அது பற்றி சில உலகமகா பிராடு சோதிடர்கள் தினமலரில் கருத்து தெரிவிச்சிருக்காங்க, அதை துவைத்து காயப்போடுவோம்!
படம் நன்றி:தினமலர்
//இந்தக் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதால், அந்த மாநிலத்தில் இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படலாம். பெரிய அளவிலான விபத்துகள், கோர சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு. //
தக்காளி, இப்போ தான் பெரு வெள்ளம் வந்து ஆந்திராவே மிதஞ்துச்சு, அதுல சிக்கி ஒரு முதலமைச்சர் வேற மரணமடைஞ்சார், எல்லா காலமும் காவல்துறைக்கும், நக்சலைட்டுகளுக்கும் சண்டை நடந்து கிட்டு தான் இருந்தது, அப்பவெல்லாம் இந்த கோபுரம் நட்டுகிட்டு தானே நின்னுச்சு, அப்ப காப்பாத்த முடியாதது, இப்போ அழிவை தருமாக்கும்!
//ஜோதிடர் சிவஓம்குருரவி: பஞ்ச பூத தலங்களில் ஒன்றான காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது, அரசியல் தலைவர்களுக்கு ஆகாது. கேது ஸ்தலமாக காளஹஸ்தி இருப்பதால், இது நிச்சயம் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, தமிழகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தர்ம பரிபாலனம் செய்வதே சிறந்த பரிகாரம்.//
பேரை பார்த்தாலே பெரிய பிராடு மாதிரி தெரியுது! தமிழகத்திற்கு ஆபத்து வருமாம்! மஞ்சதுண்டு மாவீரன் அதெல்லாம் எப்பவோ பரிகாரம் பண்ணியிருப்பாரு, வந்து துட்டை வாங்கிட்டு போ!
//ஜோதிடர் பூவை நாராயணன்: பொதுவாக கோவில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்க தகாத, வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனை பாதிக்கும். இதற்கு வைகானச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களை படித்து, "அற்புத சாந்தி ஹோமம்' செய்ய வேண்டும். இதை வைகானச ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் இத்தகைய ஹோமங்கள் செய்யப்படும். மேலும், தெய்வீக விருட்சங்களை பொது இடத்தில் நட வேண்டும். அதிலும், வாயு ஸ்தலமான காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்தது வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.//
திரு. பூனா நாராயணம் .. ஸாரி, பூவை நாராயணம் என்ன சொல்றாருன்னா, சாந்தி ஹோமம் நடத்தனுமாம், தக்காளி விரிசல் விட்ட போது எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் சிமெண்ட் பூசியிருந்தா அது பாட்டுக்கு நின்னிருக்கும், இப்போ ஹோமம் நடத்தனுமாம், எப்படியும் பத்து லட்சம் பில்லு போடுவான் இந்த பூனா! .. ஸாரி பூவை!
//ஜோதிடர் முத்துகுமார்: காளஹஸ்தி ஆந்திராவில் இருந்தாலும், அங்கு பூஜை நடைமுறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை பின்பற்றியே நடந்து வருகிறது. அங்கு பூஜை செய்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். காளஹஸ்தி ராஜகோபுரம் பழமையானதாக இருந்தாலும், அது இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் அந்த கோவிலிலேயே செய்யப்படும். பொதுவாக இது போன்ற சம்பவங்களின் போது 90 நாட்களுக்குள் விளைவுகள் தெரிந்து விடும். அதற்குள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அர்த்தம். வெகு விரைவில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது தமிழகத்தில் தெரியாவிட்டாலும், அது அரசு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதற்குள் பரிகார பூஜையை செய்ய வேண்டும்.//
ஆந்திராவுல இருக்குற கோவிலுக்கு எப்படிடா தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும், ஆகம விதிகளாம் அது தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுதாம், மொதல்ல தமிழ்நாட்டுக்கும் ஆகம விதிக்கும் என்ன சம்பந்தமும்ன்னு சொல்லு முட்டாகுமாரு... ஸாரி முத்துகுமாரு!
//தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா: காளஹஸ்தி கோவில் கோபுரத்தில், கடந்த 88ம் ஆண்டே விரிசல் ஏற்பட்டு விட்டது. இதை அப்போது சரியான முறையில் சரிசெய்யவில்லை. ஆற்றை ஒட்டி கோவில் அமைந்திருப்பதால், மண்ணில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு, மணல் சரிந்து, கோபுர சுவர்களுக்குள் சுண்ணக் கலவை விடுபட்டு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பூமி தளத்தில் ஏற்பட்ட மாற்றங் களால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் கோபுரங்கள் எல்லாம் ஒரு கல்லின் மீது மற்ற கல்லை அடுக்கி மலைகளை அடுக்குவது போல் தான் உருவாக்கப்படும். அப்படி இருக்கும் போது ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததில் தெய்வக் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.//
கோவில் காசை ஆட்டைய போடக்கூடாதுன்னு கொடுத்த பதவியை தலை சரியா செஞ்சிருக்காரு,
சரியான இயற்பியல் காரணங்கள் அலசப்பட்டிருக்கு, முக்கியமா!
//ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால்,//
இந்த பாயிண்ட்!
//ஜோதிடர் சிவஅண்ணாமலைதேசிகன்: காளஹஸ்தி ராகு, கேது பரிகார தலம். இந்தியாவின் லக்னம் ரிஷபம், அமெரிக்காவின் லக்னம் தனசு. இந்த இரு லக்னங்களுக்கும் தற்போது ராகு, கேது நிலை சரியில்லை. ரிஷிப லக்னத்திற்கு எட்டாம் இடமான தனுசு லக்னத்திலும் தற்போது ராகு உள்ளது. மிதுனத்தில் கேது உள்ளது. இந்நிலையில், ராகு, கேது பரிகார தலமான காளஹஸ்தி கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும். போர் கூட வரலாம். பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் இதே நிலையில் இருந்த போது தான் ராஜிவ் படுகொலை நடந்தது. அதன் விளைவாக தற்போது இலங் கையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்கு வேறு பரிகாரம் கிடையாது. மக்கள், தலைவர்கள் மத்தியில் தர்ம சிந்தனை வளர்ந்தால் மட்டுமே, ராகு, கேது கிரகங்களின் பாதகமான சூழலை மாற்ற முடியும்.//
ங்கொய்யால, கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா!
அமெரிக்காவுக்கும், நமக்கும் சண்டை வருமாம் அல்லது தனி தனியாக சண்டை வருமாம்!(என்ன எழவ சொல்லியிருக்கான்னே தெரியல), ஏற்கனவே ஹெட்லைட்தலையன் அரசு, பொட்டி பொட்டியா வாங்கி அணு உலைய வைய்க உத்தரவு கொடுத்துட்டானுங்க, அதில் அணுகுண்டு செய்யுறமான்னு பார்க்க அவனுங்க ராணுவம் வேற இங்க வந்து டேரா போடுமாம், அங்கே விபத்து நடந்தா செல்லாது செல்லாதுன்னு போயிருவானுங்களாமாம்! ஏற்கனவே இந்தியாவை அழிக்க அவனுங்க முடிவு பண்ணிட்டானுங்க, அப்பவெல்லாம் இடியாத கோபுரம் இப்ப இடிஞ்சி சண்டை மூட்டி விட்ருமாக்கும்! சோனியா டீ பார்ட்டி வச்சாவது இந்தியாவை காப்பாத்திற மாட்டாங்க!


