Friday, November 18, 2011

வித்தகன் - செத்த GUN

2005 வாக்கில் பார்த்திபனின் ‘பச்சக் குதர’ படத்தைப்பார்த்து பேதியானவன், ஆறு வருடங்கள் கழித்து இன்றுதான் (இடைல எதுனா அண்ணாத்த படம் வந்துச்சா?!) மீண்டும் சிக்கினேன் வித்தகனிடம்! அன்னார் இணையத்தின் டுவிட்டர் சந்திலும், மூஞ்சிபுக் நெடுஞ்சாலையிலும் வித்தகன் குறித்து அவ்வப்போது பிட்டுகள் போட்டுக் கொண்டிருந்தார். அது ஏற்றிய ஒரு மொக்கை ஹைப் அது மட்டுமின்றி இன்று எனக்கு ஆப்பி பர்த் டே என்பதால் ஆப்பீசுக்கு மட்டம்! எனவே மத்யான நேரத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு படத்துக்குச் சென்று பால்கனியில் பப்பரப்பா என்று குத்த வைத்தேன்.

நான் போன நேரம் டைட்டில் முடிந்துவிட்டிருந்தது. கிளீன் ஷேவ் செய்து ஐபிஎஸ் உடையில் தனது உயர் அதிகாரியிடம் பார்த்திபன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.ஆளே இல்லாத தியேட்டரில் கூட சீட் நம்பர் பார்த்துதான் உக்கார வேண்டும் என்ற கடமை உணர்ச்சி மேலிட்ட நான்  குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தாற் போல  சில பல இடங்களில் தடுக்கி கால் முட்டியில் சில்லறை வாங்கி பின்னர் ஒரு வலியாக அமர்ந்தேன். சில அல்லக்கைகளைக் சுட்டுக் கொல்லும் நம் வித்தகனுக்கு வேட்டையாடு விளையாடு ‘கற்க கற்க’ ஸ்டைலில் ஒரு பாடல் வைத்திருக்கிறார்கள்!

Where Where  is is is is a Gap, Gap!  There there is is is a Appu Appu.. இவ்வாறு செல்கிறது அப்பாடல்.! 

ஒரு கடமை தவறாத டெரர் அஸிஸ்டண்ட் கமிசனர் பாத்திரத்தில் பார்த்திபன் தன்னைத்தானே ஊத்திக் கொண்டிருக்கிறார்! பெயர். ரெளத்திரன்.ஐ.பி.எஸ்! கிளீன்ஷேவ்! இறுக்கமான உடல்! கறுத்த முகம்! இரண்டு கலர் உதடுகள் என போலீஸ் கெட்டப்புக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்! காலம் போன கடைசியில் உடம்பைக் குறைத்ததால் ஏற்பட்ட தொள தொள எஃபெக்ட் முகத்தில் தெரிந்தது! போலீஸ் ஆப்பீசருக்காக சிரைத்த மயிரற்ற முகவாயில் நான்கு விரல் பதிய யாரோ பளார் என அறைந்தா மாதிரி தழும்புகளும் டொக்குகளும்! மீசைக்கு யாரோ போட்டோஷாப்பில் டை அடித்தாற் போல அப்படி ஒரு கருமை! லிப்ஸ்டிக்கை உதட்டின் உள்பக்கம் வரை அடித்தால் டயலாக் டெலிவரியின் போது எச்சி ஊறும் என்பதால் பாதியிலேயே நிறுத்திவிட்டார் போலும். இரு நிறங்களில் காட்சியளித்தது. லிப்ஸ்டிக்கால் நன்கு ஒட்டிக் கொண்ட உதடுகளைப் பிரித்து சிரிப்பதற்கே பார்த்திபன் மிகுந்த சிரமப்படுகிறார் படம் நெடுக! பற்களில் பளீர் வெண்மை! டெண்ட்டிஸ்டின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. கண்கள் மற்றும் அவை சார்ந்த பிரதேசங்களை கூலிங் கிளாஸ் போட்டு மறைத்துவிட்டார்! வாய் மற்றும் அது சார்ந்த பிரதேசங்கள் தான் பிரச்சனை செய்து விட்டன. இனி கதைக்குள்(!)

கதையில் இரண்டு மெயின் வில்லன்கள், பல்லாயிரம் சப் வில்லன்கள்! மெயின் வில்லன்களுக்கு நாமகரணம் சூட்ட தமிழின் ஆகச்சிறந்த இரண்டு மொக்கைப் படங்களின் டைட்டில்களை தெரிவு செய்திருக்கின்றனர். 

