Saturday, November 26, 2011

மயக்கம் என்ன! - A Film By Selvaragavan!

விஷூவல் மீடியம் கலை வடிவமான சினிமாவில், இந்தியப்படங்கள் தொட மறுக்கும் அழகுணர்ச்சியை வடிக்க பாலுமகேந்திரா போன்ற சிற்சில இயக்குநர்களே முயன்றிருக்கின்றனர். அவ்வகையில் சமகாலத்திய வெளிச்சம் செல்வ ராகவன். எல்லா படங்களிலும் End கார்டில் A Film By போட்டுக்கொள்கிறார்கள் தான், ஆனால் அதற்கெல்லாம் வக்கு இருக்கிறதா அந்தப் படங்களுக்கு என்றொரு கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் செல்வராகவன் படங்களின் நிறமும், அழகுணர்ச்சியும் இன்ன பிறவும் தனித்துவம் மிக்கவை.

செல்வராகவன் போன்ற இயக்குநரின் படங்களை மேற்கத்திய படங்களுடன் ஒப்பிட்டு குறைத்து எண்ணுவதும், சில பல மொக்கையர்களின் மொக்கைகளுக்கு ஜனரஞ்சகம் என்ற பெயரில் கிரீடம் சூட்டுவதும் என்னளவில் ஏற்புடையதாக இல்லை. 

ஒரு ஐரோப்பியன் பனி பொழியும் மலைச்சாரலை கேமராவில் படம் பிடிக்கிறான் என்றால் இங்கேயும் செட் போட்டு, தெர்மகோல் அட்டையை தூள் தூளாக்கித் தூவிக்கொண்டு அதைப் படம் பிடிப்பது மடத்தனம். கேமராவில் காட்சிப்படுத்த அவனுக்கு பனி மலை எனில் நமக்கு வறண்ட பாறையாக இருப்பதுதான் இயல்பான ஒன்று. பாவைக்கூத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் நமது சினிமா இருக்கும்! இருப்பது அழகு! பாடல்கள், நாடகத் தன்மை என நமது சினிமாவுக்கான வார்ப்பு சிதையாமல் இருப்பதே நல்லது என்பது என் துணிபு.

நம் வாழ்வியலை, அதன் நிஜத்துக்கு மிகவும் அண்மையில் காட்சிப்படுத்தும் கலை கைவரப்பெற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் கிராமத்து மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பூமி என படமாக்குபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விதிவிலக்காக பாலு மகேந்திரா. மயக்கம் என்ன திரைப்படம் அவரது மாஸ்டர் பீஸ்களின் நிறத்தைக் கொண்டிருந்தது. நிஜத்துக்கு வெகு அருகில் நெருங்கி நின்றது என்றும் சொல்லலாம்.

மிகச்சிறந்த ஒரு நடிகனின் வெர்சடைல் ஆகிருதியை, திரையின் ஒரு மூலையில் தெரியும் தன் கண்களின் மூலம் கூட பார்வையாளனை கவர்ந்து ஈர்க்கும்; தன்னிடத்தில் ஒரு கூட்டத்தின் கருத்தை செறிவுடன்  நிற்கச்செய்யும் திறனை இதுவரை இல்லாத அளவு வெளிக்கொணர வாய்ப்பளித்திருக்கிறது கார்த்திக் கேரக்டர்! 

10 கதாபாத்திரங்களுடன் ஒரு ட்ராமா! யதார்த்தமான வசனங்கள், அழகிய கேமரா மொழி, வருடும் பின்னணி இசை, ஏற்கனவே ஹிட்டடித்த பாடல்கள். தனுஷ்-செல்வா காம்பினேஷன் - ஏமாற்றவில்லை.

மனதில் இருக்கும் ஸ்க்ரிப்டை போகிற போக்கில் ஷூட் செய்யும் செல்வராகவனின் வழக்கத்தாலேயே தென்படும் சிற்சில சொதப்பல்கள் மனதில் நிற்பதில்லை. 

படத்தின் மையம் தனுஷ்-ம் அவர் மூலம் வெளிப்படும் செல்வராகவனும் தான். வனவாழ்வு சார் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஹீரோ, மறுக்கப்படும் திறமை, காதல், சகிக்கவொட்டாத துரோகம், ஏமாற்றம், விபத்து, மனநிலை பிறழ்வு, காதலின் அரவணைப்பு, அதிர்ச்சி, மீட்சி, வெற்றி. இதுதான் கதைப்போக்கு! இதில் தனுஷ் மட்டுமின்றி ஏறக்குறைய எல்லோருமே நடிப்பில் சராசரிக்கும் மேலே! 


முதலில் தனது நடிப்பில் அன்னியமாகப் படும் ரிச்சா இரண்டாம் பாதியில் தனுஷுடன் போட்டி போடுகிறார். அதீத மனநிலை கொண்ட தனுஷால் கீழே தள்ளிவிடப்பட்டு கர்பம் கலைந்து ரத்தம் நிலமெல்லாம் பரவும் காட்சியில் தனுஷின் எக்ஸ்பிரஷன்ஸும் அதற்கடுத்து ரத்தக் கறை காய்ந்து படிந்த அந்த ஃப்ளோரை சுத்தம் செய்கையில் கதறும் ரிச்சாவின் நடிப்பும் அசாதாரணம். காய்ந்த ரத்தம் தனது குழந்தை என புரிந்து அழுவதுடன் மனச்சிதைவிலிருந்து மீள்கிறான் எனச் செல்கிறது திரைக்கதை.

டேட்டிங் காதலனின் நண்பனை நாயகி காதலிப்பது, நாயகனின் தங்கையை டேட்டிங் காதலன் கைப்பிடிப்பது போன்றவை வலிந்து திணிக்கப்பட்டவையாகவோ, விசித்திரமானவையாகவோ எனக்குத்  தோன்றவில்லை. இன்றைய நிதர்சனம் இதை ஒட்டியே இருக்கிறது.

விபத்தால் மனச்சிதைவில் இருக்கும் தனுஷின் மீது அன்பைச் சொரியும் ரிச்சா, அவ்விடத்தில் மிக அழகாய்ப் பொருந்தும் பிறைதேடும் பாடல், சைந்தவியின் குரல் ஆகியவை அன்பாய்(!)  இருக்கின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்வை அசாதாரணமாக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பாய் இந்தக் கதை மிக அழகான சினிமா! 

