இந்தோனேசியாவில் சட்டப்பூர்வமாம்;
ரஷ்யாவில் டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்தால் போதுமாம்;
அவ்வளவு ஏன் மும்பையில் கூட தனியாக ஏரியாவே இருக்கிறதாம்!
இவ்வாறாக சிந்தனைகள் செல்லுமளவு உலகஞானம் பெற்றிருந்தான் அவன்! அவ்வப்போது
தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது பற்றி கூட அபிப்பிராய பேதம் எழுமளவு
எழத்துவங்கியிருந்தது அவன் தாகம்.
பிட்டுப்படம் பார்ப்பதற்கென்றே நெட்டுக்கனெக்சன் வாங்கியிருந்த
அவனுக்கு அதன் பில்லும், கூடவே அடங்காத ஜொள்ளும் ஒருவித மதில்மேல் பூனை நிலையைத்
தந்துவிட்டிருந்தது.
’’பிட்டுக்கு நீ
நெட்டுப்பாக்குற செலவுக்கு ஒரு எட்டு போய் தொட்டுப் பாத்துட்டு வந்துடலாண்டா’’ என்ற அவனது
அதியதார்த்த நண்பனின் நக்கல் கமெண்ட்டையும் ஒருநாள் நேர்மறையாக பொருள்கொண்டான்.
அட ஆமால்ல! என்று தோன்றியது! கூட்டிக்கழித்துப்பார்த்தான் செலவு டேலி ஆகத்தான்
செய்தது! அதுவுமில்லாமல் இது ஒன் டைம் செலவு! மொத்தமாக ஆசை வடிந்துவிடும் என்ற
நினைப்பு வேறு!
லேப்டாப் தாங்கும் பையில் லேப்டாப்புக்கு பதிலாக காகிதக் குப்பைகளை
ரொப்பி முதுகில் தாங்கிக்கொண்டு, அய்யர் வீட்டுத்திண்ணை நிகர் தேய்ந்தழிந்த
பைக்கின் சீட்டில் பகலின் பாதியை நகர்வலத்தில் தொலைக்கும் மார்க்கெட்டிங்
பேர்வழியான இவனுக்கு சம்பளத்தில் சரி பாதியை தாம்பாழத்தில் வைத்து தாரை வார்க்க
இன்றைய தேதியில் பரிபூரண சம்மதம்!
நண்பர்கள் தயவு தேவைப்படும் கட்டம் இது! உடன் பணியாத்தும்
நண்பர்களிடம் தனது மேட்டர் தாகம் குறித்து கட்டு சோத்தை அவுப்பத்தில் அவனுக்கு
விருப்பமில்லை; பால்ய நண்பர்களே சரியானவர்கள் எனத்தோன்றியது! அவர்களில் சிலர்
அவ்வப்போது போய்வந்து கூறும் கதைகளை ஜலவாய் வழிய கேட்டிருந்திருக்கிறான்!
போய்வந்தவர்களில் ஒரே ஒரு முறை போய்வந்த கொஞ்சம் அமைதியான ஃப்ரெண்டை தெரிவு
செய்தான்! அவனிடம் தனது அபிலாசையை ஒரு நெடுஞ்சாலை பயணத்தினிடையே பைக்கை நிறுத்தி
ஓரமாக சப்பாத்திக்கள்ளிச் செடிமீது மூத்திரமடிக்கும் இடைவெளியில் போட்டுடைத்தான்!
அவனோ கடைசி சொட்டுவரை வாய்திறக்கவுமில்லை; வேறெந்த ரியாக்சனும்
காட்டவில்லை. இவனுக்கு பாதி வந்த்தும் பட்டென நின்றுவிட்டது! பேந்த பேந்த
விழித்தான்!
ஜிப்பை மேலிழுத்தவாறே சொன்னான் நண்பன் ‘ம்ம் போலாமே... அன்னூரு கவுதம்
லாட்ஜுல ரூம் போட்டம்னா ரூம்பாயே கேப்பான் மேட்டர் வேணுமான்னு’
அவனுக்கு மீண்டும் சரளமாக மூச்சா வரத்துவங்கியது நண்பன் பதிலை
முழுதும் கேட்ட பிறகு.
