பேரறிவாளனுடைய கருணை மனு நிராகரிக்கப் பட்டுள்ள நிலையில், அவரைக் காக்க எடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் ஒருபுறம் இருக்க, பொதுமக்களாகிய நாம் ஒன்றுபடுவதன் அவசியம் உணரவேண்டும். மரண தண்டனையே எவர்க்கும் வழங்கக் கூடாது என்பது நம் கருத்து; ஆனால் நீதி விசாரணை என்ற பெயரில் ஒருதலைபட்சமாக மரணதண்டனை வழங்கப்பட்டு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் முறையீட்டிலுள்ள உண்மைக்கு செவிமடுக்க முயற்சிக்கவேண்டும்.
இதனை தமிழன் என்றும் ஈழ ஆதரவாளன் என்றும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்காமல் மனிதத்தின் பெயரால் இம்மரண தண்டனையை தடுக்க முயற்சிப்போம்.
இதற்கான முன்னெடுப்பில் முதல் கட்டமாக எதிர்வரும் 18.08.2011 வியாழன் அன்று சென்னையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இருசக்கரவாகனப் பேரணி நடைபெற உள்ளது (வேலூர் சிறைச்சாலை வாசல் வரை).
அதனைத் தொடர்ந்து 20.08.2011 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுக்குமான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.இவ்விரு முன்னெடுப்புகளும் பேரறிவாளனுக்கு உள்ள ஆதரவின் வலிமையை ஆட்சியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்க உதவும்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையிலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161ன் படி ஆளுநரால் தூக்கு தண்டனையைக் குறைக்க இயலும். கேரள மாநிலத்தில் பாலன் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருக்கும் ஆந்திரத்தில் இருவருக்கும் மேற்சொன்ன பிரிவின்கீழ் மரண தண்டனை கடந்த காலங்களில் குறைக்கப்பட்டிருக்கின்றது.
வாய்ப்பிருக்கையில் பாதகம் ஏற்படுவதைத் தவிர்க்க முயல்வோம். தமிழக முதல்வரின் கவனத்தினையும் ஈர்க்கவிழைவோம். பெரும் திரளாகக் களம் காண்போம்.
சமூகவலைதளங்களில் இதனைப் பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே. டுவிட்டர் தளத்தில் #Join4Justice என்ற தொடுப்புடன் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
மேலதிக தகவல்கள் மற்றும் உதவிக்கு : 9884877487, 9094817952
மின்னஞ்சல் :mefromchennai@gmail.com
நன்றி
3 comments:
மக்களின் ஒன்றுகூடல் தொடர்பான துண்டறிக்கை.
அவசியாமான பதிவு நம்பா
இன்று என் வலையில்
ஜெயலலிதா உண்ணாவிரதம்
Post a Comment