Tuesday, September 21, 2010

டவுட்டோ டவுட்டு

1. மளிகைக் கடையில் முதலில் எண்ணெய் விற்றால், அன்றைய வியாபாரம் நன்றாக இருக்காதாம். எண்ணெய்க் கடையில் முதலில் என்ன விற்பார்கள்?

2. ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் வாங்கி வீட்டில் வைத்தால், செல்வம் பெருகுமாம், டிவியில் சொன்னார்கள். தனலட்சுமி எந்திரத்தைத் தயாரிப்பவரே அவற்றை வைத்துக் கொண்டால், அவருக்கு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டி, உலகின் மிகப்பெரும் செல்வந்தர் ஆகிவிடலாமே. ஏன் விற்கின்றார்?

3. யாசீன் சூரா ஓதினால், காய்ச்சல் நீங்குமாம். எந்த சூரா ஓதினால் கேன்சர் குணமாகும்?

4. பிளாட்பாரங்களில் அதிர்ஷ்டக்கல் விற்பவர்களைத் தேடி அதிர்ஷ்டம் வருவதில்லையே. ஏன்?

5. தலித்துகள் செல்லும் சாலைகள் தீட்டாகிவிடும் என்றால், அவர்கள் வேலை செய்யும் வயலும், விளைச்சலும் தீட்டாகாதா?

6. ஆக்டோபஸின் கணிப்பின்படி ஸ்பெயின் வெற்றி பெற்றதாம். ஆக்டோபஸின் கணிப்பு வெற்றி பெற்றதால் ஸ்பெயின் வெற்றி பெற்றதா? இல்லை, ஸ்பெயின் வெற்றி பெற்றதால், ஆக்டோபஸின் கணிப்பு வெற்றி பெற்றதா?

7. கடையை இரவில் மூடும்போது கடையில் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கி, அள்ளிப்போட்டால் லட்சுமி போய்விடுமாம். அப்படியானால் லட்சுமி என்பது குப்பைகள்தானா?

8. குழந்தை பிறந்தவுடன் அதன் காதில் பாங்கு ஓதவேண்டுமாம். பாங்கு சத்தம் கேட்டு அந்த குழந்தை எழுந்துத் தொழச் செல்லுமா?

9. போட்டோ டவுட்டு

41 comments:

ராஜன் said...

//மளிகைக் கடையில் முதலில் எண்ணெய் விற்றால், அன்றைய வியாபாரம் நன்றாக இருக்காதாம். //

மளிகைக் கடக்காரன் சம்சாரம் சொன்னதா இருக்கும் தல! ஸ்பெள்ளிங் மிஸ்டேக்!

ராஜன் said...

//எண்ணெய்க் கடையில் முதலில் என்ன விற்பார்கள்?//

குட் கொஸ்டீன்!

ராஜன் said...

//ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் வாங்கி வீட்டில் வைத்தால், செல்வம் பெருகுமாம், //

தன லச்சுமியவே வெச்சுகிட்டா?!

ராஜன் said...

//எந்த சூரா ஓதினால் கேன்சர் குணமாகும்?//

தெலுகு பட டைட்டில் கணக்கா இருக்கே!

ராஜன் said...

//அவர்கள் வேலை செய்யும் வயலும், விளைச்சலும் தீட்டாகாதா?//

பார்ப்பானுகளுக்கு தீட்டாகாம இருக்கனும்னா அந்த மேட்டர்ல காசு கெடச்சா சரி!

கும்மி said...

//குட் கொஸ்டீன்!//

டவுட்டுக்கு பதில் சொல்லுங்கய்யான்னா, தூர்தர்ஷன்ல சொல்லுற மாதிரி சொல்லுறீங்க!

ராஜன் said...

//டையை இரவில் மூடும்போது கடையில் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கி, அள்ளிப்போட்டால் லட்சுமி போய்விடுமாம்.//

லச்சுமிங்கறது கூட்டற வேலக்காரி தல! கூட்டிப்போட்டுட்டா அது ஊட்டுக்கு போயிடும்ல அதான்! கூட்டாம இருக்க வெச்சு குஜால் வேல பண்றதுக்கு!

