நேரம் : மாலை 5 மணி
இடம்: நந்தனம் சிக்னல் அருகில்
பச்சை சிக்னலுக்காக காத்திருந்த வாகனங்களுக்கு இடையில் நமது நண்பர் தேவ் இன்னொரு நண்பரோடு தனது பைக்கில் காத்திருந்தார். அருகில் காரில் அமர்ந்திருந்த ஒரு குடும்பத்தினர் இவர்கள் கையில் இருந்த பதாகையைப் படித்து சற்று குழப்பமாக இவர்களை ஏறிட்டனர். அவர்களிடம் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்னும் சிறிது நேரத்தில் மெரினாவில் நடைபெறும் நிகழ்வு பற்றியும், தங்களுக்கு விருப்பமிருப்பின் கலந்து கொள்ளுங்கள் என்றொரு கோரிக்கையும் நமது நண்பர்கள் வைத்தனர். நிச்சயம் வருகின்றோம் என்று கூறிய அந்தக் குடும்பத்தினர் மெரினாவிற்கு வந்து நிகழ்வில் கலந்து கொண்டனர். முதலில் அவர்களை திரும்பி பார்க்க வைத்த அந்தப் பதாகையில் இருந்த வாக்கியங்கள்
I AM ANNA HAZARE

ஜன் லோக்பால் சட்ட முன்வரைவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரது கையிலும் இது போன்ற பதாகைகளே இருந்தன. அங்கு இருந்த ஒவ்வொருவரும் தம்மை அன்னா ஹஸாரே என்றே உருவகித்துக்கொண்டனர். நாம் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது நேற்று (08/04/2011).
நேற்று காலையில் இருந்து தக்கர் பாபா வித்யாலாயா பள்ளியில் இருந்த ஆர்வலர்கள் பல்வேறு எதிர்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்தனர். காலை அமைதியாக அமர்ந்திருந்த ஆர்வலர்களிடம் வந்த காவல்துறையினர், அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். அனுமதி கோரியபோது மறுத்து விட்டீர்கள்; அதனால் வேறு வழியின்றி அனுமதியின்றி கூட்டம் நடத்துகிறோம் என்று ஆர்வலர்கள் கூறினர். இது சட்டத்திற்கு புறம்பானது; நாங்கள் உங்களை கைது செய்கின்றோம் என்றனர் காவல் துறையினர். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; நாங்கள் எங்கள் கடமையை செய்கின்றோம்; கைதாவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று கூறிய ஆர்வலர்கள் தாமே சென்று காவல் துறை கொண்டு வந்திருந்த வாகனங்களில் ஏறி அமர்ந்தனர்.
அங்கிருந்த ஒரு கல்யாண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆர்வலர்கள் அங்கும் அமைதியாக அமர்ந்திருந்தனர். இடையிடையே சில கோஷங்களையும் எழுப்பினர். 15 நிமிடங்கள் கழித்து காவல் துறையினரே மீண்டும் அவர்களை அழைத்து வந்து அதே பள்ளியில் விட்டுச் சென்றனர். அமைதி வழியில் தமது ஆதரவை தெரிவித்த ஆர்வலர்கள் கைதுக்கு அஞ்சவில்லை என்பதை இச்செயல் உரக்க வெளிப்படுத்தியது.
மாலையில் மெரினாவில் கூடுவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் தடை மீறிதான் நாம் அங்கு செல்கின்றோம். கைதும் செய்யப்படலாம். எனவே அதற்கு தயாராக இருப்பவர்கள் மெரினாவிற்கு வாருங்கள் என்று மாலையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கிருந்த அனைவரும் கைதிற்கு தயார் என்று ஒருமித்து குரல் எழுப்பினர்.
அங்கிருந்த கிளம்பி மெரீனா சென்று சேர்ந்த போது பெரும் போலீஸ் பட்டாளம் அங்கு காத்திருந்தது. ஆனால், வந்திருந்த ஆர்வலர்கள் யாரிடமும் அச்சமில்லை. காந்தி சிலை அருகே ஒன்று கூடிய ஆர்வலர்கள் அச்சமில்லை அச்சமில்லை என்று உரக்கக் குரல் எழுப்பினர். ஊழலுக்கு எதிராகவும், போராட்டத்தை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வந்திருந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தினர். காந்தியின் உதவியாளர் கல்யாணம் வந்து சிறு உரையாற்றினார். அங்கிருந்த மாணவர்கள் ஊழல் பற்றிய ஒரு சிறு நாடகம் நடத்தினர். மெரினாவிற்கு வந்திருந்த வேறு பலரும் இவற்றைக் கண்டு அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டமும் குரலும் உயரத் தொடங்கியது. போலீசாருக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இரவு 8 மணிக்கு கலைந்து செல்லும் முன், அரசு அண்ணா ஹஸாரேயின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட செய்தி கிடைத்தது. அதனை கூறியதும், அனைவரும் மகிழ்வுற்றனர்.
