இரண்டு நாட்களாக எனக்குத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த SMS களில் இருந்து ஒன்றினை மட்டும் இங்கு இடுகின்றேன்.

Japan was hit by tsunami coz of these reasons.
1. Japan was first country to Ban Islamic Hijaab.
2. First country to stop teaching of Holy Quran.
3. First country to tear pages of Quran.
Japan is totally Anti-Muslim.
It is Allah's AZAAB on special Islamic day "FRIDAY".
Pls send this message & Lesson to whole world... pls dnt stop dis is abt our islam.
ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி மட்டுமின்றி அணு உலையும் வெடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கதிரியக்க வெளியேற்றத்தால் பல நகரங்களில் இருக்கும் மக்களும் கூட ஆபத்துக்கு உட்படுவார்களோ என்று பலரும் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், ஜப்பானிய சுனாமியை அல்லாவின் தண்டனை என்று கூறி மகிழ்ச்சியடையும் இவர்கள் மனிதர்கள்தானா?
ஏதேனும் சிறு இழப்பு ஏற்பட்டாலே, வருந்துவது மனித இயல்பு. ஒரு நாடே ஸ்தம்பித்துப்போய் இருக்கும் சூழலில், அதைக் கண்டு மகிழ்வுறும் இவர்கள் பின்பற்றும் மார்க்கம் அமைதி மார்க்கமாம். கொடுமைகளைக் கண்டு இன்புறும் சாடிஸ்டுகள், தாங்கள் அமைதியை விரும்புவதாகக் கூறிக் கொள்வது நகைமுரண். யாருடனாவது பேசும்போது வாய் கிழிய 'சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்' என்று பேசும் இவர்கள், ஒரு பேரழிவைப் பார்த்து கொக்கரிப்பது மிகவும் கீழ்த்தரமாய் இருக்கின்றது.
இவ்வளவு முட்டாள்தனமாய் இருப்பதால் இவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்களா? இல்லை முஸ்லிம்களாக இருப்பதால்தான் இப்படி முட்டாள்தனமாய் சிந்திக்கிறார்களா? எல்லாம் காலக் கொடுமை.
டிஸ்கி: என்னுடைய தற்போதைய உடல்நலன் பொருட்டு ஓய்வில் இருக்க அறிவுறுத்திய நண்பர்கள், இந்த ஒரு பதிவுக்கு மட்டும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இந்தக் குறுஞ்செய்திகளை பார்த்து பொறுமையாய் இருக்க முடியவில்லை.
189 comments:
காறியுமிழ்வோம்
Cruel Sadistssss
ஒரு சிலர் அப்படித்தான்...அதனால் அந்த சமூகமே இப்படி பேசபடுகிறது..ஆனால் நான் பார்த்தவரையில் பெரும்பாலான நபர்கள் இப்படி பிற்போக்குதனமாகத்தான் உள்ளனர்.
மொத்தத்தையும் குற்றம் சொல்லவில்லை; இதை ஃபார்வர்ட் செய்யத் தோணுகிறது என்றால் எப்பேர்ப்பட்ட கற்பிதத்தில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பாருங்கள். எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை
மொத்தத்தையும் குற்றம் சொல்லவில்லை; இதை ஃபார்வர்ட் செய்யத் தோணுகிறது என்றால் எப்பேர்ப்பட்ட கற்பிதத்தில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பாருங்கள். எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை
//பல நகரங்களில் இருக்கும் மக்களும் கூட ஆபத்துக்கு உட்படுவார்களோ என்று பலரும் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், ஜப்பானிய சுனாமியை அல்லாவின் தண்டனை என்று கூறி மகிழ்ச்சியடையும் இவர்கள் மனிதர்கள்தானா//
இந்த மூடர்களுக்கும் கறிக்கு வெட்ட இருட்டுக் கொட்டடியில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கும் என்ன வித்யாசம்
//அதைக் கண்டு மகிழ்வுறும் இவர்கள் பின்பற்றும் மார்க்கம் அமைதி மார்க்கமாம். //
இஸ்லாமிய நாடுகளில் நடந்தால் அது இறைக்கு எதிராக தீய சக்திகளால் தொடுக்கப் பட்ட போர்! அடுத்த நாட்டில் நடந்தா அல்லாவின் ஆணை!
வெளங்கிடும்
எல்லாவற்றுக்கும் அல்லாவை நாடி மார்க்கத்துக்குள் ஊறித்திளைத்தால், இப்படித்தான் முட்டாள்தனமாகவே உளறிக் கொட்ட வேண்டியிருக்கும்.
ஆங்கிலத்தில் குறிப்பிட்டவை ஒரு குறுகிய அளவான மனோபாவம் கொண்டவர்கள் என நினைக்கிறேன்.மொத்த இஸ்லாமியத்துக்கும் இதில் தொடர்பு படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.எந்த மதத்திற்கும் இப்படி மூடநம்பிக்கை கொண்டவர்கள் சிலர் இருக்கவே செய்வார்கள்.
இந்த பூகம்பம் சுனாமியை உருவாக்கியது அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் என்றும் கொஞ்ச நாளில் கூறுவார்கள். என்னுடைய முஸ்லீம் நண்பன் ஒருவன் சொன்னது, சார்ஸ் வியாதி, இந்தோனேசிய பூகம்பம் உருவாக்கியது அமெரிக்கா என்று, ஆனால் இவ்வளவு கொடூரமாகவும் சிந்திக்கமுடியும் என்பது ஆச்சர்யமாக உள்ளது.
//மொத்த இஸ்லாமியத்துக்கும் இதில் தொடர்பு படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை//
என் உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் இதே sms forward செய்யப்பட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் பேச இயலாமல் இருக்கின்றேன். எனக்கு உடல்நிலை தேறியதும் நிச்சயம் எனக்கு sms அனுப்பிய அனைவரையும் கேள்வி கேட்கத்தான் உள்ளேன். அவ்வளவு ஆத்திரம் வருகின்றது.
//என்னுடைய முஸ்லீம் நண்பன் ஒருவன் சொன்னது, சார்ஸ் வியாதி, இந்தோனேசிய பூகம்பம் உருவாக்கியது அமெரிக்கா என்று, ஆனால் இவ்வளவு கொடூரமாகவும் சிந்திக்கமுடியும் என்பது ஆச்சர்யமாக உள்ளது. //
பெயர்தான் அமைதி மார்க்கம். கொஞ்சம் கூட மனித நேயம், கருணை, இத்யாதி எதுவும் கிடையாது.
தொழில்நுட்பம்,பரந்த தொலைக்காட்சியில் முக்கியமாக அல்ஜசிராவின் பங்கு மத்திய கிழக்கு நாடுகளை கேள்விகள் கேட்கவும்,போராடும் குணத்தையும் உருவாக்கியதோடு பொதுவான உலக அறிவையும்,மேற்கத்திய உடைகள் மற்றும் சினிமா,விளையாட்டு,பொது அறிவையும் வளர்க்கிறதென்றே நினைக்கிறேன்.
ஜனநாயகம்,குரல் கொடுக்கும் தன்மை போன்றவற்றில் நாம் முன் நோக்கி நகர்ந்தாலும்,பொருளாதார பங்கீடுகள் இவர்களை நம்மை விட ஒரு மடங்கு முன்னோக்கியே நகர்த்துகிறது என்பேன்.
என் உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் இதே sms forward செய்யப்பட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் பேச இயலாமல் இருக்கின்றேன். எனக்கு உடல்நிலை தேறியதும் நிச்சயம் எனக்கு sms அனுப்பிய அனைவரையும் கேள்வி கேட்கத்தான் உள்ளேன். அவ்வளவு ஆத்திரம் வருகின்றது.
//
100 ரூபாய்க்கு ஒரு ஸ்டாக் வாங்கி 1 காசுக்கு இறங்கின பின்னரும், இன்னும் நம்பிக்கை இருக்குமல்லவா? அதுபோல்தான் மதம்,இந்த மதங்களை அழிக்கமுடியாது, நீர்த்துப்போகச்செய்தல் செய்தாலே போதுமானது.
//பொருளாதார பங்கீடுகள் இவர்களை நம்மை விட ஒரு மடங்கு முன்னோக்கியே நகர்த்துகிறது என்பேன்.//
சக மனிதன் மீது அன்பு செலுத்தத் தடை விதிக்கும் சமூகம் பொருளாதாரத்தில் மட்டும் முன்னேறி என்ன கிழிக்கப்போகின்றது?
(மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணே. என்னுடைய ஆத்திரத்தில் சில வார்த்தைகள் தடித்தவையாக வந்துள்ளன. )
//அதுபோல்தான் மதம்,இந்த மதங்களை அழிக்கமுடியாது, நீர்த்துப்போகச்செய்தல் செய்தாலே போதுமானது.//
நீர்த்துப் போகச் செய்தல், அழித்தல் எல்லாம் கடைசியாக இருக்கட்டும். மனிதத்தன்மையே அற்று இருக்கின்றனரே, அதுதான் நெருடலாக இருக்கின்றது.
இஸ்லாம் என்ற மதம் தோன்ற முன்னரே !!! சுனாமியும் அழிவும் மனித குலத்துக்கு காலம் தொட்டு வருவன.. ஆனால் அணு உலை வெளியேற்றம் மனித அறிவியல் வளர்ச்சியின் பொறுப்பற்றத் தனத்தால் வந்தவை...
சில இஸ்லாமியர்கள் மட்டுமிலை பல்வேறு மதவாதிகள் ஆளாளுக்கு இப்படி ஆயிரம் காரணங்களைச் சொல்வார்கள் !!! அதற்காக அந்த மதங்களை பின்பற்றுவோர் அனைவரும் அப்படித் தான் என இட்டுக்கட்டுவது முட்டாள் தனம் ...
இந்த இக்கட்டான சூழலில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், அன்பாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும்.
ஒரு சாரார் மதத்தினை வைத்துக் கொண்டு கடவுளின் பெயரால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதும், மறுசாரார் மறுப்பேன் பேர்வழி என்று குரைப்பதும் முட்டாள்தனமான செயல்கள் !!! ஜப்பான் மக்களுக்கு எப்படி நம்மால் முடிந்த வரை உதவியாக இருக்கப் போகிறோம் என்று சிந்திக்கலாம் ..
//ஒரு சாரார் மதத்தினை வைத்துக் கொண்டு கடவுளின் பெயரால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதும், மறுசாரார் மறுப்பேன் பேர்வழி என்று குரைப்பதும் முட்டாள்தனமான செயல்கள் !!!//
திருவாளர் இக்பால் செல்வம் அவர்களே குரைப்பது யார் என்று தெரிவித்தீர்களேயானால் நலம் பயக்கும்
//எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை//
@ ராஜன் எப்படி விகிதாச்சார் அடிப்படை உங்களுக்கு மட்டும் தெரிந்தது... கணக்கு எடுத்தீர்களோ !!! அனைத்து மதங்களிலும், சமூகங்களிலும் நல்ல மனிதர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு !!!
விகிதாச்சார அடிப்படையில் இஸ்லாம் ரொம்ப மோசம், கிருத்துவம் மோசம், இந்துமதம் கொஞ்சம் பரவால என்று சொல்வது எல்லாம் முட்டாள் தனமான மனோபாவம் ...
//ஒரு சாரார் மதத்தினை வைத்துக் கொண்டு கடவுளின் பெயரால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதும், மறுசாரார் மறுப்பேன் பேர்வழி என்று குரைப்பதும் முட்டாள்தனமான செயல்கள் !!!//
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுபவர்களை கண்டிப்பது என்பது குரைப்பதாக உங்கள் பார்வைக்கு பட்டால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் பதிவை படித்து இந்த sms அனுப்பிய ஓரிருவராவது, மதத்தை விட மனிதம் உயர்ந்தது என்று உணர்ந்தால் போதுமானது.
//அனைத்து மதங்களிலும், சமூகங்களிலும் நல்ல மனிதர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு !!! //
இந்த sms அனுப்பியவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களை ஆதரிக்கின்றீர்களா?
//@ ராஜன் எப்படி விகிதாச்சார் அடிப்படை உங்களுக்கு மட்டும் தெரிந்தது... கணக்கு எடுத்தீர்களோ !!! அனைத்து மதங்களிலும், சமூகங்களிலும் நல்ல மனிதர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு !!!
//
நீங்கள் எங்கு கணக்கெடுத்தீர்கள் சோதர. இந்த அபரிமிதமான/யாருக்குமே தெரியாத/அற்புத கண்டுபிடிப்பை!
//@ ராஜன் எப்படி விகிதாச்சார் அடிப்படை உங்களுக்கு மட்டும் தெரிந்தது... கணக்கு எடுத்தீர்களோ !!! அனைத்து மதங்களிலும், சமூகங்களிலும் நல்ல மனிதர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு !!!
//
நீங்கள் எங்கு கணக்கெடுத்தீர்கள் சோதர. இந்த அபரிமிதமான/யாருக்குமே தெரியாத/அற்புத கண்டுபிடிப்பை!
இஸ்லாமியர்கள், இந்துக்களில், கிருத்தவர்களில், பௌத்தர்களில், ஏன் யூதர்களில் கூட மடமனிதர்களும், ஜீவகாருண்யம் இல்லாதவர்கள் இருக்கின்றார்கள் . அதற்காக அச்சமூகத்தில் இருப்பவர் அனைவரும் மோசமானவர்கள் எனக் கூறுவது அறிவிலித்தனமாகும் ...
