நேற்று 'இப்படிக்கு நிஜாம்' என்னும் பதிவர், தனது தளத்தில் 'இஸ்லாமியர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்' என்னும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் நமது தளத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அந்தப் பதிவில் பின்னூட்டங்களையும் வெளியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். அந்தப் பதிவிற்கும், இன்னொரு பதிவிற்குமான எதிர்வினைதான் இந்தப் பதிவு.
(அந்தப் பதிவுகளில் வந்த கருத்துகள் சிகப்பு நிறத்தில் உள்ளன.)
//பதிவுலகில் கொஞ்ச நாள் தணிந்திருந்த மதவெறியை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வழக்கமான கும்பல் மீண்டும் துவக்கிவிட்டது. //
நாம் இஸ்லாம் பற்றி பதிவிட்டு 10 நாட்களுக்கு மேலாகிவிட்டன. திடீரென்று அய்யூப் என்று ஒருவர், "அந்த வெறி பிடித்த ஓநாய், என்ன எழுதியது என்று எனக்கு தெரியாது ", என்று கூறி உங்களுடைய பழைய பதிவொன்றில் பின்னூட்டமிட்டிருந்தார். நாங்கள் அதற்கு பதில் கூறி, இஸ்லாத்தில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டினோம். ஒன்றரை மாதங்களுக்கு பிறகு திடீரென்று ஞானம் வந்து இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மதவெறியர்களா? இஸ்லாத்தில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டிய நாங்கள் மதவெறியர்களா?
// அவர்கள் நாத்தீகவாதிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எழுதும் பதிவுகளில் எல்லா மத கடவுள்களும் குறிப்பாக அதிகஅதிகமாக அவர்களின் பிறப்பு மதம் சார்ந்த கடவுள்கள் தாக்கப்பட்டிருக்க வேண்டும். //
இங்கே அனைத்து மதங்களின் கடவுள்களும், அவர்தம் கோட்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன. மேலும், என்னுடைய பிறப்பு மதம் என்னவென்பது இஸ்லாமிய பதிவர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம். நான் என் பிறப்பு மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளையே இட்டுள்ளேன்.
//ஆனால் முழுக்க முழுக்க தாக்கப்படுவது இஸ்லாமும், இஸ்லாமிய கடவுளும், இஸ்லாமிய தூதரும் மட்டும் தான். //
எங்கள் தளத்தையும், அதில் இருக்கும் அனைத்துப் பதிவுகளையும் நன்றாக பாருங்கள். எல்லா மதங்களும் விமர்சிக்கப்பட்டுள்ளன.
//ஆக நாத்தீகன் என்பது ஒரு பச்சை வேசம் என தெரிந்து விட்டது. இவர்கள் உண்மையான ஹிந்துக்களும் கிடையாது. //
இங்கு யாரும் ஹிந்துக்கள் கிடையாது. எங்கள் நால்வருக்குமே பிறப்பு மதங்கள் வெவ்வேறானவை.
//மாலேகான் பெண் சாமியார் பிரக்யா சிங் போன்றவர்கள் பெரிய அளவில் செய்யும் வேலைகளை இவர்கள் இங்கே சிறிய அளவில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.//
அதிராம்பட்டிணத்தாரைப் பற்றி 'ஆட்டைக் கழுதையாக்கிய கதை' கூறும். UFO என்னும் பெயரில் பின்னூட்டமிடுவரின் ஊர் தெரியும். நீங்களும், அதிரைக்காரர்தானா? ஏதேனும் கற்பனை கதை ஒன்றைக் கூறி, மீண்டும் மீண்டும் அதை சொல்லி, உண்மைப் போன்று தோன்ற செய்யும் முயற்சி நன்றாகத் தெரிகின்றது.
//சம்பந்தப்பட்ட பதிவுகளில் எழுதுபவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் போது இவர்களை பெரிய அறிஞர்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களைப் போன்ற முட்டாள்கள் இந்த உலகத்திலேயே இல்லை. அனைத்துமே அறைகுறைகள் தான். //
குர் ஆனிலிருந்து நாம் முன்வைத்த வாதங்கள் எதற்கும் பதிலில்லை. உங்கள் தரப்பிலிருந்து யாரேனும் ஒரு அறிஞர் வந்து எங்கள் விளக்கங்கள் தவறு என்று நிரூபிக்கட்டுமே. குர் ஆன் சம்பந்தமாக நாம் பேசியதை மறுத்துக் கூற இதுவரை யாரும் வரவில்லை.
