Thursday, June 24, 2010

கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு!

உடன் பிறப்பே....
நாம் அடித்த சரக்கினிலே பட்டையை போல் இனிதானது எங்கும் காணோம் என வால் பையனும்,
தண்ணியடி தமிழ்நாடு முழுவதும் கலங்கிட... என கும்மியும்,
சரக்கெந்தன் டவுசருக்கு நாடா என தோழர் பட்டாபட்டியும்,
போற்றிய சரக்குக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வையத்தோர் வழங்கும் வாழ்த்துக்களைக் குவித்திட கள்ளிறக்கப் போராடும் கோவையிலே விழா எடுக்கின்றோம்!
ஆம் சரக்குக்கு விழா! சரக்கடித்தவன் விழாமல் இருக்க விழா!
அந்த விழாதான் உடன்பிறப்பே கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு!
50 க்கும் மேற்பட்ட அயல்நாட்டு சரக்குகள் ; இந்தியத் திருனாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்த்தும் மதுவகைகள்; என வகை பிரித்திருக்கிறோம்!
ஆகவே,கள் பானையை மொய்க்கும் ஈ போல தென்னகம் நோக்கிப் படை எடுப்பீர் !

பட்டையை;
கள்ளை;
பிராந்தியை;
விஸ்கியை;
ஜின்னை;
ஒயினை;
ரம்மை;
என அத்துனையும் தென்னகத்துப் பலாக்கனியாம் டாஸ்மாக்கில் கண்டு மகிழ்வு பெற கை துடிக்கும் தோழர்களுக்கு கோப்பைகள் நிரப்பி வைத்து இருக்கிறோம்!
ஆயிரமாயிரம் குடிமகன்கள் வருவது மட்டுமின்றி அவர்களில் மப்பு மிக்கார் ; அதன் கிக்கு மிக்கார் எடுத்து விடும் கானங்களை கேட்டிடவும் அலப்பறைகளை பார்த்திடவும் அலைகடலென திரண்டிடு என் குடியினமே!

இது நாள் மட்டும் நாம் அடித்த சரக்கின் வலிமை கொண்டு பாரில் அடுத்த டேபிளை எட்டி உதைக்கும் வீரனாக, தலைக்கறி கேட்டால் சுண்டல் தரும் சப்ளையரை அல்லையில் மிதிக்கும் சூரனாக ஓசி சரக்கடிக்கும் வீணர்க்கும் கூன் நிமிர்த்தி டாஸ்மாக்கின் பச்சை போர்டினிலே நம் வரலாற்றை எழுதுதற்கு லுங்கி மடித்துக் கட்டி நிற்கின்றாய் நீ என்பதை நானறிவேன்!

வையத்துக் குடியினங்களில் அன்றும் இன்றும் இனி என்றும் நாமே முதல்வர்கள் எனும் கெத்தினை தூக்கி நிறுத்த வண்ணத் தமிழகத்து சேலைக் கிழி (சாரி) சோலைக்கிளிகளை அழைக்கிறேன் கோவைக்கு!

சங்கம் ஆரம்பிக்கிறோம்; கட்சி ஆரம்பிக்கிறோம் என பீலா விட்டு சண்டை போட்டுக் கொள்வார்களே அது போல ஒரு மொக்கை மீட்டிங்கிற்க்கு உனை நான் அழைக்கவில்லை!
அறிவார்ந்தோர் சபை அறிவீர் ஆனால் அவர்தம் உள்ளக்கிடைக்கை தன அறியும் ஒரு மப்புக் கோட்டை தான் கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு! அதற்கான அச்சாரமே இந்த அழைப்பு...

ஒரு உடன்பிறப்புக்கு இன்னோர் உடன் பிறப்பு எழுதும் மடல் மப்பில் மலர்ந்த மதன காவியமன்றோ? மப்பின் மிகுதியால் தான் நானே எழுந்து வர இயலாமல் பதிவிலிட்டு வைத்தேன்! சரக்கின் நினைப்புதந்த போதையிலே சப்புக் கொட்டியவாறு அங்கேயே உக்காந்து விடாதே என் உடன்பிறப்பே! அடுத்த பஸ்ஸில் துடிப்பாய் கிளம்பு!