@ இக்பால் செல்வன்
இந்த sms அனுப்பியவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?
//இஸ்லாமியர்கள், இந்துக்களில், கிருத்தவர்களில், பௌத்தர்களில், ஏன் யூதர்களில் கூட மடமனிதர்களும், ஜீவகாருண்யம் இல்லாதவர்கள் இருக்கின்றார்கள் . அதற்காக அச்சமூகத்தில் இருப்பவர் அனைவரும் மோசமானவர்கள் எனக் கூறுவது அறிவிலித்தனமாகும் ..//
மொன்னையான சால்ஜாப்புகள் தேவையில்லை. இதுபோன்ற பரப்புரைகளை எதிர்த்தே பதிவிட்டிருக்கிறோம். இப்பரப்புரை குறித்த விமர்சனத்தை முன்வையுங்கள், அதை விடுத்து அவர்கள் செய்யும் பிரியாணியை ரசியுங்கள்; கொலையை ஏன் பெரிது படுத்துகிறீர்கள் என்பது என்ன விலித்தனம்? விவிலியத்தனமா?
//நீங்கள் எங்கு கணக்கெடுத்தீர்கள் சோதர. இந்த அபரிமிதமான/யாருக்குமே தெரியாத/அற்புத கண்டுபிடிப்பை!//
என்ன சொல்கிறீர்கள் ராஜன் - அனைத்து மத மக்களிலும் நல்லவரும் உண்டு, கெட்டவரும் உண்டு ... இதற்கு கணக்கு எடுக்கத் தேவை இல்லை.. இஸ்லாமியர்களையு நான் சந்தித்துள்ளேன், கிருத்துவர்களையும் சந்தித்துள்ளேன் .. சீனத் தோழர்களும் எனக்கு உண்டு, வட இந்திய தோழர்களும் உண்டு .. நல்லவர் கெட்டவர் என்பது தனிமனித சார்ந்தவை. இந்த மதத்தில் நல்லவர் தொகை அதிகம், இந்த நாட்டில் கெட்டவர் தொகை அதிகம் என்று கூறுவது எல்லாம் முட்டாள் தனம் ராஜன் ...
//இந்த sms அனுப்பியவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?//
@ கும்மி - இந்த SMS அனுப்பியவர்கள் மனித தன்மையற்ற ஏன் மனித இனத்திலேயே சேர்க்கத் தகாத ஜந்துக்கள் ... இதுப் போன்ற பரப்புரைகளை சட்ட ரீதியாக இந்தியாவில் எதிர்கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை . அப்படி வாய்ப்பு இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதும் நல்லது ...
@இக்பால் // எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை//
எனக்குத் தெரிந்து என்று சொல்லி இருக்கிறேனல்லவா, பிறகென்ன. நான் சமூக ஆய்வியலில் பீஎச் டி என்று எங்கேனும் சொல்லி இருக்கிறேனா?
@இக்பால் // எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை//
எனக்குத் தெரிந்து என்று சொல்லி இருக்கிறேனல்லவா, பிறகென்ன. நான் சமூக ஆய்வியலில் பீஎச் டி என்று எங்கேனும் சொல்லி இருக்கிறேனா?
@ ராஜன் கொஞ்சம் நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள்... மொன்னைத் தனம் யாரிடம் மேலோங்கி இருக்கிறது என்பது படிப்பவர்களுக்குத் தெரியும் ... அதே போல பிரியாணி செய்ய சொல்வதால் நான் ஒரு முஸ்லிமோ, கிருத்துவனோ இல்லை. இந்திய அரசியல் சாசனத்தின் படி இந்துவாக கருதலாம். வாழ்வியல் அடிப்படையில் மதங்களை தகர்த்து எறிந்தவன் ... மனிதனை மதங்களால் பார்க்கத் தெரியாதவன், மனிதனை மனிதனாக பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் ... அதே போல இப்படி பேசியிருக்கோம், அப்படி பேசியிருக்கோம் என்று சொல்வது எல்லாம் அகங்கார வெளிப்பாடுகள் ... இப்படி விமர்சிப்பது நல்லது, ஆனால் விமர்சனங்களால் நீங்கள் சாதித்தது ஒன்றுமே இருக்காது ! சமூகத்துக்குப் பயன்படும் மாதிரி மேலும் வேறு எதாவது சாதித்து காட்டுங்கள் உங்கள் காலைத் தொட்டு நமஸ்கரிக்கவும் தயார் அய்யா !!!
//நல்லவர் கெட்டவர் என்பது தனிமனித சார்ந்தவை. இந்த மதத்தில் நல்லவர் தொகை அதிகம், இந்த நாட்டில் கெட்டவர் தொகை அதிகம் என்று கூறுவது எல்லாம் முட்டாள் தனம் ராஜன் ...//
என்னதான் சொல்லவருகிறீர்கள் இக்பால்!
மதத்தின் பெயரால் முன்னெடுக்கப் படும் ஒரு முட்டாள்தனத்தை சாடியிருக்கிறார். மதத்தின்பெயரால் ஒரு பேரழிவைப் பற்றி இப்படி மோசமான பரப்புரைகள் வேறெந்த மதத்தில் (இந்தியாவில்)செய்யப் பட்டு இருக்கின்றன என்று சொன்னீர்களானால் (எனக்கு அவ்வளவாக தெரியவில்லை உம் மொழியில் அறிவிலி) இங்கு பதிவிடுவோம் எம் போன்ற அறிவிலிகள் அறியும் பொருட்டு.
//@ ராஜன் கொஞ்சம் நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள்... //
கற்றுக் கொள்கிறேன்
//மொன்னைத் தனம் யாரிடம் மேலோங்கி இருக்கிறது என்பது படிப்பவர்களுக்குத் தெரியும் .//
தெரியும்
//அதே போல பிரியாணி செய்ய சொல்வதால் நான் ஒரு முஸ்லிமோ, கிருத்துவனோ இல்லை//
இல்லை
//எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை//
@ ராஜன் இதைத் தான் மாற்ற சொல்கிறேன் .. உங்களுக்குத் தெரிந்தது சரியாக தெரியாமல் இருக்கிறது. உங்கள் அனுபவத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் மதவெறியர்களாக தெரிந்துள்ளார்கள். அதனால் அது உண்மையாகி விடுமா என்பது தான் எனது வாதம் !!!
இப்படியான எஸ் எம் எஸ் பரப்புரைகள் தவறென்று நீங்களும் சொல்லிவிட்டீர்களல்லவா அப்புறம் என்ன? நாங்களும் அதை தானே சொல்கிறோம்! #அய்யோ முடிலடா சாமீ!
மதத்தின் பெயரால் செய்யப்படும் முட்டாள்தனங்களை வன்மையாக கண்டிக்கப்படுபவை.. அதனை எதிர்ப்பது நல்லது .. அதற்கு எனது பரிபூரண ஆதரவு உண்டு !
ஆனால் எந்த --ச்சார அடிப்படையிலும் அம்மதத்தில் இருக்கும் அனைவரும் முட்டாள்கள் எனக் கூறுவதும், அந்த மதங்களில் இருக்கும் அனைத்தும் முட்டாள் தனம் எனக் கூறுவது சரியில்லை ...
//உங்களுக்குத் தெரிந்தது சரியாக தெரியாமல் இருக்கிறது. உங்கள் அனுபவத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் மதவெறியர்களாக தெரிந்துள்ளார்கள். அதனால் அது உண்மையாகி விடுமா என்பது தான் எனது வாதம்//
வாதம் செய்வதில் கேள்வி மட்டும் தான் கேட்பீர்களா? சரி. வேறு உதாரணங்களைக் கொடுங்கள் என்று கேட்கிறேன்
//உங்களுக்குத் தெரிந்தது சரியாக தெரியாமல் இருக்கிறது. உங்கள் அனுபவத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் மதவெறியர்களாக தெரிந்துள்ளார்கள். அதனால் அது உண்மையாகி விடுமா என்பது தான் எனது வாதம்//
வாதம் செய்வதில் கேள்வி மட்டும் தான் கேட்பீர்களா? சரி. வேறு உதாரணங்களைக் கொடுங்கள் என்று கேட்கிறேன்
//ஆனால் எந்த --ச்சார அடிப்படையிலும் அம்மதத்தில் இருக்கும் அனைவரும் முட்டாள்கள் எனக் கூறுவதும், அந்த மதங்களில் இருக்கும் அனைத்தும் முட்டாள் தனம் எனக் கூறுவது சரியில்லை ...//
முழுவதும் என்று உங்கள் சுய சொறிதலுக்காக சேர்த்துக் கொள்வது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்
//இவ்வளவு முட்டாள்தனமாய் இருப்பதால் இவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்களா? இல்லை முஸ்லிம்களாக இருப்பதால்தான் இப்படி முட்டாள்தனமாய் சிந்திக்கிறார்களா? எல்லாம் காலக் கொடுமை. //
@ ராஜன் மதங்களின் பெயரால் முட்டாள்தனம் செய்வது கண்டிக்கப்பட வேண்டியவை ..
ஆனால் தங்களின் பதிவில் இந்த வார்த்தகள் எந்த வகையறா // இல்லை முஸ்லிம்களாக இருப்பதால்தான் இப்படி முட்டாள்தனமாய் சிந்திக்கிறார்களா? எல்லாம் காலக் கொடுமை. //
முஸ்லிம்கள் அனைவரும் இப்படிச் சிந்தித்து இருந்தால் இந்த உலகில் நீங்களும் நானும் உயிரோடு இருந்திருக்கவே முடியாது ...
//வாதம் செய்வதில் கேள்வி மட்டும் தான் கேட்பீர்களா? சரி. வேறு உதாரணங்களைக் கொடுங்கள் என்று கேட்கிறேன்//
கேள்வியா ? பதிவே கேள்வியா இருக்கும் போது வாதமும் கேள்வியா அமைவதில் ஆச்சர்யம் இல்லை சார்.
//முஸ்லிம்கள் அனைவரும் இப்படிச் சிந்தித்து இருந்தால் இந்த உலகில் நீங்களும் நானும் உயிரோடு இருந்திருக்கவே முடியாது ...//
இதன் மூலம் தாங்கள் ஆழிசூழ் உலகிற்கு உணர்த்த வருவது?
//முழுவதும் என்று உங்கள் சுய சொறிதலுக்காக சேர்த்துக் கொள்வது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்//
சந்தர்ப்பவாதிகள் நானா? கொஞ்சம் சிந்தித்துப் பாரங்கள். விமர்சிக்கிறோம் என்ற பெயரில் சமூகக் களப்பணி ஆற்றுவதாக தம்பட்டம் அடிப்பது எந்தச் சொறிதல்களுக்காக
உங்கள் பின்னூட்டத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் என்று சொல்லி யிருப்பது எங்கிருந்து என நிறுவுங்கள். அல்லாமல் சும்மானாச்சுக்கும் உங்க சந்தோசத்துக்காக போட்டுட்டீங்களான்னாச்சும் சொல்லுங்க!
//விமர்சிக்கிறோம் என்ற பெயரில் சமூகக் களப்பணி ஆற்றுவதாக தம்பட்டம் அடிப்பது எந்தச் சொறிதல்களுக்காக//
ஆக, உங்களைப் பொறுத்தமட்டில் வெறும் வெற்றுப் பார்வையாளனாக உலகைப் பார்த்துக் கொண்டிருப்பதே சமூகப் பணி.
உலகில் அனைத்திலும் நல்லதும் கெட்டதும் இருக்கும் என்று ஒரு வாரமாக வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கருத்தொருமிக்காது முரண்படும் பொருள்களுக்கும் அதே நிலைதான் என்பதை அறிகிறீர்களா?
இப்படியான SMS அனுப்புகிறவர்கள் கொடூரமான காட்டுமிராண்டிகள் என்பதில் சந்தேகமேயில்லை.
அன்பு இக்பால்!
இப்படி ஒரு பரப்புரையை வன்மம் தெறிக்க அனைவருக்கும் பரப்பும் மனநிலைக்கு மதம் சார்ந்த கற்பிதங்களே காரணம் என்பது என் வாதம்; இதில் முஸ்லீமாக பிறந்த அனைவரையும் நான் இழுக்கிறேன் என்பது உங்களது முன் அவதானிப்புகளால் வந்த செருகல்கள்.
@ ராஜன் - தங்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் வன்முறையாளர்களாக சித்தரிக்க வேண்டிய காரணம் என்ன சார் !!!
தாம் சார்ந்த பிரிவைச் சாராதவர்கள் என்பதாலா ... இல்லை தங்களின் கருத்துக்களுக்கு முரணாக இருப்பவர்கள் என்பதலா?
உலகம் பன்முகத்தன்மை வாய்ந்தது.. அது ஒரே மாதிரியாக மாற்ற முயல்வோம் என்று நீங்கள் சொன்னாலும், இஸ்லாமியர்கள் சொன்னாலும் இரண்டையும் கண்டிக்கத் தயார்.. இரண்டும் பாசிசமே ...
பன்முகத்தன்மையை ஆதரிக்க வேண்டும் என்பதே எனது கருதுக் கோள் ...
