Friday, July 23, 2010

சுல்தான் பாயும், குரானின் நம்பகத்தன்மையும்!

இந்த இடுகையில் தோழர் சுல்தான் முன்பு நாம் எழுதியிருந்த பதிவு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார், ஹதீஸ்கள் பல அழிக்கபட்டுவிட்டன, சில வார்த்தைகள் நீக்கபட்டு விட்டன, எங்கேயேனும் கண்டுபிடித்து நாம் கேள்வி கேட்டால் அதை தவறான ஹதீஸ் என்று பல்டி அடிப்பார்கள் என்று சொன்னதால் இனி குரானில் இருந்து கேள்விகளை கேட்போம் என அறிவித்திருந்தோம், அந்த பதிவின் பின்னூட்டத்தில் எனக்கு கொடுத்த பதிலிருந்தே கேள்வியை முன் வைக்கிறோம். மேலும் அந்த பதிவு எப்படி பீஜேவுக்கு எழுதபட்டதோ அதே போல் இந்த பதிவு தோழர் சுல்தான் அவர்களுக்கு எழுதப்படுகிறது!, மற்றும் பதிவு பொதுவில் இருப்பதால் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

**************

வண்ணத்தில் இருப்பவை எங்கள் கேள்விகள்(கருத்துகள்)!

//குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது.//

ஆறு நாளில் மொத்த உலகையும் படைத்த கடவுள் அந்த ஜிப்ரீலை எப்போது படைத்தார், எங்கே வைத்திருந்தார்!, மேலும் குரான் ஜிப்ரீலால் தானே முகமதுவுக்கு சொல்லப்பட்டது, பிறகு ஏன் கடவுளால் நேரடியாக இறக்கபட்டது என சொல்லி வருகிறீர்கள்!


//அது நபியுடைய காலத்திலேயே மனித மனங்களில் தொகுக்கப்பட்டு விட்டது. அது இறைவனால் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
அது தற்போதைய புத்தக வடிவிலில்லாமல் எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதி வைக்கவும் பட்டிருந்தது.//

குரானின் மூல வடிவம் முற்றிலுமாக அழிக்கபட்டது அனைத்து இஸ்லாமியருக்கும் தெரிந்ததே, பாதுகாக்கப்படும் என கடவுளாலே உறுதியளிக்கபட்ட குரான் ஒரு மனிதனால் அழிக்கபட்டிருக்கிறது!, இருந்தும் தற்பொழுது இருப்பது கடவுளால் கொடுக்கபட்ட குரான் என்று எப்படி சொல்கிறீர்கள்?

//யாருடைய மனங்களில் தொகுக்கப்பட்டிருந்ததோ அவர்களில் சிலர் குழுவாக ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட போது அதை சரியானபடி தொகுத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நபிக்கு பின் வந்த உத்தம கலீபாக்களால் உணரப்பட்டு தற்போதைய புத்தக வடிவிலானது.//

முகமது இறந்த சில வருடங்கள் கழித்து அவரது நண்பர்களுக்கு உணரப்பட வேண்டிய காரணம் என்ன, அது கடவுளால் அவர்களுக்கு சொல்லபட்டது என்றால், முகமது கடைசி நபி என்பது பொய்யாகிவிடுகிறது, அவர்களுக்கா தோன்றியது என்றால் அதிலுள்ள விசயங்களின் உண்மை தன்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!

//கீழள்ளவை நம்பிக்கையாளர்களுக்கே போரடிக்கலாம். நீங்கள் கேட்டதால்தான் ஓரளவுக்கு சுருக்கமாய் விளக்குகிறேன்.//

செக்கு மாடு அதே பாதையில் தான் சுத்தும் தோழரே! நீங்க எனக்கு சொல்லுங்க!

