Friday, March 18, 2011

தேர்தல் அறிக்கை - சாவுக்கு சலவை நோட்டு


ஒரு ஓட்டுக்கு கருணாநிதி எவ்வளவு பணம் கொடுப்பார், ஜெயலலிதா எவ்வளவு பணம் கொடுப்பார் என்று ஒவ்வொருவரும் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இன்று மதியம் தான் சாப்பிடவேண்டிய மாத்திரைக்கான பணத்திற்கு வழியில்லையே என்று புழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பரிதாப ஜீவன்தான் கீழிருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்.




பெயர்: ராஜா முகம்மது.
வயது: 42
ஊர்: ஜெகதாப்பட்டிணம் (புதுக்கோட்டை மாவட்டம்)
தொழில்: இலங்கைக் கடற்படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு நேர்ந்து விடப்பட்ட தமிழக மீனவன்.

சுடப்பட்டிருந்தாலும் எப்படி இது போன்ற தீப்புண்கள் என்று தோன்றலாம். ஆனால், இவர் தாக்குண்டது பெட்ரோல் குண்டு வீச்சில். உடலில் பற்றிய தீயோடு கடலில் நீந்தி கரை சேர்ந்த அவரை ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழக மீனவர்களை வைத்து நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு ஒரு காட்சி கிடைத்ததாக குதூகலித்தார். பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனையும், கூடவே சன் டி.வி. கேமராமேனையும் அனுப்பி, ஐம்பதாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கியதாகவும், ஆறுதல் கூறியதாகவும் ஒளிப்பதிவு செய்து, தங்கள் நாடகத்தின் காட்சியொன்றை தமிழகம் முழுக்க ஒளிபரப்பி தம்பட்டம் அடித்துக்கொண்டார். சாவுக்கு சலவை நோட்டு திட்டம்; காயத்திற்கு கரன்சி உதவி திட்டம் என்றெல்லாம் கூட அறிவிக்கலாம் அரசியல்வாதிகளும்; அவர்தம் நாடகங்களும்.

திமுகவினரின் அன்றைய நாடகக்காட்சி அவர்கள் அளவில் முடிவுற்றது. ஆனால், உடல் முழுக்க தீப்புண்களோடு மருத்துவமனையில் இருந்த ராஜா முகமதுவிற்கு அரசுப் பணம் யானைப் பசிக்கு சோளப் பொரியாகிப் போனது. உடல் தேறாமலே, கையில் பணமில்லாத நிலையில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டவர் இன்னும் படுக்கையில்தான் இருக்கின்றார்; தீக்காயங்களோடும், வைத்தியம் பார்க்க பணமில்லையே என்னும் மனக்காயங்களோடும்.

தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் கையிழந்து, காலிழந்து, தொழில் செய்ய வலுவிழந்து நடை பிணமாக வாழ்ந்து வருகின்றனர். அந்நிய நாட்டுப் படையால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தன் நாட்டு குடிமகனைக் காக்க வக்கில்லாத அரசு, தன் குடும்ப வளத்தை பெருக்குவதில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகின்றது.

இதுபோன்ற தாக்குதல்களும் கொலைகளும் இனியும் நடைபெறக்கூடாது என்னும் நோக்கில் இணைய நண்பர்களால் முன்னெடுக்கப்பட்ட #tnfisherman போராட்டம், இணையம் கடந்து பல மட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றது. அதன் ஒரு முகமாக பல்வேறு இணைய நண்பர்கள், நாகப்பட்டிணம் தொடங்கி ராமேஸ்வரம் வரையிலான மீனவப் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.

இதுவரை நாம் மேற்கொண்ட செயல்களை பரிசீலிக்கவும் (Review), அடுத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதனை ஆலோசனை செய்யவும் வரும் ஞாயிறு அன்று #tnfisherman ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

நாள்: 20/03/2011
நேரம்: மாலை 5 மணி.
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) மேற்கு KK நகர்.

அன்றைய கூட்டத்தின் திட்டம்:
1. முதல் ஆலோசனைக் கூட்ட முடிவுகளும், நடைமுறைப்படுத்தப்பட்டவையும் - அறிக்கை வாசிப்பு.
2. மீனவர்கள் வாழ்வில் - மீனவர் சங்கப் பிரதிநிதியின் உரை
3. மீனவர்கள் சந்திப்பு - பயணம் சென்ற நண்பர்களின் உரை.
4. மீனவர் ராஜா முகமது - நமது பங்களிப்பு என்ன?
5. ஆர்வலர்களின் கருத்துகளும், கலந்துரையாடலும்.

நம் சகோதரர்களுக்காக செயல்படும் நாம், அனைவரது கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடும் இக்கூட்டத்திற்கு #tnfisherman ஆர்வலர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

www.savetnfishermEn.org சார்பாக
கும்மி.

Wednesday, March 16, 2011

முஸ்லீம் மனோபாவம்-ஜப்பான் பேரழிவில் பிணம்தின்னுகிறது



இரண்டு நாட்களாக எனக்குத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த SMS களில் இருந்து ஒன்றினை மட்டும் இங்கு இடுகின்றேன்.



