Sunday, August 22, 2010

வால்த்துக்கள் - வாலுக்கு பிறந்த வால்!

அன்பர்களே, நண்பர்களே! முக்கியமாக வலையுலக தாய்க்குலங்களே......

வலையுலக பிதாமகன்(வயசுல!) வால்பையன் என்ன செய்தாரோ ஏது செய்தாரோ தெரியவில்லை வெள்ளிக்கிழமை இரவு மறுபடி ஒரு தடவை அப்பாவாகிட்டார்! 


                                               இது என் போட்டோ (!) 1987 ல!

ஆண் கொழந்தை பொறந்திருந்தா அடுத்த வருசம் நம்ம தீபாவளி ரிலீஸுக்கு கட்டி குடுக்கலாம்னு இருந்தேன். அதனால என்ன இதுவும் நல்லதுக்குதான்!  ஆளாகட்டும், நானே கரெக்ட் பண்ணிடறேன்!

பங்காளி பொண்ணுக்கு பேர் செலெக்ட் பண்ணி சொல்லுங்கப்பா! நியூமராலஜி நம்பராலஜி வாஸ்து எல்லாம் பாக்க வேணாம்! ஏன்னா நாங்க புரச்சிகர பகுத்தரிவாலர்கள்!

புரச்சி வரப்போவுது புரச்சி வரப்போவுதுன்னு பத்து நாளா டுவிட்டர்ல கோஷமிட்டதற்கு பலனாக புரச்சி வந்தே விட்டது!  எனவே வால் பையன் அவர்களின் பெண் குழந்தைக்கி புரச்சி சம்பந்தப்பட்ட பேரா செலெக்ட் பண்ண உயர்னிலைக்குழு முடிவு செஞ்சிருக்கு!

இதுவரைக்கும் ஜீடால்க்,டுவிட்டர் இன்ன பிற வஸ்துக்களின் வாயிலாக இந்தாள் கடலை போட்டுக் கொண்டிருந்த வாலிப வயோதிக மற்றும் பச்சிளம் பேரிளம் பெண்களுக்கு ரெண்டு கொழந்தைக்கு தகப்பனான ஆல்மோஸ்ட் தாத்தா “வால் பையன் “ பற்றிய இவ்விபரத்தை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது!


இதற்கு பிறகும் கடலை வறுக்கும் பயபுள்ளைகளை நான் ஒன்றும் சொல்வதற்கில்லை- நல்லா இருந்தா நல்லா இருங்க!

குட்டி பாப்பாவுக்கு அன்பு முத்தங்கள் ! சரக்குடன் உடன் வருவேன்!

பங்காளிய ஒட்டறதுக்கு போட்டோ ஒண்ணும் இப்போதைக்கி கெடைக்கல!

அதனால நேருமாமா கில்பாண்ஸி போட்டொ போடறேன் எஞ்சாய் பண்ணுங்க, லின்க்க மவுண்ட் பாட்டன் முகவரிக்கு அனுப்பிடாதீங்க!


  அடடா! பகுத்தரிவு  மேட்டர் எதுவுமில்லாம எப்பிடி தோ நம்ம போட்டோ!

Friday, August 20, 2010

நிஜாமும், டோண்டுவும், சில கனவுகளும்

நேற்று 'இப்படிக்கு நிஜாம்' என்னும் பதிவர், தனது தளத்தில் 'இஸ்லாமியர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்' என்னும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் நமது தளத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அந்தப் பதிவில் பின்னூட்டங்களையும் வெளியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். அந்தப் பதிவிற்கும், இன்னொரு பதிவிற்குமான எதிர்வினைதான் இந்தப் பதிவு.

(அந்தப் பதிவுகளில் வந்த கருத்துகள் சிகப்பு நிறத்தில் உள்ளன.)
//பதிவுலகில் கொஞ்ச நாள் தணிந்திருந்த மதவெறியை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வழக்கமான கும்பல் மீண்டும் துவக்கிவிட்டது. //
நாம் இஸ்லாம் பற்றி பதிவிட்டு 10 நாட்களுக்கு மேலாகிவிட்டன. திடீரென்று அய்யூப் என்று ஒருவர், "அந்த வெறி பிடித்த ஓநாய், என்ன எழுதியது என்று எனக்கு தெரியாது ", என்று கூறி உங்களுடைய பழைய பதிவொன்றில் பின்னூட்டமிட்டிருந்தார். நாங்கள் அதற்கு பதில் கூறி, இஸ்லாத்தில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டினோம். ஒன்றரை மாதங்களுக்கு பிறகு திடீரென்று ஞானம் வந்து இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மதவெறியர்களா? இஸ்லாத்தில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டிய நாங்கள் மதவெறியர்களா?

// அவர்கள் நாத்தீகவாதிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எழுதும் பதிவுகளில் எல்லா மத கடவுள்களும் குறிப்பாக அதிகஅதிகமாக அவர்களின் பிறப்பு மதம் சார்ந்த கடவுள்கள் தாக்கப்பட்டிருக்க வேண்டும். //
இங்கே அனைத்து மதங்களின் கடவுள்களும், அவர்தம் கோட்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன. மேலும், என்னுடைய பிறப்பு மதம் என்னவென்பது இஸ்லாமிய பதிவர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம். நான் என் பிறப்பு மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளையே இட்டுள்ளேன்.

//ஆனால் முழுக்க முழுக்க தாக்கப்படுவது இஸ்லாமும், இஸ்லாமிய கடவுளும், இஸ்லாமிய தூதரும் மட்டும் தான். //
எங்கள் தளத்தையும், அதில் இருக்கும் அனைத்துப் பதிவுகளையும் நன்றாக பாருங்கள். எல்லா மதங்களும் விமர்சிக்கப்பட்டுள்ளன.