இந்த கெடாக்கறி மொடாக்குடி மாநாடு உங்களையெல்லாம் கெடுப்பதறகாக என்று சில குரல்கள் ஒலிக்கின்றனவா? வாந்தி பேதி என்பார்களே அதன் சத்தம் தான் அது! அதை நீ நம்ப மாட்டாய் என நானறிவேன்! நீ என்ன கன்னிப் பெண்ணா கரும்புக் காட்டில் விட்டுக் கெடுப்பதற்கு! நாம் என்ன செய்தாலும் குடிகாரப் பயல்கள் குடித்து விட்டுக் கூத்தடிக்கிறார்கள் என சில புல்லுருவிகள் பூச்சாண்டி காட்டுவர்! இந்த அற்புதமான நேரத்திலே அந்த நாய்களை எண்ணாதே -

சரக்கை குடிக்க அல்ல தோழா சரக்கிலேயே குளிக்க உனை அழைக்கிறேன்! பறந்தோடி வா....

அன்புள்ள,

ஆல் இன் ஆல்


விழா நிரல்! காலை 10.00 மணி* ”40/- கட்டிங்!”
(* - கடை திறக்கும் நேரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)
விழாவின் ஆரம்பமாக அனைவருக்கும் 40 மிலி கட்டிங் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து அந்த கட்டிங்கை பல்லாயிரக் கணக்கானோர் ஒரு சேர “சியர்ஸ்” சொல்லி மடக்கென்று அடித்து துவக்கம் செய்யபட உள்ளது.

நண்பகல் 11.30 மணி ”மொரட்டு கட்டிங்”

பெருந்திரளான மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஜோடிகளாக பிரிக்கப்பட்டு ஜோடிக்கொரு குவார்ட்டர் வீதம் பகிர்ந்த்தளிக்கப்பட்டு (சைட் டிஷ் ,மிக்ஸிங்க் ஏதுமின்றி) ஆளுக்கொரு கட்டிங்காக ஏக் கல்ப்பில் மடக்கென்று அடிக்கச்செய்து பரஸ்பரம் மண்டைகளை மாற்றி மாற்றி மோந்து பார்க்கச் செய்து நவீன தமிழ் மரபுசார் குடி முறையான “ மொரட்டு கட்டிங் “ நிகழ்வு நடை பெற உள்ளது.

பி.ப 12.30. மணி “ கெடாக் கறி & மொடாக்குடி “

மாநாட்டின் சிறப்பு நிகழ்வான இதில் உலகத் தரம் வாய்ந்த கெடாக் கறிகளும்; வேண்டுவொர்க்கு வேண்டிய மட்டும் வேண்டிய பிராண்டு சரக்குகள் பாட்டில் பாட்டிலாக வினியோகம் செய்யப்பட உள்ளன. அது சமயம் சிறப்பு விருந்தினராக அருமை அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் கலந்த்து கொண்டு விழாவுக்குச் சிறப்பு சேர்க்க உள்ளார்கள்.மாநாட்டுத் திடலிலேயே மப்பேறினோர் மல்லாந்து விழ இட வசதி செய்யப் பெற்றுள்ளதோடு, தெளிந்தவுடன் வீட்டை தேடிக் கண்டு பிடிக்க வழிகாட்டும் பலகைகளும் அமைக்கப் பட்டுள்ளன.


மைய நோக்குப் பாடல்!