1.பத்ரி 
2.சேனா

இவர்கள் கதைக்குள் பூந்து வரும் முன்பு நம் வித்தகனின் கமிசனர் அய்யா வித்தகனை ஒரு மந்திரி மகன்கேஸில் பிராடு செய்யச் சொல்லி வற்புறுத்தி பணத்தாசை காட்டுகிறார்! மயங்கவில்லை! பயம் காட்டலாம் என்றால் நமது வித்தகனோ அனாதை! இதுபோக ஒவ்வொரு டயலாக்குக்கும் பஞ்ச் பஞ்ச் ஆக பேசி தாலியறுக்கிறார் வித்தகன்! என்ன செய்வதென தெரியாமல் கமிசனர் தவிக்கிறார்! இப்படி ஒரு சூழலில் ஒரு தொழில் முதலையின் ஆட்களை வித்தகன் லாக்கப்பில் லாடம் கட்டுகிறார்! முதலை ஆப்பீஸிற்கு வந்து “நான் பாக்கத்தாண்டா வெள்ளையுஞ் சொள்ள, உள்ளுக்குள்ள செயில் கம்பியாட்டம் அண்டர் வேரு பாரு’’ என மேசைக்கு அடியில் தனது வேட்டியை கொஞ்சம் விலக்கிக் காட்டுகிறார்! அதுவரை எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் பஞ்ச் டயலாக்காலேயே கவுண்ட்டர் கொடுத்த வித்தகன் வெகுண்டு பூட்ஸ் காலால் தொழில் முதலையின் கவட்டைக்குள் குடீர் என உதைத்து ஏரில் பறக்க விடுகிறார்! இதுதான் முதல் ஆக்சன் இதன் பிறகு படம் முழுக்க செத்து செத்து விளையாடுகின்றனர்! 

பார்த்திபன் அவர்களின் படு திராபையான ஃப்ளாஷ் பேக்கில் மேலே சொன்ன  மெயின் வில்லன் 1.பத்ரி(டான்1) (அப்போது அவர் ஸ்ட்ரீட் தாதா) சப் இன்ஸ் பெக்டரான பார்த்திபனின் தந்தையுடன் ஏற்பட்ட மோதலில் அவரது இளைய மகளைக் கொன்று விட, பயந்த எஸ்.ஐ குடும்பத்துடன் வேலையை/ஊரை விட்டு ஓடிவிடுகிறார். போலீஸ் உத்யோகம் பிடிக்காமல் போகும் தன் தந்தைக்கே தெரியாமல் நம் வித்தகன் அவர்கள், குடும்பம் என்று ஒன்று இருந்தால் தானே போலீஸ்காரன் கடமையை செய்ய முடியாது எனக்கருதி தனது தாய் தந்தை தங்கை என எல்லோரையும் மறைத்து அனாதை என போலிச் சான்றிதழ்கள் கொடுத்து ஐபிஎஸ் ஆகிறார்! ஆனபின்பும் அனாதை என்றே மெயிண்டெய்ன் செய்கிறார்! 

இந்த பேருண்மையை அறிந்த கமிசனர், தான் வெகுநாளாய்க் கறுவிக் கொண்டிருந்தபடி, வித்த்கனை சிறையில் அடைக்கிறார்! செயிலில் மந்திரியின் மகன் வித்தகனைக் கொல்ல முயல, வித்த்கன் டெக்னிகலாக அவனைக் கொல்ல, அதைக் கண்ட ஒரு கான்ஸ்டபிள் (அவன் வில்லன் சேனாவின் ஆள்) அகில உலக டான்2 சேனாவிடம் அறிமுகப் படுத்த,(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா) வித்தகன் சேனாவின் அல்லக்கையாகிறார்! செயிலிலிருந்து வெளியே வருகிறார் புதிய கெட்டப்பில்! சமீப காலமாக விஜய் படங்களில் செகண்ட் ஆஃபில் வரும் முதல் பாடலில் விஜய் ஒரு விக் வைக்கிறாரே; பான் பராக்கை பரட்டையில் துப்பினாற்போல, அதேதான்! ஆனால் இந்த கெட்டப் பார்த்திபனுக்கு செமையாகப் பொருந்துகிறது! மிக அழகாகவும் இருக்கிறது! ஏனென்றால் முதல் பாதி போலீஸ் கிளீன் சேவிங் முகத்தில் அன்னாரைப் பார்த்து பூச்சாண்டி என பயந்த நமக்கு இந்த கெட்டப் ஆறுதலாய் மட்டுமல்ல அழகாகவும் தோன்றுவதில் வியப்பில்லை! 

