Saturday, January 29, 2011

கிரிக்கெட் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் !!!

எனக்கு மிகவும் விருப்பமான கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சச்சின், ட்ராவிட், கங்குலி. சச்சின் க்ரீஸை விட்டு இறங்கி அடிக்கு சிக்ஸரும், காலுக்கு வரும் யார்க்கரை அப்படியே போர் ஆக இழுக்கும் ட்ராவிடும், ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை கவரில் விளாசும் கங்குலியும் ஆடிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம்.

இந்தியா தோற்றால் அப்செட் ஆகிவிடுவது, ஜெயித்தால் ஏதோ நானே களத்தில் இறங்கி ஆடியது போலவும் சந்தோஷப்பட்ட காலம் ஒன்று உண்டு.

ஆனால் இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபிறகும், இனிமே சுடமாட்டோம் என்று புளுகும் இந்த அறிவு ஜீவிகள், இதுவரை ஒரு பேச்சுக்கு கூட இது தவறு, இந்த செயலுக்காக வருந்துகிறோம் என்று சொல்லவில்லை.

மத்திய மாநில அரசுகள் வெறும் நிவாரணம், செத்தவன் பொண்டாட்டிக்கு அங்கன்வாடியில் ஆயா வேலை (ஏன் தேர்தல்ல நிக்க வெச்சு ராணுவ மந்திரியாக்குங்களேன் ? ) இங்கிருந்து அங்கே வெளியுறவு செயலாளரை சுற்றுலா அனுப்புவது போன்ற காரியங்களில் இறங்கிவிட்டார்கள்.

இதெல்லாம் வெறும் கண் துடைப்பு என்று விவரம் அறிந்தவர்களுக்கும், ஏன் விவரம் அறியாதவர்களுக்கும் தெரியும். ஈழ விவகாரத்தில் மக்கள் செத்து மடிந்தபோது மேற்கு வங்க பிரணாப் முகர்ஜியும், மலையாள மேனனும் அங்கே சென்று பிரச்சனையை 'சுமூகமாக' முடித்த்து தெரியாதா ? (அனைவரும் செத்து மடிந்தது தான் சுமூகம்.)

ஒரு மலையாளியோ, ஒரு மராட்டியோ, ஒரு பிகாரியோ அண்டை நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டால், இப்படித்தான் ஊடகங்கள் கள்ள மவுனம் காக்குமா ? ஜெஸ்டிஸ் பார் ஜெஸ்ஸிக்கா, ஜெஸ்டிஸ் பார் ஆரூஷி. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டினவே ? இப்போது அறுந்த 537 ஆவது தாலியை கட்டிக்கொண்டிருந்தவளுக்கு ஜஸ்டிஸ் தேவையில்லையா ? அங்கன்வாடி ஆயா வேலை மட்டும் போதுமா ?

இந்தியாவின் எதிரி நாடு என்று சொல்லப்படுவது பாக்கிஸ்தான். நிலையான அரசு கிடையாது அங்கே. அவ்வப்போது ராணுவ ஆட்சி. அந்த நாடு கூட இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் நுழைந்தால் சுடுவதில்லை. கைது தான் செய்கிறது. சமீபத்தில் வாகா எல்லையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் திரும்பி வந்தனர். ஆனால் இலங்கை கொலைவெறி ராணுவத்துக்கோ, மீனவர்களின் படகுகளை கண்டால் துப்பாக்கியை முழக்கத்தான் தெரியும்.




மத்திய மாநில அரசின் ஆட்சியாளர்களுக்கு தமிழன் சாவதை பற்றி கவலை இல்லை என்பதை தெளிவாக அறிந்துகொண்டபிறகு, நாம், மக்கள், நமது எதிர்ப்பை எல்லா வகையிலும் பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி இந்த பிரச்சினையை நகர்த்த முடியும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே, ஜனநாயக முறையில், அகிம்சை வழியில், மத்திய மாநில அரசுகளின் தற்போதைய 'கண்டும்காணா' கொள்கைகளில் சரியான மாற்றம் கொண்டுவரமுடியும்...