//ஹதீஸ்கள் எனப்படும் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை செவிவழியாக ஒருவர் பின் ஒருவராக செய்தியாகத்தான் அறிவிக்கப்பட்டு வந்தது.//

குரானும் முகமதுவின் சொல்களால் தொகுக்கபட்டது தானே!,


//நபியவர்களின் காலத்திற்கு பிந்தைய நூறாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டது.//

குரானும் முகமது இறந்து சில ஆண்டுகளுக்கு பின் தொகுக்கபட்டு பின் அதை சொன்ன முகமதுவின் நண்பர்களின் மூலவார்த்தைகள் அழிக்கப்பட்டு விட்டது!


//அதற்குள்ளாகவே அவற்றில் சிலரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கைச்சரக்குகள் நுழைவிக்கப்பட்டு விட்டது.//

ஹதீஸில் விருப்பு, வெறுப்பு நுழைந்துவிட்டது என நம்புகிற நீங்கள் குரானை மட்டும் கண்மூடிதனமாக நம்புவது ஏன்!?


//யூதர்களும் தங்களின் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தனர்.//


ஆபிரஹாம மதத்தின் ஆரம்பம் யூதர்களிடம் தானே இருக்கு, அவர்கள் யகோவா, கர்த்தர் என அழைப்பவரை தானே நீங்கள் அல்லா என்கிறீர்கள், பழைய ஏற்பாட்டை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் தானே யூதர்கள், உலகம் ஆறேநாளில்!? கடவுளால் படைக்கபட்டது என அவர்களும் தானே நம்புகிறார்கள், அவர்கள் வழிவந்து தானே நீங்களும் விருத்தசேதம்(சுன்னத்) செய்து கொள்கிறீர்கள், உங்களுக்கு முன்னரே தூதர்களை கண்ட யூதர்கள் ஹதீஸில் தவறு செய்திருப்பார்கள் என நம்பப்படுவதின் காரணம்!?


//அது யாரிடமிருந்து யாருக்கு சொல்லப்பட்டு பின்னர் யாருக்கு என அந்த வரிசையில் வந்த அனைவருமே நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.//

நம்பகமானவர் என்பது எந்த அடிப்படையில் முடிவு செய்யபடுகிறது, அப்பொழுது அவருக்கு இருந்த வசதியை பொறுத்தா!?


//ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டவைகளில் நம்பகமற்ற செய்திகளும் கலந்தே இருந்தன.//

அதே நம்பகமற்ற செய்திகள் குரானிலும் இருக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு!?

//பின்னர் வந்த இமாம்கள் அவற்றை தரம் பிரித்து வைத்தனர். எது மாதிரியான தரமற்றவைகள் எல்லாம் இருந்தன என்பதையும் பின்னால் வருபவர்களுக்கு பாடமாக இருக்க தரமற்றவைகள் என்ற தலைப்பில் தனி நூலாக தொகுத்தும் வைத்துள்ளனர்.//

தரமற்றவை, தரமுள்ளைவை என்பதை விட உண்மையானவை, பொய்யானவை என்று தானே இருக்க வேண்டும்! இமாம்களா கூட இருந்து பார்த்தார்கள், குறிபிட்ட ஹதீஸ் பொய்யென்று!?

//எந்தெந்த வகையில் பலவீனமானவை என ஹதீஸ்கள் ஒதுக்கப்டுகின்றன?
1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.//

அடுத்த தலைமுறைக்கு பெற்றொர்கள் சொல்வது வழக்கம் தானே! அப்படி தானே ஒவ்வொரு மதமும் வலுப்பெறுகிறது, உங்கள் பெற்றோர் சொல்லி தானே இஸ்லாம் உங்களுக்கு தெரியும்!

//2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.//

தொடர்பு இல்லையென்று இமாம்களுக்கு எப்படி தெரியும்!?


//3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.//

முகமதுவின் தோழர் பொய்யே சொல்லமாட்டார் என எந்த நம்பிக்கையில் நம்புகிறீர்கள்!?

//4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.//

சமகாலத்தில் வாழ்ந்தார் அல்லது இல்லை என்ற வரலாற்று நிகழ்வுகளை எதை வைத்து நம்புகிறீர்கள், முகமதுவின் நண்பரின் நண்பரே பொய் சொல்லும் பொழுது வரலாற்றை தொகுத்தவன் மட்டும் உண்மையை மட்டுமா சொல்வான்!?