கும்மி said...

//லச்சுமிங்கறது கூட்டற வேலக்காரி தல//

ஆஹா! என்னே உங்கள் பார்வை!

கும்மி said...

//தெலுகு பட டைட்டில் கணக்கா இருக்கே!//

தெலுகு படத்துல குடுக்குற சவுண்ட் effect டோட ஒரு க்ரூப் வருமே!

ராஜன் said...

//குழந்தை பிறந்தவுடன் அதன் காதில் பாங்கு ஓதவேண்டுமாம்.//

பாங்குன்னா படத்துல அடிச்சுட்டு ஆடறாங்களே அதுவா

கும்மி said...

//பாங்குன்னா படத்துல அடிச்சுட்டு ஆடறாங்களே அதுவா //

நான் டவுட்டு கேட்டா திரும்ப எனக்கேக் கேள்வியா?

தொழுகைக்கு முன்னர் மசூதிகளில் அறிவிக்கப்படும் தொழுகைக்கான அழைப்புதான் பாங்கு.

ப.செல்வக்குமார் said...

//எண்ணெய்க் கடையில் முதலில் என்ன விற்பார்கள்?
//
முதலில் இருந்து கடைசிவரை எண்ணெய் தான் விற்பார்கள் .

/// தனலட்சுமி எந்திரத்தைத் தயாரிப்பவரே அவற்றை வைத்துக் கொண்டால், அவருக்கு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டி, உலகின் மிகப்பெரும் செல்வந்தர் ஆகிவிடலாமே. ஏன் விற்கின்றார்?
///

அவரு ரொம்ப நல்லவர்ங்க , அதனால தான் அவர் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் அப்படின்னு விற்கிறார் .. ஹி ஹி ஹி ..

//எந்த சூரா ஓதினால் கேன்சர் குணமாகும்?//
எனக்குப் புரியலை .. அதனால இந்த கேள்வி பாஸ் ..

//பிளாட்பாரங்களில் அதிர்ஷ்டக்கல் விற்பவர்களைத் தேடி அதிர்ஷ்டம் வருவதில்லையே. ஏன்?
//
பிளாட்பாரத்துக்கு அதிர்ஷ்டம் வந்திட்டா அது அங்க இருக்காதுல்ல , அதனால வரதில்லை ..

//அவர்கள் வேலை செய்யும் வயலும், விளைச்சலும் தீட்டாகாதா?//
அதுதான் எனக்கும் குயப்பமா இருக்கு ..?!?

//ஆக்டோபஸின் கணிப்பு வெற்றி பெற்றதால் ஸ்பெயின் வெற்றி பெற்றதா? இல்லை, ஸ்பெயின் வெற்றி பெற்றதால், ஆக்டோபஸின் கணிப்பு வெற்றி பெற்றதா///
வெற்றி பெற்றதால் வெற்றி பெற்றது ..

//அப்படியானால் லட்சுமி என்பது குப்பைகள்தானா?//
குப்பைகளிலும் லட்சுமி இருக்குதோ என்னவோ ..?

//பாங்கு சத்தம் கேட்டு அந்த குழந்தை எழுந்துத் தொழச் செல்லுமா?
//
பாஸ் ..

Sivaji Sankar said...

போட்டோ டவுட்டு எனக்கும் டவுட்டு தான்.. எப்டி அப்டி இப்டி..?? :P

வால்பையன் said...

கலக்கல் கோட்ஸ்!

chandru2110 said...

பதிவு போடாம இருந்தா நாங்கெல்லாம் மறந்து போய்டுவோம்ன்னு இது மாதிரியெல்லாம் மொக்கை பதிவு போடாதிங்க. இந்த பதிவுல கோவணம் கூட கிழியல.

கே.ஆர்.பி.செந்தில் said...