மனித மனத்தின் பக்கங்களை சினிமாவில் விரிக்கும் செல்வராகவனின் ரசனை, தெரிவு முதலியவை பாராட்டுதல்களுக்குரியவை. இறுதிக்காட்சிகளில் சுபம் போட மெனக்கெடுவது போன்ற கிளிஷேக்கள் செல்வராகவனின் நெகடிவ் கிளிஷேவைத் தவிர்த்த வகையில் ஓகே!


தனுஷைத் தவிர வேறெவரும் செல்வாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்! வெகுஜன ரசனைக்கு உகந்த படமாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்தப்படம் செல்வராகவன் பந்தயத்துக்கு விட்ட குதிரையாக இருக்காது என நம்புவதால் அதைப்பற்றிக் கவலை இல்லை.

வேறெதனுடனும் ஒப்பிட முயலவில்லை. ஒப்பீட்டளவில் சினிமா பார்ப்பது என் வழக்கமும் அல்ல. என் வரையில் மயக்கம் என்ன என்ற வினா வாக்கியத்தின் முடிவில் வினாக்குறியை அல்ல வியப்புக் குறியிடவே செய்வேன்! 

ராஜன்.

Friday, November 18, 2011

வித்தகன் - செத்த GUN

2005 வாக்கில் பார்த்திபனின் ‘பச்சக் குதர’ படத்தைப்பார்த்து பேதியானவன், ஆறு வருடங்கள் கழித்து இன்றுதான் (இடைல எதுனா அண்ணாத்த படம் வந்துச்சா?!) மீண்டும் சிக்கினேன் வித்தகனிடம்! அன்னார் இணையத்தின் டுவிட்டர் சந்திலும், மூஞ்சிபுக் நெடுஞ்சாலையிலும் வித்தகன் குறித்து அவ்வப்போது பிட்டுகள் போட்டுக் கொண்டிருந்தார். அது ஏற்றிய ஒரு மொக்கை ஹைப் அது மட்டுமின்றி இன்று எனக்கு ஆப்பி பர்த் டே என்பதால் ஆப்பீசுக்கு மட்டம்! எனவே மத்யான நேரத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு படத்துக்குச் சென்று பால்கனியில் பப்பரப்பா என்று குத்த வைத்தேன்.

நான் போன நேரம் டைட்டில் முடிந்துவிட்டிருந்தது. கிளீன் ஷேவ் செய்து ஐபிஎஸ் உடையில் தனது உயர் அதிகாரியிடம் பார்த்திபன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.ஆளே இல்லாத தியேட்டரில் கூட சீட் நம்பர் பார்த்துதான் உக்கார வேண்டும் என்ற கடமை உணர்ச்சி மேலிட்ட நான்  குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தாற் போல  சில பல இடங்களில் தடுக்கி கால் முட்டியில் சில்லறை வாங்கி பின்னர் ஒரு வலியாக அமர்ந்தேன். சில அல்லக்கைகளைக் சுட்டுக் கொல்லும் நம் வித்தகனுக்கு வேட்டையாடு விளையாடு ‘கற்க கற்க’ ஸ்டைலில் ஒரு பாடல் வைத்திருக்கிறார்கள்!

Where Where  is is is is a Gap, Gap!  There there is is is a Appu Appu.. இவ்வாறு செல்கிறது அப்பாடல்.! 

ஒரு கடமை தவறாத டெரர் அஸிஸ்டண்ட் கமிசனர் பாத்திரத்தில் பார்த்திபன் தன்னைத்தானே ஊத்திக் கொண்டிருக்கிறார்! பெயர். ரெளத்திரன்.ஐ.பி.எஸ்! கிளீன்ஷேவ்! இறுக்கமான உடல்! கறுத்த முகம்! இரண்டு கலர் உதடுகள் என போலீஸ் கெட்டப்புக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்! காலம் போன கடைசியில் உடம்பைக் குறைத்ததால் ஏற்பட்ட தொள தொள எஃபெக்ட் முகத்தில் தெரிந்தது! போலீஸ் ஆப்பீசருக்காக சிரைத்த மயிரற்ற முகவாயில் நான்கு விரல் பதிய யாரோ பளார் என அறைந்தா மாதிரி தழும்புகளும் டொக்குகளும்! மீசைக்கு யாரோ போட்டோஷாப்பில் டை அடித்தாற் போல அப்படி ஒரு கருமை! லிப்ஸ்டிக்கை உதட்டின் உள்பக்கம் வரை அடித்தால் டயலாக் டெலிவரியின் போது எச்சி ஊறும் என்பதால் பாதியிலேயே நிறுத்திவிட்டார் போலும். இரு நிறங்களில் காட்சியளித்தது. லிப்ஸ்டிக்கால் நன்கு ஒட்டிக் கொண்ட உதடுகளைப் பிரித்து சிரிப்பதற்கே பார்த்திபன் மிகுந்த சிரமப்படுகிறார் படம் நெடுக! பற்களில் பளீர் வெண்மை! டெண்ட்டிஸ்டின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. கண்கள் மற்றும் அவை சார்ந்த பிரதேசங்களை கூலிங் கிளாஸ் போட்டு மறைத்துவிட்டார்! வாய் மற்றும் அது சார்ந்த பிரதேசங்கள் தான் பிரச்சனை செய்து விட்டன. இனி கதைக்குள்(!)

கதையில் இரண்டு மெயின் வில்லன்கள், பல்லாயிரம் சப் வில்லன்கள்! மெயின் வில்லன்களுக்கு நாமகரணம் சூட்ட தமிழின் ஆகச்சிறந்த இரண்டு மொக்கைப் படங்களின் டைட்டில்களை தெரிவு செய்திருக்கின்றனர். 