நமது எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்று இருக்கிறது. அது,  வரப்போகும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது.

சென்னையில் போட்டி நடந்தால், முழு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஆள் கூட இருக்கக்கூடாது.  தமிழன் என்ற உணர்வு தலை தூக்கவேண்டும். கிரிக்கெட் போட்டிக்கான கட்டணத்தை காசு கொடுத்து வாங்கக்கூடாது.

கிரிக்கெட் போட்டிகளை டிவியிலும் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் தொடர்பாக இணைய போரம்களில் விவாதிக்ககூடாது. கிரிக்கெட் தொடர்பாக வலைப்பதிவுகள், ட்விட்டர் பதிவுகள், பேஸ்புக் அப்டேட்டுகள் என்று எதுவும் கூடாது.

மற்ற மாநிலங்களில் நடக்கும் போட்டிகளில் தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பேனர்களை ஹிந்தியில், தெலுங்கில், சீன மொழியில், சிங்களத்தில், தமிழில், தெலுங்கில் எழுதி உயர பிடிக்கவேண்டும். துண்டு பிரசுரங்களை அடித்து கொடுக்கவேண்டும்.

தமிழன் தனியனாக இந்தி'யக்கடலில் ரத்தம் சிந்தியதை ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்த்து இணையத்தில் பரப்பவேண்டும்.

தமிழக அரசை, ஸ்டாலினை, ஜெயலலிதாவை, சீமானை, வைகோவை, திருமாவை, ராமதாஸை, பெஸ்ட் ராமசாமியை, சோ ராமசாமியை, சுப்ரமணிய சாமியை, இந்து ராமை, எஸ் வி சேகரை எல்லாரையும் இந்த கிரிக்கெட் புறக்கணிப்பை ஆதரிக்கச்சொல்லி கேட்போம்.

ரத்த வெறி பிடித்த சிங்களன் நேற்று ஈழத்தமிழனை அழித்தான். இன்று மீனவனை. நாளை நம் வீட்டு வாசலில் வந்து நிற்பான். நான் எனக்காக கேட்கவில்லை. உங்களுக்காகவும், உங்கள் உறவுகளுக்காகவும் கேட்கிறேன். இந்த பரப்புரைகளை, மறுதலிப்புகளை செய்யுங்கள். இந்த பதிவில் கொடுத்துள்ள படத்தை உங்கள் வலைப்பதிவுகளில், இணைய தளங்களில் சேருங்கள். இந்த பதிவை காப்பி செய்து உங்களுக்கு தெரிந்த தமிழர்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை உங்கள் வலைப்பதிவில் பதிவாக பதிவு செய்யுங்கள். இணைந்திருங்கள். இனம் காப்போம். 

51 comments:

♠ ராஜு ♠ said...

உலகக் கோப்பை கிடக்கட்டும் கழுதை!
முதலில், ஜெயசூர்யா முதலான இலங்கை வீரர்கள் ப்ங்கெடுக்கப் போகும், "சென்னை சூப்பர் சிக்ஸ்:" போட்டியை என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்! ஸ்பான்ஸர் யாரு தெரியும்ல.

டோனி அழுத்திப் புடிச்சு இறுக்கி சுத்தி அடிச்சா, தமிழனுக்கு பொண்டாட்டி புள்ள குட்டி கூட தேவையில்லை. இந்த லட்சணத்துல புறக்கணிப்பாம். புறக்கணிப்பு!

கோடிகள் புரளும் தலமது. தமிழனின் தன்மானமெல்லாம் வேலைக்காக்துல் என்பதுதான் அங்கே முகத்தில் அறையும் நிதர்சனம்.
:-((((((

கும்மி said...

இந்தியா அணுவெடிப்பு சோதனை நிகழ்த்தியபோது விதிக்கப்பட்ட தடைகளை நாம் இந்தியர் என்று ஏற்று நம் ஒற்றுமையை காட்டினோம். நமக்கு கோக் பிடிக்கும் என்பதற்காக, நமது ஒற்றுமையை விட்டுக்கொடுக்கவில்லை.

