Tuesday, November 23, 2010

லிவ்விங் டுகெதர். கொஞ்சம் பட்டி பார்க்கலாமா ?

லிவ்விங் டுகெதர். சேர்ந்து வாழ்தல். கொஞ்சம் பட்டி பார்க்கலாமா ?
முதலில் லிவ்விங் டுகெதர் என்ற பண்பாட்டை ஏற்றுக்கொள்ளும், சகித்துக்கொள்ளும், ஆதரிக்கும் பதிவர்களுக்கு நன்றி. லிவ்விங் டுகெதர் என்ற வார்த்தையை சொல்லும்போது வரும் ஜில்மாவுக்காக ஆதரிக்கிறீர்களோ, அல்லது ஒரு தனி நபரின் சுகந்திரத்தில் தலையிட எந்த தேங்கா மண்டையனுக்கும் உரிமை இல்லை என்ற உள்ளார்ந்த புரிதலோடு ஆதரிக்கிறீர்களோ தெரியாது.

காரணம், லிவ்விங் டுகெதரை மட்டும் அல்ல ஒரு பால் புணர்ச்சியை, திருமணத்தை, காதலை, அரவாணிகளை, விரும்பிய கட்சிக்கு ஓட்டுப்போடும் உரிமையை, விரும்பாத விவாகத்தை ரத்து செய்யும் உரிமையை, மறுமணத்தை, காலையில் நாஷ்டாவுக்கு சட்னியா சாம்பாரா என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை என்று எல்லா கந்தாயத்தையையும் இப்போது நாம் ஆதரிக்கிறோம். பல நாடுகளில் ஆதரிக்கிறார்கள்.

ஒரு பின்னூட்டத்தில் திரு.வினோத் என்பவர் கேட்கிறார். உங்கள் வீட்டு பொம்பளைங்க போன் நம்பர் தாங்க, நான் லிவ்விங் டுகெதர் ஆக வாழ விரும்புகிறேன் என்று. திரு.வினோத் அவர்களுக்கு நான் சொல்வது இது தான். லிவ்விங் டுகெதரோ, காதலோ, திருமணமோ, அந்த பெண் விரும்பினால் தான் நடக்கும். அதுக்குல்லாம் ஒரு மூஞ்சி வேணும் மச்சி. ஊட்ல கண்ணாடி இல்லையா ?

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்திய சட்ட வரைவு 377 ஐ, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு. நாம் இங்கே ஓரினச்சேர்க்கையை பற்றிக்கூட பேசவில்லை. ஒரு ஆண், மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையேயான இருவரும் இசைந்த, முற்றுமுழுதாக இணைந்து வாழும் வாழ்க்கையை / இயற்கையான பாலுறவை பற்றித்தான் பேசுகிறோம். இதை எப்படி எதிக்கிறீர்கள் என்று புரியவில்லை.

கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவம்.விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பெண், காதலனுடன் ஓடிவிட்டாள். இருவரையும் திரும்ப அழைக்கின்றனர் குடும்பத்தார். காவல் நிலையத்தில் பஞ்சாயத்து. இருவரையும் பிரித்துவிடுவது என்று தீர்மானித்து, அந்த பெண்ணின் உறவினருடன் கட்டாய திருமணம். மூன்றாவது நாள் வயலுக்கு அடிக்கும் பாலிடால் பூச்சி மருந்தை குடித்து பெண் மரணம். இது கூட சம்பிரதாய திருமணம் தான். தோல்வியடைந்த ஒன்றுதான். ஆகவே சம்பிரதாய திருமணங்கள் அனைத்தும் இப்படியானவை என்று வாதிடலாமா ?

உண்மையில் இந்த கலாச்சார காவல்துறை பணியை செய்பவர்கள், ஏதாவது வேறு வகையில் தமிழ் கலாச்சாரம் சொல்பதை மீறி வாழ்பவர்களாகவே இருப்பார்கள். தமிழ் கலாச்சாரம் வேட்டி அணிவது. சேலை அணிவது. வாலை இலையில் வழித்து அடிப்பது. அதை அப்படியேயா பின்பற்றுகிறீர்கள் ? சமயத்துக்கு தகுந்தபடி, தேவைக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ளவில்லையா ?

