பட்டாப்பட்டி கோபம் கொண்டாலும் பரவாயில்லை என்று, முதலில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திரு. தங்கபாலு அவர்களுக்கு நன்றியை தெரிவித்து பதிவைத் தொடங்குகின்றோம்.
இம்மாதம் 2 ம் தேதி அன்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் காணமல் போயினர். TN / 10 / MFB / 262 என்ற எண்ணுள்ள விசைப்படகில் சென்ற நால்வர்: விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோர். சில நாட்கள் கழித்து யாழ்ப்பாணம் அருகே இருக்கும் நெடுந்தீவு அருகே விக்டஸின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் சில நாட்கள் கழித்து தொண்டி அருகே இரு உடல்கள் கரை ஒதுங்கின. இந்த உடல்கள் அனைத்திலும் மிகப்பெரும் காயங்கள் இருந்தன.
கடைசியாக, கோட்டைப்பட்டிணம் அருகே கரை ஒதுங்கிய உடலைக் கண்டவர்கள் பதைபதைத்தனர். தலை துண்டிக்கப்பட்டு, ஒரு கை வெட்டப்பட்டு கரை ஒதுங்கிய உடலைக் கண்டு அனைவரும் அரற்றினர். ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்களும் உறவினர்களும் வந்து உடலை அடையாளம் காட்டியபின்பு அங்கேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதற்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இன வெறி பிடித்த சிங்களக் கடற்படை, கடந்த சில மாதங்களாக மிகவும் குரூரமான முறையில் தமிழக மீனவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் ஒரு மீனவரை சுருக்கிட்டுக் கொன்ற கொலைவெறிக் கடற்படை தற்பொழுது கழுத்தைத் துண்டித்துக் கொன்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்ற சோனியாவின் வாக்குறுதி காற்றில் கரையும் முன்னரே, குரூரக் கொலைகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. இதனை வைத்து ஒவ்வொரு அரசியல்வியாதியும் தமது கட்சிக்கு ஏதேனும் ஆதாயம் இருக்குமா என்னும் நோக்கில் பலவித குட்டிக்கரணங்களை அடிக்கத்தொடங்கினர்.
இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்னர் தங்கபாலுவும் தன் பங்குக்கு போராட்டம் என்னும் பெயரில் ஒரு நாடகத்தை நடத்தினார். தன் கட்சியினரின் உள்ளடி வேலைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப இதனை அவர் மேற்கொண்டிருந்தாலும், வசமாக மாட்டிக்கொண்டார். இப்போராட்டத்தை நடத்தியதன் மூலம், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது குடிமக்களை காக்கத் தவறிவிட்டது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு விட்டார்.

இந்தச் சூழலில் மீனவர் சங்கத் தலைவர்கள் நேற்று தங்கபாலுவின் கூற்றை அடிப்படையாக வைத்து தங்களது போராட்டங்களை இன்னும் கூர்மைப்படுத்தினர். சென்னையில், அனைத்திந்திய வானொலி நிலையத்தின் வாயிலருகே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கோரினர். அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி மீனவர் சங்கத் தலைவர்கள் ரூபேஷ், தயாளன், கபடி மாறன் உள்ளிட்ட பலர் வானொலி நிலைய வாயிலில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். எப்பொழுதும் இல்லாத ஆச்சரியமாக சில விஷயங்கள் நடந்தேறின. பெரும்பாலான ஊடகங்கள் இந்த நிகழ்வை படம்பிடித்தன. பொதுவாக மீனவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதாகும். ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டால், சென்னையில் இருக்கும் மீனவர்கள் போராட்டம் செய்வதில்லை என்றும் கூறுவர். ஆனால், உண்மை அப்படியில்லை. இவர்கள் நடத்தும் போராட்டங்களை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன. நேற்று பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்டம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கல்லுளி மங்கண்களான சகோதரர்களின் தொலைக்காட்சியிலும், கலைஞருக்கு சற்றும் தொடர்பே இல்லாத, ஆனால் அவரது இரண்டாவது மனைவியும், மூன்றாவது மனைவியின் மகளும் பங்குதாரர்களாக இருக்கும் தொலைக்காட்சியிலும், வழக்கம்போல் இந்தப் போராட்டம் பற்றிய செய்தி இடம்பெறவில்லை.
தனது குடிமக்களைக் காக்கத் தவறிய மத்திய அரசே பதவி விலகு என்னும் கோரிக்கையோடு இன்னும் முனைப்போடு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் மீனவர்கள். தங்கபாலுவின் கூற்றை அடிப்படையாக வைத்தே இனி வரும் போராட்டங்கள் அமையும் என்று மீனவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் மேலிடம், தானே ஆப்பு அடித்துக் கொண்ட தங்கபாலுவின் ஆப்பை இன்னும் பலமாக அடிக்கும் நிலையில் உள்ளது.
கீறல் விழுந்த ரெக்கார்டைப் போல் சொன்னதையே சொல்லும் வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ், இன்று தனது திருவாய் மலர்ந்து "எந்தச் சூழலிலும் மீனவர்கள் கொல்லப்படக்கூடாது" என்னும் அதே டயலாக்கை 543 வது முறையாக அருளியுள்ளார்.
மீனவர் படுகொலையில் இருக்கும் வேறு சில உள் விவகாரங்களையும் பத்திரிகையாளர், போராளி திரு. TSS மணி அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்.
மீனவர் பிரச்னை தொடர்பான அனைத்து விஷயங்களும் www.savetnfishermEn.org தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. தளத்தோடு தொடர்பிலிருப்போம்; மீனவர்களோடு இணைந்திருப்போம்; படுகொலைகளைத் தடுத்திடுவோம்.
