Wednesday, August 3, 2011

கைப்பழக்கம்-நாப்பழக்கம்-சித்திரம் - செந்தமிழ்

உலகத்தரத்தில் தமிழ்கவிதை எழுதுவது எப்படின்னு பலபேருக்கு உச்சி மண்டைல சுர்ர்ர்ருனு ஒரு ஸ்பார்க்கு ரொம்ப நாளா இருக்கும்னு எனக்குத் தெரியும். நாம தெரிஞ்சு வெச்சுகிட்ட மேட்டரை நாலு பேருக்காவது சொல்லிக்குடுக்கலாம்னு திடீர் ஞானோதயம் வந்ததாலேயே இந்தப்பதிவு. மொதல்ல உலகத் தரத்துல தமிழ்க் கவிதை ஒண்ணாவது நீங்க படிச்சிருக்கீங்களான்னு மோவாய்ல நடுவெரல வெச்சி யோசிச்சுப்பாக்கணும். இல்லைல்ல ... படிச்சிருந்தாலும் பரவால்ல இப்ப இத படிங்க... வேறெதுலயும் கவனம் செதறாம சிந்தாம மானிட்டர மட்டும் பாத்து இந்தக் கவிதய படிங்க...


என் கனவில் ஒவ்வொரு இரவு ...
 நான் உன்னைபார்க்கிறேன். நான் உணர்கிறேன்.
 நான் போய் எப்படி தெரியும் ... அது உள்ளது. 
 நீங்கள் போய் காண்பிக்கவந்தேன். ... அருகில், இதுவரை, எங்கு நீங்கள்இருக்கிறீர்கள் ...
நான் நம்புகிறேன் என்று அவர் ...ஒருமுறை கதவை திறந்து ... நீ என் இதயத்தில்இங்கே இருக்கிறோம் 
என் இதயம் ஒரு போகும் ..நான் உன்னை காதலித்தேன் போது. லவ் இருந்தது 
நான் வைத்திருக்கும் ஒரு உண்மையான நேரம்
என் வாழ்க்கையில் நாம் எப்போதும் ஜி .. அருகில்,இதுவரை, நீங்கள் எங்கே ... நான் நம்புகிறேன் என்றுஅவர் ... ஒருமுறை நீ கதவை திறந்த ... நீ என்இதயத்தில் இங்கே இருக்கிறோம் ... என் இதயம் ஒருபோவோம் ... நீ இங்கே, நான் பயம் இல்லை, அங்கேஇருக்கிறது ... நான் என் இதயம் போகும் என்று ... நீஎன் இதயத்தில் பாதுகாப்பான இருக்கிறீர்கள்


எப்படி இருக்கிறது இதுதான் உலகத்தரத்திலான தமிழ்க்கவிதைக்கு சாம்ப்பில்! 


ஹே ஹே! நோ பேட் வேர்ட்ஸ்! வொய் டென்சன்?


இப்படி பொருள்செறிந்த கவிதையை இயற்றுமளவு மேல்மாடியில் மண் இருந்தால் உன் பிளாகுக்கு ஏன் வருகிறோம்னு நீங்க கேக்குறது புரியுது!


வெரி சிம்ப்பில் எல்லாத்துக்கும் படியளக்க்குற கூகுளாத்தா இதையும் செஞ்சு குடுப்பா! 


http://translate.google.co.in இந்த சுட்டியில் உங்களுக்கு தெரிஞ்ச இங்கிலீசு ஃப்ரெஞ்சு இத்தாலி தென்னமெரிக்க காட்டுவாசி பாசை எதாவது ஒரு மொழிப் பாட்டை காப்பி பேஸ்ட் செய்து ட்ரான்ஸ்லேட் பொத்தானை அமுக்குங்கள்! அவ்வளவுதான்! 2 அல்லது 3 நொடிகளில் சுவையான தமிழ்க்கவிதை ரெடி! 


உங்களுக்கு இங்கிலிபீஸு பாட்டு லிரிக்ஸ் தெரிலைன்னா http://lyrics.filestube.com இங்க போயி சுட்டுக்குங்க! நன்றி வணக்கம்!


டிஸ்கி : மேலே செவ்வெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உலகத்தரத் தமிழ்க்கவிதயின் ஒரிஜினல் பின் வருமாறு! மேற்சொன்ன உத்தியில் கூகுளாத்தா கொடாஞ்சு குடுத்ததுதான் செங்கவிதை!


Every night in my dreams ...I see you. I feel you. ...That is how I know you go on. ...You have come to show you go on. ...Near, far, wherever you are ...I believe that the he...Once more you open the door ...And you're here in my heart ...And my heart will go on an...Love was when I loved you ...One true time I hold to ...In my life we'll always g...Near, far, wherever you are ...I believe that the he...Once more you open the door ...And you're here in my heart ...And my heart will go on an...You're here, there's nothing I fear, ...And I know that my heart will go on ...You are safe in my heart








9 comments:

jaisankar jaganathan said...

மண்டபத்துல எழுதிக்குடுத்தத வச்சே புலவர்னு பேரு வாங்கிக்கிறாங்கபா

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஹி

சேலம் தேவா said...

கவிப்பேரரசரய்யா நீர்..!! :)

ஜீ... said...

தமிழாக்கம் சூப்பர் பாஸ்! நான் நினைச்சேன் யாரோ பிரபலம் எழுதின கவிதைய பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்களோன்னு!

ஜேம்ஸ் கேமரூனுக்கு தமிழ் தெரிஞ்சா பாவம் நோந்திடுவார் இல்ல? :-)

வந்தியத்தேவன் said...

ஹாஹா கலக்கல் அப்படியே உலகத்தரத்தில் ஒரு சிறுகதை நாவல் என கூகுளை வைத்து முயற்சிக்கவும்.

Rajan said...

நீங்க அது கூட வெளையாடும் போதே நெனச்சேன். இப்படி ஏதாவது நடக்கும்னு. #நாய் கிட்ட சொன்னேனுங்க #குறும்படம்பார்த்துஅழிந்தோர்சங்கவுறுப்பினர்

விடுதலை கரடி said...

சிலர உரைநடையை மடக்கி போட்டு அதுதான் கவிதைன்னு ஒரு கட்சிக்கு தெனமும் ஜால்ரா போடும் விதமா பேஸ்புக்குல ஸ்டேடஸ் போடுறாரு!!யப்பா அவுரு அக்கப்போர் தாங்கலடா சாமி!!(ஒரு க்ளூ :நாம எல்லாம் மிருக புத்திரங்களா?மனிதனின் புத்திரங்கலந்தானே?!!)

விடுதலை கரடி said...

"அந்த" கவிஞரின் ஸ்டைலில் எமது கவிதை:
எனக்கு தலைவலி
காப்பி வேண்டும்
பில்டர் காப்பியோ
அல்லது பரூ காப்பியோ
வேண்டியது காப்பி
அதுக்கு வேண்டியது என்ன?
ஒரு கோப்பையும்
பாலும் டிகாக்ஷனும்
கோப்பையை யாரோ திருடி விட்டனர்
வெறித்து பார்க்கிறேன் பாலை
நீரில் நனையுது வானம்!!
***************************
(யப்பா கல்லு எல்லாம் உடக்கொட்டாது)

krishna said...

கவித இலக்கணம் திறம இல்லாம புதுக்கவித என்ற பேரில் கம்பாசிட்டர் கவிதயும், வசனகவிதயையும் எழுதும் மனுசங்க மத்தியில கூகிள் எவ்வளவோ தேவல.