மேலும், அதி உச்சமாக லிவ்விங் டுகெதரில் வாழ்பவர்கள் விபச்சாரிகள் என்று தூற்றுகிறார் ஒருவர். எக்ஸ்க்யூஸ் மீ ஜெண்டில்மேன். விபச்சாரிக்கு ஆண் பால் என்ன ? கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.

லிவ்விங் டுகெதர் கலாச்சாரத்தில் வாழும் பெண்ணுக்கு பாதுகாப்பில்லை. சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார் என்று அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகிறார்கள். உண்மையில் இன்றைய அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில், தக்காளி, பக்கத்து வீட்டில் இருப்பவன் யார் என்று தெரியாமல் வருஷக்கணக்காக வாழும் நிலை உருவாகிறது. காசு இருப்பவன் வாடகை கொடுத்து இருக்கிறான். இல்லை என்றால் சொந்த ப்ளாட் வாங்குகிறார். அவன் வாலை ஏன் நக்கவேண்டும் ? மேலும் இன்றைக்கு திருமணத்துக்கு பிந்தைய வேறு ஆண்களுடன் பாலுறவு நிகழ்வுகள், திருமணத்துக்கு முந்தைய உடல் ரீதியான தொடர்புகள் சத்தமில்லாமல் நடக்கும் இடம் சிட்டியை விட கிரம‌ம் தான் அதிகம். இதை மறுக்க முடியுமா ?

லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்பவர்களை சமூகம் புறக்கணித்துவிடும் என்று சொல்பவர்களை விட வேறு பெரிய முட்டாள்கள் இல்லை. சமூகம் ஓட்டளித்து முதல்வர் நாற்காலியில் கூட உட்கார வைத்திருக்கிறது மக்கா. திரு எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி அல்லவே செல்வி ஜெயலலிதா. அவருடன் லிவ்விங் டுகெதர் ஆக வாழ்ந்தவர் தானே ? அவர் தமிழ் சமூகத்தின் உச்ச பதவியான முதல்வர் பதவியில் அமரவில்லையா ? சொல்லப்போனால் தமிழ் சமூகத்துக்கு கோயிங் ஸ்டடி என்ற வார்த்தை பிரயோகத்தை அறிமுகப்படுத்தியதே அவர்தான். திரு.எம்.ஜியார் அவர்களுடனான அவரது இணைப்புக்கு முன் நடிகர் திரு சோபன் பாபு அவர்களுடன் கோயிங் ஸ்டடியில் இருப்பதாக ஒரு வார இதழுக்கு சொன்னார்
.
காதலர் தினத்தன்று கழுதைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் இந்து அடிப்படைவாதிகள். அரேபியாவில் மணல் புயலில் இருந்து காக்க உபயோகப்படுத்திய சாக்குத்துணி பர்தாவை போட்டு பெண்ணை மூடுகிறார்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். கண்ணியாஸ்திரிகளுக்கு மட்டும் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளை போட்டுவிட்டு தாங்கள் சிறுவர்களுடன் / பெண்களுடன் கூத்தடிக்கிறார்கள் கிறிஸ்தவ அடிப்படைவாத / பழமைவாத பாதிரிகள். ஆனால் காதலியோடு / மனைவியோடு கொஞ்சம் தரமான நேரத்தை செலவிட விரும்புகிறார்கள் இளைஞர்கள். 

நீங்கள் இதில் எந்த பக்கத்தில் நிற்கிறீர்கள் என்று கொஞ்சம் உங்கள் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள் முதலில். நீங்கள் ஒரு அடிப்படைவாதி எனில் உங்களுடன் விவாதம் செய்யவே விரும்பவில்லை. நீங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்கு கூட மதிப்பளிக்காதவர்கள். உங்களுடன் பேசுவது வீண். ஆனால் நீங்கள் கலாச்சார மாயையில் நிற்கிறீர்களா ? எது கலாச்சாரம், எது தேவை எது தேவையில்லை என்று குழம்புகிறீர்களா ? மனித உரிமைக்கும் கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் இடையேயான சிறு நூலிழையை தேடுகிறீர்களா ? வாருங்கள் இந்த பதிவில் பேசலாம்.

