Tuesday, December 28, 2010

புஸ் போன ராக்கெட்டும் திருப்பதி ஏழுமலையானும்

GSLV Exploded Mid Air

படம் சொல்லும் செய்தி, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் தோல்வி. ரஷ்யாவில் இருந்து பிச்சை எடுத்துக்கொண்டு வந்த ஏழு கிரயோஜெனிக் எஞ்சினில் 6 அல்ரெடி கான். ஏழாவது ஒரே ஒரு எஞ்சின் உள்ளது. அதை வைத்து தீபாவளி கொண்டாடி நரகாசுரனை அழிக்கலாம்.

Carla Bruni-Sarkozy (L-R) Chairman of ISRO, Doctor K.Radhakrishnan, French President Nicolas Sarkozy and Carla Bruni-Sarkozy attend the ISRO Satellite Center visit on December 4, 2010 in Bangalore, India. French President Nicolas Sarkozy is on a four-day working visit to India and is expected to chase lucrative French-Indian trade contracts. He is also expected to seek support for his G20 agenda, on his first visit to a G20 member state, after taking over the presidency of the G20 group.

கர்லா ப்ரூனியிடம் வழிந்துகொண்டு நிற்கும் நமது வீ.ராதாக்கிருஷ்ணன், தொடர் தோல்விகளுக்கு பிறகும் பதவியில் ஏன் ஒட்டிக்கொண்டிருக்கிறார் ? ஒரு அக்யூஸ்ட் ஓடிப்போனால் போலீஸை சஸ்பெண்ட் செய்கிறது அரசு. இத்தனை கோடிகள் மக்கள் வரிப்பணம் வீண் ! இருந்தும் இப்ப மீட்டிங் போடறானுங்களாம்.



இதுக்கு முன்னாடி இங்கே குப்பை கொட்டிய மாதவன் நாயர் என்கிற சேட்டன் திருப்பதியில் ராக்கெட்டின் மாதிரியை வைத்து பூஜை போட்ட கேவலமும் நடந்தது. ஏன் இந்த முறை திருப்பதி ஏழுமலையான் காப்பாற்றவில்லையா இஸ்ரோ ராக்கெட்டை ?

21 comments:

Thamizhan said...

அதெல்லாம் பூசையெல்லாம் நன்றாகப் போட்டுத்தான் அந்த நேரத்தை இன்னுங்கொஞ்சம் கவண்மாகப் பார்க்காமல் கோட்டை விட்டார்கள்.பூசையிலே இருக்கும் அக்கறை தொழிலில் இருந்தால் நாடு எங்கேயோ போகும்.

கும்மி said...

தல, ராக்கெட்ட வெடிக்கச் செய்ததே திருப்பதி ஏழுமலையான்தான். நீங்க பாட்டுக்கும் விஞ்ஞானிகளை குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அதே ராக்கெட் வெற்றிகரமா செலுத்தப்பட்டிருந்தா, ஏழுமலையானுக்கு பூஜை செஞ்சதினாலையும், அவரோட அனுக்கிரகமமும் இருந்ததினாலையும்தான் வெற்றி கிடைத்தது என்று சொல்லியிருப்பார்கள். அப்படியானால், தோல்வி அடையும்போது அந்த ஏழுகொண்டலவாடாதான் பொறுப்பு.

--
இன்னுமா இந்த உலகம் ஏழுமலையான நம்புது?

ராஜன் said...

ஏழுமலையான் அனகோன்டாவையே அடக்கி அது மேல படுத்துட்டு இருப்பவர்! அவர் மகிமைய தப்பா பேசாதீங்க!

கும்மி said...

//ஏழுமலையான் அனகோன்டாவையே அடக்கி அது மேல படுத்துட்டு இருப்பவர்! அவர் மகிமைய தப்பா பேசாதீங்க!//

எப்போதும் ராக்கெட்டுக்குதான் அடியில பத்த வைப்பாங்க. இந்த தடவை ஏழுமலையானுக்கும் சேத்து அடில பத்த வச்சிட்டாங்க.

ஏழுமலையான்: அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

கும்மி said...

//ஏழாவது ஒரே ஒரு எஞ்சின் உள்ளது//

ஏழாவதும் ஏழுமலையானுக்கே அர்ப்பணமா?

செந்தழல் ரவி said...

ஏழுமலையான் பொம்பளை என்று தாத்தாசாரியார் சொல்லியிருக்கிறார். அது என்ன என்றும் தெரிஞ்சுக்கிடுங்கப்பா.

ராஜன் said...

//ஏழுமலையான் பொம்பளை என்று தாத்தாசாரியார் சொல்லியிருக்கிறார்//

அந்த கெழட்டு பய கெடக்கறான்! எங்க ஏழுமலையான்! தூணிலும் இருப்பார் தூக்கிப் பாத்தா தூக்கு சட்டிலயும் இருப்பார்!

