Tuesday, December 28, 2010

உசிலம்பட்டி டாக்டர் !!!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது

இது குறித்து நடந்து வரும் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது

தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. பார்க்க சுட்டி

இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு - இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்

இந்தியாவில் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்
  1. நடுவண் அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - ஏய்ம்ஸ் (AIIMS) , பி.ஜி.ஐ சண்டிகர் (PGI Chandigarh) , எஸ்.ஜி.பி.ஜி.ஐ லக்னோ (SGPGI Lucknow), ஜிப்மர் பாண்டிச்சேரி JIPMER, சித்திரை திருநாள் - திருவனந்தபுரம் (SCTIMST), நிம்ஹான்ஸ் பெங்களூர் (NIMHANS), நிம்ஸ் ஹைதரபாத் (NIMS) போன்றவை
  2. மாநில அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, கட்டாக் மருத்துவக்கல்லூரி போன்றவை
  3. தனியாரால் நிர்வாகிக்கப்படுபவை / தனியார் கட்டுப்பாட்டில் உள்ளவை - சி.எம்.சி வேலூர், ராமச்சந்திரா, அண்ணாமலை போன்றவை
இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கை விதிமுறை வேறானது

நடுவண் அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும், தங்களது கல்லூரியில் மாணவர்களை சேர்க்க தனித்தனியாக நுழைவு தேர்வு நடத்துகின்றன. அதாவது ஏய்ம்சில் சேர ஒரு தேர்வு எழுதவேண்டும், ஜிப்மரில் சேர வேறு ஒரு தேர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்

(ஆந்திரா, காஷ்மீர் தவிர பிற) மாநில அரசின் கீழ் இருக்கும் கல்லூரிகளில் சேர்க்கை இருவிதமாக நடத்தப்படுகிறது
  • இளங்கலை படிப்பிற்கு
  1. இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 85 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
  2. மீதி இருக்கும் 15 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
  • முதுகலை படிப்பிற்கு
  1. இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 50 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
  2. மீதி இருக்கும் 50 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
ஆந்திரா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே 100 சதம் இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன

இதில் ஒரு விஷயத்தை நினைவு கூற வேண்டும். 1980கள் வரை மாநில அரசிடமே முழு கட்டுப்பாடும் இருந்தது. 1980களின் இறுதியில் மத்திய அரசு இளங்கலையில் 15 சதமும் முதுகலையில் 25 சதமும் கேட்டது. அப்பொழுது என்.டி.ஆர் அவர்கள் விடாப்பிடியாக மறுத்துவிட்டார் என்பார்கள்

பிற மாநிலங்கள் இளங்கலையில் 15 சதவித இடங்களையும், முதுகலையில் 25 சதவித இடங்களையும் அளித்தன

2005ல் முதுகலையில் 25 சதவித இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 சதவித இடங்கள்
ஆயிற்று

தனியார் கல்லூரிகளில் சேர தனியாக தேர்வு மற்றும் சேர்க்கை முறை உள்ளது

--

தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவன் எத்தனை தேர்வு எழுதவேண்டும்

  1. மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
  2. மாநில அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
  3. ஏய்ம்ஸ்
  4. ஜிப்மர்
  5. பி.ஜி.ஐ. சண்டிகர்
  6. எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
  7. சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
  8. நிம்ஹான்ஸ் பெங்களூர்
  9. நிம்ஸ் ஹைதரபாத்
  10. சி.எம்.சி வேலூர்
ஆகா

பத்து நுழைவு தேர்வா, பொது நுழைவு தேர்வு வந்தால் பத்திற்கு பதில் ஒன்று தானே - இப்படி ஒரு நல்ல திட்டத்தை தமிழக அரசு ஏன் எதிர்க்க வேண்டும் என்று அங்கலாய்க்கிறீர்களா

சற்று பொருங்கள்

மத்திய அரசின் பொது நுழைவு தேர்வு வந்த பின்னரும் அந்த மாணவன் 9 தேர்வுகளை எழுதவேண்டும்


