Saturday, November 26, 2011

மயக்கம் என்ன! - A Film By Selvaragavan!

விஷூவல் மீடியம் கலை வடிவமான சினிமாவில், இந்தியப்படங்கள் தொட மறுக்கும் அழகுணர்ச்சியை வடிக்க பாலுமகேந்திரா போன்ற சிற்சில இயக்குநர்களே முயன்றிருக்கின்றனர். அவ்வகையில் சமகாலத்திய வெளிச்சம் செல்வ ராகவன். எல்லா படங்களிலும் End கார்டில் A Film By போட்டுக்கொள்கிறார்கள் தான், ஆனால் அதற்கெல்லாம் வக்கு இருக்கிறதா அந்தப் படங்களுக்கு என்றொரு கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் செல்வராகவன் படங்களின் நிறமும், அழகுணர்ச்சியும் இன்ன பிறவும் தனித்துவம் மிக்கவை.

செல்வராகவன் போன்ற இயக்குநரின் படங்களை மேற்கத்திய படங்களுடன் ஒப்பிட்டு குறைத்து எண்ணுவதும், சில பல மொக்கையர்களின் மொக்கைகளுக்கு ஜனரஞ்சகம் என்ற பெயரில் கிரீடம் சூட்டுவதும் என்னளவில் ஏற்புடையதாக இல்லை. 

ஒரு ஐரோப்பியன் பனி பொழியும் மலைச்சாரலை கேமராவில் படம் பிடிக்கிறான் என்றால் இங்கேயும் செட் போட்டு, தெர்மகோல் அட்டையை தூள் தூளாக்கித் தூவிக்கொண்டு அதைப் படம் பிடிப்பது மடத்தனம். கேமராவில் காட்சிப்படுத்த அவனுக்கு பனி மலை எனில் நமக்கு வறண்ட பாறையாக இருப்பதுதான் இயல்பான ஒன்று. பாவைக்கூத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் நமது சினிமா இருக்கும்! இருப்பது அழகு! பாடல்கள், நாடகத் தன்மை என நமது சினிமாவுக்கான வார்ப்பு சிதையாமல் இருப்பதே நல்லது என்பது என் துணிபு.

நம் வாழ்வியலை, அதன் நிஜத்துக்கு மிகவும் அண்மையில் காட்சிப்படுத்தும் கலை கைவரப்பெற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் கிராமத்து மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பூமி என படமாக்குபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விதிவிலக்காக பாலு மகேந்திரா. மயக்கம் என்ன திரைப்படம் அவரது மாஸ்டர் பீஸ்களின் நிறத்தைக் கொண்டிருந்தது. நிஜத்துக்கு வெகு அருகில் நெருங்கி நின்றது என்றும் சொல்லலாம்.

மிகச்சிறந்த ஒரு நடிகனின் வெர்சடைல் ஆகிருதியை, திரையின் ஒரு மூலையில் தெரியும் தன் கண்களின் மூலம் கூட பார்வையாளனை கவர்ந்து ஈர்க்கும்; தன்னிடத்தில் ஒரு கூட்டத்தின் கருத்தை செறிவுடன்  நிற்கச்செய்யும் திறனை இதுவரை இல்லாத அளவு வெளிக்கொணர வாய்ப்பளித்திருக்கிறது கார்த்திக் கேரக்டர்! 

10 கதாபாத்திரங்களுடன் ஒரு ட்ராமா! யதார்த்தமான வசனங்கள், அழகிய கேமரா மொழி, வருடும் பின்னணி இசை, ஏற்கனவே ஹிட்டடித்த பாடல்கள். தனுஷ்-செல்வா காம்பினேஷன் - ஏமாற்றவில்லை.

மனதில் இருக்கும் ஸ்க்ரிப்டை போகிற போக்கில் ஷூட் செய்யும் செல்வராகவனின் வழக்கத்தாலேயே தென்படும் சிற்சில சொதப்பல்கள் மனதில் நிற்பதில்லை. 

படத்தின் மையம் தனுஷ்-ம் அவர் மூலம் வெளிப்படும் செல்வராகவனும் தான். வனவாழ்வு சார் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஹீரோ, மறுக்கப்படும் திறமை, காதல், சகிக்கவொட்டாத துரோகம், ஏமாற்றம், விபத்து, மனநிலை பிறழ்வு, காதலின் அரவணைப்பு, அதிர்ச்சி, மீட்சி, வெற்றி. இதுதான் கதைப்போக்கு! இதில் தனுஷ் மட்டுமின்றி ஏறக்குறைய எல்லோருமே நடிப்பில் சராசரிக்கும் மேலே! 