உண்மையில் லிவ்விங் டுகெதர் என்பது இணைந்து வாழ்தல் என்ற பொருளுடன் எடுத்துக்கொள்ளலாம். நமது சங்க இலக்கியங்களில் தாலி கட்டும் குடும்ப திருமண வழக்கங்கள் என்பது அறவே இல்லை. ஏன் திருக்குறளில் கூட ஒரு குறள் தாலியை பற்றி பேசவில்லை. சங்க திருமணங்கள் கந்தர்வ திருமணங்கள். சூரியன் சாட்சியாக. நதியலைகள் ஓரத்தில். தோழிகள். தோழர்கள் முன்னிலையில். நடந்தன அந்த திருமணங்கள். சங்க பாடல்கள் காதலை பேசுகின்றன. சாதியை பேசவில்லை. 

எங்கே சென்றது நமது கலாச்சார சுகந்திரம் ? எப்படி நம்மை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்களிடம் நமது வெளிப்படையான கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நாம் இழந்துபோனோம் ? ஷிட் மேன். இன்னா கோயில்ல செக்ஸ் ஸிம்பல்ஸ் ? மூடு. மூடு என்று நமது வெளிப்படையான செக்ஸ் கல்வி முறையை கூட ஒழித்தான். அவன் மதம் வளரவேண்டும் என்ற வெறியே இதன் காரணம். அந்த அழுத்தத்தில் இருந்து இன்னும் நாம் வெளிவரவில்லை. இது தான் உண்மை.

இணைந்து வாழும் இருவர், குழந்தை பிறந்தால் மருத்துவமனையில் புருஷன் பேரு என்னா என்று கேட்கும்போது கூச்சப்படவேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார். அந்த புனைவில் அவர் ப்ரியா என்ற பெயரை உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கவேண்டும். தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், இணைந்து வாழும் இருவர், குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள்களாக, குழந்தை உருவானபின் குறைந்தபட்சம் ஒரு எளிமையான பதிவு திருமணத்தை நடத்திக்கொள்ளும் அறிவு கூட இல்லாத முண்டங்களாக இருக்கமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. 

இது போன்ற‌ புனைவின் மூல‌ம் அடிப்ப‌டைவாத‌த்தை, க‌லாச்சார‌ த‌லிபானிஸ‌த்தை நிறுவ‌ முய‌லும் ம‌ருத்துவ‌ரை க‌டுமையாக‌ க‌ண்டிக்கிறேன். (இது ம‌ருத்துவ‌ரின் இந்த‌ ப‌திவுக்கு ம‌ட்டும் தான். ம‌ருத்துவ‌ர் மேலும் ப‌ல‌ சிற‌ப்பான‌ ப‌திவுக‌ள் இட்டு வ‌ருகிறார், அதனால் இதையும் அதையும் குழ‌ப்பிக்கொள்ள‌க்கூடாது)

மேலும், இணைந்து வாழ்தலில் நெகட்டிவ் ஸினாரியோவான விருப்பம் இல்லாவிட்டால் பிரிந்துவிடுதல் என்ற கான்ஸப்ட், ரொம்பவே அதீதமாக்கப்பட்டு பார்க்கப்படுகிறது. ஏன், திருமணம் நடந்தபிறகு கூடத்தான் பரஸ்பரம் ஒத்துவராத தம்பதிகள் விவாக ரத்து செய்துகொள்ளுகிறார்கள். அவர்களையும் விபச்சாரிகள் என்று அழையுங்களேன் பார்ப்போம் ? அட அவ்வளவு ஏன். காதலிக்கும் இருவர் கூடத்தான் சண்டை போட்டு பிரிகிறார்கள். அதை கூட தவறு என்று சொல்வீர்கள் போல ?

