Sunday, November 6, 2011

வாழ்க அண்ணாச்சிகள்!

கொத்தடிமைகளாய் தொழிலாளர்களைப் பிழிந்து காயப்போடும் முதலாளிகளை தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், சமீக காலங்களாய் கோடிகளில் புரளும் பெரு முதலாளிகள் கூட கோவணம் கட்டும் தொழிலாளியின் நிலை கண்டு ஆற்றொணாத் துயருறும் நெகிழ்ச்சியான காட்சிகளைக் காண முடிகிறது.

தொழிலாளர்கள் மீது பெருக்கெடுத்து பிரவாகமாய் ஓடும் பாசத்தின்மிகுதியில், அவர்கள்(தொழிலாளர்)  நலனுக்காக எசமானர்கள் சர்வ வல்லமை கொண்ட அரசாங்கத்தையும், நீதிமன்றத்தையுமே எதிர்க்கக் கூடிய சோஷலிசச் செம்மல்களாகிவிட்டனர் என்றால் அது மிகையல்ல.

தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு குறித்து அல்லும் பகலும் அதே சிந்தனையில் உழலும் பெருமுதலாளிகளின் கருணையுள்ளத்தைக் கண்டுகொள்ள நமக்கு வாய்த்திருக்கும் இரண்டாவது வாய்ப்புதான்  

‘தி.நகர் வணிக நிறுவனங்களுக்கு நடத்தப்பட்ட சீல் வைப்பு வைபவம்’ 

முதலாவது, ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு பூட்டுப் போட்டு சீல்வைத்த நிகழ்வு.
சீல் வைப்பிற்கும் இந்த சோஷலிசப் புரட்சிக்கும் எதோ ஆழ்ந்த பிணைப்பு இருக்கலாம் என அவதானிக்கிறேன்!

உண்மையில் சாயப்பட்டறைக் கழிவுகள் ஆற்றையும் ஊரையும் நாறடிக்கும் என்ற விசயம் தெரியாதவர்கள் அல்ல நம் எசமான்கள்! இருந்தும் அதைச் சுத்திகரிக்க மறுத்திருக்கிறார்கள் என்றால் அது அத்துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டே என்பது உள்ளங்கை திஹார்க் கனி!

சாயமேற்றிச் சம்பாதித்த அத்துணை காசையும் சமுதாய நன்மைக்கு மட்டுமே செலவழித்திருக்கும் சாயக்கம்பெனி வள்ளல் பெருந்தகைகள் விஷமாகிப்போன கழிவுகளை சுத்திகரிக்க அரும்பெரும் பாடுபட்டு அரசாங்கத்திடமே கடன் வாங்கியிருக்கின்றனர்!சபாஷ்! தவறே இல்லை! ஏழைத்தொழிலாளர்கள் வாழ்வில் விளக்கேற்றுதல்லாமல் வேறு தன்னலம் ஏதுமின்றி நியாயமாக  தொழில் செய்து வரும் நம் முதலாளிகள் அரசாங்கம் சொல்வது போல அழுக்குத்தண்ணியை சுத்திகரிக்க பிளாண்ட் வைத்து செலவு செய்தால் கட்டுபடியாகத்தான் செய்யாது! நல்லது! சந்தோஷம்!

இதற்கு அவர்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா?! எத்தனை போராட்டங்கள், எத்தனை கடையடைப்புகள், கண்ணீர் , கம்பலை யப்பப்பா! இவையெல்லாம் எதற்காக? சாயப்பட்டறைக்கு வைத்த சீல், பனியன் தொழிலை நசித்து அதை நம்பியுள்ள சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் சோற்றில் மண்ணைப் போட்டுவிடும் என்பதற்காக மட்டுமே!

              தம் வாழ்நாள் முழுமையும் சாயப்பட்டறைகள் மூலம் தொழிலாளர்கள் நலனுக்காகவே ஒழைத்து ஒழைத்து ஓடாய்த்தேய்ந்த நம் எசமான்களின் கரிசனத்தில் 100ல் 1 பங்கு அரசுக்கு இருந்த காரணத்தினால் கழிவைச் சுத்திகரிக்க கடன் கொடுத்து உதவியது! 

ஆர்டர் குடுக்கறவன் வெள்ளைக்காரன், சாயம் போடுவது நம்மூரு முதலாளி! சாயத்தக் கொட்டுறது நொய்யல் ஆத்துல! நாறிப்போவறது ஆறு! வெள்ளைக்காரன் காசு முதலாளிக்கு வந்துடுது! அந்தக் காசுல அழுக்குத்தண்ணிய சுத்தம் பண்ணி விடலாம்னு நீங்க சொன்னீங்கன்னா! அது தப்பு! ஒத்துக்க மாட்டோம்! அரசாங்கம் தான் சுத்தம் பண்ணனும்னு போராடுவோம்!

