Friday, March 11, 2011

ஜப்பான் சுனாமி - நடப்பது என்ன?


ஜப்பானில் இன்று மதியம் 2:46 மணிக்கு (JST) ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. அதனினும் கொடுமையாக 900 கிமீ வேகத்தில் சுனாமி அலைகள் ஜப்பான் நாட்டை சூறையாடியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பாரிய பேரிடர் ஏற்பட்டதில்லை என கருதப்படுகின்றது. உலகே ஒன்றிணைந்து ஜப்பானை கட்டியெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில அவசர கால உதவிகளை பல்வேறு அரசுகளும், நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றிய தகவல்களை பலருக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் இடர்ப்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை, காணாமல் போயிருப்பவர்களைக் கண்டறிவதில் உதவுவோம்.

----------------------------------
ஜப்பானில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் அறிய, டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஏறத்தாழ 25000 இந்தியர்கள் ஜப்பானில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
00813 32622391
00813 32622392
00813 32622393
00813 32622394
00813 32622395
00813 32622396
00813 32622397

----------------------------------------------------------

தொடர்பில் இல்லாமல் போனவர்களுக்கான தொடர்புகளை உறுதிபடுத்துவதற்கான சேவையை கூகிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. Japan Person Finder என பெயரிடப்பட்டுள்ள அத்தளம் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தகவல்களை அளிக்கின்றது. நீங்கள் அளிக்கும் தகவல்கள் உடனடியாக பதிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தவறான தகவல்களை அளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


----------------------------------------------------------

Japan Person Finder தளம் தவிர கூகிள் நிறுவனம் Crisis Management தளம் ஒன்றினையும் நிறுவியுள்ளது. அதன் மூலமும் பல தகவல்களை பெற முடியும்


----------------------------------------------

இப்பொழுது ஏற்பட்டுள்ள சுனாமி ஜப்பான் மட்டுமின்றி இன்னும் பல நாடுகளையும் தாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய அபாயங்களை விளக்கும் தளம் ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.


---------------

இக்கட்டான தருணத்தில் நேரிட்டிருக்கும் இப்பேரிடர் பற்றிய உண்மையான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை பரவச் செய்து பாதிப்பில் இருந்து மக்களைக் காப்போம்.


--------------
பிற்சேர்க்கை:

இதுவரை வந்திருக்கும் தகவல்களின் படி 100 பேர் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பல் மூழ்கியுள்ளது. செண்டாய் நகரில் ஒரு சாலையில் மட்டும் 300 உடல்கள் மிதக்கின்றன. ஒரு ரயிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வந்துள்ளது

பசிபிக் பெருங்கடல் முழுதுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா, அமெரிக்காவின் சில பகுதிகள், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஹவாய் தீவுகள், ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியு கினியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது வரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே இதுதான் பெரும் பாதிப்புகளை எற்படுத்தக்கூடியதாய் இருக்கும் என்று கருதப்படுகின்றது


-----------------

அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை பின்னூட்டங்களில் தெரியப்படுத்தி வருகின்றோம். முழுமையான தகவல்களை அறிய பின்னூட்டங்களையும் படியுங்கள்.

48 comments:

பாரத்... பாரதி... said...

சரியான நேரத்தில், சரியான தகவல்களை தந்திருக்கிறீர்கள்..

வால்பையன் said...

நண்பர்கள் உங்கள் தளங்களில் இதை பகிர்ந்து கொள்ளலாம்!

கும்மி said...

இதுவரை வந்திருக்கும் தகவல்களின் படி 100 பேர் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பல் மூழ்கியுள்ளது. செண்டாய் நகரில் ஒரு சாலையில் மட்டும் 300 உடல்கள் மிதக்கின்றன. ஒரு ரயிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வந்துள்ளது.

கும்மி said...