’வர்ற
வியாழக்கெழம போலாமா’
என்றான்
’வேலைக்கு லீவ் போட்டுட்டு மேட்டர்க்கு போவணுமா?’ இது ஃப்ரெண்டு
’சைலண்ட்டா போய்ட்டு வந்துரலாம்! நம்மாளுக கிட்ட மாட்டுனா கிண்டிக்கெழங்கெடுத்துருவானுக’
‘கரெக்டு! போய்ரலாம்!’
அன்றிரவு அவனுக்கு உறக்கம் பிடிபடவில்லை! ரெய்டு பயம்! தனியாக போனால்
அந்தப்பொண்ணுகளே அண்ணாக்கயிரு மொதக்கொண்டு உருவிட்டு தொரத்திடும்னு எவனோ பத்தவெச்ச
புரளிக்கதை! மேற்படி லாட்ஜுக்கு போய்வர தனிமை அச்சம் இதெல்லாம் தான் அவனுக்கு மேட்டர்க்கு கூட்டணி ஐடியாவைத் தந்தது!
முதலில் அஞ்சாறு பேரா போய்டலாம்னு நினைத்தவனுக்கு சேலம் சிவராஜ்
சித்தவைத்தியரால் கிளம்பிய பீதி நெஞ்சை அடைத்தது! அவர் சொல்வதைப் பார்த்தால்
நமக்கு ரெண்டு வருசம் முன்னாடியே பீசு போயிருக்கும் நாம அங்க போயி சும்மா நின்னு,
அவ காறித்துப்பி வெரட்டினா அது பசங்களுக்குத் தெரிஞ்சு வாழ்க்க ஃபுல்லா
கரும்புள்ளி செம்புள்ளியாகிட்டா.... கிழிஞ்சுடாதுன்னு ஃபீல் பண்ணி மேற்படி படையெடுப்பு ஐடியாவை பத்து இஞ்ச் குழி தோண்டி புதைத்து புல் நட்டு விட்டான்.
இப்போதைய அவனது பிளானின் மீது அவனுக்கே பெருமை தாங்கவில்லை!
ஃப்ரெண்டுக்கும் சேர்த்து மேட்டர் பில்லை தானே கட்டவேண்டியது; இதனால் அங்கே எந்த
மானக்கேடு நடந்தாலும் அங்கேயே ஊத்தி மூடிவிட்டு திரும்பிவிடலாம் என்று மனசுக்குள்
ஒரு மகோன்னதக் கோட்டையே கட்டிவிட்டான்!
புதன் கிழமை இரவு.
வழக்கமாக விளையாடும் கிரவுண்டில் இருட்டில் இருவர்
மட்டும் அமர்ந்து செயல்திட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுத்துக்கொண்டிருந்தனர்!
அவன் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை
நோக்கி கையை நீட்டியவாறே கேட்டான் ’அந்த
நெட்டக்காலன் தானே உன்னைய மொத டைம் கூட்டிப்போனான்’ என்று.
‘மொத டைம் இல்ல ஒரே டைம்’ என்றான் ஃப்ரெண்டு! பொறு என்று தலையை அசைத்தவாறு.
’கவுதம் லாட்ஜுக்கா’
‘ம்ம்’ என்றுவிட்டு முக்காலே மூணு வீசம்
சாம்பலாய்ப்போன சிகரெட்டை நீட்டினான்!
‘எப்பிட்றா இருந்துச்சு’
’அட சொல்லு.... சமஞ்ச பொண்னாட்டமா நெளியுற? கதையா கேட்டேன்.. நாளைக்கு போவணுமே கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டா
இப்புடி முழிக்கற’ என்றான் அவன்!
தலையை நிமிராமல்
‘ம்ம்ம்’ என்றான் நண்பன் ஈனஸ்வரத்தில்...
எத்தன சிங்கிள்றா?
ரெண்டா மூணா?!
முக்கால் பாகம்
அடித்துவிட்டு, இவனுக்குக் கொடுத்த கட் ஆஃப் தம்மே இன்னும் இன்னும் ஃபில்ட்டர்
தொடாத நிலையில் அடுத்த சிகரெட்டை பற்றவைத்து உறிஞ்சிக் கொண்டே ‘ம்க்கும்.. நீ
ஏண்டா வவுத்தெரிச்சல கெளப்பற? ஒண்ணுக்கே கிறுகிறுப்பு தட்டிருச்சு! இதுல ரெண்டா
மூணாவாம்?!’