அதுபோல் இப்பொழுதும் செத்து மடியும் நம் சகோதரனைக் காக்க நம் விருப்பு வெறுப்புகளைப் புறம் தள்ளி, ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.

MANO நாஞ்சில் மனோ said...

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" இல்லையா...................

வடகரை வேலன் said...

இப்பதிவை ஆக்கில மொழியாக்கம் செய்து unilever, smithkline bechem, proctor & gamble, colgae palmolive, pepsico, coco cola india, pidilite industrries, sbi, hdfc, hsbc, airtel, vodafone, aircel, videocon, idea, reliance, maruthi, tata, mahindra போன்ற நிறுவனங்களுக்கு நாம் புறக்கணிக்கப் போதவாத மெயில் அனுப்பலாம்.

கும்மி said...

@வடகரை வேலன்

நல்ல ஆலோசனை. நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றும் இதுதொடர்புடைய வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகளை முதலில் சேகரிக்கத் தொடங்குகின்றோம்.

Vinoth said...

இலங்கையை ஆதரிக்கும் தி இந்து போன்ற நாளேடுகள் புறக்கணித்தாலே தெரியும் விடை

வடகரை வேலன் said...

விளம்பர நிறுவனங்கள், பத்திரிக்கைகளில் பணிபுரிவோரிடம் தொடர்பு முகவரி, மின்னஞ்சல் கிட்டும். லக்கி, அதிஷா, பைத்தியக்காரன் முதலானோரிடம் முயலலாம்.

கும்மி said...

@வடகரை வேலன்

வழிகாட்டுதலுக்கு நன்றி. அதன்படி செய்கின்றோம்.

மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்த மற்றவர்களும் தகவல் தெரிவியுங்கள்.

வடகரை வேலன் said...

http://www.aaaindia.org/membershiplist.htm

இந்தச் சுட்டியில் இந்தியாவின் முன்னணி விளம்பர நிறுவனங்களின் தொடர்புத் தகவல்கள் அனைத்தும் உள்ளன.

கும்மி said...

@வடகரை வேலன்

மீண்டும் நன்றி.

ராஜன் said...

செந்தழல் ரவிக்கு சல்யூட்!

ராஜன் said...

//ஆனால் இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது. //

இன்றைக்கு என்பதற்கே 2,3 வருடங்கள் என பொருள் கொள்ளலாம்!

ராஜன் said...

//இங்கிருந்து அங்கே வெளியுறவு செயலாளரை சுற்றுலா அனுப்புவது//

இது தான் காட்டியும் குடுக்கறது; கூட்டியும்ம் குடுக்கறது

ராஜன் said...

//ஒரு மலையாளியோ, ஒரு மராட்டியோ, ஒரு பிகாரியோ அண்டை நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டால், இப்படித்தான் ஊடகங்கள் கள்ள மவுனம் காக்குமா ?//


நம்ம பத்திரிக்கைங்க மட்டும் உத்திரபிரதேசத்து வனங்களில் மிருக வேட்டையை ஃபோகஸ் செய் கிறதா என்ன? அதுபோல் தான் அவர்களுக்கு தமிழன் உயிரும்

ராஜன் said...

//ஜெஸ்டிஸ் பார் ஜெஸ்ஸிக்கா, ஜெஸ்டிஸ் பார் ஆரூஷி. //

இப்போ தேவை ஜஸ்டிஸ் ஃபார் ஜஸ்டிஸ்!

ராஜன் said...

//நமது எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்று இருக்கிறது. அது, வரப்போகும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது.//

நண்பர் ரவிக்கு.

போட்டிகளைப் புறக்கணிக்கும் முடிவு பயன் தருமெனத் தோன்றவில்லை.

அதை விடவும் இலங்கை அணியை மட்டும் வரவிடாமல் எதிர்ப்பது என்பது அழுத்தமானதாக இருக்கும்.

செந்தழல் ரவி said...

ராஜன், இங்கே ஒன்றை நன்றாக கவனிக்கவேண்டும். ஈழப்போரையும் அங்கே மக்கள் கொத்து கொத்தாக மடிந்ததையும் நாம் தொடர்புபடுத்தினாலே நமக்கு புலி முத்திரை குத்தி இந்த எழுற்சியை நீர்த்துபோக செய்ய ஒரு கூட்டம் அலைகிறது !!!