Japan was hit by tsunami coz of these reasons.
1. Japan was first country to Ban Islamic Hijaab.
2. First country to stop teaching of Holy Quran.
3. First country to tear pages of Quran.
Japan is totally Anti-Muslim.
It is Allah's AZAAB on special Islamic day "FRIDAY".
Pls send this message & Lesson to whole world... pls dnt stop dis is abt our islam.

ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி மட்டுமின்றி அணு உலையும் வெடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கதிரியக்க வெளியேற்றத்தால் பல நகரங்களில் இருக்கும் மக்களும் கூட ஆபத்துக்கு உட்படுவார்களோ என்று பலரும் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், ஜப்பானிய சுனாமியை அல்லாவின் தண்டனை என்று கூறி மகிழ்ச்சியடையும் இவர்கள் மனிதர்கள்தானா?

ஏதேனும் சிறு இழப்பு ஏற்பட்டாலே, வருந்துவது மனித இயல்பு. ஒரு நாடே ஸ்தம்பித்துப்போய் இருக்கும் சூழலில், அதைக் கண்டு மகிழ்வுறும் இவர்கள் பின்பற்றும் மார்க்கம் அமைதி மார்க்கமாம். கொடுமைகளைக் கண்டு இன்புறும் சாடிஸ்டுகள், தாங்கள் அமைதியை விரும்புவதாகக் கூறிக் கொள்வது நகைமுரண். யாருடனாவது பேசும்போது வாய் கிழிய 'சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்' என்று பேசும் இவர்கள், ஒரு பேரழிவைப் பார்த்து கொக்கரிப்பது மிகவும் கீழ்த்தரமாய் இருக்கின்றது.

இவ்வளவு முட்டாள்தனமாய் இருப்பதால் இவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்களா? இல்லை முஸ்லிம்களாக இருப்பதால்தான் இப்படி முட்டாள்தனமாய் சிந்திக்கிறார்களா? எல்லாம் காலக் கொடுமை.

டிஸ்கி: என்னுடைய தற்போதைய உடல்நலன் பொருட்டு ஓய்வில் இருக்க அறிவுறுத்திய நண்பர்கள், இந்த ஒரு பதிவுக்கு மட்டும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இந்தக் குறுஞ்செய்திகளை பார்த்து பொறுமையாய் இருக்க முடியவில்லை.

Sunday, March 13, 2011

ஒரு அருமையான உரையாடல்!(சிலுவை கதைகள்)

பேஸ்புக்கில் அவ்வபோது சில அருமையான உரையாடல் நடக்கும் இங்கே ஒரு உரையாடலை பகிர்ந்து கொள்கிறேன், என்ன செய்ய சில நேரத்தில் பொழுது போகலைன்னா என்னன்னவோ செய்ய வேண்டியிருக்கு!



படம் இந்த சைட்டிலிருந்து எடுத்தது, நான் கிராபிக்ஸ் பண்ணல!

கர்த்தரின் மந்தையிலிருந்து காணாமல் போன ஆடு ஒன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தது, அதற்கு நான்

//காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; //

கர்த்தர் உம்மை தேடி கண்டுபிடித்து பிரியாணி போடுவார்! கவலைபடாதீரும்!

இப்படி பதிலளித்திருந்தேன்.

அடுத்து வந்தது
தயவு செய்து உங்ககள் நாத்திகத்தை சொல்லி எங்கள் சந்தோஷத்தில் குறுக்கிட வேண்டாம் நண்பா....

அதற்கு நான்

முட்டாள்தனமா இருப்பது தான் சந்தோசமா தல,
ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி பைபிளில் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?


கேள்வி கேட்காம நம்புவது தான் உங்கள் பழக்கமா!?

விவாதம் ஆரம்பிச்சு என்னோட அஞ்சாவது கமெண்ட் இது, ஆனால் பாருங்கள் நான் கேட்ட கேள்விக்கு கடைசிவரை யாரும் பதில் சொல்லவில்லை, மாறாக பர்சனல் மெசேஜில் வந்து அறிவுரையும், கேனத்தனமாக பேசிகொண்டும், தான் ஒரு மெண்டல் என்று நிரூபித்தும் சென்றார் அந்த நண்பர், அட நிஜமா தாங்க, அவர் பண்ண கூத்தை காப்பி பேஸ்ட் பண்றேன் பாருங்க!

ஒரு நாகரீகம் இல்லாமல் படிச்சவந்தானே நீர்....

Val Paiyan March 13 at 7:57pm
அய்யோ நான் படிச்சிருந்தா எதாவது ஒரு மதத்தை புடிச்சி தொங்கிட்டு முட்டாளால இருந்திருப்பேன், நான் படித்து கோண்டிருப்பது உலகை, கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா? அதை சொன்னால் போதும், நான் படிச்சவனான்னு கேட்டு இண்டர்வியூ பண்ண வேணாம்!


இது சும்மா வம்பு பேச்சா தெரியுதே....
போன் நம்பர் தாங்க நேர்ல பேசுறேன்...