//5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.//

பொய்யர் என இனங்கானப்பட உங்களுக்கு இருக்கும் ஆதாரம் மெய்யானது என்பதற்கு என்ன ஆதாரம்!?


//6. மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.//

முகமதுவே தனது செயல்களை நியாயப்படுத்தி பல வசனங்களை சொல்லியிருக்கும் பொழுது மற்றவர்கள் சொல்வது மட்டும் எவ்வாறு பொய்யாக இருக்கும்!


//7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.//

ஒருவர் சொல்கிறார், அவராக சொன்னால் தான் ஆச்சு, சரியாக ஞாபகமில்லைன்னு, நீங்களே எப்படி தடுமாறுகிறார், அவருக்கு 1512 மே 23 ஆம் தேதி மதியம் மூன்று மணியிலிருந்து ஞாபகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது என சொல்ல இஸ்லாத்தில் இருந்த மந்திரவாதி யார்!?

//8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.//

ஹதீஸில் உள்ள விசயம் முக்கியம் ஆயிற்றே, அவர் முதல்முறை சொன்ன பெயர் சரியா, இரண்டாவது முறை சொன்ன பெயர் சரியா என ஆராயாமல் முற்றிலுமாக ஹதிஸை நீக்குவது எப்படி சாத்தியம்!? ஒருவேளை ஒரு குறிபிட்ட தினத்திற்கு பின் முகமது நபிகாளக இருந்து சாதாரண மனிதராக மாறினார் என்னும் முக்கியமான ஹதீஸ் இருந்தால் மொத்த குரானும் பொய் என்று ஆகிவிடும் அல்லவா!?


//9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.//

யூதஇனம் இஸ்லாமியரால் மடியில் வைத்து கொஞ்சப்படுகிறதா!?, ஷியா, சன்னி பிரிவினைகள் மார்க்கத்தில் இருக்கின்றதால் எது சரியான பிரிவு என்றே சண்டை வருமே அதை குரான் அனுமதிக்கிறதா!?, பின் ஹதீஸ் என்ன செய்தது அதுக்கு.


//10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.//

ஹதீஸ் முகமதுவின் நண்பர்கள் மூலம் சொல்லப்பட்டதை தொகுத்ததா!? சொல்நயம் மிக்க கலைவல்லுனர்கள் மூலம் தொகுத்ததா!?


//11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.//

ஏன் அம்மா மூலம் மகனுக்கு சொல்லமுடியாதா!?, அப்படி சொல்வது பொய்யாக தான் இருக்கும் என்று எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்!


//12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.//

ஹதீஸின் செய்தி முக்கியமா, சொன்னவர் பெயர் முக்கியமா?


//13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.//

கருணையாளன் ஒரு பொய் சொல்ல அனுமதிக்கமாட்டார் ஆனால் ஆண்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் என்று இந்த பதிவில் இருப்பது உண்மை தானா?



//குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட வேண்டும். ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது (நன்றி: http://tamilislam-qa.blogspot.com & ஜி.என்.)//

எது உங்களுக்கு சாதகமா இருக்கோ அதை எடுத்துக்கலாம்னு சுருக்கமா சொல்றிங்க சரியா!?

 *********

வழக்கம் போல பீஜேவின் லிங்கை கொடுக்கிறார்!, அடுத்து பீஜேவின் உளரல்களை அம்பலபடுத்த வேண்டியது தான் பாக்கி!

Tuesday, July 13, 2010

தல, புதுசா பிஸ்னஸ் ஆரம்பிக்கபோறோம் தல!



செந்தில்:அண்ணே, ரொம்ப போரடிக்குதுண்ணே, எதாவது ஐடியா குடுங்கண்னே!

க.மணி:போரடிச்சா திருப்பி அடி, என்னை வந்து ஏண்டா உசுரை வாங்குற!