முதலில் தனது நடிப்பில் அன்னியமாகப் படும் ரிச்சா இரண்டாம் பாதியில் தனுஷுடன் போட்டி போடுகிறார். அதீத மனநிலை கொண்ட தனுஷால் கீழே தள்ளிவிடப்பட்டு கர்பம் கலைந்து ரத்தம் நிலமெல்லாம் பரவும் காட்சியில் தனுஷின் எக்ஸ்பிரஷன்ஸும் அதற்கடுத்து ரத்தக் கறை காய்ந்து படிந்த அந்த ஃப்ளோரை சுத்தம் செய்கையில் கதறும் ரிச்சாவின் நடிப்பும் அசாதாரணம். காய்ந்த ரத்தம் தனது குழந்தை என புரிந்து அழுவதுடன் மனச்சிதைவிலிருந்து மீள்கிறான் எனச் செல்கிறது திரைக்கதை.

டேட்டிங் காதலனின் நண்பனை நாயகி காதலிப்பது, நாயகனின் தங்கையை டேட்டிங் காதலன் கைப்பிடிப்பது போன்றவை வலிந்து திணிக்கப்பட்டவையாகவோ, விசித்திரமானவையாகவோ எனக்குத்  தோன்றவில்லை. இன்றைய நிதர்சனம் இதை ஒட்டியே இருக்கிறது.

விபத்தால் மனச்சிதைவில் இருக்கும் தனுஷின் மீது அன்பைச் சொரியும் ரிச்சா, அவ்விடத்தில் மிக அழகாய்ப் பொருந்தும் பிறைதேடும் பாடல், சைந்தவியின் குரல் ஆகியவை அன்பாய்(!)  இருக்கின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்வை அசாதாரணமாக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பாய் இந்தக் கதை மிக அழகான சினிமா! 

மனித மனத்தின் பக்கங்களை சினிமாவில் விரிக்கும் செல்வராகவனின் ரசனை, தெரிவு முதலியவை பாராட்டுதல்களுக்குரியவை. இறுதிக்காட்சிகளில் சுபம் போட மெனக்கெடுவது போன்ற கிளிஷேக்கள் செல்வராகவனின் நெகடிவ் கிளிஷேவைத் தவிர்த்த வகையில் ஓகே!


தனுஷைத் தவிர வேறெவரும் செல்வாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்! வெகுஜன ரசனைக்கு உகந்த படமாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்தப்படம் செல்வராகவன் பந்தயத்துக்கு விட்ட குதிரையாக இருக்காது என நம்புவதால் அதைப்பற்றிக் கவலை இல்லை.

வேறெதனுடனும் ஒப்பிட முயலவில்லை. ஒப்பீட்டளவில் சினிமா பார்ப்பது என் வழக்கமும் அல்ல. என் வரையில் மயக்கம் என்ன என்ற வினா வாக்கியத்தின் முடிவில் வினாக்குறியை அல்ல வியப்புக் குறியிடவே செய்வேன்! 

ராஜன்.

Friday, August 12, 2011

பேரறிவாளனிடமிருந்து ஆறறிவாளர்களுக்கு...

மரணம் யார் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து துக்கமோ ஆசுவாசமோ அடையும் மனித மனம் மரண தண்டனையையும் அதே நோக்கில் அணுகுகிறது. மரணம் எதைவிடவும் கொடுமையானது அல்ல; ஆனால் தண்டனையாக வழங்கும் மரணம் என்பது உச்சபட்ச சித்திரவதை. கழுவேற்றும் கணம் குறித்து சொல்லவில்லை அதற்காய் காத்திருக்கும் காலம் குறித்தே சொல்கிறேன். நீதி நியாயம் என்பவையெல்லாம் அப்பதங்களுக்குண்டான வரையறையினிமித்தம் வழங்கப்படுமானால் தண்டனைகளின் பொருட்டு இவ்வளவு விவாதங்கள் எழ வாய்ப்பற்றுப் போயிருக்கலாம். ஆனால் நிதர்சனம் அவ்வாறல்லவே. இன்று இந்திய அரசினால் மரண வாசல் நோக்கி நிறுத்தப்பட்டிருப்போரில் இருவர் பேரறிவாளன் மற்றும் அஜ்மல் கசாப்.

மேற்சொன்ன இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் வேறுபடலாம்; ஆனால், இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டபோது அவர்களது வயது 20க்குள். அஜ்மல் கசாப் விசயத்தில் இந்திய அரசு செலவிடும் பணம், மெனக்கெடும் விதம், அவற்றால் கண்ட பலன் முதலியவற்றைக் கருதி மீடியாக்களும் மக்களும் வெளியிடும் அதிருப்தி ஒரேவிதமானது. அதுவும் அதற்கடுத்த தீவிரவாதத் தாக்குதல் மும்பையில் நிகழ்த்தப் படுகையில் அஜ்மலை உடனடியாக தூக்கிலிடக்கோரிய வாதங்கள் வலுப்பெற்றன.

