Monday, October 4, 2010

அயோத்தியும், அயோக்கியர்களும் - சில உண்மைகள்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்னும் வழக்கில், அலஹாபாத் நீதிமன்றம் கடந்த 30ம் தேதி புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதுமுதல், பார்ப்பன வெறியர்கள் பல்வேறு பொய்களை அள்ளி இறைத்து வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தோழர்கள் மணி மற்றும் ஏழர ஆகியோர், அயோத்தி நிலம், ராமர், பாபர் மற்றும் பாபர் மசூதி தொடர்பான பல தகவல்களையும் தொகுத்துள்ளனர். இந்த உண்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தவேண்டும் என்பதாலும், உண்மையான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அவற்றை இங்கே பதிவிடுகின்றோம்.

(மொத்தத் தகவல்களின் நீளம் கருதி, மிக முக்கியமானவை bold செய்யப்பட்டுள்ளன)

#சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

#உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும் செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்

#த‌னது பலவீனத்தை தோலவியை தடுமாற்றத்தை வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை பாபர் நமா வைப் போல

#டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது

#இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்

#மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயில்ல் பாபர் கூறுகிறார்

#திரேதா யுகம் முடிவுக்கு வந்த்து கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்#ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்த்த‍ற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி#


#பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்

#ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்

#அவனை அவனது சகோதர சகோதரிகளான் லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

#தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு

#வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

#சீதை கடத்தப்பட்ட கதை இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்த்து

#வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது#நாகார்ஜூனா

# கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றையஅயோத்தி கங்கைகரையில் இருந்த்து என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்

# தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ ந்திக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்

# அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது

# மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி

#அந்தகாடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில்சிக்கவில்லை

#இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian
Archeology - Areview 1979-80 page 76, 77 - cofirms the research-done by BB Lal, KN Thetchikth

#சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆயவு வேறு முடிவை தந்த்து

#விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

#ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

#12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை#ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

#கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமர‌கோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை

#இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை

#எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழிதிய ஆய்வுக்குறிப்போட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா எர்நாக் சான்சி பாம்ரா நாச்னா போன்ற‌

#இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார் இல்லையா


#பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான்#அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து ராமன் தூக்கப்பட்டார்

#ராமர் கோவில் இடிக்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராமசரித் மானஸ் என்றஅவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை
#இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரிய்ர் கோபால் கேட்கிறார்


#பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாகதனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

#அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜ௺த்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை#பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூன் ஒரு அகதியாக திரிந்தான்

#18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மத பைசாகி பிரிவுதான் செல்வாக்கில் இருந்த்து#இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி

#தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது#குவாலியரி கோவில் சிற்பங்களை ரசித்த்தை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர்

#ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா

#அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி

#வ‌ரலாற்றை முழக்க வரவில்லை. துரோகத்தை சுட்டிக் காட்டப் போகிறேன்
#பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

#1845ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை #மன்னிக்கவும் பைராகி என்ற சைவ வழிபாடு என்பது தவறாக முன்னர் குறிப்பிட்டு விட்டேன். சைவ மரபு என்று மட்டும் புரிந்து கொள்ளவும்

#1856 ஜ‌னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது

#இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர் #மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்

#வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்த்து டல்ஹ௴சியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்த்து #பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்ன்ன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்

#அவ‌னது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்

#பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாகபிறந்த ஒரே குற்றத்துக்காககட்டாத வரிக்கு பதிலாகபெண்ணையே மனைவியாக்கிகொண்டிருந்தான் அந்தமன்னன்

#அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை#ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்

#ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள்#ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்

#அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான்#அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத் க்கு வந்தார்

#பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா

#ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.

#ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71

#அக‌மது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்

#அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார்#மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்‌

#ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ்Defence of Lucknow (1858 edition) #இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு

#பாபர் மஸதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது

#முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்த்தை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன‌

#கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி


#த‌னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் #முதன்முதலாக பாபர்மசூதி கட்ட ப‌யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில்இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர
#இன்றுமட்டுமாவரலாற்றைதிரிக்கிறார்கள்


#ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள்

#1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்த்து#ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி#பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்

#1885ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ணசாஸ்திரியின் சிவில்கோர்ட்டில் வ.எண் 61/280 பதிவு செய்கிறார் #படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்

#அவுத்மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. but பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது

#இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் ஏ.பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது

#ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் அதாவது இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது#கல்வெட்டில் உள்ள செய்தி

#ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்

#இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல்மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்குகன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்

#1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60)குறிப்பிடுகிறார்

#அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்


#க‌லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஃஆதாரம் உள்ளது

#1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்

#இதற்கு காரணமான கேகே ந்ய்யர் கூட இந்த அற்புத்த்தை ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது

#மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார்

#அகற்ற வாய்பு இருந்த்தை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்

#சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949டிச23 மசூடிக்கு பூட்டு

#உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்-அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் #சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்

#இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்த்து. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
#ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை

#ஜன61950ல் சூட் நம்ர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்ku

#அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.
உபி அரசுசாப்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் #மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர்

#சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார்.
மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச வ.எ.12கீழ் வந்தது

#ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி

#அக்7,1984இல் அயோத்தி வ்ந்த்துமசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே(பூட்ட உடை)முழக்கம்ஆனது

#அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டுஉடைபடும் என்றனர்விஇப‌

#டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர்

#பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே ஐ சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்

#உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது)ஒருவர் முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்கதடையை நீக்ககோருகிறார்

#முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரனமாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக #மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்

#உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்த்து நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்

#தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை35ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் endrum

#பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும்

#தீர்ப்பளித்த பாண்டே பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986,4.40க்கு உத்தரவிட5.20க்கு அமல்னது

#பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா #க‌லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்த்து

#1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து #1986சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிட்ம்

#முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது #நவ9,1989இல் 25கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4 க்ட்ட‍ நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது

#எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,

#அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்த்து. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமற்ற ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது

#ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்த்து. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ்

#அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் #தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்

#முசுலீம்களின்அடக்கதலத்தின்மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்ல் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்

#ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு #முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.

----
மானஸாரா என்ற இந்துகட்ட்ட‍ கலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்-எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா.

மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.

அக்பர் தான் எழுதிய திவான் இ அக்பர் என்ற நூலில்
ததானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார்.
மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்

பாப்ர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆஃனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643.

ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மஸதிற்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989)

பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்த்தை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362)

பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள். இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்துதான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்• ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றுயிம் குறிப்பு உள்ளது.

-----
பதிவர் செங்கொடியும் இந்தத் தகவல்களை பதிவாக இட்டுள்ளார். உண்மையான வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என விரும்பும் பதிவர்கள், தோழர்கள் திரட்டிய தகவல்களை தங்களது தளங்களிலும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


39 comments:

ப.செல்வக்குமார் said...

ஐயோ ..பெரிய பதிவு .!
அப்புறமா வந்து படிக்கிறேன் ..!!

மண்டையன் said...

சர்ச்சை குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று அநீதிபதிகள் சொல்லிருகிரர்கள் . இதை விட இந்த வழக்கு போகும் திசை
புரிந்து கொள்ள வேறு ஆதாரம் தேவை இல்லை.

வால்பையன் said...

நல்ல பகிர்வு தல!

வால்பையன் said...

எந்திரன் ரிலீஸுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா!?

கும்மி said...

//எந்திரன் ரிலீஸுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா!?//

தீர்ப்பு நியாயமா வந்திருந்தா, RSS வெறியாட்டம் போட்டிருக்கும். எந்திரன் படத்திற்கு கூட்டம் வந்திருக்காது என்று சன் டிவியில் பேசிக்கொண்டார்கள் என்று காத்துவாக்குல கேள்விப்பட்டேன் தல!