செந்தழல் ரவி said...

இலங்கை அணியை வரவிடாமல் தடுக்க முடியாது ! அதை விட வரவிட்டு புறக்கணிப்பதே சரியானது. சேப்பாக்கத்துக்கு ஒரு தமிழன் கூட போகவில்லை என்றால் அதை ப்ராட்காஸ்ட் செய்யும் காமிராக்களுக்கு கூட புரிந்துபோகும். நாம் புறக்கணிக்கப்பட்டவர்கள் என !!

ராஜன் said...

//ராஜன், இங்கே ஒன்றை நன்றாக கவனிக்கவேண்டும். ஈழப்போரையும் அங்கே மக்கள் கொத்து கொத்தாக மடிந்ததையும் நாம் தொடர்புபடுத்தினாலே நமக்கு புலி முத்திரை குத்தி இந்த எழுற்சியை நீர்த்துபோக செய்ய ஒரு கூட்டம் அலைகிறது !!!
/

புலிகளின் தற்காலிக ஒடுக்கத்திற்குப் பிறகு இது போன்ற முயற்சிகளுக்கி பலனில்லை! ஸோ அம்முயற்சிதான் நீர்த்துப் போகும்

ராஜன் said...

//இலங்கை அணியை வரவிடாமல் தடுக்க முடியாது ! அதை விட வரவிட்டு புறக்கணிப்பதே சரியானது. சேப்பாக்கத்துக்கு ஒரு தமிழன் கூட போகவில்லை என்றால் அதை ப்ராட்காஸ்ட் செய்யும் காமிராக்களுக்கு கூட புரிந்துபோகும். நாம் புறக்கணிக்கப்பட்டவர்கள் என !! //

இது சரியான வழி! தொடர்வோம்! டுவிட்டர்ரிலும் இன்னபிற சமூக வலைதளங்களிலும் கடந்த 2,3 நாட்களைக் காட்டிலும் அனல் பறக்கு பரப்புரை தேவைப்படும் உலகக் கோப்பை சீசனில். ஸோ சக பதிவர்கள்;டுவிட்டர்கள் மனதில் இலங்கை அணி எதிர்ப்பை ஆழ வேரூன்றச் செய்தல் வேண்டும்

ராஜ நடராஜன் said...

//தமிழக அரசை, ஸ்டாலினை, ஜெயலலிதாவை, சீமானை, வைகோவை, திருமாவை, ராமதாஸை, பெஸ்ட் ராமசாமியை, சோ ராமசாமியை, சுப்ரமணிய சாமியை, இந்து ராமை, எஸ் வி சேகரை எல்லாரையும் இந்த கிரிக்கெட் புறக்கணிப்பை ஆதரிக்கச்சொல்லி கேட்போம்.//

நல்லாத்தானே நடந்து வந்திட்டிருந்தீங்க!கால் சறுக்கிடுச்சா?

ராஜ நடராஜன் said...

பேசாம ட்விட்டரை பரவச்செய்யுங்கள்.பாப்கார்ன்,பெப்சி குடிக்கும் இளைஞர்கள் காதுக்காவது போய் கேட்கும்.

கக்கு - மாணிக்கம் said...

நம் அனைவரும் செய்யவேண்டிய காரியம் இது. "சென்னை சூப்பர் சிக்ஸ்:" போட்டியை புறக்கணிப்போம் முதலில் பின்னர் வரிசையாக.....

// சென்னையில் போட்டி நடந்தால், முழு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஆள் கூட இருக்கக்கூடாது. தமிழன் என்ற உணர்வு தலை தூக்கவேண்டும். கிரிக்கெட் போட்டிக்கான கட்டணத்தை காசு //கொடுத்து வாங்கக்கூடாது.//

இது நடந்துவிட்டால் பாதி வெற்றி.

ஈரோடு கதிர் said...