கோவையில் சிறுமியைக் கடத்திக் கற்பழித்தவனை என்கவுண்டரில் கொன்றபோது தோன்றிய நிம்மதி அஜ்மல் கசாப் விசயத்திலும் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.பொதுமக்கள் அல்லது மக்களில் ஒரு சாரார் கொண்டுள்ள ஒட்டுமொத்த கோபமும் நீதித்துறையும் அரசும் வழங்கப்படும் தீர்ப்பில் தொனிக்க வேண்டும் என்றால் அது நீதியாக இருக்காது.

பேரறிவாளன் குறித்து பேசும் வேளையில் நாம் அஜ்மல் கசாபை நோக்கும் பார்வயில்தான் எஞ்சிய இந்தியா முழுமையும் பேரறிவாளனைப் பார்க்கின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கசாப் துப்பாக்கியால் அப்பாவிகளை சுட்டான் பேரறிவாளன் அப்படியா என்ற தர்க்க நியாயங்களை நாம் முன்வைக்கும் போது அதுபொழுதில் மரண தண்டனை என்பது நீதிக்கு வழங்கப்படுவதை உண்மை நிலை அறிந்த ஒவ்வொரு மனிதனும் உணரமுடிகின்றது. அதைத் தவிர்த்து கசாப் விசயத்தில் உடனடித் தீர்ப்பை மனம் தேடுகிறது. இங்கு அஜ்மல் கசாப்பிற்கு மரண தண்டனை வழங்கிவிட்டால் பயங்கரவாதிகள் நாசச் செயல்கள் புரிய பயப்படுவார்கள் என்று வாதிடுவோர் உளரெனில் அதைத் தாண்டிய முட்டாள்தனம் இருக்கவியலாது. 

பேரறிவாளன் குறித்து வாதிட நாம் உள்ளோம். தேசிய அளவில் கவனம் பெறக்கூடிய வழக்கு அது. எனவே அதன்பால் உள்ள நியாயம் குறித்து வெளிவரவாவது செய்கிறது. இன்றைக்கு இந்தியாவின் ஒரு கடைக்கோடி கிராமத்தின் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளரும் அப்பகுதியின் சாதி/அரசியல் பலம் பெற்ற ஒரு பஞ்சாயத்து தலைவரும் சாட்சி சொல்ல பத்து பேரும் இருந்தால் சில கொலைகளையும் கற்பழிப்புகளையும் செய்துவிட்டு ஒரு ஏழை அப்பாவியின் பேரில் வழக்குப் பதிந்து அவனை கொடூர கொலைகாரனாக நீதிமன்றத்தின் நிறுத்த முடியும் என்பதன் சாத்திய விழுக்காட்டினை கருதுக. எனில் இந்த சாதாரணின் நியாயம் எவர் கருத்துக்கு வருகிறது? இப்படியாக இதுகாறும் மரணித்தவர்கள் எத்தனை பேர்? ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை முக்கிய எடுகோளாகக் கொண்டிருக்கும் ஒரு நீதி அமைப்பில் மரண தண்டனை என்று ஒன்று இருப்பதே முரணானது. 

உண்மையில் தவறிழைத்தவர்களுக்கு திருந்த வாய்ப்பளிப்பதற்கே தண்டனைகள் எனில் மரணத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டவனுக்கும் நீதிக்கும் கிடைக்கக் கூடிய பலன் என்ன? ஆயுள் தண்டனைக்குரிய குற்றத்தினை தைரியாமகவும் மரண தண்டனைக்குரிய குற்றத்தினை மட்டும் பயந்து ஒதுக்கியும் மக்கள் வாழ்வர் என்ற நினைப்பா? கண நேர உணர்ச்சியில் கொலைக் குற்றங்கள் புரிபவனாகட்டும், திட்டமிட்டுப் படுகொலைகள் புரிந்தவனாகட்டும், மனிதனே அல்ல இவன் மிருகம் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் விரல் சுட்டப்படுபவனாகட்டும் எவன் ஒருவனுக்கும் வழங்கப்படும் மரண தண்டனையின் போது அங்கு நீதியே மரணிக்கிறது என்பேன் நான். 

இன்று பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோர் தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் இந்நிலையில் அவர்களது குற்றம் இவ்விடயத்தின் பின்புல அரசியல் ஆகியவற்றைத் தாண்டி அவர்கள் மரணிக்கக் கூடாது என்று நினைப்பதற்கான காரணமாக மனிதத்தைக் கொள்ளுங்கள் தயவு செய்து... நாம் சார்ந்த அல்லது நம்மைச் சார்ந்த ஒருவருக்கு மரணம் அறிவிக்கப்பட்டு தண்டனையாக வழங்கப்படுவதன் கொடூரத்தை உணருங்கள். 