//ஆக நாத்தீகன் என்பது ஒரு பச்சை வேசம் என தெரிந்து விட்டது. இவர்கள் உண்மையான ஹிந்துக்களும் கிடையாது. //
இங்கு யாரும் ஹிந்துக்கள் கிடையாது. எங்கள் நால்வருக்குமே பிறப்பு மதங்கள் வெவ்வேறானவை.

//மாலேகான் பெண் சாமியார் பிரக்யா சிங் போன்றவர்கள் பெரிய அளவில் செய்யும் வேலைகளை இவர்கள் இங்கே சிறிய அளவில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.//
அதிராம்பட்டித்தாரைப் பற்றி 'ஆட்டைக் கழுதையாக்கிய கதை' கூறும். UFO என்னும் பெயரில் பின்னூட்டமிடுவரின் ஊர் தெரியும். நீங்களும், அதிரைக்காரர்தானா? ஏதேனும் கற்பனை கதை ஒன்றைக் கூறி, மீண்டும் மீண்டும் அதை சொல்லி, உண்மைப் போன்று தோன்ற செய்யும் முயற்சி நன்றாகத் தெரிகின்றது.

//சம்பந்தப்பட்ட பதிவுகளில் எழுதுபவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் போது இவர்களை பெரிய அறிஞர்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களைப் போன்ற முட்டாள்கள் இந்த உலகத்திலேயே இல்லை. அனைத்துமே அறைகுறைகள் தான். //
குர் ஆனிலிருந்து நாம் முன்வைத்த வாதங்கள் எதற்கும் பதிலில்லை. உங்கள் தரப்பிலிருந்து யாரேனும் ஒரு அறிஞர் வந்து எங்கள் விளக்கங்கள் தவறு என்று நிரூபிக்கட்டுமே. குர் ஆன் சம்பந்தமாக நாம் பேசியதை மறுத்துக் கூற இதுவரை யாரும் வரவில்லை.

//நான் குரானைப் படித்துவிட்டேன், பைபிளைப் படித்துவிட்டேன், கீதையை படித்துவிட்டேன் என சும்மா சொல்வார்கள். ஆனால் இவர்கள் குரானையும் பார்த்திருக்க மாட்டார்கள், பைபிளையும் பார்த்திருக்க மாட்டார்கள்.//
உங்கள் தரப்பு ஆட்கள்தான் குர் ஆனில் ஒரு வசனத்தைக் கூட படிக்காமல், குர் ஆனில் தவறுகளே இல்லை என்னும் ரீதியில் பேசிக்கொண்டிருப்பார்கள். அய்யூப் சவால் விட்டு கேட்டார். நாம் வசனங்களை அளித்துவிட்டோம். அடைப்புக்குறிகளை தேடிக்கொண்டிருக்கின்றார்.

//கொலை செய்பவனை விட அதைத் தூண்டுபவனுக்குத் தான் தண்டனை அதிகம் என இந்திய சட்டம் சொல்கிறது. அந்த தூண்டும் வகையைச் சார்ந்த சிலரின் எழுத்துக்களுக்கு பதில் சொல்கிறேன் என நினைத்து அந்த சதியிலே நம் சகோதரர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்.//
இங்கு நாம் என்ன சதி செய்துவிட்டோம்? இஸ்லாம் குற்றம் குறைகள் அற்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவற்றில் இருக்கும் ஓட்டைகளை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ளுங்கள். அதை விடுத்து வேறு ஏதேதோ உளறிக்கொண்டிருக்காதீர்கள்.

//டாக்டர் அப்துல்லாஹ்: அவரின் பத்து வருட ஆராய்ச்சியின் முடிவு அவரை இஸ்லாத்தின் பால் இணைத்து விட்டது.//
இஸ்லாத்திற்கு முன்னர் அவர், பௌத்த மதத்தில் இருந்தாரே! அதை மறைத்துவிட்டீரே! அதற்கு முன்னர் எண் கணிதத்திற்கு சொம்பு தூக்கினாரே! அதை மறைத்துவிட்டீரே! எண் கணிதத்திற்கு சொம்பு தூக்கியபோதே தெரியவில்லையா, காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று? நீங்களே அவருடைய ரேட்டையும் போட்டுவிட்டீர்கள். நன்றி.!

//அவர்களைப் போன்ற பேச்சாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் எல்லாவற்றையும் முழுமையாக படித்து குரானிலே தவறு இருக்கிறது, ஹதீஸ் இப்படி கூறுகிறது.....என எழுதினாலோ அல்லது பேசினாலோ அவர்களைப் போன்ற அறிவாளிகளிடத்திலே உங்களின் வாதங்களைப் புரியுங்கள்//
வினவு தளத்தில் அவரோடு பேச முயற்சித்ததைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்களே. பார்க்கவில்லையா? யாரோடும் பேச விடாமல், யாரையும் சந்திக்க விடாமல், கூண்டுக்குள் வைத்துக்கொண்டு அவரது பேரை வைத்து வியாபாரம் செய்கின்றீர்.

//மூன்று பேர்களிடம் வாதம் செய்யமுடியாது. 1) அரசன் 2) அடிமுட்டாள் 3) பைத்தியக்காரன். நீங்கள் வேலை மெனக்கெட்டு வாதம் செய்பவர்களில் யாருமே அரசன் இல்லை. அப்படியானால் என்ன வகை என்று தெரிந்துமா அவர்களிடம் உங்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?//
ஜமுக்காளத்துல வடிகட்டுன ஆசாமி சொல்லுறாருப்பா நம்மள பத்தி.

//இறைவனின் ஏகத்துவ ஒளியை தங்களின் வாய்களால் ஊதி அணைக்க நினைக்கிறார்களா என இவர்களைப் பற்றிய வசனம் ஏற்கனவே இருக்கிறது.//
முக்காலமும் தெரிந்த அல்லாஹ்வுக்கு நோர்வேயைப் பத்தி தெரியலையான்னு கேட்ட கேள்வி அப்படியே இருக்கு. பதிலில்லை. ஆனாலும், நம்மளைப் பத்தியும் குர் ஆன்ல சொல்லி இருக்காம். இருக்கட்டும். இருக்கட்டும்.