வெளியே வந்த வித்தகன் மரண மொக்கையான முறையில் வில்லன்கள் அனைவரையும் கொல்கிறார். சுட்டு சுட்டு விளையாண்டதில் கன் செத்திருக்கும்! வழக்கமாக விவேக், வடிவேலு ஆகியோர் தாதாக்களாக நடிக்கும்போது சுற்றி நிற்பார்களே அல்லக்கைகள்! அவர்களே தான் இந்த இரு டான்களுக்கும் அல்லக்கைகள்! ஆவேசமாக டான்கள் கத்தும்போது இவர்கள் நக்கல் அடிக்கிறார்கள்! சூப்பராக இருந்தன காட்சியமைப்புகள்! இதற்கிடையே ஹீரோயினாக செல்வி.பூர்ணா அவர்கள் காட்டிய திறமை மற்றும் காதல் காட்சிகள் குறித்து எழுத அவற்றை மீண்டும் நினைவு படுத்த வேண்டி உள்ளது. மீள்நினைவேற்றம் செய்து மெண்டலாக மனம் ஒப்பாததால் தவிர்க்கிறேன்! 

வழக்கமாக காமெடியன்களை கொல்வதாக சீன் வைப்பது அரிது. அவ்வாறு செய்தாலும் பரிதாபமான உணர்வுக்காகதான் அதை வைப்பார்கள்! ஆனால் வித்தகனில் பாவப்பட்ட காமெடியன்களையும் பொட்டு பொட்டென போட்டுத் தள்ளிவிடுகிறார்கள்! கதையில் வரும் எல்லாகேரக்டர்களும் செத்து செத்து விழுகிறார்கள்! இறுதியாக வித்தகன், வில்லன் பத்ரி மற்றும் பூர்ணா ஆகிய மூவர் தான் மிச்சம்! அதிலும் பூர்ணாவை வில்லன் கொன்றுவிட, அதற்கு பழிவாங்கும் விதமாக வித்தகன் அடித்த அடியில் பத்ரி வில்லன் மெண்டலாகி விடுகிறார்! பிணத்தைத் தூக்கிக் கொண்டு வித்தகன் செல்வதோடு படம் முடிவடைகிறது! 


காக்க, காக்க படத்தில் உபயோகித்த கிளாஸிக் ஜீப்பு, அம்முவாகிய நான் படத்தில் வரும் பெயிண்ட் அடிக்காத வீடு, குடைக்குள் மழையில் வரும் பழைய டெலிஃபோன் ஸ்டாண்டு என ஆங்காங்கே பழைய நெடி! பார்த்திபனது டபுள் மீனிங் தொற்று பூர்ணாவிடமும் பரவி ‘கையக் காலா நெனச்சா கால என்னவா நெனப்பே’ என பூர்ணா கேட்குமளவு சென்றுவிட்டது! பத்து பைசாவுக்கு கூட படத்தில் காட்சி வாயிலான கில்மா இல்லை! ஒரே ஒரு மதுபான பார் காமெடி மட்டுமே சிரிக்க முடிந்தது.

கரு பழனியப்பன் நீள நீள டயலாக்குகளில் தாலியறுப்பாரல்லவா ஆனால்,பார்த்திபன் பஞ்ச் பஞ்ச்சாக அடித்து பாடாவதியாக்குகிறார்! தமிழ் படத்தில் மிர்ச்சி சிவா வில்லன்களைக் கொல்ல சுவற்றில் நகத்தால் கீறுவது, எருமைக் கிடா ஃபைட் என முயற்சிப்பாரல்லவா! அதற்கு சற்றும் குறைவின்றி வித்தகன் வித்தை காட்டிவிட்டார்! ஆக மொத்தம் வித்தகன் வித்த Gun செத்த Gun!

பாடல்காட்சிகளில் பார்த்திபனின் குளோஸ் அப் காட்சிகள் உள்ளன எச்சரிக்கை. ஃபைட்டுகளில் விஜய்க்கு சவால் விடுமளவில் பறவை உத்திகள் உள்ளன! படத்தில் மொத்தம் விழுந்த இழவுகளின் எண்ணிக்கையை (அரங்கில் விழுந்தவை உட்பட) கணக்கிடவே முடியவில்லை. 

17 comments:

தர்ஷன் said...

செம பாஸ்

வடக்குபட்டி ராம்சாமி said...