  1. மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
  2. ஏய்ம்ஸ்
  3. ஜிப்மர்
  4. பி.ஜி.ஐ. சண்டிகர்
  5. எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
  6. சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
  7. நிம்ஹான்ஸ் பெங்களூர்
  8. நிம்ஸ் ஹைதரபாத்
  9. சி.எம்.சி வேலூர்
அதாவது மத்திய அரசின் பொது நுழைவு தேர்வு என்பது அனைத்து நுழைவு தேர்வுகளுக்கு மாற்று அல்ல

மாநில அரசின் நுழைவு தேர்வுகளை மட்டுமே இரத்து செய்து விட்டு, மத்திய அரசின் பிற நுழைவு தேர்வுகளை அப்படியே வைத்துள்ளார்கள்

பிறகு எப்படி 22 தேர்வு குறையும் என்று கேட்கிறீர்களா

  • அதாவது தமிழக பொது நுழைவு தேர்வு, கேரள பொது நுழைவு தேர்வு, கர்நாடக நுழைவு தேர்வு, மகாராஷ்ட்ர நுழைவு தேர்வு,  போன்ற 22 மாநில நுழைவு தேர்வுகள் தான் இல்லை
  • மத்திய அரசு நிறுவனங்களின் தேர்வுகள் அப்படியே உள்ளன

ஆகா !!

22 தேர்விற்கு பதில் ஒரு தேர்வு என்று வெளியில் சொல்லப்பட்டாலும், இவர்கள் முன்நிறுத்தியுள்ள பொது நுழைவுத்தேர்வானது மாநில அரசின் நுழைவுத்தேர்விற்கு சாவுமணி அடிப்பதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை

உண்மையில் 10 தேர்விற்கு பதில் 9 தேர்வு - அவ்வளவு தான்

எனென்றால் ஒரு மாணவன் ஒரு மாநில அரசின் தேர்வை மட்டும் தானே எழுதமுடியும் (வெகு சிலர் வேண்டுமென்றால் ஒன்றிற்கு மேற்பட்ட தேர்வுகள் எழுதலாம் - ஆனால் அது வெகு சொற்பமே)

---

இந்த தேர்வு வேண்டி வழக்கு போட்டிருப்பவர்களின் உண்மையான நோக்கம் மாணவர் நலன் என்றால் அவர்கள் “அனைத்து தேர்வுகளுக்கும் பதில் ஒரே தேர்வு” என்றல்லவா வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்

அப்படியில்லாமல் “மத்திய அரசால் நடத்தப்படும் பிற தேர்வுகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு மாநில அரசின் தேர்விற்கு மட்டும் தடை கோரி” வழக்கு தொடர்வதன் நோக்கம் தான் என்ன ?

--

மேலும் தோண்டுவோம்
  • இன்று மாநில அரசின் பாட திட்டம் (ஸ்டேட் போர்டு) என்று ஒன்று உள்ளது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்
  • அதே போல் மத்திய அரசின் பாட திட்டம் (செண்ட்ரல் போர்டு - சி பி எஸ் சி) என்றும் உள்ளது
இரண்டு ஒன்றா, இல்லையே 
  • இதில் நடுவண் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பது மேல் குடி மக்களே / நகர் வாழ் மக்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி - 
  • நடுத்தர மற்றும் ஏழை மக்கள் / கிராமப்புற மற்றூம் சிற்றூர் மாணவர்கள் படிப்பது மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் தான்

அதே நேரம்
  • மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு ஆகியவை மத்திய அரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுபவை
  • மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்
எனவே
  • மத்திய அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் (பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு போன்றவை) சி பி எஸ் சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்வு பெறுவார்கள். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் வெகு சிலரே தேர்வு பெற முடியும்
  • மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகளின் மாணவர்கள் அதிகம் தேர்வு பெறுவார்கள்