இந்திய நீதி அமைப்பில் மரணம் என்ற வாய்ப்புகளை மறுக்கும்/ நீதியை குழிதோண்டிப்புதைக்கும் தண்டனை முறையை ஒழிப்பதன் அவசியத்தை உணர இது தமிழர்களுக்கான தருணம். உணர்வு ரீதியாக இப்பிரச்சனையை நாம் அணுகும் விதத்திலேதான் ஒவ்வொரு மரணதண்டனைக் குற்றவாளியைச் சார்ந்தோரும் அணுகுவார்கள் என்பதை அறிய முனைவோம். மரணத்தை வழங்குவது என்பது தண்டனை அல்ல. சரிபாதி விழுக்காடு தவறாகக் கூடிய சாத்தியமுள்ள விசாரணை அமைப்புகளில் குற்றஞ்சாட்டப்படுபவருக்கு அவரது வாழ்வை முற்றுப் பெறச் செய்யும் நிகழ்வு மிகக் கொடூரமான ஒரு முட்டாள் தனம் என்றறியச் செய்வோம்.

இணையப் பயனாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடைமுறையை மத்திய அரசு  முன்னெடுத்திருக்கும் இச்சமயத்தில் மரண தண்டனையை கைவிடக் கோரும் பதிவுகளை இயன்ற அளவு தங்கள் சமூக வலைதளங்களின் மூலம் விரவச் செய்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,


ராஜன்

Friday, July 29, 2011

மேட்டர்இந்தோனேசியாவில் சட்டப்பூர்வமாம்;
ரஷ்யாவில் டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்தால் போதுமாம்;
அவ்வளவு ஏன் மும்பையில் கூட தனியாக ஏரியாவே இருக்கிறதாம்!

