Sunday, August 14, 2011

எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துணை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் இந்த இக்கட்டான வரலாற்று சூழலில் தனது அரசியல், சமூக போராட்ட கட்டமைப்புகளை பிஞ்சு நிலையில் பெற்று இருக்கும் தமிழர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் இந்த அடக்குமுறைகள், கொலைகள் நம்மை எவ்வாறு கையறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை கவனிக்க முடியும். இந்த முறையில் இன்று தமிழக அரசியல் போராளிகளின் மீது கடும் தாக்கத்தையும் துயரத்தையும் ஏற்பட்டுத்தி இருப்பது தோழர்.பேரறிவாளன், தோழர்.முருகன், தோழர்.சாந்தன் ஆகியோர் மீது திணிக்கப்பட்டு இருக்கும் மரணதண்டனை.


கொலை செய்யப்பட்டவர் முன்னாள் பிரதமர் என்கிற ஒரே காரணத்திற்காக நீதியை மறுத்து இருக்கிறது இந்த அரசு. சோடிக்கப்பட்ட இந்த வழக்கில் முதலில் தூக்கில் இடப்படுவதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 13பேர் ஈழத்தமிழர்களாகவும் 13 பேர் இந்திய-தமிழகத் தமிழ்ழர்களாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டது அரசு. பிறகு தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 4 பேரில் இருவர் தமிழகத் தமிழர்களாகவும், 2 பேர் தமிழீழத்தமிழர்களாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது. செய்யாத குற்றத்திற்காகவும், நிரூபணம் ஆகாத குற்றச்சாட்டு ஒன்றிற்காகவும் இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் மத்திய அரசால் அவர்களது உயிர் பறிக்கபட இருக்கிறது.

எந்த ஒரு அடிப்படை சட்ட வழிமுறையும் பின்பற்றப்படாமல் மெளனமாக்கப்பட்ட இந்த அப்பாவிகள், கதவிடுக்கில் சத்தமில்லாமல் பலியிடப்படும் சுவர் பல்லிகளாய், பலியிடப்பட காத்து இருக்கிறார்கள். எந்தவித கவனமும் இல்லாமல் விபத்தாய் இந்த படுகொலை நடக்கப் போகிறது. ஆனால் இது விபத்து அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எந்தவித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள்.

தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். ஆசியாவிலேயே யூத இனத்திற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் விரிந்து நிற்கக் கூடிய தமிழ்ச் சமூகம் தன் இனத்திற்கு நடக்ககூடிய அநீதியை தட்டிக் கேட்க வீதிக்கு உலகம் முழுவதும் வந்து நிற்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் சர்வதேசச் சமூகத்தில் அவமானத்தை பரிசாக பெற்றுக்கொள்ளும் நிலை இவர்களுக்கு வரும் என்பதை முகத்தில் அறைந்து உரைக்கவேண்டும். திரு. பேரறிவாளன் , திரு. முருகன் , திரு. சாந்தன் அவர்களின் விடுதலை பெற்றுத்தரக் கூடிய ஒரு போராட்டத்தை நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழத்தினை விட்டு வெளியேவும் நடக்க வேண்டும்.

சர்வதேச அரங்கில் இந்த அநீதிக்கான போராட்டம் நடக்கும் பட்சத்தில் இந்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும். தமிழர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தன்னையும், சிங்களத்தையும் காக்க நினைக்கும் இந்தியம், நமது ஒருங்கிணைந்த போராட்டத்தினால் நிலைகுலையும். இந்தியாவின் தன் மரியாதையை உலக அரங்கில் இழக்கும் இந்த சமயத்தில், அதன் நேர்மையும் காந்திய முகமூடியும் கிழிக்கப்படும். இது நமக்கு இந்த சமயத்தில் அவசியமானதும், தேவையானதுமான ஒன்று. உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் இனம் காக்க ஒன்று கூடி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக புலம் பெயர் உறவுகளே உங்களுடைய போராட்டத்தினை பதிவு செய்யங்கள். இவர்களின் நியாயங்களை உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளில், ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். நிறைவு பெறாத விசாரணை, பாதியில் முடிக்கப்பட்ட கமிசன்கள், ஒத்து ஊதும் ஊடகங்கள் ஆகியவற்றால் தவறாக முடிவுற்ற இந்த வழக்கினையும், இந்திய அரசின் நேர்மையின்மையையும் காட்டுங்கள். இந்தப் பஞ்சமா பாதகத்தினை செய்ய முனையும் இந்திய காங்கிரஸ் அரசின் தூதரகத்தின் முன்போ அல்லது முக்கியப் பகுதிகளையோ தேர்ந்தெடுத்து போராடலாம். இந்தப் போராட்டத்தின் அவசியம் நம் தமிழ் நிரபராதிகளை தூக்கில் போடப்பட கூடாது, இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே தூக்கிலேற்றப்படுகிறார்கள்.


