முன்னுரையெல்லாம் தேவையே இருக்காதுன்னு நெனைக்கறேன்! எளுத்தாளரின் கட்டுரையில் மிளிர்ந்த வரிகள் கறுப்பிலும், பட்டிபார்த்த கெடாவெட்டு சிவப்பிலும்!
அன்புள்ள ஸாய்ரா,
இதோட முடிஞ்சிது உலக்கைமகா எளுத்தாரின் சொல்லாளுமை!
சில ஆண்டுகளுக்கு முன் ஜக்குபாய் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக ஒரு விளம்பரம் வந்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே அப்படி ஒரு கோமாளித்தனமான விளம்பரத்தை நான் பார்த்ததில்லை என்பதால் அந்த விளம்பரம் என் மனதில் பதிந்து போய் விட்டது. பின் லாடன் வேஷத்தில் நெற்றியில் குங்குமப் பொட்டு (!) வைத்துக் கொண்டு கையில் மெஷின் கன்னுடன் உட்கார்ந்திருப்பார் ரஜினி பாய். சரி விடுங்கள்; நான் சொல்ல வந்தது அதை அல்ல. அந்த விளம்பரத்தில் ஒரு வாசகம் இருக்கும். “இறைவா; என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.” அந்த வாசகம் தான் உங்கள் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது.
ரைட்டு! மேல போவோம்!
எனக்கு இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்றும், குடும்பஸ்தன் – படைப்பாளி என்ற இரண்டு துருவங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் உங்களுக்கு யார் சொன்னது?
அதானே, ஏம்மா அவுரு வாய வடச்சட்டி மாதிரி தாளிக்கறீங்க? குடும்பஸ்தன்னு சொன்னது உங்களுக்கு ரேசன் கார்டு இருக்குங்கறதால; படைப்பாளின்னு சொன்னது அதுல மூனாவதா இன்னொரு பேரு இருக்குங்கறதால...... அதுக்கு போயி உங்க பேரும் போட்டோவும் போட்டு வந்த புத்தகங்கள சொல்லுது அந்தப் பொண்ணுன்னு நெனச்சுட்டு இப்பிடி கோவப்படறீங்களே தலைவா?
ஒரு சராசரி யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் போன்ற மிடில் க்ளாஸ் எழுத்தாளர்களிடம் பேச வேண்டிய வசனங்களை என்னிடம் பேசுவதற்கு உங்களைத் தூண்டியது எது? நீங்கள் என் எழுத்துக்களை படிக்கவே இல்லை என்று மட்டுமே என்னால் முடிவு செய்ய முடிகிறது.
ஹா ஹா ஹா! இப்பிடியெல்லாம் யோசிக்க சொல்லி உனக்கு யார்றா சொல்லி கொடுக்கறதுன்னு ”சின்னக்கவுண்டர்ல” கவுண்டமணியின் டைலாக் ஒண்ணு வரும்! அதான் நியாபகம் வருது! உம்ம எழுத்துக்கள படிக்காததாலதான அந்தப் பொண்ணு கடிதாசியெல்லாம் போட்டு இருக்கு! படிச்சிருந்தா வாண்ட்டடா வடச்சட்டில வாய வெக்குமா?!
நான் முழுக்க முழுக்க ஒரு படைப்பாளி.
பாத்தாலே தெரியுது!
எனக்கு குடும்பமோ மண்ணாங்கட்டியோ கிடையாது.
இங்கு மண்ணாங்கட்டி என நீங்கள் குறிப்பது நாங்கள் பொருள் கொளும் மேட்டர் தானென்றால் நன்றி! கிச்சு கிச்சு மூட்டுனதுக்கு!
நான் யாருக்கும் கணவன் அல்ல; யாருக்கும் மகன் அல்ல; யாருக்கும் சகோதரன் அல்ல; யாருக்கும் தகப்பன் அல்ல.
மொத்தத்தில் மனுசனே இல்ல!
எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று எழுத்து மட்டும்தான்.
அப்ப உமக்கு குருடுன்னு அர்த்தம்! என்ன எழுத்து தலைவா? கண்ணாஸ்பத்திரில திருப்பி திருப்பி Eன்னு எழுதி வெச்சிருப்பாங்களே அதுவா!