லிவ்விங் டுகெதரை போல‌திரும‌ண‌ம் என்ப‌து கூட‌, ப‌ர‌ஸ்ப‌ர‌ம் ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையிலான‌தே. திரும‌ண‌த்துக்கு பின் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ, வேறு ஒருவ‌ரிட‌ம் காத‌ல் என்றால் கூட‌ அது கூட‌ முற்றிலும் இய‌ல்பான‌ ஒன்றாக‌ பார்க்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து என‌து க‌ருத்து. மூன்று குழ‌ந்தைக‌ளுக்கு பிற‌கு ந‌ய‌ன்தாராவிட‌ம் பிர‌புதேவாவுக்கு காத‌ல். கொடுமை பாருங்க‌. ர‌ம்ல‌த்தின் திரும‌ண‌ம் கோயிலில் ந‌ட‌ந்த‌ திரும‌ண‌ம், ச‌ட்ட‌ரீதியாக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட‌வில்லையாம். அத‌னால் ச‌ட்ட‌ ரீதியாக‌ ந‌ய‌ன்தாராவை திரும‌ண‌ம் செய்தாலும் பிர‌புதேவா மீது எந்த‌ ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌முடியாது என்று சொல்கிறார்க‌ள். திரும‌ண‌ ப‌திவு மிக‌ ச‌மீப‌த்தில் தான் க‌ட்டாய‌மாக்க‌ப்ப‌ட்ட‌து. ஆக‌வே அத‌ன் முன் ந‌ட‌ந்த‌ திரும‌ண‌ங்க‌ள் எல்லாம் லிவ்விங் டுகெத‌ர் தான் என்று சொல்லிவிட‌லாமா ?

இணைந்து வாழ்தல், விரும்பினால் திரும‌ண‌ம் செய்துகொள்ளுத‌ல், விரும்ப‌ம் இல்லை என்றால் பிரித‌ல், குழ‌ந்தை பெற்றுக்கொள்ளுத‌ல், காலையில் இட்லிக்கு ப‌தில் தோசை வார்த்த‌ல், ச‌ன் டிவிக்கு ப‌தில் விஜ‌ய் டிவி பார்த்த‌ல், ஜிமெயில் அல்லாம‌ல் யாஹூவில் மின்ன‌ஞ்ச‌ல் சேவையை ப‌ய‌ன்ப‌டுத்துத‌ல் என்று எல்லா க‌ருமாந்திர‌ க‌ந்தாய‌ங்க‌ளும் ஒருவ‌ரின், அல்ல‌து இருவ‌ரின், த‌னிப்ப‌ட்ட‌, முற்றிலும் இய‌ல்பான‌ வாழ்க்கை முறை. அதில் த‌லையிட‌ யாருக்கும் உரிமை இல்லை.

லிவ்விங் டுகெத‌ராக‌ வாழ்ப‌வ‌ர்க‌ள் சூழ‌லை, க‌லாச்சார‌த்தை, ப‌ண்பாட்டை கெடுத்துவிட்டார்க‌ள் என்றும் அவ‌ர்க‌ளை த‌ண்டிக்க‌வேண்டும் என்று கிள‌ம்புப‌வ‌ர்க‌ள், உங்க‌ள் தெருவில் விப‌ச்சார‌ம் ந‌ட‌க்கிற‌து. ப‌ள்ளிக்கூட‌த்துக்கு ப‌க்க‌த்தில் டாஸ்மாக் ம‌துக்க‌டை இருக்கிற‌து. சொந்த‌க்கார‌ன் ஒருவ‌னால் ஒரு வ‌ய‌துக்கு கூட‌ வ‌ராத‌ பெண் பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறாள். சாலையில் பிச்சை எடுக்கிறான். சாக்க‌டை த‌ண்ணீர் தெருவில் ஓடுகிற‌து. வாஸ்து சாஸ்திரம், நாடி ஜோசிய‌ம் என்று ஊரை ஏமாற்றுகிறான். பொண்டாட்டியை போட்டு அடிக்கிறான். எல்லாம் ந‌ட‌ந்தும் உங்களுக்கு மட்டும் கெட்டுவிடாத‌ சூழ‌ல், உங்களுக்கு மட்டும் எப்படி கெடும் ? ஒருவ‌னும் ஒருத்தியும் முற்று முழுதாக‌ இணைந்து ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையில், அவ‌ர்க‌ளுக்கு முன்பிருக்கும் ச‌மூக‌ பொருளாதார‌ ச‌வால்க‌ளை ச‌ந்தித்து வாழும் வாழ்க்கையில் நீங்க‌ள் ஏன் த‌லையிடுகிறீர்க‌ள் ? கொஞ்ச‌ம் சிந்தித்துபார்க்க‌லாமே... 

31 comments:

Katz said...

அருமை நண்பரே.

Katz said...