கெடாக் கெடாக் கறி அடுப்புல கேடக்குது மொடா மொடாக் கள்ள ஊத்து!
சாராயம் கருவாடு துண்டு பீடி வவ்வாலுகுடிச குப்பத் தொட்டி பக்கத்துல
டீக்கட
ஒரலு
ஒண்ணு அங்கிருக்கு ஒலக்க ஒண்ணு இங்கிருக்கு நெல்லு குத்தும் நேரம் எது சொல்லடி என் சித்திரமே!
பல்லு குத்த பவுசு இல்ல பாவம் நீயோ வெடலப் புள்ளநெல்லுக்குத்த எடங்கொடுத்தா மாட்டிக்குமே ஒலக்க உள்ள!
நாம்பூவெடுத்து வெக்கணும் பின்னால!அத வெக்கறப்போ சொக்கணும் தன்னால!
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பாகஞ்சி கலயந்தன்னை தலயில் தூக்கி வஞ்சி வருதப்பா
வவுத்துல
புள்ளயில்ல வாழ்க்கையில தொல்லையில்லவகைக்கொரு இன்பம் கண்டு செயிப்போம்
சக்களத்தி சண்டையில்ல தாலி கட்டும் வம்புமில்ல இப்படியே எல்லா நாளும் இருப்போம்!ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும்ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும்
ஜும்

கெடாக்
கெடாக் கறி அடுப்புல கெடக்குதுமொடா மொடாக் கள்ள ஊத்து!

39 comments:

வால்பையன் said...

//பல்லு குத்த பவுசு இல்ல பாவம் நீயோ வெடலப் புள்ளநெல்லுக்குத்த எடங்கொடுத்தா மாட்டிக்குமே ஒலக்க உள்ள!/

மொதவெட்டு போடலாம்னு வந்தா இங்கே செம வெட்டா இருக்கே!

ராஜன் said...

வக்காளி! ஒரு மாசமாச்சு தல! போஸ்ட் போட்டு.....

பட்டாபட்டி.. said...

இது சாதாரண நிலையில் இருந்து போட்ட போஸ்டே கிடையாது...

அடி வயிற்றில் இருந்து வரும் சரக்கு..உங்களை எழுத தூண்டியது என நினைக்கிறேன்..

ராஜன் said...

//அடி வயிற்றில் இருந்து வரும் சரக்கு..உங்களை எழுத தூண்டியது என நினைக்கிறேன்..
//


வயிற்றிலிருந்துமேல் நோக்கியா கீழ் நோக்கியா தல!

ராஜன் said...

//நெல்லுக்குத்த எடங்கொடுத்தா மாட்டிக்குமே ஒலக்க உள்ள!///


பட்டா பட்டி அவர்கள் தற்போது மேற்காண் சங்க பாடலில் உள்ள நயத்தை வால்பையனுக்கு விளக்குவார்கள்!

கே.ஆர்.பி.செந்தில் said...

அடடா என்ன ஒரு மாநாடு என்ன ஒரு சேவை ..
நம்மாளுக ( ஒன்லி குடி) அலைகடலென.. ஆர்பரித்து வாரீர் ..

வால்க தமில்.. வலர்க செம்மொலி ...

பட்டாபட்டி.. said...

பட்டா பட்டி அவர்கள் தற்போது மேற்காண் சங்க பாடலில் உள்ள நயத்தை வால்பையனுக்கு விளக்குவார்கள்!
//

ஆகா..இதுக்கு எனக்கு ரெமியும், மார்டீனும் கூட இருக்கனுமே..

கடைசிக்கு நெப்போலியன் இருந்தாகூட பரவாயில்ல...ஹி..ஹி

கும்மி said...

என்னத்த சொல்ல?

கும்மி said...

நம்ம மாநாட்டைப் பத்தி NDTV Hindu ல கலந்துரையாடல் நடக்குமா தல?

Phantom Mohan said...

வெளிநாட்டு வாழ் குடிமகனுக்கு மாநாட்டுக்கு அழைப்பு உண்டா?

Phantom Mohan said...

இதுவும் ஒரு குடும்ப விழாதான்! பாருங்க மேடையில ராஜன், பட்டா, கும்மி மட்டும் தான் இருக்காங்க, என்னைப்போன்ற கடைநிலை தொண்டனுக்கு இடம் இல்லை. வெக்ககேடு!