தமிழனுக்கு உலகில் எம்மூலையில் துன்பமும், அநீதியும் விளைவிக்கப்பட்டால் தமிழர்கள் நாம் ஒன்றாய் நிற்போம். புலம் பெயர் தமிழர்களே களம் காணுங்கள் நம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக. அனைத்து அமைப்புகளும், உணர்வாளர்களும் இணைந்து வரும் ஆகஸ்டு 20 ம் தேதி நாங்கள் சென்னையில் பாரி முனை அருகில், கலெக்டர் ஆட்சியகம் முன்னால் லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுகிறோம். வரும் 18ம் தேதி வியாழன் 2000 இருசக்கர வாகனங்களில் வேலூரை நோக்கிய பிரச்சாரப் பயண்ம். நீங்களும் கை கோருங்கள்.உங்கள் புலம் பெயர் நாடுகளில் இந்த அப்பாவிகளுக்காய் ஒன்று கூடி உரக்கக் குரல் கொடுங்கள்.. மேற்கத்திய எழுத்தாளர்கள், அறிஞர்கள், போராளிகள், அரசியல் அறிஞர்கள் என அனைவரின் ஆதரவினையும் சேகரித்துக் கொடுங்கள். தமிழராய் ஒன்று கூடுவோம். நாம் வெல்வோம்.

நன்றி.

மே பதினேழு இயக்கம்.
9444146806, 9600781111, 9884877487, 9094817952.

Saturday, August 13, 2011

Join For Justice


பேரறிவாளனுடைய கருணை மனு நிராகரிக்கப் பட்டுள்ள நிலையில், அவரைக் காக்க எடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் ஒருபுறம் இருக்க, பொதுமக்களாகிய நாம் ஒன்றுபடுவதன் அவசியம் உணரவேண்டும். மரண தண்டனையே எவர்க்கும் வழங்கக் கூடாது என்பது நம் கருத்து; ஆனால் நீதி விசாரணை என்ற பெயரில் ஒருதலைபட்சமாக மரணதண்டனை வழங்கப்பட்டு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் முறையீட்டிலுள்ள உண்மைக்கு செவிமடுக்க முயற்சிக்கவேண்டும். 
இதனை தமிழன் என்றும் ஈழ ஆதரவாளன் என்றும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்காமல் மனிதத்தின் பெயரால் இம்மரண தண்டனையை தடுக்க முயற்சிப்போம். 

இதற்கான முன்னெடுப்பில் முதல் கட்டமாக எதிர்வரும் 18.08.2011 வியாழன் அன்று சென்னையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இருசக்கரவாகனப் பேரணி நடைபெற உள்ளது (வேலூர் சிறைச்சாலை வாசல் வரை).

அதனைத் தொடர்ந்து 20.08.2011 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுக்குமான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.இவ்விரு முன்னெடுப்புகளும் பேரறிவாளனுக்கு உள்ள ஆதரவின் வலிமையை ஆட்சியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்க உதவும். 
கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையிலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161ன் படி ஆளுநரால் தூக்கு தண்டனையைக் குறைக்க இயலும். கேரள மாநிலத்தில் பாலன் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருக்கும் ஆந்திரத்தில் இருவருக்கும் மேற்சொன்ன பிரிவின்கீழ் மரண தண்டனை கடந்த காலங்களில் குறைக்கப்பட்டிருக்கின்றது.
வாய்ப்பிருக்கையில் பாதகம் ஏற்படுவதைத் தவிர்க்க முயல்வோம். தமிழக முதல்வரின் கவனத்தினையும் ஈர்க்கவிழைவோம். பெரும் திரளாகக் களம் காண்போம்.
சமூகவலைதளங்களில் இதனைப் பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே. டுவிட்டர் தளத்தில்  #Join4Justice என்ற தொடுப்புடன் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

மேலதிக தகவல்கள் மற்றும் உதவிக்கு : 9884877487, 9094817952 

மின்னஞ்சல் :mefromchennai@gmail.com

நன்றி

Friday, August 12, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி


பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,
வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன்  என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன்
என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின்  அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது  என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப் பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

