Thursday, October 28, 2010

குற்றம் நடந்தது என்ன பாணியில் டோண்டு செய்தது என்ன!?


எங்கள் பதிவில் வரவேற்புக்கு முன் பதிவர் சந்திப்பு போல நடந்தலாம் என்று படித்தவுடன் முடிவு செய்திருப்பார், நடுவில் அமர்ந்து ஏற்கனவே பலமுறை கேட்டு காது புளித்து போன இஸ்ரேல் கதையை திரும்ப சொல்லி எல்லோரையும் வெறுபேத்தலாம் என, ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது டோண்டுவுக்கு பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!

மணமகளின் தாய்மாமன் வாசலில் ராஜனை வரவேற்றபோது சட்டென்று டோண்டுவின் மூக்கு(வேற ஆளா இருந்திருந்தா மூக்குக்கு பதில் வேற ஒரு நல்ல வார்த்தை வந்திருக்கும்) வேர்த்திருக்கும், வைதீகமுறைப்படி கல்யாணம் ஆதலால் நிச்சயமாக சைவம் தான் இருக்கும், நான்வெஜ்ஜுக்கு வேலை *இல்லை என்ற கோவம் வரவாய்ப்பில்லை, நாலு எலும்புதுண்டு கடிப்பதற்காக டோண்டு இவ்ளோ தூரம் வரக்கூடிய ஆள் இல்லை, அவை நங்கநலூரிலேயே கிடைக்கும், ஆகையால் அதை ஓரம் கட்டுவோம்!

அன்னைக்கு என்னை நடுத்தெருவுல நிக்க வச்சு நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டில்லடா என்று உள்ளிருந்த டூண்டு(அதாம்பா, மல்டிபள் பர்சனால்டி, முரளி மனோகர் இன்னபிற அனானி மாதிரி) முழித்து கொண்டிருப்பான், வைதீக முறைப்படி என்பதால் ராஜனுக்கு பார்பனீய புத்தி இருக்குமா என பார்க்க மண்டபத்தின் வாடகை கேட்டிருக்கிறார்!, ராஜனுக்கு சொல்ல விருப்பமில்லையோ அல்லது நல்லா கேட்டுட்டு சொல்லலாம் என நினைத்தாரோ தெரியல, எல்லாம் பொண்ணு வீடு தான் பாத்துகிறாங்கன்னு சொல்லியிருக்கார்!

கவனிக்க, ராஜனுக்கு சொந்த ஊர் சென்னையில்லை, ராஜனுக்கு பெற்றோர் இல்லையே தவிர சித்தப்பா, மாமா என வேறு யாராவது ஒருவர் செலவு பொறுப்பை ஏற்றிருக்கலாம், ஆனால் தாம்(பார்பனீயர்கள்) பெண் வீட்டில் தானம்(பிச்சைனும் சொல்லலாம்) வாங்கி மணம் முடிப்பது போல் ராஜனும் செய்வது போல் பதிவில் கோடிட்டு விட்டார்!, அதற்காக அவரை தப்பு சொல்ல முடியாது, அவராடாவிட்டாலும், அவரது பூணுல் ஆடித்தானே ஆகும்!

அப்பவே நிச்சயம் அங்கிருப்பவர்களிடம் விசாரித்திருப்பார், முகூர்த்தநேரம் என்ன, அய்யர் உண்டா என்று, இருந்தும் என்னிடம் போன் பண்ணி கேட்க காரணம், வால்பையன் பொய் சொல்ல மாட்டான், சொன்னதை இல்லை என்று மறுக்கும் அடிப்படை நேர்மையற்றவன் இல்லை என்பது டோண்டுவுக்கே தெரியும்!, அதனால் வால்பையனிடம் போனில் கேட்டு ”உறுதி”(அப்ப ஏற்கனவே தெரியும் தானே) செய்தேன் என எழுதியிருந்தார்!

அதை அங்கே வைத்தே கேட்கலாம், ஆனால் பாப்பான் புத்தி பாவாடைக்குள் என்பதை நிரூபிக்க வேண்டாமா!?, எங்களூரில் ”சில” பெண்கள் வேலையில்லாத நேரங்களில்  கோள்மூட்டி விடுவார்கள், ஒரு பெண்ணுடன் சண்டை இருக்கும், ஆனா நேரடியாக சண்டையிட முடியாது, அதற்கு பதில் வேறொரு பெண்ணை கோர்த்து விடுவது, எப்படினா!