பசிபிக் பெருங்கடல் முழுதுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா, அமெரிக்காவின் சில பகுதிகள், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஹவாய் தீவுகள், ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியு கினியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது வரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே இதுதான் பெரும் பாதிப்புகளை எற்படுத்தக்கூடியதாய் இருக்கும் என்று கருதப்படுகின்றது.

கும்மி said...

ஜப்பானில் இருக்கும் ஐந்து அணு உலைகளில் ஒரு அணு உலையில் coolant சரியாக வேலை செய்ய வில்லை என்று தகவல் வருகின்றது.

கும்மி said...

தைவானுக்கும், நியூசிலாந்துக்கும் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கும்மி said...

பிரான்சில் இருக்கும் நண்பர்கள் தகவல் அறிய அழைக்க வேண்டிய எண்: 0207 008 0000

கும்மி said...

fukushima daiichi nuclear power station ல் இருக்கும் cooling system வேலை செய்யவில்லை. பெரும் ஆபத்து ஏற்படக்கூடும். அப்பகுதியில் அவசர நிலை பிரகடன் செய்யப்பட்டுள்ளது.

கும்மி said...

ஜப்பானில் தற்பொழுது பின்இரவு நேரமாக இருப்பதாலும், மின்சார இணைப்புகள் பழுதடைந்துள்ளதாலும் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன.

கும்மி said...

பூகம்பத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பின்னதிர்வுகள் என்று கூறப்படும் After Shocks தொடர்ந்து மிகப்பெரும் அளவிலான தாக்கங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கும்மி said...

பிலிப்பைன்சுக்கான சுனாமி எச்சரிக்கைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.,

chandru2110 said...

உங்களின் இந்த சேவை மிகவும் பாராட்டத்தக்கது.

கும்மி said...

உலகின் பல்வேறு நாடுகளும் ஜப்பானுக்கு உதவ களமிறங்கி விட்டன

அணு உலைக்குத் தேவையான emergency coolant அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அணு உலையால் பாதிப்பு ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது.

போலந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீயணைப்பு படைகளையும், மீட்புப் படைகளையும், மருத்துவ குழுக்களையும், இன்னும் பல உதவிகளையும் அனுப்பத் தொடங்கிவிட்டன.

கும்மி said...

அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

Gopi Ramamoorthy said...

இந்தோனேஷியாவை சுனாமி தாக்கினால் நமக்கும் பாதிப்பு வரலாம் என்று இன்றைய நாளிதழில் படித்தேன்.

மங்களூர் (கர்நாடகா) பகுதி மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று உத்தரவு வெளியாகி உள்ளது.

சைனாவிலும் நேற்று பூகம்பம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 250 பேர் பலி.

பெங்களூரில் (ஏலங்கா) சில கட்டடங்கள் இன்று அதிகாலை நிலா அதிர்வினால் பாதிக்கப்பட்டுள்ளன.

கும்மி said...

//இந்தோனேஷியாவை சுனாமி தாக்கினால் நமக்கும் பாதிப்பு வரலாம் என்று இன்றைய நாளிதழில் படித்தேன்//

இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் சுனாமி தாக்கினால்தான் நமக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பம் இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில்தான் சுனாமி பாதிப்பு இருக்கும். நமது நாட்டிற்கு இதனால் எவ்வித பாதிப்பும் இருக்காது.

நீங்கள் எந்த நாளிதழில் இந்தச் செய்தியை படித்தீர்கள் என்று குறிப்பிடுங்கள். இதுபோன்று பரபரப்புக்காக எழுதுபவர்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

பெங்களூர் செய்தி பற்றி தற்பொழுது எனக்கு எதுவும் தெரியவில்லை. விபரம் கிடைத்தால் பகிர்ந்துகொள்வோம்.

கும்மி said...

ஜப்பானில் இருக்கும் இரு அணு உலைகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றன,. cooling system வேலை செய்யாததால், radio active vapour வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். அதனால் அப்பகுதியில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் வெளியேறியதும் radio active vapour வெளியேற்றப்படும். இது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். உலகம் சந்திக்கும் மிகப்பெரும் பேரழிவில் இது ஒன்று.