இவ்வாறாக சிந்தனைகள் செல்லுமளவு உலகஞானம் பெற்றிருந்தான் அவன்! அவ்வப்போது தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது பற்றி கூட அபிப்பிராய பேதம் எழுமளவு எழத்துவங்கியிருந்தது அவன் தாகம்.
பிட்டுப்படம் பார்ப்பதற்கென்றே நெட்டுக்கனெக்சன் வாங்கியிருந்த அவனுக்கு அதன் பில்லும், கூடவே அடங்காத ஜொள்ளும் ஒருவித மதில்மேல் பூனை நிலையைத் தந்துவிட்டிருந்தது.
’’பிட்டுக்கு நீ நெட்டுப்பாக்குற செலவுக்கு ஒரு எட்டு போய் தொட்டுப் பாத்துட்டு வந்துடலாண்டா’’ என்ற அவனது அதியதார்த்த நண்பனின் நக்கல் கமெண்ட்டையும் ஒருநாள் நேர்மறையாக பொருள்கொண்டான்.
அட ஆமால்ல! என்று தோன்றியது! கூட்டிக்கழித்துப்பார்த்தான் செலவு டேலி ஆகத்தான் செய்தது! அதுவுமில்லாமல் இது ஒன் டைம் செலவு! மொத்தமாக ஆசை வடிந்துவிடும் என்ற நினைப்பு வேறு!
லேப்டாப் தாங்கும் பையில் லேப்டாப்புக்கு பதிலாக காகிதக் குப்பைகளை ரொப்பி முதுகில் தாங்கிக்கொண்டு, அய்யர் வீட்டுத்திண்ணை நிகர் தேய்ந்தழிந்த பைக்கின் சீட்டில் பகலின் பாதியை நகர்வலத்தில் தொலைக்கும் மார்க்கெட்டிங் பேர்வழியான இவனுக்கு சம்பளத்தில் சரி பாதியை தாம்பாழத்தில் வைத்து தாரை வார்க்க இன்றைய தேதியில் பரிபூரண சம்மதம்!
நண்பர்கள் தயவு தேவைப்படும் கட்டம் இது! உடன் பணியாத்தும் நண்பர்களிடம் தனது மேட்டர் தாகம் குறித்து கட்டு சோத்தை அவுப்பத்தில் அவனுக்கு விருப்பமில்லை; பால்ய நண்பர்களே சரியானவர்கள் எனத்தோன்றியது! அவர்களில் சிலர் அவ்வப்போது போய்வந்து கூறும் கதைகளை ஜலவாய் வழிய கேட்டிருந்திருக்கிறான்! போய்வந்தவர்களில் ஒரே ஒரு முறை போய்வந்த கொஞ்சம் அமைதியான ஃப்ரெண்டை தெரிவு செய்தான்! அவனிடம் தனது அபிலாசையை ஒரு நெடுஞ்சாலை பயணத்தினிடையே பைக்கை நிறுத்தி ஓரமாக சப்பாத்திக்கள்ளிச் செடிமீது மூத்திரமடிக்கும் இடைவெளியில் போட்டுடைத்தான்!
அவனோ கடைசி சொட்டுவரை வாய்திறக்கவுமில்லை; வேறெந்த ரியாக்சனும் காட்டவில்லை. இவனுக்கு பாதி வந்த்தும் பட்டென நின்றுவிட்டது! பேந்த பேந்த விழித்தான்!
ஜிப்பை மேலிழுத்தவாறே சொன்னான் நண்பன் ‘ம்ம் போலாமே... அன்னூரு கவுதம் லாட்ஜுல ரூம் போட்டம்னா ரூம்பாயே கேப்பான் மேட்டர் வேணுமான்னு
அவனுக்கு மீண்டும் சரளமாக மூச்சா வரத்துவங்கியது நண்பன் பதிலை முழுதும் கேட்ட பிறகு.
வர்ற வியாழக்கெழம போலாமா என்றான்
வேலைக்கு லீவ் போட்டுட்டு மேட்டர்க்கு போவணுமா?இது ஃப்ரெண்டு
சைலண்ட்டா போய்ட்டு வந்துரலாம்! நம்மாளுக கிட்ட மாட்டுனா கிண்டிக்கெழங்கெடுத்துருவானுக
‘கரெக்டு! போய்ரலாம்!
அன்றிரவு அவனுக்கு உறக்கம் பிடிபடவில்லை! ரெய்டு பயம்! தனியாக போனால் அந்தப்பொண்ணுகளே அண்ணாக்கயிரு மொதக்கொண்டு உருவிட்டு தொரத்திடும்னு எவனோ பத்தவெச்ச புரளிக்கதை! மேற்படி லாட்ஜுக்கு போய்வர தனிமை அச்சம் இதெல்லாம் தான் அவனுக்கு  மேட்டர்க்கு கூட்டணி ஐடியாவைத் தந்தது!
முதலில் அஞ்சாறு பேரா போய்டலாம்னு நினைத்தவனுக்கு சேலம் சிவராஜ் சித்தவைத்தியரால் கிளம்பிய பீதி நெஞ்சை அடைத்தது! அவர் சொல்வதைப் பார்த்தால் நமக்கு ரெண்டு வருசம் முன்னாடியே பீசு போயிருக்கும் நாம அங்க போயி சும்மா நின்னு, அவ காறித்துப்பி வெரட்டினா அது பசங்களுக்குத் தெரிஞ்சு வாழ்க்க ஃபுல்லா கரும்புள்ளி செம்புள்ளியாகிட்டா.... கிழிஞ்சுடாதுன்னு ஃபீல் பண்ணி மேற்படி படையெடுப்பு ஐடியாவை பத்து இஞ்ச் குழி தோண்டி புதைத்து புல் நட்டு விட்டான்.  
இப்போதைய அவனது பிளானின் மீது அவனுக்கே பெருமை தாங்கவில்லை! ஃப்ரெண்டுக்கும் சேர்த்து மேட்டர் பில்லை தானே கட்டவேண்டியது; இதனால் அங்கே எந்த மானக்கேடு நடந்தாலும் அங்கேயே ஊத்தி மூடிவிட்டு திரும்பிவிடலாம் என்று மனசுக்குள் ஒரு மகோன்னதக் கோட்டையே கட்டிவிட்டான்!