Val Paiyan March 13 at 8:24pm
போன்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?


மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலை..
pidikkalainna vidra vendiyathuthaane....
thimir pecchu thevaiyaa..
vayasukku thaguntha pechaa....ithu..?

Val Paiyan March 13 at 8:34pm
வயசுக்கும் மததுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, நான் கேட்டது கேள்வி, பதில் சொல்லிட்டா நான் பாட்டுக்கு போறேன், உங்ககிட்ட இப்ப நான் அட்வைஸ் பண்ணுங்கன்னு கேட்டேனா!?
லெக்சர் கொடுக்குறதை விட்டுட்டு பதில் சொல்லுங்க அது போதும், எங்க எப்படி நடந்துக்கனும்னு எங்களுக்கு தெரியும்!

pathil solla enakku viruppamillai so....?
umakku pathil solli oru pirayojanamillai so....?
athu enakku thevaiyum illaiye....

Val Paiyan March 13 at 8:40pm
ஓடிருன்னு முதல்லயே சொல்லிட்டேன், இன்னும் லூஸு மாதிரி பேசிகிட்டு இருக்கக்கூடாது, பதில் சொல்ல விருப்பமில்லைன்னா @#$%^&*கா இவ்ளோ நேரம் பேசிகிட்டு இருக்க, வேற எதாவது அசிங்கமா திட்டிறப்போறேன், இத்தோடு அப்படியே ஓடிரு!


paaru enna payanthuttiyaa....?
yen nee thittina naan thitta maaddenaa..?

Val Paiyan March 13 at 8:43pm
ஆக மொத்தம் பதில்னு ஒன்னு இல்லை சரியா,
சரி விடு எனக்கு சொல்ல வேணாம், உனக்கும் தெரியாதுன்னு எனக்கு தெரியும், உங்களையெல்லாம் ஏமாத்திகிட்டு இருக்கானே, பாதிரி அவன்கிட்ட போய் கேளு, நான் கேட்ட கேள்வியை, என்ன சொல்றான்னு வந்து சொல்லு!


நீ திட்டி தான் பாரேன்!


unakku velai soliye kidaiyaathaa...?
thimirthanamaa pesura..?
chinna paiyana irunthuttu ippidi pesura veedla ippidithaan valarthaangalaa...

Val Paiyan March 13 at 8:46pm
அப்படி தான் வச்சிகயேன், என்ன பண்ணலாம்னு உத்தேசம்


unakku enna parathaa uthesam..

Val Paiyan March 13 at 8:48pm
உனக்கும் பதில் தெரியல, பொழுச்சு போன்னு விடலாம்னு பார்த்தா ஓவரா எகுறுர, அதுனால இது எல்லாத்தையும் காப்பி பண்ணி போஸ்டா போடலாம்னு உத்தேசம், ஊருக்கு தெரியட்டும் உன் லட்சணம்! எப்படி ஒகே தான!


paatthiyaa paatthiyaa eppidi tappikka paakkura makkaa....
unn kunam unn naagareegam makkalukku theriyattum....

Val Paiyan March 13 at 8:53pm
ரைட்டு, பதிவு போட்டுட்டு லிங்க் கொடுக்குறேன்.
யாரு பதில் சொல்ல தெரியாம டயாப்க்கிறதுன்னு மக்களுக்கு தெரியட்டும்!


nee loosu'nu podu...

Val Paiyan March 13 at 8:56pm
உமது ப்ளாக் லிங்க் கொடுத்தா அதையும் சேர்த்து போடுறேன்!, அதுலயும் கண்டிப்பா லூசுதனமா எதாவது இருக்கும்!


chinna pillaiyaa irukiye raja.....?

Val Paiyan March 13 at 8:59pm
பதிவு போட்ட பிறகு தெரியும், யாரு சின்ன புள்ளைன்னு!
ப்ளாக் அட்ரஸ் என்ன?


unn phone no unn mulu saritthiramum enakku vanthuruchi makkaa....

Val Paiyan March 13 at 9:01pm
9994500540
என் ப்ளாக்குலயே அது இருக்கே, நீ என்னயா கண்டுபுடிக்கிறது மடசாம்பிராணி!


neethan mada sampiraani...he he he he,,,,

Val Paiyan March 13 at 9:06pm
ஹாஹாஹாஹா


ha ha ha ha ha ha ha,,,,,,,

Val Paiyan March 13 at 9:10pm
அய்யய்யோ, இவ்ளோ நேரம் ஒரு மெண்டல்கிட்டயா பேசிகிட்டு இருந்தேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


nee appo motthama mendal'thaanaa avvvvvvvvvvvvvv...

Val Paiyan March 13 at 9:18pm
எல்லாத்தையும் காப்பி பண்ணனும், போஸ்டுல போடனும், நிறையா வேலை இருக்கு, வரட்டா!

podu podu neeyum naari povaay.....


********
இன்னொரு ட்ராக்கும் போச்சு அதையும் பேஸ்ட் பண்றேன்



என்னாச்சுய்யா உமக்கு........?