1.பத்ரி 
2.சேனா

இவர்கள் கதைக்குள் பூந்து வரும் முன்பு நம் வித்தகனின் கமிசனர் அய்யா வித்தகனை ஒரு மந்திரி மகன்கேஸில் பிராடு செய்யச் சொல்லி வற்புறுத்தி பணத்தாசை காட்டுகிறார்! மயங்கவில்லை! பயம் காட்டலாம் என்றால் நமது வித்தகனோ அனாதை! இதுபோக ஒவ்வொரு டயலாக்குக்கும் பஞ்ச் பஞ்ச் ஆக பேசி தாலியறுக்கிறார் வித்தகன்! என்ன செய்வதென தெரியாமல் கமிசனர் தவிக்கிறார்! இப்படி ஒரு சூழலில் ஒரு தொழில் முதலையின் ஆட்களை வித்தகன் லாக்கப்பில் லாடம் கட்டுகிறார்! முதலை ஆப்பீஸிற்கு வந்து “நான் பாக்கத்தாண்டா வெள்ளையுஞ் சொள்ள, உள்ளுக்குள்ள செயில் கம்பியாட்டம் அண்டர் வேரு பாரு’’ என மேசைக்கு அடியில் தனது வேட்டியை கொஞ்சம் விலக்கிக் காட்டுகிறார்! அதுவரை எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் பஞ்ச் டயலாக்காலேயே கவுண்ட்டர் கொடுத்த வித்தகன் வெகுண்டு பூட்ஸ் காலால் தொழில் முதலையின் கவட்டைக்குள் குடீர் என உதைத்து ஏரில் பறக்க விடுகிறார்! இதுதான் முதல் ஆக்சன் இதன் பிறகு படம் முழுக்க செத்து செத்து விளையாடுகின்றனர்! 

பார்த்திபன் அவர்களின் படு திராபையான ஃப்ளாஷ் பேக்கில் மேலே சொன்ன  மெயின் வில்லன் 1.பத்ரி(டான்1) (அப்போது அவர் ஸ்ட்ரீட் தாதா) சப் இன்ஸ் பெக்டரான பார்த்திபனின் தந்தையுடன் ஏற்பட்ட மோதலில் அவரது இளைய மகளைக் கொன்று விட, பயந்த எஸ்.ஐ குடும்பத்துடன் வேலையை/ஊரை விட்டு ஓடிவிடுகிறார். போலீஸ் உத்யோகம் பிடிக்காமல் போகும் தன் தந்தைக்கே தெரியாமல் நம் வித்தகன் அவர்கள், குடும்பம் என்று ஒன்று இருந்தால் தானே போலீஸ்காரன் கடமையை செய்ய முடியாது எனக்கருதி தனது தாய் தந்தை தங்கை என எல்லோரையும் மறைத்து அனாதை என போலிச் சான்றிதழ்கள் கொடுத்து ஐபிஎஸ் ஆகிறார்! ஆனபின்பும் அனாதை என்றே மெயிண்டெய்ன் செய்கிறார்! 

இந்த பேருண்மையை அறிந்த கமிசனர், தான் வெகுநாளாய்க் கறுவிக் கொண்டிருந்தபடி, வித்த்கனை சிறையில் அடைக்கிறார்! செயிலில் மந்திரியின் மகன் வித்தகனைக் கொல்ல முயல, வித்த்கன் டெக்னிகலாக அவனைக் கொல்ல, அதைக் கண்ட ஒரு கான்ஸ்டபிள் (அவன் வில்லன் சேனாவின் ஆள்) அகில உலக டான்2 சேனாவிடம் அறிமுகப் படுத்த,(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா) வித்தகன் சேனாவின் அல்லக்கையாகிறார்! செயிலிலிருந்து வெளியே வருகிறார் புதிய கெட்டப்பில்! சமீப காலமாக விஜய் படங்களில் செகண்ட் ஆஃபில் வரும் முதல் பாடலில் விஜய் ஒரு விக் வைக்கிறாரே; பான் பராக்கை பரட்டையில் துப்பினாற்போல, அதேதான்! ஆனால் இந்த கெட்டப் பார்த்திபனுக்கு செமையாகப் பொருந்துகிறது! மிக அழகாகவும் இருக்கிறது! ஏனென்றால் முதல் பாதி போலீஸ் கிளீன் சேவிங் முகத்தில் அன்னாரைப் பார்த்து பூச்சாண்டி என பயந்த நமக்கு இந்த கெட்டப் ஆறுதலாய் மட்டுமல்ல அழகாகவும் தோன்றுவதில் வியப்பில்லை! 

வெளியே வந்த வித்தகன் மரண மொக்கையான முறையில் வில்லன்கள் அனைவரையும் கொல்கிறார். சுட்டு சுட்டு விளையாண்டதில் கன் செத்திருக்கும்! வழக்கமாக விவேக், வடிவேலு ஆகியோர் தாதாக்களாக நடிக்கும்போது சுற்றி நிற்பார்களே அல்லக்கைகள்! அவர்களே தான் இந்த இரு டான்களுக்கும் அல்லக்கைகள்! ஆவேசமாக டான்கள் கத்தும்போது இவர்கள் நக்கல் அடிக்கிறார்கள்! சூப்பராக இருந்தன காட்சியமைப்புகள்! இதற்கிடையே ஹீரோயினாக செல்வி.பூர்ணா அவர்கள் காட்டிய திறமை மற்றும் காதல் காட்சிகள் குறித்து எழுத அவற்றை மீண்டும் நினைவு படுத்த வேண்டி உள்ளது. மீள்நினைவேற்றம் செய்து மெண்டலாக மனம் ஒப்பாததால் தவிர்க்கிறேன்! 

வழக்கமாக காமெடியன்களை கொல்வதாக சீன் வைப்பது அரிது. அவ்வாறு செய்தாலும் பரிதாபமான உணர்வுக்காகதான் அதை வைப்பார்கள்! ஆனால் வித்தகனில் பாவப்பட்ட காமெடியன்களையும் பொட்டு பொட்டென போட்டுத் தள்ளிவிடுகிறார்கள்! கதையில் வரும் எல்லாகேரக்டர்களும் செத்து செத்து விழுகிறார்கள்! இறுதியாக வித்தகன், வில்லன் பத்ரி மற்றும் பூர்ணா ஆகிய மூவர் தான் மிச்சம்! அதிலும் பூர்ணாவை வில்லன் கொன்றுவிட, அதற்கு பழிவாங்கும் விதமாக வித்தகன் அடித்த அடியில் பத்ரி வில்லன் மெண்டலாகி விடுகிறார்! பிணத்தைத் தூக்கிக் கொண்டு வித்தகன் செல்வதோடு படம் முடிவடைகிறது! 