எனக்குக் குடும்பமே இல்லை என்கிற போது நான் எப்படி ஒரு நல்ல குடும்பஸ்தனாக ஆக முடியும்?
குட் கொஸ்டீன்! அனா பப்பூ ஸோரோவுக்கெல்லாம் தமிழ் தெரிஞ்சா சங்கட்டப்படாது!
உங்களைப் போன்ற இளைஞர்களுக்கெல்லாம் பாரதி என்று ஒருவன் இருந்தான் என்பதே தெரியாதா? அதைக் கூட தெரிந்து கொள்ளாமல் என்ன மயிருக்கு என்னைப் போன்ற ஒருவனின் எழுத்தைப் படிக்க எத்தனிக்கிறீர்கள்? அரைகுறையாகப் படித்து விட்டு இதில் பெரிய மினாராவின் மேல் போய் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்து பரிதாப உணர்ச்சி வேறு!
பாரதிக்கும் உமக்கும் என்னய்யா சம்பந்தம்? அவரை தெரிஞ்சாதான் உம்மை படிக்க முடியுமா? என்ன மயிருக்கு என்று கேட்டால் எந்த மயிருக்கு புத்தகம் எழுதி எந்த மயிறுக்கு எல்லாரும் வாங்கும் விதமாக கடைவிரித்து, எந்தமயிருக்கு கூவிக் கூவி விற்கிறீர்களோ! அதே மயிறுக்குத்தான்!
எனக்கு தினந்தோறும் ங்கொம்மா ங்கோத்தா என்று ஆரம்பித்து என் வீட்டுப் பெண்களின் யோனிகளைக் கிழிகிழி என்று கிழித்து வரும் ஆபாசக் கடிதங்கள் என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
ஆமாம் அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள் நீர் புத்தகம் எழுதுகிறீர் இஃதல்லாமல் வேறென்ன இருவருக்கும் வித்தியாசம்?
ஏனென்றால், அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஆனால் உங்கள் கடிதம் என்னை வெகுவாக அவமானப் படுத்துகிறது. இவ்வளவு அவமானகரமான கடிதத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை.
இதே ஃபீல்-ஐ உங்களுக்கு வரும் எல்லா மெயில்களுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே! லஜ்ஜையாக இல்லையா?
என்னைப் பற்றி இம்மியளவு கூட – அதாவது, என் எழுத்தைப் பற்றி – தெரிந்து கொள்ளாமல் என்னைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக் கிளம்பி விட்டீர்கள்.
அதுவேனா சரிதான்!
நான் கடந்த 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். பிரசுரமான புத்தகங்கள் மட்டும் 35 இருக்கும். தொகுக்கப்படாமல் அங்குமிங்கும் கிடப்பவை ஒரு பத்து புத்தகங்கள் வரும்.
இன்னும் சுட்டு வெச்சு மொழிபெயர்க்கப்படாமல் இருப்பவை எத்தனை அய்யா?!
அதனால் இனிமேல்தான் சாதிக்க வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ எனக்கு இல்லை. உலக இலக்கியத்தின் வாசகன் என்ற முறையில் சொல்கிறேன்; நோபல் பரிசு பெற்ற ஆஸ்த்ரிய எழுத்தாளர் எல்ஃப்ரீட் ஜெலினெக்கின் எழுத்தை விட என் நாவல்கள் வீரியமானவை.
தமிழ்நாட்டின் பிரஜை என்ற முறையில் சொல்கிறேன்; கருணாநிதிக்கும் உமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; இன்னுஞ்சொல்லப்போனால் அவரே பரவாயில்லை. ஆள் வைத்து பாராட்டிக் கொள்வார் ; நீங்கள்தான் சுய சொறிஞ்சி!
இதுபோல் அநேகம் பேரை நான் தாண்டியிருக்கிறேன்; அநேகம் பேரை தாண்டவில்லை. அந்தப் பட்டியலையெல்லாம் இங்கே போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏன் விக்கிபீடியா பிஸியாகிவிட்டதா? சரியா வலை இணைப்பு கிடைக்கவில்லையா?
இன்று உலகம் பூராவும் கொண்டாடப்படும், பாராட்டப்படும் உம்பர்த்தோ எக்கோவின் கட்டுரைகளை விட என் கட்டுரைகள் காத்திரமானவை.