சிங்களவனிடம் தமிழ் மீனவன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டும் பலியாகும் மீனவனுக்கு வெறும் 5 லட்சம் காசோலையோடு கடமையை முடிக்க நினைக்கும், கடிதங்களோடு மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் கண்ணாமூச்சியாடும் தமிழக அரசினைக் கண்டித்து.... விருது பட்டியலில் உள்ளவர்களைக் கலைமாமணி விருதுகளைப் புறக்கணிக்கக் கோருவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்டிப்பாக செய்ய வேண்டும் செய்வோம்!

தக்காளி said...

தக்காளி....
குடும்பத்தில் ஒருவனை யு.ஸ், யு.கே என அனுப்பிவிட்டு, வரும் லட்சங்களில் புரளும் மேல்தட்டு மகராசன்கள் தான் சேப்பாக்கத்தில் டிக்கெட் எடுத்து உக்காந்திருப்பாங்க... அவங்களுக்கு இன உணர்வு ஒண்ணுதான் இப்போ கேடு...
நடுத்தர வர்க்கத்தினர் டி.வியில் கிரிக்கெட் பார்ப்பதை தவிர்க்க வைப்பது மிக கடினமான செயல். கிரிக்கெட் பார்க்கும் போது வீட்டுக்குள்ள எவனாவது பூந்து கொள்ளையடிச்சா கூட எவனுக்கும் தெரியறதில்லை... இவனுங்களுக்கு புரிய வெக்கறதே பெருசு..
புறக்கணிப்பு என்பது களத்தில் இறங்கி நமது எதிர்ப்பை காட்டினால் மட்டுமே சாத்தியம்.

தக்காளி said...

ட்விட்டரில் இன்றிலிருந்தே கிரிக்கெட் புறக்கணிப்பு பிரசாரத்தை ஆரம்பித்தல் நலம்

கிணற்றுத் தவளை said...

எல்லாம் சரிதான். நானும் முழு மனதோடு ஆதரிக்கும் வேளையில், நமது மானம் கெட்ட தமிழர்கள் முழு அளவில் இதற்கு வரவேற்பு தருவார்களா என்பது சந்தேகமே, நமகெல்லாம் நமது ஓட்டையே ஒழுங்காக போடத் தெரியலியே? அதுவும் போகத் தமிழகத் தேர்வு நேரத்தில் நடத்தப் படும் இந்த கிரிகட்டு திருவிழாவுக்கு என்றுமே ஆட்சேபனை வந்ததில்லையே. நம் வீட்டில் ஒருத்தன் செத்துக் கிடந்தாலே நாம் கிரிகெடு பார்க்காமல் இருக்க மாட்டோமே? அப்புறம் எங்கே மீனவனுக்கு நாம் அனுதாபபடுவது?

azhagan said...

No use in getting emotional. I dont see boycott happening, if you check, the tickets are already sold out!. People after spending Rs.500 minimum per ticket definitely will have second thoughts about the boycott proposal, don't you think?

மா சிவகுமார் said...

மத்தவங்க சேருவாங்களா என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். புறக்கணிக்க வேண்டும் என்று உணரும் ஒவ்வொருவரும் அதை வெளியில் அறிவித்து (டிவிட்டர், வலைப்பதிவு, ஃபேஸ்புக்), புறக்கணிப்பை கடைப்பிடித்தால் போதும்.

புறக்கணிப்பு :
1. மைதானத்துக்குப் போகக் கூடாது
2. தொலைக்காட்சியில் பார்க்கக் கூடாது
3. இணையத்தில் படிக்கக் கூடாது
4. நண்பர்களுடன் விவாதிக்கக் கூடாது

இதைச் செய்வதற்கான மன உறுதியும் கட்டுப்பாடும் இருப்பவர்கள் எல்லாம் மீனவ உயிர்களைப் பாதுகாக்க புறக்கணிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.

tharuthalai said...

சென்னையில் நடைபெறும் ஆட்டங்களை நேரில் சென்று பார்க்காமல் விளையாட்டரங்கம் வெறிச்சோடி கிடந்து புறக்கணித்தாலே நமது உணர்வுகள் அழுத்தமாக உளக அளவில் பதிந்துவிடும்.
தற்போதைக்கு, நாம் அதை குறிக்கோளாகக் கொண்டு, அதற்கான வியூகங்களை வகுக்கலாமே.