  1. திரு.இராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும்  மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
  2. திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991  அன்று விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
  3. அக்கொலைக்கு பயன்பட்ட "பெல்ட் பாம்" செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்தக் குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா டுடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனால்,  “சிபிஐ யால் இறுதிவரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த  "பெல்ட் பாம்" ஐ செய்தவர் யார் என்பதே” என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா ?
  4. அந்த "பெல்ட் பாமிற்கு" 9V பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த "பெல்ட் பாம்" ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்க்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வங்கித் தந்த 9V பேட்டரி தான் பெல்ட் பாம் வெடிக்கப்பயன் படுத்தப் பட்டது என்பது  நிரூபிக்கப் படவில்லை.
  5. உண்மை என்னவெனில் நான் 9V பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
  6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதே தவறு என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லவதோ நோக்கம் இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.
அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?
மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்கு மூலங்கள் ரத்தத்தால் கையழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப் படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினைத் தருவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. 
  1. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலைவழக்கை "தற்கொலை" என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்.. 
  2. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர் நீதி மன்றம், பிறகு உச்ச நீதி மன்றம் என்று இரு முறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைப்பட்டு போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.
  3. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.
  4. அவர் முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.
  5. குற்றப் பின்னனி உள்ள குடும்பத்தை சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறது தடா நீதிமன்றம்.
  6. பேரறிவாளனுக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்

  1. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப் பட்ட நிலையில் உச்சநீதி மன்றம் அதில் 22 தூக்குத் தண்டனைகளை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன்முடிவுகளுடன் விசாரிக்கப் பட்டதென்பது தங்களுக்குப் புலப் படும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கை பொருத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது.   
இன்னொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுநடுநிலையுடன் விசாரிக்கப் பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.. ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக்கயிற்றால் நசுக்கப்படுமோ? 
  1. திருமதி. சோனியா காந்தி அவர்கள் இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு  அத்தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
  2. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்கு கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.
  3. 1980-களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களை போல் நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மேலும் பற்று கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலை போராட்டத்திற்காக உதவி வந்தார்கள். ஒரு நாள் கூலியை கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தார்கள். ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப்போனேன்?? ஏன் தனிமை படுத்தப்பட்டேன்??  உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப் படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.வீ. ஆர். கிருஷ்ணய்யர்.
செய்த குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

2.  முடிவுறா விசாரனையில், முடிவினை நோக்கித் தள்ளப்படும் அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கை.
  • ராசீவ் வழக்கை விசாரிக்க  அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்ட்து.
  • ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்கார்ர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப் பட்டது.
  • மறுவிசாரனை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை
  • உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னால் உச்ச நீதி மன்ற நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ண அய்யர், திரு.பேரறிவாளின் மடலையும் , வழக்கையும்  படித்துவிட்டு பேரறிவாளான் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனைகுறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னால் சனாதிபதிகளுக்கும், பிரதமருக்கும் சோனியா காந்திக்கும்,  இன்னால் சனாதிபதிக்கும்,பிரதமருக்கும் மேலும் தமிழ் நாட்டின் முன்னால் முதலைமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.
  • முன்னால் மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத் மலானி , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும் போதே அறிவித்தார்.
  • முன்னால் மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி எச். சுரேஸ் அவர்களும் பேரறிவாளனை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.
  • சோனியா காந்தி அவர்கள், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. உங்களிடம் (சனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
  • கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், முறைகேடுகள் செய்து நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி திரு.தியாகராஜன் அவர்கள் பேரறிவாளனிடம் எடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த வழக்கின் மூலமாக ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்துவதுமே, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 
3.  பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் கோரிக்கை.
இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கின்றேன்.. வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள், இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்..

உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்குலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.

மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான். பத்திரிக்கைகள் சித்தரித்தது போல் ராஜீவ் கொலையாளி, விடுதலை புலி என்று ஒருதலைப்பட்சமாக பார்க்காமல், அவனையும் ஒரு சக மனிதனாக மட்டுமே பாருங்கள். அவன் நிரபராதி என்று உரக்க கூறுவதை சற்றே கவனியுங்கள். அவனுக்கும் ராஜீவ் கொலை சதிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல் மற்ற இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.

தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மாணவர்களும், சட்ட வல்லுனர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.

மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய  ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இப்பொழுது ஆட்சி செய்யும் முதல்வர், தனது தற்போதைய செயல்பாடுகளினால் உலக தமிழர் அனைவரின் மனங்களிலும் போற்றப்படும் தாயாக உயர்ந்துள்ளார். அவர் தாயுள்ளம் கொண்டு, என் ஒரே மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிர் காக்கும் அணைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று மிக பணிவுடனும், நம்பிக்கையுடனும் கோரிக்கை வைக்கிறேன்.. நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை..

பேரறிவாளனிடமிருந்து ஆறறிவாளர்களுக்கு...

மரணம் யார் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து துக்கமோ ஆசுவாசமோ அடையும் மனித மனம் மரண தண்டனையையும் அதே நோக்கில் அணுகுகிறது. மரணம் எதைவிடவும் கொடுமையானது அல்ல; ஆனால் தண்டனையாக வழங்கும் மரணம் என்பது உச்சபட்ச சித்திரவதை. கழுவேற்றும் கணம் குறித்து சொல்லவில்லை அதற்காய் காத்திருக்கும் காலம் குறித்தே சொல்கிறேன். நீதி நியாயம் என்பவையெல்லாம் அப்பதங்களுக்குண்டான வரையறையினிமித்தம் வழங்கப்படுமானால் தண்டனைகளின் பொருட்டு இவ்வளவு விவாதங்கள் எழ வாய்ப்பற்றுப் போயிருக்கலாம். ஆனால் நிதர்சனம் அவ்வாறல்லவே. இன்று இந்திய அரசினால் மரண வாசல் நோக்கி நிறுத்தப்பட்டிருப்போரில் இருவர் பேரறிவாளன் மற்றும் அஜ்மல் கசாப்.

மேற்சொன்ன இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் வேறுபடலாம்; ஆனால், இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டபோது அவர்களது வயது 20க்குள். அஜ்மல் கசாப் விசயத்தில் இந்திய அரசு செலவிடும் பணம், மெனக்கெடும் விதம், அவற்றால் கண்ட பலன் முதலியவற்றைக் கருதி மீடியாக்களும் மக்களும் வெளியிடும் அதிருப்தி ஒரேவிதமானது. அதுவும் அதற்கடுத்த தீவிரவாதத் தாக்குதல் மும்பையில் நிகழ்த்தப் படுகையில் அஜ்மலை உடனடியாக தூக்கிலிடக்கோரிய வாதங்கள் வலுப்பெற்றன.

கோவையில் சிறுமியைக் கடத்திக் கற்பழித்தவனை என்கவுண்டரில் கொன்றபோது தோன்றிய நிம்மதி அஜ்மல் கசாப் விசயத்திலும் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.பொதுமக்கள் அல்லது மக்களில் ஒரு சாரார் கொண்டுள்ள ஒட்டுமொத்த கோபமும் நீதித்துறையும் அரசும் வழங்கப்படும் தீர்ப்பில் தொனிக்க வேண்டும் என்றால் அது நீதியாக இருக்காது.

பேரறிவாளன் குறித்து பேசும் வேளையில் நாம் அஜ்மல் கசாபை நோக்கும் பார்வயில்தான் எஞ்சிய இந்தியா முழுமையும் பேரறிவாளனைப் பார்க்கின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கசாப் துப்பாக்கியால் அப்பாவிகளை சுட்டான் பேரறிவாளன் அப்படியா என்ற தர்க்க நியாயங்களை நாம் முன்வைக்கும் போது அதுபொழுதில் மரண தண்டனை என்பது நீதிக்கு வழங்கப்படுவதை உண்மை நிலை அறிந்த ஒவ்வொரு மனிதனும் உணரமுடிகின்றது. அதைத் தவிர்த்து கசாப் விசயத்தில் உடனடித் தீர்ப்பை மனம் தேடுகிறது. இங்கு அஜ்மல் கசாப்பிற்கு மரண தண்டனை வழங்கிவிட்டால் பயங்கரவாதிகள் நாசச் செயல்கள் புரிய பயப்படுவார்கள் என்று வாதிடுவோர் உளரெனில் அதைத் தாண்டிய முட்டாள்தனம் இருக்கவியலாது. 