பெரியாருக்கே பூஜை செய்யும் காலமிது அண்ணாச்சி ...

மந்திரன் said...

over டவுட்டு உடம்புக்கு ஆகாது

Imran said...

டவுட்டெல்லாம் சரிதான். யாராச்சும் டவுட்டை கிளியர் பண்ணலாமே?

தமிழ்க் காதலன். said...

சமூகத்தின் மீதான உங்களின் நேசப் பார்வை.... அதன் மூடநம்பிக்கைகள் மீதான உங்கள் சவுக்கடி.... நீண்ட நாட்களாய் ரசித்து வருகிறேன். உங்கள் துணிவும்...தொண்டும் போற்றுதற்குரியது. தொடருங்கள்..வாழ்த்துக்கள்.

கும்மி said...

@chandru2110

நண்பா lighter vein ல் போடப்பட்ட பதிவுதான் இது. அடுத்த பதிவுகள் நமது வழக்கமான பாணியில் இருக்கும். :-)

கும்மி said...

கே.ஆர்.பி.செந்தில் said...
//பெரியாருக்கே பூஜை செய்யும் காலமிது அண்ணாச்சி ..//

பெரியாருக்கு பூஜை எல்லாம் பழைய நியூஸ். பிஜே அவுலியா ஆன கதை தெரியாதா? (அடுத்த டவுசரா அதை வச்சிக்கலாம?)

உங்களுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டவர் மன்னார்குடி. நீங்க பரவாக்கோட்டை. என்ன ஒரே ஏரியாவுலேர்ந்து ஒண்ணா வந்துட்டீங்களா?

கும்மி said...

Imran said...
//டவுட்டெல்லாம் சரிதான். யாராச்சும் டவுட்டை கிளியர் பண்ணலாமே?//

நீங்களாவது ரெண்டு டவுட்டை கிளியர் பண்ணியிருக்கலாமே.

பாக்கர் கூட்டத்துக்கு போன பல பேருக்கு செவிப்பறை கிழிஞ்சிரிச்சாமில்ல. அப்படியா?

கும்மி said...

@தமிழ்க் காதலன்.

ஊக்கத்திற்கு நன்றி நண்பா.

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாமே தூள்தான் மச்சி

சி.பி.செந்தில்குமார் said...

பிளாட்பாரங்களில் அதிர்ஷ்டக்கல் விற்பவர்களைத் தேடி அதிர்ஷ்டம் வருவதில்லையே. ஏன்?


இது கேள்வி...

fasha comeback again said...

after all this time I did not post on this blog because of my busyness.
and finally I can share more with you.
on my blog there is a new article that contains about "Secrets to a Great Long Distance Relationship (LDR)" I hope this article can be useful for you because I will continue to share to make you happy;)

and for our progress together I hope you can give suggestions and comments on my blog, and Would you like to exchange links with my blog
What if you do not follow my blog yet, I hope you can follow my blog

Thanks
Fasha Cadaz comeback again ;)
kisses
FOLLOW MY BLOG
http://nicedream2day.blogspot.com/

பாரதசாரி said...

கலக்கல் தல!!!!

//பிளாட்பாரங்களில் அதிர்ஷ்டக்கல் விற்பவர்களைத் தேடி அதிர்ஷ்டம் வருவதில்லையே. ஏன்?
//
ஏன் வர்றல? ஏமாந்தவன் கல் வாங்க வந்தா அதுதான் விக்குறவனுக்கு அதிர்ஷ்டம்.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

gunalakshmi said...

உங்க டவுட்டுக்கு ஒரு அளவேயில்லையா தோழரே...

இருந்தாலும் பரவாயில்லை.

நல்லாதான் இருக்கு. (எப்படியெல்லாம் பொய் சொல்லவேண்டியிருக்கு)

என்ன கொடுமை சரவணன்.

பட்டாபட்டி.. said...

டவுட் கிளிய பண்ணனுனுனா, 100 ரூபாய, மஞ்சத்துணில முடிஞ்சு.. கிழக்க பார்த்து நின்னு,

போஸ்ட் பாக்ஸ்-ல போடுங்க..