புதன் கிழமை இரவு.
வழக்கமாக விளையாடும் கிரவுண்டில் இருட்டில் இருவர் மட்டும் அமர்ந்து செயல்திட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுத்துக்கொண்டிருந்தனர்!
அவன் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை நோக்கி கையை நீட்டியவாறே கேட்டான் அந்த நெட்டக்காலன் தானே உன்னைய மொத டைம் கூட்டிப்போனான் என்று.
‘மொத டைம் இல்ல ஒரே டைம்என்றான் ஃப்ரெண்டு! பொறு என்று தலையை அசைத்தவாறு.
கவுதம் லாட்ஜுக்கா
‘ம்ம் என்றுவிட்டு முக்காலே மூணு வீசம் சாம்பலாய்ப்போன சிகரெட்டை நீட்டினான்!
‘எப்பிட்றா இருந்துச்சு
அட சொல்லு.... சமஞ்ச பொண்னாட்டமா நெளியுற? கதையா கேட்டேன்.. நாளைக்கு போவணுமே கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டா இப்புடி முழிக்கற என்றான் அவன்!
தலையை நிமிராமல் ‘ம்ம்ம்என்றான் நண்பன் ஈனஸ்வரத்தில்...
எத்தன சிங்கிள்றா? ரெண்டா மூணா?!
முக்கால் பாகம் அடித்துவிட்டு, இவனுக்குக் கொடுத்த கட் ஆஃப் தம்மே இன்னும் இன்னும் ஃபில்ட்டர் தொடாத நிலையில் அடுத்த சிகரெட்டை பற்றவைத்து உறிஞ்சிக் கொண்டே ‘ம்க்கும்.. நீ ஏண்டா வவுத்தெரிச்சல கெளப்பற? ஒண்ணுக்கே கிறுகிறுப்பு தட்டிருச்சு! இதுல ரெண்டா மூணாவாம்?!
குனிஞ்சுகிட்டே புகை கிளப்பிய நண்பனுடைய ஃபேஸ் ரியாக்சனை இருட்டில் இவனால் காணமுடியவில்லை...‘ஏண்டா? முடிலயாஎன்றான்
‘அப்பிடில்லடா... ஃபர்ஸ்ட் டைமாச்சா?! பாத்ததுமே பாதி வந்துடுச்சு... அதுக்க்கப்பறம் மானங்கெட்டுடுமேன்னு முக்குன முக்குல ஒருவாரம் வலி கொன்னுருச்சு... ஸ்ப்ப்பா... வந்தும் கூட ரெண்டு மூணுநாள் கால அகட்டீட்டில்ல நடந்துகிட்டு இருந்தேன்
இவனுக்கு அடிவவுத்துக்குள்ள ஆசிட் சொரக்க ஆரம்பித்து விட்டது. இதுக்கு மேல பேசுணா பிளானே டர்ர்ர்ருனு கிழிஞ்சுடும்னு நினைத்து அவ்விடம் விட்டுக்கெளம்பினான். மறுநாள் காலை 8 மணிக்கு பஸ்ஸில் கிளம்புவதாக முடிவானது.
தெருமுனையில் ஃப்ரெண்டை இறக்கிவிட்டு 10 அடி வண்டி சென்றதும் தான் பாதுகாப்பு உபகரணம் பற்றிய பிரக்ஞை  வந்தது அவனுக்கு. திரும்பிப் பார்த்தான் இறக்கிவிட்ட சுற்றுப்புறத்தில் எங்கும் ஃப்ரெண்டைக் காணோம்! அந்த ஊரின் ஐந்தாறு மெடிக்கல் ஷாப்புகளில் 2 அவன் அப்பாவுக்கு பழக்கமானவர்களுடையது. 3ல் வயசுப் பொண்ணுகளை வேலைக்கு வைத்திருந்தார்கள். எல்லாக்கடைக்கும் 2 சுற்று போய் யுடர்ன் போட்டு வந்து கொண்டிருந்தான்! பிறகு அப்பாவுக்குத் தெரிந்த கடைகளில் ஒன்றில் ஓனர் இல்லாத/சிறுவனொருவன் கல்லாவிலிருந்த கடையைத் தெரிவு செய்தான். வரிசையாக ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க 20 நிமிடம் காத்திருந்து தன்னந்தனியனாய் கடைமுன் பிரவேசித்தான்.
மூன்று படிகள் கொண்ட மெடிக்கல்ஷாப்பின் மூன்றாவது படியில் ஏறி நின்று முகத்தில் வலிய கடூர ஆண்மையை வரவழைத்துக் கொண்டு நிரோத் ஒரு பாக்கெட் என்றான்.
மிகக்கேவலமான ஒரு பார்வையுடன் அதெல்லாம் இப்ப வர்றதில்ல என்றான் கடைச்சிறுவன்
இவன் தம் கட்டி முகத்தில் நிறுத்தியிருந்த ஆண்மை பொடீலென்று வீழ்ந்தது. காண்டமே சப்ளை இல்லையா என்னடா கொடுமை இது என்று நினைத்த போதுதான் நிரோத் என்று குறிப்பிட்ட்தன் தவறு புரிந்த்து! கா என்று தொடங்க யத்தனிக்கும் முன் ‘மூட்ஸ் இருக்கு தரவா என்றான் சிறுவன்.
தலையை ஆட்டி வைத்தான்.
ஒரு பாக்கெட் மூட்ஸ் சுப்ரீம் டாட்டட் காண்டம்ஸ் ஃபார் எக்ஸ்ட்ரா ப்ளெஸ்சர் வந்தது பிராக்கெட்டில் 20 நம்பர்ஸ் என்ற குறிப்புடன்! அத்தனையவெச்சு பலூனா ஊதறதுன்னு இவனுக்கு தோன்றியபோதும் அதை சொல்ல மனமில்லை. 100 ரூபாயை டேபிள் மேல் வைத்தான் காக்கி கலர் கவரை டேபிள் மீது வைத்த சிறுவன் காசை எடுத்து கல்லாவில் போட்டு விட்டு இலவச டீவியில் சூப்பர் சிங்கர் பார்க்கத்தொடங்கினான்.
கவருக்குள் பாக்கெட்டைத் திணித்து பேண்ட் ஜோப்புக்குள் நுழைத்துக் கொண்டே மீதி சில்லறை கேட்கத்தயங்கி சிறுவனைப்பார்த்தவாறே  சில நொடிகள் நின்றான்.
இவனைப்பார்த்த சிறுவன் ‘சரியாப்போச்என்றான்.
பட்டென திரும்பி வந்து ஸ்டாண்டைக் கூட எடுத்து விடாமல் வீடுவந்து சேர்ந்தான்.