மேலோட்டமாகப் பார்த்தால் எசமான்கள் பேண்டு வைப்பதை அரசாங்கம் காசு கொடுத்து கழுவி விடுவது போலத்தான் தோன்றும்! ஆனால் இதனை நாம் அவ்வாறு பார்க்கக் கூடாது!  3லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரப் பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும்!

அடுத்து தி.நகர் கருணைக் கடல்கள்!

அங்கிருக்கும் அருட்கடல் அண்ணாச்சி புகழை நாம் சொல்லித்தெரியவேண்டியதில்லை! அதே ரேஞ்சில் தான் எல்லா அண்ணாச்சிகளும் இருக்கின்றனர் அதில் ரத்னா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் கண்ணீர் தெறிக்கும் வசனம் பின்வருமாறு! 

‘’எங்க கடைகள்ல மட்டும் தொள்ளாயிரம் பேரு வேல செய்யறாங்க! எல்லாருமே பலவருசமா வேல பாக்கற நம்பிக்கைக்கு உரியவங்க! இன்னைக்கு வேலை இல்லைன்னு தொரத்தி விட்டுட்டா நாளைக்கு கடை தொறக்கும் போது ஆளுகளுக்கு எங்க போவோம்! தயவு செஞ்சு தொழிலாளிக வயத்துல அடிக்காதீங்க’’

இதைக் கேட்கும் போது நமக்கு கண்களில் நீர் துளிர்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை! அண்ணாச்சி போன்ற நல்லவர்கள் இன்னமும் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது! அதுவும் இந்த சீசன் அடித்து ஊத்துவதற்கு காரணமே ரத்னம் அண்ணாச்சியால்தான் என்று நினைக்கிறேன்.

திநகர் வியாபாரிகள் சங்கம் அடுத்த கட்டமாக வேலையிழந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டு விளக்கேற்ற கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிகிறது. எல்லா கடைகளையும் தான் அரசாங்கமே மூடி விட்டதே இனி எதை மூடி போராடுவார்கள் என்று தெரியவில்லை இருந்தாலும் கருணைக்கடல்களான நமது எசமான்களின் போராட்டம் வெற்றிபெற; சாயப்பட்டறைக்கு அரசாங்கம் தீர்வு கண்டது போலவே இதற்கு அரசாங்கமே பெனால்ட்டி கட்ட நாமும் துணை நிற்போம்! 

வாழ்க அண்ணாச்சிகள்!

-ராஜன்

22 comments:

குழந்தபையன் said...

//உள்ளங்கை திஹார்க் கனி!// விவிசி...

Vadivel M said...

பணம் படைத்த பச்சோந்திகள்!

jaisankar jaganathan said...

வாழ்க அண்ணாச்சிகள்!

வளர்க அவர்கள் தொண்டு

suryajeeva said...

உள்குத்து படிச்சிருக்கேன்,
ஊமை குத்தும் படிச்சிருக்கேன்..
யப்பா
முத முறையா கும்மாங் குத்து படிச்சது இன்னிக்கு தான்...
நீர் வாழ்க, உன் எழுத்தும் வாழ்க...

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

//திகார் கனி!!//

LOL

பட்டாபட்டி.... said...

இதைக் கேட்கும் போது நமக்கு கண்களில் நீர் துளிர்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை
//

உங்களுக்கு கண்களில்தான் மட்டும்தான்..
எனக்கு ஒன்பது ஓட்டைகளிலும் நீர் வருகிறது ராஜன்...
:-)

கோகுல் said...

என்னே ஒரு தொழிலாளர்பாசம்?

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

வால்பையன் said...

உம்ம நக்கலு எவனுக்கும் வராது பங்கு!

//Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html//

அப்படியே இந்த முதலாளிக்கு ஒரு ஆப்பு வைக்கிறது, எழவு வீட்ல வந்து சோப்பு விக்கிறாறே!

வால்பையன் said...

வர்கள்(தொழிலாளர்) நலனுக்காக//

அடைப்புகுறி போட்டு நீர் ஒரு இஸ்லாமியபிரியர் என்பதை நிரூபித்து விட்டீர், சுவனத்தில் நாலு ஃபிகர் கொடுத்தா இங்கே குறிக்குள் அடைப்பு கேக்குதோ!?

வால்பையன் said...

அடங்கொக்காமக்க மணி 3.28 ஆவது இன்னும் தூங்காம என்ன பண்ற கைபுள்ள போய் தூங்கு, கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........

classic said...