காத்திரம்னா என்ன கழுதை மூத்திரமா!
ஏதோ அதிகப் பிரசங்கித்தனமாக இதை நான் சொல்லவில்லை.
அவையடக்கத்துடன் சொல்லறீங்களா அய்யா!
ஹிண்டு தினசரியின் சர்வேயை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன். இந்தியாவில் பெண்களால் அதிகம் வாசிக்கப்படும் நாவல்கள் என்று ஹிண்டு சர்வேயின் மூலம் தெரிய வந்த ஐந்தாறு நாவல்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று.
பாவம் கோடீஸ்வரனுக்கு சொத்தெல்லாம் பங்காளித் தகராறுல போயிட்டா பைத்தியம் புடிச்சி கிழிஞ்ச பேப்பர் பழய லாட்டரி சீட்டெல்லாம் பொறுக்கி வெச்சுட்டு பணம் பணம்னு பாதுகாப்பானாம்! அதுமாதிரியே இருக்கு உங்க நெலம!
மற்றவை, ஸல்மான் ருஷ்டியின் The Enchantress of Florence, வி.எஸ். நைப்பாலின் ஒரு நாவல், ஜும்ப்பா லஹரியின் நாவல். அமெரிக்க இலக்கியப் பத்திரிகைகளில் என் எழுத்தை நபக்கோவின் எழுத்தோடு ஒப்பிடுகிறார்கள்.
அப்ப அவனுககிட்டயே போயி சரக்குக்கு காசு கேக்க வேண்டியதுதான!
ஒருமுறை சுந்தர ராமசாமி என்னைக் கேட்டார். உங்களுக்கு எந்த மேற்கத்திய எழுத்தாளர் பிடிக்கும் என்று.
வெக்கமே இல்லாமல் சாரு நிவேதிதா என்று சொல்லி இருப்பீர்களே!
சற்றும் யோசிக்காமல் நபக்கோவ் என்றேன். ”தர்மு சிவராமுவும் அவரைத்தான் அடிக்கடி குறிப்பிடுவார்” என்றார் சு.ரா. மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு குறைந்த பட்சம் நான் யார் என்றாவது தெரிந்திருக்கிறது.
இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது! சாய்ராவை இளைய தலமுறை எழுத்தாளர் என்றா அல்லது மூத்த பீத்த எழுத்தாளர்கள் மட்டுமே உம்மிடம் கருத்து சொல்ல தரமுள்ளவர்கள் என்றா?
உங்கள் கடிதத்தின் உச்சக்கட்ட ஆபாசம் இதுதான்: When you try to balance , it will lead to frustration and irritation. For people like you balancing doesn’t work . If you need satisfaction in what u do and do justice you can’t choose . அடடா, என்ன ஒரு புரிந்து கொள்ளல். ஏதோ ஒரு 20 வயதுப் பையனுக்கு அறிவுரை கூறுவது போல் கூறியிருக்கிறீர்கள். உங்கள் வயது 25 இருக்கும் என்பது என் யூகம். அவ்வளவு சிறுமியான நீங்கள் 35 ஆண்டுகளாக எழுதி வரும் எனக்கு அறிவுரை?
நீர் கிடைத்த கேப்புகளிலெல்லாம் இளையராசா முதல் இட்டிலி விப்பவன் வரை நக்கலடிக்கையில் வயது அனுபவம் எல்லாம் பார்த்து விட்டுதான் தொறப்பீரா பேனா மூடியை?!
அம்மணி, ரேஷன் கார்டு ரேஷன் கார்டு என்று மக்கள் அலைகிறார்களே, அந்த ரேஷன் கார்டு எப்படி இருக்கும் என்றே எனக்கு போன வாரம்தான் தெரியும்.
ரஜினிக்கு தான் என்ன பண்ணினாலும் பார்ப்பார்கள் என்ற நெனப்பு;உமக்கும் அதே போல! உம்ம பச்சோந்தித்தனம் இதுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்குது அய்யா!