இந்நிலையில்
  • மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு, ஏய்ம்ஸ் நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு, பி.ஜி.ஐ. சண்டிகர் நுழைவுத்தேர்வு, எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ நுழைவுத்தேர்வு, சித்திரை திருநாள் திருவனந்தபுரம், நிம்ஹான்ஸ் பெங்களூர் நுழைவுத்தேர்வு, நிம்ஸ் ஹைதரபாத்  நுழைவுத்தேர்வு, போன்ற மேல்தட்டு / பெருநகர் மக்களுக்கு வசதியாக உள்ள தேர்வுகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு
  • நடுத்தர மற்றும் ஏழைகள் மற்றும் கிராமப்புற, சிற்றூர் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தின் கீழுள்ள மாநில பொது நுழைவுத்தேர்வு ஒன்றை மட்டும் இரத்து செய்ய வேண்டும்
என்று வழக்கு தொடர்ந்திருப்பவர்களின் உண்மை நோக்கத்தை அறிந்து கொள்வது சிரமமா

அதனால் தான் தமிழக அரசு, இந்த பொது நுழைவு தேர்வை எதிர்த்தது

இந்நிலையில் இந்த செய்தியின் படி, உச்ச நீதிமன்றம் பொது நுழைவு தேர்விற்கு பச்சை கொடி காட்டியதாக தெரிகிறது

இது குறித்து தமிழக அரசும் மாணவர்களும் விழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே தெரிகிறது...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கட்டுரையை எழுதியவர் அனைவருக்கும் அறிமுகமான பதிவர், மருத்துவர். !! 

உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி பெற்ற இட ஒதுக்கீட்டுக்கு குறுக்கு வழியில் அடி கொடுக்கும் பார்ப்பணீய பிசாசுகளை அனைத்து தளங்களிலும் எதிர்க்கவேண்டும். 

உசிலம்பட்டியில் இருந்து மருத்துவராகவேண்டும் என்று நினைப்பவன் டெல்லியிலும் பெங்களூரிலும் இருப்பவனிடம் போட்டிபோடவேண்டும். இவன் எக்ஸ்போஷர் என்ன, அவன் எக்ஸ்போஷர் என்ன ? 

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் மேலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவேண்டும். மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரம் ( அல்லது தமிழக அரசே நடத்தும் பந்த் நடத்தவேண்டும் (அல்லது மம்மி ஒரு அறிக்கை விட்டால் தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்படும்.)..

புஸ் போன ராக்கெட்டும் திருப்பதி ஏழுமலையானும்

GSLV Exploded Mid Air

படம் சொல்லும் செய்தி, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் தோல்வி. ரஷ்யாவில் இருந்து பிச்சை எடுத்துக்கொண்டு வந்த ஏழு கிரயோஜெனிக் எஞ்சினில் 6 அல்ரெடி கான். ஏழாவது ஒரே ஒரு எஞ்சின் உள்ளது. அதை வைத்து தீபாவளி கொண்டாடி நரகாசுரனை அழிக்கலாம்.

Carla Bruni-Sarkozy (L-R) Chairman of ISRO, Doctor K.Radhakrishnan, French President Nicolas Sarkozy and Carla Bruni-Sarkozy attend the ISRO Satellite Center visit on December 4, 2010 in Bangalore, India. French President Nicolas Sarkozy is on a four-day working visit to India and is expected to chase lucrative French-Indian trade contracts. He is also expected to seek support for his G20 agenda, on his first visit to a G20 member state, after taking over the presidency of the G20 group.

கர்லா ப்ரூனியிடம் வழிந்துகொண்டு நிற்கும் நமது வீ.ராதாக்கிருஷ்ணன், தொடர் தோல்விகளுக்கு பிறகும் பதவியில் ஏன் ஒட்டிக்கொண்டிருக்கிறார் ? ஒரு அக்யூஸ்ட் ஓடிப்போனால் போலீஸை சஸ்பெண்ட் செய்கிறது அரசு. இத்தனை கோடிகள் மக்கள் வரிப்பணம் வீண் ! இருந்தும் இப்ப மீட்டிங் போடறானுங்களாம்.



இதுக்கு முன்னாடி இங்கே குப்பை கொட்டிய மாதவன் நாயர் என்கிற சேட்டன் திருப்பதியில் ராக்கெட்டின் மாதிரியை வைத்து பூஜை போட்ட கேவலமும் நடந்தது. ஏன் இந்த முறை திருப்பதி ஏழுமலையான் காப்பாற்றவில்லையா இஸ்ரோ ராக்கெட்டை ?

