தோழி-காதலி! இவர்களிடையிலான வேறுபாடு காதல் தான் எனவும், தோழியிடம் காதல் கொள்வதெனில் அவளைக் காதலி என்றே அழைக்கலாமே என்பதாகவும் ஒரு கருத்து டுவிட்டரில் தோழி ;-) ஒருவரால் முன்வைக்கப்பட்டது!
காதலற்ற நட்பு ஆண்-பெண் தோழமையில் சாத்தியமே இல்லையா என்ற விதத்தில் மேற்சென்றது அவரது வாதம்!
இது குறித்த விவாதம் முற்றுப்பெற்றது என்று சொல்வதற்கில்லை; ஆனாலும் நெடுநேரம் தொடர்ந்த இந்த உரையாடல் குறித்தான என்புரிதலை மீள்நினைவேற்றவும், தொகுக்கும் பொருட்டுமே இப்பதிவு.
பொதுவாக ஆண்-பெண் உறவானது அவ்விருவருக்கும் விருப்பமான ஒன்றாகத் தொடரும் நேர்வில், அவர்களிடையே காதல் இழையோடுவதென்பது தவிர்க்கவே இயலாதது. இங்கு ஆண்-பெண் உறவில் காதல் இல்லாத நேர்வே இல்லையா என்ற வினா எழும்போதுகூட, தங்கை-அண்ணன்,அம்மா-மகன்,மகள்- அப்பா,அக்கா-தம்பி போன்ற பிறப்பு மற்றும் சமூகக் காரணிகள் சார்ந்த உறவுகளை மேற்கோள் காட்ட இயலுமே அல்லாமல் தோழமையில் காதலற்ற நட்பைத் தேடுவது அல்லது தோழமையிலிருந்து காதலற்ற நட்பை தனித்துப்பிரிக்க முயலுவது போன்றவை அர்த்தமற்ற செயல்களாகவே செய்கின்றன.
மேலும், மேற்சொன்ன உறவுகளிடையேயும் கூட 100 சதம் முழுமையாய் காதல் உணர்வெழ வாய்ப்பே இல்லையென அறுதியிட்டுக் கூறுவது இயலாத ஒன்று. அவ்வப்போது நாம் ஊடகங்கள் வழியே கண்ணுறும்செய்திகளான முறையற்ற உறவுகளனைத்தையும் பாலியல் வறட்சி என்ற ஒரே வகைமையின் கீழ் பொருத்துவதும் தவறாகிறது. பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேறு வழி இல்லாத மனிதர்கள் மட்டுமா மேற்படி செய்திகளில் இடம்பெறுகிறார்கள்? அல்ல.
உதாரணமாக, நாம் காணும் அண்ணன் - தங்கை அல்லது அக்கா -தம்பி உறவின்முறை ஆண்-பெண்களில் மிக நெருக்கமான, புரிதல் மிக்க, மடியில் கிடத்தி தலைகோதும் அளவு அன்யோன்யம் மிக்க ஜதைகளை கருதுவோம். அவர்களது வாஞ்சை நிறைந்த தீண்டலில் காதல் இல்லாமல் இல்லை; எதிர்பாலினம் மீதான இயல்பான கவர்ச்சியும், வேட்கையும் சற்றும் இல்லாமல், மனதிற்கு பிரியமான ஒருவரை மடியில் கிடத்தி வருடுவது என்பது எவ்வளவு சாத்தியம் என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்!
அவர்களிடையே ஊடாடும் காதலானது, நெடுங்காலமாய் அழுத்தமுறப் பொதிந்து வைத்த கட்டமைப்புகளின் பேரில் மறுக்கப்பட்டும், அவர்களது கற்பிதங்களால் மறைக்கப்பட்டும் வருகின்றன. இயல்பான ஒரு உணர்வை வெளிச் சொல்லமுடியாதபடிக்கு புறக்காரணிகள் தடை செய்கின்றன.