கும்மி said...

மண்டையன் said...
//சர்ச்சை குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று அநீதிபதிகள் சொல்லிருகிரர்கள் . இதை விட இந்த வழக்கு போகும் திசை
புரிந்து கொள்ள வேறு ஆதாரம் தேவை இல்லை.//

தீர்ப்பும் தவறாகத் திரிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்றுதான் தீர்ப்பில் இருக்கின்றது. பார்ப்பன விஷமேறிய சிலர்தான் அதனை திரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Vetri said...

நல்லா சொல்றாங்கையா டீடைலு!

கே.ஆர்.பி.செந்தில் said...

மிக விரிவாக அலசி இருக்கிறீர்கள்.. இங்கு அடிமை வாழ்வை விரும்பும் மக்களை பயன்படுத்தி பிழைக்கும் சில பொறுக்கிகளுக்கு மதம் ஒரு கேடயமாக விளங்குகிறது.. சர்வ வல்லமை பொருந்தியவனாக கதை கூறப்படும் ராமன் தன் அடுத்த அவதாரத்தில் வந்து உண்மையை சொல்லட்டும்... அது வரைக்கும் அப்பீல் செய்து காத்திருப்போம் ... இந்த மாதிரி விளங்காத மக்கள் வாழும் தேசத்தில் எதுவும் உருப்படியாக நடக்கவே நடக்காது ...

வெறும்பய said...

நல்ல பதிவு.. விரிவான அலசல்... பல விசயங்கள் ஆச்சர்யமாக உள்ளன...

VIKNESHWARAN said...

//திரேதா யுகம் முடிவுக்கு வந்த்து கிபி 3102 இல்.//

பாஸ் இது தவறா இருக்கு போல... கிமு???

தோமா said...

தகவலுக்கு நன்றி,..நிறைய செய்திகளை தெரிந்துகொண்டேன் :)

ராஜன் said...

//அலஹாபாத் நீதிமன்றம் கடந்த 30ம் தேதி புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. //

ச்ச! என்ன தல அப்பிடி சொல்லிட்டீங்க! அதுக்கு டைம் மிஷின்லாம் வாங்கி எவ்ளோ செலவு தெரியுமா!

ராஜன் said...

//#டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது//

கணபதி அய்யர் உயிலும் கெடச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்!

ராஜன் said...

//#திரேதா யுகம் முடிவுக்கு வந்த்து கிபி 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்#//

இப்போ கேட்டீங்கன்னா அது வேற ராமன்! இது பார்பர் ஷாப் வெச்சிருந்த ராமன்னு கத உடுவானுக!

ராஜன் said...

//#ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்//


நீங்க சொல்றது காமக்களஞ்சியம் சைட்ல வர்ர மேட்டர் மாதிரி கீது! அவ்வ்வ்வ்

ராஜன் said...

யப்பா! பிரிச்சு மேஞ்சிருக்கீங்க தல! சல்யூட்!

நந்தா ஆண்டாள்மகன் said...

சரியான தேவையான அலசல்.மதத்தை கேடயமாக வைத்து பிழைப்பு நடத்தும் மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் அடிமைகளுக்கு தெரியவேண்டிய அலசல்.

நந்தா ஆண்டாள்மகன் said...

சரியான தேவையான அலசல்.மதத்தை கேடயமாக வைத்து பிழைப்பு நடத்தும் மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் அடிமைகளுக்கு தெரியவேண்டிய அலசல்.

நந்தா ஆண்டாள்மகன் said...
This comment has been removed by the author.
JAIVABAIESWARAN said...

அருமையான பதிவு..திரேதா யுகம் கி.பி.3102-ல் முடிவிற்கு வந்தது என்று சில ஆண்டுப்பிழைகள் உள்ளன. திருத்திவிடவும்.

கும்மி said...

