ஆபிரஹாம மதத்தின் (அண்டர்) வேரே அதன் வேத புத்தகம் தான்! ஆபிரஹாம மதத்தின் வழி தோன்றலாக யூதர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என பல பிரிவுகளாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வேத புத்தகம் இல்லாமல் ஒன்றும் பண்ணமுடியாது!, வந்தவன் போனவனெல்லாம் வாய்க்கு வந்ததை ஏற்படுத்திக் கொண்டபடியால் அதில் பழசு புதுசு என இரண்டு ஏற்பாடுகள்! உருவவழிபாட்டை கிண்டல் செய்யும் ஆபிரஹாம மதத்தினர் வேதபுத்தகத்தை மட்டும் மண்டையில் வைத்து ஆடுவீர்களா என்றால் ”அப்பாலே போ சாத்தானே” என்பார்கள்! இவர்கள் மட்டும் பேப்பருக்கு இம்புட்டு மரியாதை கொடுப்பார்களாம், மற்றவர்கள் கொடுத்தால் அவர்கள் காஃபீர்களாம்!, இருக்கட்டும், நாம் எல்லா மதத்தையும் கடவுள்களையும் எதிர்ப்பதால் அவர்களை இம்மதத்தினர் என்று குற்றம் சாட்டாமல் அவர்களது வேதத்தையே கேள்விக்கு உள்ளாக்குவோம்!
ஆபிரஹாம மதத்தின் மூலம் பழைய ஏற்பாடு, உள்ளது சிறத்தல் என்னும் பரிணாம பாணியில் 3000 வருடங்களுக்கு முன் தோன்றிய ஆபிரஹாம மதத்தின் வேதங்கள் கடைசியாக வந்த இஸ்லாம் மத்ததில் அப்போதிருந்த கால கட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் கண்டது! அதிலும் ஆயிரதெட்டு நொட்டைகள், இருந்தாலும் தற்பொழுது பழைய ஏற்பாட்டில் இருந்து ஆரம்பிப்பதே உத்தமம், காரணம் எல்லா ஆபிரஹாம மதமும், ஆதியில் தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார், ஆறாம் நாள்(!?) மனிதனை படைத்தார் என்ற படைப்புவாத கொள்கையை தான் நம்புகிறது!, ஆக, ஆதியில் இருந்து கிழித்து வந்தால் தான் டவுசர் மீண்டும் தைக்க முடியாமல் கிழியும்!
*******************
முதல் பஞ்ச்சே ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்பது தான்!, ஆதி என்றால் எது?(விஜய் படமா?) அதற்கு முன் தேவனே இல்லையா அல்லது காலம் இல்லையா!? ஆதியில் தேவன் படைக்கும் முன்னர் என்ன பண்ணிகிட்டு இருந்தார்?(கோரஸா யாருப்பா செரச்சுக்கிட்டு இருந்தார்னு சொல்றது?) , எல்லாவற்றிற்கும் காரணம் சொன்ன வேதம் அதற்கு முன் தேவன் என்ன செய்தார் என்று ஏன் சொல்லவில்லை!, மேலும் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்றால் பூமி மட்டுமே இருந்தது என்று தானே அர்த்தம், வானம் என்று எதனை குறிப்பிடுகிறது வேதம்? வானம் என்ற வெற்றிடம் படைக்கபட்டது என்றால் அதற்கு முன் என்ன இருந்தது!?
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
இது மூன்றாம் வசனம், வெளிச்சம் உண்டாயிற்று என்றால் சூரியனை சொல்கிறது என்று நினைக்கிறேன்! அப்போ அதுக்கு கடவுள் பேரு வைக்கல போல!, ஐந்தாம் வசனத்தில் வெளிச்சத்திற்கு பகல் என்று பெயரிடுகிறார்! அப்பக்கூட சூரியன் என்று பெயரிடவில்லை! வேதத்தின் கூற்றுபடி தூங்காநகரம் எல்லாம் பகல் என்று தான் இரவையும் குறிப்பிட வேண்டும் போல, சரி துருவ பகதிகளில் வெப்பமில்லாமல் வெளிச்சம் மட்டும் இருக்குமே, அங்கே இரவு பொழுது மிக குறைவானதாயிற்றே, ஏன் துருவம் வரைக்கும் நார்வே தெரியுமா, அங்கே பகல் பொழுது எவ்வளவு நேரம் தெரியுமா!? அதையெல்லாம் யார் படைத்தது?
7. தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
இது ஏழாவது வசனம், இங்கே வேதம் சொல்லவருவது வானத்திலிருந்து வரும் மழையை, அப்போதெல்லாம் நீர் ஆவியாகுதல் பற்றி தெரியாது, ஆனால் பரிசுத்த ஆவி மட்டும் தெரியும்!, ஆதியிலேயே வானத்தில் நீர் இருந்தது போலவும், அவை தேவைகேற்ப அப்பப்ப மழையாக பொழிவது போலவும் அன்றிருக்கும் அறிவுக்கு ஏற்ப அந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது! சரி அன்னைக்கு தான் புத்தியில்ல, இன்று வரைக்குமா அறுந்த டவுசரையே இழுத்து புடிச்சுட்டு திரியறது!
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
உலகமகா முரணான வசனம், முதல் அதிகாரம் 16 ஆம் வசனத்திலேயே வந்துவிட்டது!
வெளிச்சம் ஏற்கனவே இருக்கு என்றும், அதனை ஆள சூரியன் படைக்கப்பட்டது என்றும் இந்த வசனம் சொல்கிறது!, அதாவது வெளிச்சத்திற்கும் சூரியனுக்கும் சம்பந்தமில்லை, அது சும்மா வேடிக்கை பார்க்கவே படைக்கப்பட்டது, அதே போல் சந்திரனும் ”உல்லுல்லாயிக்கி” படைக்கப்பட்டது! அதாவது அது சின்ன சுடர், அதன் ஒளி இயற்கையிலேயே அதில் உண்டு!, அதே கேள்வி தான் இங்கும்!, அன்னைக்கு தான் புத்தியில்ல, இன்று வரைக்குமா அறுந்த டவுசரையே இழுத்து புடிச்சுட்டு திரியறது!
20 திலிருந்து 25 வரை வேதம் படைப்புவாத கொள்கையை பறைசாற்றுகிறது, அதை என்னுடய பரிணாமம் பதிவில் விளக்கி கொண்டிருப்பதால் அடுத்த கேலிகூத்துக்கு போவோம்!
*****
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.
இது மூன்றாம் அதிகாரம் முதல் வசனம்! தன்னால் உருவாக்கப்பட்டவைகளிலேயே தன் சாயலிலேயே மனிதனை உருவாக்கினார் என்ற வசனம் இருக்கிறது, இதன் மூலம் கடவுள் மனித சாயலில் இருப்பார் என்பது நிரூபணமாகிறது!, அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மனிதனை விட சர்ப்பம் தந்திரம் வாய்ந்ததாக இருந்தது என்பது மிகப்பெரிய முரண்பாடு, அதாவது கடவுளுக்கே கடுக்கா கொடுக்கும் உயிர் அப்போது இருந்தது என்கிறது இந்த வசனம்! இதை எப்படி நம்ப முடிகிறது இன்றும், அன்னைக்கு தான் புத்தியில்ல, இன்று வரைக்குமா அறுந்த டவுசரையே இழுத்து புடிச்சுட்டு திரியறது!
14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
நன்றாக கவனியுங்கள் இந்த வசனத்தை, சபிக்கபட்ட பின்னே அது வயிற்றினால் நகர்கிறது, அப்படியானால் அதற்கு முன் கால் இருந்தது, சரி மண்னை தின்பாய் என்றால் என்ன அர்த்தம் பாம்பு இபொழுது என்ன மண்ணையா தின்கிறது!, என் நண்பன் ஒருவன் சொல்லுவான், அப்பொழுது சர்ப்பம் என்று குறிப்பிட பட்டது குரங்காம், அதனால் தான் மனிதனுக்கு அடுத்த வளர்ச்சியில் அது இருக்காம்!, பிறகு ஏண்டா அது காலில் நடக்கிறது என்றால் இளிப்பான்!
********************
பெருசா போச்சு!, இன்னும் நிறைய கிழிக்க வேண்டிருக்கும்படியால் இது தொடராக வரும்!, பின்னால் இவை மட்டுமில்லாமல் அனைத்து வேதங்களும் டவுசரவுக்கப் படும்!

77 comments:
கெடா வெட்டலாம் வாங்க!
