Friday, January 28, 2011

#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ

டிபிசிடி முதலில் ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். உறுதியாக தெரியவில்லை. ஆனால் நேற்று இரவு மூன்று மணிவரை தூக்கம் பிடிக்கவில்லை. காரணம் உணர்வுத்தீயாக பற்றி எரிந்த ட்விட்டர்.100 பேர் ரீட்வீட்ட, ஆயிரம் பேர் அதை ட்வீட்ட, ஐம்பதாயிரமாய் ஒரு லட்சமாய் ட்விட்டர் செய்திகள் பரவி, இந்திய அளவில் TNFisherman என்ற வார்த்தை ட்ரண்டாகியது. (ட்ரெண்ட் என்பது பலரும் பேசும் விஷயம், ட்விட்டர் இணையதளத்தில் தானியங்கியாக ட்ரெண்ட் என்ற இடத்தில் காட்டப்படும்).

பல்வேறு பத்திரிகைகள், அரசியல் கட்சிகளின் அபிஷியல் ட்விட்டர் கணக்குகளில் (தெஹல்கா, யூத் பிஜேபி நான் பார்த்தவகையில்) இருந்து செய்திகள் அனுப்ப, ட்விட்டர்கள் எந்த எந்த ஊடகங்களுக்கு இந்த செய்தியை அனுப்பமுடியுமோ அனுப்புகிறார்கள். பிபிசி தமிழ், ஐபிஎன், எண்டிடிவி. என. அனைத்து ஊடகங்களையும் தொடர்புகொள்கிறார்கள்.

இந்திய, தமிழக அரசியல்வாதிகளின், இந்திய ராணுவத்தின் கையாலாக ஆண்மையில்லாத்தனம் பற்றி காறி துப்புகிறார்கள்.

இடையில் ராஜ'பெக்'சேயின் குடிகார கைக்கூலி ஒன்று ஒரு கணக்கு துவங்கி, ட்விட்டர்களின் உணர்வுத்தீயில் சுட்டெரிக்கப்பட்டு ஓடியது வேறு கதா.

ட்விட்டர்களின் உணர்வெழுற்சி என்ன செய்யும் ? ட்விட்டாத பத்திரிகையாளர்கள் உண்டா ? குறைந்தபட்சம் அவர்கள் மனசாட்சியை தட்டி எழுப்பிவிடாதா என்று நேற்றிரவு நினைத்துக்கொண்டேன்.

விடுதலைப்புலிகள் ஆக்டிவ்வாக இருந்தவரையில் பிணத்தை புணரும் சிங்கள பொறுக்கிப்படையை, எதிர்த்து குரல்கொடுத்தால் இருக்கவே இருக்கிறது LTTE முத்திரை ! அதை குத்தி எளிதாக திசை திருப்பிய பொந்து ராம், சோ ராமசாமி பாலோயர்ஸ் இப்போதும் அதே வகையில் முயன்றார்களே ! அதுவும் நேற்று நடந்தது.

இந்தி'ய மத்திய அரசுக்கு எதிராக தமிழர்களின் இந்த குரல் Indian Fisherman ஆக அல்லவா இருக்கவேண்டும். இல்லை. நாம் இந்தியர்கள் அல்ல. வெறும் தமிழன். அதுவும் தமிழ்நாட்டு தமிழன். எட்டு மந்திரி பதவி கொடுத்தால் பிஸ்கெட்டை பொறுக்கிக்கொள்ளும் 'எதுவோ' போல பொறுக்கிக்கொண்டு வந்துவிடுவோம் என்று 'பார்ம்' ஆகிவிட்ட பிறகு நம்மை எவன் மதிப்பான் சொல்லுங்கள்.

சில கூத்தாடி பிரபலங்கள், தங்களது எலுமிச்சை அளவு அறிவைக்கொண்டு, தங்களது அதிமேதாவித்தனத்தை காட்டிய ட்வீட்டுகளும் உண்டு.

இந்திய மத்திய அரசுக்கெதிரான கடும் கோபம், செக்ஸ் ஸ்கேண்டல்களில் மட்டும் அதிக ஆர்வம் காட்டும் இந்தி'ய ஊடகங்கள், பிஸ்கெட்டுக்கு வேலை செய்யும் தமிழ் ஊடகங்களின் உண்மையான முகத்திரை கிழிபட்டது, கிழிபட்டுக்கொண்டிருக்கிறது.

சட்ட நடவடிக்கைக்காக கோர்ட்டை அணுகுவது, இன்னும் பல ஊடகங்களை அணுகுவது என்று இதன் அடுத்த கட்டம் பரபரவென விவாதிக்கப்படுகிறது இப்போது...

மொழி தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது பற்றி எழுதப்பட்ட செய்தி நறுக்குகளை ஒட்டி சுட்டி தருகிறார்கள்...

அனைத்து ட்வீட்டுகளையும் இங்கே எழுதமுடியாது என்பதால், ட்விட்டர் கணக்கு இருந்தால் அங்கே சென்று #TNFisherman என்று டைப் செய்து தேடவும்.

ட்விட்டரில் எழுதி என்னத்தை கிழிக்கப்போறாங்க ? இவங்க எல்லாம் என்னத்தை செய்துட முடியும் என்று ஒருவர் கேட்கிறார் ? தீ சிறியதாக ஆரம்பிக்கலாம். ஆனால் அது காட்டுத்தீயாக. கொடியதை அழிக்கும் தீயாக பரவும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

இனமான உணர்வு என்பது ட்விட்டரிலும் கூட தொடங்கலாம். ! சுயமரியாதை தரும் நெஞ்சுரம் இருக்கும் வரை, சக தமிழனுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் !!

தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. http://www.savetnfisherman.org/

பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண http://twitter.com/#!/search?q=%23tnfisherman

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்களும் இதனைப் பற்றி பதிவிட்டு ஆதரவு அலையைப் பரவச் செய்யுங்கள்.