அது கூட என் பாஸ்போர்ட் செல்லாமல் போய் விட்டதால் புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்காக இருப்பிடத்தின் சான்று கேட்டதால் அதைப் பார்க்க நேர்ந்தது. என்ன பிரச்சினை என்றால், எனக்காக பாஸ்கர், ராஜேஷ், நவீன், ஜெனிஃபர், பிரபுதேவா, தங்கவேல் மாணிக்கம் என்று ஒரு டஜன் பேர் வேலை செய்து கொண்டிருக்கையில் என்னுடைய நாளில் ஒரு மணி நேரம் ஸோரோவுக்காகப் போய் விடுகிறதே என்பது மட்டுமே அவ்வப்போது உறுத்தலாக இருக்கும். அதனாலேயே இனிமேல் நாய் வளர்க்கக் கூடாது என்றும் நினைப்பேன்.
நாயல்லவா உம்மிடம் விலை போவக்கூடாதென தவம் கிடக்கவேண்டும்!
உண்மையில் என் மனைவிதான் என்னால் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆள் என்று நினைக்கிறேன். ஏதாவது பேச வருவாள். வாயில் – என் வாயில்தான் – ஆள்காட்டி விரலை வைத்து சைகை செய்வேன். ”சே, சனியன் பிடிச்சது, எப்பப் பார்த்தாலும் எழுதிக் கிட்டே இருக்கு” என்று முணுமுணுத்தபடியே ஓடி விடுவாள்.
இதில் நிஜமும் இருக்கலாம்! வாய்ப்பிருக்கிறது!
அது எப்படி சாய்ரா, மிகச் சரியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு பெண் கிளம்பி விடுகிறீர்கள்? ஆறு மாதத்திற்கு முன்பும் ஒரு பெண் இப்படித்தான் பல கேள்விகளை என்னிடம் கேட்டார். நான் கடவுள் படத்தில் வரும் அகோரியிடம் வந்து அந்தப் பெண் பூஜா சொல்லுவாளே அட்வைஸ், அதே மாதிரி அட்வைஸை எடுத்துக் கொண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை என்னிடம் வந்து மாட்டுகிறார்கள் பெண்கள்.
அவர்கள் வந்து மாட்டாவிட்டாலும் கலைஞ்சரின் நானே கேள்வி நானே பதில் ஃபார்முலாவில் ஆறு மாததுக்கொருதரம் கல்லா கட்டுவது உமது ஸ்பெஸாலிட்டி போலும்! அதென்ன எளுத்தாளரே ஆறு மாசத்துல உங்கள மறந்துடறாங்க எல்லாரும்!
விளக்கி விளக்கி சலிப்பாக இருக்கிறது… உங்களைப் போன்ற சிறுமிகளிடமிருந்து அறிவுரை கேட்கும் நிலையில் நான் இல்லை.
இப்பிடி சொறிஞ்சுக்கறது சொகமாத்தான் இருக்கும்! ஆனா மானக்கேடா இல்ல! யாரோ ஒரு பொண்ணு மெயில் அனுப்புச்சாம் இவரு பொங்கி எழுந்துட்டாராம்? பப்ளிசிட்டி ஸ்டண்ட் எல்லாம் இப்போ ஓல்ட் ஃபேஷனாயிடுச்சு எளுத்தாளரே! உம்ம நீரே இப்பிடி லூஸு மாதிரி புடுங்கி புடுங்கின்னு சொல்லிகிட்டு இருந்தா உமக்கு ஒண்ணுமில்ல! எரும மாட்டுமேல மழ பேஞ்சா மாதிரி சொரணயே இல்லாம் நிப்பீர்! ஆனா பாவம் உம்ம ஆதர்ச எழுத்தாளன்னு எப்பயோ ஒத்துகிட்டதால நெதம் செருப்படியும் சாணியடியுமா திங்கற இணைய சாரு பக்தக் குஞ்சாமணிகள் பாடுதான் பரிதாபம்! நாய் விட்டை மாதிரி நீர் பாட்டுக்கு எதயாவது கட்டுரைங்கற பேர்ல தட்டி விட்டுடறீரு! அதுக்கெல்லாம் ஒரு வாரத்துக்கு அவுங்கதானே சப்பை கட்டு கட்டணும்! பாவம்யா அவுங்க! கொஞ்சம் பாத்து கழிச்சு விடுங்க!