//வன்மம் தெறிக்க அனைவருக்கும் பரப்பும் மனநிலைக்கு மதம் சார்ந்த கற்பிதங்களே காரணம் என்பது என் வாதம்//
@ ராஜன் வன்மம் தெறிக்கும் பரப்புரைக்கு மதம் சார்ந்த கற்பிதங்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது எனது வாதம், மதங்களை ஒழித்துவிட்டு, மதம் என்ற ஒன்றை கற்பிக்காமல் எத்தனை தலைமுறைக் கடந்து ஒரு சமூகத்தை உருவாக்கினாலும், வன்மமும் - பிரிவுகளும் வேறு வகையில் உருவாகும் ... மொழி, நாடு, வர்க்கம், சாதி, கலாச்சாரம், என போய்க்கொண்டே இருக்கலாம்
மனித வன்மத்துக்கு மதம் என்பது ஒரு சாக்கு அவ்வளவே !!!
இப்படி ஒரு பரப்ரையை ஒரு இஸ்லாமியன் தான் ஆரம்பித்திருக்க கூடும் என என்னாலும் யாராலும் நிச்சயமாக நிறுவ இயலாது போகலாம். ஆனால் இதனை இறுதியாக நம் வரையில் கொணர்ந்தவர் யாரென்று தெரியுமாதலால் இப்பதிவு. இதனை எவ்வாறு மதத்தின் பெயரால் புனிதமாகவோ, தண்டனையாகவோ ஏற்றுக்கொள்ள இவர்களின் மனம் ஒப்புகிறது என்பதே கேள்வி.
தமிழகத்தில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் சிறு வயது முதலே எந்த மதங்களைச் சார்ந்தவர்கள் மதரீதியான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர் எனக் கருதுகிறீர்கள். அதற்கான வாய்ப்புகள் யாருக்கு அதிகம்?
///தாம் சார்ந்த பிரிவைச் சாராதவர்கள் என்பதாலா ... இல்லை தங்களின் கருத்துக்களுக்கு முரணாக இருப்பவர்கள் என்பதலா//
நான் எந்தப் பிரிவென்று கருதுகிறீர்கள் சார்ர்ர்ர்ர்ர்ர்! நான் எல்லா மதங்களையும் பாகுபாடின்றி விமர்ச்சித்து வந்துள்ளேன்! இதில் இஸ்லாமியர்களை மட்டும் குற்றம் சுமத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.
//மனித வன்மத்துக்கு மதம் என்பது ஒரு சாக்கு அவ்வளவே !!!//
ஸோ! மதத்தின் பெயரால் ஒரு கேவலமான செயல் செய்யப் பட்டாலும் மதத்தை ஒன்றும் சொல்லக் கூடாது! அந்த மனிதனைத் தான் சொல்ல வேண்டும்! இல்லையா?
//ஆக, உங்களைப் பொறுத்தமட்டில் வெறும் வெற்றுப் பார்வையாளனாக உலகைப் பார்த்துக் கொண்டிருப்பதே சமூகப் பணி.//
@ ராஜன் - அய்யா உலகம் என்பதை எப்படி மாற்ற தாங்கள் விரும்புகிறீர்கள் என்பதை விளக்கிக் கூறினால் பயனாக இருக்கும் ...
நீங்கள் என்னதான் முயன்றாலும் இறுதியில் நீங்களும் நானும் வெற்றுப் பார்வையாளனே !!! நாம் ஒட்டுமொத்த உலகையும் மாற்றவே முடியாது. மாற்றம் வேண்டுமாயின் மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம் என்றார் காந்தியடிகள். நீங்கள் உலகத்தை எப்படி மாற்ற முயல ஆசைப்படுகிறீர்களோ, அதன்படி தாம் முதலில் மாற வேண்டும்...
மதம் வேண்டாம் என்றால் முதலில் நம்மினுள் இருக்கும் மத அடையாளத்தை துடைக்க வேண்டும், பின்னர் நாம் சார்ந்த குடும்பம், குட்டி, உற்றார் உறவினர் இப்படி ஆரம்பியுங்கள். நல்ல மாற்றம் வரும். ராஜன் என்றாலே இந்துப் பெயராக இருப்பதால்.
பெர்லின் என வைத்துக் கொள்ளுங்கள் ... சின்ன அறிவுரைத் தான் சகா... கோவம் வேண்டாம் !!!
//ஸோ! மதத்தின் பெயரால் ஒரு கேவலமான செயல் செய்யப் பட்டாலும் மதத்தை ஒன்றும் சொல்லக் கூடாது! அந்த மனிதனைத் தான் சொல்ல வேண்டும்! இல்லையா?//
நிச்சயமாக மதத்தின் பெயரால் ஒசாமா குண்டு போடுகிறார் என்றால் ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் தீவிரவாதியாகப் பார்ப்பது எந்த வகையில் நியாயம்.. ஒசாமை பிடித்து தூக்கில் போடுவது தானே நியாயம் ...
//நான் எந்தப் பிரிவென்று கருதுகிறீர்கள் சார்ர்ர்ர்ர்ர்ர்! நான் எல்லா மதங்களையும் பாகுபாடின்றி விமர்ச்சித்து வந்துள்ளேன்! இதில் இஸ்லாமியர்களை மட்டும் குற்றம் சுமத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.//
சபாஷ் !!! இந்தக் கருதுகோள் எனக்குப் பிடித்து உள்ளது. ஆனால் //எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை// என்று தாங்கள் சொன்னப்போது அந்த நடுவுநிலைமை பிசகிவிட்டதே சகா.
//தமிழகத்தில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் சிறு வயது முதலே எந்த மதங்களைச் சார்ந்தவர்கள் மதரீதியான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர் எனக் கருதுகிறீர்கள். அதற்கான வாய்ப்புகள் யாருக்கு அதிகம்?//
மத ரீதியான ஆழ்ந்த கருத்துக்கள் எனதுக் குடும்பத்தில் இந்துக்களிடமேம மேலோங்கி இருக்கிறது. இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என அனைத்து மதப் பிரிவினரிடமும் இதுப் போன்றவை இருக்கிறது. ஆனால் நாம் தமிழகத்தில் அனைத்து முஸ்லிம்களையும், இந்துக்களையும், கிருத்துவர்களையும், நாத்திகர்களையும் நேரில் பார்த்துப் பழகி இருக்கிறோமா என்ன??? ஒரு சிலரை வைத்து எடைப் போடுகிறோம் .. அவ்வளவே ! இது தவறான மனோபாவம் தானே !
//என்று தாங்கள் சொன்னப்போது அந்த நடுவுநிலைமை பிசகிவிட்டதே சகா.
//
இதுல நடுநிலமைக்கென்ன கேடு வந்தது! தவறை சொன்னால் நடுநிலை பிசகுமா! அப்படினா மன்மோகன் சிங் தான் உலகின் ஒரே நடுநிலையாளர்!
/////
ஆனால் //எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை// என்று தாங்கள் சொன்னப்போது அந்த நடுவுநிலைமை பிசகிவிட்டதே சகா.
/////
இதனால எப்படிங்க நடுநிலை தவறிப்போகும்? :))
இந்த SMS'யை உருவாக்கியது ஒரு முஸ்லீம் என்று எப்படி நீங்கள் முடிவுக்கு வந்தீர்கள்??
ஏன், ஒரு ஹிந்து இந்த SMS'யை உருவாக்கி அனுப்பியிருக்க கூடாதா??
/**இவ்வளவு முட்டாள்தனமாய் இருப்பதால் இவர்கள் ********/
இந்த வாக்கியங்கள் கண்டிப்பாக தேவைதானா??
//இந்த SMS'யை உருவாக்கியது ஒரு முஸ்லீம் என்று எப்படி நீங்கள் முடிவுக்கு வந்தீர்கள்??//
'அதை பார்வேர்டு செய்வது கூட இந்துவா இருக்கலாமில்ல?'னு கேக்கலியா? :))
//சக மனிதன் மீது அன்பு செலுத்தத் தடை விதிக்கும் சமூகம் பொருளாதாரத்தில் மட்டும் முன்னேறி என்ன கிழிக்கப்போகின்றது? //
கடாபி தன் மண் சார்ந்த மக்கள் மீதே ராஜபக்சே மாதிரி குண்டு போடுகிறான்.ஆனாலும் பணி நிமித்தமாக இந்தியாவிலிருந்து சென்ற நர்ஸ்களில் சிலர் இந்தியாவின் பொருளாதாரம் இதை விடக்கொடுமையென்று ஊர் திரும்ப மறுக்கிறார்கள்.வளைகுடாப் போரில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் நிறையப்பேர் தமது நாட்டுக்கு திரும்பவில்லை.தனியார் துறையில் படித்த நர்ஸ்களுக்கு வேலை கிடையாது என்ற தமிழக சக மனித சமூகத்தை விட மத்திய கிழக்கு சிறப்பென்பதையே இன்னும் வெளிநாடு போகும் நிலை உணர்த்துகிறது.
இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் பரப்பபடும் இஸ்லாமியம் தொலைக்காட்சிகளில் கூச்சல் நிறைந்ததாய் இருக்கிறது.இதனை மதம் குறித்த அறவுரைகள் என்பதை விட தமது உரிமைகளுக்குப் போராடும் மதமென்ற திரையில் குரல் எழுப்புகிறார்கள் என்பதே சரியாக இருக்கும்.
மதம் சார்ந்த அடிப்படைவாதம் இன்னும் அழியும் என்பதால் SMS ஐ பெரிது படுத்த வேண்டாம் என்பது எனது நிலை.
சீனுவும் வந்துவிட்டார்... தமிழ் ஹிந்துவில் நல்ல கட்டுரை வரவில்லை போல !!!
வாங்க வாங்க சார் !!! ராஜனின் தனிப்பட்ட தராசில் இஸ்லாமியர்கள் மதவெறியர்களாக அறிந்துவைத்துள்ளார். அப்படியிருக்க அவர் இஸ்லாமை விமர்சிக்கும் தகுதியை இழந்துவிட்டார். இஸ்லாமில் மட்டுமில்லை அனைத்து மதங்களலும் வெறியர்கள் இருக்கிறார்கள் .. ஏன் இந்து மதத்திலும் இருக்கிறார்கள், எனது குடும்பத்தில் இருக்கும் சிலரே அதற்கு சாட்சி ... அதனால் இந்துக்கள் எல்லாரும் வெறியர்கள் என சீனுவைப் பார்த்து சொன்னால் சும்மா போவாரா அவர்?
//இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் பரப்பபடும் இஸ்லாமியம் தொலைக்காட்சிகளில் கூச்சல் நிறைந்ததாய் இருக்கிறது.இதனை மதம் குறித்த அறவுரைகள் என்பதை விட தமது உரிமைகளுக்குப் போராடும் மதமென்ற திரையில் குரல் எழுப்புகிறார்கள் என்பதே சரியாக இருக்கும்.//
மிகச்சரியான ஒரு அறிக்கை ராஜராஜன் ...
தான் சார்ந்த கருத்து தான் பெரிது என்னும் கர்வம் உடையவர்களை எதிர்ப்பதில் தவறே இல்லை.. அந்தக் கர்வம் கூடாது என்பதே எனது வாதம்.
இது அனைவருக்கும் பொறுந்தும்..
//இந்த SMS'யை உருவாக்கியது ஒரு முஸ்லீம் என்று எப்படி நீங்கள் முடிவுக்கு வந்தீர்கள்??
ஏன், ஒரு ஹிந்து இந்த SMS'யை உருவாக்கி அனுப்பியிருக்க கூடாதா??//
சரியாக சொன்னீர்கள் சரவண வடிவேல்.வே !!! அதாவது களப்பணியாற்றத் துடிப்பவர்கள் அடிநாதம் தெரியாமல் வியாக்கியானங்களில் இறங்கிவிடுகிறார்கள். இந்த குறை அறிவை கண்டிக்கவேண்டும் என்பதே எனது வாதமும்.
//சீனுவும் வந்துவிட்டார்... தமிழ் ஹிந்துவில் நல்ல கட்டுரை வரவில்லை போல !!!//
நீங்க (வரிந்துகொண்டு) வந்ததுக்கு காரணம் என்ன? உங்கள் மதம் தாக்கபட்டதாலா?
//ராஜனின் தனிப்பட்ட தராசில் இஸ்லாமியர்கள் மதவெறியர்களாக அறிந்துவைத்துள்ளார்//
உங்களுக்கு மட்டும் அப்படி புரிகிறது போலும் ;)
அவர் சொல்லவந்தது விகிதாச்சார அடிப்படையில் இஸ்லாம்யர்களில் மதவெறியர்கள் அதிகம் என்பது. புரிகிறதா?
//அதனால் இந்துக்கள் எல்லாரும் வெறியர்கள் என சீனுவைப் பார்த்து சொன்னால் சும்மா போவாரா அவர்?//
அப்படி அவர் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஒரு முஸ்லீமை வைத்து அனைவரும் மதவெறியர்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால், அவர் சொன்னது 'எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை' என்று தான். புரியும் என்று நினைக்கிறேன்.
//ஏன், ஒரு ஹிந்து இந்த SMS'யை உருவாக்கி அனுப்பியிருக்க கூடாதா?//
சரி! (உங்களை பொருத்த அளவில்) உருவாக்கியவர் ஒரு இந்துவாகவே இருக்கட்டுமே. அதை பார்வார்டு செய்வது கூட இந்துக்கள் தானா? இல்லை எவன் எந்த SMS அனுப்பினாலும் முஸ்லீம்கள் பார்வார்டு செய்வார்கள் என்கிறீர்களா?
கொஞ்சம் கூட அறிவுக்கு பொருந்தாத எஸ் எம் எஸ் அது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஈரான், பாகிஸ்தான் எல்லா நாடுகளிலும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு மக்கள் அழிந்து போயிருக்கிறார்கள்.