குனிஞ்சுகிட்டே புகை கிளப்பிய நண்பனுடைய ஃபேஸ்
ரியாக்சனை இருட்டில் இவனால் காணமுடியவில்லை...‘ஏண்டா? முடிலயா’ என்றான்
‘அப்பிடில்லடா... ஃபர்ஸ்ட் டைமாச்சா?!
பாத்ததுமே பாதி வந்துடுச்சு... அதுக்க்கப்பறம் மானங்கெட்டுடுமேன்னு முக்குன முக்குல
ஒருவாரம் வலி கொன்னுருச்சு... ஸ்ப்ப்பா... வந்தும் கூட ரெண்டு மூணுநாள் கால
அகட்டீட்டில்ல நடந்துகிட்டு இருந்தேன்’
இவனுக்கு அடிவவுத்துக்குள்ள ஆசிட் சொரக்க
ஆரம்பித்து விட்டது. இதுக்கு மேல பேசுணா பிளானே டர்ர்ர்ருனு கிழிஞ்சுடும்னு நினைத்து அவ்விடம் விட்டுக்கெளம்பினான். மறுநாள் காலை 8 மணிக்கு பஸ்ஸில் கிளம்புவதாக முடிவானது.
தெருமுனையில் ஃப்ரெண்டை இறக்கிவிட்டு 10
அடி வண்டி சென்றதும் தான் பாதுகாப்பு உபகரணம் பற்றிய பிரக்ஞை வந்தது அவனுக்கு. திரும்பிப் பார்த்தான்
இறக்கிவிட்ட சுற்றுப்புறத்தில் எங்கும் ஃப்ரெண்டைக் காணோம்! அந்த ஊரின் ஐந்தாறு
மெடிக்கல் ஷாப்புகளில் 2 அவன் அப்பாவுக்கு பழக்கமானவர்களுடையது. 3ல் வயசுப்
பொண்ணுகளை வேலைக்கு வைத்திருந்தார்கள். எல்லாக்கடைக்கும் 2 சுற்று போய் யுடர்ன்
போட்டு வந்து கொண்டிருந்தான்! பிறகு அப்பாவுக்குத் தெரிந்த கடைகளில் ஒன்றில் ஓனர்
இல்லாத/சிறுவனொருவன் கல்லாவிலிருந்த கடையைத் தெரிவு செய்தான். வரிசையாக ஆட்கள்
வருவதும் போவதுமாக இருக்க 20 நிமிடம் காத்திருந்து தன்னந்தனியனாய் கடைமுன்
பிரவேசித்தான்.
மூன்று படிகள் கொண்ட மெடிக்கல்ஷாப்பின்
மூன்றாவது படியில் ஏறி நின்று முகத்தில் வலிய கடூர ஆண்மையை வரவழைத்துக் கொண்டு ’நிரோத் ஒரு
பாக்கெட்’
என்றான்.
மிகக்கேவலமான ஒரு பார்வையுடன் அதெல்லாம்
இப்ப வர்றதில்ல என்றான் கடைச்சிறுவன்
இவன் தம் கட்டி முகத்தில் நிறுத்தியிருந்த
ஆண்மை பொடீலென்று வீழ்ந்தது. காண்டமே சப்ளை இல்லையா என்னடா கொடுமை இது என்று
நினைத்த போதுதான் நிரோத் என்று குறிப்பிட்ட்தன் தவறு புரிந்த்து! கா என்று தொடங்க
யத்தனிக்கும் முன் ‘மூட்ஸ் இருக்கு தரவா’ என்றான் சிறுவன்.
தலையை ஆட்டி வைத்தான்.
ஒரு பாக்கெட் மூட்ஸ் சுப்ரீம் டாட்டட்
காண்டம்ஸ் ஃபார் எக்ஸ்ட்ரா ப்ளெஸ்சர் வந்தது பிராக்கெட்டில் 20 நம்பர்ஸ் என்ற
குறிப்புடன்! அத்தனையவெச்சு பலூனா ஊதறதுன்னு இவனுக்கு தோன்றியபோதும் அதை சொல்ல மனமில்லை.
100 ரூபாயை டேபிள் மேல் வைத்தான் காக்கி கலர் கவரை டேபிள் மீது வைத்த சிறுவன் காசை
எடுத்து கல்லாவில் போட்டு விட்டு இலவச டீவியில் சூப்பர் சிங்கர்
பார்க்கத்தொடங்கினான்.