கருங்காலிகளும், சோமாறிகளும் தமிழர்கள் என்ற போர்வையில் நம்மிடையே ஊடுருவியிக்கும் நிலையில் இது சற்று சவாலான செயல்தான். இருப்பினும் பெரியார் பிறந்த மண்ணில் இது சாத்தியமே.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

குறை ஒன்றும் இல்லை !!! said...

// இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது//

:) Folk !!! Then why don't you surrender your Indian passport ? Its very easy to advice but difficult to follow. Don't you think its not at all possible? If you and other supporters have enough guts why don't you to send a Notice to government and seek a permission to protest ? You wont and none of the commenter do .. Every one is playing safe game... for getting Vote plz don't drag with poor fisherman's death...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//http://www.aaaindia.org/membershiplist.htm

இந்தச் சுட்டியில் இந்தியாவின் முன்னணி விளம்பர நிறுவனங்களின் தொடர்புத் தகவல்கள் அனைத்தும் உள்ளன//

This is another Comedy !!!! Don't you people think that all unnecessary mails( for their point of view) will be moved to thrash folder ? Everyone is emotional and simply giving suggestions.. No one will including me will come to the road and protest ....

கும்மி said...

@ குறை ஒன்றும் இல்லை !!!

So, you think protest means it will take place only in streets? There are other forms of protests and we are on that way. We neither belong to any political body nor to any caste based organisations. We were moved by the brutality and showing our dissent to the government and media.

We are not just emotional idiots to flood the mail boxes. We will plan and proceed. PIL is also on consideration. If you don't want to be a part of it, just keep watching. We are looking for volunteers alone and not forcing anyone to be on our track.

Thanks for your comments.

tharuthalai said...

//:) Folk !!! Then why don't you surrender your Indian passport ? //

I do hear this kind of rubbish argument. We are happy to surrender hIndian passport and proud to hold TamilNadu passport. Can you advise the hIndian govt to do the needful?

BTW, I am all for united India, never advocate seperate nation for Tamizhsin India. If hIndians want us to be an independant nation, then why not?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//We were moved by the brutality and showing our dissent to the government and media.//

Which media Folk? Internet? becoz the news channels are already in Party's hand.

I wish you all the best for your protest...

குறை ஒன்றும் இல்லை !!! said...

I happened see some blogs protesting over twitter and Blogs!!! I don't understand how many of the real voters read the blogs and twitter .... The same emotion happed during Srilanka War but ......

கும்மி said...

//becoz the news channels are already in Party's hand.

I wish you all the best for your protest..//

We have got responses from few media houses and hope the trend will continue to bring in more media houses in support.

Thanks for your wishes.

கும்மி said...

//I don't understand how many of the real voters read the blogs and twitter .... The same emotion happed during Srilanka War but //

Voting masses don't come here. but we will carry the message thro' proper channels. We have realised the facts and we will move accordingly.

We have some other important works than debating. Hope, you will understand. Even if you are not with us, don't be against us. We will go on our way. AND we don't have time to ...

Thanks PERIOD

ராஜ நடராஜன் said...

//புறக்கணிப்பு :
1. மைதானத்துக்குப் போகக் கூடாது
2. தொலைக்காட்சியில் பார்க்கக் கூடாது
3. இணையத்தில் படிக்கக் கூடாது
4. நண்பர்களுடன் விவாதிக்கக் கூடாது//

இப்பவே நான் புறக்கணித்த மாதிரிதான்.
தமிழகம் சுற்றியதில் என்னுடைய முக்கிய கவலையே நாம் இங்கே விவாதிப்பதெல்லாம் பெரும்பான்மையோர்க்கு போய்ச்சேர்வதில்லையென்பதே.

இது குறித்து கும்மி,செந்திலிடம் சந்திக்கும் போது கேள்வியெழுப்பியிருந்தேன்.

jagadesan said...