Val Paiyan March 13 at 7:54pm
என் கமெண்ட் எங்கே?, யார் அழிச்சா?


ஒரு நாகரீகமில்லாமல் எழுதினால்.....?

Val Paiyan March 13 at 7:58pm
கமெண்டை அழித்தால் அப்படி தான் எழுதனும், சும்மா விட்றதா?


உங்க கமெண்ட்ஸ் நார்மலா இல்லையே....!!!

Val Paiyan March 13 at 8:24pm
எல்லா பக்கமும் இப்படியா இருக்கு!?


ஒரு நட்பு இவ்வளவு சீக்கிரமா முறிந்து விட்டதே!!!!!
unga pechu murai veru paduthe.....?
onnume normala illai.....

Val Paiyan March 13 at 8:36pm
ஆக, பதில் இல்லை!
குருட்டு தனமா ஒன்றை நம்பி கொண்டிருக்கும் மதவாதிகளோட என்ன முறையில் பேசுறதாம், நன்க கவனிக்க, நான் ஆரம்பத்தில் ஒழுங்கா தான் பேசியிருப்பேன், உங்க பதிலை வைத்தே என் முறையும் மாறியிருக்கும்!


aduthavanga nampikkaiyil unga kolgaiya thinikkalaamo..?

Val Paiyan March 13 at 8:41pm
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
கேள்விக்கு தான் பதில் கேட்டேன், நான் இங்கே கொள்கை பிரசங்கம் பண்ணல!, சுத்தமா மழுங்கி போச்சா மண்ட!


naan pathil solla nee yaar?

Val Paiyan March 13 at 8:44pm
தெரியாதுங்கிறதை எப்படியெல்லாம் சமாளிச்சு பாக்குற உன்னை நினைச்சா பாவமா இருக்குய்யா!, இப்படி தான் புள்ளகுட்டிகளையெல்லாம் வளர்க்க போறியோ!


nee eppi valanthurukke kavanichiyaa....!!!

Val Paiyan March 13 at 8:50pm
மதம் என்பதை என்னுள் திணிக்க அனுமதிக்காமல் வளர்ந்தேன், நீ அப்படியா வளர்க்கப்போற உன் குழந்தைகளை, பரம்பர பரம்பரையாக முட்டாளா தான் வளருவோம்னு பந்தயம் கட்டி வீம்புக்கு வீணா போற கோஷ்டி தானே நீங்க!


nee satthiyama loose'thaan....!!!

Val Paiyan March 13 at 8:55pm
அதை நீ சொல்வது தான் காமெடி!
எதாவது ஆதாரம் இருக்கா மதத்தின் நம்பிக்கைக்கு, சும்மா ஆகுக என்றானாம் உலகம் உருவாச்சாம், இதையெல்லாம் நம்புற நீ லூசா, நான் லூசா!


nee loosude loosu....




sari poda arivu ketavane......ha ha ha ha ha...


***************************

எப்படி பார்த்திங்கல்ல,
நான் கேள்வி கேட்டது நேத்து, இப்ப வரைக்கும் பதில் இல்ல, கேட்டா சொல்ல முடியாதாம், அவசியமில்லையாம், ஆனா மணி கணக்கா சும்மா மொக்கை போடுவாராம், இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் வச்சிகிட்டு ஃபேஸ்புக் படுற பாடு இருக்கே சொல்லி மாளல!

அந்த வாழும் ஐன்ஸ்டீனின் பெயரை எடிட் பண்ணிட்டேன், அவரே வந்து சொன்னா நல்லாயிருக்கும்!

Friday, March 11, 2011

ஜப்பான் சுனாமி - நடப்பது என்ன?


ஜப்பானில் இன்று மதியம் 2:46 மணிக்கு (JST) ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. அதனினும் கொடுமையாக 900 கிமீ வேகத்தில் சுனாமி அலைகள் ஜப்பான் நாட்டை சூறையாடியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பாரிய பேரிடர் ஏற்பட்டதில்லை என கருதப்படுகின்றது. உலகே ஒன்றிணைந்து ஜப்பானை கட்டியெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில அவசர கால உதவிகளை பல்வேறு அரசுகளும், நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றிய தகவல்களை பலருக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் இடர்ப்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை, காணாமல் போயிருப்பவர்களைக் கண்டறிவதில் உதவுவோம்.

----------------------------------
ஜப்பானில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் அறிய, டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஏறத்தாழ 25000 இந்தியர்கள் ஜப்பானில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
00813 32622391
00813 32622392
00813 32622393
00813 32622394
00813 32622395
00813 32622396
00813 32622397

----------------------------------------------------------

தொடர்பில் இல்லாமல் போனவர்களுக்கான தொடர்புகளை உறுதிபடுத்துவதற்கான சேவையை கூகிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. Japan Person Finder என பெயரிடப்பட்டுள்ள அத்தளம் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தகவல்களை அளிக்கின்றது. நீங்கள் அளிக்கும் தகவல்கள் உடனடியாக பதிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தவறான தகவல்களை அளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


----------------------------------------------------------

Japan Person Finder தளம் தவிர கூகிள் நிறுவனம் Crisis Management தளம் ஒன்றினையும் நிறுவியுள்ளது. அதன் மூலமும் பல தகவல்களை பெற முடியும்


----------------------------------------------

இப்பொழுது ஏற்பட்டுள்ள சுனாமி ஜப்பான் மட்டுமின்றி இன்னும் பல நாடுகளையும் தாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய அபாயங்களை விளக்கும் தளம் ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.