கவருக்குள் பாக்கெட்டைத் திணித்து பேண்ட்
ஜோப்புக்குள் நுழைத்துக் கொண்டே மீதி சில்லறை கேட்கத்தயங்கி சிறுவனைப்பார்த்தவாறே சில நொடிகள் நின்றான்.
இவனைப்பார்த்த சிறுவன் ‘சரியாப்போச்’ என்றான்.
பட்டென திரும்பி
வந்து ஸ்டாண்டைக் கூட எடுத்து விடாமல் வீடுவந்து சேர்ந்தான்.
மறுநாள் காலை
பஸ்ஸ்டாப்பில்..
பத்துக்கும் மேற்பட்ட
கால்களுக்குப் பிறகு ஃபோனை அட்டன் செய்தான் நண்பன் ‘ம்ம்ம்.. சொல்றா’
‘டேய் கேனக்..... மணி எத்தன? பொ...ல வெயில்
அடிச்சும் தொரந்துட்டு தூக்கம் போடறயா? சீக்கிரம் வந்து தொலை. முக்காமண்நேரமா
தேவுடு காத்துட்டு நிக்கறேன்’
‘வந்துட்டேன் வைய்யி’
மேலும் அரைமணிநேரக்காத்திருப்புக்குப் பின்
கண்ணின் பூலை கூடக் கழுவாமல் வந்து நின்றான் அத்யந்த நண்பன். அவனைத்திட்ட வாயெடுக்கும்
முன் பஸ் வந்தது தரதரவென்று அவனையும் இழுத்துச் சென்று பஸ்ஸுக்குள் திணித்தான்.
பாடவதி பஸ்பயணம் பதினேழு நிமிடம்.
குறிப்பிட்ட ஸ்டாப்பில் இறங்கினர் இருவரும். அங்கிருந்தே தெரிந்தது கவுதம்
லாட்ட்ஜின் நான்காவது மாடியின் மூன்று அறைகளின் முன் ஜன்னலை மறைத்த லுங்கிகளும்
துண்டுகளும். நெளிந்த குழல்விளக்குகளால் ஹோட்டல் கவுதம் என்று எழுதப்பட்டிருந்த
போர்டை பார்த்தபடியே கட்டிடத்தின் உள்ளே நுழைந்தனர்.
ரிசப்சனில் யாருமில்லை. சுற்றும் முற்றும்
நோட்டம் விட்டான் அவன். நண்பனோ நொட்டாங்க்கையை வைத்துக் கொண்டு சும்மாயிராமல்
ரிசப்சன் ஃபோனின் ரிசீவரை எடுத்தான்.
ரிசப்சன் அறைக்குள் தரையில் அமர்ந்து சாம்பாருக்கு இட்டிலி தொட்டுத் தின்ற படியே
புறங்கையை நக்கிய இளைஞன் ஒருவன் எழுந்து இருவரையும் பார்த்தான்.
‘ரூமுங்ளா’
’ஆமா’
‘டபுள் காட்டா’
‘ம்ம்’
‘எப்ப வெகேட் பண்ணுவீங்க’
‘நைட்டுதான்’ என்றுவிட்டு
நண்பனைப் பார்த்தான் அவன்.
ஒரு குறுக்கு
வாட்டில் பைண்ட் செய்த லெட்ஜரை விரித்து அவன் பக்கம் நீட்டினான் ரிசப்சன் இளைஞன்.
முதல் கலம் ரூம் எண்
என்றிருந்தது. ரிசப்சனுள்ளிருந்து 202 என்ற சவுண்டு வந்த்து. இட்டு நிரப்பினான்.
அடுத்து பெயர் என்ற இடத்தில் ஃப்ரெண்டின் பேரை எழுதிவிட்டு ஃப்ரெண்டைப்ப்பார்த்து
சிரித்தான். அவனோ முறைத்தான். பேருக்குக் கீழே அவனது ஊரை மட்டும் எழுதியதைக் கண்ட
ரிசப்சன் ’நம்பர் எழுதிடுங்க’ என்றது. தன்
நம்பரைத் தவிர வேறெதுவும் நினைவுக்கு வராததால் அதையே எழுதி கடைசியில் 797க்கு
பதிலாக 798 என்று போட்டான்.
