Tuesday, December 28, 2010

உசிலம்பட்டி டாக்டர் !!!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது

இது குறித்து நடந்து வரும் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது

தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. பார்க்க சுட்டி

இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு - இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்

இந்தியாவில் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்
  1. நடுவண் அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - ஏய்ம்ஸ் (AIIMS) , பி.ஜி.ஐ சண்டிகர் (PGI Chandigarh) , எஸ்.ஜி.பி.ஜி.ஐ லக்னோ (SGPGI Lucknow), ஜிப்மர் பாண்டிச்சேரி JIPMER, சித்திரை திருநாள் - திருவனந்தபுரம் (SCTIMST), நிம்ஹான்ஸ் பெங்களூர் (NIMHANS), நிம்ஸ் ஹைதரபாத் (NIMS) போன்றவை
  2. மாநில அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, கட்டாக் மருத்துவக்கல்லூரி போன்றவை
  3. தனியாரால் நிர்வாகிக்கப்படுபவை / தனியார் கட்டுப்பாட்டில் உள்ளவை - சி.எம்.சி வேலூர், ராமச்சந்திரா, அண்ணாமலை போன்றவை
இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கை விதிமுறை வேறானது

நடுவண் அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும், தங்களது கல்லூரியில் மாணவர்களை சேர்க்க தனித்தனியாக நுழைவு தேர்வு நடத்துகின்றன. அதாவது ஏய்ம்சில் சேர ஒரு தேர்வு எழுதவேண்டும், ஜிப்மரில் சேர வேறு ஒரு தேர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்

(ஆந்திரா, காஷ்மீர் தவிர பிற) மாநில அரசின் கீழ் இருக்கும் கல்லூரிகளில் சேர்க்கை இருவிதமாக நடத்தப்படுகிறது
  • இளங்கலை படிப்பிற்கு
  1. இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 85 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
  2. மீதி இருக்கும் 15 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
  • முதுகலை படிப்பிற்கு
  1. இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 50 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
  2. மீதி இருக்கும் 50 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
ஆந்திரா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே 100 சதம் இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன

இதில் ஒரு விஷயத்தை நினைவு கூற வேண்டும். 1980கள் வரை மாநில அரசிடமே முழு கட்டுப்பாடும் இருந்தது. 1980களின் இறுதியில் மத்திய அரசு இளங்கலையில் 15 சதமும் முதுகலையில் 25 சதமும் கேட்டது. அப்பொழுது என்.டி.ஆர் அவர்கள் விடாப்பிடியாக மறுத்துவிட்டார் என்பார்கள்

பிற மாநிலங்கள் இளங்கலையில் 15 சதவித இடங்களையும், முதுகலையில் 25 சதவித இடங்களையும் அளித்தன

2005ல் முதுகலையில் 25 சதவித இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 சதவித இடங்கள்
ஆயிற்று

தனியார் கல்லூரிகளில் சேர தனியாக தேர்வு மற்றும் சேர்க்கை முறை உள்ளது

--

தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவன் எத்தனை தேர்வு எழுதவேண்டும்

  1. மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
  2. மாநில அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
  3. ஏய்ம்ஸ்
  4. ஜிப்மர்
  5. பி.ஜி.ஐ. சண்டிகர்
  6. எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
  7. சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
  8. நிம்ஹான்ஸ் பெங்களூர்
  9. நிம்ஸ் ஹைதரபாத்
  10. சி.எம்.சி வேலூர்
ஆகா

பத்து நுழைவு தேர்வா, பொது நுழைவு தேர்வு வந்தால் பத்திற்கு பதில் ஒன்று தானே - இப்படி ஒரு நல்ல திட்டத்தை தமிழக அரசு ஏன் எதிர்க்க வேண்டும் என்று அங்கலாய்க்கிறீர்களா

சற்று பொருங்கள்

மத்திய அரசின் பொது நுழைவு தேர்வு வந்த பின்னரும் அந்த மாணவன் 9 தேர்வுகளை எழுதவேண்டும்


  1. மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
  2. ஏய்ம்ஸ்
  3. ஜிப்மர்
  4. பி.ஜி.ஐ. சண்டிகர்
  5. எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
  6. சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
  7. நிம்ஹான்ஸ் பெங்களூர்
  8. நிம்ஸ் ஹைதரபாத்
  9. சி.எம்.சி வேலூர்
அதாவது மத்திய அரசின் பொது நுழைவு தேர்வு என்பது அனைத்து நுழைவு தேர்வுகளுக்கு மாற்று அல்ல