காக்க, காக்க படத்தில் உபயோகித்த கிளாஸிக் ஜீப்பு, அம்முவாகிய நான் படத்தில் வரும் பெயிண்ட் அடிக்காத வீடு, குடைக்குள் மழையில் வரும் பழைய டெலிஃபோன் ஸ்டாண்டு என ஆங்காங்கே பழைய நெடி! பார்த்திபனது டபுள் மீனிங் தொற்று பூர்ணாவிடமும் பரவி ‘கையக் காலா நெனச்சா கால என்னவா நெனப்பே’ என பூர்ணா கேட்குமளவு சென்றுவிட்டது! பத்து பைசாவுக்கு கூட படத்தில் காட்சி வாயிலான கில்மா இல்லை! ஒரே ஒரு மதுபான பார் காமெடி மட்டுமே சிரிக்க முடிந்தது.

கரு பழனியப்பன் நீள நீள டயலாக்குகளில் தாலியறுப்பாரல்லவா ஆனால்,பார்த்திபன் பஞ்ச் பஞ்ச்சாக அடித்து பாடாவதியாக்குகிறார்! தமிழ் படத்தில் மிர்ச்சி சிவா வில்லன்களைக் கொல்ல சுவற்றில் நகத்தால் கீறுவது, எருமைக் கிடா ஃபைட் என முயற்சிப்பாரல்லவா! அதற்கு சற்றும் குறைவின்றி வித்தகன் வித்தை காட்டிவிட்டார்! ஆக மொத்தம் வித்தகன் வித்த Gun செத்த Gun!

பாடல்காட்சிகளில் பார்த்திபனின் குளோஸ் அப் காட்சிகள் உள்ளன எச்சரிக்கை. ஃபைட்டுகளில் விஜய்க்கு சவால் விடுமளவில் பறவை உத்திகள் உள்ளன! படத்தில் மொத்தம் விழுந்த இழவுகளின் எண்ணிக்கையை (அரங்கில் விழுந்தவை உட்பட) கணக்கிடவே முடியவில்லை. 

Tuesday, November 15, 2011

பூணூல் பாசம்!

என்னடி கொழந்தே இப்பிடி கண்டதையும் ஈஷிண்டு வந்து நிக்கறே! பஞ்சாயத் யூனியன் பராரிகளும் நம்ம புள்ளையாண்டான்களும் ஒரே புஸ்தகத்த படிக்கப்டாதுன்னே, அதுல ஒரு நியாயம் இருந்துச்சு. ஆனா இப்ப, நம்ப புள்ளையாண்டான்களும் படிக்கற லைப்ரரிய ஏண்டிம்மா இழுத்து சாத்தணும்னு அழிச்சாட்டியம் பண்றே! 

செய்றதும்தான் செய்றெ அத மாம்பலம், மயிலாப்பூர்னு மாத்தாம நுங்கம்பாக்கம்னு வேற சொல்லிண்டு இருக்கே! 
நன்னா யோசன பண்ணிப்பாரேன், நம்மாத்துக்கொழந்த நீன்னாலும் எல்லாத்துக்கும் நான் ஜாவாப்தாரியாக முடியாதோல்லியோ! நீ நெனச்சுண்ட்ருக்கேடி, மாமா ஷெளக்யமா உக்காந்துண்டு பத்திரிக்க நடத்திண்ட்ருக்கார்னு, ஆனா எத்தன பேர் கேள்வி கேக்கறான் தெரியுமோ? அதெல்லாம் நோக்கு எங்க தெரியுது? இன்னும் திண்ணைல சறுக்கி விளையாண்ட கொழந்தயாவே இருக்கே! 
நீ பாட்டுக்கு புத்தி போன போக்குல எதானும் பண்ணிண்டு போய்டறே! பெரியவாட்ட கலந்துக்கணும்னு தோண்றதும் இல்ல! இங்க நான் கெடந்து லோல் படறேன்! நீயே சொல்லுடிம்மா... இதெல்லாம் நன்னாவா இருக்கு?
என்னடா மாமா இப்பிடி சொல்றாரேன்னு மூஞ்ச தூக்கி வெச்சுக்காதேடி பொண்ணே! எல்லாம் உன் நல்லதுக்கோசரம் தாண்டி பண்றேன்! நீ இன்னும் பழைய அம்முக்குட்டி இல்ல தெரியுமோல்லியோ! சரி போய் விளையாடு... ஹ்ம்ம்ம் நில்லு நில்லு... அடியே இவளே அந்த திரட்டுப்பால் செஞ்சியோன்னோ அம்முக்கு கொண்டாந்து கொடேன்! தோ பார்றா கொழந்தே! மாமி பட்சணம் கொடுப்பா சமர்த்தா உக்காந்து சாப்பிடணும் சரியா! தெருவுல எறங்கி கண்டதுக கூடயும் புரளப்படாது..

-சோவைய்யர்

மேற்படி சம்பாஷணை துக்ளக் Vol XLII No 44 dt: 16.11.2011 நாளிட்ட இதழின் 3ம் பக்கம் வெளியாகியுள்ளது! இது ஒரிஜினல் ட்ராஃப்ட்!  பிரசுரமாகியுள்ள ஃபேர் ட்ராஃப்ட் கொஞ்சம் மாற்றங்களுடன் உள்ளது! 

நூல் பாசத்தின் இன்னொரு காண்டம் ராமசுப்பையர் வழித்தோன்றல்களின் காலைக்கடன் வழி கழிந்துள்ளது!
14.11.2011 நாளிட்ட தின மலத்தின் 16ம் பக்கம்!
 ‘செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்’ என்று!
எழுதியது அவாளின் சிறப்பு நிருபராம்!
ஏன் ஒரிஜினல் பேர போடறதுக்கென்னன்னு வெள்ளந்தியாகக் கேட்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அட மண்டுகளா! அத்திம்பேர் என்ன லூசா? அவர் பேரைப் போட்டு எழுத!? 

தினமலத்து அம்பிகளுக்கு தூக்குதண்டனை மீது அப்படித் தீராக்காதல் இருந்தால் தூக்குப் போட்டு சாவலாமே!  கயிறு ஸ்பான்ஸர் வேண்டுமானால் நாம் கூட செய்யலாம்! மூவர் தூக்கை எதிர்த்து நடவடிக்கை மேற்கொண்ட எல்லாரையும் சாடியுள்ள அந்த அவாள் கட்டுரை; சட்டசபையில் தீர்மானம் போட்ட மாமியின் விசயத்தை மட்டும் வகையாக மறந்துவிட்டிருக்கிறது! ஏன் அதையும் சேத்து எழுதறதுதானே! அதெப்பிடி முடியும்! அங்கதான் நம்ம பூணூல் பாசம் தடுக்குமே! 