செந்தில்::அதுயில்லண்ணே, புதுசா தொழில் எதாவது செய்ய ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அப்படியா, எவ்ளோ காசு வச்சிருக்க!

செந்தில்::நாலு முறுக்கு வாங்குறதுக்கு காசு வச்சிருக்கேண்ணே!

க.மணி:டால்டா டின் மண்டையா, அதை வச்சி என்னடா தொழில் பண்றது,

செந்தில்::முதல் போடாம தொழில் பண்ண ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அந்தா இருக்கு பேரு பெருமாள் கோவிலு, அது வாசல்ல உட்கார்ந்தா செயத்தியா வசூல் ஆகும், முதலே தேவையில்ல!

செந்தில்:விளையாடாதிங்கண்ணே! என்னை பத்தி ஊரே பேசனும், அதுக்கு ஒரு ஐடியா கொடுங்க!

க.மணி:அப்படினா சாமியார் ஆகிட வேண்டியது தான்!

செந்தில்:அது ரொம்ப ஈஸியாண்ணே!

க.மணி:அதாண்டா இன்னைக்கு ட்ரெண்டே!

செந்தில்:அதுக்கு நான் என்ன செய்யனும்!

க.மணி:முதல்ல பேரை பஜ்ஜியானந்தா, பக்கிபரு மாசுதேவ் நு எதாவது மாத்தி வச்சிக்கோ!
அப்ப தான் மக்கள் மனசுல பச்சக்குன்னு உட்காந்துகலாம்!

செந்தில்:அப்புறம்!

க.மணி:பத்து பேரை வேலைக்கு வச்சிக்கோ, பஸ்டேண்டு மாதிரி மக்கள் கூடுற இடத்துல நின்னு அந்த சாமியார் வாயை திறந்தா போதும், பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்னு புரளியை நீயே கிளப்பிவுடு!

செந்தில்:மக்கள் நம்புவாங்களாண்ணே!

க.மணி:அது இல்லைனா, யாராவது நடிகர், எழுத்தாளர்ன்னு கையில வச்சுக்கோ, அவுங்க சொன்னா மக்கள் நம்புவாங்க!

செந்தில்:அப்புறம்ணே!

க.மணி:சூஃபி கதைகள், முல்லா கதைகள்னு ஒண்ணு விடாம படிச்சிக்கோ! கதையில வர்ற ஆளுங்களோட பேரை மட்டும் மாத்தி உனக்குன்னு ஒரு நாயகணை உருவாக்கிக்கோ, மக்களுக்கு கதை கேக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும் அதனால கூட்டம் வரும்!
செந்தில்:கண்டிப்பா வருமாணே!

க.மணி:பத்துபேர் வந்தா பின்னாடியே ஒரு கூட்டம் வரும்!

செந்தில்:ஒருத்தர் கொட்டாவி விட்டா பின்னாடியே இன்னொருத்தரும் கொட்டாவி விடுறாங்களே அது மாதுரியா!

க.மணி:டிஸ்க்பிரேக் மண்டயா, இவ்ளோ நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தெ! கொட்டாவி வந்தா மூளைக்கு ஆக்சிசன் பத்தலைன்னு அர்த்தம், நீ இருக்குற இடத்துல தானே அவனும் இருப்பான், உனக்கு கொட்டாவி வந்தா அவனுக்கு ஆக்சிசன் கொரியர்லயா வரும், அதுனால தான் அவனுக்கும் கொட்டாவி வருது!

செந்தில்:வேற என்னாண்ணே செய்யனும்,

க.மணி:அப்படி கேள்றா! சாமியார் வேலைங்கிறது ஒரு கார்ப்பரேட் கம்பெனிய நிர்வகிப்பது மாதிரி, வர்ற போற எல்லாருடய நிலையையும் கவனிக்கனும், தப்பு ஏதும் அவுங்களுக்கு நடந்தா கண்டுக்காத! அதுவே எதாவது நல்லது நடந்தா ஆளுங்களை வச்சு அதை விளம்பர படுத்தீரு! மத்த விளம்பரங்களை விட அதுக்கு ரீச் நல்லாயிருக்கும்!