//நான் குரானைப் படித்துவிட்டேன், பைபிளைப் படித்துவிட்டேன், கீதையை படித்துவிட்டேன் என சும்மா சொல்வார்கள். ஆனால் இவர்கள் குரானையும் பார்த்திருக்க மாட்டார்கள், பைபிளையும் பார்த்திருக்க மாட்டார்கள்.//
உங்கள் தரப்பு ஆட்கள்தான் குர் ஆனில் ஒரு வசனத்தைக் கூட படிக்காமல், குர் ஆனில் தவறுகளே இல்லை என்னும் ரீதியில் பேசிக்கொண்டிருப்பார்கள். அய்யூப் சவால் விட்டு கேட்டார். நாம் வசனங்களை அளித்துவிட்டோம். அடைப்புக்குறிகளை தேடிக்கொண்டிருக்கின்றார்.
//கொலை செய்பவனை விட அதைத் தூண்டுபவனுக்குத் தான் தண்டனை அதிகம் என இந்திய சட்டம் சொல்கிறது. அந்த தூண்டும் வகையைச் சார்ந்த சிலரின் எழுத்துக்களுக்கு பதில் சொல்கிறேன் என நினைத்து அந்த சதியிலே நம் சகோதரர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்.//
இங்கு நாம் என்ன சதி செய்துவிட்டோம்? இஸ்லாம் குற்றம் குறைகள் அற்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவற்றில் இருக்கும் ஓட்டைகளை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ளுங்கள். அதை விடுத்து வேறு ஏதேதோ உளறிக்கொண்டிருக்காதீர்கள்.
//டாக்டர் அப்துல்லாஹ்: அவரின் பத்து வருட ஆராய்ச்சியின் முடிவு அவரை இஸ்லாத்தின் பால் இணைத்து விட்டது.//
இஸ்லாத்திற்கு முன்னர் அவர், பௌத்த மதத்தில் இருந்தாரே! அதை மறைத்துவிட்டீரே! அதற்கு முன்னர் எண் கணிதத்திற்கு சொம்பு தூக்கினாரே! அதை மறைத்துவிட்டீரே! எண் கணிதத்திற்கு சொம்பு தூக்கியபோதே தெரியவில்லையா, காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று? நீங்களே அவருடைய ரேட்டையும் போட்டுவிட்டீர்கள். நன்றி.!
//அவர்களைப் போன்ற பேச்சாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் எல்லாவற்றையும் முழுமையாக படித்து குரானிலே தவறு இருக்கிறது, ஹதீஸ் இப்படி கூறுகிறது.....என எழுதினாலோ அல்லது பேசினாலோ அவர்களைப் போன்ற அறிவாளிகளிடத்திலே உங்களின் வாதங்களைப் புரியுங்கள்//
வினவு தளத்தில் அவரோடு பேச முயற்சித்ததைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்களே. பார்க்கவில்லையா? யாரோடும் பேச விடாமல், யாரையும் சந்திக்க விடாமல், கூண்டுக்குள் வைத்துக்கொண்டு அவரது பேரை வைத்து வியாபாரம் செய்கின்றீர்.
//மூன்று பேர்களிடம் வாதம் செய்யமுடியாது. 1) அரசன் 2) அடிமுட்டாள் 3) பைத்தியக்காரன். நீங்கள் வேலை மெனக்கெட்டு வாதம் செய்பவர்களில் யாருமே அரசன் இல்லை. அப்படியானால் என்ன வகை என்று தெரிந்துமா அவர்களிடம் உங்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?//
ஜமுக்காளத்துல வடிகட்டுன ஆசாமி சொல்லுறாருப்பா நம்மள பத்தி.