எண்ணி மூணே நாள்ல பதில் வரும்.. ஹி..ஹி

G u l a m said...

கும்மி ஐயா... சவுரியமா...? இப்ப இப்படி இறங்கிட்டிங்க போல...அப்படியே நம்ம பக்கம் வாரது.. சரி வுடுங்க...ரண்டு கேள்விக்கு டவுட் நான் கிளியர் பண்றேன் நம்ம கேள்விக்கேல்லாம்... ஐயாக்கு ஞாபகம் இருக்குல இல்ல தூசி தட்டி எடுத்து தரவா....

கும்மி said...

G u l a m said...
//கும்மி ஐயா... சவுரியமா...//

உங்க அல்லாஹ்வுக்கு இப்ப என் மேல உள்ள கோபம் இறங்கிருச்சு போல. அதுனால, முதுகுவலி கொறைஞ்சி இப்ப கொஞ்சம் சவுரியமா இருக்கேன்.

//இப்ப இப்படி இறங்கிட்டிங்க போல.//

ஒவ்வொருத்தரைப் பத்தியும் அளவிடுற சொம்பு வந்திருக்கு சாரி, சொம்பு ஒண்ணோட குலாம் வந்திருக்காரு. எல்லோரும் வந்து அவர்கிட்ட, செர்டிபிகேட் வாங்கிக்கிங்க.

//ரண்டு கேள்விக்கு டவுட் நான் கிளியர் பண்றேன் //

பண்றேன் பண்றேன்னு சொல்லுறீங்களே தவிர பண்ண மாட்டேங்குறீங்களே, டவுட்ட கிளியர் பண்றத சொன்னேன். சீக்கிரமா கிளியர் பண்ணுங்க, கேன்சர் இன்ஸ்டிட்யூட்ல உங்க பதிலுக்காக ஆர்வமா காத்துக்கிட்டிருக்காங்க.

// இல்ல தூசி தட்டி எடுத்து தரவா....//

உங்க சமாளிபிகேஷன் டெக்னாலஜி கோர்ஸ் பாடங்களை தூசி தட்டி எடுத்துட்டு வாங்க. அடுத்த வாரம் அதுக்கு தேவை இருக்கும்.

கும்மி said...

பட்டாபட்டி.. said...
//டவுட் கிளிய பண்ணனுனுனா, 100 ரூபாய, மஞ்சத்துணில முடிஞ்சு.. கிழக்க பார்த்து நின்னு,

போஸ்ட் பாக்ஸ்-ல போடுங்க..

எண்ணி மூணே நாள்ல பதில் வரும்.. //

யோவ் பட்டா, மூணு நாளாச்சி இன்னும் பதில் வரலே. ஆமா பதில் வந்ததுக்கு அப்புறம்தானே பணத்தை முடிஞ்சி போடணும்?

G u l a m said...

//பண்றேன் பண்றேன்னு சொல்லுறீங்களே தவிர பண்ண மாட்டேங்குறீங்களே,//
நல்ல தமாஷ் தான் போங்க.... ஐயா நான் சின்ன பையன் மறந்திருப்பேன். எந்த கேள்விக்கு நான் பதில் சொல்லணுனு சொன்னீங்கன்ன வசதியா இருக்கும். இல்லனா லீங் கொடுத்தாலும் ஓகே இப்ப உள்ள இந்த ரண்டு கேள்வியே காட்டாதீங்க! இன்ஷா அல்லாஹ் அதற்கு என் ப்ளாக்லே தனிப்பதிவே தருகிறேன். ஐயா இந்த கேள்விக்கெல்லாம் எங்கே பதில் இருக்குதுனு சொன்ன கொஞ்சம் தேட வசதியா இருக்கும்.
http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html#comments
அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும்,
G u l a m said...
Monday, June 28, 2010
.................................
http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html#comments
PAGE CLOSE-க்கு முன்பு...
“”முதல்ல.. பேசி பார்த்தான் முடியலேனுதோம்...
G u l a m said...
Wednesday, June 30, 2010
..............................
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html#comments
விசயத்திற்கு வருகிறேன். கும்மி அய்யா அவர்களுக்கு இந்த பாமரனின் சில பரிணாம வளர்ச்சி (மாற்றம்) குறித்த சில அடிப்படை(யில்) கேள்விகள்:
G u l a m said...
Thursday, July 22, 2010