மாநில அரசின் நுழைவு தேர்வுகளை மட்டுமே இரத்து செய்து விட்டு, மத்திய அரசின் பிற நுழைவு தேர்வுகளை அப்படியே வைத்துள்ளார்கள்

பிறகு எப்படி 22 தேர்வு குறையும் என்று கேட்கிறீர்களா

  • அதாவது தமிழக பொது நுழைவு தேர்வு, கேரள பொது நுழைவு தேர்வு, கர்நாடக நுழைவு தேர்வு, மகாராஷ்ட்ர நுழைவு தேர்வு,  போன்ற 22 மாநில நுழைவு தேர்வுகள் தான் இல்லை
  • மத்திய அரசு நிறுவனங்களின் தேர்வுகள் அப்படியே உள்ளன

ஆகா !!

22 தேர்விற்கு பதில் ஒரு தேர்வு என்று வெளியில் சொல்லப்பட்டாலும், இவர்கள் முன்நிறுத்தியுள்ள பொது நுழைவுத்தேர்வானது மாநில அரசின் நுழைவுத்தேர்விற்கு சாவுமணி அடிப்பதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை

உண்மையில் 10 தேர்விற்கு பதில் 9 தேர்வு - அவ்வளவு தான்

எனென்றால் ஒரு மாணவன் ஒரு மாநில அரசின் தேர்வை மட்டும் தானே எழுதமுடியும் (வெகு சிலர் வேண்டுமென்றால் ஒன்றிற்கு மேற்பட்ட தேர்வுகள் எழுதலாம் - ஆனால் அது வெகு சொற்பமே)

---

இந்த தேர்வு வேண்டி வழக்கு போட்டிருப்பவர்களின் உண்மையான நோக்கம் மாணவர் நலன் என்றால் அவர்கள் “அனைத்து தேர்வுகளுக்கும் பதில் ஒரே தேர்வு” என்றல்லவா வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்

அப்படியில்லாமல் “மத்திய அரசால் நடத்தப்படும் பிற தேர்வுகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு மாநில அரசின் தேர்விற்கு மட்டும் தடை கோரி” வழக்கு தொடர்வதன் நோக்கம் தான் என்ன ?

--

மேலும் தோண்டுவோம்
  • இன்று மாநில அரசின் பாட திட்டம் (ஸ்டேட் போர்டு) என்று ஒன்று உள்ளது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்
  • அதே போல் மத்திய அரசின் பாட திட்டம் (செண்ட்ரல் போர்டு - சி பி எஸ் சி) என்றும் உள்ளது
இரண்டு ஒன்றா, இல்லையே 
  • இதில் நடுவண் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பது மேல் குடி மக்களே / நகர் வாழ் மக்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி - 
  • நடுத்தர மற்றும் ஏழை மக்கள் / கிராமப்புற மற்றூம் சிற்றூர் மாணவர்கள் படிப்பது மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் தான்

அதே நேரம்
  • மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு ஆகியவை மத்திய அரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுபவை
  • மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்
எனவே
  • மத்திய அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் (பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு போன்றவை) சி பி எஸ் சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்வு பெறுவார்கள். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் வெகு சிலரே தேர்வு பெற முடியும்
  • மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகளின் மாணவர்கள் அதிகம் தேர்வு பெறுவார்கள்

இந்நிலையில்
  • மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு, ஏய்ம்ஸ் நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு, பி.ஜி.ஐ. சண்டிகர் நுழைவுத்தேர்வு, எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ நுழைவுத்தேர்வு, சித்திரை திருநாள் திருவனந்தபுரம், நிம்ஹான்ஸ் பெங்களூர் நுழைவுத்தேர்வு, நிம்ஸ் ஹைதரபாத்  நுழைவுத்தேர்வு, போன்ற மேல்தட்டு / பெருநகர் மக்களுக்கு வசதியாக உள்ள தேர்வுகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு
  • நடுத்தர மற்றும் ஏழைகள் மற்றும் கிராமப்புற, சிற்றூர் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தின் கீழுள்ள மாநில பொது நுழைவுத்தேர்வு ஒன்றை மட்டும் இரத்து செய்ய வேண்டும்
என்று வழக்கு தொடர்ந்திருப்பவர்களின் உண்மை நோக்கத்தை அறிந்து கொள்வது சிரமமா