நல்ல வாதங்கள். தெளிவான கருத்துக்கள்.

// திரும‌ண‌த்துக்கு பின் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ, வேறு ஒருவ‌ரிட‌ம் காத‌ல் என்றால் கூட‌ அது கூட‌ முற்றிலும் இய‌ல்பான‌ ஒன்றாக‌ பார்க்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து என‌து க‌ருத்து.// மிக சரி.

பயணமும் எண்ணங்களும் said...

திரு எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி அல்லவே செல்வி ஜெயலலிதா. அவருடன் லிவ்விங் டுகெதர் ஆக வாழ்ந்தவர் தானே ?//

அதானே?..

பயணமும் எண்ணங்களும் said...

க‌லாச்சார‌த்தை, ப‌ண்பாட்டை கெடுத்துவிட்டார்க‌ள் என்றும் அவ‌ர்க‌ளை த‌ண்டிக்க‌வேண்டும் என்று கிள‌ம்புப‌வ‌ர்க‌ள், உங்க‌ள் தெருவில் விப‌ச்சார‌ம் ந‌ட‌க்கிற‌து. ப‌ள்ளிக்கூட‌த்துக்கு ப‌க்க‌த்தில் டாஸ்மாக் ம‌துக்க‌டை இருக்கிற‌து. சொந்த‌க்கார‌ன் ஒருவ‌னால் ஒரு வ‌ய‌துக்கு கூட‌ வ‌ராத‌ பெண் பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறாள். சாலையில் பிச்சை எடுக்கிறான். சாக்க‌டை த‌ண்ணீர் தெருவில் ஓடுகிற‌து. வாஸ்து சாஸ்திரம், நாடி ஜோசிய‌ம் என்று ஊரை ஏமாற்றுகிறான். பொண்டாட்டியை போட்டு அடிக்கிறான். எல்லாம் ந‌ட‌ந்தும் உங்களுக்கு மட்டும் கெட்டுவிடாத‌ சூழ‌ல், உங்களுக்கு மட்டும் எப்படி கெடும் ? //

நல்ல கேள்விகள்...

பயணமும் எண்ணங்களும் said...

//இதுவே இந்தக் கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்களும் ஆதரிப்பவர்களும் நேர்மை அற்ற விதத்திலே விடயத்தையும்
வாழ்க்கையையும் கையாள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.//

http://punnagaithesam.blogspot.com/2010/11/3.html

என் பதிவில் இப்படி பதிலளித்தார் மருத்துவர்..:))

புரியாமல் அறியாமல், விளங்கிக்கொள்ளாமல் பே(ஏ)சுகிறார்கள்.. வேறென்ன சொல்ல.?

குடுகுடுப்பை said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

பழமைபேசி said...

முசாபர்நகர்: திருமணமாகாத கன்னிப் பெண்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. கன்னிப் பெண்கள் தங்கள் காதலர்களுடன் ஓடுவதைத் தடுக்கவே இந்த நடிவடிக்கையாம்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள லங்க் கிராமத்தில் நேற்று அனைத்து ஜாதியினரின் பஞ்சாயத்துக் கூட்டம் நடந்தது. இதில் இளைய தலைமுறையினரை செல்போன் எவ்வாறு சீரழிக்கிறது என்பது பற்றி பேசினர். இதையடுத்து தான் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டது.

கும்மி said...

நல்லாத்தான் பட்டி பார்த்திருக்கீங்க.

கும்மி said...

கமென்ட் மாடரேஷன் இருக்கு. கடை ஓனர் வேற வீட்டுக்குக் கிளம்பிட்டாரு. நாளைக்கு காலைலதான் வருவாரு. இப்ப வர்ற பின்னூட்டங்கள் உடனடியாக பப்ளிஷ் ஆகாது. ஆனாலும், சொல்ல விரும்புபவற்றை பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க.

ganesh said...

எழுத்து மிக சிறியதாக இருக்கின்றது கொஞ்சம் பெரிது படித்ததினால்..எளிதாக இருக்கும்...

ganesh said...

எழுத்து மிக சிறியதாக இருக்கின்றது கொஞ்சம் பெரிது படித்ததினால்..எளிதாக இருக்கும்...

நிகழ்காலத்தில்... said...