முரண்பாலுறவு என்பது மனிதன் வேறொரு விலங்கினத்தை புணர முற்படுவதாய் வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய, மனிதன் தனது எதிர்பாலினமான எந்த ஒரு ஆண்/பெண் மீது கொள்ளும் காதல் உணர்வானது இயற்கையைப் போன்றே இயல்பான தூய ஒன்று.
[ஆண்-ஆண் காதலையே கூட இயற்கைக்கு முரணானது என நிறுவுவது மிகச் சுலபமான ஒன்றல்ல என்பதையும் கொள்க.]
மிகக் கம்பீரமான விலங்கான மனிதன் குழுவாக வாழ்தலின் பொருட்டு, ஏற்படுத்திக் கொண்ட வரைமுறைகளால் காயடிக்கப்பட்டு,பாலுணர்வு குறித்த இயல்பான வேட்கைகளிலும், உணர்வுகளிலும் சரிபாதியை இழந்தும் மறுக்கப்பட்டும் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளான்.
புராதன கிரேக்க சமூகத்தில், பெண்ணானவள் பிள்ளை பெற்றுத்தரும் எந்திரமாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கிறாள் ; சமூகத்தில் பிரதானமாக அவள் வைக்கப்படவில்லை. அதுநாட்களில் ஆண்-ஆண் இடையிலான தோழமையே மதிப்பிற்குரிய காதலெனப்பட்டது. ஒரு அறிவிற்சிறந்த ஆடவனுடனான காதலானது அவனது தோழனுக்கு பெருமை தரத்தக்க விடயமாக இருந்தது.
டெமஸ்தனிஸின் ஒரு மேற்கோள் பின்கண்டவாறு செல்கிறது!
‘’சுகத்திற்கு விலைமாதர்,
வாரிசுக்கு மனைவி,
காதலுக்கு நண்பன்’’
மனித வரலாற்றின் முந்தைய பக்கங்களில் ஆண்-ஆணிடையிலான தோழமையிலேயே காதல் செறிந்திருக்கையில், எதிர் பாலினத்துடன் காதலின்றி தோழமைகொள்வது தான் செயற்கையானதாகவும் ஆய்வுக்குரிய ஒன்றாகவும் இருக்கவியலும். அதைவிடுத்து, காதலற்ற ஆண்-பெண் நட்பை தூயதென நிறுவ முயல்வது பொய்க்கு கிரீடம் சூட்டுவதாகவே இருக்கும்.
இங்கு மேற்சொன்ன கருத்துகளை மறுதலிப்பதற்கான காரணிகளில் முதன்மையானது, தடுக்கப்பட்ட/மறுக்கப்பட்ட ஒரு உணர்வினை ஆம் என ஒப்புக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல். சில உண்மைகளை சீரணிப்பதில் உள்ள சிரமங்களைக் கடந்தும் அவர்களது மனம் இக்கூற்றிலுள்ள உண்மையை அறியும் என்ற நம்பிக்கையுடன் திருப்தி கொள்கிறேன்.
கருத்தில் மாறுபடும் பெண்களைப் பொறுத்த மட்டில், ஆண்-பெண் தோழமையில் உள்ள காதலினை மறுதலிப்பதன் மூலம் இதனை நட்பின் ஒரு தூய வடிவமாக நிறுவ முயல்கின்றனர். காதலன் என்ற இடத்தில் ஒருவன் மட்டுமே இருக்க முடியும் எனவும், மீதமுள்ள தோழர்கள் அனைவரிடமும் காதலற்ற நட்புமட்டுமே பாராட்டுவதாகச் சொல்லும் இவர்கள் ஏனைய தோழர்கள் அனைவரையும் சகோதர்களாகக் கருதி அவ்விதமே அழைக்குமாறு கேட்டால் மனம் ஒப்ப மறுக்கின்றனர். அதாவது ஆண்-பெண் தோழமை வேண்டும்! ஆனால் அதில் காதலும் அடக்கம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாது! இதுவே அவர்களது நிலைப்பாடு!