// அந்த உலகலாவிய வளர்ச்சியை ஒரு கீ போர்ட்டில் டைப் செய்து தடுத்துவிடப்போகிறார்களா இவர்கள்?//
உலகளாவிய வளர்ச்சி இருக்குறப்ப, என்னமோ நாளைக்கி இஸ்லாம் அழியப்போற மாதிரி உங்க ஆளுங்க வரிஞ்சிக்கட்டிக்கிட்டு நிக்கிறாங்களே. ஏன்?

//"தி ஹன்ட்ரட்" (உலகின் 100 சிறந்த மனிதர்கள்) என்ற நூலை எழுதிய ஒரு கிருத்தவ எழுத்தாளர் அதிலே முதலிடத்தில் முகமது நபியை வைத்து விட்டு //
ரொம்ப நாளா, அந்த நூலை பற்றி ஒரு பதிவு போடணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன். நினைவூட்டியதற்கு நன்றி!

//இவர்கள் நேரடியாக இறைவனிடம் போர் புரியத்துடிக்கிறார்கள். அவர்களுடன் அவனே போர் செய்யட்டும். அதனால் தயவுசெய்து இஸ்லாமிய நண்பர்கள் அவர்களுடன் வாததில் ஈடுபடவேண்டாம் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். //
எப்ப வருவாரு? ஆவலா காத்துக்கிட்டு இருக்கோம்.

//அது பொதுகழிப்பிடம். அங்கே இருப்பவர்கள் அந்த வாசனையில் சோறு சாப்பிடக்கூடிய்வர்கள். அவர்களிடம் நீங்கள் வாதத்திற்கு போனால் அவர்கள் அங்கே கிடப்பதை எடுத்துத் தான் உங்கள் மீது வீசுவார்கள். அப்போது அந்த வாடை உங்கள் மீதும் வீசும். //
எங்களுடைய முந்தைய பதிவொன்றில் கழிந்துவிட்டு சென்றது யார் என்பது எல்லோருக்கும் தெரியட்டும் என்றுதான் அவற்றை அப்படியே விட்டுவைத்திருக்கிறோம்.

//அவர்கள் உங்களின் மீது ஏற்றிவிடும் வெறியை நீங்கள் தணித்துக்கொள்ள தேடுவது அவர்களின் தாய், சகோதரி, மனைவியை. //
கழிந்ததை இங்கே ஒத்துக்கொள்கின்றீர். உங்களுடைய மதவெறி அப்படி நடக்க வைக்கின்றது. ஆனால், எங்களை மதவெறியர்கள் என்று கூறுகின்றீர்கள்.

//நாளையே அவர்களை உங்களை விட சிறந்த சமுதாயமாக இறைவன் மாற்றிவிடுவான்//
சமுதாயம் என்னும் வார்த்தையை, இஸ்லாம் என்னும் அர்த்தத்தில் நீங்கள் பயன்படுத்தியிருந்தால், இது கனவு எண் 1 . உங்கள் கனவைப் பற்றி பதிவின் கடைசியில் கூறுகின்றேன்.

//இந்திய-தமிழக அரசுக்கும்... சி.பி.ஐ., ரா போன்ற உளவுத்துறைக்கும் ஒரு அன்பான அவசர வேண்டுகோள்... //
எப்பொழுதும் அல்லாஹ்விடம்தானே, துஆ கேட்பீர்கள். இப்பொழுது என்ன அரசாங்கத்திடம் கோரிக்கை? ஓ! அல்லாஹ் என்ற ஒன்று இல்லைஎன்று நீங்களும் தெரிந்து கொண்டீர்களோ!

//இந்த பயங்கரவாதிகளை தயவு செய்து கண்காணியுங்கள்... இவர்களின் பின்னணியில் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளையும், வெடி குண்டு வியாபாரிகளையும் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.... //
எப்பொழுதுமே பதில் சொல்ல இயலாவிட்டால், வேறு ஏதாவது சொல்லித் திட்டுவீர். இப்பொழுது மிரட்டலா?
--------------*********************--------------

நிஜாமின் பதிவுக்கு பதில் எழுதி வைத்துவிட்டு, இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, நம்ம டோண்டு அவர்களின் பதிவு ஒன்றை பார்த்தேன். அவரும் தனது கனவொன்றை அங்கே வெளியிட்டிருந்தார். அவரது பதிவில் பலவற்றிற்கும் பதில் சொல்லவேண்டியிருந்தாலும், அவரது கனவை மட்டும் பார்ப்போம்.

(டோண்டுவின் கருத்துகள் சிகப்பு நிறத்தில் உள்ளன)
//வால்பையன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் ஒரு ஹிந்துதான். இம்மதத்தில்தான் நாத்திகர்களும் இருக்கவியலும். சார்வாக மகரிஷி, ஜாபாலி ஆகியோர் பேசியதை/எழுதியதைக் கருதும்போது வால்பையன் ஜுஜூபி.
இதே மாதிரி பேசிய கண்ணதாசன் பிறகு இரட்டிப்பு வேகத்தோடு கண்ணன் காட்டிய வழியினுள் வந்தார், அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். அதே போல வால்பையனுக்கும் பிராப்தம் இருந்தால் அப்படியே நடக்கட்டுமே, என்ன போச்சு”?//
இது டோண்டுவின் கனவு. நாத்திகர்கள் இந்து மதத்தைத் தழுவுவார்கள் என்று டோண்டு கனவு காண்கின்றார். நாத்திகர்கள் இஸ்லாத்தைத் தழுவுவார்கள் என்று நிஜாம் கனவு காண்கின்றார்.

கனவு காணும் வாழ்க்கை யாவும்....

