Friday, December 24, 2010

பிதா சுதன் தூய ஆவியின் பெயராலே..

இன்னும் கொஞ்ச நேரத்தில் கிறித்துமஸ் பேஷ் ஆரம்பிக்கப்போகிறது. கேக் வெட்டப்படும். சர்ச்சுகளில் மணியாட்டப்படும். கத்தோலிக்க பங்கு குருக்கள், சி.எஸ்.ஐ, பெந்தகோஸ்தே, 7த் டே அட்வெண்டிஸ், என்று கிறித்தவ மதத்தின் பல கோஷ்டிகள், அல்லேலூயா பார்ட்டிகள் எல்லாம் எங்கோ பெத்லகேமில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்து யூதர்களினால் கழுவிலேற்றப்பட்டு கொல்லப்பட்ட இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடப்போகிறீர்கள்.



வெறுமனே சாதி சனத்தை பார்க்கவும், சரக்கடிக்கவும், பிகர் வெட்டவும் சர்ச்சு பக்கம் போகும் போலி கிருத்துவர்களுக்கும், உயிர்த்தெழும் நம்பிக்கையோடு இறந்துபோன சகோதர சகோதரிகளுக்காக நெக்குருகி ஜெபம் செய்து, பரிசுத்த ஆவியின் வல்லமையும் இயேசப்பாவின் தந்தை இறைவனும் ஆவிக்குரிய எல்லாம் தருவார் என்று ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டவர்களும், ஒழுங்கீனமான பாதிரிகளும் கன்னிகாஸ்திரிகளும் மற்றும் பங்கு கோயில் அறைவீட்டில் பாவமன்னிப்பு கொடுத்துவிட்டு டயர்டாக வரும் பாவப்பட்ட பாதிரிகளுக்கு சிக்கனும் மட்டனும், ஓல்ட் மங்கும், மற்றும் பல டாஸ்மாக் , வெளிநாட்டு சரக்குகளும் தயாரிக்கும் உபதேசியார்களும் புளித்த மட்டன் ஏப்பம் விடும் இவ்வேளையிலே.

ஆல் இன் ஆல் அழகுராஜா கடை பங்காளிகள் வெறும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லத்தான் பதிவு ஒன்றை பதிகிறோம்.

அடியேன் தமிழகத்தின் ஆகச்சிறந்த பிரபல அஜால் குஜால் சித்த மருத்துவரின் கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது ஒன்றை நீக்க சென்ற வேளையில் அவர் சொன்னார். அவரிடம் மருத்துவ உதவிக்காக (அதாவது சிற்றின்பத்தை பேரின்பமாக்க) வரும் கும்பலில் பாதிரிகளும் கண்ணிகைகளும் அதிகமிருப்பதாக.




தமிழகத்திலே பியர் அடித்தால் பேமானி. சிகரெட் குடித்தால் பொறுக்கி. ஆனால் இவை இரண்டும் இல்லாத ஒரு பாதிரியை பார்ப்பதரிது. அட சிகரெட்டும் தண்ணியும் நம்மை பொறுத்தவரை பச்சைப்புள்ளைமாதிரி. பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே உன்னுடைய பாவங்களை மன்னிக்க இயேசு விரும்புகிறார் என்று திரையின் பின்னாலே அமர்ந்து சொல்லும் பாதிரி எப்படிப்பட்ட பாவி என்றால், சின்ன வீட்டுக்கு கூட லாயலாக இல்லாமல் சின்ன சின்ன வீடு, குட்டி வீடு, பாட்டு கிளாஸ் பாப்பாவுக்கு பாவாடை வாங்கிக்கொடுத்து ஊட்டி ட்ரிப்பில் உஜாலா செய்வது என்று எத்தனை எத்தனை செய்கிறான் அந்த எத்தன் ?