ஏண்டி கோமளா, பக்கத்தாத்து பரிமளாவுக்கும், நோக்கும் என்னடியம்மா சண்டை, உன்னை பத்தி அப்படி சொல்ற, அவாகிட்டயெல்லாம் வச்சிகாதடி, அவா ரொம்ப மோசம், சீ சீ தூ தூ, என தனது நாரதர் வேலையை முடித்து கொள்வார்கள்.

அவரது பதிவின் பின்னூட்டத்தில் வால்பையனும், கும்மியும் ராஜனுக்கு ஊக்கமளித்தற்காக பாராட்டுகிறேன் என சொறிதல் வேறு, நிஜமாலுமே சொல்றேன், அப்பட்டமான பாப்பான் புத்தியை இப்போ தான் பாக்குறேன், எவனாயிருந்தாலும் எதிர்த்து நிக்கிற எங்களுக்கே இவ்ளோ டகால்டி கொடுக்குற பாப்பானுங்க, ஒன்றும் அறியா பாமர மக்கள் மத்தியில் எவ்ளோ சேட்டை பண்ணியிருப்பானுங்க!  கொஞ்சம் சீரியஸாவே அதை அணுகனும், சமூக அழுகல் பார்பனீயம், அதை வெட்டி எடுக்கனும் மொதல்ல!

எனகென்னவோ டோண்டு கையில் கிட்டார் கொடுத்தால் நவீனநாரதர் போல் இருப்பார்னு தோணுது! சரி மேட்டருக்கு வாங்க, நான் சொல்லியிருப்பதை அப்படியெல்லாம் இல்ல, நான் ரொம்போ நல்லவன் என டோண்டு விடும் அறிக்கையை நான் தம்மாதூண்டு அளவும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, பொய் சொல்லிவிட்டு பின் மந்திரம் சொல்லி பாவத்தை கழிக்கும் பாப்பான் வகையறா டோண்டு, அதில் எழவு பெருமை வேற!

ஆக டோண்டு உண்மையை தான் சொல்லுவார் என நம்பிக்கையில்லா பட்சத்தில் ராஜனின் திருமணத்தை சர்ச்சைகுள்ளாக்க வேண்டும், இவனுங்க ரெண்டு பேரும் நமக்கேன் வம்பு என ஒதுங்கி கொள்வார்கள், ராஜனை நிம்மதியான மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இதை செய்திருப்பார் என அகில உலக பாப்பான்கள் சங்கள் முடிவு செய்கிறது, இதற்காக டோண்டுவுக்கு பாராட்டு விழாவெல்லாம் நடக்கப்போவுது, பரிசாக ஹாரிபாட்டர் புத்தகம்(எத்தனை வருசமா அதையே படிப்பார், புத்தகத்தில் பாதி பக்கத்தை காணோம், ரொம்ப பசித்திருக்குமோ படிக்கும் போது) வாங்கிச்செல்லவும்!

Monday, October 18, 2010

பங்காளி ராஜனுக்குக் கண்ணாலமுங்கோ! எல்லோரும் வந்திருங்கோ!

கதாநாயகன்: ப்ரொபைல் போட்டோ மஞ்சள் நிறத்தில் இருப்பதால், மஞ்சள் மூஞ்சி ராஜன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எங்கள் தளத்தின் பங்காளி ராஜன்.

கதாநாயகி: கனவுகளை கவிதைகளாக்கி, கனவுகளின் முகவரியில் கவிதை வழங்கும் ரேவதி.

முன்கதைச் சுருக்கம்: ஜில்லுன்னு ஒரு காதல் அப்படின்னு சொல்லிக்கிட்டு இந்த ஜாக்கும் ஜில்லும் அடிச்ச கூத்து இருக்குதே, இங்க போயி பாத்துத் தெரிஞ்சிக்கிங்க.

அடுத்தது?: டும் டும் டும் தான்.

எங்கே?: காமாட்சி மீனாட்சி மஹால், சுவாமி நாயக்கன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. விக்கிமேப்பியாவுல மண்டபத்தை அழகாக் குறிச்சி வச்சிருக்காங்க. எப்படி வர்றதுன்னு தெரியணும்னா எக்மோரிலேர்ந்து வர்ற வழியும், சிம்ப்ஸனிலிருந்து வர்ற வழியும் கூகிளாண்டவர் சொல்லுறாரு.