உலகிலேயே முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியாவில் ஜப்பானை போல் தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. சுனாமி வந்து விட்டு போனது.
அதற்காக இதை முஸ்லீம் மனோபாவம் என்றழைப்பதும் தவறு. இது மனமே இல்லாதவர்களின் செயல். உங்களின் தலைப்பு கடினமாக இருக்கிறது.
குசராத்தில் நில அதிர்வு ஏற்பட்ட போது சில கிறித்துவ அமைப்புகள் ஒரிய நிகழ்வுகளுக்காக (பாதிரி கொலை, கிறித்துவர்களின் மீதான தாக்குதல்) இறைவன் தண்டித்துவிட்டான் என்று உளறியது நினைவுக்கு வருகிறது
மேலும் இக்பால் செல்வன் இசுலாத்திற்கு வால் பிடித்து அம்பலப் படுவது இது முதல் முறையல்ல வினவில் ஏற்கனவே அம்பலப் பட்டவர் தான் இங்கும் வால் பிடிக்கிறார் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று முழங்கும் நாத்திகர் அவர்
இவை ஒரு சில பொறுப்பற்றவர்; புரியாதோர் செய்பவை; பெரிசு படுத்துவதே மிகத் தவறு!
This sms may have been sent by a Hindu or a Christian or a Jew who has viceral hatred of Islam; and wanted to bring it to bad repute in the minds of people.
It sometimes happen esp. online where it is easy to hide your face.
Assuming that this is a genuine Muslim who played this, still I feel he is somewhat on the dot.
Except the word Islam or Allah there, the contents should be treated as a geneal mge genuinely felt.
Let me explain.
When such a tragedy of gigantic proportions stike dead thousands of people and ravishes a whole land mass, and the cause is a natural one like earth quake or tsunami, we are perplexted in the extreme.
Scientists dont know when it will start; and how big it will be and when it will end. People are suddenly washed away en masse and the consequennces continue to kill.
So, the ordinary minds of ordinary people tend to think it is God; and further tend to think God is angry, just like stone age man thought about thunder as the wrath of God.
Civilsations are said to have progressed phenomenally; but when such things happen, we go primitive.
So, to repeat, the mge is a honest reaction. Only thorn in it to refer to the particular God. Even that is understandable because the writer knows about his God only.
Why not others ? Rajan might ask.
Because, others too think on the same wave length; but they dont want to commit themselves in sending such sms or online. They may think in their hearts of heart.
Please reconsider in the light of my mge.
சபாஷ் இக்பால் செல்வன்.
முதலில் இந்த எஸ்எம்எஸ் ஐ அனுப்பினவரும், ஃபார்வேர்ட் செய்தவர்களும் மனிதத் தன்மையே இல்லாதவர்கள். மாலிகான் குண்டு வெடிப்பு பாணியில் இஸ்லாத்தின் பெயரை கெடுப்பதற்க்காகக் கூட இஸ்லாமிய எதிரிகளும் இந்த செய்கையை செய்திருக்கலாம். யார் தவறு செய்தாலும் தவறு செய்த தனிப்பட்ட மனிதனைத்தான் விமரிசிக்க வேண்டும் என்ற மனோபாவம் அனைவருக்கும் வர வேண்டும். நான் சொல்ல நினைத்த கருத்துக்களை இக்பால் செல்வனே சொல்லி விட்டார்.
http://www.gabberface.com/index.php?search=japan+to+ban+hijaab
லின்க்குக்கு நன்றி திரு சீனு!
உள்ளார போயி பாருங்க! எல்லாம் படிச்ச படிக்கற பசங்க! இவர்களுக்கும் கூட மனிதம் மரத்துப் போகுமளவுக்கு மூளையில் மராமத்து வேலை பார்க்கப் பட்டுள்ளதா? கொடுமை
லின்க்குக்கு நன்றி திரு சீனு!
உள்ளார போயி பாருங்க! எல்லாம் படிச்ச படிக்கற பசங்க! இவர்களுக்கும் கூட மனிதம் மரத்துப் போகுமளவுக்கு மூளையில் மராமத்து வேலை பார்க்கப் பட்டுள்ளதா? கொடுமை
உங்கள் இடுகையை விட டிஸ்கியை படித்தபின்பு அதிக மனஉளைச்சல் அடைந்தேன்.... உடம்புக்கு என்ன ஆச்சு கும்மி...???
marupadiyum adhe kutrachaattu.,yaaro naalu per forward panra thavaru[sms] ku., #muslim samudhayathaye kurai solladheenga
BTW 2004 Tsunami.,worst affected INDONESIA is a #muslim country
//ஏதேனும் சிறு இழப்பு ஏற்பட்டாலே, வருந்துவது மனித இயல்பு. ஒரு நாடே ஸ்தம்பித்துப்போய் இருக்கும் சூழலில், அதைக் கண்டு மகிழ்வுறும் இவர்கள் பின்பற்றும் மார்க்கம் அமைதி மார்க்கமாம். கொடுமைகளைக் கண்டு இன்புறும் சாடிஸ்டுகள், தாங்கள் அமைதியை விரும்புவதாகக் கூறிக் கொள்வது நகைமுரண். யாருடனாவது பேசும்போது வாய் கிழிய 'சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்' என்று பேசும் இவர்கள், ஒரு பேரழிவைப் பார்த்து கொக்கரிப்பது மிகவும் கீழ்த்தரமாய் இருக்கின்றது. //
தமிழகத்தை தாக்கிய சுனாமியின் போது இதே போல அமெரிக்க, ஐரோப்பா கிருத்துவ வெறியர்களும் செயல்பட்டனர. ரெடியோவில் இது போலச் செய்தார் ஒருவர், கவிதைகள் எழுதினர். இப்படி. இதே போல கஸ்டப் படும் போது கடவுள் சரியான தண்டனை கொடுத்துட்டான் என்று பேசுவது அனைத்து மத அறிவுக் கெட்ட கூமுட்டைகளிடமும் நிலவுகின்ற மனிதாபிமானமற்ற மடத்தனமாகும். அதனால்தான் மதம் மனிதனை அறிவற்ற ஞானசூன்ய மிருகமாக்கும் என்கிறார்கள் நாத்திகர்கள்.
@இக்பால் செல்வன்
நீங்கள் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பதால் சில விஷயங்களை தெளிவுபடுத்திவிடுகின்றேன். நாங்கள் பதிவுகளின் மூலம் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, சமூக சீர்கேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றோம். எவ்வித கட்சியோ, அமைப்பையோ ஆதரிப்பவர்கள் அல்ல. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டி வருகின்றோம். பதிவுலகம் தாண்டியும் களத்திலும் செயல் பட்டு வருகின்றோம். ஆனால், இதனை நாங்கள் செய்தோம் என்று எதற்கும் உரிமை கொண்டாடியதில்லை. நீங்கள் பதிவு எழுதுவதை தவிர என்ன செய்திருக்கிறீர்கள் என்று "நீங்கள் கேட்டதால் மட்டுமே" களப்பணியும் ஆற்றுகின்றோம் என்று குறிப்பிட்டோம். எங்கும் சென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கவில்லை. தவறுதலாக யாரேனும் எங்கள் பெயரை குறிப்பிட்டு இவற்றை நாங்கள் செய்தோம் என்று எழுதினாலும் கூட, பெயரைக் குறிப்பிடாதீர்கள் என்று கோரிக்கை வைக்கின்றோம். அப்படி நாங்கள் கோரிக்கை வைத்த பல இடங்களிலும் இதுவும் ஒன்று.
உங்கள் பின்னூட்டங்களில் ஒரு இடத்தில்
//விமர்சிக்கிறோம் என்ற பெயரில் சமூகக் களப்பணி ஆற்றுவதாக தம்பட்டம் அடிப்பது எந்தச் சொறிதல்களுக்காக// என்றும், இன்னொரு இடத்தில் //அதாவது களப்பணியாற்றத் துடிப்பவர்கள் அடிநாதம் தெரியாமல் வியாக்கியானங்களில் இறங்கிவிடுகிறார்கள். // என்றும் கூறுவது எந்த அர்த்தத்தில்? நாங்கள் களப்பணியாற்றுவது யாரிடமிருந்தும் சான்றிதழ் வாங்குவதற்காக அல்ல. சமூகம் மேம்பட வேண்டும் எண்ணும் நோக்கம் மட்டுமே அடிப்படை.
பதிவு எழுதுவது தவிர என்ன செய்தீர்கள்? என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதும், பதிவரசியல் மட்டும் செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு உறுத்துகின்றதோ? எங்களுடைய செயல்பாடுகள் என்னவென்று எங்களை அவதானித்து வருபவர்களுக்குத் தெரியும். உங்களைப் போன்று குழு அமைத்து பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டு வெட்டியாய் பொழுது போக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.
@இக்பால் செல்வன்
உங்கள் பின்னூட்டம் ஒன்றில்
//இந்த SMS அனுப்பியவர்கள் மனித தன்மையற்ற ஏன் மனித இனத்திலேயே சேர்க்கத் தகாத ஜந்துக்கள்// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நாங்களும் அவர்களைக் கண்டித்துதான் பதிவிட்டிருக்கின்றோம். ஆனால், நாங்கள் கூறியதை மட்டும் //குரைப்பதும்// என்னும் வார்த்தை கொண்டு விளக்கியுள்ளீர்களே. இது எப்படி? உங்கள் மொழிப் புலமை அப்படியா? அல்லது எங்கள் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியா? உங்கள் காழ்ப்புணர்ச்சிகளுக்கான வடிகால் எங்கள் தளம் அல்ல.
--
இந்த SMS உருவாக்கியவர்களின் மன வக்கிரத்தையும், அதைப் பரப்பியர்வர்களின் குரூர புத்தியையும்தான் பதிவில் சுட்டி இருக்கின்றோம். இஸ்லாம் பற்றிய ஒரு தகவல் வந்தால் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல், நம்பகத்தன்மையை பரிசீலிக்காமல் , உடனே forward செய்யும் மூளைச் சலவை செய்யப்பட்ட முட்டாள்களை பற்றிதான் பேசியிருக்கின்றோம். அதைப் பற்றியெல்லாம் பேசாமல் வெட்டி வாதம் செய்வதால், அதனை வாசிப்பவர்களுக்கும், உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும் எங்களுக்கும் தான் நேரம் விரயமாகின்றது. உங்களுடைய நேர மேலாண்மையைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. அதனால், பதிவிற்கு தொடர்பாய் ஆக்கபூர்வமாய் நீங்கள் பேசினால், எங்கள் தரப்பில் இருந்து பதில் வரும். இல்லையெனில் எங்கள் நேரத்தை விரயம் செய்வதை தவிர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இக்பால் செல்வன் ஏன் எங்களோடு வந்து இப்படி விதண்டாவாதம் செய்ய வேண்டும் என்று என்னும் நண்பர்களுக்காக சில தகவல்கள். அவர் தனது பதிவொன்றில் ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டதற்கு நிலவு பூமிக்கு அருகில் வந்ததுதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
http://kotukki.blogspot.com/2011/03/blog-post_12.html
யார் கண்டுபிடித்தது, எப்பொழுது கண்டுபிடித்தது என்று நான் கேள்வி கேட்டேன். அதற்கு பிறகு அவர் இட்ட இன்னொரு பதிவில் ஒரு ஆய்வாளர் கண்டுபிடித்தாக கூறினார்.
http://kotukki.blogspot.com/2011/03/blog-post_8534.html
ஆனால், இப்படி கூறியது ஒரு ஜோதிடர். இக்பால் செல்வனை பொறுத்தவரை, அவர் பதிவிட்டுவிட்டதால், ஜோதிடரையும் ஆய்வாளர் என்றுதான் கருதவேண்டும், ஜோதிடரது கருத்துகள் அறிவியல் உண்மைகள் என்னும் ரீதியில் தான் பார்க்கவேண்டும் என்று கூறினார். நான் மறுத்தேன். (உரையாடல் நடைபெற்ற பதிவுகளில் ஒன்றினை தற்பொழுது நீக்கிவிட்டார்)
அதன் பிறகு எங்களுடைய நேரத்தை விரயம் செய்வதையே தனது முக்கிய பணியாகக் கருதி செயல்பட்டு வருகின்றார். மூணு கால் கூட்டத்தை சேர்ந்த ஒரு நபரின் விதண்டாவாதத்தால் பின்னூட்டம் திசை மாறி சென்று விட்டதை இம்முறை மட்டும் நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.
இது போன்ற தனி நபர் சண்டைகளில் நாங்கள் ஈடுபடுவதில்லை. கருத்துகளை முன்வைக்கின்றோம். வாசகர்களின் புரிதலுக்கு விட்டு விடுகின்றோம். ஆனால், தனது பதிவில் இருக்கும் குறையைச் சுட்டிக்காட்டிய ஒரே காரணத்திற்காக இங்கு வந்து வெட்டியாய் விவாதம் செய்தால், பதிலளித்து எங்கள் நேரத்தை விரயமாக்க நாங்கள் தயாராய் இல்லை.