G u l a m said...

http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html#comments
வழக்கம்போல் இங்கே கேள்வி., பொறுமையாக உங்கள் அராய்ச்சி முடித்து பின்பு பதில் சொல்லுங்கள்
G u l a m said...
Thursday, August 19, 2010
..............................
http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html#comments
...உங்களை போன்ற இலட்சக்கணக்கானோரை(?) ஒன்றுக்கூட்டி வேண்டுமானால் ஏற்படுத்துங்கள்., அதன் பின் இஸ்லாம் தேவைதானா என்பதை பற்றி சிந்திப்போம்.
G u l a m said...
Monday, August 23, 2010
...........................
இறுதியாக தாங்கள் //கும்மி said...
@ G u l a m
உங்கள் கேள்விகளுக்கு, எங்கள் தளத்தில் தனிப்பதிவில் பதில்களை இடுகின்றேன். (ஏற்கனவே இடவேண்டிய பதிவுகள் சில உள்ளன. அவற்றை இட்ட பின்பு உங்களுக்கான பதிவை இடுகின்றேன்)
Tuesday, August 24, 2010
...........................
ஐயா எதையும் தேட சிரமமப்பட வேண்டாம் மேற்கண்டவற்றை அடிப்படையாக தொகுத்து இங்கு பதிந்துருக்கிறேன். எளிதாக இதை கண்டு தாங்கள் பதில் தரலாம்.
http://iraiadimai.blogspot.com/2010/08/blog-post_09.html

http://iraiadimai.blogspot.com/2010/08/blog-post_15.html

http://iraiadimai.blogspot.com/2010/09/blog-post_26.html

http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_11.html

நான் மீண்டும் இங்கு வரும் வாய்ப்பு இல்லாமல் போகலாம் பதிலிட்டதும் மறக்காமல் என் மெயிலுக்கு gulamdhasthakir@gmail.com தெரியப்படுத்தவும்
இறை நாடினால் இனியும் சந்திப்போம்

கும்மி said...

@Gulam

பதிவுக்கு சம்பந்தமே இல்லாம உளருறதும், உங்க சமாளிபிகேஷன் டெக்னாலஜியில் ஒரு பாடமாக வருதா?

//ரண்டு கேள்விக்கு டவுட் நான் கிளியர் பண்றேன் //
அப்படின்னு சொல்லிட்டு,

//இப்ப உள்ள இந்த ரண்டு கேள்வியே காட்டாதீங்க//

அப்படின்னு சொல்றீங்க. இந்தப் பதிவுக்கு சம்பந்தமே இல்லாத பதிவை பத்தியெல்லாம் பேச ஆரம்பிக்கிறீங்க. எப்பதான் பதிவு சம்பந்தமா பேசப்போறீங்களோ?

(ஆனாலும், எல்லோரும் மறக்காம ஆஷிக்குக்கு ஆப்பு வக்கிற வேலைய தொடர்ந்து செய்யுறீங்க. பாவங்க அவரு. விட்டுருங்க)

G u l a m said...

நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
//இப்ப உள்ள இந்த ரண்டு கேள்வியே காட்டாதீங்க//
ஐயா., நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் வலியுறுத்துவது ஒன்றுதான். இஸ்லாத்தில் ஒன்றை விமர்சிக்கும் முன் அதன் உண்மை நிலைப்பாட்டை அறிந்து விமர்சியுங்கள் தாங்கள் மேற்கோள் காட்டிய இரண்டும் நபிகள் (ஸல்) அவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட சில ஒழுங்கு முறைகள். ஏனெனில் உடம்பு நோய் கண்டால் அஃது இந்த சூராவை மட்டும் ஓதுங்கள் மருத்துவரிடம் செல்லாதீர்கள் என்றா கூறீயிருக்கிறார்கள்? வழக்கம்போல் உங்கள் புரிதலில் தான் தருவது இருக்கிறது ஐயா., உதாரணத்திற்கு மற்றொன்று பாருங்கள்... நன்மையின் பால் செயலாற்ற ஒருவன் இறைவன் பால் ஒரு அடி எடுத்துவைதால் அவன் நோக்கி இறைவன் பத்து அடி எடுத்துவைக்கிறான். அவன் இறைவன் பால் நடந்து செல்கிறான் என்றால் இறைவன் அவன் பால் ஓடி வருகிறான். இதை எடுத்துப்போட்டு இறைவன் எத்தனை கி.மீ.யில் ஓடி வருவான். வருவது தரையிலா வானத்திலா என்று கேள்வி கேளுங்களேன். எவரும் மேற்கொள்ளும் நற்காரியங்களுக்கு இறைவன் மேலும் உற்துணையாக இருக்கிறான் என்பதை விளக்கவே இத்தகைய வாசக அமைப்பு. இப்படி தான் உங்கள் புரிதல் இருக்கிறது.
//எப்பதான் பதிவு சம்பந்தமா பேசப்போறீங்களோ?//
அதெப்படி., நீங்க தும்மல் குறித்தும் மலக்குகள் குறித்தும் கேட்டால் அது பதிவு குறித்து, நான் பரிணாமம் குறித்து இப்படி கேட்டது பதிவுக்கு சம்பந்தம் இல்லையா...
...தன் சுய தேவை தொடர்பான மூலங்களை செயல்படுத்தி காலப்போக்கில் தன்னையே பிறிதொரு உயிரினமாக ....
அதன் அடிப்படையில் நமக்கு இந்த உயிரன மாற்றம் தொடர்பாக இயல்பாக சில கேள்விகள் பிறக்கிறது., ...
முதன்முதலில் ஒரு செல் உயிரி மூலம் தான் உலக உயிரினங்களின் வளர்ச்சி ஏற்பட்டதென்றால் எந்த உயிரன மூலத்தின் தொடர்ச்சியாக தாவரங்கள் உருவாயிற்று. அந்த உயிரி தாவரமாக உருமாற்றமடைய கால சூழ்நிலை அவசியமென்ன?.... முழுவதும் படிக்க
அப்ப ஏன் இப்படி ஒரு பதில் உங்களிடம்
//கும்மி said...
@ G u l a m
உங்கள் கேள்விகளுக்கு, எங்கள் தளத்தில் தனிப்பதிவில் பதில்களை இடுகின்றேன். (ஏற்கனவே இடவேண்டிய பதிவுகள் சில உள்ளன. அவற்றை இட்ட பின்பு உங்களுக்கான பதிவை இடுகின்றேன்)
Tuesday, August 24, 2010//
இதை படிப்பவர்கள் அறிந்துக்கொள்வார்கள் யார் சமாளிபிகேஷன் டெக்னாலஜியே பயன்படுத்துவது என்று..
எனக்கு முன்பாக நீங்கள் அறிந்த தாய்மொழி பழமொழிதான் தூங்கறவனை எழுப்பலாம்..... (நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் இனி இது சம்பந்தமாக இங்கு நான் பின்னூட்டம் இடபோவதில்லை) என் வார்த்தைகளில் ஏதேனும் கண்ணியம் குறைவாக பயன்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள்

இறுதியாக... நீங்கள் சொல்வதுபோல் கடவுள் இல்லையேன்று நம்பாததால் மரணத்திற்கு பின் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் சொல்வது போல் கடவுள் இருந்தால்...மரணத்திற்கு பின். உங்கள் நிலைமை? (இதை படிப்போர் யாவரும் ஒருகணம் சிந்தியுங்கள்)

கும்மி said...