உங்களுக்கெல்லாம் மோட்சமே கெடைக்காது பாருங்கோ அபிஷ்டுகளா

ராஜன் said...

ஏழு மலையான் கடையறப்போ மட்டும் தான் பொம்பளை! அட, பாற்கடல கடையறத சொன்னேங்க!

கொடத்த தூக்கி இடுப்புல வெச்சுட்டு அப்பிடியே நடந்து வந்தா! அடா அடா அடா! சங்கராச்சாரியாருக்கே சலவாய் ஒழுகும்னா பாத்துக்கோங்கோ!

கும்மி said...

"After the failure yesterday, top ISRO officials said the command to control the space rocket (GSLV-F06), carrying GSAT-5P, from the equipment bay, the electronic brain of the launch vehicle resident atop it, did not reach the actuators in the first stage.
They suspected that a connector chord, which takes the signal down, had snapped"

முதற்கட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறே வெடிப்புக்குக் காரணமாம். வெடிப்புக்கான காரணத்தை ஆராயத்தெரிபவர்களுக்கு, அது வெற்றிகரமாக இயங்குவதற்கும் காரணம் தெரியும். ஆனாலும், கற்பனை உருவம் ஒன்றிற்கு பூஜை செய்கின்றார்களாம். திருந்துங்கப்பா.

வால்பையன் said...

எதாவது விசயம் கெட்டு போயிட்டா கோவிந்தாவாயிருச்சுன்னு சொல்றாங்க, அப்புறம் ஏன் ராக்கெட் விடுறதுக்கு முன்னாடி அங்க போய் கோவிந்தா போட்டாங்க!

கும்மி said...

//அப்புறம் ஏன் ராக்கெட் விடுறதுக்கு முன்னாடி அங்க போய் கோவிந்தா போட்டாங்க//

கோவிந்தாவுக்கே கோவிந்தா!

கோவிந்தா! கோவிந்தா!!

ராஜன் said...

//முதற்கட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறே வெடிப்புக்குக் காரணமாம். //

ஏன்! பெருமாளுக்கு ஒடச்ச தேங்காய் நொட்டையா இருந்துச்சாம்

கும்மி said...

//பெருமாளுக்கு ஒடச்ச தேங்காய் நொட்டையா இருந்துச்சாம்//

பெருமாள்: என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே! யம்மா தாய்க்குலமே! அதைக் கேட்டாக்கா தாங்கதம்மா உங்க மனமே! ஆமா உங்க மனமே!

கும்மி said...

பஸ்ஸில் வந்த கமென்ட்:

ஆயில்ய நட்சத்திரம் என்று நாள் பார்த்துத்தானே அனுப்பினார்கள் ஒரு வேலை ஆயில் இல்லாமல் அனுப்பி விட்டார்களோ? (நன்றி: ஹலோ FM)

வினவு said...

இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன், ராக்கெட் கடலில் விழுந்ததும் திருப்பதி பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை இங்கே பதிவு செய்கிறேன்.

செந்தழல் ரவி said...

இங்கும் வினவு பின்னூட்டம் உள்ளது. வினவு குழு பின்னூட்டத்தை அவுட்ஸோர்ஸ் செய்துவிட்டதோ ?

கும்மி said...

//வினவு குழு பின்னூட்டத்தை அவுட்ஸோர்ஸ் செய்துவிட்டதோ ? //

அவசியப்படும் நேரங்களில் பிற தளங்களில் பின்னூட்டமிடுவார்கள். ஏற்கனவே நமது தளத்தில் பல முறை பின்னூட்டமும் இட்டுள்ளனர்.

வினவு said...

ரவி, மீண்டும் அரசியலை கிளப்புகிறீர்கள். மெய்யாலுமே வினவின் பின்னூட்டம்தான். கும்மியை நம்புங்கள். இங்கு சில பல பின்னூட்டங்களை போட்டிருக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//வால்பையன் said...

எதாவது விசயம் கெட்டு போயிட்டா கோவிந்தாவாயிருச்சுன்னு சொல்றாங்க, அப்புறம் ஏன் ராக்கெட் விடுறதுக்கு முன்னாடி அங்க போய் கோவிந்தா போட்டாங்க!
//

I Like this :))))))

ரம்மி said...

ஒரு வேளை, ராக்கெட்டில் வெங்காயத்தின் படம் வரைந்து, பத்த வெச்சிருந்தால், நல்லா மேல போயிருக்கலாமோ?

செந்தழல் ரவி said...

நல்வரவு ரம்மி. வெங்காய வெடி :)