---------------

இக்கட்டான தருணத்தில் நேரிட்டிருக்கும் இப்பேரிடர் பற்றிய உண்மையான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை பரவச் செய்து பாதிப்பில் இருந்து மக்களைக் காப்போம்.


--------------
பிற்சேர்க்கை:

இதுவரை வந்திருக்கும் தகவல்களின் படி 100 பேர் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பல் மூழ்கியுள்ளது. செண்டாய் நகரில் ஒரு சாலையில் மட்டும் 300 உடல்கள் மிதக்கின்றன. ஒரு ரயிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வந்துள்ளது

பசிபிக் பெருங்கடல் முழுதுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா, அமெரிக்காவின் சில பகுதிகள், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஹவாய் தீவுகள், ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியு கினியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது வரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே இதுதான் பெரும் பாதிப்புகளை எற்படுத்தக்கூடியதாய் இருக்கும் என்று கருதப்படுகின்றது


-----------------

அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை பின்னூட்டங்களில் தெரியப்படுத்தி வருகின்றோம். முழுமையான தகவல்களை அறிய பின்னூட்டங்களையும் படியுங்கள்.

Sunday, March 6, 2011

கனிமொழிக்கு நாளைமுதல் களி


திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவில் காங்கிரஸை டீலாவில் விட்ட கருணாநிதி மற்ற கூட்டணி கட்சிகள் மூலமாக காங்கிரஸைக் கழற்றி விட்டது ஆரோக்யமான முடிவு என்ற ரீதியில் அறிக்கை விடச் செய்து கொண்டிருப்பதையடுத்து காங்கிரஸில் எந்த சப்தமுமின்றி அமைதியே தொடர்கிறது.
தமிழக கதரில் ஈவீ கே எஸ் மட்டும் தாங்கள் விடுதலையடைந்து விட்டதாக குரல் கொடுத்திருக்கிறார்; ஆனால் டெல்லியிலிருந்து திமுகவின் காங்கிரஸைத் தனிமைப் படுத்தும் முடிவு தொடர்பாக எவரும் இன்னமும் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல டெல்லி தலைமை வைக்கும் செக்காக நாளை கனி மொழியின் கைது படலம் இருக்கலாம் என்று தெரிகிறது. டெல்லி மீடியாக்கள் இது குறித்து செய்திகளைத் தருகின்றன.
டைம்ஸ் ஆஃப் இந்தியா http://bit.ly/fCNrJO
டெல்லி நிருபர் ராஜகோபாலன் என்பவரது டுவீட்!

கண்டன போஸ்டரை ரெடியாக வைத்துக் கொண்டே கனிமொழி கைது நாடகம் ஒன்று கடந்த மாதம் சென்னையில் நடந்ததை போல் அல்லாமல் ரியல் க்ளைமாக்ஸ் ஒன்றுக்கு திமுக நாளை தயாராக இருக்கிறது.
டெல்லி காங்கிரஸின் இந்த தாக்குதலை எந்த வகையிலும் எதிர் கொண்டு வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் திமுக காங்கிரஸை பழிவாங்கும் விதத்தில் தமிழக காங்கிரஸ் தலைகளின் பழைய மற்றும் புதிய தில்லாலங்கடி வழக்குகளை தூசிதட்டலாம் எனத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸின் டம்மி பீஸ்களை வழக்குகளில் சிக்க வைப்பதன் மூலம் டெல்லிக்கோ அல்லது வரும் தேர்தலில் காங்கிரஸுக்கோ என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது என்றுதான் தெரியவில்லை!
 ஆனால் ஸ்பெக்டரம் பிரச்சனையின் உச்சகட்டமாக தமிழக முதல்வரின் மகளைக் கைது செய்து விட்டால் எந்த முகரையை வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்கப் போவது என தெரியாமல் திமுக பெருந்தலைகள் முக்கி முனகிக் கொண்டிருக்கலாம்!
ஆக மூணு சீட்டு ஆட்டம் முடிவடைவது போல் தெரியவில்லை!
நாளை முதல் அதகள ஆட்டம் ஆரம்பம்! 

கலைஞ்சரின் மூணு சீட்டு-மங்காத்தா-உள்ளே;வெளியே!

கலைஞ்சர் உயர் நிலை செயல் திட்டக் குழுவை தேமுதிக-அதிமுக கூட்டணி உறுதியான மறு நாளே கூட்டி, தனக்கே உரித்தான காய் நகர்த்தல்களால் காங்கிரசைத் தனித்துப் பிரிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்! (சொம்புகளின் ஸ்டைலில் இப்படித்தான் சொல்லுகிறார்கள்!)
 
