கதாநாயகன்: ப்ரொபைல் போட்டோ மஞ்சள் நிறத்தில் இருப்பதால், மஞ்சள் மூஞ்சி ராஜன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எங்கள் தளத்தின் பங்காளி ராஜன்.
கதாநாயகி: கனவுகளை கவிதைகளாக்கி, கனவுகளின் முகவரியில் கவிதை வழங்கும் ரேவதி.
முன்கதைச் சுருக்கம்: ஜில்லுன்னு ஒரு காதல் அப்படின்னு சொல்லிக்கிட்டு இந்த ஜாக்கும் ஜில்லும் அடிச்ச கூத்து இருக்குதே, இங்க போயி பாத்துத் தெரிஞ்சிக்கிங்க.
அடுத்தது?: டும் டும் டும் தான்.
எங்கே?: காமாட்சி மீனாட்சி மஹால், சுவாமி நாயக்கன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. விக்கிமேப்பியாவுல மண்டபத்தை அழகாக் குறிச்சி வச்சிருக்காங்க. எப்படி வர்றதுன்னு தெரியணும்னா எக்மோரிலேர்ந்து வர்ற வழியும், சிம்ப்ஸனிலிருந்து வர்ற வழியும் கூகிளாண்டவர் சொல்லுறாரு.
எப்போ?: வர்ற வியாழன் (21/10/2010) காலை 7:30 மணிக்கு
வரவேற்பு கிடையாதா?: ஏன் இல்லாம? வர்ற புதன் (20/10/2010) மாலை 7 மணிக்கு!
வால்பையன்: அவ்வளவுதானா?
கும்மி: வேற என்ன?
வால்பையன்: வாழ்த்து சொல்லலே.
கும்மி: சொல்லிட்டாப் போச்சு.
கலைஞரும் பாராட்டு விழாக்களும் போல,
ஜெயலலிதாவும் மிரட்டல் கடிதங்களும் போல,
கேப்டனும் புள்ளி விபரங்களும் போல
மணமக்கள் இணைந்து வாழ வாழ்த்துகிறோம்!
வால்பையன்: பதிவுலகும் நட்பும் போல,
கூகிளும் புதுமையும் போல,
அறிவியலும் ஆராய்ச்சியும் போல
மணமக்கள் சிறந்து வாழ
வாழ்த்துகிறோம்!
நட்புடன் அழைப்பது,
வால்பையன் & கும்மி
----
புதன் மதியத்திலிருந்தே நாங்கள் திருமண மண்டபத்தில்தான் இருப்போம். மாலையில், வரவேற்புக்கு முன்னர், ஒரு பதிவர் சந்திப்பை வைத்துக்கொள்வோமா?
தொடர்புக்கு: வால்பையன் - 99945 00540
.
23 comments:
வாருங்கள் வாழ்த்துவோம்!
vanthutta pocchu..
வாழ்த்துக்கள் ராஜன்.
டியுப் லைட்யும் சோக்வும் போல என்றென்றும் இணைந்து வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் ராஜன் :)
வாழ்த்துக்கள் ராஜன்
இல்லதன் இல்லவள் மாண்பானால் உள்ளதன்
இல்லவள் மாணாக் கடை.
என குடும்பத்தினருடன் வாழ்த்தும், மார்கண்டேயன்
பின் குறிப்பு: வள்ளுவன் வாக்கை நான் வார்க்கும் பொழுது தவறிருந்தால், பொறுத்தருள்க.
வாழ்த்துகள்.!
வாழ்த்துக்கள் அண்ணா .!
மணமக்களுக்கு வாழ்த்துகள்
வாழ்த்துகள் ராஜன்.
நல்ல வேலை யாஅரும் மொதவெட்டுன்னு கமெண்ட் போடல!
வாழ்த்துகள். அடுத்து கும்மிக்கா?
வாழ்த்துக்கள் ராஜன்
புதன் மதியமே நான் வந்துவிடுகிறேன் தல ...
vaalga vaalga vaalga
valga valamudan..!
vaalthukkal...
me the first....
ennudaiya vaazthukkalum puthu maapilai penniRkku
டாக்டர் சேலம் சிவராஜ் பற்றி ஒரு பதிவு போடுங்க, அது சிட்டு குருவி லேகியம் விக்கற போலி டாக்டர்கெல்லாம் சவுக்கடியாக இருக்க வேண்டும்
vazhthugal nanpare
polurdhayanithi
http;//polurdhayanithi.blogspot.com
குடுகுடுப்பை said...
//வாழ்த்துகள். அடுத்து கும்மிக்கா?//
அண்ணே! எனக்கு ஏற்கனவே கண்ணாலமாச்சு! என்னை விட்டுருங்க.
late but best wishes to the couples
dum dum dummm
ரொம்ப நாள் கழிச்சு வாழ்த்து சொன்னா தப்பா ...
ரொம்ப நாளாயிட்டுங்கறதால சொல்லாம போயிடுறது தப்பா ...
அடிக்கடி இணையம் வர முடியிறதில்ல பாஸ் ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
குழந்தைய பாக்றதுக்காவது கட்டாயம் வரேன் பாஸ் ...
Post a Comment