சார் இங்க அஞ்சு கம்யூனிட்டி இருக்கு. அதனால எஸ்.ஸின்னா கொஞ்சம் ஒதுங்கி இருக்க சொல்லி பிஷப்பே சொல்லியிருக்கார். இது ஒரு பாதிரியின் ஸ்டேட்மெண்ட். லஞ்ச ஊழலில். மூட நம்பிக்கைகளில் ஊறிப்போன பதர்களாக. வேளாங்கண்ணியில் உண்டியல் நிரம்பி வழிகிறது. ஏற்கனவே நிரம்பி வழியும் உண்டியலில் ஏன் காசு போடவேண்டும் என்று அடித்த குவாட்டர் ஒரு நட்டாம்பட்டி சரக்கு. அதாவது கலர் கலந்த சாராயம். கடும் வாந்தி. இது வேளாங்கண்ணி மாதாவை பழித்தமைக்கு கிடைத்த கூலி என்றான் சக குடிகாரன். அவன் கை விளங்காமல் போனமைக்கு வெள்ளியில் கை செய்து வைப்பதாக வேண்டிக்கொண்டானாம். முண்டம். அதிக உருளைக்கிழங்கு தின்றதால் வந்த வாய்வு பிடிப்பு அது.

கன்னி எப்படி கருத்தரிக்க முடியும் ? இந்த ஆதார கேள்வியை கேட்க இவ்வளவு குழப்பவேண்டியிருக்கிது. கபிரியேல் என்பவர் வந்தாராம். அவர் தூதராம். அவர் குழந்தை கொடுத்தாராம். நேம் கூட செலக்ட் செய்து தந்துட்டு போனாராம். சரி. அதுக்கு இனிஷியல் தர ஜோசப் ஒத்துக்கொண்டாராம்.அம்புட்டு தேன் கதை. டெக்னிக்கலாக இது சாத்தியம் இல்லை என்று ஊருக்கே தெரியும். எங்கே ஒருத்தர் இதை மறுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ? கடைசி காலத்தில் அன்னை தெரசாவே கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் காட்டுது. கேரளாவில் ஆனி என்ற கன்னியாஸ்திரி கழட்டியது ஒரு பாதிரியின் டவுசர் மட்டும் அல்ல..

நாங்கள் சொல்கிறோம் என்பதால் அல்ல, நீங்களே யோசித்து முடிவு செய்யுங்கள் என்று ஷாம்பு விளம்பரம் போல சொல்லி விடைபெறுகிறோம். அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். ஆமேன்.

47 comments:

செந்தழல் ரவி said...

எப்புடி லெவன் பிப்டி நைனுக்கு போட்டம்பாரு

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)

வால்பையன் said...

http://allinall2010.blogspot.com/2010/05/1.html

வால்பையன் said...

http://allinall2010.blogspot.com/2010/04/blog-post_20.html

ராஜன் said...

அது டைமிங்கு!

ராஜன் said...

அது டைமிங்கு!

வால்பையன் said...

இதுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா என்ன?

ராஜன் said...

//வெறுமனே சாதி சனத்தை பார்க்கவும், சரக்கடிக்கவும், பிகர் வெட்டவும் சர்ச்சு பக்கம் போகும் போலி கிருத்துவர்களுக்கும்//

இதுலயே மொத்தமும் வந்துருச்சே! மேல என்ன?

வால்பையன் said...

தூங்கலையா பங்கு

ராஜன் said...

//தூங்கலையா பங்கு//

இப்பதான் ஈசன் பாத்துட்டு வீட்டுக்கு வந்தேன்! பங்காளி ஏசன பாக்க வெச்சுட்டார்!

வால்பையன் said...

ஈ க்கு எல்லாம் சன் இருக்கா?

விளங்கிடும் பங்கு

ராஜன் said...

//ஈ க்கு எல்லாம் சன் இருக்கா?
//

அததான் நானும் கேட்டேன்!

ராஜன் said...

//சர்ச்சுகளில் மணியாட்டப்படும். //

பாதிரிமாருங்க ஆட்டறத சொல்றாரு போல!

ராஜன் said...

//அடியேன் தமிழகத்தின் ஆகச்சிறந்த பிரபல அஜால் குஜால் சித்த மருத்துவரின் //

சேலம் சிவராசா!

வால்பையன் said...

இயேசு வருகிறார்னு ரொம்ப வருசமா சொல்லிகிட்டு இருக்கானுங்களே, அந்தாளுக்கு வண்டி கிடைக்கலையா என்ன?

வால்பையன் said...

