சும்மா 10 செகண்டுக்கு ஒரு ஃபிகர் ஸ்க்ரீன்ல எண்ட்ரி ஆவுது! மங்கை மடந்தை பேதை பெதும்பை பேரிளம்பெண்ணுன்னு சும்மா வளச்சு வளச்சு படம் புடிச்சுட்டாங்க! நாம்போன நேரம் முந்தின ரோ பிந்தின ரோன்னு பொண்ணுக கூட்டம் செகண்ட் ஷோலயும் ரொம்பி வழிஞ்சுது!
டைட்டில் கார்டுல 40 பேராச்சும் வரும்னு நெனைக்கிறேன்! மீறிப்போனா ஒரு 8 பேர்தான் நாம முன்னமே கேள்விப் பட்டிருப்போம். ஃபாக்ஸ்காரனை எப்பிடி முருகதாஸ் அண்ணன், அண்ட்கோவுக்கு புடிச்சார்னு தெரில! அதென்னவோ தொலையுது... நாம உள்ளார போவோம்.
டைட்டில் முடிஞ்ச அடுத்த நிமிசமே ஒரு எஸ் இ டி சி பஸ்ஸும் பிரைவேட் வால்வோ பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்குது; எப்பிடின்னா நேத்து (17.09.2011) காலைல நம்ம கார்க்கி மேல ஒன்வேல ஆப்போசிட்டா வந்த ஆட்டோ மோதுனா மாதிரி! பினாகுனா:சிறு சிறு சில்ற மொக்கை அடிகளுடன் கார்க்கி நல்லாதான் இருக்கான்! குஜராத்து பொண்ணு வந்து மாவுக்கட்டு மேல கெட் வெல் சூன்னு எழுதும்ற நப்பாசைல சும்மாச்சுக்கும் நொட்டாங்கைக்கு கட்டுப் போட்டுருக்கறதா கேள்விப்பட்டேன்!
ஆங் எங்க உட்டேன்.... ச்சை அதில்லய்யா.... ம்ம் மோதிக்குது... கார்க்கி பைக்கு மாதிரியே ரெண்டு பஸ்ஸுக்கும் முன் பக்கம் முழுசா முண்டக்கலப்பையாகிடுச்சு! ரத்தம்,சதை,ஓலம்,கதறல் அழுவாச்சியோட ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் அதாவது 4 மணி நேரம் முன்னாடி பஸ்ஸுகள வாட்டர் வாஷ் உட்டு, ஏர் பிடிச்சு கிரீஸ் ஆயில்லாம் டச் பண்ணி கிளுகிளுப்பா ஷெட்ட உட்டு ஸ்டாண்டுக்கு கொண்டு வர்றதுல ஆரம்பிக்குது அந்த ஃபிளாஷ் பேக்!

ஒரு பஸ் சென்னைல இருந்து திருச்சி போகுதுஅதுக்குள்ள அனன்யா மட்டும்தான் மெயின் கேரக்டர்! இன்னொரு பஸ் திருச்சில இருந்து சென்னை போகுது; அதுக்குள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி மற்றும் இன்னொரு பையன்! இந்த செவத்த பையன எதோ ஒரு படத்துல கமலினி முகர்ஜி கூட பாத்தாப்டி நியாபகம்! இப்ப நியாபகம் வரமாட்டீங்குது சரி உடுங்க! ஆக இந்த நாலு பேர்தான் மெயின் கேரக்டர்கள்!
இப்ப அனன்யாவிடமிருந்து இன்னொரு ஃப்ளாஷ் பேக்! திருச்சில இருந்து ஃபர்ஸ்ட் டைம் சென்னைக்கு மெட்ராஸ்போபியா பயத்தோட ஒரு இண்டர்வியூவுக்கு வர்ற அனன்யாவுக்கு அட்ரஸ் கண்டுபிடிக்க உதவும் பையன் தான் முந்தைய பத்தில சொன்ன செவத்த பையன்! அந்த அட்ரஸ் கண்டு பிடித்து இண்டர்வியூ அட்டன் பண்ணி மறுபடி அனன்யாவின் ஒண்னுவிட்ட அக்கா வீட்டில் சேர்ப்பது வரை ஒரு பொழுது முழுக்க அம்மணியுடன் சுற்றுகிறார் அம்பி! இதுக்குள்ள ரெண்டுபேருக்கும் லவ்வு பத்திக்குது ஆனா சொல்லிக்கறதில்ல!