Friday, August 13, 2010

தமிழ் ஹிந்து! காவி ஆடுகளின் காட்டுக்கத்தல்கள்!

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்ஹிந்து!? என பெயர் வைத்து ஒரு தளத்தை நடத்தி கொண்டிருக்கும் பார்பனீய கூட்டம் அடிக்கும் ஜல்லிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!, இவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை காப்பாற்றுவது போல் கத்துவதும் கதறுவதும் சில ஆண்டுகளாகவே நாம் பார்த்து கொண்டு வருபவை தான், பெண்கள் சுதந்திரத்தை கெடுக்கும் வகையில் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் நுழைந்து அது தப்பு இது தப்பு என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், நாலாந்தர பொறுக்கிகள் ரேஞ்சுக்கு அவர்களை மானபங்கபடுத்துவதும் அவர்களின் வழக்கமாக உள்ளது!,

பின் ஏனடா உங்கள் கோவில்கள் பெண் சிலைகள் பெரிய கொங்கைகளோடு இருக்குன்னு கேட்டால் அதற்கு ஆயிரம் வியாக்கியானம் பேசுவார்கள்! உண்மையில் இவர்களிடம் இருப்பது கலாச்சாரத்தை காப்பற்றும் எண்ணமா? இல்லை நீ மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என்ற வயித்தெறிச்சலா என்பது தெரியவில்லை!

http://www.tamilhindu.com/2010/08/hindus-should-unite/


மேலோட்டமாக பார்த்தால் மேல்கண்ட பதிவு எதோ சமூக அக்கறையில் எழுதப்படுவது போல் தான் தோன்றும், ஆனால் உண்மையில் மக்களிடம் வக்கிரமான மதவெறியை தூண்டிவிடும் செயலை தான் இவர்கள் ஆதிகாலத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தோள் வரைக்கும் தலைமுடியும், நெஞ்சு(நெஞ்சு தான்) வரைக்கும் தாடியும் இருந்தால் அவன் சாமியார்! அவன் அன்பாக பேசுவானாம்! கோவமே வராதாம், வாயை திறந்தால் உண்மை மட்டுமே வருமாம்! அப்படி தான் சமீபத்தில் இலங்கை சென்று வந்த ஒரு சாமியார் அங்கே ஒன்றையும், இங்கே வந்து ஒன்றையும் உளரி கொட்டிகிட்டு இருந்தான்! பெங்களுரில் ஒரு சாமியார் என்னை கொல்ல முயற்சி என்று ஸ்டண்ட் விட்டு பிறகு அது நாயை(ரெண்டும் ஒண்ணு தானே) சுட வந்தவன் என தெரிந்ததும் வழக்கம் போல் பல்டி அடித்தார்கள்!

நித்தியான்ந்தன் மாட்டியவுடன் நேக்காக பீஜேபி ஆட்சி நடக்கும் கர்நாடகத்துக்கு வழக்கை மாற்றி நமது தேசிய வியாதியான ஞாபக மறதிக் கோட்பாட்டின் படி தற்போது ஜாமீனில் விடுவித்து அந்த எச்சக்கலையை மீண்டும் தொழில் செய்ய அனுமதித்து விட்டார்கள்.

சங்கராச்சாரி என்னும் வாழைஇலையில் கக்கா போகும் கெழட்டுக்காவிப்பய தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள, தனது தில்லுமுல்லுகளை மறைக்க செய்த தகிடுதத்தங்கள் உலகறியும், அதற்காக கொலை செய்து பின் பணத்தால் அதை மூடி மறைத்த குரூரத்தை மனசாட்சி உள்ள எவனும் அறிவான், கோர்டில் சாட்சி பிறண்டுவிட்டது என்பதால் இது பொய் குற்றசாட்டு என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் தமிழ்ஹிந்து தளம் அப்பட்டமாக ஒரு குற்றவாளிக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருக்கிறது!, அப்சல் குருவுக்கோ, அஜ்மல்கசாப்புக்கோ சாட்சி இல்லையென்று பிறண்டால் சும்மா இருப்பார்களா இந்த மெஜாரிட்டி கூட்டங்கள், நடுரோட்டில் வைத்து எரித்து விடமாட்டார்கள், ஒரிஸாவில் ஒரு பாதரியார் குடும்பத்தை எரித்தாமாதிரி!, மோடி திறம்பட ஆட்சி புரிகிறாராம்! கூட்டம் கூட்டமாக இஸ்லாமியர்களை கொன்று குவித்துவிட்டு, தனக்கு ஒத்துவராதவர்களை போலி என்கவுண்டர் செய்து இடிஅமின் ஆட்சி நடத்தும் மோடி இவர்களுக்கு ஹீரோ. நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம், அடுத்த மனிதனை கொன்று தான் நாம் வாழவேண்டிய கட்டாயத்திலா இருக்கிறோம்! பின் எப்படி மோடி ஹீரோ!? வேறொன்றுமில்லை புரையேறிப் போன மதவெறி தான் காரணம். இஸ்லாத்துக்கு ஒசாமாபின்லேடன் என்றால் இந்த்துவாவுக்கு நரேந்திரமோடி! பெரிய வித்யாசம் எதுவுமில்லை. மெஜாரிட்டி மக்கள் மனதில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கையும் வன்முறையையும் நியாயப்படுத்தும் விதமாக நஞ்சைக் விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடும் மோடி இந்தியாவின் ஹிட்லர்!