ஒரு கன்னத்தில் அறைந்தால்,
மறு கன்னத்தை காட்ட சொன்னார் ஏசு,

ஒருவேளை எவன்கிட்டயும் அறை வாங்கியிருக்க மாட்டாரோ

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நத்தார் வாழ்த்துக்கள்!

கும்மி said...

நேத்து கொஞ்சம் சீக்கிரம் தூங்கிட்டேன். நானும் வாழ்த்துகளை சொல்லிக்கிறேன் .

கை விளங்காதவனையும் கால் விளங்காதவனையும் பரிசுத்த ஆவி குணப்படுத்துதே, கேன்சர் வந்தவனை எப்ப குணப்படுத்தும்?

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி யோகன் பாரிஸ்.

செந்தழல் ரவி said...

கம்பெனிக்கு அட்டெண்டன்ஸ் போட்டமைக்கு நன்றி பாலகுமாரன் வத்திராயிருப்பு.

basheer said...

//கடைசி காலத்தில் அன்னை தெரசாவே கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் காட்டுது.//

அந்த லெட்டர் ப்ளீஸ்.

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

நம்ம கடைக்கு வாங்க தல.....ராஜன் நல்லிவரவு வரை தூங்காம என்ன பண்றே சீக்கிரம் போயி தூங்கு செல்லம். புது பொண்டாட்டி கோச்சுக்க போகுது

கும்மி said...

//கடைசி காலத்தில் அன்னை தெரசாவே கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் காட்டுது.//

அன்னை தெரெசா எழுதிய கடிதங்களின் தொகுப்பைப் பற்றி தருமி எழுதிய பதிவு.

இந்தத் தொடரின் கடைசி பதிவு, மிகவும் சிறப்பானது. அவசியம் படியுங்கள்.

Nataraj said...

நம்பினவனுக்கு நபியோ, நாராயணனோ, நாசரேத் இயேசுவோ, (குரு) நானக்கோ.. இருந்திருந்து அவன் திருநாள் அன்னைக்கு (அதுவும் 11.59 ன்னு ஒரு பெருமை வேற) இப்படி ஒரு காச்சு காச்சரதுல என்ன ஆனந்தம் ரவி?

நான் கிருத்துவன் அல்ல..இருந்தும் இங்க வளர்ற என் பொண்ணுக்காக சாண்டா கிளாஸ் ப்ரெசென்ட் வெச்சுட்டு வரேன்...உடனே திட்டிபுடாதீக...எல்லாம் உங்க டெக்னிக் தான்..நீங்க உங்க மாமனார் உங்க புள்ளைக்கு சுலோகம் சொல்லி குடுத்தா "புன்னகையோடு கடந்து போறா" (?!) மாதிரி தான்..இல்லாட்டி கோவி கண்ணன் சாரு மாதிரி "யு சீ நமக்கு இதெல்லாம் புடிக்காதுப்பா..இருந்தாலும் புள்ளைங்களுக்காக தீவாளி கொண்டாட வேண்டியிருக்கே.."

எந்த பன்னாடை பாதிரியோ/சாமியாரோ ஒரு புள்ளைய கெடுத்தான்னு ஊர்ல எவனும் கிறிஸ்துமஸ் / தீவாளி கொண்டாட கூடாதுங்கறீங்க...ரைட்டு...

உங்கள் பகுத்தறிவு முதலில் கொஞ்சூண்டு சகிப்பு தன்மையை உங்களுக்கும் உங்கள் பங்காளிகளுக்கும் தரட்டும்...ஆமென்.

கும்மி said...

@Nataraj

பொதுவாக மதங்களைப் பரப்புபவர்கள், எதையெல்லாம் தவறு என்று சொல்கின்றார்களோ, அதனையே அவர்கள் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்வதற்குக் காரணம் மதத்தைப் பரப்புவதால் தங்களுக்கு தண்டனை கிடைக்காது என்பதால் அல்ல; அவ்வாறு தண்டனைகளே கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். மதங்கள் அனைத்தும் நிறுவனமயப்படுத்தப்பட்டு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களால் தங்களுக்கேற்ப வளைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எதை சொன்னாலும் தலையாட்டி கேட்பதற்குத்தான் அவர்களுக்குத் தேவையான மந்தை ஒன்று மாட்டிவிட்டதே.

