#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.
பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.
2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.
பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.
3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.
பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.
4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.
5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.
பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.
6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.
பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.
==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com
http://www.petitiononline.com/TNfisher/petition.html
45 comments:
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பதிப்பில் ட்விட்டர் போராட்டம் பற்றிய தகவல் வந்துள்ளது
என்னால் முடிந்தவரை சில முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
முதல் முயற்சியாக எங்கள் பள்ளியில் படிக்கும் சுமார் 2000 மாணவர்களிட மும், 35 ஆசிரியர்களும் இதுபற்றி இன்று Prayer -ல் என் உணா்வுகளை தெரிவித்தேன்..
மேலும் எனது டியூஸன் சென்டரில் 500 மாணவ , மாணவியர் படிக்கின்றனர்.. இவர்களைகொண்டு நான் உங்களுக்கு உதவமுடியுமா?
@ எல் கே
காலையில் பார்த்த்திருந்தேன். தகவலுக்கு நன்றி LK . ஒவ்வொரு ஊடகமாக நமது போராட்டத்தை பார்த்து செய்திகள் வெளியிடத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்த முன்னெடுப்புகள் மூலம் இதனை இன்னும் பரவச் செய்வோம்.
@ sakthistudycentre-கருன்
ஆர்வத்துக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி கருண்.
online petition ல் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. உங்கள் மாணவர்களிடம் கூறி அவற்றை செய்யுங்கள். நம் சகோதர்களுக்கான நமது பங்களிப்பு இது.
@ வெறும்பய
இப்பொழுது படிக்க முடிகின்றதா?
நானும் என் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறேன்,
தொடர்ந்து துணை நிற்ப்போம்..
கும்மி said...
@ வெறும்பய
இப்பொழுது படிக்க முடிகின்றதா?
//
ஆம் இப்போது சரியாகி விட்டது.. நன்றி..
@கும்மி
எப் எம் ரேடியோக்களில் உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா ?? இன்று எப் எம் கேட்போர் எண்ணிக்கை அதிகம் . அதில் செய்தியை பரப்ப முயற்சிக்கலாம்
நீங்கள் சொல்வது சரிதான்.. நானும் யோசித்தேன். ஆனால் அனைவரிடமும் இமெயில் அட்ரஸ் இல்லையே.. உள்ளவர்களிடம் நான் ஏற்கெனவே கையெழுத்து பற்றி கூறிவிட்டேன்..
இதை சொன்னவுடன் மாணவர்கள் சொன்ன பதில் நம் சகோதர்களுக்கான நமது பங்களிப்பு இது.. இதைகூட செய்யமாட்டோமா என்றார்கள்.. அனைத்து கண்களில் கண்ணீா் அச்சமயத்தில் கண்டேன்..
@எல் கே
நேற்று ஹலோ FM #tnfisherman பற்றி ஒரு நிகழ்ச்சி செய்தார்கள். நாம் மற்றவர்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், நீங்கள் சொன்னதை பற்றி நாங்கள் ஆலோசிக்கவில்லை. நீங்கள் கூறியிருப்பது நிச்சயம் நல்ல விஷயம். அதனையும் முன்னெடுப்போம். மிக்க நன்றி.
@வெறும்பய
நன்றி நண்பா. பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் உங்கள் நண்பர்களோடு ட்விட்டரில் நீங்கள் தொடரும் போராட்டம் பெரும்பங்காற்றி வருகின்றது. இந்த வாரம் முழுவதும் இதனைத் தொடரச்செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவரையும் பெயர் குறிப்பிடாததால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
@sakthistudycentre-கருன்
நன்றி கருண்.
தல... காட்சி ஊடகங்களின் வாயிலாகவும் முயற்சிக்கவும்.. முக்கால்வாசி தமிழ் காளைகள் அதன் முன்னால் தான் உள்ளனர் jill_online
@jill_online
ஊடகங்கள் என்பனவற்றுள் பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், மற்றும் தொலைகாட்சி என்று அனைத்தையும் ஆலோசித்தோம். எல் கே கூறியிருக்கும் FM ரேடியோக்களையும் இணைத்துக் கொள்கின்றோம். ஆலோசனைக்கு நன்றி.
great efforts.
நானும் முயற்ச்சிக்கிறேன்....
//இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பதிப்பில் ட்விட்டர் போராட்டம் பற்றிய தகவல் வந்துள்ளது//
இதுவே வெற்றிதான்....
இதுவே கடைசி படுகொலையாக முடியும் என நமது பணிகள் முன்னெடுத்து செல்கின்றன!
அதே நேரம் அரசின் மெத்தனத்திற்கு அவர்கள் மேல் வழக்கு போடுவது தவறே அல்ல, வரும் முன் காப்பதை விட என்ன பெரிய புடுங்குற வேலை அரசுக்கு!
சல்யூட் நண்பர்களே!
TOI #tnfisherman http://goo.gl/1hELc
@கும்மி
இந்திய மனித உரிமை கமிஷனுக்கும் ஒரு மெயில் அனுப்புங்களேன்??
E-mail : shrc@tn.nic.in covdnhrc@nic.in
ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். நீங்கள் சொல்லியுள்ள கருத்துகள் அனைத்தையும் குறிப்பில் வைத்துள்ளோம். தொடர்ந்தும் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
ஒரு சில விஷயங்களை உடனடியாக அதாவது இன்றோ, நாளையோ செய்ய இயலாத நிலையில் இருக்கின்றோம். முக்கிய தகவல்களை திரட்டி வருகின்றோம். அவை கிடைத்ததும் யாருக்கெல்லாம் அவற்றை தெரியப்படுத்த முடியுமோ அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.
ஒரு சின்ன சந்தேகம் இதுவரை எந்த தொலைக்காட்சிகளிலாவது இந்தப் போராட்டம் சம்பந்தப்பட்ட செய்திகள் வந்திருக்கின்றனவா? சன் குழுமம், கனிமொழி குழுமம் இதனை ஒளிபரப்புச் செய்யாது என நினைக்கின்றேன்.
@ வந்தியத்தேவன்
இதுவரை எந்த தொலைக்காட்சி நிறுவனமும் இது தொடர்பான செய்திகளை வெளியிடவில்லை. CNN-IBN ஒரு சிறப்பு செய்தி அறிக்கை வெளியிடுகின்றோம் என்று கூறினார்கள். அவர்களது வாக்குறுதியும் அரசியல்வியாதிகளின் வாக்குறுதி போல் காற்றில் பறந்து விட்டது.
இப்பொழுது Times of India உள்ளிட்ட சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து நாம் இதனை முன்னெடுத்து மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களையும் செய்தி வெளியிடச் செய்ய முடியும் என்று முனைகின்றோம்.
தமிழகத்தை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு உதவியாக இந்த தகவலைச் சொன்னதற்கு நன்றிகள். அற்புதமான முடிவுகள். எனது ஆலோசனை நமது செய்தியை நாமே பிரபல ஆங்கில திரட்டியில் ஏன் பிரபலம் அடைய செய்யக் கூடாது? பெட்டிஷன் நீங்கலாக உறுதிமொழி படிவம் ஏன் தயரிக்கக்கூடாது?
@நீச்சல்காரன்
நன்றி. நேற்று சந்திப்பின்போது கூட நான் சிலரிடம் கூறினேன். #tnfisherman தொடர்பாய் நல்ல தகவல்களை வெளியிடும் உங்கள் பதிவுகள் பலரிடமும் சென்று சேர்வதில்லை என்று.
ஆங்கிலத் திரட்டிகளில் இணைக்கும் முன்னர் முழுமையான தகவல்களுடன் கூடிய சில கட்டுரைகளை தயாரித்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற காத்திரமான கட்டுரைகளை நாம் பரவச் செய்வதன் மூலம், இதனை இன்னும் பரவலாக்க முடியும்.