Jo Amalan Rayen Fernando கூறியிருக்கும் பார்வை யதார்த்தமாக இருக்கின்றது. ஒவ்வொரு பேரழிவிலும் தங்கள் மதத்தை உயர்த்திப் பிடிக்க வாய்ப்பிருப்பின் சிலர் அதை பயன் படுத்துகின்றனர். வேற்று மதங்களை துவேசிக்க இதுபோன்று சில செய்யக்கூடும் என்று சில நண்பர்கள் கூறியுள்ளனர். அப்படி துவேச எண்ணத்தோடு ஒருவர் இதுபோன்ற செயலைத் தொடங்கியிருந்தாலும், அதை பரப்புரை செய்தவர்களுக்கு மனித நேயமோ அல்லது அறிவோ எங்கே போனது?
//மாலிகான் குண்டு வெடிப்பு பாணியில் இஸ்லாத்தின் பெயரை கெடுப்பதற்க்காகக் கூட இஸ்லாமிய எதிரிகளும் இந்த செய்கையை செய்திருக்கலாம்//
என்று சுவனப்பிரியன் கூறியிருக்கின்றார். அப்படி ஒன்று நடந்திருக்கின்றதா என்பதை அறிந்து கொள்வதற்கோ அல்லது இந்த SMS ன் ஊற்றுக்கண் எது என்பதை அறிவதற்காகவேனும், சைபர் க்ரைமில் புகார் செய்யலாமே. எனக்கு வந்த அனைத்து SMS களையும் அழிக்காமல் நான் அப்படியே வைத்துள்ளேன். விசாரணையின் எந்தக் கட்டத்திலும் போலீசாருக்கு அவற்றை அளித்து உதவ தயாராக இருக்கின்றேன்.
இந்த sms ல் இருக்கும் தகவல்கள் தவறானவை. ஆனாலும் அது அப்படியே forward செய்யப்பட்டு வந்துள்ளது. இப்பொழுது, இது sms என்னும் வடிவம் தாண்டி வேறு தளங்களிலும் உரையாடப்பட்டு வருகின்றது. அத்தகைய தளங்களில் ஒன்றின் சுட்டி இது.
http://answers.yahoo.com/question/index?qid=20110315162025AA886nt
@Philosophy Prabhakaran
மாதத்தில் 20 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்; 10 நாட்கள் நன்றாக இருப்பேன். அந்த 20 நாட்கள் காலத்தில், இப்பொழுது இருக்கின்றேன். வேறொன்றுமில்லை.
:-)
,.
@ராஜ நடராஜன்
//மதம் சார்ந்த அடிப்படைவாதம் இன்னும் அழியும் என்பதால் SMS ஐ பெரிது படுத்த வேண்டாம் என்பது எனது நிலை.//
மதத்தின் பெயரால் மனித நேயமற்று நடந்து கொள்கிறார்களே என்னும் அங்கலாய்ப்புதான் இப்பதிவே.
இக்பால் அவர்கள் கேட்டது இந்த பதிவில் குறிப்பாக இசுலாமியர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொன்னது எதற்காக என்பதுதான். அதை அப்படியே வார்த்தை விளையாட்டாக மாற்றி விட்டீர்கள். இதுமாதிரி முட்டாள்கள் எல்லா பிரிவுகளிலும் இருக்கிறார்கள். வேளாங்கன்னியில் சுனாமி வந்தது, திருச்செந்தூரில் வரவில்லை எல்லாம் முருகன் செயல் என்று சொன்னவர்கள் உண்டு.
ஆகவே இக்கட்டுரை பொதுவாக எல்லா மதங்களையும் சாடி இருக்க வேண்டும்."குண்டி கழுவ, டவுசரை அவிழ்க்க, சொறிந்து விட" என்று நீங்கள் பேசலாம். ஆனால் "குரைப்பது" என்ற ஒரு வார்த்தையை சொன்னதும் உங்களுக்கு கோபம் வருகிறது. இந்த smsஐ அனுப்பிய முட்டாள்களை சாடுவதாக எண்ணிக்கொண்டு, எல்லோரையும் திட்டுவது சரியா?
நீங்கள் மட்டும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று நேரடியாக கேட்கலாம். ஆனால் இன்னொருவர் கேள்வி கேட்டால் அதை கலாய்த்து கருத்து வெளியிடுவது சரியா? இறைவனை மறுப்பது உங்கள் நோக்கமா? இறை நம்பிக்கையாளர்களை புண்படுத்தி அவர்களது புலம்பலை ரசிப்பது உங்கள் நோக்கமா?
@ ராஜன்
நான் ஒரு ஹிந்து. இப்படி ஒரு sms ஹிந்துக்களை முன்னிறுத்தி வந்திருந்தாலும் என்னுடைய பதில் நீங்கள் இங்கு முதன்முதலாக இட்டிருக்கும் கருத்துறைதான்.
கண்டிப்பாக அதை காறி உமிழ்வேன்.
@பாலா
இது ராஜனின் பின்னூட்டம்
"மொத்தத்தையும் குற்றம் சொல்லவில்லை; இதை ஃபார்வர்ட் செய்யத் தோணுகிறது என்றால் எப்பேர்ப்பட்ட கற்பிதத்தில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பாருங்கள். "
எதுவுமே சிந்திக்காமல் forward செய்தவர்களைதானே முட்டாள் என்று கூறியிருக்கின்றோம். இக்பால் செல்வன் தனது முன்முடிவுகளைக் கொண்டு அனைத்து முஸ்லிம்களும் என்று அவர்தான் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு தேவை வெட்டிச் சண்டை. அதற்காக இன்று எங்கள் தளத்திற்கு வந்திருக்கின்றார்.
நமது மானமிகு தமிழக முதல்வர் ஒரு இறைமறுப்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் செய்யாத தில்லு முல்லுகளா? அப்படியானால் இறை மறுப்பாளர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா?
@பாலா
//அதை அப்படியே வார்த்தை விளையாட்டாக மாற்றி விட்டீர்கள்.//
நந்தா ஆண்டாள்மகன் பின்னூட்டத்திற்கு அடுத்து வந்துள்ள ராஜனின் கருத்துக்குப் பிறகு வந்து 'அனைத்து முஸ்லிம்கள்' என்னும் வார்த்தை விளையாட்டு நடத்தியுள்ளது இக்பால் செல்வன்தான்.
@பாலா
//நமது மானமிகு தமிழக முதல்வர் ஒரு இறைமறுப்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் செய்யாத தில்லு முல்லுகளா? அப்படியானால் இறை மறுப்பாளர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா? //
எப்பொழுதுமே பேசு பொருளை விட்டு வெளியே செல்வதில்தான் உங்களின் கவனம் இருக்கின்றது. sms forward செய்தவர்களைதான் நாங்கள் கூறியிருக்கிறோம். அதிலும் ராஜன் இரண்டு பின்னூட்டங்கள் வெளியிட்டிருக்கின்றார். அதற்கு பிறகு வந்து இது அனைவரையும் குறிக்கிறது என்று பேசிச் சென்றார் இக்பால் செல்வன். இப்பொழுது நீங்கள்.
அனைத்து முஸ்லிம்களும் என்று பதிவில் எங்கு குறிக்கப்பட்டுள்ளது என்று கூறுங்கள். எதையும் ஆராயாமல் அப்படியே ஏறுக்கொள்ளும் மனோபாவம் பற்றி பேசியிருக்கின்றோம். பதிவிற்கு சென்று படிப்பது கஷ்டமாக இருந்தால் சொல்லுங்கள், பதிவில் இருப்பவற்றை மீண்டும் காப்பி பேஸ்ட் செய்கின்றேன். அனைத்து முஸ்லிம்களும் என்று எங்காவது இருக்கின்றதா என்று தேடித் பார்த்துக் கொள்ளுங்கள்.
இக்பால் செல்வன் சொன்ன ஒரு வார்த்தையை படித்துவிட்டு, பதிவிலும் அது இருப்பதாக கற்பனை செய்துகொண்டு உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்.
மீண்டும் ஓய்விற்குச் செல்லவிருப்பதால், சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது நாளை காலையோதான் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் நிலையில் இருக்கின்றேன். நண்பர்கள் கடைக்கு வரவும்.
பதிவை விட்டு வேறு பிரச்சனைக்கு நான் செல்ல நினைக்கவில்லை. ஒரு உதாரணத்துக்குத்தான் அதை சொன்னேன். ஒரு வேளை "இப்படி இறை மறுப்பாளராக இருப்பதால் முட்டாளாக இருக்கிறாரா? இல்லை முட்டாளாக இருப்பதால் இறைமறுப்பாளராக இருக்கிறாரா என்று சொல்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். இதை எப்படி அர்த்தம் கொள்வீர்கள்? இறைமறுப்பாளர் அனைவரும் முட்டாள்கள் என்று அர்த்தம் வருகிறதல்லவா? இதை உணர்த்தவே நான் சொன்னேன். மற்றபடி கலைஞர் மேட்டரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அது என் நோக்கம் அல்ல.
//முஸ்லிம்களாக இருப்பதால்தான் இப்படி முட்டாள்தனமாய் சிந்திக்கிறார்களா
நீங்கள் சொன்னதால் மறுபடியும் இந்த பதிவை படித்தேன். மேலே இருக்கும் வரிகள் அதில் இருக்கின்றனவே. இது நானாக கற்பனை செய்து கொண்டுள்ளேன் என்று சொல்கிறீர்களா? முதன்முதலில் இந்த பதிவை படித்தபோது நான் இக்பால் அவர்களின் கருத்துறைகளை படிக்கவில்லை.
உங்கள் நோக்கம் ஏதுவாக இருந்தாலும் உங்கள் வார்த்தைகள் சென்றடையும்போது அதன் அர்த்தம் இப்படித்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. உங்கள் பதிவுகளின் நோக்கத்தை விமர்சிக்க எனக்கு விருப்பமில்லை. உங்கள் கருத்துக்கள் மற்றவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று நினைத்தால் சரியான வார்த்தைகளை பயன்படுத்துவதே நல்லது.
இப்படி எந்த மதத்தை முன்னிறுத்தி sms வந்தாலும் அதை நான் மதிப்பதில்லை. மாறாக அதை அனுப்பியவர்களை திருப்பி கேள்வி கேட்டு அல்லது திட்டி sms அனுப்புவதே என் வழக்கம். இது முற்றிலும் உண்மை. அப்படி திட்டும்போது கூட அவர்களை திட்டுவேனே தவிர அவர்கள் சார்ந்த மதத்தை அல்ல.
//மொத்தத்தையும் குற்றம் சொல்லவில்லை; இதை ஃபார்வர்ட் செய்யத் தோணுகிறது என்றால் எப்பேர்ப்பட்ட கற்பிதத்தில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பாருங்கள். //
இதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லையே. ஆனால் அடுத்தவரியை சவுகரியமாக மறந்து விட்டீர்களே?
//எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை//
இந்த வரிகள் மேலும் சீண்டுவதாக அல்லவா இருக்கிறது?
//எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை//
எந்த நோக்கத்தில் ராஜன் இதை எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதை படித்தபோது என் மனதில் தோன்றிய கருத்து "இப்படி கருத்திட்டால் மற்ற மதத்தினர் வக்காலத்துக்கு வரமாட்டார்கள்" என்று நினைத்தாரோ என்று. இந்த வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஓரிரு முறை கருத்தும் இட்டிருக்கிறேன். உங்கள் பதிவுகள் என்னுள் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. அதற்கு நன்றிகள்.
ஆனால் உங்கள் பதிவுகள் பெரும்பாலும் மற்றவர்களை சீண்டுவதாகவோ, பரிகாசம் செய்வதாகவோ இருப்பதுதான் என் வருத்தம். நீங்கள் உண்மையை அறிந்தவர்கள் என்று சொல்கிறீர்கள்.
ஆனால் உண்மையை அறிந்த உங்களுக்கு இருக்கும் அந்த பக்குவம், அறியாத முட்டாள்களுக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்லவா? முட்டாளை சீண்டினால் திருந்திவிடுவான் என்று யார் சொன்னது? அவன் மேலும் முட்டாளாய்த்தான் ஆவான்.
எழுதியாச்சுல்ல. பேசமா போய் ஓய்வு எடுங்க. கோவத்துல ஏதாவது திட்டி விடப் போறேன். வேல மெனக்கெட்டு ஒவ்வொன்னும் பதில் வேறு. உடம்பு முக்கியம். அப்புறம் தான் மத்தது எல்லாம்?
* இக்பால் என்று பெயர் வைத்தாலே முஸ்லிம் - அது ஸ்வாகிலி மொழிச் சொல் அல்ல
* இக்பால் என்று பெயர் வைத்தவர் என்ன பேசினாலும் அது குரானைப் பற்றியது தான்
* மதங்ளை எதிர்க்க நினைத்தவர் குறிப்பிட்ட மதம் மீது வன்மத்தைப் பாய்ச்சுவது காந்தியம்
* கும்மி என்பவர் இஸ்லாத்தில் பிறந்த பெரியார்
* இந்து ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இந்த ஆல் இன் ஆல் பெரியார் வழிவந்தோருக்கு பக்க வாத்தியங்கள் உற்ற கொள்கை உடன்பாடிகள்
* சமூகப்பணி செய்து தமிழகத்தில் பாதி பேருக்கு மூன்று வேளை உணவும், சிசுக்கொலையைத் தடுத்தும், வரதட்சணைக் கொடுமையை இல்லாமல் செய்தும், ஊழல்களை - லஞ்சத்தை ஒழித்த பெரும் புள்ளிகள்
* தாங்கள் எது பேசினாலும் சரி மற்றவன் கொஞ்சம் பேச ஆரம்பித்தாலும் முட்டாள்தனம்
இது தான் இந்த வலைப்பக்கத்தினருக்கு வேதவாக்கு...