Friday, December 24, 2010

பிதா சுதன் தூய ஆவியின் பெயராலே..

இன்னும் கொஞ்ச நேரத்தில் கிறித்துமஸ் பேஷ் ஆரம்பிக்கப்போகிறது. கேக் வெட்டப்படும். சர்ச்சுகளில் மணியாட்டப்படும். கத்தோலிக்க பங்கு குருக்கள், சி.எஸ்.ஐ, பெந்தகோஸ்தே, 7த் டே அட்வெண்டிஸ், என்று கிறித்தவ மதத்தின் பல கோஷ்டிகள், அல்லேலூயா பார்ட்டிகள் எல்லாம் எங்கோ பெத்லகேமில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்து யூதர்களினால் கழுவிலேற்றப்பட்டு கொல்லப்பட்ட இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடப்போகிறீர்கள்.



வெறுமனே சாதி சனத்தை பார்க்கவும், சரக்கடிக்கவும், பிகர் வெட்டவும் சர்ச்சு பக்கம் போகும் போலி கிருத்துவர்களுக்கும், உயிர்த்தெழும் நம்பிக்கையோடு இறந்துபோன சகோதர சகோதரிகளுக்காக நெக்குருகி ஜெபம் செய்து, பரிசுத்த ஆவியின் வல்லமையும் இயேசப்பாவின் தந்தை இறைவனும் ஆவிக்குரிய எல்லாம் தருவார் என்று ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டவர்களும், ஒழுங்கீனமான பாதிரிகளும் கன்னிகாஸ்திரிகளும் மற்றும் பங்கு கோயில் அறைவீட்டில் பாவமன்னிப்பு கொடுத்துவிட்டு டயர்டாக வரும் பாவப்பட்ட பாதிரிகளுக்கு சிக்கனும் மட்டனும், ஓல்ட் மங்கும், மற்றும் பல டாஸ்மாக் , வெளிநாட்டு சரக்குகளும் தயாரிக்கும் உபதேசியார்களும் புளித்த மட்டன் ஏப்பம் விடும் இவ்வேளையிலே.

ஆல் இன் ஆல் அழகுராஜா கடை பங்காளிகள் வெறும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லத்தான் பதிவு ஒன்றை பதிகிறோம்.

அடியேன் தமிழகத்தின் ஆகச்சிறந்த பிரபல அஜால் குஜால் சித்த மருத்துவரின் கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது ஒன்றை நீக்க சென்ற வேளையில் அவர் சொன்னார். அவரிடம் மருத்துவ உதவிக்காக (அதாவது சிற்றின்பத்தை பேரின்பமாக்க) வரும் கும்பலில் பாதிரிகளும் கண்ணிகைகளும் அதிகமிருப்பதாக.




தமிழகத்திலே பியர் அடித்தால் பேமானி. சிகரெட் குடித்தால் பொறுக்கி. ஆனால் இவை இரண்டும் இல்லாத ஒரு பாதிரியை பார்ப்பதரிது. அட சிகரெட்டும் தண்ணியும் நம்மை பொறுத்தவரை பச்சைப்புள்ளைமாதிரி. பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே உன்னுடைய பாவங்களை மன்னிக்க இயேசு விரும்புகிறார் என்று திரையின் பின்னாலே அமர்ந்து சொல்லும் பாதிரி எப்படிப்பட்ட பாவி என்றால், சின்ன வீட்டுக்கு கூட லாயலாக இல்லாமல் சின்ன சின்ன வீடு, குட்டி வீடு, பாட்டு கிளாஸ் பாப்பாவுக்கு பாவாடை வாங்கிக்கொடுத்து ஊட்டி ட்ரிப்பில் உஜாலா செய்வது என்று எத்தனை எத்தனை செய்கிறான் அந்த எத்தன் ?