எனது இன்னொரு கேள்வி சற்று விளக்கமாக,
ஆங்காங்கே நான் கிரிக்கெட்டை புறக்கணிப்போம், நான் இந்தக் கட்சியை புறக்கணிப்போம், அரசு சரியான முடிவு எடுக்கும் வரை டிவிட்டரிலாவது ஓயாமல் குரல் கொடுப்பேன்......... என்று உறுதி மொழிப் படிவம்{petition அல்ல} தயாரித்து அதில் கையொப்பம் இடுவோம். சம்மந்தப்பட்டவர்கள் காதுக்கு சென்றால் லாபம் தானே
@ நீச்சல்காரன்
இதனை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். கட்சிகள் புறக்கணிப்பு, கிரிக்கெட் புறக்கணிப்பு என்று.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் அபிமானிகளும், கட்சி சாராதவர்களும் இணைந்துதான் இதனை முன்னெடுத்துள்ளோம். இதில் முதன்மையான நோக்கம் இனியும் மீனவர்கள் கொல்லப்படக்கூடாது, துன்புறுத்தப்படக்கூடாது என்பதுதான். கட்சி வேறுபாடுகளை மறந்துதான் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இதில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சியை புறக்கணிக்கக் கோருவது என்பது தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அனைவரும் கொண்ட குழுவிற்கு இதில் எவ்வித நிலைப்பாடும் கிடையாது. ஆனால், குழுவாக இதனை செய்ய முனைந்தால், இப்போதிருக்கும் ஒன்றுபட்ட நோக்கம் சிதைந்து விடும். அதனால், கட்சிகளின் புறக்கணிப்பை இதில் தொடர்புபடுத்த வேண்டாம்.
கிரிக்கட் தொடர்பான விஷயங்களை வேறொரு குழுவினர் முன்னெடுக்கலாம். கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கும் முகிலன், செந்தழல் ரவி போன்றோர் இதனை புறக்கணிக்க முன்வந்திருக்கும் சூழலில், கிரிக்கெட் ஆர்வலர்களிடம் இலங்கையைப் பற்றி எடுத்துக் கூறுவது, நிறுவனங்களை தொடர்பு கொண்டு எதிர்ப்பைத் தெரிவிப்பது போன்ற விஷயங்களை அத்தகையோர் முன்னின்று செய்யலாம். அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவ முடிந்த நீங்களும் தோள் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
என்னுடைய வலையுலக இருபது மாத அனுப்வத்தில் இந்த கட்டுரையை படித்து முடித்ததும் கும்மியாரே உங்களை நேரில் வந்து கட்டிபிடித்து பாராட்ட வேண்டும் போல உள்ளது
செயல்வீரனே வாழ்த்துகள்.
@ ஜோதிஜி
இது அனைவரின் கூட்டு முயற்சி. நல்ல தீர்வு கிடைத்தால், அதில் அனைவருக்கும் பங்கு உண்டு. யார் ஒருவரும் இங்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
நம் சகோதரர்களுக்காக ஒருங்கினைந்துள்ளோம். அது அப்படியே நீடிக்கட்டும்.
மீனவற்காக எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்.வாருங்கள்...
ஆக்கபூர்வமான உழைப்பு கும்மி.கரம் கொடுக்கிறேன்.
This is the way to lead.
பெட்டிஷன் போட மட்டுமே முடிந்தது.
We are a great country with short visionary leaders.The dangerous future of India's southern border is debated,debating now and will be debated because the sorrows faced by the tamil fishermen is continuing even after the srilanka war.Let Nirupama Rao's and other leader's journey to Srilanka is a constructive one to the benefit of India's future rather than a present political and election stunt to gain the public opinion.It is pitty that Pakistan was having a upper hand from the north and a tiny island of Srilanka is taking India for a ride.
@ ராஜ நடராஜன்
உங்களுடைய முதல் பின்னூட்டத்திற்கு ஜோதிஜிக்கு அளித்த பதில்தான்.
--
பெட்டிஷன் அளித்ததற்கு நன்றி. இன்னும் பலரையும் பெட்டிஷனில் கையொப்பம் இடச்சொல்லுங்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. உங்கள் அலுவலகத்தில் இருப்பவர்கள், மற்றவர்கள் என்று அனைவரிடமும் கூறுங்கள்.
ட்விட்டருக்கும் வாருங்கள். உங்களுக்கு 140 என்பது சிரமமாக இருந்தால் ஏற்கனவே அங்கிருப்பவற்றை வெட்டி ஒட்டுங்கள். இன்று மொத்த ட்விட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எண்ணிக்கை குறைந்தால் ட்ரென்டிலிருந்து இறங்கத்தொடங்கிவிடும். அதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கிருப்பவற்றை காப்பி பேஸ்ட் செய்யுங்கள் போதும்.
