேஞ்சுக்கு ஆழ நோண்டாமல் விஜய் படம் என்ற அளவில் படத்தைக் கருதினால் நண்பன் - சூப்பர்! 

நண்பன் ஏமாற்றினால் என்ன!? இனி வரும் படங்களில் நம்மை எல்லாம் பழையபடி கிச்சு கிச்சு மூட்டும் விஜய் திரும்ப வருவார் என ஆவலுடன் காத்திருப்போம்! ஆல் ஈஸ் வெல்!