கும்மி said...

மூன்று ரெயில்கள் காணாமல் போய் விட்டதால், ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

கும்மி said...

அணு உலைகளில் மின்சார இணைப்பு முழுதும் துண்டிக்கப்பட்டுள்ளதால், பேட்டரி மூலம் கூலிங் சிஸ்டம் இயக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க படைகளும் ஜப்பானியர்களோடு சேர்ந்து, பேரழிவைத் தடுத்துவிட முயன்று வருகின்றனர்.

ரிக்டர் அளவுகோலில் 6.5 என்னும் அளவிற்கு மேலான பின்ன்னதிர்வுகள் (Aftershocks) தொடர்வதால், பாதுகாப்புப் பணியில் இடையிடையே தொய்வு ஏற்பட்டுள்ளது.

எட்வின் said...

நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி

கும்மி said...

Fukushima அணு உலையில் Reactor கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை. ஆனால், சுற்றுச் சூழல் பெரிதும் மாசுபடக்கூடும்.

கும்மி said...

Pressure has been released in Fukushima plant.

Narmi said...

you have done a good job. keep it up

கும்மி said...

Nuclear meltdown in Fukushima plant is on. To know more about nuclear meltdown refer this wiki article

http://en.wikipedia.org/wiki/Nuclear_meltdown

கும்மி said...

Fukushima No. 1 Nuclear Reactor successfully released vapor, able to decrease pressure.

Really Nice to hear that. Kudos to the team who succeeded.

கும்மி said...

Salute to the Nuclear professionals of Japan who successfully implemented meltdown of Fukushima nuclear plant

கும்மி said...

நேற்று ஏற்பட்ட பூகம்பம் ஜப்பான் தீவினை முன்னர் இருந்த இடத்தில் இருந்து 8 அடிகள் (2.4 மீட்டர்கள்) இடம் நகர்த்தியுள்ளது, பூமியின் அச்சும் 10 சென்டிமீட்டர் அளவிற்கு நகர்ந்துள்ளது. இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளன.

http://edition.cnn.com/2011/WORLD/asiapcf/03/12/japan.earthquake.tsunami.earth/index.html

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/5.html ஷோபா வின் தூற்று.காம் - பகுதி 5 க்கு எதிராக•.

கும்மி said...

அணு உலை வெடித்ததாக 'அதிகாரப்பூர்வமற்ற' தகவல்கள் வருகின்றன.

கும்மி said...

BreakingNews: Explosion heard at quake-hit Fukushima nuclear plant in Japan - AFP via Sky News

Warning to Fukushima residents: Close window / any holes or gaps to prevent any air inside. Do not go out side. Cover yourself”

கும்மி said...

கதிரியக்கப் பொருட்கள் கசிந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. அதனால், 10 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அணு உலையில் வேலை செய்து கொண்டிருந்த சில ஊழியர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

IAEA எனப்படும் சர்வதேச அணு மின் கழகம், ஜப்பானில் இருக்கும் அணு உலைகளின் தற்போதைய நிலையை பற்றிய அறிக்கையை உடனடியாகக் கோரியுள்ளது.

கும்மி said...

பாரத்... பாரதி...,
chandru2110,
Gopi Ramamoorthy மற்றும்
எட்வின் ஆகிய நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

அவசியமான ஆக்கபூர்வ இடுகை.

ரோஸ்விக் said...

மிக சோகமான சம்பவம். :-(

இவ்வளவு தகவல்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருப்பதற்கு நன்றி கும்மி. உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

பாரத்... பாரதி... said...

//கதிரியக்கப் பொருட்கள் கசிந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. //


கதிரியக்கம் கசிய ஆரம்பித்தால், அதிலிருந்து வரும் காமா கதிர்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

கும்மி said...