//இறைவனின் ஏகத்துவ ஒளியை தங்களின் வாய்களால் ஊதி அணைக்க நினைக்கிறார்களா என இவர்களைப் பற்றிய வசனம் ஏற்கனவே இருக்கிறது.//
முக்காலமும் தெரிந்த அல்லாஹ்வுக்கு நோர்வேயைப் பத்தி தெரியலையான்னு கேட்ட கேள்வி அப்படியே இருக்கு. பதிலில்லை. ஆனாலும், நம்மளைப் பத்தியும் குர் ஆன்ல சொல்லி இருக்காம். இருக்கட்டும். இருக்கட்டும்.
// அந்த உலகலாவிய வளர்ச்சியை ஒரு கீ போர்ட்டில் டைப் செய்து தடுத்துவிடப்போகிறார்களா இவர்கள்?//
உலகளாவிய வளர்ச்சி இருக்குறப்ப, என்னமோ நாளைக்கி இஸ்லாம் அழியப்போற மாதிரி உங்க ஆளுங்க வரிஞ்சிக்கட்டிக்கிட்டு நிக்கிறாங்களே. ஏன்?
//"தி ஹன்ட்ரட்" (உலகின் 100 சிறந்த மனிதர்கள்) என்ற நூலை எழுதிய ஒரு கிருத்தவ எழுத்தாளர் அதிலே முதலிடத்தில் முகமது நபியை வைத்து விட்டு //
ரொம்ப நாளா, அந்த நூலை பற்றி ஒரு பதிவு போடணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன். நினைவூட்டியதற்கு நன்றி!
//இவர்கள் நேரடியாக இறைவனிடம் போர் புரியத்துடிக்கிறார்கள். அவர்களுடன் அவனே போர் செய்யட்டும். அதனால் தயவுசெய்து இஸ்லாமிய நண்பர்கள் அவர்களுடன் வாததில் ஈடுபடவேண்டாம் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். //
எப்ப வருவாரு? ஆவலா காத்துக்கிட்டு இருக்கோம்.
//அது பொதுகழிப்பிடம். அங்கே இருப்பவர்கள் அந்த வாசனையில் சோறு சாப்பிடக்கூடிய்வர்கள். அவர்களிடம் நீங்கள் வாதத்திற்கு போனால் அவர்கள் அங்கே கிடப்பதை எடுத்துத் தான் உங்கள் மீது வீசுவார்கள். அப்போது அந்த வாடை உங்கள் மீதும் வீசும். //
எங்களுடைய முந்தைய பதிவொன்றில் கழிந்துவிட்டு சென்றது யார் என்பது எல்லோருக்கும் தெரியட்டும் என்றுதான் அவற்றை அப்படியே விட்டுவைத்திருக்கிறோம்.
//அவர்கள் உங்களின் மீது ஏற்றிவிடும் வெறியை நீங்கள் தணித்துக்கொள்ள தேடுவது அவர்களின் தாய், சகோதரி, மனைவியை. //
கழிந்ததை இங்கே ஒத்துக்கொள்கின்றீர். உங்களுடைய மதவெறி அப்படி நடக்க வைக்கின்றது. ஆனால், எங்களை மதவெறியர்கள் என்று கூறுகின்றீர்கள்.
//நாளையே அவர்களை உங்களை விட சிறந்த சமுதாயமாக இறைவன் மாற்றிவிடுவான்//
சமுதாயம் என்னும் வார்த்தையை, இஸ்லாம் என்னும் அர்த்தத்தில் நீங்கள் பயன்படுத்தியிருந்தால், இது கனவு எண் 1 . உங்கள் கனவைப் பற்றி பதிவின் கடைசியில் கூறுகின்றேன்.
//இந்திய-தமிழக அரசுக்கும்... சி.பி.ஐ., ரா போன்ற உளவுத்துறைக்கும் ஒரு அன்பான அவசர வேண்டுகோள்... //
எப்பொழுதும் அல்லாஹ்விடம்தானே, துஆ கேட்பீர்கள். இப்பொழுது என்ன அரசாங்கத்திடம் கோரிக்கை? ஓ! அல்லாஹ் என்ற ஒன்று இல்லைஎன்று நீங்களும் தெரிந்து கொண்டீர்களோ!