எப்போ?: வர்ற வியாழன் (21/10/2010) காலை 7:30 மணிக்கு

வரவேற்பு கிடையாதா?: ஏன் இல்லாம? வர்ற புதன் (20/10/2010) மாலை 7 மணிக்கு!



இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், நம் பதிவுலக நண்பர்கள் ராஜனும், ரேவதியும் மணவாழ்வில் இணையும் விழாவிலும், வரவேற்பிலும், பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வால்பையன்: அவ்வளவுதானா?

கும்மி: வேற என்ன?

வால்பையன்: வாழ்த்து சொல்லலே.

கும்மி: சொல்லிட்டாப் போச்சு.
கலைஞரும் பாராட்டு விழாக்களும் போல,
ஜெயலலிதாவும் மிரட்டல் கடிதங்களும் போல,
கேப்டனும் புள்ளி விபரங்களும் போல
மணமக்கள் இணைந்து வாழ வாழ்த்துகிறோம்!

வால்பையன்: பதிவுலகும் நட்பும் போல,
கூகிளும் புதுமையும் போல,
அறிவியலும் ஆராய்ச்சியும் போல
மணமக்கள் சிறந்து வாழ
வாழ்த்துகிறோம்!

நட்புடன் அழைப்பது,
வால்பையன் & கும்மி

----
புதன் மதியத்திலிருந்தே நாங்கள் திருமண மண்டபத்தில்தான் இருப்போம். மாலையில், வரவேற்புக்கு முன்னர், ஒரு பதிவர் சந்திப்பை வைத்துக்கொள்வோமா?


தொடர்புக்கு: வால்பையன் - 99945 00540

.

Monday, October 4, 2010

அயோத்தியும், அயோக்கியர்களும் - சில உண்மைகள்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்னும் வழக்கில், அலஹாபாத் நீதிமன்றம் கடந்த 30ம் தேதி புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதுமுதல், பார்ப்பன வெறியர்கள் பல்வேறு பொய்களை அள்ளி இறைத்து வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தோழர்கள் மணி மற்றும் ஏழர ஆகியோர், அயோத்தி நிலம், ராமர், பாபர் மற்றும் பாபர் மசூதி தொடர்பான பல தகவல்களையும் தொகுத்துள்ளனர். இந்த உண்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தவேண்டும் என்பதாலும், உண்மையான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அவற்றை இங்கே பதிவிடுகின்றோம்.

(மொத்தத் தகவல்களின் நீளம் கருதி, மிக முக்கியமானவை bold செய்யப்பட்டுள்ளன)

#சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

#உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும் செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்

#த‌னது பலவீனத்தை தோலவியை தடுமாற்றத்தை வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை பாபர் நமா வைப் போல

#டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது

#இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்

#மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயில்ல் பாபர் கூறுகிறார்

#திரேதா யுகம் முடிவுக்கு வந்த்து கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்#ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்த்த‍ற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி#


#பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்

#ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்

#அவனை அவனது சகோதர சகோதரிகளான் லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

#தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு

#வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

#சீதை கடத்தப்பட்ட கதை இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்த்து

#வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது#நாகார்ஜூனா

# கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றையஅயோத்தி கங்கைகரையில் இருந்த்து என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்

# தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ ந்திக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்

# அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது

# மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி

#அந்தகாடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில்சிக்கவில்லை

#இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian
Archeology - Areview 1979-80 page 76, 77 - cofirms the research-done by BB Lal, KN Thetchikth

#சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆயவு வேறு முடிவை தந்த்து

#விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

#ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

#12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை#ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

#கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமர‌கோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை

#இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை

#எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழிதிய ஆய்வுக்குறிப்போட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா எர்நாக் சான்சி பாம்ரா நாச்னா போன்ற‌

#இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார் இல்லையா


#பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான்#அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து ராமன் தூக்கப்பட்டார்

#ராமர் கோவில் இடிக்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராமசரித் மானஸ் என்றஅவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை
#இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரிய்ர் கோபால் கேட்கிறார்


#பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாகதனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

#அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜ௺த்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை#பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூன் ஒரு அகதியாக திரிந்தான்

#18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மத பைசாகி பிரிவுதான் செல்வாக்கில் இருந்த்து#இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி

#தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது#குவாலியரி கோவில் சிற்பங்களை ரசித்த்தை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர்

#ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா

#அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி

#வ‌ரலாற்றை முழக்க வரவில்லை. துரோகத்தை சுட்டிக் காட்டப் போகிறேன்
#பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

#1845ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை #மன்னிக்கவும் பைராகி என்ற சைவ வழிபாடு என்பது தவறாக முன்னர் குறிப்பிட்டு விட்டேன். சைவ மரபு என்று மட்டும் புரிந்து கொள்ளவும்

#1856 ஜ‌னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது

#இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர் #மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்

#வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்த்து டல்ஹ௴சியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்த்து #பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்ன்ன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்

#அவ‌னது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்

#பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாகபிறந்த ஒரே குற்றத்துக்காககட்டாத வரிக்கு பதிலாகபெண்ணையே மனைவியாக்கிகொண்டிருந்தான் அந்தமன்னன்

#அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை#ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்

#ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள்#ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்

#அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான்#அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத் க்கு வந்தார்

#பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா

#ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.

#ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71

#அக‌மது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்

#அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார்#மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்‌

#ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ்Defence of Lucknow (1858 edition) #இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு

#பாபர் மஸதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது

#முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்த்தை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன‌

#கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி


#த‌னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் #முதன்முதலாக பாபர்மசூதி கட்ட ப‌யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில்இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர
#இன்றுமட்டுமாவரலாற்றைதிரிக்கிறார்கள்


#ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள்

#1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்த்து#ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி#பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்

#1885ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ணசாஸ்திரியின் சிவில்கோர்ட்டில் வ.எண் 61/280 பதிவு செய்கிறார் #படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்

#அவுத்மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. but பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது

#இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் ஏ.பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது

#ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் அதாவது இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது#கல்வெட்டில் உள்ள செய்தி

#ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்

#இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல்மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்குகன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்

#1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60)குறிப்பிடுகிறார்

#அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்


#க‌லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஃஆதாரம் உள்ளது

#1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்

#இதற்கு காரணமான கேகே ந்ய்யர் கூட இந்த அற்புத்த்தை ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது

#மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார்

#அகற்ற வாய்பு இருந்த்தை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்

#சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949டிச23 மசூடிக்கு பூட்டு

#உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்-அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் #சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்

#இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்த்து. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
#ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை

#ஜன61950ல் சூட் நம்ர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்ku

#அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.
உபி அரசுசாப்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் #மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர்

#சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார்.
மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச வ.எ.12கீழ் வந்தது

#ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி

#அக்7,1984இல் அயோத்தி வ்ந்த்துமசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே(பூட்ட உடை)முழக்கம்ஆனது

#அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டுஉடைபடும் என்றனர்விஇப‌

#டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர்

#பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே ஐ சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்

#உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது)ஒருவர் முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்கதடையை நீக்ககோருகிறார்

#முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரனமாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக #மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்

#உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்த்து நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்

#தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை35ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் endrum

#பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும்

#தீர்ப்பளித்த பாண்டே பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986,4.40க்கு உத்தரவிட5.20க்கு அமல்னது

#பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா #க‌லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்த்து

#1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து #1986சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிட்ம்

#முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது #நவ9,1989இல் 25கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4 க்ட்ட‍ நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது

#எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,

#அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்த்து. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமற்ற ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது

#ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்த்து. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ்

#அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் #தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்

#முசுலீம்களின்அடக்கதலத்தின்மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்ல் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்

#ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு #முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.

----
மானஸாரா என்ற இந்துகட்ட்ட‍ கலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்-எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா.

மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.

அக்பர் தான் எழுதிய திவான் இ அக்பர் என்ற நூலில்
ததானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார்.
மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்

பாப்ர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆஃனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643.

ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மஸதிற்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989)

பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்த்தை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362)

பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள். இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்துதான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்• ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றுயிம் குறிப்பு உள்ளது.

-----
பதிவர் செங்கொடியும் இந்தத் தகவல்களை பதிவாக இட்டுள்ளார். உண்மையான வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என விரும்பும் பதிவர்கள், தோழர்கள் திரட்டிய தகவல்களை தங்களது தளங்களிலும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.