மார்கண்டேயன் said...

மிக அரிய மற்றும் பயனுள்ள தகவல்கலை திரு. கலையரசன் அவர்கள் கொடுத்துள்ளார்,

தொடர்பு கீழே:

http://kalaiy.blogspot.com/2010/12/25.html

தாங்களும், தங்களின் புரிதல்களைக் காட்டிலும், சரித்திரம் மற்றும் சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுள்ள ஆதரங்களுடன் தங்களின் கருத்துக்களை முன் வைத்தால், மிகுந்த வலு சேரும்,

தொடருங்கள் உங்கள் புரிதல்களை.

நட்புடன்,
மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.com

வருண் said...

***கன்னி எப்படி கருத்தரிக்க முடியும் ? இந்த ஆதார கேள்வியை கேட்க இவ்வளவு குழப்பவேண்டியிருக்கிது. ***

On a Christmas day??? :(

MERRY CHRISTMAS, folks! :)

Nataraj said...

கும்மி...சர்ச்சுகள் போலவே ஹோட்டல் தொழிலும் பலப்பல ஊழல்கள் நிறைந்தது...சில பாதிரிமார்களை போலவே ஹோட்டல் தொழிலிலும் அண்ணாச்சி போன்றவர்கள் உள்ளனர். சில ஹோட்டல் ஒனர்களே அவங்க ஹோட்டல்ல சாப்புடாம வெளில சாப்பிடுறாங்க.. அதனால் இனிமே வால்பையன் ஹோட்டல்ல யாரும் சாப்புடாதீங்கன்னு சொல்வீங்களா..

வால்பையன் said...

ஹோட்டலில் மட்டுமில்ல நட்ராஜ், வீட்லயும் சோறு திங்காதிங்க, உங்க கடவுள் உங்களை காப்பாற்றுவார்!

அவர் பாலை பீராகவும், ஒன்னுக்கை ஒயினாகவும் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்!

கும்மி said...

@ Nataraj

பரவாயில்லை நல்லாவே மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்றீர்கள்.

மதங்கள் கடவுள் என்னும் கற்பனை பாத்திரத்தை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்கின்றன. கற்பனை பாத்திரத்தை சாடுவதொடு, அந்தக் கதாபாத்திரத்தை வைத்து வியாபாரம் செய்யும் மதத்தலைவர்கள் பற்றியும் சாடுகின்றோம். கதாபாத்திரம் கூறியன என்று எல்லோருக்கும் கூறிவிட்டு, மதத்தலைவர்களே அவற்றை மீறும்போது சுட்டிக்காட்டுகின்றோம்.

ஹோட்டல் தொழிலில் சில உணவுப் பொருட்களை அடிப்படையாக வைத்து வியாபாரம் செய்கின்றனர். அந்த உணவுப்பொருட்கள் தரமற்றதாக இருந்தால், எந்த ஹோட்டலாக இருந்தாலும் புறக்கணிப்பார்கள். நீங்கள் கூறிய அண்ணாச்சி தனது ஹோட்டலில் உணவில் எந்த குழப்பமும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், புறக்கணிக்கப்பட்டிருப்பார். அவர் தனது குடும்பத்திற்கு நியாயமாக நடக்கவில்லை. இதற்கும் அவரது ஹோட்டலுக்கும் என்ன சம்பந்தம்?

---
அது ஏன் மதவாதிகள் எப்போதுமே மதங்களைப் பற்றி கேள்வி கேட்டா, அதை விடுத்து கேள்வி கெட்ட நபரை பற்றி பேசுகின்றீர்கள்?

சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும்?

வால்பையன் said...

//மதவாதிகள் எப்போதுமே மதங்களைப் பற்றி கேள்வி கேட்டா, அதை விடுத்து கேள்வி கெட்ட நபரை பற்றி பேசுகின்றீர்கள்? //


வேறென்ன அவர்களுக்கு தெரியும் என்று நினைக்கீறீர்கள் தல!

கும்மி said...

//வேறென்ன அவர்களுக்கு தெரியும் என்று நினைக்கீறீர்கள் தல!//

வேறெதுவும் தெரியாது. அதை ஒத்துக்கவும் மாட்டாங்க. ஆனா நாம கேட்கக்கூடாதுன்னு மட்டும் சொல்லுவாங்க.