//ஆபிரஹாம மதத்தின் (அண்டர்) வேரே அதன் வேத புத்தகம் தான்! //
அதானே ! அத்த அவுத்தா எல்லாம் சரியா பூடும்!
//அதில் பழசு புதுசு என இரண்டு ஏற்பாடுகள்! //
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போல தல
//”அப்பாலே போ சாத்தானே” //
தக்காளி ! இப்பிடி ஒரு பாட்டே பாடிட்டு இருப்பானுக தல !
//ஆதியில் இருந்து கிழித்து வந்தால் தான்//
இதயெல்லாம் ஆதில இருந்து கிழிச்சா பத்தாது தல ...... ( அட சொல்ல விடுங்கப்பா ...... வாயப் பொத்தாதீங்க பிளீஸ்)
நமது தளம் அமீரகத்தில் தடை செய்யபட்டுள்ளதாக அறிந்தேன்!, பதில் சொல்ல திராணியற்ற மடவாதிகள் ஸாரி மதவாதிகளின் வேலையாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
யார் தடுத்தாலும் நமது டவுசர் கிழிப்பு வேலை நடந்து கொண்டே தான் இருக்கும்!
//நமது தளம் அமீரகத்தில் தடை செய்யபட்டுள்ளதாக அறிந்தேன்!//
அம்புட்டு பயமா! ஹா ஹா ஹா
:-)
waiting for the next...
ஏன் அவுங்க fant போடலியா ...?? இன்னுமா டவுசர் போட்டுட்டிருக்காங்க.??
//அதற்கு முன் தேவன் என்ன செய்தார் என்று ஏன் சொல்லவில்லை!, //
அதெல்லாம் சென்சார் பண்ணிட்டாங்கப்பா!
/////நமது தளம் அமீரகத்தில் தடை செய்யபட்டுள்ளதாக அறிந்தேன்!/////
வீனாப்போனவிங்க தல.
அப்போ அமீரகத்து Ministry of Communicationல தமிழனும் இருக்கான் தல!!!
* ரெண்டு பேர் மற்றும் சில மிருகங்களுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய உலகம். ஒரு டபுள் பெட்ரூம் flat போதாதா?
* கடவுள் ஒரே ஒரு ஆள் இவ்ளோ விஷயம் பண்ணாரா? அவருக்கு டீம் மெம்பெர்ஸ் யாருமே இல்லையா?
* அவர் இதே போல் ஒரே ஒரு உலகம் / அண்டவெளி / சூரியகுடும்பம் மட்டும் தான் படைத்தார? வேற எங்கயும் நமக்கு தெரியாம வச்சிருக்காரா?
* அப்டியே நெறிய உலகம் படைச்சு நம்ம சர்வீஸ் புடிக்காம நம்மள டீல்ல விட்டுட்டு வேற உலகத்தில செட்டில் ஆயிட்டாரோ?
பழைய ஏற்பாட்டை மேலும் கீழும் படித்தவன் என்ற முறையில் ஒரு மேட்டரை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..!!
தனிப்பதிவாக போட்டு கெடா வெட்டலாம் என்று நினைக்கிறேன்...
உங்களுக்கு எப்படி வசதி ? இல்லை இங்கிட்டே வச்சிக்கலாமா ? அல்லது பார்ட் டூ நான் போடவா ?
Hi eroarun,
Congrats!
Your story titled '"சிலுவைக் கதையின் சில்மிஷங்கள்! - 1"' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th May 2010 08:50:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/261379
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி ஓட்டளித்த நண்பர்களுக்கு!
நமது தளம் அமீரகத்தில் தடை செய்யபட்டுள்ளதாக அறிந்தேன்!, பதில் சொல்ல திராணியற்ற மடவாதிகள் ஸாரி மதவாதிகளின் வேலையாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
யார் தடுத்தாலும் நமது டவுசர் கிழிப்பு வேலை நடந்து கொண்டே தான் இருக்கும்!
May 26, 2010 1:55 PM
வால்ஸ் என்னாதுப்பா இது. இந்த மேட்டரை போடுறீங்கன்னு முன்னாலியே சொல்லியிருந்தீங்கன்னா உட்டிருப்பாங்களே ?