இது எல்லாம் ஒரு தற்புகழ் பாடவும் .. publicity stunt என்றே தோன்றுகிறது .. இவர்களைப் போன்றவர்கள் சமூகப் பிணக்குகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்பவர்கள்.. மக்கள் மத்தியிம் அமைதியும் சமாதானமும், பொருளாதார - வாழ்வியல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லாதவர்கள் ... ரொம்ப நன்றி சார் ....
//எனக்குத் தெரிய வேறெந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு வெறியர்களாக இருப்பதில்லை//
இணையம் ஒன்றையே உலகமாகவும், இணையத்தில் எழுதுகிறவர்கள் போன்றே மெய் உலகிலும் இருப்பார்கள் என்ற தவறான புரிதலிலிருந்து வந்து விழுந்த வெறித்தனமான வார்த்தைகள்.
freesmsஒழித்தால் இதுமாதிரி பிரச்சனைகள் குறைய வாய்ப்பு உண்டு
நிஜமாகவே இப்படி ஒரு குறுந்தகவல் வந்திருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.இதை எந்த மதத்தினர் செய்திருந்தாலும் அது கண்டனத்துக்குரியது.ஜப்பானியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.பூகம்பமும் சுனாமியும் வந்துவிட்டதாலேயே அங்கே கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார் என்றால் அப்படி பட்டவர கடவுள் கிடையாது அசுரன்.இயற்கை கொடுக்கின்ற மழையை ஏற்றுக்கொள்வது போல இதனையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.இப்படி தகவல் பரப்புபவர்களுக்கு "மோடி"வித்தை சரியோ என சந்திக்க தோன்றுகிறது.
"கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்ற பழமொழி போல இருக்கின்றது இந்த செய்தி.ஒருவேளை இங்கே மட்டும் வந்திருந்தால் நிச்சயம் இப்படி செய்தி அனுப்ப ஆட்கள் இருந்திருக்க மாட்டார்கள்.நம் அரசாங்கம் என்ன செய்து கிழித்திருக்கும் இந்நேரம்?ஆனால் நம் அரசாங்கம் போல் அல்லாமல் இவ்வளவு பதட்டத்திலும் விவேகமாக செயல்படுகின்றார்கள் பாருங்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை மனிதாபிமானத்தோடு பழி சொல்லாதிருக்கலாம் அல்லவா?அந்த கடவுள் நிஜமாகவே இருந்தால் இப்படி செய்தி அனுப்பியவர்கள் தலையில் இடி விழட்டும்
//நிச்சயமாக மதத்தின் பெயரால் ஒசாமா குண்டு போடுகிறார் என்றால் ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் தீவிரவாதியாகப் பார்ப்பது எந்த வகையில் நியாயம்.. ஒசாமை பிடித்து தூக்கில் போடுவது தானே நியாயம் ...//
நியாயமே இல்லை தாங்க ..ஆனா நான் ஒரு உண்மை சொல்றேன்.2001 ல அமெரிக்காவுல ஒசாமா தாக்குதல் நடத்தி மிகப்பெரிய பில்டிங் ல இருந்து பெண்கள் வேற வழியின்றி கீழே குதிப்பதை பார்த்தேன்.வேதனையாக இருந்தது.ஆனால் எனது இஸ்லாமிய நண்பர் ஒசாமா செய்ததை வெகுவாக புகழ்ந்தார்.நீங்க சொல்ற மாதிரி அப்பாவிகள் எல்லா மதத்திலும் இருக்கின்றார்கள் உண்மை தானே அப்படி என்றால் இந்த தாக்குதலை ஆதரித்து ஒரு சாமானியர் ஏன் புகழ வேண்டும் ?ஆப்கானில் அமெரிக்கா போர் தொடுத்தவுடன் பெண்கள் குழந்தைகள் பரிதாபமாக பாதிக்கப்பட்ட பொழுதும் அதே போன்றே என் மனம் துடித்தது.ஆனால் அப்பா மட்டும் அமெரிக்கா அராஜகம் என்று அதே நண்பர் பொங்கினார்.அன்று இரட்டை கோபுர தாக்குதலுக்கு எத்தனை பேர் இங்கே இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள் தெரியுமா?அமெரிக்கா செய்ததும் அனைத்தும் நியாயம் என்பது என் வாதம் அல்ல .ஆனால் அப்பாவிகள் எங்கே பாதிக்கபட்டாலும் அவன் தம்மை சார்ந்தவன் இல்லை என்றால் மகிழ்வதும் தம்மை சார்ந்தவன் என்றால் பொங்குவதும் எந்த விதத்தில் நியாயம்?
"" இப்படி தகவல் பரப்புபவர்களுக்கு "மோடி"வித்தை சரியோ என சந்திக்க தோன்றுகிறது.""
சபாஷ் மாமி! அப்படி சொல்லுங்கோ !!
கெடச்ச சான்ச விட்ரலாமோ?
மாமாக்களுக்கு திறமை போதாதென்று இப்போது மாமிகளும் கருத்து பயங்கரவாத களப்பணி
ஆற்ற வந்தாயிற்று போலிருக்கே?
//இவ்வளவு முட்டாள்தனமாய் இருப்பதால் இவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்களா?//
இதை பதிவாளர் தவிர்த்திருக்கலாம் என தோன்றுகிறது.பதிவிடும் பொழுது ஒரு முறைக்கு இருமுறை சரி பார்ப்பது நல்லது.எழுதியதை மாற்றி எழுத முடியாது.எழுதி விட்டோம் என்பதற்காக இறுதி வரை வாதிட முடியாது.மற்றபடி சரியான பதிவு இது.இந்த பதிவின் சாராம்சம் வேதனையான நேரத்தில் வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போன்ற செயலை கண்டிப்பது என்று மட்டுமே என்றால் அதற்கு நானும் வழி மொழிகின்றேன்.
களப்பணி ஆற்ற நேரம் இல்லை உங்களைப்போல.நானும் மிக சாமானிய இனம் தான்.தன் இனத்தின் ஒருவன் அழிந்தான் என்றால் உடனே பொங்குகின்ற மனது அடுத்தவன் அழிந்தால் மட்டும் மகிழ்வது ஏன்?
"இப்படி தகவல் பரப்புபவர்களுக்கு " என்று ஒரு அழுத்தம் கொடுத்து தான் சொல்லி இருக்கிறேன்.உங்களுக்கு லாவகமாக அனைத்தும் கற்பித்து கொள்ள வேண்டாம்.
//ஆனால் உண்மையை அறிந்த உங்களுக்கு இருக்கும் அந்த பக்குவம், அறியாத முட்டாள்களுக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்லவா? முட்டாளை சீண்டினால் திருந்திவிடுவான் என்று யார் சொன்னது? அவன் மேலும் முட்டாளாய்த்தான் ஆவான்.//
உண்மை
//இதை பதிவாளர் தவிர்த்திருக்கலாம் என தோன்றுகிறது.பதிவிடும் பொழுது ஒரு முறைக்கு இருமுறை சரி பார்ப்பது நல்லது.எழுதியதை மாற்றி எழுத முடியாது.எழுதி விட்டோம் என்பதற்காக இறுதி வரை வாதிட முடியாது.மற்றபடி சரியான பதிவு இது.இந்த பதிவின் சாராம்சம் வேதனையான நேரத்தில் வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போன்ற செயலை கண்டிப்பது என்று மட்டுமே என்றால் அதற்கு நானும் வழி மொழிகின்றேன்.
//
இதை நான் சொல்லி இருந்தால் எனது பெயரில் இஸ்லாமிய பெயர் என்ற ஒரே காரணத்தினால் காரித்துப்ப வருகிறார்கள் சில ஆதிக்கச் சக்திகள் .. என்ன செய்ய ???
மனிதர்களை மனிதர்களாக பார்க்கத் தவறுகிறார்கள் அவர்களின் அடையாளங்களை வைத்து எடைப் போடுகிறார்கள்..... இது தான் முற்போக்குச் சிந்தனையா???
ஆடு உயிர்க்கும் மனித உயிர்க்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்....
வெட்கக்கேடு......
//உங்கள் நோக்கம் ஏதுவாக இருந்தாலும் உங்கள் வார்த்தைகள் சென்றடையும்போது அதன் அர்த்தம் இப்படித்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. உங்கள் பதிவுகளின் நோக்கத்தை விமர்சிக்க எனக்கு விருப்பமில்லை. உங்கள் கருத்துக்கள் மற்றவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று நினைத்தால் சரியான வார்த்தைகளை பயன்படுத்துவதே நல்லது.//
repeat
Everybody please checkout this website
http://www.islamicreliefusa.org/japan
விதண்டாவாதம் போய் இப்பொழுது கழிவிரக்கம் தேடும் அபலைகளின் நிலை.
@பாலா & உமா கிருஷ்ணமூர்த்தி
தொடர்ச்சியாக பின்னூட்டமிட இயலாச் சூழலில் உள்ளேன். அதற்கு முன் சில பதிவுகளின் சுட்டிகளைக் கொடுக்கின்றேன்., அவற்றை ஒரு முறை படித்துவிடுங்கள். நாம் அவற்றைப் பற்றி பேசப்போவதில்லை. ஆனால், உங்களுடைய கேள்விகளுக்கான சில விடைகள் அங்கேயே உங்களுக்கு கிடைக்கக் கூடும். அப்படியும் விடைகள் இல்லை என்று நீங்கள் கருதினால் உங்கள் கருத்தினைக் கூறுங்கள். உங்கள் கருத்து கண்டு தொடரும் விதத்தில் தொடர்வோம். கொடுக்கப்படும் பதிவுகளை மட்டுமின்றி, அவற்றில் இருக்கும் பின்னூட்டங்களையும் அவசியம் படித்து விட்டு கருத்து கூறுங்கள். ஒவ்வொரு பதிவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நீண்ட பின்னூட்டங்கள் இருக்கும். அவசியம் அனைத்தையும் படியுங்கள்.
சுட்டி 1.
சுட்டி 2.
சுட்டி 3.
.
@shameer
சுட்டிக்கு நன்றி. இதை இன்னும் பரவலாக்கி உதவிகள் அதிகம் கிடைக்க நம்மாலான உதவிகளை செய்வோம்.
சக மனிதனின் துன்பம் கண்டு இரங்கும் உங்களின் மனம் கண்டு பெருமிதம் கொள்கின்றேன். உங்களின் செயலுக்கு தலை வணங்குகின்றேன்.
மனிதத்த்தன்மையற்ற செயலை கண்டித்த அனைவருக்கும் நன்றியையும், மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு துணை போகாத நண்பர்களுக்கு வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@ஜோதிஜி
நான் தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டெல்லாம் இல்லை. இடையிடையே வந்து பதில்கள் சொன்னேன். அம்புட்டுதேன்.
ராஜன், முஸ்லீம்கள் மீது உங்களுக்கு அப்படி என்ன விரோதம்??. என்னைப்பொருத்தவரை இப்பொழுது நீங்கள்தான் தீவிரவாதியாக தெரிகிறீர்கள்.
நீங்கள் சொன்ன SMS போல், எனக்கு ஒன்றும் வரவில்லை, அதைப் பற்றி நான் அறிந்திருக்கவும் இல்லை. நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும். ஆகவே நான் உங்களை "மதப் பிரச்சனையை தூண்டிவிடும் தீவிரவாதி என்று சொல்லலாமா??".
தாங்கள் தந்த சுட்டிகளுக்கு மிக்க நன்றி. படித்து பார்க்கிறேன் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன். உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள்.
@சரவண வடிவேல்.வே
சில இணையதள சுட்டிகளும் இங்கு பின்னூட்டத்தில் இருக்கின்றனவே. இதே sms பற்றி விவாதிக்கும் தளங்கள் அவை. அவற்றை பாருங்கள்.
..
நண்பா SMS கள் வந்தது எனக்கு. ராஜனுக்கு அல்ல. இஸ்லாமியர்கள் மற்ற மதத்தினருக்கும் இவற்றை அனுப்புவார்கள் என்றா எண்ணுகின்றீர்கள்?
எனக்கு வந்த அவற்றை அழிக்காமல் அப்படியே வைத்திருக்கின்றேன். நான் சென்னையில்தான் இருக்கின்றேன். நீங்களும் சென்னையில் இருந்து அவற்றை பார்க்க விருப்பமிருப்பின் சொல்லுங்கள் என்னுடைய கைபேசிகளை எடுத்து வந்து அவற்றை காண்பிக்கின்றேன். நீங்கள் சென்னையில் இல்லாவிட்டாலும், சென்னையில் இருக்கும் உங்கள் நண்பர்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லி என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.
என்னை தொடர்பு கொள்ள விருப்பமெனில், இன்று மாலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சந்திக்கலாம்.
இல்லை எனில், சைபர் க்ரைமில் புகார் அளியுங்கள். sms ன் ஊற்றுக்கண் எது என்பதை அவர்கள் கண்டறியட்டும். புகார் அளிக்க வேண்டிய மின்னஞ்சல்
s.balu@nic.in
அலுவலக முகவரி
Assistant Commissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore,
Chennai- 600008
.----
கும்மி,
நீங்கள் அளித்த சுட்டிகளுக்கும் இங்கு நடைபெறும் விவாதத்திற்கும் சம்பந்தமில்லையே.
நான்கூடத்தான் முஸ்லீம்கள் அதிகமாக குடியிருக்கும் இடத்தில் இருக்கிறேன். எனக்கு இதுவரையில் இது போன்ற ஒரு sms வந்ததில்லையே!