ஐநூறு ரூவாய்
அட்வான்ஸ் கொடுத்தான். இன்னொரு சிறுவனைக் கூப்பிட்டது ரிசப்சன். அவன் வந்ததும் ஒரு
டிவி ரிமோட்டும் ஜக்கு நிறைய தண்ணியும் கொடுத்தது. அதை வாங்கிக் கொண்டு ரூம் சாவியையும்
எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தான் சிறுவன். லக்கேஜ் எதுவும் இல்லாததை
கவனித்த சிறுவன் போலாம் என்றான். இவர்களிருவரும் லிஃப்ட்டின் முன் நின்று பொத்தானை
உற்றுப்பார்க்கையில் தப தப எனும் சப்த்த்துடன் பின்னிருந்த படிகளை மூன்று மூன்றாக
கால்களில் விழுங்கியபடி மேலேறினான் சிறுவன். படியெங்கு சிதற விட்ட தண்ணீரில் கால்
படாமல் தொடர்ந்து ஏறினார்கள் இருவரும்.
ரூமைத்திறந்து
பெட்டைத்தட்டிக் கொண்டிருந்தான் சிறுவன். வெளியில் காத்திருந்தனர். அவன் வெளி
வரும்போது ஐந்து ரூவாயை கீழ் பாக்கெட்டில் இவன் தேடி எடுக்கும் முன் அவன்
படியிறங்கிச் சென்றுவிட்டிருந்தான். உள்ளே போய் பெட்டில் அமர்ந்தனர்.
’சரக்கடிக்கலாம் வாங்கிட்டு வர சொல்லு’என்றான் இவன்’
’நானே போய்ட்டு வரேன்’
பர்ஸை எடுத்தான்
‘எண்ட்டயே இருக்கு... போய்ட்டு வந்துடறேன் இரு’ என்றவாறு வெடு வெடுவெனக் கிளம்பிவிட்டான்.
காசு வேணாமா?????
அவன் காசு வேணாம் என்றது முதல் பஸ்ஸில் எதையோ மிதித்தவாறு முகத்தை வைத்திருந்தது.
காலையில் வருவதாகச் சொல்லி உயிரை வாங்கியது எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப்
பார்த்தான்! இனி இவன் வரமாட்டான் என பொறி தட்டியது! உடன் அவன் நம்பரை அழைத்தான்.
நாட் ரீச்சபில் என்றாள் ஒருத்தி.
ஃபோனை பெட்டில்
வீசிவிட்டு கக்கூஸில் போய் அமர்ந்தான்.
10 நிமிசத்துக்கு
பிறகு காலிங் பெல் அலறியது.
அவசர அவசரமாக்க்
கழுவிவிட்டு வந்து கதவைத் திறந்தான்.
அதே சிறுவன், ’எதாவது வேணுமான்னா’
‘நீ மட்டுந்தானா இங்க’
‘பெரியவங்க யாரும் இல்லையா ரூம்
சர்வீஸுக்கு’
‘சரக்கான்னா... குடுங்க நானே வாங்கிட்டு
வருவேன்... இன்னைக்கு வேற யாரும் இல்ல’
150 ரூவாயை நீட்டினான்..’எம்சி ஒரு கோட்டர்.. அரைப்பாக்கெட் கிங்ஸ்.. வாழைப்பழம்..லேஸ்’
சிறுவன் கிளம்பிவிட்டான்.
அன்று மாலை.... 6.17 மணி அதே வழக்கமான
கிரவுண்டுக்குச் சென்றான்.
தூரத்திலிருந்தே தெரிந்த்து 7 அல்லது 8
தலைகள். பைக்குகளை சுற்றிலும் நிறுத்தி நடுவில் அமர்ந்து எதோ
பேசிக்கொண்டிருந்தனர்.
காலையில் காணாமல் போனவன் நடுவில் உக்காந்து
தம்மடித்துக் கொண்டிருந்தான். வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் நெருங்கினான்.
எல்லார் கண்களும் இவனை ஊடுருவின. ஃப்ரெண்டு
மட்டும் தீக்குச்சியால் பக்கத்தில் நின்ற பைக்கின் டயர் பட்டன்களிடையில் அப்பிய
சாணியை நீக்கிக் கொண்டிருந்தான். புகைந்து தள்ளியது வாய் சிகெரெட்டை.
மெதுவாக உக்கார்ந்தான். நிசப்த்த்தைக் கலைத்தது
ஒரு குரல்
‘என்னடா காலைல சம்பவமாமா?!’
ஃப்ரெண்டைப் பார்த்தான் அவன் நிமிரவே இல்லை
கடைசி பஃப்புடன் அணைத்துத் தேய்த்தான் தரையில்.