//
உங்களுக்கு எப்படி வசதி ? இல்லை இங்கிட்டே வச்சிக்கலாமா ? அல்லது பார்ட் டூ நான் போடவா ?//
நீங்களும் சைக்கிள் கடையில் பெண்டெடுக்க வர்றிங்களா!?
அழைப்பு கொடுக்க சொல்லவா!
//வால்ஸ் என்னாதுப்பா இது. இந்த மேட்டரை போடுறீங்கன்னு முன்னாலியே சொல்லியிருந்தீங்கன்னா உட்டிருப்பாங்களே //
குறி வைத்து தாக்கப்படும் தனிமனித தாக்குதலுக்கு ஒப்பான செயலை செய்திருப்போர் நிச்சயம் ஒரு மத தீவிரவாதியாக தான் இருக்க முடியும்! அனைத்து மத டவுசர் கிழிப்போர் சங்கம் எப்படியும் அவர்கள் டவுசரையும் கிழிக்கும் என முன்கூட்டியே தடை பண்ணிட்டாங்க போல!
கண்டிப்பா...பெண்டு எடுத்து பேங்கில் போடவேண்டும்...
//கண்டிப்பா...பெண்டு எடுத்து பேங்கில் போடவேண்டும்... //
தகவல் ஓவர் டூ சைக்கிள் கடை ஓனர் அழகு “ராஜன்”
//.. நமது தளம் அமீரகத்தில் தடை செய்யபட்டுள்ளதாக அறிந்தேன்!..//
இது வேறயா..?? :-))
நண்பர்களுக்கு வேண்டுகோள்.
ஆ .ஆ .அ. ராஜாவின் இந்த பதிவுகளை சற்று
சீரியஸாக செல்ல வழிவிட்டு வழக்கம் போல
"கும்மி " அடிப்பதை சற்று தள்ளி வைக்கலாம்.
வருடம் முழுதும் 'கும்மி" அடிக்க சான்ஸ் உண்டு.
இது குறித்து வரும் எதிர் கருத்துக்களை சற்று தீவிரமான
தனத்துடன் வென்று, சொல்ல வந்ததை பிறர் ஏற்று கொள்ள
வைப்பதே இந்த பதிவுகளின் சிறப்பாக, நோக்கமாக இருக்கட்டும்
நன்றி.
பந்தியாக்கும்ன்னு வந்தேன் வால்ஸ்../ராஜன்( தொடர்ச்சி, விதூஸ்.)
ஏற்கனவே எனக்கு செங்க மங்கல்.
இப்ப, பூச்சி பறக்குது. :-))
அப்ப வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிறலாம்... ;)
வால ரொம்ப நாளா காணோமேன்னு பாத்தேன்... என்னா அடி?... நிச்சயம் கோவணம் கிழிஞ்சிருக்கும்! (அவனுக எப்போ பாஸ் டவுசர் போட்டானுக?)
கக்கு மாணிக்கம் சொன்னதை வழிமொழிகிறேன்.
கும்மி அடிப்பதை விட்டு கருத்துகளை விவாதிப்போம்
நன்றி!
மதங்களை இடித்து பழிப்பது எனக்கு பிடிக்கவில்லை... வால்
//மதங்களை இடித்து பழிப்பது எனக்கு பிடிக்கவில்லை... வால் //
நீங்கள் தான் எங்களுக்கு சரியான ஆள்!
ஏனென்று சொல்லிவிட்டு போங்கள்!
உங்களுக்கும் சேர்த்துத்தான் உயிர் என்ற இடுகை போட்டேன்.படிச்சிட்டு வாங்க.அது வரைக்கும் நான் இங்கே டீ குடிச்சிட்டு இருக்கிறேன்:)
அச்சச்சோ!இது ஆள் இன் ஆல் கடையா?போர்டு பார்க்காம கடைக்குள் புகுந்திட்டேன்:)
//Hi eroarun,
Congrats!//
வியாதி பரவுது.
//சரி அன்னைக்கு தான் புத்தியில்ல, இன்று வரைக்குமா அறுந்த டவுசரையே இழுத்து புடிச்சுட்டு திரியறது!//
அதுக்கு ஒரு 350 வருஷம் ஆகும் தல.
கப்பல் பயணம் தொடங்கி, என்னென்னவோ ஆராய்ச்சியெல்லாம் செஞ்சி உலகம் உருண்டைன்னு நிரூபிச்சி 350 வருஷம் கழிச்சிதானே ஒத்துக்கிட்டாங்க.
