Saturday, October 29, 2011

கிழிகிறது ஜெ-வின் முகமூடி


மூவர் தூக்கு தண்டனை விசயத்தில் ஜெயலலிதாவின் கோரமுகம் வெளிப்படுவதற்கான முகாந்திரங்கள் தெரிகின்றன. உள்ளாட்சித்தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காகத்தான் ஆகஸ்ட் 30ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மான நாடகம் நடத்தியிருக்கிறார் என்று கருதும்படியாக இருக்கிறது நேற்று தமிழக அரசின் சார்பில் உள்துறை முதன்மைச் செயலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினது சாரம்.


மரணதண்டனையை இரத்து செய்யக் கோரியுள்ள மூவரின் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கோரியிருப்பதையடுத்து, இனி வரும் நாட்களில் முதலமைச்சரின் சுயரூபம் வெளிப்படும் என்றே கருதுகிறேன். இது மட்டுமல்லாமல் கூடன்குளம் விவகாரத்திலும் போராட்டக்குழுவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வந்த முதல்வர் இனி அது தொடர்பாகவும் இடியிறக்கும் செயல்பாடுகளை முன்னெடுப்பார் என்று நம்பலாம்.

இவ்விரு விடயங்களிலும் தமிழகத்திலுள்ள 100% மக்களும் ஒரே விதமான கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லவில்லை; ஆனால், மூவர் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரும் மக்கள் மற்றும் கூடன் குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட மக்களிடமிருந்து வாக்குகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்ற நோக்கில் நரித்தனமாக இவ்வரசு செயல்படுமானால் சில மாதங்களுக்கு முன்னர் அரச அரியணையிலிருந்து தூக்கியெறியப்பட்ட தி.மு.கவினுடைய சரிவிலிருந்து என்ன புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

இதையெல்லாம் எதிர்த்துப் போராடக்கூடிய அளவில் அமைப்பு ரீதியாக அதிமுகவுக்கு அடுத்தபடியான வலிமை கொண்ட தி.மு.கவின் கடைக்கோடி தொண்டன் வலுவிழந்து சோர்ந்தும் துவள,இரண்டாம் கட்டத்தலைவர்கள் சிறைகளிலும், நீதிமன்றங்களிலும் அல்லாட, தலைமையை அலங்கரிபவர்கள் தத்தமது முந்தையகால செயல்பாடுகளால் இது குறித்து வாய் திறக்கவே தார்மீக ரீதியில் வக்கற்றும் இருக்கின்றனர். மீறி உதிர்க்கும் கருத்துகள் கூட கடந்தகாலத்தையும் அதன் வடுக்களையும் மறவாத மக்கள் திரளால் கிஞ்சித்தும் காதுகொடுத்துக் கேட்கப்படுவதில்லை.

போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் வெகுஜனங்களின் கருத்தை ஈர்க்க மதிமுகவும் இடதுசாரிகளும் மட்டுமே உள்ளனர். சட்டமன்றம்/உள்ளாட்சிகள் என அனைத்திலும் வலுவான பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அதிமுகவை எதிர்க்க மீதமுள்ள நான்கரை ஆண்டுகளுக்கு வலுவான அரசியல் இயக்கம் எதுவும் இங்கில்லை என்பது ஜெயலலிதா போன்ற பாசிச தலைமைக்கு எத்தகு மக்கள் விரோத நடவடிக்கையையும் மேற்கொள்ளுவதற்கான உந்துதலை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிஜம்.

ஆட்சியாளர்களது மக்கள் விரோத நடவடிக்கைகள், நமது மக்களின் சகிப்புத்தன்மை என்பதன் எல்லை எதுவரைதான் நீளும் என்பதைக் காட்டும் என நெடுங்காலமாக மவுன சாட்சிகளாக காத்திருக்கிறோம்ஆனால் அதற்கேதும் முடிவிருப்பதாகத் தெரியவில்லை. வெளிச்சத்தின் சிறு கீற்றுகூட எதிர்ப்படும் இருளடைந்த பாதையில் புலப்படவில்லை. 

14 comments:

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

suryajeeva said...

வேலாயுதம் வெற்றியா?
ஏழாம் அறிவு என்றால் என்ன?
நயன்தாரா கல்யாணம் என்ன ஆச்சு?
இங்கிலாந்த் இந்தியா மேட்ச் எப்ப?
கார் ரேசா கலந்துக்கிரான்களா?
எந்த பிகர்?
அவ தங்கை எப்படி?
என்று தமிழக மக்கள் ஓடி கொண்டிருக்கும் பொழுது...
விடியல்......????????????

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பதிவு ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பொறுத்திருந்து பாப்போம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?

Amirthan said...

இது போன்ற கட்டுரைகள் எழுதுவதற்கு நீங்கள் எவ்வளவு பணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் புலிகள் ஆதரவு அமைப்புகளிடமிருந்து வாங்குகிறீர்கள்?
சொன்னால் பிறர்களும் இது போல சம்பாதித்துக் கொள்வார்களில்லையா...?

ராஜன் said...

திரு அமிர்தன்! இங்கு கமெண்ட் போட ஜெயலலிதா ஆட்கள் தங்களுக்கு அளித்த தொகைக்கு சற்றே அதிகமாக வாங்கியிருக்கிறேன்!

ராஜன் said...

@ஆன்லைன் வொர்க்ஸ் ஃபார் ஆல்!

நான் தான் கிடைத்தேனா?! அதுவும் எப்படி அய்யா முதல் கமெண்டாக கொஞ்சமும் லஜ்ஜையின்றி பதிகிறீர்கள்!

ராஜன் said...

@ஆன்லைன் வொர்க்ஸ் ஃபார் ஆல்!

நான் தான் கிடைத்தேனா?! அதுவும் எப்படி அய்யா முதல் கமெண்டாக கொஞ்சமும் லஜ்ஜையின்றி பதிகிறீர்கள்!

ரா.செழியன். said...

இன்னும் நாக்கை பிடுங்குறமாதிரி கேட்கனும் சூர்யாஜீவா,அப்ப கூட திருந்துவாய்ங்க?

D.R.Ashok said...

:(

Gujaal said...

வைகோ மட்டுமே மூன்று பேரின் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சீமான், நெடுமாறன் போன்றோர் குரலெழுப்பினார்களா இல்லை அவர்களின் குரல் அமுக்கப்பட்டதா? அம்மா ஆட்சியில் கஞ்சா வழக்கை சந்திக்க வேண்டும் என அஞ்சுகிறார்களோ?

தற்சமயம் ஏற்பட்டுள்ள மின்வெட்டைக் காரணம் காட்டியும், மத்திய அரசு நியமித்த நிபுணர் குழுவினரின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையூட்டும் கருத்துகளை முன்னிட்டும் கூடங்குளம் விவகாரத்தில் விரைவில் பல்டியடிக்கப் போகிறார்.

அதற்கு முன் இவ்விவகாரங்களில் காங்கிரசிடம் கறப்பதற்கான பேரம் எங்கு நிற்கிறது என்பதைப் பொறுத்தே நிகழ்வுகள் வேகமெடுக்கும்.

adhavan said...

இந்த சீமான் ன்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்கே

மனசாட்சி said...

adhavan said...
இந்த சீமான் ன்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்கே

இங்கே:

http://manachatchi.blogspot.com/2011/10/3.html