செந்தழல் ரவி said...

நட்ஸ்.

மருந்து சில சமயம் கசப்பாக இருப்பதுண்டு. நான் ஏற்கனவே சொல்லியது போல நாங்கள் புண்படுத்துவதே பண்படுத்துவதற்குத்தான் !

அதே சமயம் குறிப்பிட்டு எங்கள் தனிப்பட்ட தகவல்களை இழுத்து பேசுவதால் நீங்கள் பெரிய வெற்றியை ஈட்டிவிடமுடியாது என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

செந்தழல் ரவி said...

நட்ஸ். உங்களுக்கு நல்லா தெரியும் அது செய்யாமல் குழந்தை பிறவாது என்று. அதை ஏன் ஒத்துக்கொள்ளாமல் முகமூடி போட்டுக்கொண்டு காதை பொத்திக்கொள்கிறீர்கள் ? உண்மையை எதிர்கொள்ள ஏன் பயம் ?

நீங்கள் வாழும் வாழ்க்கையை தான் நாங்கள் போலித்தனமானது என்று சாடுகிறோம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முதல்ல இப்படி பின்னூட்டம் போடலாம்னு நினைச்சேன் :

நாமே போஸ்டும் போடறோம், நாமே கமெண்டும் போடறோம் :)

அப்புறம் சில பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு ஐடியாவை மாத்திகிட்டேன். அதனால இப்படிக் கேக்கறேன் :

நடராஜ் சரியாக மடக்கிப் பிடிக்கிறார். வால், கும்மி, செந்தழல் ரவி போன்றவர்கள் பயந்து ஒளிகிறார்கள். ஏன் இந்த பயம்? வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே தங்கள் துறையில் / ஹோட்டலில் தவறே நடப்பதில்லையென்று :)

செந்தழல் ரவி said...

ஜ்யோவ். இங்கே எங்கிட்டு நாங்க பயப்படுறோம்னு சொல்றீங்க ? இப்பத்தான் சென்ஷிக்கு லக்கி பயப்படுகிறார் என்று பஸ்ஸில் டைப் அடிச்சீங்க. :)))

பயந்தா தொழில்பண்ணமுடியுமா ?

கும்மி said...

@ஜ்யோவ்ராம் சுந்தர்

//வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே தங்கள் துறையில் / ஹோட்டலில் தவறே நடப்பதில்லையென்று //

எங்கள் ஹோட்டலில் உணவில் எந்த குறையுமில்லை.

வால்பையனின் ஹோட்டலில் உணவு சரியில்லை என்றால், வாடிக்கையாளர்கள் வரப்போவதில்லை. அங்கு உணவு சரியில்லை என்று கூறினால், என்ன சரியில்லை என்று கேட்டு நிவர்த்தி செய்வோமே, தவிர எங்கள் உணவைப் பற்றி பேசவேக்கூடாது என்று சொல்ல மாட்டோம்.

ஒருவேளை சரியில்லை என்றால் அதனை சரிசெய்வோம். அப்படி செய்யாவிட்டால், வாடிக்கையாளர்கள் வருவதை நிறுத்திவிடப் போகிறார்கள். இங்கு சாப்பிடாவிட்டால் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்காது என்று மிரட்டவும் மாட்டோம்.

ஆனால், மதங்களில் அப்படியா இருக்கின்றது? அதில் இருக்கும் குறைகளை யாரும் சுட்டிக்காட்டக்கூடாதாம். சுட்டிக்காட்டினால் என்னவெல்லாம் வசைமாரிகள் வரும் என்று உங்களுக்குத் தெரியாதது அல்ல.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செந்தழல் ரவி, அதேதான், சென்ஷிகிட்ட லக்கி பயப்படறா மாதிரி நீங்க நடராஜ் கிட்ட பயப்படறீங்க. அதனாலதான் அஞ்சி நடுங்கி அடங்கி ஒடுங்கி ஓடி ஒளியறீங்க :)

கும்மி, நீங்க சொன்ன பதில் வேலைக்காகாது. உங்க சாப்பாடு சரியில்லைன்னு என்கிட்ட உளவுத்துறை சொல்லியிருக்கு :)

அவங்க ஸ்பிரிச்சுவல் லெவல்ல ஏமாத்தறாங்க. நாம நிஜ உலகத்துல ஏமாத்துறோம்னு சொல்லிட்டு ஒதுங்கிப் போங்க :) இல்லாட்டி, உங்களைப் பத்தி உள்விவரங்களை வெளிப்படுத்தி அசிங்கப் படுத்துவோம் :)

செந்தழல் ரவி said...