மேலும், உங்களுடைய மொபைலிலிருந்தே வேறொரு எண்ணிலிருந்து வந்ததைப்போன்று ஒரு fake sms தயார் செய்ய முடியுமே!
தலைப்பே ஒட்டு மொத்தமாக இசுலாமியர்களைத் தாக்கி, அவர்கள் மீது மற்றொரை இனத்துவேசத்துக்கு உள்ளாக்க்குகிறது.
எல்லா மீதும் இரக்கம் வேண்டும்.
அங்கு ஏன பாரபட்சம்.
உமா கிருஷ்ணமூர்த்தி !
ஒரு சிலர் உங்களிடம் சொன்னதை ஆதாரமாகக்கொண்டு வாதிடுகிறீர்கள்.
கோடிக்கணக்கான இசுலாமியர்கள் உலகமெங்கும் உள்ளார்கள் ?
அவர்களெல்லாம் இனிப்பு வழங்கி கொண்டாடினார்களா ?
இசுலாமியன் ஒருவன் எஸ் எம் எஸ் அனுப்பினான்.
ஆனால் இந்து மதம் எழுதியே வைத்துவிட்டது.
”கரும வினை. அனுபவிக்கிறார்கள்.”
Why dont Kummu file a case against the Hindu religion ?
@mugi
சைபர் க்ரைமில் புகார் செய்யுங்கள். உண்மை நிலை தெரிய வரும். என்னுடைய பெயரைக் குறிப்பிட்டே புகார் அளியுங்கள். சில மன வக்கிரம் பிடித்தவர்கள் வந்து அடிக்கடி வாந்தி எடுப்பதால், ஏற்கனவே எங்கள் தளம் சைபர் க்ரைமால் கவனிக்கப்பட்டு வரும் ஒன்றுதான். இப்பொழுது நடைபெறும் உரையாடல்களும் அவர்களால் கவனிக்கப்படுதான் வரும். புகார் அளியுங்கள், எனக்கு வந்த SMS கள் எங்கிருந்த வந்தன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
பதிவில் சொல்ல விடயத்தைப்பற்றி பேசாதீர்க் என்பது தவறு.
பதிவு போட்டபின் பதிவாளர் இல்லை அங்கே. வாசிப்பவர்கள் மட்டுமே உண்டு.
அவர்கள் மீது என்ன பாதிப்பு அப்பதிவு உண்டாக்கியது என்பதுவே பின்னூட்டங்களாக வரும்.
இங்கு நடப்பது தர்க்க வாதம் அல்ல. இதில் தர்க்கத்துக்கு இடமில்ல.
வெறும் சொற்கள். உணர்ச்சிகள்.பாதிப்புக்கள் அவ்வளவே.
தலைப்பே பெருத்த அவமானத்தையும், மனவேதனையும் இசுலாமியர் அனைவரிடம் உருவாக்கும் என்பது திண்ணம்.
மற்றவரிடம் அஃது கோபத்தை உண்டாக்கும் என்பதும் திண்ணம்.
எனவே பொறுப்புணர்வுடனும் சமூக உணர்வுடன் பதிவுகள் போடப்படவேண்டும்.
தலைப்பைல் எஸ் எம் எஸ் எவனோ எனக்கு அனுப்பினான் என்று கோடிட்டுக்கூட காட்டப்படவில்லை. தலைப்பு பொதுவாக உள்ளது. அதைக்கண்டு கோபத்துடந்தான் உள் நுழைந்தேன்.
பதிவாளர் தன் தவறை உணரவேண்டும்.
//நான்கூடத்தான் முஸ்லீம்கள் அதிகமாக குடியிருக்கும் இடத்தில் இருக்கிறேன். எனக்கு இதுவரையில் இது போன்ற ஒரு sms வந்ததில்லையே!//
கேனத்தனமா இருக்கு உங்க வாதம். உங்களுக்கு வரலைன்னா யாருக்கும் வரலைன்னே அர்த்தமா?
//ஆனால் இந்து மதம் எழுதியே வைத்துவிட்டது.
”கரும வினை. அனுபவிக்கிறார்கள்.”//
இந்து மத்ததின் நம்பிக்கை 'நாம் அனுபவிக்கும் நன்மைகளும் தீமைகளும் நாம் முற்பாவத்தில் செய்த பாவ/புண்ணியங்கள்' என்று. ஆனால், ஜப்பான் பேரழிவிற்கு இந்துக்கள் யாரும் சந்தோஷம் படவில்லை. 'அவனுக்கு அப்படித்தான் ஆக வேண்டும்' என்று சொல்லவில்லை. 'அவன் இந்துவாக இல்லை அதனால் தான் அனுபவிக்கிறான்' என்று சொல்லவில்லை. இந்த அடிப்படை வித்தியாசங்களை புரிந்துகொள்ளுங்கள்.
தலைப்பை வைத்துக்கொண்டு பதிவு பற்றி விவாதத்தை நகர்த்தாமல் ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. கும்மி நீங்கள் ஓய்வெடுங்கள்...
@Jo Amalan Rayen Fernando
சீரிய கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஆனால், விதண்டாவாதம் செய்பவர்களோடு பேசுவதில்லை என்பதை மற்றவர்களை விட நீங்கள் நன்றாக அறிவீர்கள். அடிக்கிற காத்துல உங்க வேட்டிய காய வைக்கலாம்ன்னு வந்திருக்கீங்க. பண்ணுங்க.ஆனால் உங்களுடையே கிருத்துவ டோண்டு செயல்களுக்கு நாங்கள் பதில் சொல்லி எங்கள் நேரத்தை விரயமாக்கவில்லை.
பங்காளி ராஜன் விரும்பினால், உங்களுக்கான பதிலை அவர் அளிக்கட்டும்.
@பாலா
// உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள்.//
அக்கறைக்கு நன்றி.
திண்ணமாக முஸ்லீம் அனைவரும் என்று குறிப்பிடவில்லை இப்பதிவிலென்று வாதிட இயலும் ஆனால் அது இங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்தே இருப்பதால் அவர்களது கமெண்டுகளின் எண்ணிக்கை இன்னும் உயரட்டும் என்று விட்டு விடலாம்
நமக்கு மைனஸ் ஓட்டு போட்டு போட்டு களைத்துப் போய் ஒரு க்ரூப் ஓய்வில் இருக்கின்றது. இப்பொழுது நமக்கு மைனஸ் ஓட்டு போடுவதை கடமையாக மேற்கொண்டு தொடர்ந்து வந்து மைனஸ் குத்திச் செல்கின்றார் ஒரு நண்பர். நண்பா, மறக்காம நாளைக்கும் வாங்க. நாளைக்கு ஒரு பதிவு இருக்கு. வந்து அவசியம் மைனஸ் ஓட்டு போட்டுட்டு போங்க.
///கேனத்தனமா இருக்கு உங்க வாதம். உங்களுக்கு வரலைன்னா யாருக்கும் வரலைன்னே அர்த்தமா?///
சீனு ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. எல்லா மதங்களிலும் உள்ள மதவாதிகளின் மதவெறியை நான் மறுக்கவில்லை. ஆனாலும், இது போன்ற smsகளை மதவாதிகள் தங்களது மதத்தினருக்குள்ளேதான் பகிர்ந்துகொள்வார்கள். எனவேதான் கும்மியின் இந்தப் பதிவு சந்தேகம் கொள்ளவைக்கின்றது.
@mugi
இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமியச் சமூகத்தில் வளர்ந்து, இஸ்லாத்தில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டு இஸ்லாத்திலிருந்து வெளியேறியவன் நான். என் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு நான் இறை மறுப்பாளன் என்று தெரியும். ஒரு சில உறவினர்களுக்கு நான் இறை மறுப்பாளன் என்றுத் தெரியாமல் அந்த sms களை எனக்கு அனுப்பி விட்டனர். நான் அதைப் பற்றிதான் பதிவிட்டுள்ளேன்
கும்மி,
நானும் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய ஆச்சாரப்படி வளர்ந்து கடும் மூமினாக இருந்தவன்தான். இன்று நானும் ஒரு இறைமறுப்பாளனே. என்னுடைய சிலபல நண்பர்களுக்கே கூட இது தெரியாது.உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே வித்தியாசம் நான் ஒரு கம்யூனிஸ்ட். உங்களைப் போன்று குதர்க்கமாக மத மூடநம்பிக்கையாளர்களை விமர்சிப்பதில்லை என்பதுதான். எனக்கும் நிறைய sms வருவதுண்டு. பெங்களூரிலே குழந்தை கோழியானது, நிலாவுல அல்லான்னு பேரு தெரியுது,தக்காளில முஹம்மதுன்னு பேர் தெரியுது ஜஸக்கல்லா, பக்கீரல்லா என்று வந்திருக்கின்றன. அப்பாவி பொதுமக்கள் பலியாவதை முஸ்லீம் சமுதாயமே மதத்தின் கண்கொண்டு ஆதரிக்கிறார்கள் என்பதை நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்.
@mugi
உங்களுக்கு sms வரவில்லைஎன்பதால் அது பரப்பபடவில்லை என்று அர்த்தம் இல்லை. இப்பொழுது இது போன்ற sms கள் உலகம் முழுவதும் உலவுகின்றன; ஜப்பான் உட்பட.
இந்தச் சுட்டிகளை பாருங்கள்.
http://iridescentmusings.blogspot.com/2011/03/why-do-you-trod-on-them-while-theyre.html
http://www.faithfreedom.org/articles/op-ed/gutless-educated-moderate-muslims/
நீங்களோ, உங்கள் நண்பர்களோ சென்னையில் இருந்தால் என்னை வந்து சந்தியுங்கள். எனக்கு sms அனுப்பிய அனைவரிடமும் போன் செய்து பேசுவோம்; அவர்களுக்கு யாரிடமிருந்து வந்தது என்று விசாரிப்போம்.
உங்களுக்கு வரவில்லை என்பதை மட்டும் வைத்து இதனை அணுக முடியாது. இது போன்ற sms வந்ததால்தானே யாகூ உள்ளிட்ட தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
http://answers.yahoo.com/question/index?qid=20110315162025AA886nt
இன்று முழு பின்னோட்டமும் படித்தேன். shameer போன்ற மனிதத்தன்மை உள்ள சகோதரர்கள் பெருமைக்குரியவர்கள்.
இக்பால்செல்வன், பாலா mugi, Joamalanrayen Fernando, உமாகிருஷ்ணமூர்த்தி விதண்டாவாதம் செய்து பதிவின் நோக்கத்தையே திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தார்கள். கும்மி, ராஜன், சீனு தந்தவை நல்ல விளக்கங்கள்.
கும்மி உடல்நலம் பெற விரும்புகிறேன்.
இன்று முழு பின்னோட்டமும் படித்தேன். shameer போன்ற மனிதத்தன்மை உள்ள சகோதரர்கள் பெருமைக்குரியவர்கள்.
இக்பால்செல்வன், பாலா mugi, Joamalanrayen Fernando, உமாகிருஷ்ணமூர்த்தி விதண்டாவாதம் செய்து பதிவின் நோக்கத்தையே திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தார்கள். கும்மி, ராஜன், சீனு தந்தவை நல்ல விளக்கங்கள்.
கும்மி உடல்நலம் பெற விரும்புகிறேன்.
@baleno
//இக்பால்செல்வன், பாலா mugi, Joamalanrayen Fernando, உமாகிருஷ்ணமூர்த்தி விதண்டாவாதம் செய்து //
உங்கள் கருத்தில் நான் மாறுபடுகின்றேன். பாலா அவர்களும், உமாகிருஷ்ணமூர்த்தி அவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்வதாகவே நான் நினைக்கின்றேன். இவர்களுடனான உரையாடல் மூலம், சில விஷயங்கள் தெளிவுபெறும்.
ஆனால், இக்பால் செல்வன், JARF பற்றிய உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.
என் உடல் நலன் மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி.
நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்
வந்து மதவாதிகள் டவுசர் அவுக்கிறேன்!
இன்னும் தேடியதில் இணையத்தில் கிடைத்த சுட்டிகள். இது போன்ற sms கள் இஸ்லாமியர்களிடையே forward செய்யப்பட்டு வருகின்றன என்பதை இங்கு பார்த்தாலும் தெரியும் .
http://answers.yahoo.com/question/index?qid=20110315161530AA5QczN
http://www.qatarliving.com/answers/education/azab-on-japan-punishment
இதற்கு மேலும் இது போன்ற ஒரு sms இல்லை என்று கூறுபவர்களிடம் , எனக்குத் தெரிந்து sms பரப்பிய சிலரை நேரில் கொண்டு வந்து நிறுத்துகின்றேன்.
--
கொஞ்சம் கூட மனிதத்தன்மையற்ற செயலை சில பைத்தியங்கள் செய்து வருகின்றன; அதனை கண்டிக்கின்றோம். இதுதான் இந்தப் பதிவில் இருப்பது. அதை விடுத்து உளறிக்கொண்டிருக்கும் சிலர் தங்களது முகமூடி கிழிந்து தொங்குவதை உணர்தல் நலம்.
@ சரவண வடிவேல்
என் வீட்டில் தீ பிடித்தால் தான் நான் ஃப்யர் சர்வீஸுக்கு கூப்பிடுவேன் என்பீர்கள் போலயே!
ராஜனை குறை சொல்லும் முன் உங்கள் மனநிலையை கொஞ்சம் பரிசீலியுங்கள்!