//தாங்கள் மேற்கோள் காட்டிய இரண்டும் நபிகள் (ஸல்) அவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட சில ஒழுங்கு முறைகள்.//

அது எப்படி அறிவுக்கு ஏற்புடையது என்று கேட்டிருக்கின்றேன். அதனைப் பற்றி பேசவில்லையே நீங்கள்! நீங்கள்தான் இஸ்லாத்தை 'விளங்க வேண்டிய' விதத்தில் விளங்கியிருக்கிண்றீர்களே. விளக்க வேண்டியதுதானே!

//அதெப்படி., நீங்க தும்மல் குறித்தும் மலக்குகள் குறித்தும் கேட்டால் அது பதிவு குறித்து, நான் பரிணாமம் குறித்து இப்படி கேட்டது பதிவுக்கு சம்பந்தம் இல்லையா...//

அந்தப் பதிவில், பரிணாமம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, நான் ஏன் இஸ்லாத்தை விட்டு வெளியேறினேன் என்று கேட்டீர்கள். அதற்கு பதிலாகத்தான் தும்மல் பற்றி பேசினேன். இன்னும் தும்மலுக்கான பதிலை நீங்கள்தான் சொல்லவில்லை.

அதன்பிறகு, வேறு என்ன பதிவு போட்டாலும், சம்பந்தமில்லாத நாலு கேள்விகளை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிண்றீர்கள். எங்காவது ஒரு இடத்திலாவது பதிவிற்கு சம்பந்தமாக பேசியிருக்கிண்றீர்களா?

இதுபோல் சம்பந்தமில்லாத உங்கள் கேள்விகளுக்கு தனிப்பதிவில் பதிலளிக்கின்றேன் என்று கூறியது.
//உங்கள் கேள்விகளுக்கு, எங்கள் தளத்தில் தனிப்பதிவில் பதில்களை இடுகின்றேன். (ஏற்கனவே இடவேண்டிய பதிவுகள் சில உள்ளன. அவற்றை இட்ட பின்பு உங்களுக்கான பதிவை இடுகின்றேன்)//

நான் அப்பொழுதே சொல்லியிருக்கின்றேன். ஏற்கனவே இட வேண்டிய பதிவுகள் சில உள்ளன என்று. அவற்றை இட்டப்பின்பு உங்கள் குருட்டுக்கேள்விகளுக்கு பதில்களை கொண்ட பதிவினை இடுகின்றேன். அதுவரை சம்பந்தமில்லாமல் உளறுவதை கொஞ்சம் நிறுத்துங்கள்.

//நாங்கள் சொல்வது போல் கடவுள் இருந்தால்...மரணத்திற்கு பின். உங்கள் நிலைமை? (இதை படிப்போர் யாவரும் ஒருகணம் சிந்தியுங்கள்) //

ஐயோ! பயமா இருக்கே! இவ்வளவு பயங்கரமா மிரட்டுராங்களே!

போங்கய்யா! நீங்களும் உங்க வெத்து மிரட்டலும்.!

fa said...

பக்கி ராஜா, டுபாக்கூர் கும்மி எப்டி இருக்கிங்க, நானும் டவுட்டோ டவுட்டு போட்டு போதன், எப்டி இருக்குனு பாத்து சொல்லுங்க, கமெண்ட்ஸ் லாம் புப்ளிசிட்டி பண்ணுவேன், ஸ்டாப் பண்ண மாட்டேன் உங்கள மாறி.

ராஜ நடராஜன் said...

சந்தேகமெல்லாம் சரியாத்தான் இருக்குது.பதில் சொல்றதுக்குதான் ஆளு இல்ல.

kubrick said...

நெத்தியடி கேள்விகள் இதுக்காகவே ஓங்க தளத்துக்கு தெனம் நாலு தபாவாவது வந்து போறேன்(நெசம்தான்)