கும்மி said...

//இதுவும் ஒரு குடும்ப விழாதான்! பாருங்க மேடையில ராஜன், பட்டா, கும்மி மட்டும் தான் இருக்காங்க, என்னைப்போன்ற கடைநிலை தொண்டனுக்கு இடம் இல்லை. வெக்ககேடு!
//

இந்த விழாவே உன்னைபோன்ற கடைநிலை தொண்டனும் சரக்கடித்து மப்பாக வேண்டும் என்னும் உயரிய நோக்கோடு நடைபெறுவதுதானே என் உயிரினும் மேலான குடிபிறப்பே

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said...

இதுவும் ஒரு குடும்ப விழாதான்! பாருங்க மேடையில ராஜன், பட்டா, கும்மி மட்டும் தான் இருக்காங்க, என்னைப்போன்ற கடைநிலை தொண்டனுக்கு இடம் இல்லை. வெக்ககேடு!
//

யாரு சொன்னா.. மேடையில் உக்காந்து பாரு..அப்பத்தான் அதொட கஷ்டம் தெரியும்...

Phantom Mohan said...

இந்த விழாவே உன்னைபோன்ற கடைநிலை தொண்டனும் சரக்கடித்து மப்பாக வேண்டும் என்னும் உயரிய நோக்கோடு நடைபெறுவதுதானே என் உயிரினும் மேலான குடிபிறப்பே
/////////////////

வெறும் மப்புக்கு 400 கோடிக்கு மாநாடா??????????

ஏன் சார்!

கும்மி said...

//வெறும் மப்புக்கு 400 கோடிக்கு மாநாடா??????????

ஏன் சார்!
//

வெறும் மப்பு என்று அதை அவ்வளவு சாதாரணமாக எடைப் போட்டு விடாதே கண்மணி. அதை ஊற்றிக் கொடுத்துதான நாம் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றோம்

Phantom Mohan said...

யாரு சொன்னா.. மேடையில் உக்காந்து பாரு..அப்பத்தான் அதொட கஷ்டம் தெரியும்...
//////////////////////

இதிலென்னய்யா கஷ்டம், மேடைல உக்காந்தா 2 மனைவி, 4 துணைவி வச்சிக்கலாம், 6G, 8G ஏலம் எடுக்கலாம், ஏன் சித்தப்பாவோட நண்பரோட பங்காளி மக புள்ள பேரனுக்கு MP போஸ்ட் குடுக்கலாம், இது எல்லாத்தயம் விட டெய்லி டிவி ல, பேப்பர் ல வரலாம். இவ்ளோ சந்தோசம் இருக்கே?????????

Phantom Mohan said...

வெறும் மப்பு என்று அதை அவ்வளவு சாதாரணமாக எடைப் போட்டு விடாதே கண்மணி. அதை ஊற்றிக் கொடுத்துதான நாம் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றோம்
/////////////////////////////////////////

ஊத்தி மட்டும் தான் குடுப்பீங்களா???
எனக்கு இத்தாலில கொஞ்சம் பெறத் தெரியும், நல்லா யோசிச்சு சொல்லுங்க.

கும்மி said...

//எனக்கு இத்தாலில கொஞ்சம் பெறத் தெரியும், நல்லா யோசிச்சு சொல்லுங்க. //

இத நீங்க ஆரம்பத்துலையே சொல்லியிருந்தீங்கன்னா, நீங்க காலால் இட்ட பணியை நான் தலையால் செய்து முடித்திருப்பேனே! அப்படியே அடுத்த தடவை கழகத்தின் கோவை மண்டல தளபதி ஆதித்யாவிற்கும் (கனிமொழியின் மகன்) ஒரு மந்திரி பதவி கொடுத்துவிடுங்கள்.

செந்தழல் ரவி said...

kalakkalllllllll

பட்டாபட்டி.. said...