செந்தில்:அது எப்படிண்ணே!

க.மணி:இன்னைக்கு படிச்சவங்க தான் நிறைய பேர் சாமியார் கிட்ட போய் ஏமாறுறாங்க, நூத்து ஒருத்தனுக்கு வேலை கிடைக்கும், உன்னால தான் கிடைச்சதுன்னு உன் அல்லக்கைகளை வச்சு விளம்பரம் கொடு, அவனோட போன் நம்பரும் கொடுத்துரு, உன் பெருமை பேசி அவனே உனக்கு ஏஜெண்ட் வேலை பார்ப்பான்!

செந்தில்:எல்லாத்துக்கும் வேலை வாங்கி தரமுடியாதாண்ணே!

க.மணி:டேய் டின் பீர் மண்டையா, வாலு மாதிரி ஆளுங்க வந்து ஒன்பதாவது தான் படிச்சிருக்கேன், எனக்கு டாக்டர் வேலை வாங்கி கொடுன்னு கேப்பாங்க, உனக்கு எட்டுல சனி ரெண்டு வருசத்துக்கு இந்த பக்கம் வந்துறாதேன்னு தொரத்தி விட்று, அந்த மாதிரி ஆளுங்களை உள்ள விட்டேன்னா நீ உள்ள போக வேண்டியது தான்!

செந்தில்:இம்புட்டு சொல்றிங்களே, நீங்களே செஞ்சிரலாமே!

க.மணி:அடேய் பனங்கொட்டை தலையா, அதுக்கு உன்ன மாதிரி இளிச்சவாயி மூஞ்சு வேணும்டா, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இளி இளிப்ப, எனக்கு டென்ஷன் ஆனா ஓடி வந்து அப்பிபுடுவேன்! சாமியார்னா திட்டுனாலும் சொரணை இல்லாம சிரிச்சிகிட்டே இருக்கனும்டா, உனக்கு அது தான் லாயக்கு! வரட்டா, உள்ள போனா சொல்லி அனுப்பு காஜா பீடி வாங்கியாறேன்!

”வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்” சென்ற ஜனவரி மாதம் எழுதியது!


Monday, July 5, 2010

மருவத்தூர் மயிராண்டிக்கு மஞ்சத் தண்ணி


ஊருக்குள்ள எத்தன ஃப்ராடு பசங்க மாட்டுனாலும் ஆட்டு மந்தை கூட்டம் ஃப்ராடு சாமியாரு கால்ல விழறத மட்டும் நிறுத்தப்போறது இல்ல. நித்தி,ஜக்கி,ரவி ஷங்கர் வகையறாக்கள் மாதிரி பேச்சுத் திறமையோ எந்த வெங்காய மயிறுமோ இல்லாவிடிலும் கூட, தனது இத்துப் போன வேட்டியையும் செத்துப்போன மூஞ்சியையும் வெச்சுகிட்டே கடந்த 20 வருசங்களா சில்லறை வியாபாரத்தில் இவர்தான் சீட்டுகட்டு ராஜா!

தமிழ்நாட்டுல தரை ரேட்டுக்கு எறங்கி நடிக்கும் நடிகர்களுக்கு அடுத்து இந்தாளுதான் வீதிக்கு வீதி ரசிகர் மன்றம் லெவல்ல தன்னோட நெட்வொர்க்க பப்பரப்பானு கெளை விரிக்க வெச்சுருக்கான்.

செவ்வாடைனா தமிழ்நாட்டுல மட்டும் கம்யூனிஸ்ட்கள் நியாபகத்துக்குக்கு வருவதில்லை. அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்கத்துக்கு கீழிருக்கும் மக்கள் குறிப்பாக பெண்களை எம் எல் எம் ரேஞ்சில் மூளைச் சலவை செய்து (அருகில் ஒரு பத்துக்கு பத்து ரூம் இருக்கும் அதுக்கு பேரு வார வழிபாட்டு மன்றமாம்!) தங்களோட ஐக்கியமாக்கிடறது இவங்களோட ஸ்டைல்!