மறுநாள் காலை பஸ்ஸ்டாப்பில்..
பத்துக்கும் மேற்பட்ட கால்களுக்குப் பிறகு ஃபோனை அட்டன் செய்தான் நண்பன் ‘ம்ம்ம்.. சொல்றா
‘டேய் கேனக்..... மணி எத்தன? பொ...ல வெயில் அடிச்சும் தொரந்துட்டு தூக்கம் போடறயா? சீக்கிரம் வந்து தொலை. முக்காமண்நேரமா தேவுடு காத்துட்டு நிக்கறேன்
‘வந்துட்டேன் வைய்யி
மேலும் அரைமணிநேரக்காத்திருப்புக்குப் பின் கண்ணின் பூலை கூடக் கழுவாமல் வந்து நின்றான் அத்யந்த நண்பன். அவனைத்திட்ட வாயெடுக்கும் முன் பஸ் வந்தது தரதரவென்று அவனையும் இழுத்துச் சென்று பஸ்ஸுக்குள் திணித்தான்.
பாடவதி பஸ்பயணம் பதினேழு நிமிடம். குறிப்பிட்ட ஸ்டாப்பில் இறங்கினர் இருவரும். அங்கிருந்தே தெரிந்தது கவுதம் லாட்ட்ஜின் நான்காவது மாடியின் மூன்று அறைகளின் முன் ஜன்னலை மறைத்த லுங்கிகளும் துண்டுகளும்.  நெளிந்த குழல்விளக்குகளால் ஹோட்டல் கவுதம் என்று எழுதப்பட்டிருந்த போர்டை பார்த்தபடியே கட்டிடத்தின் உள்ளே நுழைந்தனர்.
ரிசப்சனில் யாருமில்லை. சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான் அவன். நண்பனோ நொட்டாங்க்கையை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ரிசப்சன் ஃபோனின் ரிசீவரை  எடுத்தான். ரிசப்சன் அறைக்குள் தரையில் அமர்ந்து சாம்பாருக்கு இட்டிலி தொட்டுத் தின்ற படியே புறங்கையை நக்கிய இளைஞன் ஒருவன் எழுந்து இருவரையும் பார்த்தான்.

‘ரூமுங்ளா
ஆமா
‘டபுள் காட்டா
‘ம்ம்
‘எப்ப வெகேட் பண்ணுவீங்க
‘நைட்டுதான்என்றுவிட்டு நண்பனைப் பார்த்தான் அவன்.
ஒரு குறுக்கு வாட்டில் பைண்ட் செய்த லெட்ஜரை விரித்து அவன் பக்கம் நீட்டினான் ரிசப்சன் இளைஞன்.
முதல் கலம் ரூம் எண் என்றிருந்தது. ரிசப்சனுள்ளிருந்து 202 என்ற சவுண்டு வந்த்து. இட்டு நிரப்பினான். அடுத்து பெயர் என்ற இடத்தில் ஃப்ரெண்டின் பேரை எழுதிவிட்டு ஃப்ரெண்டைப்ப்பார்த்து சிரித்தான். அவனோ முறைத்தான். பேருக்குக் கீழே அவனது ஊரை மட்டும் எழுதியதைக் கண்ட ரிசப்சன் நம்பர் எழுதிடுங்க என்றது. தன் நம்பரைத் தவிர வேறெதுவும் நினைவுக்கு வராததால் அதையே எழுதி கடைசியில் 797க்கு பதிலாக 798 என்று போட்டான்.
ஐநூறு ரூவாய் அட்வான்ஸ் கொடுத்தான். இன்னொரு சிறுவனைக் கூப்பிட்டது ரிசப்சன். அவன் வந்ததும் ஒரு டிவி ரிமோட்டும் ஜக்கு நிறைய தண்ணியும் கொடுத்தது. அதை வாங்கிக் கொண்டு ரூம் சாவியையும் எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தான் சிறுவன். லக்கேஜ் எதுவும் இல்லாததை கவனித்த சிறுவன் போலாம் என்றான். இவர்களிருவரும் லிஃப்ட்டின் முன் நின்று பொத்தானை உற்றுப்பார்க்கையில் தப தப எனும் சப்த்த்துடன் பின்னிருந்த படிகளை மூன்று மூன்றாக கால்களில் விழுங்கியபடி மேலேறினான் சிறுவன். படியெங்கு சிதற விட்ட தண்ணீரில் கால் படாமல் தொடர்ந்து ஏறினார்கள் இருவரும்.
ரூமைத்திறந்து பெட்டைத்தட்டிக் கொண்டிருந்தான் சிறுவன். வெளியில் காத்திருந்தனர். அவன் வெளி வரும்போது ஐந்து ரூவாயை கீழ் பாக்கெட்டில் இவன் தேடி எடுக்கும் முன் அவன் படியிறங்கிச் சென்றுவிட்டிருந்தான். உள்ளே போய் பெட்டில் அமர்ந்தனர்.
சரக்கடிக்கலாம் வாங்கிட்டு வர சொல்லுஎன்றான் இவன்’
நானே போய்ட்டு வரேன்
பர்ஸை எடுத்தான்
‘எண்ட்டயே இருக்கு... போய்ட்டு வந்துடறேன் இரு’ என்றவாறு வெடு வெடுவெனக் கிளம்பிவிட்டான்.
காசு வேணாமா????? அவன் காசு வேணாம் என்றது முதல் பஸ்ஸில் எதையோ மிதித்தவாறு முகத்தை வைத்திருந்தது. காலையில் வருவதாகச் சொல்லி உயிரை வாங்கியது எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தான்! இனி இவன் வரமாட்டான் என பொறி தட்டியது! உடன் அவன் நம்பரை அழைத்தான். நாட் ரீச்சபில் என்றாள் ஒருத்தி.
ஃபோனை பெட்டில் வீசிவிட்டு கக்கூஸில் போய் அமர்ந்தான்.
10 நிமிசத்துக்கு பிறகு காலிங் பெல் அலறியது.
அவசர அவசரமாக்க் கழுவிவிட்டு வந்து கதவைத் திறந்தான்.
அதே சிறுவன், எதாவது வேணுமான்னா
‘நீ மட்டுந்தானா இங்க
‘பெரியவங்க யாரும் இல்லையா ரூம் சர்வீஸுக்கு
‘சரக்கான்னா... குடுங்க நானே வாங்கிட்டு வருவேன்... இன்னைக்கு வேற யாரும் இல்ல
150 ரூவாயை நீட்டினான்..எம்சி ஒரு கோட்டர்.. அரைப்பாக்கெட் கிங்ஸ்.. வாழைப்பழம்..லேஸ்
சிறுவன் கிளம்பிவிட்டான்.