பேரறிவாளன் குறித்து வாதிட நாம் உள்ளோம். தேசிய அளவில் கவனம் பெறக்கூடிய வழக்கு அது. எனவே அதன்பால் உள்ள நியாயம் குறித்து வெளிவரவாவது செய்கிறது. இன்றைக்கு இந்தியாவின் ஒரு கடைக்கோடி கிராமத்தின் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளரும் அப்பகுதியின் சாதி/அரசியல் பலம் பெற்ற ஒரு பஞ்சாயத்து தலைவரும் சாட்சி சொல்ல பத்து பேரும் இருந்தால் சில கொலைகளையும் கற்பழிப்புகளையும் செய்துவிட்டு ஒரு ஏழை அப்பாவியின் பேரில் வழக்குப் பதிந்து அவனை கொடூர கொலைகாரனாக நீதிமன்றத்தின் நிறுத்த முடியும் என்பதன் சாத்திய விழுக்காட்டினை கருதுக. எனில் இந்த சாதாரணின் நியாயம் எவர் கருத்துக்கு வருகிறது? இப்படியாக இதுகாறும் மரணித்தவர்கள் எத்தனை பேர்? ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை முக்கிய எடுகோளாகக் கொண்டிருக்கும் ஒரு நீதி அமைப்பில் மரண தண்டனை என்று ஒன்று இருப்பதே முரணானது. 

உண்மையில் தவறிழைத்தவர்களுக்கு திருந்த வாய்ப்பளிப்பதற்கே தண்டனைகள் எனில் மரணத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டவனுக்கும் நீதிக்கும் கிடைக்கக் கூடிய பலன் என்ன? ஆயுள் தண்டனைக்குரிய குற்றத்தினை தைரியாமகவும் மரண தண்டனைக்குரிய குற்றத்தினை மட்டும் பயந்து ஒதுக்கியும் மக்கள் வாழ்வர் என்ற நினைப்பா? கண நேர உணர்ச்சியில் கொலைக் குற்றங்கள் புரிபவனாகட்டும், திட்டமிட்டுப் படுகொலைகள் புரிந்தவனாகட்டும், மனிதனே அல்ல இவன் மிருகம் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் விரல் சுட்டப்படுபவனாகட்டும் எவன் ஒருவனுக்கும் வழங்கப்படும் மரண தண்டனையின் போது அங்கு நீதியே மரணிக்கிறது என்பேன் நான். 

இன்று பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோர் தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் இந்நிலையில் அவர்களது குற்றம் இவ்விடயத்தின் பின்புல அரசியல் ஆகியவற்றைத் தாண்டி அவர்கள் மரணிக்கக் கூடாது என்று நினைப்பதற்கான காரணமாக மனிதத்தைக் கொள்ளுங்கள் தயவு செய்து... நாம் சார்ந்த அல்லது நம்மைச் சார்ந்த ஒருவருக்கு மரணம் அறிவிக்கப்பட்டு தண்டனையாக வழங்கப்படுவதன் கொடூரத்தை உணருங்கள். 


இந்திய நீதி அமைப்பில் மரணம் என்ற வாய்ப்புகளை மறுக்கும்/ நீதியை குழிதோண்டிப்புதைக்கும் தண்டனை முறையை ஒழிப்பதன் அவசியத்தை உணர இது தமிழர்களுக்கான தருணம். உணர்வு ரீதியாக இப்பிரச்சனையை நாம் அணுகும் விதத்திலேதான் ஒவ்வொரு மரணதண்டனைக் குற்றவாளியைச் சார்ந்தோரும் அணுகுவார்கள் என்பதை அறிய முனைவோம். மரணத்தை வழங்குவது என்பது தண்டனை அல்ல. சரிபாதி விழுக்காடு தவறாகக் கூடிய சாத்தியமுள்ள விசாரணை அமைப்புகளில் குற்றஞ்சாட்டப்படுபவருக்கு அவரது வாழ்வை முற்றுப் பெறச் செய்யும் நிகழ்வு மிகக் கொடூரமான ஒரு முட்டாள் தனம் என்றறியச் செய்வோம்.

இணையப் பயனாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடைமுறையை மத்திய அரசு  முன்னெடுத்திருக்கும் இச்சமயத்தில் மரண தண்டனையை கைவிடக் கோரும் பதிவுகளை இயன்ற அளவு தங்கள் சமூக வலைதளங்களின் மூலம் விரவச் செய்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,