மயிலாப்பூர் மாமாக்கள் வாக்கிங் போகும் பாதையில் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான் என்றால் போச்சு! அத ஒரு ஃபோட்டோ எடு! அரைப்பக்கத்துக்கு கலர்ல போடு! நாட்டைக்கெடுக்கும் குடிகார நாய்களைப் பாரீர்னு கமெண்ட்ட போடு! இதான் நாட்டின் தலையாய பிரச்சனை! அணுக்கழிவால் ஆயிரம்பேர் சாகிறானா? எந்த ஊர்ல! இடிஞ்ச கரையா!? சாவட்டும்! கரண்ட் இல்லாம மாமா இப்பல்லாம் மத்யான நேரத்துல தூங்கறதே இல்லைன்னு அழுவான்! இதான் தினமலத்தோட பூலவாக்கு.

போனவார வாரமலர்ல தினமலர் பொறுக்கி அந்துமணி பா.கே.பன்னு எழுதும் (அது கூட ஓ__ததும் சேர்த்து எழுதலாம்னு கடிதம் எழுதனும் அது வேற விசயம்) பக்கத்துல, இவனுக டூர் போனப்ப ஒரு எடத்துல வண்டிய நிறுத்தி ஹோட்டல்ல சாப்பிட போனானுகளாம்! காரை செண்ட்ரல் லாக் பண்ண மறந்துட்டானுகளாம்! திரும்பி வரும்போது பாத்தா ஒரு பைத்தியக்காரன் சீட்டுல உக்காந்துட்டு இருந்தானாம்! லென்சு மாமாக்களுக்கு அந்த பைத்தியக்காரன கார விட்டு வெளிய தொரத்துறதுக்குள்ள தாவு தீந்துட்டுதாம்! அப்பறம் டெட்டால் ஊத்தி சீட்டக் கழுவுனானுகளாம்! இத கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாம ஒரு பாப்பார நாயி எழுதிருக்கு! செருப்புல சாணியத் தொட்டு அடிக்க வேணாம்? இது லட்சணத்துக்கு அடுத்தவன நக்கல் அடிக்குது! 

இதுல சில அல்லக்கைக தினமலம்னு சொல்லிக்கிட்டே அதப் படிக்கிறது அத திங்கறா மாதிரின்னு டயலாக் அடிக்குதுக! மலம் நாறும்னு நாலடி கேப்லயே நாங்க சொல்லிடுவோம்! ஐ லைக் மலம்னு கருத்து போடறவனுகதான் நக்கிப் ’பாப்பானு’களோன்னு டவுட்டா இருக்கு! இந்த பதிவுல இவனுகள திட்டிப்புட்டேன்! இவனுகள நான் திட்டத்தான் செய்வேன்னு இவனுகளுக்கே தெரியும் ! படிக்காமலா இருப்பானுகன்றீங்க?! ம்ஹூம்!  தமிழையும் தமிழனையும் நக்கல் அடிக்கவும் சீண்டவும் அதே தமிழ்ல பத்திரிக்க நடத்துற எச்சிக்கலைகளின் பூணூல் பாசம் பொங்குற பொங்கு பானையத் தாண்டி வழியுது போங்கோ! 

Thursday, November 10, 2011

காமத்திபுரா - இச்சைகளின் கழிவிடம்



மும்பையின் அடையாளங்களில் ஒன்று காமாத்தி புரா. பல பெண்களின் கண்ணீர் கதைகளை கொண்ட அந்த `கண்ணீர் தேசத்திற்குள்’ ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம். ”சும்மா வேணா போய் ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க.. ஆனா படம் எடுக்க முடியாது. அப்படி எடுத்து மாட்டிக்கிட்டீங்கன்னா கேமராவும் உங்களுக்கு சொந்தமில்ல.. நீங்களும் உங்களுக்கே சொந்தமில்ல” என தகவல் சொன்னவர்கள் கிளம்புவதற்கு முன் ‘சிவப்பு விளக்கு’ எச்சரிக்கை செய்திருந்ததால் கொஞ்சம் `பேஸ்மெண்ட்’ வீக்’கானாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினோம்.


( இது தான் பலரின் வாழ்கையை புரட்டிப்போட்ட காமாத்தி புராவின் பிரதான சாலை )

மும்பையின் மையப்பகுதியில் இருக்கும் `மும்பை சென்ட்ரல்’ மற்றும்`க்ராண்ட் ரோடு’ என்ற ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட  பகுதியில் இருக்கிறது காமாட்டிபுரா. அது ஒரு சின்ன தெரு தான். ஆனால் அதை சுற்றி இருக்கும் பல தெருக்களில் குடிசைத் தொழில் போல் விபச்சாரம் நடைபெறுகிறது என்றாலும் காமாட்டி புரா மட்டுமே மும்பை பாலியல் தொழிலுக்கான மொத்த அடையாளமாக பெயர் பெற்றுவிட்டது.  


வரிசையாக கவர்ச்சி உடையில், அடிக்கும் கலரில் உதட்டுச்சாயத்தை பூசி கொண்டு நின்று கொண்டிருக்கும் பெண்கள் கண்களால் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.



சிலரை கையைப்பிடித்து இழுத்துக் கூப்பிட்டு பேரம் பேசினார்கள். நமக்கும் அழைப்பு வந்தது..  நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்தோம். நின்று பேரம் பேசினீர்கள் என்றால் உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து விடுவார்கள். உள்ளே போனப்பிறகு  “பொண்ணு பிடிக்கல” என்று முரண்டு பிடிப்பவர்களை நாலு போடு போட்டு பணத்தை பறித்துக்கொண்டு விரட்டி விடுகிற கதையும் உண்டு. ப்ரோக்கர்கள் ப்ளஸ் திருடர்கள் இருபக்கமும் நின்று கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்.