14 comments:
கலைஞருக்கு சற்றும் தொடர்பே இல்லாத, ஆனால் அவரது இரண்டாவது மனைவியும், மூன்றாவது மனைவியின் மகளும் பங்குதாரர்களாக இருக்கும் தொலைக்காட்சியிலும், வழக்கம்போல் இந்தப் போராட்டம் பற்றிய செய்தி இடம்பெறவில்லை.
பட்டா உங்களையே இவரு மிஞ்சிடுவாரு போலிருக்கு.
தன் கட்சியினரின் உள்ளடி வேலைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப இதனை அவர் மேற்கொண்டிருந்தாலும், வசமாக மாட்டிக்கொண்டார். இப்போராட்டத்தை நடத்தியதன் மூலம், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது குடிமக்களை காக்கத் தவறிவிட்டது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு விட்டார்
ப சிதம்பரம் சோனியாவிடம் போய் டீச்சர் இவன் கிள்ளிட்டான்னு வத்தி வச்சாரம். அய்யோ அதுக்கு நான் பொறுப்பல் நம்ம அந்தோணி தான் ஒழுங்கு நடவடிக்கைக்கு பொறுப்பு. இந்த பருப்பை அவரிடம் கொண்டு போய் கொடுத்து சமைக்கச் சொல்லுங்கன்னு சொன்னாகளாம். அந்தோணி அட அடா இது வரைக்கும் நம்ம காதுக்கு தங்கபால் பால் ஊற்றிய செய்தி வரலையே என்க அடுத்த ரவுண்டில் உள்ள குல்லா நபி ஆசாத் கிட்டே போக அவரு ஒரே போடா போட்டு இருக்காரு.
என்ன லேட்டா வர்றீக். ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி ஆச்சே. நொந்து போய் மறுபடியும் பசி தாயம் போட ஆரம்பித்து நொந்து போங்கடா நீங்களும் ( என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு) என்று வந்து விட
அடுத்து வாசன் இதே போல.
ஒருவரைப் பற்றி பிராது கொடுக்கவே டெல்லியில் எத்தனை காவடி எடுத்து எத்தனை வீடுகளில் பிச்ச எடுக்க வேண்டியிருக்கிறது.
இவனுங்க எங்கோ போயி இங்கே நடக்கிற மீனவ படுகொலையை கண்டுக்கப் போறாங்க கும்மி.
பேசாம தங்கபால் மாதிரி கும்மி தட்டிட்டு போக வேண்டியது தான்.
நீங்க வேணா பாருங்க அடுத்து கலைஞர் கைதாவார்.
கனிமொழிக்கு அடுத்து அவர் தானே இந்த பிரச்சனையில் கைதாக வேண்டியவர்.
சரிதானே?
goldmilk is waste
when congress destroy ..at that time only india will grow
"வழக்கம்போல் இந்தப் போராட்டம் பற்றிய செய்தி இடம்பெறவில்லை."
why don't they show these protests in their channels?
VERY NICE!
எழுதிய விதம் மிகப்பிடித்திருக்கிறது.வாழைப்பழ ஊசிச் செருகல் இதுதானோ..வாழ்த்துகள் (தங்கபாலுக்கு அல்ல...)
/கீறல் விழுந்த ரெக்கார்டைப் போல் சொன்னதையே சொல்லும் வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ், இன்று தனது திருவாய் மலர்ந்து "எந்தச் சூழலிலும் மீனவர்கள் கொல்லப்படக்கூடாது" என்னும் அதே டயலாக்கை 543 வது முறையாக அருளியுள்ளார்./
ஆயிரம் தாண்டும் பாருங்கள்.அதாவது இறுதி மீனவன் கொல்லப்படும் வரை
எழுதிய விதம் மிகப்பிடித்திருக்கிறது.வாழைப்பழ ஊசிச் செருகல் இதுதானோ..வாழ்த்துகள் (தங்கபாலுக்கு அல்ல...)
உமா கிருஷ்ணமூர்த்தி!உங்கள் பெயரை டைம்ஸ் விவாதத்தில் பார்த்ததாக நினைவு.நீங்களா?
"goldmilk is waste "
GoldMilk ..ha ha ha ..very good translation !
ஏண்ணே.. எங்கள் தங்கத்தலைவன்.. சரித்திர நாயகன்.. முடி துறந்த மன்னரோட.....
கலர் போட்டோ கிடைக்கலையாண்ணே.!!!
ஹி..ஹி
http://puratchikkaaran.blogspot.com/2011/04/blog-post_20.html
//ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டால், சென்னையில் இருக்கும் மீனவர்கள் போராட்டம் செய்வதில்லை என்றும் கூறுவர். ஆனால், உண்மை அப்படியில்லை. இவர்கள் நடத்தும் போராட்டங்களை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன //
எனது நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது தோழர் ...
//தனது குடிமக்களைக் காக்கத் தவறிய மத்திய அரசே பதவி விலகு என்னும் கோரிக்கையோடு இன்னும் முனைப்போடு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் மீனவர்கள். //
வலையில் மட்டுமின்றி நேரிடையாகவும் நாம் நமது குரலை மீனவ சகோதரர்களோடு பதிய வேண்டும்.
//அதே டயலாக்கை 543 வது முறையாக அருளியுள்ளார் //
உலர்ந்த தமிழர்களே ... அணி திரள்வீர் ... எகிப்தில் மட்டும் தான் அது நடக்க வேண்டுமென அவசியமில்லை ...
Post a Comment