இதற்கு முன்னதாக, மானமிகு வீரமணி இரண்டு முறை அறிக்கை விட்டு திமுகவின் தன்மான உணர்வைத் தட்டியெழுப்பி புதுவீர ரத்தம் பாய்ச்சியது நன்றாகவே வேலை செய்திருக்கிறது என உடன்பிறப்புகள் நம்பினால்  கலைஞ்சர் மனம் குளிரும்! ஆக நாமும் நம்புவோமாக.
உயர் நிலை செயல் திட்டக் குழுவின் முடிவுக்கு வி.சி தொல். திருமா அமோக வரவேற்பு தெரிவித்துள்ளதற்கு இலங்கை விமான நிலையத்தில் சமீபத்தில் பட்ட சாணி தடவிய செருப்படி ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இதில் இன்னொரு கூட்டணிக் கட்சியான(நேற்றைய தேதிவரை! இன்று அய்யா வேறு மரம் தாவினால் நாம் பொறுப்பல்ல!) பாசமிகு மகன் கட்சியின் நிலை தான் அண்டர் வேர் அவிழ்ந்து கிடக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட அரசுக்கெதிராக தலைவிரித்து தாண்டவமாடும் அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி திமுக கூட்டணி வரும் தேர்தலில் ஒரு மயிரும் புடுங்க முடியாது என்பது தெரிந்தும் ஐ.மு.கூ-விற்கு மத்தியில் மீதமுள்ள ஆயுசை கணக்கில் கொண்டு சில வருடங்களாவது ராஜ்ய சபா சீட்டு மூலம் மகனை மந்திரியாக்கலாம் என்று மரு.ராமதாஸ் கட்டியிருந்த கனவுக் கோட்டை கந்தரகோலமாகிவிட்ட்து.

காங்கிரஸுக்கு இதனால் என்ன பெரிதாக நஷ்டம்? என்றால் ஒண்ணுமே இல்லை! திமுகவிடமிருந்து 70 சீட்டை வாங்கி இருந்தாலும் 7ல் கூட ஜெயிக்கப் போவதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. மயிரைக் கட்டி மலை இழுத்த கதர் கட்சியின் இப்போதைய நிலை மயிரே போச்சு என்பதுதான்! ஈவீ கே எஸ் மைக்கைத் தூக்கிப் பிடிக்கவும் யுவராஜா ஸ்போர்ட்ஸ் ஷூவ போட்டுட்டு தெருத்தெருவா ஊர்வலம் போகவும் இன்னொரு வாய்ப்பு! 

கலைஞ்சரின் நேற்றைய அறிக்கையின் படி அவர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கான காரணங்கள்;-
கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48இல் தொடங்கி, 51 என்றாகி, 55 என்றாகி, 57 என்றாகி, இறுதியில் 60 தொகுதிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதல் அளித்து - அதன் பிறகு இதுபோன்று நிபந்தனைகள் - 63 தொகுதிகள் வேண்டும் என்பதும் - அந்தத் தொகுதிகளின் பெயர்களை பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே ஒதுக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தது, அதிர்ச்சி தரக் கூடியவைகளாக அமைந்திருப்பதைக் கண்டு தான்’’
ஆக, திமுக மத்திய அரசிலிருந்து தன் அமைச்சர்களை விலக்கிக் கொண்ட்தற்கான காரணமாவது மூணு சீட்டு
 மூணு சீட்டு என்பது பலான படம் ஓடும்  தியேட்டர்களின் அருகிலும் சந்து பொந்து களிலும் அஞ்சு பத்துக்கு குத்த வைத்து ஆடப்படும் ஆட்டம் மட்டுமல்ல; காரியக் கமிட்டியில் வெள்ளை மெத்தையை தரையில் விரித்து உருண்டைத் தலையணைகளை உருட்டி விட்டும், உயர்நிலை செயல் திட்டக் குழுவென்ற பெயரில் நாள் பார்த்து நச்சென்று அடிப்பதுமான ஆட்டம்!
திமுக மத்தியில் ஆட்சியில் பங்கேற்று வகையாக துறைகளை வாங்கிக் கொண்டு ஆட்டம் போட்ட கடந்த சில வருடங்களில் மத்திய அரசிலிருந்து விலகச் சொல்லி பலர் கூப்பாடு போட்டனர்! எதற்காக? மேற் சொல்லப் பட்ட மூணு சீட்டு பிரச்சனை போன்ற அதி தீவிர/உலக பொருளாதாரத்தை பாதிக்கப் போகிற விசயத்துக்காகவா?! இல்லை பத்து பைசா பொறாத மானங்கெட்ட ஒரு ஒரு மொழியைப் பேசும் கூட்டத்தின் அன்றாட சாவுக்காக!
இலங்கைத் தீவில் தமிழ் பேசும் ஒரே பாவத்துக்காக, ஒரு இனமே பாறையில் அறைந்தாற் போல் அங்கம் சிதற குருதி தெறிக்க அழித்தொழிக்கப் பட்டதே? அப்போது இதே விலகலை ஏன் செய்திருக்கக் கூடாது? மூன்று சட்டமன்றத் தொகுதியென்பது மூணு லட்சம் பேரின் உயிரைக் காட்டிலும் மகோன்னதமானதல்லவா! அதனால் தான் தமிழினத் தலைவர் அப்போது மூணு மணிநேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்து இனத் தொண்டாற்றினார்!
அயல் நாட்டுப் பிரச்சனைகளில் நாம் தலை விட முடியாதென்று சொன்ன சொக்கத் தங்கம் சோனியாவை நக்கும் தங்கம் நம் தலைவர் உள்நாட்டின் தென் கோடியில் மீன் பிடிப்பவன் தினம் தினம் சிங்களனால் உடல் சுடப் பட்டும் வளை நெரிபட்டும் செத்தொழிந்த போது ஏன் விலகியிருக்க்க் கூடாது! ஒரு மீனவனுக்கு 5 லட்சம் தானே குடுத்துட்டா போச்சு! நாம அடிச்ச காசுல 6 கோடி பேரையும் கொன்னுட்டு பொணத்து மேல அஞ்சஞ்சு லட்சம் வெச்சாலும் மிச்சமிருக்குமே! ஆனா மூணு சீட்டுங்கறது அப்பிடியா!? போனா வராது பொழுது போனா கெடைக்காதுல்ல! 