இதே நேரத்தில் கோவையில் காவல் துறை அனுமதியோடு வ.ஊ.சி. பூங்காவில் பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி தமது ஆதரவை தெரிவித்தனர். அங்கிருந்த ஆர்வலர்கள் அனைவரும் மெழுவர்த்தி ஏந்தியிருந்தனர்.
------------------------------------------------------------------------------
ஊழலற்ற இந்தியா என்னும் நெடும்பயணத்தில் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி இது. சில நண்பர்கள் இப்போராட்டத்தை பற்றியும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை பற்றியும் சில மாற்றுக் கருத்துகள் கொண்டுள்ளனர். ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது; சிறுகச் சிறுகதான் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு நடைபெறுபவற்றையும், மாற்றத்தையும் நாம் ஆதரிக்கின்றோம். இந்த முதல் அடி அடுத்தடுத்த அடிகளுக்கு ஊக்கமாய் அமையும். ஒன்றுபடுவோம்; தொடர்ந்து பயணிப்போம்.

14 comments:
இன்னும் நம்பிக்கை விட்டுப் போகவில்லை.
பகிர்வுக்கு நன்றி.
//சில நண்பர்கள் இப்போராட்டத்தை பற்றியும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை பற்றியும் சில மாற்றுக் கருத்துகள் கொண்டுள்ளனர்.//
குறுகிய காலத்தில் எழும்பிய ஒருமித்த குரல்களின் முன்பு மாற்றுக்கருத்துக்கள் எதிரொலிக்காமல் போய் விடும்.
அண்ணா ஹசாரே அனைத்து மாநிலங்களுக்கும் பயணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
ஆமா!ரகசியம் தனி மடல் ஒன்று அனுப்பினேனே சில தினங்களுக்கு முன்பு... கிடைத்ததா?
ஜனநாயகம் தழைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
எல்லோரும் ஒன்றிணைவோம்..
உடல் ஆரோக்கியத்தின் முன்னேற்றமா? நலமா?
ஒரே நேரத்தில் சென்னையிலும் கோவையிலும் எப்படி பங்கு கலந்துகிட்டிங்க!
மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றியாக இதை சொல்லலாம், இனி அநீதிக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்!
நான்லாம் ஒரு லக்னத்துல ஒன்பது கிரகங்களும் அமையப் பெற்ற ஒருத்தன் பங்கு!
அட் எ டைம்ல 5 சிட்டில கூட இருப்பேன்
//அண்ணா ஹஸரோ இந்திய பாடப்புத்தகத்தில் இடம் பெறவேண்டிய பெரிய மனிதர்.//
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை.....
//சில நண்பர்கள் இப்போராட்டத்தை பற்றியும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை பற்றியும் சில மாற்றுக் கருத்துகள் கொண்டுள்ளனர்.//
மக்களின் இயல்பான ஆதரவே, எத்தகையப் போராட்டதிற்கும் ஆதாரம், என்பது இங்கே நிரூபிக்கப் பட்டுள்ளது! மாற்றுக் கருத்துப் போராளிகள் தெளிய வேண்டிய காலமிது!
போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html
சட்டம் நிறைவேறப் போகிறதோ இல்லையோ.. மக்கள் போராத்திற்குப் பழக்கப் பட்டே தீர வேண்டும். எல்லா புரட்சிகளும் ரத்தத்தில் தான் எழுதப் பட்டு இருக்கின்றன இதுவரையில். இந்தப் போராட்டம் ஆளும் கட்சிக்கு மக்கள் சக்தி என்னவென்று காட்ட ஒரு ஆராய்ச்சிக் களமாய் அமைந்ததில் பேரு மகிழ்ச்சி.. ஊழல் வாதிகள் இனியேனும் கைகளைக் கொஞ்சம் சுத்தமாய் வைத்திருக்கட்டும். இந்தப் புரட்சித் தீயை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆமா.. இது என்ன..மஹிந்தாவைப் பத்தி புகழ்ந்து தள்ளுகிறார்கள் அவர்கள் ஊர்க காரர்கள்..??http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html
அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html
(இது TIMES கணிப்பு அல்ல)
Post a Comment