கே.ஆர்.பி.செந்தில் said...
//மிக விரிவாக அலசி இருக்கிறீர்கள்..//

வெறும்பய said...
//நல்ல பதிவு.. விரிவான அலசல்...//

ராஜன் said...
//யப்பா! பிரிச்சு மேஞ்சிருக்கீங்க தல! //

அனைத்துத் தகவல்களையும் தொகுத்து, இணையத்தில் வைத்தது தோழர்கள் மணி மற்றும் ஏழர. அனைத்துப் பாராட்டுகளும் அவர்களுக்கே உரியன.

கும்மி said...

VIKNESHWARAN said...
//பாஸ் இது தவறா இருக்கு போல... கிமு??//

JAIVABAIESWARAN said...
//திரேதா யுகம் கி.பி.3102-ல் முடிவிற்கு வந்தது என்று சில ஆண்டுப்பிழைகள் உள்ளன. திருத்திவிடவும்.//

அனைத்துத் தகவல்களும் தோழர்களால் ட்விட்டரில் தொடர்ச்சியாகப் பகிரப்பட்டு, தொகுக்கப்பட்டவை. சில தட்டச்சு பிழைகள் நேரிட்டுள்ளன. இப்பொழுது அவற்றை சரி செய்துவிட்டோம். சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.

கும்மி said...

//ச்ச! என்ன தல அப்பிடி சொல்லிட்டீங்க! அதுக்கு டைம் மிஷின்லாம் வாங்கி எவ்ளோ செலவு தெரியுமா!//

ஆமா கேக்குறவன் கேனையனா இருந்தா அத்வானி அமைதி விரும்பின்னும் சொல்லுவாங்க.

கும்மி said...

நந்தா ஆண்டாள்மகன் said...
//சரியான தேவையான அலசல்.மதத்தை கேடயமாக வைத்து பிழைப்பு நடத்தும் மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் அடிமைகளுக்கு தெரியவேண்டிய அலசல்//

உண்மைகள் எல்லாம் வெளியில் வந்தது தெரிந்ததும், ஒரு அடிமை வந்து ஓசைப்படாமல் மைனஸ் ஒன்று குத்திவிட்டு சென்றுள்ளது. தான் அடிமை என்பதை உணராதவரை அவர்களுக்கு .....

smart said...

அஸ்ஸலாம் அலைக்கும்!
அப்படியே இந்தப் பதிவு உங்களுக்கு சிந்தனையைக் கொடுக்கலாம். கொடுக்கட்டும் என்று எல்லாம் வல்ல அல்லாவைக் கேட்டுக்கொள்கிறேன்.

கும்மி said...

@ smart
வஅலைக்கும் ஸலாம்!

நீங்கள் கூற வந்தது, எல்லோருக்கும் புரிந்துவிட்டதாம்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். அயோக்கியத் தீர்ப்பை பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் திரிக்கின்றனர் என்று அடுத்ததாக பதிவிடுகின்றேன். அப்பொழுது உங்களுடையத் திரிபுகள் அனைத்தும் வெளிவரும்.

அதற்கு முன், 1934 கலவரத்தில் பாரசீகக் கல்வெட்டு மாயமாய் மறைந்ததுப் பற்றியும், 1992 கரசேவையில் ஹரி விஷ்ணு கல்வெட்டு எந்த சேதமும் இல்லாமல் 'முளைத்தது' பற்றியும் ஒரு பதிவிடுங்களேன். அதன் பிறகு ராமனின் பிறப்புச் சான்றிதழ் வனவாசம் செல்லும்போது தொலைந்துவிட்டதாக நக்கலடிக்கலாம்.

கும்மி said...

@smart

அது 'அஸ்ஸலாம்' இல்லை 'அஸ்ஸலாமு' அடுத்த முறை திருத்திக் கொள்ளுங்கள்.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Prem said...

நெறைய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன் .... ரொம்ப நன்றி...

தமிழ்க் காதலன். said...