எண்ணிப்பாருங்கள்! இப்பரந்த சமூகத்தில் நமக்கான காதலைத் தருவதற்கும், நாம் காதலைப்பெறுவதற்கும் ஒரு சமயத்தில் ஒரு ஆண்/பெண் தான் உண்டென்று வரையறுத்தால் எந்த மனித மனம் தான் ஒப்புக்கொள்ளும்!? ஆக, தோழமையில் காதலற்ற வெறும் நட்பு எனும் பெண்ணின் எடுகோளானது எதிர்பாலிடமிருந்து காதலை நிபந்தனையற்ற வகையில் பெறும் சவுகரியத்தின் நிமித்தம் கைக்கொள்ளப்படுகிறது என்பது எனது புரிதல்! இது ஒருவிதமான தற்காப்பு நிலை. மேலும், தப்பித்துக்கொள்ள தயாராக உள்ள ஒரு ஆயத்த நிலையாகவே படுகிறது!
இவற்றையெல்லாம் தவிர்க்கும் வண்ணம் காதலற்ற தோழர்களை சகோதரர்கள் என அழைக்கவும் கருதவும் கோரும் வாதம் அஸ்திவாரத்தையே அசைக்கின்றபடியால் அதனை ஏற்க அவர்களது மென் மனம் துணிவதில்லை.
சொல்லாதவை என்றும் இல்லாதவையாகிவிடுவதில்லை...
தொடரும்! ;-)
இன்றும், இன்னமும் உடன் வரும் தோழிகளுக்காக...
மிகுத்துச் செறிந்த வாஞ்சையுடன் ராஜன்!
25 comments:
Me the first
அவ்வ்வ்வ்...
வழி மாறி வந்திட்டனோ...
ஒரு எழவும் புரியல..தமிழ்ல எழுது சார்
தோழி..காதலி..பேருதான் பிரச்சனையா...ஆமாமா சங்கடமா இருக்குமில்ல..
டெமஸ்தனிஸின் ஒரு மேற்கோள் பின்கண்டவாறு செல்கிறது!
‘’சுகத்திற்கு விலைமாதர்,
வாரிசுக்கு மனைவி,
காதலுக்கு நண்பன்’’//
மேட்டர் ஓவர்
மிகுத்துச் செறிந்த வாஞ்சையுடன் ராஜன்!//
அண்ணன் சிலுத்துகிட்டு நிக்கிறாரு
அருமையான பதிவு! இதை விட எளிமையாக எழுத்தில் வடிப்பது சிரமமும்கூட. Sigmund Freud இந்த துறையில் நிறைய சிந்தித்து, Oedipus Complex என்று விவரித்தபோது,அக்கால சமூகம் கடுமையாக எதிர்த்தது.ஆனால் விஞ்ஞானம் பிறகு ஏற்றுக்கொண்டது! இது குறித்து, தமிழில் எளிமையான பதிவு இதுவரை இல்லை. ஆசிரியர் மேலும் இது குறித்து எழதவேண்டும். வாழ்த்துகள்!
"சொல்லாதவை என்றும் இல்லாதவையாகிவிடுவதில்லை..."....அருமை
என்னமோ சொல்ல தோணுது.. ஒண்ணுமே சொல்ல தெரியலை :-) சுருக்கமாக ஏதும் சொலிவிட முடியாது.பல முறை நண்பர்களிடம் மேற்கண்ட விஷயங்களை விவாதித்து இருக்கிறேன்..நிறைய கேள்விகள் எழுந்தாலும் நிறைவான பதிவு.
ஆண் பெண் நட்பில் கண்டிப்பா ஒரு ஈர்ப்பு உண்டு. அதை 100 சதம் ஏற்கிறேன். ஆனா அனைத்தும் காதல்னு சொல்ல முடியாது. காதல்ங்கறது இன்னும் ஒருபடி மேல் என்பது என் கருத்து. அனைவரையும் காதலிக்க முடியாது.