லிவிங் டு கெதர் சேர்ந்து வாழ முடிந்தால் சிறப்புதான். கேள்வியே இல்லை.

பிரிய வேண்டி வந்தால்...????

நாளை என் கருத்தை இடுகையாக போடுகிறேன்..:))

ராவணன் said...

http://anjjamvakuppu.blogspot.com/2010/11/living-together.html

ஏதோ என்னால முடிஞ்சது........

தெய்வசுகந்தி said...

//இணைந்து வாழ்தல், விரும்பினால் திரும‌ண‌ம் செய்துகொள்ளுத‌ல், விரும்ப‌ம் இல்லை என்றால் பிரித‌ல், குழ‌ந்தை பெற்றுக்கொள்ளுத‌ல், காலையில் இட்லிக்கு ப‌தில் தோசை வார்த்த‌ல், ச‌ன் டிவிக்கு ப‌தில் விஜ‌ய் டிவி பார்த்த‌ல், ஜிமெயில் அல்லாம‌ல் யாஹூவில் மின்ன‌ஞ்ச‌ல் சேவையை ப‌ய‌ன்ப‌டுத்துத‌ல் என்று எல்லா க‌ருமாந்திர‌ க‌ந்தாய‌ங்க‌ளும் ஒருவ‌ரின், அல்ல‌து இருவ‌ரின், த‌னிப்ப‌ட்ட‌, முற்றிலும் இய‌ல்பான‌ வாழ்க்கை முறை. அதில் த‌லையிட‌ யாருக்கும் உரிமை இல்லை.
//

அதேதான். அவங்கவங்க வேலையைப் பாருங்கப்பா!!

விந்தைமனிதன் said...

அம்மா திமுக காரவங்க யாருக்கும் ப்ளாக் படிக்கிற அளவு நாலெட்ஜு இல்லங்கிறா அதீத நம்பிக்கையா பாஸ்?! அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா ஒடனே அவதூறு வழக்கு, மானநட்ட வழக்குதான். (ஆட்சில இருந்த கஞ்சா கேஸ், தடா, பொடா கூடுதல்!) :))))


ஒரு தகவலுக்காக
http://krpsenthil.blogspot.com/2010/11/blog-post_2071.html. பாருங்கோவ் சாமியளா!

Thekkikattan|தெகா said...

தெளிவான கேள்விகளும் அதற்கான பதில்களும்.

புரிஞ்சிகிட்டா தனக்கு வரப் போற அல்சரை தள்ளிப்போட்டு வேற எந்த தனக்கு பிடிக்காத விசயத்திலயாவது வர வைச்சிக்கலாம். இல்லேன்னாலும் காலச் சக்கரம் சுழன்று முன்னோக்கித்தான் பயணிக்கும்.

கட்டுரைக்கு நன்றி!

குடுகுடுப்பை said...

கண்டிப்பா என்னோட பின்னூட்டம் இருக்கனும், எளிமையா புரியும்படி எழுதி இருக்கிறீர்கள்.படிக்கும் முன்னர் முடிவுகளோடு வராமல் இருந்தால் புரியும்

குடுகுடுப்பை said...

follow up

ராஜன் said...

கடைல மொத போணி பண்ணி இருக்கும் ரவிக்கு நன்றி+வாழ்த்துகள்!

ராஜன் said...

//ஜில்மாவுக்காக ஆதரிக்கிறீர்களோ//

ஜில்மாவா, கில்மாவா?!

ராஜன் said...

//உங்கள் வீட்டு பொம்பளைங்க போன் நம்பர் தாங்க, நான் லிவ்விங் டுகெதர் ஆக வாழ விரும்புகிறேன் //

108க்கு பண்ண சொல்லுங்க!

ராஜன் said...

//விபச்சாரிக்கு ஆண் பால் என்ன ? கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.//

அபச்சாரி!

ராஜன் said...

//திரு எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி அல்லவே செல்வி ஜெயலலிதா. அவருடன் லிவ்விங் டுகெதர் ஆக வாழ்ந்தவர் தானே ? //

அவருடன் மட்டுமா

ராஜன் said...

கலக்கல் பதிவு!

ganesh said...