அதனால் தான் தமிழக அரசு, இந்த பொது நுழைவு தேர்வை எதிர்த்தது

இந்நிலையில் இந்த செய்தியின் படி, உச்ச நீதிமன்றம் பொது நுழைவு தேர்விற்கு பச்சை கொடி காட்டியதாக தெரிகிறது

இது குறித்து தமிழக அரசும் மாணவர்களும் விழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே தெரிகிறது...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கட்டுரையை எழுதியவர் அனைவருக்கும் அறிமுகமான பதிவர், மருத்துவர். !! 

உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி பெற்ற இட ஒதுக்கீட்டுக்கு குறுக்கு வழியில் அடி கொடுக்கும் பார்ப்பணீய பிசாசுகளை அனைத்து தளங்களிலும் எதிர்க்கவேண்டும். 

உசிலம்பட்டியில் இருந்து மருத்துவராகவேண்டும் என்று நினைப்பவன் டெல்லியிலும் பெங்களூரிலும் இருப்பவனிடம் போட்டிபோடவேண்டும். இவன் எக்ஸ்போஷர் என்ன, அவன் எக்ஸ்போஷர் என்ன ? 

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் மேலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவேண்டும். மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரம் ( அல்லது தமிழக அரசே நடத்தும் பந்த் நடத்தவேண்டும் (அல்லது மம்மி ஒரு அறிக்கை விட்டால் தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்படும்.)..

10 comments:

கும்மி said...

நீங்கள் கூறியிருக்கும் கடைசி விஷயம் நடந்தால்தான் தமிழக அரசு விழித்துக்கொள்ளும்.

செந்தழல் ரவி said...

சத்தியம். குறைந்தபட்சம் இதனை நிறையபேர் பதிவிட்டால் அந்த நிகழ்வு நடக்கும்.

Thamizhan said...

இந்திய அள்விலே பாராளுமன்றப் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் சேர வேண்டும்.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களை மீறி எந்தச் சட்டமும் இயற்ற முடியாது என்ற நிலை வர வேண்டும். பார்ப்பனீயத்தின் கர்ப்பக் கிருஹமாக உள்ள உச்ச நீதி மன்றத்தை மக்கள் பிரதிநித்துவ அளவுகோலுக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கிராமத்து மக்கள் விடுதலை பெற்ற ,உரிமை பெற்றவர்களாக வாழ, வளர முடியும்.

Vinoth said...

நீதி மன்றம் இந்த விஷயத்தை முழுவதும் ஆராயாமல அநீதி மன்றமானதா ?

செந்தழல் ரவி said...

தமிழன், சரியா சொன்னீங்க. உங்க புள்ளையோ பேரன் பேத்தியோ டாக்டருக்கு படிக்கவேண்டும் என்றால் இதை எதிர்த்து சமூக பிரச்சாரம் செய்யவேண்டும்.

செந்தழல் ரவி said...

வினோத், பார்ப்பணீயம் உச்சாணி கொம்பில் ஏறிய உச்ச நீதி மன்றம் அநீதி மன்றமே !!

மாயன் said...

ஒரு வேளை கூட்டணி முறிந்து விட்டால் என்ன செய்வது என்று பெருசு கைவிட்டுவிட வாய்ப்பு நிறைய இருக்கிறது...மம்மி பேச்சில்தான் அம்மி நகர்ந்தாக வேண்டிய கட்டாயம்...

ரம்மி said...

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில், மாநிலப் பங்கான 85 சத இடங்கள், எவ்வாறு நிரப்பப்படும்?

சி.பி.எஸ்.சி யா? மாநில போர்டா?
தமிழக அரசின் நிலை என்ன? சி.பி.எஸ்.சி எனில், அடுத்த வருடமா?அடுத்த வருடம் எனில், பாடத்திட்டம் (சிலபஸ்) மாறுமா? தெரிந்தவர்கள் விளக்கக் கோருகிறேன்!

இனியவன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

GOOD POST.நல்ல விசயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டுவாழ்த்துக்கள். அம்மா வாய்திறக்க இப்பதிவு உதவும் .