அடுத்த ஃபிளாஷ் பேக் அஞ்சலி-ஜெய் ஜோடியோடது! திருச்சியில் பக்கத்து தெரு அஞ்சலியுடன் மொட்டைமாடி சைட்டு காதல் கதை! இந்த போர்ஷன் செம லோலாயம்! ஜெய் பட்டைய கெளப்பிருக்கார்! அஞ்சலி பேசறதுதான் கொஞ்சம் ஓவராப்போச்சுது! ஆனாலும் ஒண்ணும் பிரச்சனை இல்ல! தக்காளி பழம் கணக்கா அம்மணி தள தளன்னு இருக்கு!
அனன்யாவுக்கு உதவி செய்த கையோடு கிளம்பிவிடும் செவத்த பையன்மீது அனன்யாவுக்கு காதல் வந்து அக்கா வீட்டில் சொல்லி ஒரு தினுசாக ஓகே ஆகிவிடுகிறது. அடுத்து அவனைத் தேடிப்பிடிப்பதற்காக சென்னை வந்து முதன் முதலில் சந்தித்த கோயம்பேடு மொஃபசல் பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க காத்திருந்து விட்டு பின் ஊர் திரும்ப பஸ் ஏறிவிடுகிறார் அனன்யா! || இடைச் செருகல்:அம்மணி முகம் முத்தி விட்டது, சில மச்சங்ககளை மேக் அப் போட்டு மறைத்திருக்கலாம்! தோள் பட்டை எதோ ஹேங்கரில் தொங்க விட்ட ஆஃப் ஹேண்ட் காட்டன்சட்டை போல தூக்கிக் கொண்டிருக்கிறது||

அஞ்சலி-ஜெய் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் என்ற நிலையில் ஜெய்யின் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு அஞ்சலியை அழைத்துச் செல்கிறார் ஜெய்! அனன்யா சென்னையில் தேடுவது போலவே, திருச்சியில் அனன்யாவைத் துழாவிவிட்டு ஏமாற்றத்துடன் ஜெய்-அஞ்சலி பயணிக்கும் பஸ்ஸில் ஏறுகிறார் செவத்தபையன். இரண்டு பஸ்ஸுகளும்தான் முதல் பாராவில் சொன்னாமாதிரி மோதிக்கொள்கின்றன! யார் யாருக்கு என்னென்ன ஆனதுன்ற கிளை மேக்ஸ் அழுகாச்சி எபிசோட்!
என்னடா கதைன்றீங்களா! மொக்கையா இருக்கில்ல கேக்கறதுக்கு!? ஆனா பாக்க அப்பிடி இருக்காது! அங்கங்க நல்ல காமெடி! மொக்கை போடாத சீன்கள், அழகழகா ஃபிகர்கள்னு படம் ஜம்முனு போய்டுது! அப்பப்ப ஹைவேஸ்ல வால்வோ பஸ்ஸுகள் பண்ணும் சர்கஸ் அளப்பறைகளை டிடிஎஸ்ஸில் கதறவிட்டு மண்டை வலிக்க வைத்தார்கள்! நடிச்ச கூட்டத்துல அத்தனை பேரும் சூப்பர்... ஜெய்,அஞ்சலி ஜோடி நடிப்பில் டாப்! கவுதம் படம் கணக்கா புதுப்பொண்டாட்டிய ஓவரா கொஞ்சிட்டே வர்ற மாப்புளை டென்சன் பண்ணுனான்! அஞ்சலி கொஞ்சம் ஓவரா பேசி பிளேடு போட்டுச்சு! மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்ல!
டைரடக்கர் அவர் வேலைல பாஸ் ஆகிட்டார்!
கேமரா மேன் எதோ தேவையான அளவு பாத்துட்டார்!
இசை:பாட்டு ஒண்ணும் வெளங்கலைன்னாலும், எரிச்சலூட்டல! பேக்ரவுண்டும் அதே கணக்குதான்!