<ennannu solla ippave kanna kattuthey,
empa vera velaye kitayatha, orula oruthan renduper thiruda ponal, oore thridanga oru aiyruma, yaro oruthy yarodayo pona, pathika pattavanoda ammai yaiym kolandhaigalaiyum kekkanum thavira,, thani manithnum avan sothanthiramum engeirundhu vandathu kudumbam enra onnu illama,,

sheel nimitha bendedukka cycle kadai oril illa pola......

ganesh said...

எங்கே பொய் கொண்டு இருக்கிறோம்? ஒழுக்கம் என்ற சொல் ஆதி காலத்தில் இருந்து எழுத்தளவிலும் பேச்சளவிலும் மட்டும் இல்லை நடை முறையிலும் இருந்தது என்பதே, எல்லா நூல்களிலும் இருந்து நமக்கு சொல்லப்பட்டது.. கற்கால மனிதனும் அவன் வாழ்வும் கட்டுப்ப்பாடுகளை அவர்களின் அனுபவ வாழ்வின் அடிப்படையில் உணர்ந்து உருவான உளவியல் மற்றும் பொது நன்னடத்தை யை அடிப்படையாக கொண்டு எழுந்ததே,, இந்த கட்டுமானங்கள், சமுகம் , சமுதாயம், குடும்பம், எல்லாம், இன்று தனிப்பட்ட சுய நலம் மட்டுமே அதிகமான காரணத்தால் இவை கசக்குது,
உண்மை எப்பவுமே கசக்கும், ஆனா உடம்புக்கு நல்லது,, நல்ல சிந்தனை வாதிகள் கொஞ்சம் நல்லாவே யோசிக்கணும், இது போல இளைய தலை களை தவறான பாதையில் திருப்ப வேண்டாம்.....

ராஜரத்தினம் said...

//அவருடன் மட்டுமா//

அந்த விவரம் இருந்தால் அதையே தனி ஒரு பதிவாக போடலாமே?

RMS Danaraj said...

//இணைந்து வாழும் இருவர், குழந்தை பிறந்தால் மருத்துவமனையில் புருஷன் பேரு என்னா என்று கேட்கும்போது கூச்சப்படவேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார். அந்த புனைவில் அவர் ப்ரியா என்ற பெயரை உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கவேண்டும். தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், இணைந்து வாழும் இருவர், குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள்களாக, குழந்தை உருவானபின் குறைந்தபட்சம் ஒரு எளிமையான பதிவு திருமணத்தை நடத்திக்கொள்ளும் அறிவு கூட இல்லாத முண்டங்களாக இருக்கமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து.//

நல்ல பதிவு .

நியோ said...

இப்போது காலம் மாறிவிட்டது தோழர் ..எனக்குத் தெரிந்து வல்லத்தில் மட்டுமே நான்கு பேர் ltg யில் இருக்கின்றார்கள் ... என்னையும் ஒரு பெண் அழைத்தார் ... அடுத்த ஆண்டு பார்க்கலாமென்று சொல்லியிருக்கின்றேன் ...

நியோ said...

// அதுக்குல்லாம் ஒரு மூஞ்சி வேணும் மச்சி //

அவங்க அதையெல்லாம் பார்ப்பது போல தெரியவில்லை ...பர்சையும் இல்லை ...எவன் எந்த அளவுக்கு தனக்கு நம்பிக்கையா சுதந்திரமா நடந்துக்குவான்னு யோசிக்கிறாங்க ,அவ்வளவு தான் . மத்த எதுவுமே இரண்டாம் மூன்றாம் நாலாம் பட்சம் தான் !

உமா கிருஷ்ணமூர்த்தி said...

யோசிக்க வேண்டிய விஷயம்.இந்த விசயத்தில் உங்கள் பதில்கள் மிக நன்றாக இருக்கின்றன.சேர்ந்து வாழ்தலை ஆதரிப்பதாலேயே அவர் ஒழுக்கம் பற்றி சந்தேகம் கொள்வதாகாது.கலாசாரம் பற்றிய பார்வை யில் முழுக்க முழுக்க உங்களோடு ஒத்துபோகின்றேன்.
மாற்று கருத்தினை மிக அருமையாக படிக்க இலகுவாக முகம் சுளிக்காதவாறு பதிவு செய்திருக்கின்றார் ரவி.அதற்காகவே அவருக்கு ஒரு ஷொட்டு.