ராஜன்

Wednesday, August 3, 2011

கைப்பழக்கம்-நாப்பழக்கம்-சித்திரம் - செந்தமிழ்

உலகத்தரத்தில் தமிழ்கவிதை எழுதுவது எப்படின்னு பலபேருக்கு உச்சி மண்டைல சுர்ர்ர்ருனு ஒரு ஸ்பார்க்கு ரொம்ப நாளா இருக்கும்னு எனக்குத் தெரியும். நாம தெரிஞ்சு வெச்சுகிட்ட மேட்டரை நாலு பேருக்காவது சொல்லிக்குடுக்கலாம்னு திடீர் ஞானோதயம் வந்ததாலேயே இந்தப்பதிவு. மொதல்ல உலகத் தரத்துல தமிழ்க் கவிதை ஒண்ணாவது நீங்க படிச்சிருக்கீங்களான்னு மோவாய்ல நடுவெரல வெச்சி யோசிச்சுப்பாக்கணும். இல்லைல்ல ... படிச்சிருந்தாலும் பரவால்ல இப்ப இத படிங்க... வேறெதுலயும் கவனம் செதறாம சிந்தாம மானிட்டர மட்டும் பாத்து இந்தக் கவிதய படிங்க...


என் கனவில் ஒவ்வொரு இரவு ...
 நான் உன்னைபார்க்கிறேன். நான் உணர்கிறேன்.
 நான் போய் எப்படி தெரியும் ... அது உள்ளது. 
 நீங்கள் போய் காண்பிக்கவந்தேன். ... அருகில், இதுவரை, எங்கு நீங்கள்இருக்கிறீர்கள் ...
நான் நம்புகிறேன் என்று அவர் ...ஒருமுறை கதவை திறந்து ... நீ என் இதயத்தில்இங்கே இருக்கிறோம் 
என் இதயம் ஒரு போகும் ..நான் உன்னை காதலித்தேன் போது. லவ் இருந்தது 
நான் வைத்திருக்கும் ஒரு உண்மையான நேரம்
என் வாழ்க்கையில் நாம் எப்போதும் ஜி .. அருகில்,இதுவரை, நீங்கள் எங்கே ... நான் நம்புகிறேன் என்றுஅவர் ... ஒருமுறை நீ கதவை திறந்த ... நீ என்இதயத்தில் இங்கே இருக்கிறோம் ... என் இதயம் ஒருபோவோம் ... நீ இங்கே, நான் பயம் இல்லை, அங்கேஇருக்கிறது ... நான் என் இதயம் போகும் என்று ... நீஎன் இதயத்தில் பாதுகாப்பான இருக்கிறீர்கள்


எப்படி இருக்கிறது இதுதான் உலகத்தரத்திலான தமிழ்க்கவிதைக்கு சாம்ப்பில்! 


ஹே ஹே! நோ பேட் வேர்ட்ஸ்! வொய் டென்சன்?


இப்படி பொருள்செறிந்த கவிதையை இயற்றுமளவு மேல்மாடியில் மண் இருந்தால் உன் பிளாகுக்கு ஏன் வருகிறோம்னு நீங்க கேக்குறது புரியுது!


வெரி சிம்ப்பில் எல்லாத்துக்கும் படியளக்க்குற கூகுளாத்தா இதையும் செஞ்சு குடுப்பா! 


http://translate.google.co.in இந்த சுட்டியில் உங்களுக்கு தெரிஞ்ச இங்கிலீசு ஃப்ரெஞ்சு இத்தாலி தென்னமெரிக்க காட்டுவாசி பாசை எதாவது ஒரு மொழிப் பாட்டை காப்பி பேஸ்ட் செய்து ட்ரான்ஸ்லேட் பொத்தானை அமுக்குங்கள்! அவ்வளவுதான்! 2 அல்லது 3 நொடிகளில் சுவையான தமிழ்க்கவிதை ரெடி! 


உங்களுக்கு இங்கிலிபீஸு பாட்டு லிரிக்ஸ் தெரிலைன்னா http://lyrics.filestube.com இங்க போயி சுட்டுக்குங்க! நன்றி வணக்கம்!


டிஸ்கி : மேலே செவ்வெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உலகத்தரத் தமிழ்க்கவிதயின் ஒரிஜினல் பின் வருமாறு! மேற்சொன்ன உத்தியில் கூகுளாத்தா கொடாஞ்சு குடுத்ததுதான் செங்கவிதை!


Every night in my dreams ...I see you. I feel you. ...That is how I know you go on. ...You have come to show you go on. ...Near, far, wherever you are ...I believe that the he...Once more you open the door ...And you're here in my heart ...And my heart will go on an...Love was when I loved you ...One true time I hold to ...In my life we'll always g...Near, far, wherever you are ...I believe that the he...Once more you open the door ...And you're here in my heart ...And my heart will go on an...You're here, there's nothing I fear, ...And I know that my heart will go on ...You are safe in my heart