//இந்த பயங்கரவாதிகளை தயவு செய்து கண்காணியுங்கள்... இவர்களின் பின்னணியில் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளையும், வெடி குண்டு வியாபாரிகளையும் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.... //
எப்பொழுதுமே பதில் சொல்ல இயலாவிட்டால், வேறு ஏதாவது சொல்லித் திட்டுவீர். இப்பொழுது மிரட்டலா?
--------------*********************--------------
நிஜாமின் பதிவுக்கு பதில் எழுதி வைத்துவிட்டு, இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, நம்ம டோண்டு அவர்களின் பதிவு ஒன்றை பார்த்தேன். அவரும் தனது கனவொன்றை அங்கே வெளியிட்டிருந்தார். அவரது பதிவில் பலவற்றிற்கும் பதில் சொல்லவேண்டியிருந்தாலும், அவரது கனவை மட்டும் பார்ப்போம்.
(டோண்டுவின் கருத்துகள் சிகப்பு நிறத்தில் உள்ளன)
//வால்பையன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் ஒரு ஹிந்துதான். இம்மதத்தில்தான் நாத்திகர்களும் இருக்கவியலும். சார்வாக மகரிஷி, ஜாபாலி ஆகியோர் பேசியதை/எழுதியதைக் கருதும்போது வால்பையன் ஜுஜூபி.
இதே மாதிரி பேசிய கண்ணதாசன் பிறகு இரட்டிப்பு வேகத்தோடு கண்ணன் காட்டிய வழியினுள் வந்தார், அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். அதே போல வால்பையனுக்கும் பிராப்தம் இருந்தால் அப்படியே நடக்கட்டுமே, என்ன போச்சு”?//
இது டோண்டுவின் கனவு. நாத்திகர்கள் இந்து மதத்தைத் தழுவுவார்கள் என்று டோண்டு கனவு காண்கின்றார். நாத்திகர்கள் இஸ்லாத்தைத் தழுவுவார்கள் என்று நிஜாம் கனவு காண்கின்றார்.
கனவு காணும் வாழ்க்கை யாவும்....
30 comments:
தும் ததா!
//"நிஜாமும், டோண்டுவும், சில கனவுகளும்"//
சக்க டைட்டில்!
//அந்தப் பதிவில் பின்னூட்டங்களையும் வெளியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். //
அப்பறம் எதுக்கு பதிவிடணும்னு எனக்கு புரியல!
ரமலான் மாசத்துல பயணம் செஞ்சிக்கிட்டு இருக்காங்களாம். எதுல பயணம் செய்யுறாங்கன்னு கேட்கக்கூடாது. ஒரு வேளை, புராக் மேல ஏறி பயணம் செய்யுறாங்களோ என்னமோ!
//அப்பறம் எதுக்கு பதிவிடணும்னு எனக்கு புரியல!//
நான் சொல்லுறத சொல்லிர்றேன். ஆனா நீ சொல்லுறத கேட்க மாட்டேன்னு சொல்லுவாங்கல்ல. அந்த பாணிதான்
//பதிவுலகில் கொஞ்ச நாள் தணிந்திருந்த மதவெறியை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வழக்கமான கும்பல் மீண்டும் துவக்கிவிட்டது. //
மதவெறியை என்ற சொல்லுக்கு அடுத்து “செருப்பாலடிக்க” என்ற வார்த்தை மிஸ் ஆகிவிட்டது! தோழர் நிஜாம் சரி செய்துகொள்வாரா?
//புராக் மேல ஏறி பயணம் செய்யுறாங்களோ என்னமோ!//
புராக்னா என்ன பான் பராக் மாதிரியா!
//புராக்னா என்ன பான் பராக் மாதிரியா!//
ஐயோ என்ன தல இப்படி அப்பாவியா இருக்கீங்க. அது ஒரு மிருகம் தல. பறக்கவும் செய்யும். விண்வெளி பயனம்லாம் அதுல போயிருக்காங்க.
இப்ப இருக்குற விஞ்ஞானிகள் தேவையில்லாம ராக்கெட் பத்தி ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு, அதுல ஏறி விண்வெளிக்கு போகலாம். ஆனா, அவங்களுக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது.
//"அந்த வெறி பிடித்த ஓநாய், என்ன எழுதியது என்று எனக்கு தெரியாது "//
நாம் எழுதியது என்னவென்று தெரியாதாம். ஆனால், நாம் வெறி பிடித்த ஓநாயாம் .