பிடித்த எதிர்பாலின நடிகர், நடிகைகளை ரசித்தல் கூட ஈர்ப்பு தான். காதல் என்பதற்கு இன்னும் சற்று அதிக நெருக்கம் மன ரீதியாக தேவை என்பது என் கருத்து. நன்றி.
கொன்றல் காற்றுக்கு பிறகு நான் அதிகம் ரசித்து,ஆழ்ந்து வாசித்தது உங்களுடைய படைப்பில் இந்தப் பதிவே.
மிக நல்ல பதிவு ஆழ்ந்த புரிதல்கள் வழி. வாழ்த்துக்கள்.
இதை பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன்..
அருமை.நான் எழுதாததால் இது நான் எழுதாததாகி(எத்தனை "த") விடாது.
@சோதிடம்!
செம குஜால் மூடுல உலாத்திட்டு இருப்பீங்க போல!
புரிதலுக்கு நன்றிகள்! அனைவருக்கும்!
இங்கு 'காதல்' என்று தாங்கள் உபயோகிக்கும் பதத்திற்கு ஒரு சின்ன விளக்கம் கொடுங்களேன்.. மேலும் புரிந்து கொள்ள உதவும்
Very nice and interesting...
இவற்றையெல்லாம் தவிர்க்கும் வண்ணம் காதலற்ற தோழர்களை சகோதரர்கள் என அழைக்கவும் கருதவும் கோரும் வாதம் அஸ்திவாரத்தையே அசைக்கின்றபடியால் அதனை ஏற்க அவர்களது மென் மனம் துணிவதில்லை. //மிகச்சரி ... நல்ல பதிவு. கண்டிப்பாக இந்த பதிவின் கருத்துகள் பலருக்கு கசக்கவே செய்யும் உண்மை.எளிதான எழுத்து நடை பதிவுகள் அயர்ச்சியையே தருகின்றன. தயவுசெய்து இதே எழுத்து நடையை தொடரவும். நன்றி !
இப்படிஎல்லாம் நீளமாக புரியாமல் எழுதும்போது தான் சிறந்த இலக்கிய வாதி ஆவிர்கள் ...
புரோபைல் படத்தில் தாடி +கண்ணாடி + ஜோல்னாபை உள்ளவாறு போடவும்
உண்மை தான் இது ... எல்லார் வாழ்க்கைலயும் பல ஆட்டோக்ராப் இருக்குது தான் ... சேரன் படத்துல சொல்லிட்டார் ... நாம சொல்றது இல்ல ... அது மாதிரி தான் இதுவும் ... ஆனா பழகுற எல்லார்ட்டயும் காதல் வராது ... மனதிற்கு பிடித்தவர்களிடம் மட்டுமே அது தோன்றும்
ரொம்பவே சுத்த்த தமிழ்ல எழுதியிருக்கீங்க.. இரண்டாம் முறை படித்துவிட்டு வருகிறேன்..
பதிவை சரியாகப் படிக்காமல் டெம்ப்ளேட் கமெண்ட் தர விருப்பமில்லை..
மீண்டும் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன் ராஜன் சார்.
தங்கள் கருத்தை வரவேற்கத்தக்க ஒன்று. தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போதுள்ள சூழலில் காதல் என்பது காமம் சார்ந்ததாகவே (பெரும்பாலும்) கருதப்படுகிறது. அது தான் இவ்வகை குழப்பத்திற்கு காரணம்.
காதல் உள்ள, காமம் இல்லா நட்பு என்பதே சரி..
நண்பர் பிரசன்னா சொன்னது போல “காதல்“ என்ற வார்த்தைக்கு சரியானதொரு விளக்கம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் பலர் காதல் என்பதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.
இல்லாதவை என நினைப்பதெல்லாம் இருப்பவையாகும்போது, சொல்லாதவை ஏன் இல்லாதவை ஆகப் போகிறது?
சொல்லாததால் அது இல்லாமலாவதில்லை. சொன்னதால் அது இருந்தே ஆகவேண்டுவதுமில்லை.
Post a Comment