அன்று மாலை.... 6.17 மணி அதே வழக்கமான கிரவுண்டுக்குச் சென்றான்.
தூரத்திலிருந்தே தெரிந்த்து 7 அல்லது 8 தலைகள். பைக்குகளை சுற்றிலும் நிறுத்தி நடுவில் அமர்ந்து எதோ பேசிக்கொண்டிருந்தனர்.
காலையில் காணாமல் போனவன் நடுவில் உக்காந்து தம்மடித்துக் கொண்டிருந்தான். வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் நெருங்கினான்.
எல்லார் கண்களும் இவனை ஊடுருவின. ஃப்ரெண்டு மட்டும் தீக்குச்சியால் பக்கத்தில் நின்ற பைக்கின் டயர் பட்டன்களிடையில் அப்பிய சாணியை நீக்கிக் கொண்டிருந்தான். புகைந்து தள்ளியது வாய் சிகெரெட்டை.
மெதுவாக உக்கார்ந்தான். நிசப்த்த்தைக் கலைத்தது ஒரு குரல்
‘என்னடா காலைல சம்பவமாமா?!
ஃப்ரெண்டைப் பார்த்தான் அவன் நிமிரவே இல்லை கடைசி பஃப்புடன் அணைத்துத் தேய்த்தான் தரையில்.
 மீண்டும் கேட்டான் முன்னவன் ‘சொல்றா நீயாச்சும்.. அவந்தான் பீய முதிச்சா மாரி உக்காந்துட்டே இருக்கான்... இவன ஏண்டா ஒரே சிங்கிள்ள தாட்டி உட்டுட்ட? ஒண்ணாத்தான போணீங்க? அப்பறம் இவன் மட்டும் லாட்ஜுக்கிட்ட பஸ்டாப்புல நின்னுகிட்டு இருந்தான் நாந்தான் கூட்டிட்டே வந்தேன்! ரூமுக்கு வந்து பாக்கலாம்னு பாத்தேன்! சரி பாவம் பையன்னு வந்துட்டேன்
 இன்னொருத்தன் மெதுவாகக் கேட்டான் ‘ரெண்டா மூணாடா?!

சலிப்புடன் சொன்னான் இவன் ‘ம்க்கும்.. நீ ஏண்டா வவுத்தெரிச்சல கெளப்பற? ஒண்ணுக்கே கிறுகிறுப்பு தட்டிருச்சு! கால மடக்க முடில அகட்டீட்டே நடக்கவேண்டீதா இருக்கு...

அவனைப் பார்த்துக் கொண்டே ஃப்ரெண்டு அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தான்!