ரெண்டு லவ் ஸ்டோரிய மாத்தி மாத்தி காட்டி சூடேத்துற படம் திடீர்னு சாலை விபத்து சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு படமாமாறிடுது! மெசேஜ்லாம் டைரக்டா சொன்னா கதைல இருந்து தனிச்சு போயிடுது! ஆனா படம் தப்பு சொல்லமுடியாது! நல்ல டைம் பாஸ்! என்னளவில் கொஞ்ச நாளைக்கு ஹெல்மெட்டையாவது உபயோகிக்க வைக்கும் இந்தப் படத்தோட பாதிப்பு.மத்தவங்களுக்கு ஏர்பஸ்னாலே இனி வவுத்த கலக்க வைக்கலாம்!
டைட்டில் என்னத்துக்கு எங்கேயும் எப்போதும்ன்றதுதான் கடைசி வரைக்கும் புரியல!


12 comments:
அப்ப்பா ஒரு பதிவிலாவது me the firstன்னு கமென்ட் போடா பார்த்தேன் ஆசை நிறைவேறிடிச்சி #me the first
Me second
டைட்டிலோட அர்த்தம் என் பதிவுல எழுதிருக்கேன். படி மச்சி. (விபத்து-ங்கறது எங்கேயும் நடக்கலாம்., எப்போதும் நடக்கலாம்!)
@பரிசல்!
படிச்சு புரிஞ்சுகிட்டேன் மச்சி! ரெண்டு போஸ்ட்டையும் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு தஞ்சாவூர் கெளம்பலாம்! ஜூட்!
! மெசேஜ்லாம் டைரக்டா சொன்னா கதைல இருந்து தனிச்சு போயிடுது! ஆனா படம் தப்பு சொல்லமுடியாது! நல்ல டைம் பாஸ்! என்னளவில் கொஞ்ச நாளைக்கு ஹெல்மெட்டையாவது உபயோகிக்க வைக்கும் இந்தப் படத்தோட பாதிப்பு.//
நல்லவிசயம்!
சகோ என்ன நீயும் விமர்சனமெல்லாம் எழுத ஆரம்புச்சுட்ட என்ன ஆச்சு உனக்கு ?
டைரக்டர் அவர் வேலைல பாஸ் ஆகிட்டார்!
கேமரா மேன் எதோ தேவையான அளவு பாத்துட்டார்!////படம் பாக்குறதை வுடவும் விமர்சிச்சிருக்கீங்க பாருங்க,படம் பாக்காமலே...............................!அதுல வேற கேமராமேன் பாத்தது!!!!
அண்ணே எனக்கு ஒரு டவுட்டு!!இது பத்தி நீங்க ஒரு விளக்கம் எழுதணும்!!
*****
கி.பி,.576 இல இஸ்லாம் தொன்றியதுன்னா அதுக்கு முன்னாடி வரை அல்லா என்ன செய்து கொண்டிருந்தார்?
யோவ் அர டிக்கட்டு,
எங்கேயும் நடக்கலாம்
எப்போதும் நடக்கலாம் விபத்து.
புரியுதா?
நீங்க படிச்சதில்லையா பாஸ்.
நாம் வாழும் இந்த உலக உருண்டை ஒரு ஜுஜுபி மேட்டர்.
பிரபஞ்சத்தில் இது ஒரு கொசு மாதிரி.
மொட்டை மாடியில் நாம் பார்க்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் நம் பூமியும் ஒன்று.
அம்புட்டுதேன்.
ஒங்கள மாதிரி கேள்வி கேக்குரவங்களுக்கும் பதில் சொல்லணும் இல்லீங்களா? அதுக்காக குரான் சம்பந்தப்பட்ட
r &d ல இருந்தார்.
டவுட்டு கிளியரா?
அதுக்காக குரான் சம்பந்தப்பட்ட
r &d ல இருந்தார்.
டவுட்டு கிளியரா?///
.
.
ஒ அப்படியா?அந்த R&D செய்ய லேப் வசதி உதவியாளர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தாங்கோ?
முடிவாச்சொல்லிடுங்க பாஸ் படதைப் பார்த்திடலாமா?
Post a Comment