மீண்டும் கேட்டான் முன்னவன் ‘சொல்றா
நீயாச்சும்.. அவந்தான் பீய முதிச்சா மாரி உக்காந்துட்டே இருக்கான்... இவன ஏண்டா ஒரே சிங்கிள்ள தாட்டி உட்டுட்ட? ஒண்ணாத்தான போணீங்க? அப்பறம் இவன் மட்டும்
லாட்ஜுக்கிட்ட பஸ்டாப்புல நின்னுகிட்டு இருந்தான் நாந்தான் கூட்டிட்டே வந்தேன்!
ரூமுக்கு வந்து பாக்கலாம்னு பாத்தேன்! சரி பாவம் பையன்னு வந்துட்டேன்’
இன்னொருத்தன்
மெதுவாகக் கேட்டான் ‘ரெண்டா மூணாடா?!
சலிப்புடன் சொன்னான்
இவன் ‘ம்க்கும்.. நீ ஏண்டா வவுத்தெரிச்சல கெளப்பற? ஒண்ணுக்கே கிறுகிறுப்பு தட்டிருச்சு!
கால மடக்க முடில அகட்டீட்டே நடக்கவேண்டீதா இருக்கு...
அவனைப் பார்த்துக் கொண்டே ஃப்ரெண்டு அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தான்!

42 comments:
புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
சுப்பர்.....
அப்போ ஒன்னுமே நடக்களையா..... நானும் எதாவது குஜாலா இருக்கும்னு ரொம்ப மும்முரமா படிச்சா...
மச்சி, 'மேட்டர்' கொஞ்சம் 'A ' தான் என்றாலும், ஆபாசமோ, விரசமோ எல்லை தொடாமல் எழுதி இருப்பதற்கு பாராட்டுக்கள்.! அது கத்தி மீது நடப்பது போல, கவனமா போய் இருக்க.! ரொம்ப கஷ்டமானது அப்படி எழுதறது.! ஆரம்பம் முதல் இறுதிவரை கண்களையும் கருத்தையும் நகர்த்தாமல் வாசகனை படிக்கவைத்தத்தில் நீ ஜெயித்து விட்டாய்.! வாழ்த்துக்கள். நட்புடன் - தோட்டா
நல்லாத்தான் விரசம் தட்டாம எழுதியிருக்கிங்க.
யோவ்வ்வ்!! ஒரு மேட்டரும் இல்ல!! அப்போகூட நல்லர்ந்தது!! - @Aruniac :-)
super
ஜூப்பரு........பட்டும் படாம .........தொட்டும் தொடாம ..............ஒரு மலையாள படம் பாத்த எபெக்ட்
இனி வாரத்துக்கு ஒரு பதிவாச்சும் போடுற(கடவுள் பக்தி பத்தியே)இல்லைன்னா உன் சீட்டுக்கு அடியில் பத்தாயிரம் வாலா வெடிக்கும்!!ஹீ ஹீ
கதை நல்லா இருக்கு font கொஞ்சம் பெருசு பண்ணுப்பா உத்து படிக்க வேண்டி இருக்கு
அதிரி புதிரி அதிரடி மாமேய்ய்ய்!
@ஜெகன் நன்றி தோட்டா!
//நல்லாத்தான் விரசம் தட்டாம எழுதியிருக்கிங்க.//
தட்டலயா! தட்டீடுவோம் அடுத்தவாட்டி!
@வடக்குப்பட்டி ராம்ஸ்! நன்றி பாஸ்! போட்டுடுவோம் வாராவாரம்!
//கதை நல்லா இருக்கு font கொஞ்சம் பெருசு பண்ணுப்பா உத்து படிக்க வேண்டி இருக்கு//
:-))
@ராஜூ! டேன்க்ஸ் மாப்பீ!
ஆல் இன் ஆல் இல் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல மேட்டரை படிக்கிறேன்..பதிவுக்கு நன்றி...
மஜாப்படம் பார்க்கப்போய் மசாலாப்படம் பார்த்து வந்த எபெக்டா இருக்கு மச்சி..
ராஜன்தனமாகவே தொடங்கி, அமர்க்களமாக முடிந்திருந்தது. எழுத்து நடை அருமை மச்சி. தொடர்ந்து எழுதவும்.