மூணு எம் எல் ஏ சீட்ட்டுக்கு பொறுமானமில்லாத தமிழனுக்கு இந்த எலக்சனில் என்ன மயிருக்கு ஓட்டுக்கு காசு கொடுக்கணும்!? தண்டம் தானே! இது குறித்து அடுத்த உயர் நிலை செயல் திட்டக் குழுவில் கலைஞ்சர் ஆலோசித்தால் பரவாயில்லை.

Tuesday, March 1, 2011

மூடிவெச்ச பிரியாணி&முள்ளங்கி சாம்பார்-மூணு நாள் கழித்து ஓபன் செய்யப்படுகிறது


சூப்பர் சினிமா

நேற்றிரவு நண்பன் சிலாகித்துப் புகழ்ந்து கொடுத்த டீவீடியில் பார்த்த படம் அது டீவிடியின் முன்பக்கம் மோசர்பேர் என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. அது படத்தின் டைட்டில் இல்லை என்று நினைக்கிறேன்.கீழே மார்க்கரில் நமீதா என்று எழுதியிருந்ததன் காரணம் படம் பார்க்கையில் புரிந்தது. கதாநாயகி ஆஜானுபாகுவாக 6 1/2 அடி உயரத்தில் இருந்ததாலும் சாயல் ஒத்துப்போனதாலும் அவ்வாறு எழுதியிருக்கலாம். ஆக அப்படத்தின் டைட்டில் நம்மளவில் நமீதா எனக் கொள்க.
படத்தின் ஆரம்ப கட்டத்தில் வரும் காட்சிகள் வழக்கமான படங்களில் வரும் காட்சிகள் தான் என்பதால் சொல்லவேண்டியதில்லை. குறிப்பிடத் தகுந்த விஷயம் படத்தில் மியூசிக்கே இல்லை. ஸ்பாட் ரெகார்டிங் மூலமாக இயல்பான முனகல்களைக் கொண்டே படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். க்ரேன்;ட்ராலியை எல்லாம் 10*10 ரூமில் எவ்வாறு இயக்கினார்கள் என்பது வியக்கத்தக்க அம்சம். நாயகியின் பர்ஃபாமென்ஸ் அபாரம் கையக் குடுங்க மேடம். எனக்கென்னவோ அவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஹீரோ இயக்குனரின் அஸிஸ்டெண்ட்டாம்! அவரது காதலிகள் அதிர்ஷ்டசாலிகள். என்னைப் பொருத்தவரை படத்தை டிஸ்க் தேயும் வரை பார்க்கலாம்.
(தொ,நு கலைஞர்கள் பற்றி படத்துல குறிப்பிடாததால் என்னாலும் சொல்ல முடியவில்லை மன்னிச்சூஊஊஊ!)


ரசித்த குறும்படம்

பாட்ஷா
ரஜினிகாந்த் நடித்திருப்பதாக கூறப்படும் இந்தப் படத்தை சமீபத்தில் கே டீவியில் பார்க்க நேர்ந்தது. பணக்கஷ்டத்திலிருக்கும் பலருக்கு ஜனகராஜ் மஞ்சப்பை கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பல்பு மண்டையன் மாணிக்கம் எங்கே எனக்கேட்ட்தும் ஜனகராஜ் வழக்கமான சிரிப்புடன் மேற்கு திசையில் மேலே பார்த்தார். ஒரு பூசணிக்காய் பறந்து கொண்டிருந்தது ஆற்காட்டார் ஆய் போய்விட்டார் போல பொசுக்குன்னு கரண்ட் போயிடுச்சு வீட்டுல! ஸோ 6நிமிடங்கள் வெகு சுவாரஸ்யமாக ஓடிய பாட்ஷா படமே நான் சமீபத்தில் பார்த்து ரசித்த சிறந்த குறும்படம்.