கடவுளுக்கு சக்தி(த்து) இருந்தால் ஜூம்பா என்று இந்த பதிவுகளை படிக்கும் கம்பூட்டரை எல்லாம் க்ராபிக்ஸ் லேஸர் விட்டு அழித்து காட்டட்டுமே ?
இன்றைக்கு சரஸ்வதி பூஜை. பெங்களூர் மிரரில் காண்டம் விளம்பரம் பக்கத்தில் பார்த்தேன்.
எக்ஸூஸ்மீ ராஜன் மதவெறி என்றால் என்ன
தமிழ்மணத்துல சேர்த்துட்டேன். ஓட்டும் போட்டேன். மேலும் who voted அப்படீங்கறத ரெப்ரஷ் பண்ணிக்கிட்டே குந்தியிருக்கேன்
//தமிழ்மணத்துல சேர்த்துட்டேன். ஓட்டும் போட்டேன். மேலும் who voted அப்படீங்கறத ரெப்ரஷ் பண்ணிக்கிட்டே குந்தியிருக்கேன் //
பதிவு போட்டதுமே சேத்தேன். லிஸ்ட்ல வர்றதுக்கு ரொம்ப லேட்டாயிருச்சு.
http://onlyoneummah.blogspot.com/2010/08/5-dr.html டாக்டர் அப்துல்லா ஐந்து கோணங்களில் அனுகிய விதம். ஆறாவது கோணம் அமவுண்டு கோண்டம். அவிழ்ந்தது உங்கள் கோவணம்.
//கடவுளுக்கு சக்தி(த்து) இருந்தால் ஜூம்பா என்று இந்த பதிவுகளை படிக்கும் கம்பூட்டரை எல்லாம் க்ராபிக்ஸ் லேஸர் விட்டு அழித்து காட்டட்டுமே ?//
அவரு நம்ம கூட போர் புரிய தயாராயிக்கிட்டு இருக்காரு. அதனால, இதுக்கெல்லாம் நேரம் இருக்காது.
//செந்தழல் ரவி said...
இன்றைக்கு சரஸ்வதி பூஜை.
//
!!!
//எக்ஸூஸ்மீ ராஜன் மதவெறி என்றால் என்ன//
அது ஒரு பலான வியாதி தல! சொறிய சொறிய சொகமா இருக்கும் சொறிஞ்ச கடசில பாத்தா புண்ணா இருக்கும்!
//அவரு நம்ம கூட போர் புரிய தயாராயிக்கிட்டு இருக்காரு. அதனால, இதுக்கெல்லாம் நேரம் இருக்காது.//
விக்கிலீசுல புடிச்சு ஒட்டுட போறாங்க!
கும்மி,
நீங்க என்ன தான் எழுதுங்க, கீழ கொடுத்திருக்கிற மாதிரி, பின்னூட்டங்கள் மூலமா திசை திருப்புவாங்களே ஒழிய, அடிப்படையில் உள்ள முரன்பாடுகள ஒத்துக்க மாட்டாங்க, இது மதம் பிடித்த அனைவருக்கும் உரித்தான ஒரு சிறப்பம்சம்
சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!
http://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/
என்ன செய்ய
@மார்கண்டேயன்
நானும் அந்தப் பதிவை பார்த்தேன். அவர்கள் எப்பொழுதுமே திசைதிருப்பவே செய்வார்கள். நாம் அவர்கள் திசைதிருப்பும்போது சுட்டிக்காட்டி, நிறுத்திவிடுகின்றோம். அந்த எரிச்சல்தான் திட்டுகளாகவும், எச்சரிக்கையாகவும், வேண்டுகோளாகவும் மாறுகின்றது.
இன்று டோண்டு அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார், "எல்லாம் மாயை" என்னும் தலைப்பில். (நாம் பதிவிட்ட பின்பு). அதில் ஹாரிஸ் என்றொரு கதாபாத்திரம் வரும் கதை ஒன்றையும் சொல்லியுள்ளார். எனக்கென்னவோ, அந்த ஹாரிஸ் நூறு சதவிகிதம், டோண்டுவிற்கே பொருந்துவது போல் தோன்றுகின்றது. பொருத்திப் பார்க்க விரும்புபவர்கள், அவரது பதிவுகளை பார்த்து, பொருத்திப் பார்த்துக் கொள்ளவும்.
http://vijay76.wordpress.com/2010/08/20/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E/
இந்த அல்லேலூயா கோஸ்டி டோமர் பதிவை படிக்கவேண்டாம். எச்சரிக்கை.