சோனியா நாட்டின் இயங்குசக்தியாம், அவர் கிறிஸ்தவராம்! வேறு நாட்டில் ஒரு மாற்று மதத்தவர் ஒரு நாட்டை இயக்க முடியுமா என்ற கேள்வி வேறு!, நீ போய் அந்த நாட்ல குடியுரிமை வாங்கி தேர்தல்ல நிக்க வேண்டியது தானே, அதுக்கு தொடை நடங்குது. புண்ணாக்கு பயல்களுக்கு சீனாவில் மதம் சார்ந்தா ஆட்சி அமைகிறது என்ற கேள்வி ஏன் எழுவதில்லை!, சோனியா கிறிஸ்தவர் என்பதன் மூலம் சொல்ல வருவதென்ன? அடுத்து பா.ஜ.க வர வேண்டும்! நாட்டில் உள்ள மாற்று மதத்தவர் வழிபாட்டு தளங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்! குஜராத் சம்பவம் போல் இந்தியா எங்கும் நடக்க வேண்டும்!,

அப்துல் கலாம் அன்னியநாட்டு கைக்கூலி என்று தான் இதுவரை சொல்லவ்ல்லை, அதையும் ஒருநாள் சொல்லிவிடுவார்கள்! இந்துத்வம் என்ற இவர்களின் கோஷம் வருடப் போக்கில் பெரும்பான்மை இந்துக்களிடமே நீர்த்துப் போன நிலையில் இயலாமையின் வடிகாலாக இணையங்களில் உளறிக் கொண்டிருக்கின்றனர்!

மார்க்ஸிஸ்ட் ஆதரவாளர்கள் இந்து மதம் தவிர மற்ற மதங்களை கேள்வி கேட்பதில்லை என்ற குற்றசாட்டு வைக்கிறார்கள்! இந்துத்வம் அளவு சாதிபிரிவினை மாற்று மதங்களிலா இருக்கு! எந்த சர்ச்சிலாவது காசு கொடுத்தால் முன்னாடி உட்கார் என்று சொல்கிறார்களா, எந்த மசூதியிலாவது காசு கொடுத்தால் சிறப்பு வழிபாடு செய்கிரார்களா? பொருளாதாரப்பிரிவினை, சாதிப்பிரிவினை என்று நாட்டின் புற்றுநோயாக இருக்கும் இந்துமதம் மற்ற மதத்தவர் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்!, உள்ளுக்குள்ள ஆயிரத்தெட்டு நொட்டைய வச்சிகிட்டு அடுத்தவனை குறை சொல்வதில் இந்து மதத்தை அடிச்சிக்க வேற ஆள்கிடையாது!


படம்:நன்றி வினவு(அங்கே பார்த்த ஞாபகம்)

‘தலைமை ஹிந்து கவுன்சில்” என்ற பெயரில் ஒரு குழு ஆரம்பிக்கணுமாம், அதில் இருக்கும் தலைவர்கள் சொல்றதுக்கு 100 கோடி இந்தியர்களும் செவிசாய்க்கனுமாம்! இவனுங்க காவியக் கட்டிக்கிட்டு மார்கெட் போன நடிகைகள் கூட மஜா பண்ணிக்கிட்டு இருப்பானுக; இந்த வேலைக்கி போர்டு மெம்பர் பதவி ஒண்ணுதான் கேடு! சரி தலைவர்கள் யாருன்னு பார்த்தா மொதப்பேரே பெரிய கேடி பேரா இருக்கு! ”அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரி, கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்” எப்படி? தில்லாலங்கடி வேலை செய்து மக்களை ஏமாற்றும் ஹிப்பி தலையன் முதல் பெயர்!, இதில் கொலை குற்றம்சாட்டபட்ட சங்கராச்சாரி பெயரும் இருக்கு!, நிச்சயம் நித்தியானந்தா பெயரும் வரும்! ஏன்னா இந்த மதத்தை பொறுத்தவரை தலைமையில் இருப்பவர்கள் என்னவேண்டுமாலும் செய்யலாம், ஏமாளி மக்கள் அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது!

ஞானம் பேராபத்தில் சிக்கியுள்ளதாக வருத்தப்படுகிறார்கள், ஞானத்திற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை! என்னவோ இந்தியாவில் மட்டுமே அறிவாளிகள் இருப்பதாகவும், மற்ற நாட்டுக்காரனெல்லாம் கேனப்பசங்க போலவும், அவர்கள் இங்கே வந்து இவர்கள் அறிவை மழுங்கடிப்பது பேசிக்கொண்டிருக்கிறார்கள், மூடநம்பிக்கையில் மூழ்கி முத்தெடுத்த இந்த மதவாத குரங்குகள் தான் கெட்டதும் இல்லாமல் வனத்தையும் சேர்த்து கெடுக்க நினைப்பது தான் ஏனென்று தெரியவில்லை!


எல்லா வல்ல கடவுளை கும்பிட உனக்கு எதுக்கு மீடியேட்டர்?


உன்னை படைத்த கடவுளுக்கு நீ பேசும் மொழியை ஏன் புரிந்து கொள்ள முடியாது? ஏன் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை பண்ணுவோம் என அடம்பிடிக்கிறார்கள்?

கடவுள் பெருமையை பரப்ப நினைப்பவர்கள் தானே கடவுளாக காட்டி கொண்டு, கால் கழுவிய தண்ணிருக்கு கூட பெரிய பில்டப் ஏறுவது ஏன்?


நீ மனிதனாக இருக்க மதம் உனக்கு என்ன வகையிஉல் உதவி செய்திருக்கிறது?

மத குருமார்கள் கழுவும் (எல்லாத்தயும்தான்) நீரை உள்ளங்கையில் நாம்பிப் பிடித்து பக்தி வழிய குடிப்பதால் விளையும் நன்மை என்ன?

நாட்டில் இருக்கும ஆயிரக்கணக்கான கோயில்களால் கண்ட பயன் என்ன? மேற்கொண்டு அயோத்தியில் ராமனுக்கு கோயில் கட்டி எதை சாதிக்கப் போவதாய் உத்தேசம்?



உரிய பதில்களை எதிர்பார்ப்பது முட்டாள் தனம், ரியாக்ஸனை மட்டும் கவனிப்போம்!