இந்த வார வாசகர் கடிதம்

Dear Sir,

As im suffering from severe diarrhoea and vomiting after reading your blog, I’ve decided hereafter not to read it anymore. My wife scolded me very badly (using v bad words sir) for reading ur blog and she blocked ur website too. Inspite of all this,  I really miss u and ur bittu pada criticism. Can u send me some other link where I can read explicit content. If possible send me some proxy link through which I can read u again. Best wishes sir.

Ungal sevai naatukku thevai.
Varuththadan
Vaal Paiyan


அன்புள்ள வாசகருக்கு,

இப்படியெல்லாம் இங்கிலிபீச்ல லெட்டர் போட்டா எனக்கென்ன மயிறா புரியும்? அவ்வ்வ்வ்வ்! வேறு யாராவது தமிழில் மொழிபெயர்த்து கமெண்ட்ல சொன்னா நல்லா இருப்பீங்க.

இன்றைய தத்துவம்

ப்ரொஃபைல்ல ஒரிஜினல் ஃபோட்டோ போட்டு ஃபோன் நம்பரும் குடுக்கறவன் மாவீரன். புனை பெயர் வெச்சவன் மானங்கெட்டவன்!

‘A’ஜோக் ஏரியா
60 வயதுக்கு மேற்பட்ட அன்பர்களுக்கு மட்டும்

மேற்கண்ட லின்க்கிலிருந்துதான் எல்லா அசைவ ஜோக்குகளும் காப்பி பேஸ்ட் செய்யப் படுகின்றன. நீங்களே போயி படிச்சுக்குங்க.

இடைச்செருகல்

எங்கடா நடுப்பக்க கிளாமர் ஸ்டில்லுனு தேடுபவர்கள் பிடித்த சினிமா நடிகையின் பெயருக்கு முன்னால் செக்ஸி அல்லது ஹாட் போட்டு கூகுள் சர்ச் இஞ்சினில் தட்டினால் குப்பை போல வந்து கொட்டும். பார்த்து ரசியுங்கள்.

காராசேவு

அனைத்து வகை காண்டம் களையும் உபயோகப் படுத்தி போரடித்துவிட்ட அன்பர்கள் அடுத்த சண்டே கசாப்புக் கடையில் சொல்லி ஆட்டுக் குடலை வாங்கி அவரவர் சைஸுக்கு ஏற்றவாறு கத்தரித்துக் கொள்ளவும். ஒரு புறம் மட்டும் இறுக்கமாக நரம்பினால் முடிச்சுப் போட்டுக் கொண்டு பயன் படுத்திப் பாருங்கள். இதுதான் முதன்முதலில் இங்கிலாந்து அரசருக்கு சிபிலிஸ் நோயிலிருந்து தப்புவதற்காக தயாரிக்கப்பட்ட காண்டம்களின் தொழில் ரகசியம்.

தகவல்

நாளைக்கு மத்யானம் கோயம்புத்தூர் வர இருக்கின்றேன். ரயில் சாயங்காலம் 6.30க்குத்தான். பிளாட்பாரத்துல சும்மா உக்காந்துட்டு இருக்கற நேரம் பதிவுலக அன்பர்கள் ஃப்ரீயாக இருந்தால் வாருங்கள் சந்திக்கலாம்.

படிக்கையில் பிடித்தது

ஒண்ணாங்கிளாஸ் படிக்கையில் பிடித்தது-அம்புஜம் டீச்சர்
4ம் கிளாஸ் படிக்கையில் பிடித்தது காயத்ரி
7ம் கிளாஸ் படிக்கையில் பிடித்தது காயத்ரியின் அக்கா கீதா
9ம் கிளாஸ் படிக்கையில் பிடித்தது கல்பனா
11,12ம் கிளாஸ்கள் படிக்கையில் பிடித்தது தன்யா
காலேஜில் படிக்கையில் பிடித்தது ப்ரபீஜா நாயர்

குறிப்பு

ஏப்ரல் 13ம் தேதி சட்டசபைத் தேர்தல் வருகிறது. அனைவரும் மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். ஓட்டுப் போடுவது பற்றி தேர்தல் கமிஷனர் தினமும் அறிக்கை விடுவார் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த்த் தளம் உங்களுக்குப் பிடித்திருந்தால் கூச்சமே இல்லாமல் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் லின்க்கை குரூப் மெயில் அனுப்புங்கள். ஏண்டா நாயே சோத்ததான திங்கறன்னு எவனாச்சும் ரிப்ளை பண்ணுவான் அதுக்கும் ரிப்ளை டு ஆல் போட்டு பதிலளியுங்கள்.

இந்த பதிவை நீங்கள் சாகக் கிடக்கும் தருவாயில் வாசித்தாலும் ஓட்டுப் போட மறக்காதீர்கள். நன்றி



ப்ரியங்களுடன் ராஜன்~ஆல் IN ஆல்