    
(புரோக்கர் ரமேஷ்)

திடிரென நம்மை நெருங்கிய ஒரு புரோக்கர் நம் முகத்தை வைத்து தமிழ்நாடு என்று தெரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார். “சார் எங்கிட்ட எல்லா ஸ்டேட் பொண்ணுங்களும் இருக்கு சார். 350 ரூபா தான் சார். ஏஸி இருக்கு. ஒரு ப்ராப்ளமும் இல்ல. நீங்க வந்து பாருங்க. பிடிக்கலைன்னா வேணாம்.. கம்பல் இல்ல சார்..” என்று இந்தி கலந்த தமிழில் நச்சரிக்க ஆரம்பித்தார். ” அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லணே..” என்றதும் ”சரி இது என்கார்டு.. எப்ப வேணும்னாலும் வாங்க” என்று விசிட்டிங்க் கார்ட்டை கையில் தினித்தவரிடம் அவரைப்பற்றி பேச்சுக்கொடுத்தோம்..
”என் பெயர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சாவூர் பக்கம். ரொம்ப வருசத்துக்கு முன்னமே பம்பாய் வந்து செட்டில் ஆகிட்டதால ஊர் பக்கம்லாம் போய் ரொம்ப நாளாச்சு சார். லேடீஸ் டான்ஸ் பார்ல வேலை பார்த்தேன். நல்லா காசு கிடைக்கும். ஆனா இப்போ அத மூடிட்டதால இந்த வேலைக்கு வந்தேன். கஸ்டம்ர்கள பிடிச்சு கொடுத்தா ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா தேரும். இப்படி புரோக்கர் வேலை பார்க்கோமேனு சில நேரம் வருத்தமாத்தான் இருக்கும். ஆனா என்ன பண்ண.. அம்மா வீட்டு வேலைக்கு போகுது. அப்பா வாட்ச்மேன். அண்ணன் அண்ணி எல்லாம் இருக்காங்க. நான் இந்த வேலை பார்க்குறது வீட்ல யாருக்கும் தெரியாது சார்.  ஹோட்டல்ல வேல பார்க்கேனு சொல்லிருக்கேன். என்னைக்காவது மாட்டிக்குவேனோனு பயமா இருக்கு. ஆனா லைஃப்ப ஓட்டணுமே.. இதுலயே பழகிட்டதால வேறு வேலைக்கு போக தோணல சார்” என்று தன் வரலாறு சொல்லி முடித்துவிட்டு, ’’வாங்க சார்.. பொண்ணுங்கள பாருங்க..” என்று மீண்டும் தனது பிஸினசுக்குள் இறங்கியவரிடமிருந்து சிரித்து விட்டு நகர்ந்தோம்.





அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் ‘காங்கிரஸ்(!) ஹவுஸ்’ என்ற தெரு உள்ளது.
இங்கிருக்கும் விபச்சார விடுதிகள் கொஞ்சம் காஸ்ட்லியானவை என்பதால் பெண்கள் வெளியே நின்று அழைப்பதில்லை. மாறாக புரோக்கர்கள் மட்டுமே வரிசையாக நிற்கிறார்கள். டாக்ஸிக்குள் தலையை விட்டு நம்மை அழைக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாயில் ஆரம்பித்து பத்தாயிரம் முப்பதாயிரம் என பெண்களுக்கு ஏற்ப ரேட் ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

 
சிலவருடங்களுக்கு முன்பு மகாராஷ்ட்ரா அரசு ’லேடீஸ் டான்ஸ் பார்’களை மூடியதால் அந்த தொழிலில் இருந்த பெண்கள் பலர் இப்போது வேறு வழியின்றி விபச்சாரத் தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் இங்கு தான் தொழிலில் ஈடு பட்டிருக்கிறார்கள்.
  
அதேபோல் பெரும்பாலும் பாலியல் தொழிலுக்கு கடத்தி வரப்படும் பெண்கள் இந்த விடுதிகளில் தான் விற்கப்படுகிறார்கள் தமிழ் பெண்கள் உட்பட. இங்கு சக்கையாக பிழிந்த பிறகு லோக்கல் விடுதிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இங்கிருக்கும் விடுதிகள் அமைதியாகவும் மர்மமாகவும் அச்சமூட்டும் வகையில் இருக்கின்றன. சமீபத்தில் கப்பல் வேலைக்காக தமிழகத்திலிருந்து மும்பை வந்த தனது நண்பர்கள் சிலர் சபலப்பட்டு இந்த விடுதிக்குள் நுழைந்ததாகவும், அவர்களை சிலர் அடித்து பணத்தை பறித்துக்கொண்டு விரட்டிய சம்பவம் நடந்ததாக சொல்கிறார் மும்பை தமிழரான தினகரன்.

 

அங்கிருந்து சில நிமிட தூரத்தில் `பீலா ஹவுஸ்’(மஞ்சள் வீடு) என்று அழைக்கப்படும் தெருவுக்குள் நுழைந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இளம்பெண்களோடு சிறுமிகளும் நின்று கொண்டு அழைப்பு விடுக்கிறார்கள். நமக்கு நெஞ்சம் பதைபதைக்கிறது. இளைஞர்கள், பெருசுகள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரு பக்கம் பேரம் நடந்து கொண்டிருக்கிறது.
  

 பெருவாரியாக இங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பெங்காலிகளாகவும், நேபாள், உ.பி, பிஹார், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். குழந்தை குட்டி என்று குடும்பத்தோடு அங்கேயே வாழ்பவர்களும் உண்டு.
 மனதளவில் இந்த தொழிலை சகித்துக்கொள்ள கற்றுக்கொண்டவர்களை மட்டுமே வெளியில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கும் பணிக்கு அனுப்புகிறார்கள். உள்ளறைக்குள் அழைத்து வரப்படும் வாடிக்கையாளர்களுக்காக பல பெண்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.




சிக்கினால் பென்டெடுத்துவிடுவார்கள் என்ற சூழலில் மறைவாய் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். பயந்தது போலவே புரோக்கர் ஒருவர் நம்மை பார்த்துவிட்டு
 ” போட்டோ கீச்ராரே.. பக்கடோ..” (படம் புடிக்கிறான்.. புடிடா..) என்று சகாக்களுக்கு சவுண்ட் விட்டுக்கொண்டு நம்மை விரட்ட அங்கிருந்து ஓடி தப்பித்தோம். 