மத வெறி மறப்போம், மயிரு வெறினு மறப்போம்.. அப்பிடினு சொல்லிட்டு ஒரு மதத்துக்கு சொம்பு அடிக்கிற இவனுக்கு ஏன் ஒரு பதிவு...
காதல் ஒரு நாயைக்கூட எதுகை மோனையுடன் குலைக்கசெய்துவிடும் என்று படித்திருக்கிறேன்.
இங்கே மதவெறி எல்லா நாய்களையும் ஒரே மாதிரி காட்டுத்தனமாக குலைக்க வைக்கிறது.இங்கே முஸ்லீம்,
ஹிந்து,கிறிஸ்துவம் என்றெல்லாம் பாகுபாடு ஏதுமில்லை.ஆளுக்கொரு வெப்சைட்.டெசிபல்களில்
ஏற்ற இறக்கம்.அவ்வளவுதான்.
(தாமதமாக பின்னூட்டம் இடுவதால் எனக்கு "முஸ்லீம் பெயர் தாங்கி வந்த rss வெறியன் என்ற பட்டம்
கிடைக்காமல் போகலாம்)
ஆனால் முகம்மது நபி (ஸல்) தொடர்பாக உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் உடன்பாடானதல்ல.
அது தொடர்பாக பதில் கூற எனக்கு போதிய அறிவும் கிடையாது.
<<< இங்கு யாரும் ஹிந்துக்கள் கிடையாது. எங்கள் நால்வருக்குமே பிறப்பு மதங்கள் வெவ்வேறானவை.>>>
புரியவில்லை.
@basheer
//புரியவில்லை. //
நம்மை இந்துக்கள் என்று குறித்திருந்தார்கள். இந்தத் தளத்தில் நாங்கள் நால்வர் (ராஜன், வால்பையன், செந்தழல் ரவி மற்றும் நான்) எழுதிவருகின்றோம். நாங்கள் நால்வருமே இறைமறுப்பாளர்கள். அதிலும் நால்வருமே பிறப்பாலும் இந்துக்கள் கிடையாது. நான் பிறப்பால் இஸ்லாமியன். ரவி, பிறப்பால் கிருத்துவர்.
அப்படியா? ஆனால் நான் பிறக்கும்போது வெறும் குழந்தையாகதான் பிறந்தேன்.எனக்கு அப்போது சுன்னத்
செய்யப்பட்டிருக்கவில்லை.தொட்டில் மாறியிருந்தால் என் மத அடையாளம் எதுவாகவும் இருந்திருக்கலாம்.
//ஆனால் நான் பிறக்கும்போது வெறும் குழந்தையாகதான் பிறந்தேன்.//
இங்கு மதம் என்பது பிறக்கும் குடும்பத்தைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றது. அந்த அர்த்தத்தில்தான் நாம் பிறப்பு மதம் என்னும் சொற்றொடரை உபயோகிக்கின்றோம்.
//தொட்டில் மாறியிருந்தால் என் மத அடையாளம் எதுவாகவும் இருந்திருக்கலாம்.//
மிகவும் உண்மையான, வலிமையான கருத்து. இது அறியாமல்தான் மதத்துக்காகவும், சாதிக்காகவும் பலரும் கொடி பிடிக்கின்றனர். (தொட்டில் மாறியிருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கில்லை. எங்கள் ஊரில் அப்பொழுது மருத்துவமனைகள் கிடையாது. வீட்டில்தான் பிரசவம்)
நன்றி!
அடிக்கடி பதிவிடுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
நீங்க இதுக்கெல்லாம் அஞ்சாம எழுதுங்க சார்.உண்மையா நாத்திகம் ஒன்ககிட்டதான் பாக்குறேன்(காருனநிதி போல டுபாகூர் அல்லாமல்)
Post a Comment