பாஸ்..என்ன பாஸ் இது... நாம் அனைவரும் இந்தியர்கள். நமது நோக்கம் இந்திய அரசியலை குற்றம் சாடுவதா அல்ல இந்தியாவை குற்றம் சாடுவதா? எனக்கு புரியவில்லை. அப்படி பார்த்தல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நாம் இங்கு என்ன செய்தோம். அதற்காக சிங்கள ராணுவம் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. சிங்கள ராணுவம் ஈழதமிழர்களுக்கு செய்த கொடுமையை தான் நமது அரசியல் வாதிகள் நமது நாட்டிற்கு செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த பெர்ச்சனையினால் நமது ஒற்றுமை பாத்திகபடிகிறதோ என்று நான் அஞ்சுகிறேன். தோழர்களே, தயவு செய்து இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்க வேண்டாம், ப்ளீஸ்.

செந்தழல் ரவி said...

தோழர்களே. தோழர் குறை ஒன்றும் இல்லை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் என்பதால் நீங்களும் ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்றில்லை. பதிலை தமிழில் எழுத முயலுங்கள்..

dr suneel krishnan said...

நண்பர்களுக்கு
இது ஒரு இலட்சிய வாத திட்டமாகவும் ,நல்ல கவன ஈர்ப்பாகவும் அமைவதற்கு வாய்ப்புள்ள திட்டம் என்பதை மறுப்பதற்கு இல்லை ..
ஆகினும் நம் மக்களை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை ,அவர்களுக்கு தன வீட்டில் இழவு விழுந்தால் கூட சீரியல் பார்த்து விட்டு தான் பிணத்தை தூக்குகிறார்கள் .மன்னிக்கவும் ரவி ,தவறாக எண்ண வேண்டாம் - இது வெகு ஜன எதிர்பாக மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை .நம் மக்கள் கிரிக்கெட்டை நிச்சயம் புறக்கணிக்க மாட்டார்கள் ,நம் பிரசாரம் -எத்தனை பேரை போய் சேரும் ? எத்தனை பேர் செவி மடுபார்கள் என்று தெரியவில்லை .

இதை இனைய உலகம் தாண்டி வெகு ஜன இயக்கமாக மாற்ற வழி எதுவும் உண்டா என்று யோசிப்போம் .
நடைமுறையில் ஏதேனும் அரசியல் இயக்க ஆதரவு இல்லாமல் தன்னிச்சையாக மக்கள் எழுச்சி பெறுவார்களா ? அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரினாலும் -அவர்கள் பன்னாட்டு நிறுவனகளின் பணத்தில் தானே கட்சி நடத்துகிறார்கள் ,அவர்களும் ஒப்புகொள்ள மாட்டார்கள் ..யோசிக்கலாம் ..

கிணற்றுத் தவளை said...

நடக்குதோ இல்லையோ நமது எதிர்ப்பை பதிப்பது எப்போதும் நல்லதே. நாம் ஓட்டு போடுபவரா எப்போதும் தேர்தலில் வெற்றியடைகிறார்? அதற்காக ஓட்டு போடாமல் இருந்துவிடுகிறோமா. குறை ஒன்றும் இல்லை, வெளி நாட்டில் தங்கியிருக்கும் இந்திய ப்ரஜை ஆனால் இது தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன். இந்திய பாஸ்போர்ட்ட்க்கு இந்த உலகில் எங்கேயும் மதிப்பில்லை. பலர் அவமானப்படுகிறார்கள். வெளியில் சொல்வதில்லை. பெரிய ஆட்கள் அவமானப்பட்டால் மட்டுமே சந்திக்கு வருகிற்து. உலகின் சில நாடுகளுக்கு மட்டுமே இந்த நிலைமை. அதில் இந்திய பாஸ்போர்ட்டும் ஒன்று. இந்த நிலைமைக்கும் முழு காரணமும் நமது கேடுகெட்ட மானம்கெட்ட , பக்கிகள் அரசியல்வாதிகளையே சாரும்.

செந்தழல் ரவி said...