( பேரம் பேசும் விடலைகள் )




பெருவாரியாக இங்கு வரும் வாடிக்கையாளர்கள் உ.பி. பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து மும்பையில் கட்டிட வேலைகள் உள்ளிட்ட கூலி வேலைகளுக்காக அழைத்து வரப்படும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தை விட்டு  மும்பையில் தனிமையில் இருப்பதுவும்,   50 ரூபாயில் இருந்து பெண்கள் கிடைப்பார்கள், போலீஸ் தொந்தரவு இருக்காது போன்ற காரணங்களால் அவர்கள் இந்த விடுதிகளுக்கு வருகிறார்கள்.








 

அந்த தெருவில் இரண்டு தியேட்டர்கள் இருக்கின்றன.  வெளியே போஸ்டர்கள் ஏதாவது ஒட்டப்பட்டிருக்கும்.. உள்ளே பெருவாரியாக ’பிட்டு’ படங்கள் ஓடும். முதலில் திரையரங்குக்குள் நுழைந்து அதை பார்த்த போதையோடு பாலியல் தொழிலாளிகளிடம் செல்கிறார்கள்.
  
    


( விபச்சார விடுதிகளுக்கு நடுவில் பிள்ளையார் விழா கொண்டாட்டம்! ) 


”மும்பை பெண்களை காமுகர்களிடமிருந்து காப்பாற்றும் `எல்லை தெய்வங்களாக’ நிற்கிறார்கள் காமாட்டிபுராவில் இருக்கும் பெண்கள். அவர்கள் இல்லையென்றால் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்காகி விடும்” என்று சொல்கிறார்கள்.அதில் உண்மையுண்டு.  என்.ஜி.ஓ.க்களின் தீவிரமான எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ’காண்டம்’  போட்டால் மட்டும் தான் செக்ஸ் என்பதில் அந்த பெண்கள் உறுதியாக இருந்தாலும் சிலர் எய்ட்ஸில் சிக்கி இறந்து போகிறார்கள். `

தாங்கள் அழகாக நின்ற அதே தெருவின் ஓரத்தில் ஒருநாள் அநாதைப்பிணமாக செத்துக்கிடந்த  பல ’தெய்வங்களின்’ கண்ணீர் கதைகளைசுமந்து நிற்கின்றன ஒவ்வொரு விடுதிகளும்..


காமாத்தி புராவை மூட திட்டம்!


                                                    
( காமாத்திபுரா பெயர் பலகை )  

1795 காலகட்டத்தில் கட்டுமான பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளிகள் வாழ்ந்த பகுதி காமாத்தி புரா. இந்தியில் `காம்வாலி’ என்றால் வேலைக்காரி என்று அர்த்தம். அந்த அடிப்படையிலேயே அந்த பகுதிக்கு காமாத்திபுரா என்ற பெயர் புழக்கத்திற்கு வந்தது. பிற்பாடு 1880  பிரிட்டிஷ் ஆட்சியில் அந்த பகுதி ராணுவ பாதுகாப்பு வளையமாக்கப்பட்டிருந்தது. ராணுவ வீரர்களின் செக்ஸ் வெறியை தீர்த்துக்கொள்ள அங்கிருந்த பெண்கள் தள்ளப்பட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து அவர்கள் நடையைக் கட்டிய பிறகு அவர்களின் இடத்தை இந்திய பணக்காரர்கள் பிடித்துக்கொண்டதால் வேறு வழியின்றி அந்த பெண்கள் அதே தொழிலை தொடர்ந்தார்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்..



ஒரு தெருவில் பாதிவரை விபச்சாரவிடுதிகளும், மீதி குடும்பங்கள் வாழும் குடியிருப்புகளும் என விநோதமாக இருக்கிறது காமாத்தி புரா. பெருவாரியாக இங்கு குஜராத்தி, மார்வாடிகள் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் அந்த விடுதிகளின் வழியாகவே பள்ளிக்கு செல்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தாங்கள் எந்த பகுதியிலிருந்து வருகிறோம் என்பதை சொல்ல சங்கடப்படும் மனநிலை அந்த குழந்தைகளிடம் இருக்க கூடும். ஆனால் மும்பையின் வாழ்விட நெருக்கடி எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வைக்கிறது.

                                     
   ( சாலையை ஒட்டியிருக்கும் கட்டிடம் முழுக்க விபச்சாரம் தான் ) 

தற்போது காமாத்தி புராவின் நில மதிப்பு ஒரு சதுர அடிக்கு தோராயமாக 30 ஆயிரம் என்கிறார்கள். நிலங்களின் மதிப்பு கூடுவதால், இவ்வளவு நாட்கள் அதை வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்த நில உரிமையாளர்கள் இப்போது விடுதிகளை மூடிவிட்டு காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டிருக்கிறார்களாம். பல கிரிமினல்களின் புகழிடமாக  திகழ்வதால் காமாத்தி புராவை மூடும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு செயல்படுத்த கூடும் என்ற கருத்தும் இருக்கிறது, அப்படியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினாலும் அப்போதும் விபச்சாரம் தான் நடக்கும்.. என்ன கொஞ்ச காஸ்ட்லியான விபச்சாரவிடுதிகளாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பல வருடங்களாக அங்கேயே தங்கள் வாழ்வை தொலைத்த பெண்கள் காமாத்தி புராவை மூடினால் எங்கு செல்வது.. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த பெண்களின் மறுவாழ்வுக்காக எதையும் செய்யாமல் அரசு காமாத்தி புராவை முடினால் அது பிரயோஜனமற்றதாகவே இருக்கும்.

- கார்ட்டூனிஸ்ட் பாலா 



நிழற்படங்கள்: பொதிகராஜன் & பாலா

Sunday, November 6, 2011

வாழ்க அண்ணாச்சிகள்!


கொத்தடிமைகளாய் தொழிலாளர்களைப் பிழிந்து காயப்போடும் முதலாளிகளை தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், சமீக காலங்களாய் கோடிகளில் புரளும் பெரு முதலாளிகள் கூட கோவணம் கட்டும் தொழிலாளியின் நிலை கண்டு ஆற்றொணாத் துயருறும் நெகிழ்ச்சியான காட்சிகளைக் காண முடிகிறது.

தொழிலாளர்கள் மீது பெருக்கெடுத்து பிரவாகமாய் ஓடும் பாசத்தின்மிகுதியில், அவர்கள்(தொழிலாளர்)  நலனுக்காக எசமானர்கள் சர்வ வல்லமை கொண்ட அரசாங்கத்தையும், நீதிமன்றத்தையுமே எதிர்க்கக் கூடிய சோஷலிசச் செம்மல்களாகிவிட்டனர் என்றால் அது மிகையல்ல.

தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு குறித்து அல்லும் பகலும் அதே சிந்தனையில் உழலும் பெருமுதலாளிகளின் கருணையுள்ளத்தைக் கண்டுகொள்ள நமக்கு வாய்த்திருக்கும் இரண்டாவது வாய்ப்புதான்  

‘தி.நகர் வணிக நிறுவனங்களுக்கு நடத்தப்பட்ட சீல் வைப்பு வைபவம்’ 

முதலாவது, ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு பூட்டுப் போட்டு சீல்வைத்த நிகழ்வு.
சீல் வைப்பிற்கும் இந்த சோஷலிசப் புரட்சிக்கும் எதோ ஆழ்ந்த பிணைப்பு இருக்கலாம் என அவதானிக்கிறேன்!

உண்மையில் சாயப்பட்டறைக் கழிவுகள் ஆற்றையும் ஊரையும் நாறடிக்கும் என்ற விசயம் தெரியாதவர்கள் அல்ல நம் எசமான்கள்! இருந்தும் அதைச் சுத்திகரிக்க மறுத்திருக்கிறார்கள் என்றால் அது அத்துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டே என்பது உள்ளங்கை திஹார்க் கனி!


சாயமேற்றிச் சம்பாதித்த அத்துணை காசையும் சமுதாய நன்மைக்கு மட்டுமே செலவழித்திருக்கும் சாயக்கம்பெனி வள்ளல் பெருந்தகைகள் விஷமாகிப்போன கழிவுகளை சுத்திகரிக்க அரும்பெரும் பாடுபட்டு அரசாங்கத்திடமே கடன் வாங்கியிருக்கின்றனர்!சபாஷ்! தவறே இல்லை! ஏழைத்தொழிலாளர்கள் வாழ்வில் விளக்கேற்றுதல்லாமல் வேறு தன்னலம் ஏதுமின்றி நியாயமாக  தொழில் செய்து வரும் நம் முதலாளிகள் அரசாங்கம் சொல்வது போல அழுக்குத்தண்ணியை சுத்திகரிக்க பிளாண்ட் வைத்து செலவு செய்தால் கட்டுபடியாகத்தான் செய்யாது! நல்லது! சந்தோஷம்!

இதற்கு அவர்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா?! எத்தனை போராட்டங்கள், எத்தனை கடையடைப்புகள், கண்ணீர் , கம்பலை யப்பப்பா! இவையெல்லாம் எதற்காக? சாயப்பட்டறைக்கு வைத்த சீல், பனியன் தொழிலை நசித்து அதை நம்பியுள்ள சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் சோற்றில் மண்ணைப் போட்டுவிடும் என்பதற்காக மட்டுமே!

              தம் வாழ்நாள் முழுமையும் சாயப்பட்டறைகள் மூலம் தொழிலாளர்கள் நலனுக்காகவே ஒழைத்து ஒழைத்து ஓடாய்த்தேய்ந்த நம் எசமான்களின் கரிசனத்தில் 100ல் 1 பங்கு அரசுக்கு இருந்த காரணத்தினால் கழிவைச் சுத்திகரிக்க கடன் கொடுத்து உதவியது! 

ஆர்டர் குடுக்கறவன் வெள்ளைக்காரன், சாயம் போடுவது நம்மூரு முதலாளி! சாயத்தக் கொட்டுறது நொய்யல் ஆத்துல! நாறிப்போவறது ஆறு! வெள்ளைக்காரன் காசு முதலாளிக்கு வந்துடுது! அந்தக் காசுல அழுக்குத்தண்ணிய சுத்தம் பண்ணி விடலாம்னு நீங்க சொன்னீங்கன்னா! அது தப்பு! ஒத்துக்க மாட்டோம்! அரசாங்கம் தான் சுத்தம் பண்ணனும்னு போராடுவோம்!

மேலோட்டமாகப் பார்த்தால் எசமான்கள் பேண்டு வைப்பதை அரசாங்கம் காசு கொடுத்து கழுவி விடுவது போலத்தான் தோன்றும்! ஆனால் இதனை நாம் அவ்வாறு பார்க்கக் கூடாது!  3லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரப் பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும்!

அடுத்து தி.நகர் கருணைக் கடல்கள்!

அங்கிருக்கும் அருட்கடல் அண்ணாச்சி புகழை நாம் சொல்லித்தெரியவேண்டியதில்லை! அதே ரேஞ்சில் தான் எல்லா அண்ணாச்சிகளும் இருக்கின்றனர் அதில் ரத்னா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் கண்ணீர் தெறிக்கும் வசனம் பின்வருமாறு! 

‘’எங்க கடைகள்ல மட்டும் தொள்ளாயிரம் பேரு வேல செய்யறாங்க! எல்லாருமே பலவருசமா வேல பாக்கற நம்பிக்கைக்கு உரியவங்க! இன்னைக்கு வேலை இல்லைன்னு தொரத்தி விட்டுட்டா நாளைக்கு கடை தொறக்கும் போது ஆளுகளுக்கு எங்க போவோம்! தயவு செஞ்சு தொழிலாளிக வயத்துல அடிக்காதீங்க’’


இதைக் கேட்கும் போது நமக்கு கண்களில் நீர் துளிர்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை! அண்ணாச்சி போன்ற நல்லவர்கள் இன்னமும் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது! அதுவும் இந்த சீசன் அடித்து ஊத்துவதற்கு காரணமே ரத்னம் அண்ணாச்சியால்தான் என்று நினைக்கிறேன்.

திநகர் வியாபாரிகள் சங்கம் அடுத்த கட்டமாக வேலையிழந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டு விளக்கேற்ற கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிகிறது. எல்லா கடைகளையும் தான் அரசாங்கமே மூடி விட்டதே இனி எதை மூடி போராடுவார்கள் என்று தெரியவில்லை இருந்தாலும் கருணைக்கடல்களான நமது எசமான்களின் போராட்டம் வெற்றிபெற; சாயப்பட்டறைக்கு அரசாங்கம் தீர்வு கண்டது போலவே இதற்கு அரசாங்கமே பெனால்ட்டி கட்ட நாமும் துணை நிற்போம்! 

வாழ்க அண்ணாச்சிகள்!

-ராஜன்