அன்பு நண்பர்களுக்கு ,உங்கள் செயலூக்கம் அகம் மகிழ செய்கிறது .தமிழக கவர்னர் அவர்களுக்கு ஒரு மனு அனுப்பினால் என்ன ?ஒன்றும் நடக்காது என்றாலும் கூட... மேலும் இதில் அரசு ஊழியர்கள் -தொழிற்சங்கங்களின் பங்களிப்பு பற்றி ஏதேனும் செய்ய முடியுமா என்றும் யோசிக்கலாம் .வணிகர் சங்கம் ,மனித உரிமை இயக்கம் ஆகியவைகளையும் இந்த போராட்டத்திற்கு இனைய செய்யலாம் ,செய்தால் மென்மேலும் வீரியமாக இருக்கும் .
நான் பெடிஷன் கையெழுத்து போட்டுள்ளேன் ,மேலும் என் நண்பர்களுக்கும் தெரிய படுத்துகிறேன் .
Could this blog be posted in English so that other state people can also read it and spread the news?
Boss one Doubt, how this petition can be deliver to India Govt.
http://www.petitiononline.com/TNfisher/petition.html
can u explain how is it possible,
i can understand that , this petition will handover to the Author
4919 Total Signatures
இன்னும் பல ஆயிரம் கையெழுத்துக்கள் தேவைப்படுகிறதே, எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடத்தும் மின்னஞ்சல் , அலைபேசிய மூலமாகவும் கையோப்பமிட்டு உதவ கேட்டிருக்கிறேன்
ட்விட்டர் கீச்சுக்கள் குறைந்துள்ளது என்று கூறியுள்ளீர், தொடர்ந்து முயல்வோம் கண்டிப்பாக நமது நோக்கம் நிறைவேறும்
@rameshp
PetitionOnline தளத்தின் FAQ பக்கம்
அதில் இருக்கும் இந்த விளக்கம் உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்கக்கூடும்.
How are petitions delivered?
At PetitionOnline.com, our policy is that delivery of petitions is at the discretion and by the hand of the petition authors, rather than us, the hosting service.
Petitions can be delivered electronically, simply by emailing the petition URL with a note of explanation to the petition recipient. Or the petition pages can be printed and delivered physically. For maximum impact with a successful petition, we recommend doing both.
Again, at the discretion of the petition authors, petitions can be delivered repeatedly as they gather more signatures. In general, we would recommend against this -- since the first delivery will have the most impact, it is probably better in most cases to wait until a maximum level of support has been recorded. In the case of an urgent issue, there may be a stronger argument for delivering early, and then delivering again later when more support has been demonstrated.
Because of the power of the press in spreading the word, perhaps a very effective strategy would be to send the petition URL relatively early to various appropriate media, with a note of explanation that the petition is still very much in progress. This could bring it more into the public eye, and begin to influence public officials (or other intended recipients), without diluting the impact of the actual petition delivery to them later on. The final delivery to the petition target could then wait until an overwhelming response has been received.
Assistance in printing petitions for delivery may be provided to petition authors on a fee for services basis. Please contact PetitionOnline Customer Service for more information.
---
நாம் இதில் கூறியிருக்கும் இரண்டு வழிமுறைகளையும் பின்பற்ற உள்ளோம். இத்தனை ஆயிரம் பேர் கவலை தெரிவித்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றி ஏன் ஊடகங்களும், அரசும் பேச முன்வரவில்லை என்று முன்னெடுக்கின்றோம். அதற்கு பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன.
--
இதே தளத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தீர்வுகள் அதே பக்கத்தில் பட்டியிலடப்பட்டுள்ளன.
@ Ganapathy Subramanian
ஒரு ஆங்கில ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி.
நீங்கள் அறிந்த நண்பர்களுக்கு அனுப்புவதற்குரிய மின்னஞ்சல் உள்ளடக்கம் ஆங்கிலத்தில். (E-mail Content) இதனை நீங்கள் காப்பி செய்து மின்னஞ்சலாக உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி ஆதரவுக் கோரலாம்.
ஆலோசனைகளும் ஊக்கமும் கொடுக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்.
please keep some pictures related to tnfisherman in this blog,and comments to that photos,this will motivate others
நன்றி நண்பா உங்கள் முயற்சிகளுக்கு... தொடர்ந்து போராடுவோம்.....!
எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடத்தும் மின்னஞ்சல் , அலைபேசிய மூலமாகவும் கையோப்பமிட்டு உதவ கேட்டிருக்கிறேன்.
Post a Comment