Evacuation Area சுற்றளவு தற்பொழுது 20 கிமீகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கதிரியிக்கத்தால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அணு உலையில் பணியில் இருந்த நால்வர் காயமடைந்துள்ளனர்.

அணு உலையில் ஏற்பட்டிருக்கும் விபத்து, குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட நீராவியால் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.

சிறு அளவிலான Cesium வெளியேறியது, Roof of the Reactor உடைந்தது தவிர அணு உலை தொடர்பான இதர விஷயங்கள் கட்டுக்குள் இருப்பதாக தெரிகின்றன.

IAEA நாளை காலைக்குள் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அறிக்கை வெளிவந்தால், மிகவும் சரியான நிலவரம் அறிந்து கொள்ள முடியும்.

கும்மி said...

Aftershocks என்று கூறப்படும் பின்னதிர்வுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. அவற்றுள் நான்கு பின்னதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 6 என்னும் அளவிற்கு மேல் இருந்தன.

ஜோதிஜி said...

நேற்று மதியம் தகவல் கிடைத்ததும் வலையுலகில் தேடிப்பார்த்த போது ம்ம்ம்.... சாயங்காலம் தான் சற்ற கண்ணில் பட்டது. ஆனால் இந்த முயற்சி மொத்த வருத்தத்தையும் போக்கி விட்டது.

ஜோதிஜி said...

முதல் நாள் கோடீஸ்வரன். மறுநாள்?

இப்ப எதாவது தோணுதா கும்மியாரே?

கும்மி said...

Fukushima அணு உலையில் ஏற்பட்டுள்ள குளிரூட்டும் அமைப்பின் தோல்வியின் காரணமாக, கடல் நீர் கொண்டு அணு உலையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை நிறைவு பெற இரண்டு நாட்கள் ஆகும்.

கும்மி said...

அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஜப்பானின் முக்கியத் தீவிற்கு வந்துவிட்டன. உயிர்களை பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக ஜப்பானிய பிரதமர் கூறியுள்ளார்.

கும்மி said...

Narmi,
ராஜ நடராஜன் மற்றும்
ரோஸ்விக் நண்பர்களுக்கு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

கும்மி said...

@பாரத்... பாரதி...
Cesium 137 (or Caesium 137 as otherwise spelled) (Cs-137) கசிந்துள்ளது. அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதனுடைய தன்மைகள் போன்றவற்றை பற்றி ஒரு பதிவிடுங்களேன். திங்கள் அன்று உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்.
நன்றி.

கும்மி said...

@ஜோதிஜி

நீங்க கோடீஸ்வரன் பத்தி பேசுறீங்க. ஜப்பான் தீவே இடம் நகர்ந்து இருக்கு; பூமியின் அச்சே சிறிது மாறியுள்ளது.

El-Nino, La- Nina தொடங்கி இன்னும் எவைஎவை எல்லாம் எப்படி மாறப்போகின்றன என்று பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

எல்லாம் பிளேட்டுகள் (plate tectonics) செய்யும் வேலை. நான்கு பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று இணையும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், பாதிப்புகள் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கின்றது.

பாவம், கடவுளுக்கு ஒழுங்காக ப்ளேட்டுகளைக் கூட அமைக்கத் தெரியவில்லை. இவர் அண்ட சராசரத்தையும் பரிபாலிக்கின்றாராம்.

:-)

.

கும்மி said...

கதிரியக்க பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு stable iodine கொடுக்கப்படுகின்றது.

கும்மி said...

Minamisanriku என்னும் நகரத்தில் வசித்த 17000 மக்களில் 9500 பேரைக் காணவில்லை என தகவல்கள் வருகின்றன.

கும்மி said...

Fukushima Nuclear Plant அருகில் மீண்டும் ஒரு நில நடுக்கம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4

Bad is getting worse

தவறு said...

நல்லது கும்மி வாழ்த்துகள்.