வாசகனாய் அல்லாது அந்த கதாப்பாத்திரமாக உள்ளே அழைத்து சென்றுவிட்டாய், எந்த இடத்திலும் கதாப்பாத்திரத்திற்கு பெயர் தராமல் நாமதாண்டா அதுன்னு சொல்லாம சொல்லிவிட்டாய் மச்சி... வெகு நாட்களுக்குபின் ஒரு நல்ல பதிவு கண்ணை இப்படி அப்படி நகர்த்த விடாமல் படிக்கவைத்து வென்றுவிட்டாய்... இது ராஜனின் சேட்டை...!
கதை , எழுத்து நடை எல்லாம் ஓக்கே.. ஆனா ஃபாண்ட் ஏன் இவ்வளவு சின்னதா இருக்கு?நார்மல் சைஸ் மாத்தலாம்.
ஃபாண்ட் சைச மாத்திப்புட்டேன்பா! நீங்களும் அப்பிடியே சங்கர நேத்திராலயால போயி அய்யருன்னு சொன்னீங்கன்னா நல்லா பாப்பாங்க! கண்ணைக் காட்டுங்க! ;-)
@நந்தா நன்றிங்க!
@போக்கிரீஸ்! கககபோ!
@சேட்டை! டேன்க் யூ நண்பா!
@சேட்டை! டேன்க் யூ நண்பா!
@சிபி நன்றிங்க!
வெள்ளிக்கிழமையும் அதுவுமா காம கட்டுரை!!அல்லாஹ் இவர்களை மன்னித்துவிடு!!
### இந்தோனேசியாவில் சட்டப்பூர்வமாம்; ###
அது தாய்லாந்து ராசாவே.அதற்காக இந்தோனேசியாவில் இல்லை என்று அர்த்தமில்லை.
நிறையவே இருக்கிறது.ஆனால் சட்டபூர்வமில்லை என்பதே மேட்டர். ###
என்ன பங்கு? நீங்களும் கதை எழுதுற கருமாந்திர கோஷ்டில சேந்துட்டீங்களா?
@கும்மி ;-))) இலக்கியவாதியாகலாம்னு பாத்தா உடமாட்டீங்களே!
// hameed said...
வெள்ளிக்கிழமையும் அதுவுமா காம கட்டுரை!!அல்லாஹ் இவர்களை மன்னித்துவிடு!!//
அல்லாஹ் அதுக்கெல்லாம் கூடவா நேரம் காலம் ஒதுக்கி இருக்காரு!
கதையின் களம் மிக தெளிவாக இருக்கிறது.மனதினுள் எளிதாக காட்சிகள் விரிகின்றன.முதல் முறை எல்லை தாண்டும் இளைஞனின் மனநிலையை நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள்.தொய்வில்லாத ஓட்டம் !!, தொடர்ந்து எழுதுங்கள்.பகிர்ந்ததற்கு நன்றி.. MonaPrabhu
அல்லாஹ் அதுக்கெல்லாம் கூடவா நேரம் காலம் ஒதுக்கி இருக்காரு!/////
.
.
சிலர் தெய்வ நிந்தனை பண்ணியே நரகத்திற்கு போவர!!
கதை நல்லா எழுதி இருக்க தம்பியோவ்!!!
நல்லா ரசிக்கும்படியா இருந்திச்சு.
சரியான பின்நவீனதத்துவ கதைங்க..... தென்--லத்தீன் அமெரிக்கா இருக்கும் காப்ரீயால சாபாடினி போன்ற உலக புகழ் மேதை இலக்கியவாதி கதையை விட மிஞிவிட்டீர். உங்களுக்கு booker பரிசுக்கு சிபாரிசு செய்கிறேன். காமராஜ் அர்ங்கில் குடியும் கும்மாளுமாக பாராட்டு விழா எடுக்க வேண்டியதுதான் பாக்கி.
பி.கு. கதையை உண்மையில் நன்றாக இருந்தது..தொடரவும்.
ஒன்னியும் புரியல..இது கதையா?அடப்பாவுங்களா!!ஏதோ அங்கங்க நாலு வரியா கத்தரிச்சு ஒட்டிட்டீங்கன்னு நெனச்சேன்
என்ன எழவு கதையா இது?ஒரு மண்ணும் புரியல!!
அட்டகாசமா இருந்தது! மிகவும் நேர்த்தியான நடை! This is what an Autofiction ;)
Post a Comment