Tuesday, August 10, 2010

பிறை பார்த்தல் என்னும் பிற்போக்குத்தனம்

இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ, இஸ்லாமியர்கள் புனித மாதமாகக் கருதும் ரமலான் தொடங்கி விடும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, பூமியில் மோதவிருக்கும் ஒரு விண்கல், மோதும் நேரத்தினை மிகத் துல்லியமாக (வினாடிகள் உட்பட) அறிவிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. ஆனால், ஒரு மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிப்பதில் இஸ்லாமியர்களுக்கிடையே பெரும் குழப்பம்.

ஒவ்வொரு ஊரிலும் டவுன் காஜி என்று ஒருவரும், சென்னையில் தமிழகத் தலைமை காஜி என்று ஒருவரும் இருப்பார்கள். அவர்கள்தான், பிறை பார்த்து, மாதத்தின் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இவர்களைத் தவிர ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைமையும், அவர்கள் தனியாக பிறை பார்த்து, மாதத் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இங்கே ஏற்படும் குழப்பம்தான், ஒரே ஊரில் ஒரு பகுதியில் நோன்பு தொடங்கியும், இன்னொரு பகுதியில் நோன்பு தொடங்காமலும் இருக்கும் காரணம்.

தலைப்பிறையை கண்ணால் பார்த்தால் மட்டுமே, அதனை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளவேண்டும் என்று சில ஹதீஸ்கள் இருப்பதாக சொல்வார்கள். முகம்மது வாழ்ந்த காலத்தில், அறிவியல் வளர்ச்சி இல்லாத நிலையில், இந்த நடைமுறைப் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியின் மூலம் தலைப்பிறையை மிக எளிதாகக் கணிக்க முடியும். கணிக்க முடியும், ஆனால் கணிக்கக் கூடாது என்று இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது "வரூஊம், ஆனா வராது" காமெடிதான் நினைவுக்கு வருகின்றது.

கணிக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் முக்கியமான காரணம், முகம்மது 'கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்; அதனை மீறக்கூடாது என்பதாகும். முகம்மது சொன்ன பல விஷயங்களை இன்றைய சூழலுக்கு ஒத்துவராது என்று கூறிவிட்டு, தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு செய்துவருகின்றனர். உதாரணத்திற்கு, தனியாகவோ, இருவர் மட்டுமோ பயணிக்க முகம்மது தடை விதித்துள்ளார்; பயணம் செய்யும்போது மூன்று நபர்கள் பயணிக்க அனுமதி கொடுத்துள்ளார். ஆனால், இன்றைய சூழலில் பயணத்தின் போது, இத்தகைய தடையை யாரும் பொருட்படுத்துவதேயில்லை.

முகம்மதின் வாழ்க்கை நெறிமுறைகளை, அப்படியே பின்பற்ற வேண்டுமானால், இன்றும் வெளியில் செல்லவேண்டுமானால், கூட இருவரை அழைத்துச் செல்லவேண்டும்.அது அன்றைய சூழல், இன்றைய சூழலுக்கு அது பொருந்தாது என்று கூறிவிட்டு செல்ல முடிகின்றது. ஆனால் பிறை விஷயத்தில், அறிவியல் வளர்ச்சியை புறம்தள்ளி, ஹதீஸை முன்னிலைப்படுத்தி தங்களது பிற்போக்குத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.


அடுத்தது, உலகம் முழுதும் ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது; உலகின் ஒரு பாதி பகலாக இருக்கும்போது; இன்னொரு பாதி இரவாக இருக்கும். அதனால், ஒரே நேரத்தில் நோன்பு வைப்பதோ, தொழுவதோ சாத்தியமில்லை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் 'beating around the bush' என்று சொல்லுவார்கள், அதற்கு மிகச்சரியான உதாரணம், இவர்களது இந்த உதாரணம்தான். அனைவரும் கேட்பது, ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் மாதம் தொடங்குகின்றதே; இவர்கள் சொல்லுவது, ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது.

கிருத்துவர்கள் உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள். சர்வதேச தேதிக் கோட்டினை (International Date Line), அளவீடாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கிருத்துவர்கள், தங்கள் நாட்டு நேரப்படி (Local Time Zone), கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

அதுபோல், இஸ்லாமியர்களும் தங்கள் மாதங்களின் தொடக்கத்தை, சர்வேதச தேதிக் கோட்டின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், சர்வேதச தேதிக் கோடு ஒன்று இருப்பதையே மறைத்துவிட்டு, சவூதியை அளவீடாகக் கொண்டு கணக்கிடும்போது பல குழப்பங்கள் வரும் என்று கூறி குழம்பிக்கொள்வார்கள்.

துருவப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் நாடுகளான நார்வே, பின்லாந்து முதலியவற்றில், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும். அத்தகையப் பகுதிகளில், பிறை பார்த்து மாதத் தொடக்கத்தைக் கணக்கிட முடியாது. அப்பொழுது, வேறு நாடுகளில் பிறை தெரிந்தால், நார்வேயில் ரமலான் தொடக்கத்தை கணக்கிடலாம் என்பார்கள்.

வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற "அதிசயத்தை", குர் ஆன் மூலம் உரைத்த அல்லாஹ்விற்குத் தெரியாதா, தான் படைத்த பூமியில் நார்வே போன்ற நாடுகளும் இருக்கும், அவற்றிற்கு இத்தகைய விதிகள் எல்லாம் பொருந்தாது என்று? அரேபியா என்னும் சிறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு, அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தும் அளவிற்கு கூறப்பட்ட சில விஷயங்கள், உலகம் முழுமைக்கும் என்று கூறுவது இங்கே பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை சரி செய்வதற்காகவேணும், அறிவியல் கணிப்புகளை பின்பற்றுகிறார்களா என்று பார்ப்போம்.

Tuesday, August 3, 2010

பிஜேயின் எழுச்சியும், ஓய்வும்... சாரி ஆய்வும்.