சார் இங்க அஞ்சு கம்யூனிட்டி இருக்கு. அதனால எஸ்.ஸின்னா கொஞ்சம் ஒதுங்கி இருக்க சொல்லி பிஷப்பே சொல்லியிருக்கார். இது ஒரு பாதிரியின் ஸ்டேட்மெண்ட். லஞ்ச ஊழலில். மூட நம்பிக்கைகளில் ஊறிப்போன பதர்களாக. வேளாங்கண்ணியில் உண்டியல் நிரம்பி வழிகிறது. ஏற்கனவே நிரம்பி வழியும் உண்டியலில் ஏன் காசு போடவேண்டும் என்று அடித்த குவாட்டர் ஒரு நட்டாம்பட்டி சரக்கு. அதாவது கலர் கலந்த சாராயம். கடும் வாந்தி. இது வேளாங்கண்ணி மாதாவை பழித்தமைக்கு கிடைத்த கூலி என்றான் சக குடிகாரன். அவன் கை விளங்காமல் போனமைக்கு வெள்ளியில் கை செய்து வைப்பதாக வேண்டிக்கொண்டானாம். முண்டம். அதிக உருளைக்கிழங்கு தின்றதால் வந்த வாய்வு பிடிப்பு அது.

கன்னி எப்படி கருத்தரிக்க முடியும் ? இந்த ஆதார கேள்வியை கேட்க இவ்வளவு குழப்பவேண்டியிருக்கிது. கபிரியேல் என்பவர் வந்தாராம். அவர் தூதராம். அவர் குழந்தை கொடுத்தாராம். நேம் கூட செலக்ட் செய்து தந்துட்டு போனாராம். சரி. அதுக்கு இனிஷியல் தர ஜோசப் ஒத்துக்கொண்டாராம்.அம்புட்டு தேன் கதை. டெக்னிக்கலாக இது சாத்தியம் இல்லை என்று ஊருக்கே தெரியும். எங்கே ஒருத்தர் இதை மறுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ? கடைசி காலத்தில் அன்னை தெரசாவே கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் காட்டுது. கேரளாவில் ஆனி என்ற கன்னியாஸ்திரி கழட்டியது ஒரு பாதிரியின் டவுசர் மட்டும் அல்ல..

நாங்கள் சொல்கிறோம் என்பதால் அல்ல, நீங்களே யோசித்து முடிவு செய்யுங்கள் என்று ஷாம்பு விளம்பரம் போல சொல்லி விடைபெறுகிறோம். அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். ஆமேன்.

Tuesday, December 21, 2010

முஸ்லிம்கள் தாடி வைப்பது ஏன்?

முஸ்லிம்களில் பலரும் தாடி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுள் சிலர் தாடிக்கு கலரிங் செய்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அவர்களது வேறு சில நடைமுறைகளையும் பார்த்து, எதற்கு என வினவியிருப்பீர்கள்? தாடி சம்பந்தமான ஹதீஸ் ஒன்றினைதான் இப்பதிவில் பார்க்கப்போகின்றோம்.

ஹதீஸ் என்றவுடனே அலறி, "அய்யயோ! ஹதீஸா? இது பலமான ஹதீஸா? பலவீனமான ஹதீஸா?" என்றெல்லாம் நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும். அதனால்தான், இன்றைய தமிழக முஸ்லிம்களின் அவுலியாக்களில் ஒருவரான பீஜேயின் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஹதீஸை இங்கே பதிப்பித்துள்ளோம். ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்து உங்களுக்கு ஐயம் இருந்தால், பீஜேயின் தளத்தில் கேளுங்கள். பதில் கிடைக்கக்கூடும்.

இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ள பீஜேயின் பக்கத்திற்கான சுட்டி. குறிப்பிட்டுள்ள வலைப்பக்கத்தில் இருக்கும் ஹதீஸ் இங்கேயும்.

  • அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
  • அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்
  • நூல் : அஹ்மது 21252

வலைப்பக்கத்தின் ஸ்க்ரீன் ஷாட் இங்கே.


இவ்வளவும் படித்துவிட்டு கீழே இருக்கும் படத்திலிருப்பவர் ஏன் தாடிக்கு கலர் அடித்திருக்கிறார் என்று கேட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.



பிறை பார்த்தல், தாடி வைத்தல், குறிப்பிட்ட வகை உடை அணிதல் என்பவையெல்லாம் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக, யூத கிருத்துவ நடைமுறைகளுக்கு மாற்றமாக கொண்டுவரப்பட்டவை என்றுதான் இவ்வகை ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாமிய நடைமுறைகள் அல்லாஹ்வால் முன்மொழியப்பட்டவையா? அல்லது யூத, கிருத்துவ நடைமுறைகளுக்கு மாற்றமாகக் கொண்டு வரப்பட்டவையா?

சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு பல சான்றுகள் உள்ளன. எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? ஹி ஹி ...

டிஸ்கி: நான் தற்பொழுது வைத்திருக்கும் தாடிக்கும் இந்த ஹதீஸுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை எனது தாடி மீது சத்தியம் செய்து தெரிவித்துக் கொள்கின்றேன்.

Saturday, December 11, 2010

வால் பையனுக்காக நாளை கோவையில் சினேகா ஏற்றும் குத்து விளக்கு

நாளை 12.12.2010 ! (அது யாருக்குமே தெரியாது பாவம்!)




மேட்டர் அதில்லைங்க.... நம்ம கடையின் பங்காளி வால்பையன்! இந்தக் கடைல பெண்டெடுத்துட்டு இருந்தா பொழப்பு நடக்காதுன்னு புதுசா கோயம்புத்தூர்ல ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிச்சு இருக்கார்! 
மேற்படி கடை நாளை முதல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது! அதுல விழாவையே செங்குத்தா தூக்கி நிறுத்தப்போற மேட்டர் என்னன்னா குத்து விளக்கேற்றி குஜாலாக ஹோட்டலை திறந்து வைக்கப் போவது மயக்கும் மொட்டழகி, கலர்ஃபுல் கட்டழகி ”சினேகா” 
 

நவம்பரில் கனவு தேவதை சினேகா கலந்து கொண்ட ஈமு கோழிப்பண்ணை திறப்புவிழா ஒன்றில் கட்டுக்கடங்காத ரசிகர் ஒருவர் அன்னாரின் (சினேகா) இடுப்பைக் கிள்ளிய சம்பவம் இன்னும் நம் நினைவுகளிலிருந்து அகலாத நிலையில், பெரும்பாடு பட்டு இவ்விழாவிற்கு வருகை புரிய சினேகாவிடம் சம்மதம் வாங்கி உள்ளோம்! 
ஆகவே பெரியோர்களே, கனவான்களே கை,கால்களை கட்டிப்போடவும், மனமென்ற குரங்கை கொட்டிச் சாடவும் வேண்டுமாய் விழாக் கமிட்டியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இது நிமித்தம் நீவிர்தம் கவலை சூழ் முகங்கள் எனக்கு முன் தோன்றினும், வேறு வழி இல்லாமையால் தயை கூர்ந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.((குறில் தான்)) 
சினேகா விருந்தினரா கலந்துகிட்டு சிறப்பிக்கப் போற இந்த விழாவில் அன்பர்கள் அனைவரும் மொய் சகிதம் வந்து சீரியல் பல்புடன் சிறப்பிக்க வேண்டுகிறேன்!
ஸ்பெக்டரம் வெவகாரம்  சூடு புடிச்சு இருக்க்ற வேளையில, அண்ணாத்த திடீர்
“தொழிலதிபர்’’ அவதாரம் எடுத்திருப்பது ஹெவியா டவுட்ட கெளப்புனாலும், அதை இங்க பேச வேணாம்! அவுரு காசுலயே நாளைக்கி சரக்கடிச்சுட்டு விலாவாரியா சொற்பொழிவாத்தாலாம்! 
கலைஞ்சர் நமக்காகவே அருளியிருக்கும் பிராண்ட் நியூ பின்க் வோட்கா உள்ளிட்ட ஸ்பெசல் சரக்குகள் வேண்டுவோர் கடை திறப்புக்கு(நம்ம கடை இல்லைங்க டாஸ்மாக்!) முன்னதாகவே வாசலில் லைன் கட்டி நிற்க  பரிந்துரைக்கிறோம்!

நிகழ்விடம் -  Purva's Fine DINE Inn,(A/c) Multi-Cuisine Restaurant,

                        2,வெங்குடுசாமி சாலை (கி்ழக்கு),

                        ஆர்.எஸ்.புரம்,கோயம்புத்தூர். 0422-4376437

 

                        ராஜன் -9843120797 வால் பையன் - 9994500540