மிக கடுமையான உழைப்பைக் கொடுத்து தகவல் திரட்டி உள்ளீர்கள். அதற்கு நன்றி. அடுத்து மதத்தின் முதுகில் சவாரி செய்யும் சொகுசு பேர்வழிகள்...., மதத்தில் கட்டுண்டு அடிமையாக வாழும் "மனித மாதிரிகள்" இவர்கள் இருவரையும் சரியாக சாடியுள்ளீர்கள். தோழர்.... கே.ஆர்.பி செந்தில்... நல்ல தெளிந்த உணர்ச்சியை வைத்திருக்கிறார். நாம் திருந்த இன்னும் எத்தனை யுகம் ஆகுமோ...? தெரியவில்லை. இதற்கிடையில் ........., எதையும் காசாக்கி ஆதாயம் பார்க்கும் பார்ப்பனியம்....... இந்த அக்டோபர் 2 ல் காந்தியை "கடவுளாக்கி" காசுப் பார்க்க தொடங்கி இருக்கிறது. தகவல்கள் தெரியாத தலைமுறையின் மூடநம்பிக்கை... இவர்களின் மூலதனமாக இருக்கிறது. நாடு சீக்கிரம் சீரழியும் என்பதில் சந்தேகம் இல்லை. முயற்சிக்கு நன்றி. தொடருங்கள்.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

maturedurai said...

"#உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும் செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்"
"செயின்ட் அகஸ்டீன்" என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.அவரது "Confessions"பற்றித்தானே தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்?

தமிழ் செல்வன் said...

அருமையான பகிர்வு பதிவுக்கு நன்றி

சிட்டி பாபு said...

அருமை. தயவு செய்து போஸ்ட் அழியாமல் பார்த்து கொள்ளுங்கள் .உண்மை வரலாறு நம் சந்ததிகளுக்கு செல்லட்டும் .

Now what?????????? said...

#மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயில்ல் பாபர் கூறுகிறார்

#பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்


Boss..

One small doubt..

I agree you neither support any religion.
But when talking about Babar u give respect like கூறுகிறார் and some many RRRRRRRRRrrrrrrrrrr....


But when it comes to people of our own indian origin (எழுதினான்).. Respect is missing... Why????

Thanks
Madhan

வால்பையன் said...

ஹிடலருக்கும், காந்திக்கும் ஒரே மரியாதை கொடுக்க சொல்றிங்களா நண்பா!

பாபர் மதத்தை விடுத்து மனிதம் காக்க நினைத்த ஆள்!

வால்மீகி வர்ணாசிரமத்தை கதையாக கொடுத்தது மட்டுமல்லாது கற்புள்ளவள் என பீடிகையுடன் ஆணாதிக்கத்தை பரப்பிய ஆள்!

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு அண்ணே!

walajabalaji said...

No lie will become truth, if u given a classes side by side. Rather than your research we Hindus believe in belief. this is just to support the minorities nothing else.

iguru said...

ok forget about babur, can u say the story of his great grand son Aurangazeb? can u describe how many hindu temples are ruined and how many temples were demolished? can u say where the ruined properties were now? can u say the loss of life of men and women in his period? not only Aurangazeb, i'm questioning Babur's period too? Do u think ,i have to belive that was a golden age of hindu's, u want me to believe bcz of the letter written by Babur, hindu's are asking land to worship their god, where there was temple. The committee set by court stated clearly, there were pillars of temple below the mosque's structure. if u don't believe it go and visit kasi temple, the next part of the temple is a mosque,all these things are the jobs of muslim kings,except Akbar no one is good to Hindus, don't state false reports, u can't just imagine the pathetic situation faced by them, Only these things happens in India, will Saudi r Rome allow to raise a place of worship for other religion..u guyz are in the trap drawn by foreign countries..the best way to destroy India is to destroy hinduism, and u r in the right track...

iguru said...

i wonder that you are supporting your quotes by huymaun nama and babur nama....they were the most powerful emperors of their period, do u know what will happen to the writers,if there were any quotes against them...