ஜ்யோவ் என்னாப்பா இது ? டருஜு ஆகுது !!

கும்மி said...

// உளவுத்துறை சொல்லியிருக்கு//

அட உளவுத்துறையே சொல்லிருச்சா?

// உங்களைப் பத்தி உள்விவரங்களை வெளிப்படுத்தி அசிங்கப் படுத்துவோம் :) //

இதுதான் மேட்டரா? தொடர்ந்து அதானே நடக்குது. :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நிஜத்தைச் சொல்லணும்னா, நீங்க செய்யற இந்த வேலைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. தொடர்ந்து இயங்குங்கள்!

கும்மி said...

//ஜ்யோவ் என்னாப்பா இது ? டருஜு ஆகுது !!//

அவரோட முதல் பின்னூட்டத்தை நல்லா படிச்சிப் பாருங்க புரியும்.

"அப்புறம் சில பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு ஐடியாவை மாத்திகிட்டேன். அதனால இப்படிக் கேக்கறேன் :"

கும்மி said...

நன்றி ஜ்யோவ்.

Nataraj said...

கும்மி... உங்க கம்மேன்ட்ல மதங்கற வார்த்தைய ஹோட்டல் அப்படின்னு substitute செஞ்சா எப்படி இருக்கும்னு ஒரு பின்னூட்டம் போட்டேன்...அதுக்கு "மதவாதி"ன்னு பட்டம் குடுத்துட்டீங்களே..:)) செம காமெடி படிக்கறச்சே.. விடுங்க பாஸ்..நான் அந்த அளவுக்கு வொர்த் இல்ல..

ரவி..நான் ஒன்னு கேட்டவுடனே உங்க சகாக்கள் ஹர்ட் ஆகிட்டாங்க..அது மாதிரி தானே மத்தவங்க என்பதே என் அடிப்படை கேள்வி...

வால்பையன் said...

உளவுதுறையெல்லாம் வச்சு செக் பண்றிங்களா சுந்தர்ஜி!

உணவகம் வருமானத்திற்காக மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை, இது எனது பல வருட கனவு, நிச்சியம் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட மாட்டோம்!

செந்தழல் ரவி said...

நட்ஸ், இங்கே யாரும் ஹர்ட் ஆகவில்லை. உங்களுக்கு விளக்க முயல்கிறார்கள் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும் ஆத்திகத்தையோ / அது சம்பந்தமான நம்பிக்கைகளையோ / மூட நம்பிக்கைகளையோ கண்டித்து எழுதும்போது 100 இல் 99 ஆத்திகர்கள் ஹர்ட் ஆவார்கள் என்பது உண்மையே.

இதனால் எங்களின் பல நட்புகள் மூட விலகியதுண்டு.

இருந்தாலும் நட்பு வேறு , கருத்து வேறு என்பதை உணர்ந்த மெச்சூர்ட் நட்பே எங்களுக்கு தேவையே தவிர, சிறுபிள்ளைத்தனமான லொட்டைகள் எங்களுக்கு தேவையில்லை.

ananku said...

இந்த பகுத்தறிவுவாதிகள் பொதுவா இந்து மதத்தில மட்டும்தான் ஏதோ மூட நம்ம்பிக்கை இருக்கிற மாதிரி படம் காட்டுவாங்க. நீங்க மட்டும்தான் எல்லா மதத்தில உள்ள மூட நம்பிக்கையும் பித்தலாட்டமும் வெளிச்சம் போட்டு காட்டுறிங்க. தொடரட்டும் உங்க சேவை. ஆனா நாவடக்கம் முக்கியம். அதாவது நாயை நாய்னு சொல்லுங்க. சொறி நாய்னு திட்டாதிங்க.