1991, ஜூலை 7. மேலப்பாளையத்தின் ஒரு தெருவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. 'அவர்' பேசத்தொடங்கினார். வானிலிருந்து தூறலும் தொடங்கியது. எனவே, மேடையில் இருந்த மைக், அருகிலிருந்த வீட்டின் திண்ணைக்கு இடம்பெயர்ந்தது, அவரோடு. தூறல், மக்களை அவரருகே நெருங்க விடாமல், எதிர் வீட்டின் திண்ணைகளிலும், வேறு பல வீட்டுத் திண்ணைகளிலும் இருக்கச் செய்தது. எங்கிருந்தோ முளைத்த இருவர், தோளில் துண்டுகளோடு தெருவில் நடக்கலாயினர். 'அவர்' அருகே சென்றவுடன் அவ்விருவரில் ஒருவர், துண்டுக்குள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து, 'அவரது' இடது கையில் வெட்டுகின்றார். மீண்டும், வீச்சரிவாள், 'அவரது' கழுத்தை நோக்கிப் பாயும்பொழுது, 'அவர்' தனக்கு முன்னிருந்த மைக்கை எடுத்து அதனைத் தடுக்கின்றார். திடீரென முளைத்த இருவரும், பறந்தோடிவிடுகின்றனர்.

அந்த 'அவர்' - பிஜே (PJ) என்று சுருக்கமாக அழைக்கப்படும், P. ஜெயினுல் ஆபிதீன். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தவர். இஸ்லாமியக் கல்வி கற்று மயிலாடுதுறை அருகில் இருக்கும் சங்கரன்பந்தலில் ஒரு பள்ளிவாசலில் ரூ.500 மாதச் சம்பளத்திற்கு, வேலை செய்தவரையிலும், வெளி உலகிற்கு அவர் யாரோதான். தர்கா வழிப்பாட்டிற்கு எதிராய் அவர் பேசத்தொடங்கி, 80களின் பிற்பகுதியில், அந்நஜாத் பத்திரிகையின் ஆசிரியராய் அவர் அமர்ந்தபோதுதான், இஸ்லாமியர்கள் மத்தியில் 'யார் இந்த கலகக்காரன்?' என்னும் கேள்வி பரவத்தொடங்கியது.

அவரது கருத்துக்களால் அன்றைய இளைஞர்கள் கவரப்பட்டார்கள். அவர்கள் நஜாத் இயக்கத்தவர் என்று அடையாளப்படுத்தப்பட்டு, ஊரை விட்டு தள்ளிவைக்கும் நிகழ்வுகள் நடைபெறத்தொடங்கின. அவர் செல்லுமிடமெல்லாம் ஆதரவும், எதிர்ப்பும் ஒருங்கே வளர்ந்து வந்தன. அத்தகைய ஒரு எதிர்ப்புதான், அந்த மேலப்பாளையம் சம்பவம்.




அதன்பிறகு, ஜாக், தமுமுக என்று பல இயக்கங்களுக்கும் பயணித்து, 2004ல் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் அமைப்பின் நிறுவனத்தலைவரானார். 2006ல் கும்பகோணத்தில் அவர் நடத்திய 'இட ஒதுக்கீடு மாநாடு' பெரும்கூட்டத்தைக் கூட்டியது; அந்தக் கூட்டத்தைக் காட்டி ஜெயலலிதாவிடம் சில விஷயங்கள் பேசி, சட்டமன்ற தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து, தனது இயக்கத்தினர் மூலம், அதிமுக கூட்டணிக்கு பிரச்சாரமும் செய்தார். ஆனால், முடிவுகள் திமுக தரப்பிற்கு சாதகமாக வர, தமுமுகவினருக்கு சில வாரியப் பதவிகள் கிடைத்தன.

'நாங்கள் பதவிகளுக்கெல்லாம் ஆசைப்படவில்லை' என்று கூறிக்கொண்டு, தமுமுகவினரை எதிர்ப்பதை ஒரு புறமும், இஸ்லாமியப் பிரச்சாரங்களை ஒரு புறமும் செய்துவந்தனர். இந்நிலையில் இந்த வருடம் ஜூலை 4, அன்று சென்னை தீவுத்திடலில், மீண்டும் 'இட ஒதுக்கீடு மாநாடு' நடத்தினர். இம்முறை, அவர்களது குறி, மத்தியில் ஆளும் காங்கிரஸ். யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு, தீவுத்திடல், மக்கள் கூட்டத்தால் நிறைந்தது.

இம்முறை கூடிய கூட்டம், பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கும் வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. தமிழக இஸ்லாமியத் தலைவர்கள் வேறு எவருக்கும் இவ்வளவு கூட்டம் கூடாது என்பதுதான், இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இவ்வளவு பெரும் எழுச்சி பெற்ற பிஜே, இருவாரங்களுக்குள்ளாக மிகப்பெரும் சறுக்கலை சந்தித்தார்.

அவரது சறுக்கலைப் பார்ப்பதற்கு முன், இஸ்லாமிய சமூகத்தில், அவரால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை பார்த்துவிடுவோம். இஸ்லாமிய சமூகத்தில் புரையோடிப்போயிருந்த வரதட்சணைப் பழக்கத்தை, அவர் சார்ந்த இயக்கங்கள் பெரிதும் குறைத்துள்ளன. தர்கா வழிபாட்டிற்கெதிரான மனநிலை பரவலானது. அல்ஹம்து, குல்ஹுவல்லாஹு அஹது உள்ளிட்ட சில வசனங்களை மட்டுமே மனப்பாடமாய் தெரிந்திருந்த இஸ்லாமியர்கள், பிஜேயின் பிரச்சாரத்தின் மூலம் சில குர் ஆன் வசனங்களுக்கான தமிழ் அர்த்தத்தையும் தெரிந்துகொண்டனர். பிஜெயால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குர் ஆன் பிரதிகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெறத் தொடங்கின.

அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும், பிஜே உளறுவதை அப்படியே ஒப்புவிக்கும் ஒரு கூட்டமும் உருவானது. மாற்றுக்கருத்து உடையோருடன், பிஜே விவாதம் செய்வதும் அவ்வப்போது நடைபெறும். விவாதத்தின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை ஜெயா பொய்களை, சாரி ஜெயா செய்திகளை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இது போன்ற ஒரு விவாதம்தான், சுன்னத் ஜமாஅத் அமைப்பினருடன் ஜூலை 17 அன்று நடைபெற்றது. தலைப்பு - 'அல்லாஹ்விற்கு உருவம் உண்டா? இல்லையா?"

என்னது? அல்லாஹ்விற்கு உருவம் உண்டா? அல்லாஹ் உருவமில்லாதவன் என்றுதானே நாங்கள் அறிந்திருக்கிறோம் என்று இஸ்லாமியர்களும், வேற்று மதத்தவரும் சொல்வார்கள். ஆனால், பிஜேயும், அவர் இயக்கத்தைச் சார்ந்த தலைமை நிர்வாகிகளும் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று கூறுவார்கள். அவர்கள் அவ்வாறு கூற முற்பட்டதர்க்கும் பிஜேயே காரணம்.

குர் ஆனை தமிழில் வாசிக்காதவரை, இங்கிருப்பவர்களுக்கு குர் ஆனில் இருக்கும் முரண்பாடுகள் தெரிந்திருக்கவில்லை. பிஜேக்கு முன்னரே பலரும், குர் ஆனை தமிழில் மொழிபெயர்த்திருந்தாலும், பிஜேயின் தமிழாக்கமே பரவலாக வாசிக்கப்பட்டது. தமிழ் வழியில் குர் ஆனை படிக்கும்போது, குர் ஆனில் அல்லாஹ்வின் உடல் உறுப்புகள் என்று நேரடிப் பொருளில் பல வசனங்கள் அமைந்திருந்தது தெரியவந்தது. இத்தகைய வசனங்களுக்கு விளக்கம் கேட்டால் என்ன சொல்வது என்னும் நிலையில், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று பிஜே கூறத்தொடங்கினார்.

வழக்கம்போல் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நிகழ்வுக்கு, இரு தரப்பிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர். உருவ வழிப்பாட்டிற்கு எதிரான மதம் இஸ்லாம்; உருவ வழிபாடு செய்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று கூறுவது குர் ஆன் (9:28); அத்தகைய வேத நூலை அடிப்படையாகக் கொண்ட மதத்தின் இறைவனுக்கு உருவம் உண்டா என்பதே அங்கே கூடியிருந்தவர்களின் எண்ணவோட்டமாக இருந்தது.

விவாதம் முடிந்ததும், தவ்ஹீது அமைப்பினரே பிஜேயை இத்தகையை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர். முடிவு எப்படியிருந்தாலும், நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று வழக்கம்போல் கூறுவது இம்முறை எடுபடாது என்று தெரிந்தது. இந்த சூழ்நிலை, அவரை ஜூலை 26 அன்று ஒரு அறிக்கை விட வைத்தது. அந்த அறிக்கையில் இருக்கும் வாசகம்:

(பிஜேயின் வாசகங்கள் சிகப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.)

//முக்கியமான விஷயங்கள் கூட இவ்வளவு காலம் சென்ற பின்பும் தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது என்பது இதன் மூலம் உறுதியானது.

எனவே அரசியல், சமுதாயப் பிரச்சனைகள், இயக்க நடவடிக்கைகள் ஆகிய அனைத்தில் இருந்தும் ஆறு மாத காலம் முழுமையாக ஒதுங்கி முற்றிலும் மார்க்கம் சம்மந்தமான ஆய்வில் ஈடுபட நான் முடிவு செய்துள்ளேன்.//

முக்கியமான விஷயங்கள் தெளிவுபடுத்தப்படாமல் இருந்தால், அவற்றை தெளிவுப்படுத்த, பிரச்சாரங்களை இன்னும் கூர்மைப்படுத்துவதுதானே முறை. அதை விடுத்து, ஆறு மாத காலம் ஆய்விற்குச் செல்கிறேன் என்று கூறுவது என்ன வகை என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இன்னும் சில காலத்திற்கு, அல்லாஹ்விற்கு உருவம் உண்டா என்னும் தலைப்பில் பேச வேண்டாம் என்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் அமைப்பின் பேச்சாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல். பிஜே இந்த முடிவை எடுத்ததன் மூலம், குர் ஆனில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி, இணையவெளியில் நாம் ஏதேனும் கேள்விகளை முன்வைத்தால், Visit www.onlinepj.com, என்னும் Home Work கொடுக்கும் பதில்கள் குறையக்கூடும்.

ஆறு மாத ஓய்வுக்கு... சாரி ஆய்வுக்குப் பின், அவர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். அவரது முடிவு என்னவாயிருக்கும் என்று அவரது முந்தைய பின்வாங்கல்களிலிருந்தும், அவரது தளத்தில் இருக்கும் ஒரு அறிவிப்பின் மூலமும் யூகிக்கமுடிகின்றது.

//மனிதன் என்ற முறையில் வாய் தவறி சில சொற்களைத் தவறாக நான் பயன்படுத்தி இருக்கலாம். முதலில் நான் சரி என்று கருதிய சில விஷயங்களை மறு ஆய்வு செய்யும் போது நான் மாற்றி இருக்கலாம். எனது ஆய்வில் ஏற்பட்ட குறைவு காரணமாக நான் சில விஷயங்களைத் தவறாக விளங்கி பேசி இருக்கலாம்.//

இந்த லாம்கள் இருக்கும் வரை, குப்புற விழுந்தாலும்.....

சும்மா ஒரு தகவல்: தான் சில காலம் நாத்திகராய் இருந்ததாக சில மேடைகளில் கூறியிருக்கின்றார்.