ராசா அற்புதமா எழுதியிருக்க . தொடரட்டும் நின் பணி :-)

Rajan said...

//சுவனத்தில் நாலு ஃபிகர் கொடுத்தா //

பங்கு! ஒண்ணே ஒண்ணு போதும்! அனுப்பி வெக்க ரெக்கமண்ட் பண்ணுங்க! ஆமா சுவனம் ஓட்டல் எங்க இருக்கு?!

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

பிரமாண்ட பதிவு அங்கிள்........

ஜோதிஜி திருப்பூர் said...

ஆகா உள்ளே வந்து பார்த்ததும் தான் பெயர் மாற்றிய விபரம் தெரிந்தது.

ஜோதிஜி திருப்பூர் said...

உள்குத்து படிச்சிருக்கேன்,
ஊமை குத்தும் படிச்சிருக்கேன்..
யப்பா
முத முறையா கும்மாங் குத்து படிச்சது இன்னிக்கு தான்.

Gopikrishnan said...

//எங்க கடைகள்ல மட்டும் "தொள்ளாயிரம்" பேரு வேல செய்யறாங்க!//

பணியாளர்களின் வாழ்வாதாரம், மனநிலை பற்றியும் எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்! அந்த அண்ணாச்சிக்கு வக்காலத்து வாங்க நான் ஒன்றும் மிருகமல்ல! ஆனால் சொல்வது யாரெனினும், தற்போது வேலை இழந்திருக்கும் மக்களை பற்றி யாரும் பேசுவதையே காணோம்! இவர்கள் நிலையும் மக்கள் நல பணியாளர்கள் நிலையே தானா?

வால்பையன் said...

கோபிகிருஷ்ணன்

அண்ணாச்சிகள் சம்பளமாக ஒன்றும் அள்ளிக்கொடுக்கவில்லை, அங்கே கொத்தடிமைகளாக இருப்பதற்கு பதில் அவர்கள் நல்ல வேலைக்கு போகலாம்!

Rajan said...

திரு கோபி கிருஷ்ணன்!

சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமே எல்லா மாநகரங்களிலும் கிளைகள் உண்டு. அதுபோக SCM textiles, TCS உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு ஷோ ரூம் மூடப்பட்டதால் உண்டாகும் வேலையிழப்பை இந்த கம்பெனிகளில் வேலை கொடுத்து சரி செய்ய முன்வருகிறார்களா என்று பாருங்கள்! மாட்டார்கள்! ஆனால் இவர்கள் ஒளிந்து கொள்ள மட்டும் தொழிலாளர்களது முதுகுகள் தேவை!

@ வால்பையன், அள்ளி கொடுக்காத சம்பளம், கொத்தடிமை வாழ்க்கை இரண்டையும் பொறுத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு வறுமையில் இருந்திருக்கிறார்கள்! நல்ல வேலைக்கு போக முடிந்தால் இதில் இவ்வளவு காலம் இருப்பார்களா? உடனே நல்ல வேலை கிடைத்து விடும் என்கிறீர்களா! ஒரு கடையில் மட்டும் 900 பேர் என்றால், மூடப்பட்ட/மூடப்படவிருக்கின்ற எல்லா கடைகளையும் சேர்த்தால்? இவ்வாறு கடைகளை மூடினால், தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் சட்டம்/அமைப்பு ஏதும் உள்ளதா, அவர்களுக்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவதற்காக தான் கேட்டேன்! அண்ணாச்சியின் பொய் புலம்பலில் உள்ள " தயவு செஞ்சு தொழிலாளிக வயத்துல அடிக்காதீங்க" என்ற உண்மையை ஒதுக்க மனம் வரவில்லை!

@ராஜன், ஆமாம், அவர்கள் கொடுக்க மாட்டார்கள்! உண்மையில் அவ்வளவு பேருக்கும் வேலை தருவது முடியாத காரியம் ! இந்த அண்ணாச்சியின் மற்ற கடைகளிலேயே 900 காலியிடம் இருக்குமென்கிறீர்களா? அவ்வளவு காலியிடத்தையும் நிரப்பாமலா இருந்திருப்பார்கள்? இது போன்ற மூடுவிழா நடத்தும் போது, அரசு தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பளைத்தை கொடுத்து அனுப்பியிருக்கலாம், அல்லது நிறுவனத்தை கொடுத்து அனுப்ப சொல்லியிருக்கலாம் என்பதே தான் என் ஆதங்கம்! அதை பற்றி உங்கள் பதிவில் குறிப்பேதும் இல்லாததால், நானறியா தகவல் ஏதும் இருக்குமோ என்று தான் கேட்டேன்!