தோழரே. நீங்கள் இந்தியர் என்றால் ஏன் உங்களால் இந்தியப்பகுதியான லால் சவுக்கில் இந்திய தேசியக்கொடி ஏற்ற முடியவில்லை ?

செந்தழல் ரவி said...

குறை ஒன்றும் இல்லை !!

வலைப்பதிவுகள், ட்விட்டர் ஆகியவற்றின் ரீச் குறைவுதான். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பத்திரிக்கை ஆசிறியர்கள், பதிப்பாளர்கள், அரசு ஊழியர்கள் வலைப்பதிவுகளை படிக்கிறார்கள். ஊடகங்கள் அரசிடம், அரசு சார்பானவர்களிடம் இருப்பதாலேயே இது போன்ற மாற்று ஊடகங்களின் மூலம், அறிவு சார் தளத்தில் மன மாற்றத்தை உருவாக்க முயல்கிறோம்.

எதுவுமே பேசாத மவுனம் கூட போராட்டம் ஆகும். அதனால் எங்களது இந்த போராட்ட முறையையும் 'குறை' சொல்வதை விட்டுவிட்டு, எங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன் !!!

உங்களுக்கு புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும் என்று நீங்கள் சொல்ல காரணம், என்னுடைய இந்திய ஆட்சியாளர்களின் மீதான வெறுப்பான வார்த்தைகள்தானே ? ஆனால் 500க்கும் மேற்பட்ட தன்னுடைய சொந்த நாட்டின் குடிமக்கள் / மீனவர்கள் கொல்லப்பட்டதையும், கண்டிக்கிறோம் என்ற வார்த்தையுடன் நிறுத்தும் நாட்டை எப்படி நேசிக்கமுடியும் ?

ஒரு அமெரிக்க அல்லது ஆஸ்திரேலிய குடிமகனை வேறு நாடு சுட்டுக்கொல்ல முடியுமா ? அட இஸ்ரேலிய குடிமகனை ? பிராந்திய வல்லரசு, ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தை நோக்கிய நகர்வு ஆகியவை, காஷ்மீர்த்து / அருணாச்சலத்து மக்களுக்கு கொடுக்கப்படும் தனி விசாவையாவது மாற்ற முடியுமா ?

jagadesan said...

//தோழரே. நீங்கள் இந்தியர் என்றால் ஏன் உங்களால் இந்தியப்பகுதியான லால் சவுக்கில் இந்திய தேசியக்கொடி ஏற்ற முடியவில்லை ?//
நீங்கள் கூறுவுது நூற்றுக்கு நூறு உண்மை. ஒரு இந்தியனாக லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்ற முடியாமல் போனதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். அதற்காக உலகக் கோப்பை புறக்கணிக்க வேண்டும் என்குறீர்களா?

-L-L-D-a-s-u said...

// don't you surrender your Indian passport ?//

அண்ணே அண்ணே ,, இந்தியாவுக்கு சொதந்திரம் வாங்கித் தந்ததா ஆராப்பு புக்லே படிச்சமே, காந்தி, அவரு எந்த பாஸ்போர்ட்டை வச்சு , இங்கிலாந்து போனாரு .. இந்தியபாஸ்போர்ட் வச்சா, ???

-L-L-D-a-s-u said...

அப்புறம் அண்ணே, நாம‌ இருக்குற ஊர்ல, ezlink கார்டுன்னு ஒன்னு வச்சுருக்கோம் . அத வச்சுதான் பஸ்ல ட்ரெய்ன்ல் டிக்கெட் மாதிரி ஊஸ் பண்ணுவோம். ezlink கார்டுக்கெல்லாம் நாங்க புல்லரிச்சுக்கிறதில்ல. பஸ்ல இந்த கர்மமுன்னா ஃப்ளைட்ல அந்த கர்மம் . அம்புட்டுதேன்

tharuthalai said...

சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சிங்கள நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் / நிறுவணிங்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்க வேண்டும்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன'2011)

goma said...

இந்த கிரிக்கெட் பைத்தியங்களை ,வீல் நிமித்த ! பெண்டெடுக்க !எதுவும் பண்ண முடியாது.....பட்டு திருந்தினாத்தான் உண்டு