எல்லா ரயில்வே ஸ்டேஸன்லயும் ஒரு குரூப்பு வருஷம் முழுக்க மருவத்தூருக்கு படையெடுக்குமளவு ஆள் ஜகஜ்ஜாலக் கில்லாடி! மூஞ்சியப் பாத்தா கூட்டமா இருக்கற பஸ்ல ஏற பயந்து நிக்கற அப்பாவி மாதிரி தான் இருக்கும் ஆனா ஒரு யுனிவர்சிட்டியே நடத்திகிட்டு இருக்கு பயபுள்ள!

அதுல இருக்கற ஒரு மெடிக்கல் காலேஜ்ல நேத்து நைட்டி சீ பி ஐ கன்னாலம் வெச்சிருச்சு! அது தொடர்பான செய்தி! மற்றும் ஆல் இன் ஆல் கெடா வெட்டு!

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பீடமா! அவன பீடைனு சொன்னா பொருத்தமா இருக்கும்! அவந்தான் வாய்ல வருதுன்னு சொல்லிட்டு திரியறான்னா பத்திரிக்கைகளும் நல்லா ஏத்தி விட்டுடுதுங்கப்பா!

இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது.

லேட் பிக்கப்புடா எல்லாம்! சரி ஆனது ஆச்சு ஆல மொதல்ல புடிச்சு அண்டர்வேரோட உக்காற வைங்க இல்லாட்டி எங்கயாவது ஓடிப் போயி டாஸ்மாக் பார்ல உக்காந்துக்குவான்; நித்தி மாதிரி இல்ல இவன பார்ல தனியால்லாம் கண்டு புடிக்கவே முடியாது! குடிமகன்களோட கலந்துடுவான்!
முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

பின்ன சும்மா கொடுக்கறதுக்கு கேத்தன் தேசாய் என்ன கேனக்.......யா?
இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

ஆளென்னயா ஆனான்? அதச் சொல்ல மாட்டீங்கறாங்கப்பா!

லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.
அவ்வ்வ்வ்வ்! பக்கத்து ரூம கிளீன் பண்ண சொல்லுங்கப்பா கெஸ்ட் வரப் போறாராம்!

இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

பின்ன 20 வருச கணக்கு இல்ல! லேட்டாவாதா என்ன? அந்தாளு செவப்பு வேட்டியத் தவற எனக்கு ஒண்ணுமில்லைனு பீலா உட்டான்னா அதயும் அவுத்து உட்டுடுங்க பாஸு!


நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்ட் நள்ளிரவை தாண்டியும் நடந்தது.

அய்யா பிரேஸில் மேட்ச் பாக்கணும்னு ரொம்ப ஆசப்பட்டாருப்பா! இப்பிடி ஆயிடுச்சே!

அடிகளாரிடம் 17 மணி நேரம் விசாரணை பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன் மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.
ஊமக் கோட்டானுக கிட்ட எத்தன் நேரம் கேட்டாலும் வாயில எதயோ வெச்சு அமுத்துன மாதிரி சாணி மிதிச்ச லுக்கு தானே கெடைக்கும் பதில் எங்கிருந்து?
அடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
ஆமா! அவுரு பெரிய காந்தியடிகளார்! குப்புர போட்டு குண்டிமேல மிதிப்பீங்களா? அத விட்டுட்டு....

விசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
கேப்பு உட்டு கேட்டா மட்டும் பதில் சொல்லிடுவானா? தக்காளி எல்லாத்தயும் பண்ணிட்டு மூஞ்சிய மட்டும் எப்பிடி வெச்சிருக்கான் பாரு! இந்த ஃப்ராடு பயலப் பத்தி ஏற்கனவே கிழிச்சு தொங்க விட்ட கோவணம் இங்க இருக்கு! ; கூடிய சீக்கரம் டங்குவார நொங்கெடுத்து தொங்க உடுவாங்கன்னு நம்பலாம்!