Where Where is is is is a Gap, Gap! There there is is is a Appu Appu.. இவ்வாறு செல்கிறது அப்பாடல்.! ///
.
.
ஆமா தனுசு தொடக்கி வைத்தது!இனி எத்தன பாடல் அப்படி வருதுன்னு பாரு!(ஓட ஓட ஓட்டம கொரில் ஒய் திச கொலைவெறி போன்ற லெட்டின் வாடை அடிக்கும் பாடல்கள் தொடக்கம் மட்டுமே!

மாயன் said...

//படத்தில் மொத்தம் விழுந்த இழவுகளின் எண்ணிக்கையை (அரங்கில் விழுந்தவை உட்பட) கணக்கிடவே முடியவில்லை// ஹா..ஹா...ஹா...முடியலை சத்தியமா முடியலை..இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன். தப்பிச்சுவந்து விமர்சனம் எழுதி தமிழர்களை காப்பாத்தி இருக்கீங்க போல...நன்றி. ஆனால் சொல்ல முடியாது. பார்த்திபன் கஷ்டத்தில் இருப்பதால் பதிவர்கள் படத்தைப் பார்த்து உதவ வேண்டும் என்று பதிவு எழுதினாலும் எழுதுவாங்க...

ஜெட்லி... said...

சூப்பர்.... ட்ரைலர் பார்க்கும் போதே மைல்டா டவுட் வந்தது...
கன்பார்ம் பண்ணீட்டிங்க....

naren said...

சார், நீங்க பின்நவீனதத்துவ நடையில் எழுதியிருக்கும் இந்த திரைவிமர்சனம் இலக்கியச் சிறப்பு வாய்ந்தது. இது மலையாள, ஃபிரான்சு, இலத்தின அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் சினிமா விமர்சகர்கள் ரசிகர்களின் தரத்திற்கு அடையாளம். தமிழ் நாட்டு மக்களுக்கு உங்கள் விமர்சனம் மகிமை புரியாது.

எப்படியோ விமர்சனத்தின் மூலம் படம் பார்க்க ஆவலை தூண்டிவிட்டீர்- யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தத்துவத்தின் நடைமுறையோ!!

ஆப்பி பர்த் டே....

Mahilan said...

அது என்னாங்க ”பிரம்மா தண்டமாய்”னு போஸ்டரிலயே போட்டுட்டாங்க!

அப்புறமும் ஏன் அங்க படம் பார்க்கப் போனீங்க!

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

படம் பார்த்துட்டு நானும் ரொம்ப அவஸ்தை பட்டுடேன்....

வால்பையன் said...

birthday annaikku ithu thevaiyaa? sarakka pottu padukkalaamla! :)

வெண் புரவி said...

அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டீங்க...
பாவம் சார். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கார். விட்டுடுங்க..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தலைப்பிலே விமர்சனம் பண்ணிடிங்க

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு

குவைத் தமிழன் said...

ஒரு சினிமா விமர்சனத்தை இவ்வளவு காமெடியா எழுத முடியுமா??? சூப்பர், இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் சார்.

ஆகாயமனிதன்.. said...

சில்க் ஸ்மிதா - என் பொண்டாட்டிக்கும் பிடிச்ச சிலுக்கு !!!!
http://aagaayamanithan.blogspot.com/2011/11/blog-post_19.html

மாயன் : www.ahamumpuramum.blogspot..com said...

கூட இருக்கிற அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் யாரும் சொல்ல மாட்டாங்களோ! இப்போ டிரைலர் பார்த்திட்டு மறுபடியும் பின்னூட்டம் இட வேண்டியதா போச்சு!

விடுதலை கரடி said...

யோவ அந்த பாப்பாத்தி சின்மயி பத்தி தனி டேப ஒரு கெடா?அவளின் குரலை கேட்டிருக்கையா?கட்டையான ஆன் குரல்!உன்னோட ரசனையில் தீயை வைக்க!அவளோட மதுர குரலில் ஒரு பாடலை கேளு!காதில் ரத்தம் வந்தா நான் பொறுப்பில்லை!
http://www.youtube.com/watch?v=zfHpz4gQTGI

விடுதலை கரடி said...

தனுசின் ஓய திச கொலைவெறி பாடலை கேட்டு நால்வர் மரணம்!தனுசை தேடும் போலீசு!

வடக்குபட்டி ராம்சாமி said...

மயக்கம் என்ன பாத்துட்டு பல பேருக்கு ஸ்பீக்கர் அவுட்டு!செம மொக்க!