உலகின் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் கடவுளின் கோவம் தான் காரணம் என்று எல்லா மதவாதிகளும் சொல்லி கொண்டு திரிகிறார்கள்!
எந்த நோக்கத்தையும் திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை.சொல்கின்ற விதம் சரிபார்க்க பட வேண்டும் என்று தான் சொன்னோம்.
விதண்டாவாதம் என்பதற்கு அர்த்தம் என்ன வென்பதை இங்கே கமென்ட் களை ஊன்றி கவனித்தால் உங்களுக்கு தெளிவாகும்.
@கும்மி
நன்றி !சரியான புரிதலுக்கு
//உலகின் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் கடவுளின் கோவம் தான் காரணம் என்று எல்லா மதவாதிகளும் சொல்லி கொண்டு திரிகிறார்கள்!
//
சிறு திருத்தம்.
தன்னை வணங்காத கடவுளின் கோபம் என்று தான் சொல்றாங்க
ஜப்பான் பேரழிவில் தன் மதப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கும் இன்னொரு முட்டாள்.
சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு
/எனவேதான் கும்மியின் இந்தப் பதிவு சந்தேகம் கொள்ளவைக்கின்றது.//
உங்க சந்தேகத்தை இந்த லிங்க் தீர்த்து வைக்கும் http://azeezahmed.wordpress.com/2011/03/17/tsun/
அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது (அல்குர்ஆன் 13:39)
அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன். மிகைத்தவன் . (அல்குர்ஆன் 22:74)
ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் எற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமைமிக்கவன். கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 8:52)
இதுக்கு என்ன பதில் சொல்ல போறாங்க இக்பால் செல்வன் மற்றும் இன்ன பிற
@ சகோ. புதிய்கோணங்கி அவர்களே !!! இப்படியான வாசகங்கள் எனக்கு உடன்பாடில்லாதவை தான், இது இஸ்லாம் மட்டுமில்லை கிருத்துவம், இந்திய வைதிகம், இன்னும் பற்பல பழங்கால மதங்களிலும் இதே போல வாசகங்களும் கருத்துக்களும் உண்டு ... நான் கூறவந்ததை நல்ல முறையில் இங்கு திசைத் திருப்பி விட்டார்கள் ....
ஒரு மதத்தினை பின்பற்றுவோரில் சிலர் வன்முறை செய்யினும், வன்முறை பரப்பினும், ஏன் அந்த மதம் வன்முறையை பிரசங்கம் செய்யினும் - அதை வைத்து அம்மத மக்கள் எல்லாரும் வன்முறையாளர்களாக இங்கு இப்பதிவை எழுதியவரும், ராஜன் போன்றவர்களும், சில இந்து பின்நவீனத்துவ வாதிகள் நிறுவ முயல்வது முட்டாள் தனம் என்றேன்.. எனது கருத்தில் என்ன தவறு இருக்கிறது .... ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மனித குலத்துக்கு பொறுத்திப் பார்ப்பது தகாத முறையாகும் ... இங்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா? அல்லது மதம் நல்லதா கெட்டதா என்பது அப்பாற்பட்ட விடயம் ....
//நான் கூறவந்ததை நல்ல முறையில் இங்கு திசைத் திருப்பி விட்டார்கள் ....//
குரைப்பது என்னும் பதத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் நீங்கள் கூற வந்தது உங்கள் விருப்பப்படி நடந்திருக்கும்.
மனித ஜந்துக்கள் என்று கூறலாம், பழங்கால மதங்களில் வன்முறை வார்த்தைகள் இருப்பதை ஒத்துக்கொள்ளலாம்; ஆனால், நாங்கள் கண்டிதத்தால் மட்டுமே அது குரைப்பு என்று அர்த்தப்படுத்தப் பட வேண்டும். அப்படி அர்த்தப்படுத்தப்படாவிட்டால் திசை திருப்பலாக கருத வேண்டும்.
நல்ல நியாயம்.
மாற்றுக்கருத்தை கூட பதிப்பிக்காத ஒரு தளத்திற்கு சென்று மூக்குடைபட்டு வந்திருப்பீர்கள் போலும். தங்கள் மதமே உயர்ந்தது என்னும் எண்ணத்தில் மனிதத்தன்மையற்று நடப்பவர்களின் மனோபாவத்தை அறியும் பக்குவம் விரைவில் கைகூடட்டும்.
@ கும்மி - விமர்சிப்பதற்கும் - வன்முறையாக்கத்துக்கும் வித்தியாசம் உண்டு --- தங்களின் பதிவை நான் கண்டித்தமைக்கு காரணம் மதாபிமானமோ, அல்லது தங்களை விதாண்டவாதத்துக்கு இழுக்கவோ அன்றி.. அது எனக்கு தேவையும் இல்லை...
முதலில் நீங்கள் கூறிய குறுந்தகவல் கதையை நம்பும்படியாக இல்லை .. அப்படி அது உண்மையாக இருப்பினும் அது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பிரதிப்பலிப்பதாக அமைந்த தொனியில் நீங்கள் எழுதிய பதிவு ஏற்றுக் கொள்ளதக்க வகையில் இல்லை.. சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கலாம், அல்லது முஸ்லிம் மனிதன்மையற்றவ்ர்கள் என்று சொல்லி இருக்கலாம். அதனை விடுத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் வம்புக்கு இழுத்துப் பார்ப்பதால் பகுத்தறிவோ - சமூக வளர்ச்சியோ வந்துவிடப் போவதில்லை. கண்மூடித்தனமாக விமர்சிப்பதால் ஹிட்ஸ்கள் வருமே தவிர ஒரு மாற்றமும் வராது .... அது போல ராஜன் கருத்துக்கள் வன்மமானவை. அவரது கருதுகோளின் படி ஏனைய மதத்தவரைக் காட்டிலும் முஸ்லிம்கள் தீவிரவாத தன்மைக் கொண்டவர்கள் என்பதை ஏற்கும் படி இல்லை .. எனக்கு தெரிந்த வரை தீவிரவாத தன்மை மிகுந்த முஸ்லிம்களை நான் பார்த்தது மிகவும் குறைவு ... ஏன் நான் சார்ந்த வைதிக மத உற்றார்கள் பலர இந்து தீவிரவாத தன்மைக் கொண்டவர்கள் என்பதால் இந்தியாவில் இருக்கும் அனைத்து இந்துக்களும் அப்படித்தான் என்று சொல்வது நியாயமா????
நீங்கள் எப்படி நீங்கள் சார்ந்த இஸ்லாத்தை எதிர்க்கிறீர்களோ அதனை விடவும் நான் நான் சார்ந்த வைதிகத்தை எதிர்க்கிறேன். ஆனால் கல் காலைத் தடுக்கி விட்டது என்பதால் கல் எல்லாம் கூடாதவை ஆகுமா. நெருப்பு சுடுகிறது என்பதால் நெருப்பே வேண்டாம் என்பதா? இது தான் எனது நிலை - இதைப் புரிந்துக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன் ..
முகமது அஜிஜ் மட்டுமில்லை அவரைப் போல பல பதிவர்கள் இஸ்லாத்திலும், இந்து மதத்திலும் ஏன் தமிழ் ஹிந்து என்ற பெயரில் அளப்பரை செய்பவர்களின் கருத்துக்களை நான் எதிர்க்கிறேன் ... தமிழ் பேப்பரிலும் இப்படியான எதிர் வாதங்களை வைத்தனன்.... அதனால் பிராமணர்கள் அனைவரும் முட்டாள் என நான் சொல்வதாக அர்த்தமும் இல்லை. அப்படி சொல்லப் போவதும் இல்லை. மதங்களை எதிர்ப்பவர் அனைவரும் பகுத்தறிவு வாதிகளும் இல்லை. சொல்லப்போனால் பலர் போலி பகுத்தறிவு வாதிகளாக எதோ ஒரு காரணத்துக்காக வலம் வருகின்றார்கள் ... இதில் எனக்கு மூக்குடைந்தாலும் பரவாயில்ல .. கெட்டப் பட்டப் பெயர்கள் வந்தாலும் பரவாயில்லை.. விமர்சிக்கவும், எதிர் கேள்வி வைக்கவும் உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உண்டு ...
@இக்பால் செல்வன்
மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? அவ்வவ்.
sms பற்றிய தகவல்கள் குறித்து வெளியாகியுள்ள பல தளங்களின் சுட்டி அளித்துள்ளேன். சைபர் க்ரைமில் புகார் செய்யும் வழிமுறையையும் கூறியுள்ளேன். என்னிடம் இருக்கும் sms களை நேரில் வருபவர்களிடம் காட்டுவது மட்டுமின்றி, sms அனுப்பியவர்களுக்கு போன் செய்து பேசலாம் என்று சொல்லியுள்ளேன்.
இவை எதையும் பற்றி பேசாமல், sms என்பதை கதை என்று கூறிக்கொண்டிருப்பதன் மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள்.? இதைதான் விதண்டாவாதம் என்று கூறுகின்றோம். நீங்கள் சென்னையில் இருந்தாலோ அல்லது உங்கள் நண்பர்கள் சென்னையில் இருந்தாலோ நேரில் வரச் சொல்லுங்கள். கைபேசிகளை அவர்களே பார்க்கட்டும், sms அனுப்பிய நபர்களுக்கு அவர்களே பேசட்டும். அவர்களது முகவரி வாங்கி நேரில் சென்று கூட அவர்களை உறுதிபடுத்தலாம்.
சந்தேகம் இருப்பின் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். சும்மா, அடிப்படை ஆதாரங்களற்ற புகார்களை கூறிக்கொண்டிருப்பதால் எவ்வித பயனுமில்லை.
சும்மா விதண்டாவாதம் செய்யாமல், கிழிந்து தொங்கும் முகமூடியை இன்னும் கிழியாமல் இருப்பதற்காகவேனும், நேரில் வாருங்கள் அல்லது யாரையேனும் அனுப்புங்கள். sms பற்றி முழுதாக ஆராயலாம். சந்திக்கும் நேரத்தையும், சந்திக்க வருபவரின் தொலைபேசி எண்ணையும் தெரிவியுங்கள். அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். அப்படி இல்லையெனில் நீங்கள் பயன்படுத்திய வார்த்தையான 'குரைத்தலை' நீங்கள் மேற்கொள்ளுங்கள். எங்களுக்கென இருக்கும் வேறு வேலைகளை நாங்கள் பார்க்கின்றோம்.
@ கும்மி உங்களை நேரில் சந்திக்க ஆசை தான், ஆனால் தற்சமயம் வர இயலாது. ப்ளைட் செலவு 80,000 வரை ஆகும்.. ஹிஹி !!! ஒத்துக் கொள்கிறேன் உங்களுக்கு வந்த SMS உண்மை தான். ஆனால் அதை வைத்துக் கொண்டு எல்லா இஸ்லாமியரும் இப்படியானவர்கள் எனக் கூறுவதை ஏற்க முடியாது.. உண்மையில் உன்னதமான உள்ளங்கள் படைத்தவர்கள் இஸ்லாத்தில் உண்டு, நேர்மையாக வாழும் பலரை நான் பார்த்திருக்கிறேன். தங்களின் பகுத்தறிவு பிரச்சாரம் அந்த நல்ல உள்ளங்களைப் பாதிக்கலாம் .. அவர்களை அது மேன்மேலும் மதவாதத்துக்குள் தள்ளுமே ஒழிய !!! உங்களில் பதிவுகளைப் படிட்த்தவுடன் மதங்களை விட்டுவிட்டு யாரும் வரமாட்டார்கள் .... இப்போதும் சொல்கிறேன் மதங்களைக் காரணம் காட்டி அந்த மதத்தில் இருக்கும் அனைவரையும் இகழ்வது நாகரிகமாக படவில்லை ...
@இக்பால் செல்வன்
நீங்கள் சென்னை வரும்போது தெரிவியுங்கள். சந்திப்போம்.
முந்தைய பின்னூட்டத்தில் SMS கதை என்று கூறினீர்கள். எனது பதிலுக்கு பிறகு SMS உண்மைதான் என்று ஒத்துக்கொள்வதாக கூறியுள்ளீர்கள். அதேபோல் உங்களுடைய மற்ற கேள்விகளுக்கும் சரியான பதிலை புரிந்து கொள்ள, என்னுடைய முந்தைய பதில்களையும் அவற்றில் இருக்கும் சுட்டிகளையும் முன்னர் படிக்காவிட்டால், இப்பொழுதாவது படித்து பதிலை 'புரிந்து' கொள்ள முயற்சியுங்கள்.
சகோ.இக்பால் செல்வன்,
உங்கள் பொறுமையும் சகிப்புத்தன்மையும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி சகோ.
///sms பற்றிய தகவல்கள் குறித்து வெளியாகியுள்ள பல தளங்களின் சுட்டி அளித்துள்ளேன். சைபர் க்ரைமில் புகார் செய்யும் வழிமுறையையும் கூறியுள்ளேன். என்னிடம் இருக்கும் sms களை நேரில் வருபவர்களிடம் காட்டுவது மட்டுமின்றி, sms அனுப்பியவர்களுக்கு போன் செய்து பேசலாம் என்று சொல்லியுள்ளேன்.
இவை எதையும் பற்றி பேசாமல், sms என்பதை கதை என்று கூறிக்கொண்டிருப்பதன் மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள்.?///
---இவர் தன் கருத்தில் உண்மையாளராக இருந்திருந்