ஆதித்யாவிற்கும் (கனிமொழியின் மகன்) ஒரு மந்திரி பதவி கொடுத்துவிடுங்கள்.
//

நானும் வழிமொழிகிறேன்..ஹி..ஹி

( குழந்தைகள் சில நேரம் நல்ல முடிவுகள் எடுப்பார்கள்..ஹீ.ஹி..)

Phantom Mohan said...

அப்படியே அடுத்த தடவை கழகத்தின் கோவை மண்டல தளபதி ஆதித்யாவிற்கும் (கனிமொழியின் மகன்) ஒரு மந்திரி பதவி கொடுத்துவிடுங்கள்.
//////////////////////////

நீங்க மறந்திட்டீங்கன்னு நெனைக்கிறேன். இது குடும்பப் பிரச்சனை இறையாண்மைப் படி நீங்க டெல்லிக்கு உங்க குடும்பத்தோட வந்து கெஞ்சனும். நாட்டுப்பிரச்சனைக்கு மட்டும் தான் கடிதம் ஏற்றுக்"கொல்லப்படும்" .

ஹி ஹி... மறதி ஒரு தேசிய வியாதி!

Phantom Mohan said...

வழிமொழிந்த பட்டாவுக்கும் மேற்ச்சொன்னக் கருத்து பொருந்தும். சீக்கிரம் கீழவை அமைக்க டெல்லிக்குப் போகணும்ன்னு சொல்லி கிளம்பி வாங்க!

ப.செல்வக்குமார் said...

இந்த மாநாடு எங்க நடக்குது , எந்த தேதில நடக்குதுன்னு சொல்லவே இல்லையே ...

கும்மி said...

//இந்த மாநாடு எங்க நடக்குது , எந்த தேதில நடக்குதுன்னு சொல்லவே இல்லையே ... //

இந்த அறிவிப்புக்கு முன்னாடி வந்த டாஸ்மாக் சுற்றறிக்கையில், போதிய சரக்கைக் கையிருப்பாக வைத்துக்கொள்ள சொன்னதோடு தேதிகளையும் சொல்லியிருந்தோமே!

கும்மி said...

// இது குடும்பப் பிரச்சனை இறையாண்மைப் படி நீங்க டெல்லிக்கு உங்க குடும்பத்தோட வந்து கெஞ்சனும்//

போன தடவையே ஜூஜூ விளம்பரம்லாம் போட்டு கிண்டல் பண்ணுனாங்க. இந்தத் தடவை அது மாதிரியெல்லாம் வராம இருக்க, ஏதாவது பாத்து பண்ணுங்க

Jey said...

//கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு! அதற்கான அச்சாரமே இந்த அழைப்பு.../

நீ மனுஷன் தல, நதாரி நாய்ங்களுக்கு எப்பொ எந்த நேரத்துல என்ன மாநாடு நடத்தனுனு தெரியல. தக்களி என் சொந்த செலவுல டிக்கீல சில்வெர்+கோல்டு சைடிஸ்க்கு, உப்பு,பிரவுன் சக்கரை, லெமென், ஆரஞ்சு, திங்க சிக்கன் மாட்டனுனு பார்சலோட வர்றேன் தல.( பட்டா,பருப்பு, முத்து,மங்குனி,பன்னி, ரமேஷ் மற்றும் தானைத்தலைவன் வால் ஆகியோறது சரக்கு மற்றும் சைடிஷ் செலவுகளை நானே ஏத்துக்கொள்கிறேன் என்பதை இந்த தருணத்த்தில் சொல்லிக்கிறேன்)

Phantom Mohan said...

Jey said...

//கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு! அதற்கான அச்சாரமே இந்த அழைப்பு.../

நீ மனுஷன் தல, நதாரி நாய்ங்களுக்கு எப்பொ எந்த நேரத்துல என்ன மாநாடு நடத்தனுனு தெரியல. தக்களி என் சொந்த செலவுல டிக்கீல சில்வெர்+கோல்டு சைடிஸ்க்கு, உப்பு,பிரவுன் சக்கரை, லெமென், ஆரஞ்சு, திங்க சிக்கன் மாட்டனுனு பார்சலோட வர்றேன் தல.( பட்டா,பருப்பு, முத்து,மங்குனி,பன்னி, ரமேஷ் மற்றும் தானைத்தலைவன் வால் ஆகியோறது சரக்கு மற்றும் சைடிஷ் செலவுகளை நானே ஏத்துக்கொள்கிறேன் என்பதை இந்த தருணத்த்தில் சொல்லிக்கிறேன்)
////////////////////

நீ ரொம்ப நல்லவன்யா!

உன் சேவையை பாராட்டி மாநில அரசின் "மொடக்குடி கலைஞர் இளிச்சவாயன்" விருதை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.

Phantom Mohan said...

பட்டம் பேரு நாறிப்போச்சு,

அது மொடக்குடி கலைஞர் மற்றும் அரசாங்க இளிச்சவாயன்!

Jey said...

//நீ ரொம்ப நல்லவன்யா!

உன் சேவையை பாராட்டி மாநில அரசின் "மொடக்குடி கலைஞர் இளிச்சவாயன்" விருதை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.//

ஏம்பா, இவ்வளவு செலவு செரேனு சொல்லிருக்கேன், இந்த வள்ளல் வள்ளல்னு சொல்ல்ராய்ங்களே அந்த பட்டத்த கொடுக்க கூடாதாப்பா?!!!
( தக்காளி எல்லாரும் நம்மல இளிச்சாவாயானு எப்படியோ கண்டுக்கிராங்கப்பா)

Jey said...

ப.செல்வக்குமார் said...
இந்த மாநாடு எங்க நடக்குது , எந்த தேதில நடக்குதுன்னு சொல்லவே இல்லையே ...//


இந்த புள்ளய கொஞ்சம் கவனிங்கபா,பாவம் பச்ச மண்ணா தெரியுது.

reena said...

Maiya nokku paadal super...

பட்டாபட்டி.. said...

தல.. ஊறுகாய்ல பல்லி விழுந்திருச்சு..
அதுக்கும் மக்கள் அட்ஜஸ்ட் பன்ணிக்குவாங்களா?...

வெறும்பய said...

கலக்கல் பதிவு ...

ஷங்கர் said...

////வக்காளி! ஒரு மாசமாச்சு தல! போஸ்ட் போட்டு///

யோவ் இத தான்யா போன பதிவுல ''' தேதி என்ன என்ன கேட்டேன்''' ,
அடுத்த பதிவுல வந்து பதில் சொல்றே அதுவும் என்னக்கு இல்ல .....,

Thangaraj said...

சாங் ரொம்ப கிக்கா இருக்கு தல

Jey said...

தல, என் கடைல வந்து ஒரு பெக் அடிச்சிட்டு, கோழிக்குஞ்சு பொரிச்சி வச்சிருக்கேன் அதையும் சாப்டிட்டு டேஸ்ட் எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க. ( தட்டுரதா இருந்தா வலிக்காம தட்டுங்க, ஏன்னா நான் புதுசு பாருங்க.)

ரவுடி said...

கெட கறி மொட குடி மாநாடு நடத்துறது இருக்கட்டும், இங்க போய் பாரு உன்னோட பங்காளி குத்தாட்டம் போடா போறாராம்.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/june/230610.asp

கும்மி said...

// இங்க போய் பாரு உன்னோட பங்காளி குத்தாட்டம் போடா போறாராம்.//

குத்தாட்டம் மட்டுமில்ல 'ஜட்டி' சாமியாருக்கு சாரி 'ஜக்கி' சாமியாருக்கு நூல் விடவும் ஆரம்பிச்சிட்டாரு. நம்ம அடுத்த ரவுண்டு ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

rk guru said...

pathivu super pangali...