//ஆபிரஹாம மதத்தின் (அண்டர்) வேரே அதன் வேத புத்தகம் தான்!//
கைபடாததுன்னு வேற சொல்லிக்கிட்டு இருப்பாங்க.
//இவர்கள் மட்டும் பேப்பருக்கு இம்புட்டு மரியாதை கொடுப்பார்களாம், மற்றவர்கள் கொடுத்தால் அவர்கள் காஃபீர்களாம்!//
இப்ப அவங்களும் உருவம் இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் உலகில் யாரும் காபிர் கிடையாது. அனைவருமே முமீன்களே!
//இப்ப அவங்களும் உருவம் இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் உலகில் யாரும் காபிர் கிடையாது. அனைவருமே முமீன்களே! //
தன் சாயலில் படைத்தார் எனும் போதே உருவம் இருக்குன்னு ஆயிருச்சு தல!, இனிமே எல்லா சர்ச்சுலயும் போட்டோ வைக்க சொல்லிரலாம்!
//இனிமே எல்லா சர்ச்சுலயும் போட்டோ வைக்க சொல்லிரலாம்//
இங்க வச்சிருக்குற போட்டோவுக்கு விளக்கம் கேட்க ஒரு க்ருப் ரெடியா இருக்கு. :-)
தோழரே ,
ஒன்னுமே பிரியலை போங்க .., பழைய ஏற்பாடு ,புதிய ஏற்பாடு,ஏற்காடு ன்னு ....,:)
தோழரே ,
பின்னூட்டத்தை வச்சி புருஞ்சிகிரேன்...,உங்களின் நிறைய பதிவுகளை அப்படித்தான் புரிந்துகொள்கிறேன் ...,ஆனா யாரும் விவாதத்துக்கு வரமட்டங்கிரன்களே ??? அய்யா யாராவது வாங்கையா
அழகு ராஜா ........ பின்றீங்களே....
//தோழரே ,
பின்னூட்டத்தை வச்சி புருஞ்சிகிரேன்...,உங்களின் நிறைய பதிவுகளை அப்படித்தான் புரிந்துகொள்கிறேன் ...,ஆனா யாரும் விவாதத்துக்கு வரமட்டங்கிரன்களே ??? அய்யா யாராவது வாங்கையா//
அது எதுக்கு? தப்பு இருந்தாதானே விவாதம்?
ஆகையால் எமக்கு மிகவும் பிடித்தமான தலைப்பைத் தெரிவு செய்து எழுதி வைத்திருக்கிறபடியால் நாம் சுகமாக படித்து ஜீவிதம் செய்து வரவும், நீங்கள் உங்களுக்கு திருப்தியாக ஆகிவிடும் வரைக்கும் எழுதியும் வரவேண்டியது. நாம் மிகச் சமீபத்திலேயே இருக்கிறோம்.
//ஆதியில் தேவன் படைக்கும் முன்னர் என்ன பண்ணிகிட்டு இருந்தார்?//
தெர்மோ நியுகிலியர் பிணைப்பை இணைப்பை கரும் புள்ளியில்(Black hole) செய்துகிட்டுயிருந்தார்.
//அப்போ அதுக்கு கடவுள் பேரு வைக்கல போல!, ஐந்தாம் வசனத்தில் வெளிச்சத்திற்கு பகல் என்று பெயரிடுகிறார்! //
இப்ப பெயருதான் பிரச்சனையா எத்தனை மொழி அவங்கவுங்க பெயரு வச்சுக்க மாட்டாங்களா? அப்படியே பெயர் தான் வேணும்னா பகலுன்னு சொல்லிக்கோங்க.
//வெளிச்சம் மட்டும் இருக்குமே, அங்கே இரவு பொழுது மிக குறைவானதாயிற்றே, ஏன் துருவம் வரைக்கும் நார்வே தெரியுமா, அங்கே பகல் பொழுது எவ்வளவு நேரம் தெரியுமா!? அதையெல்லாம் யார் படைத்தது?//அதான் முதலிலே சொல்லியாச்சே தேவன்னு
//ஆதியிலேயே வானத்தில் நீர் இருந்தது போலவும், அவை தேவைகேற்ப அப்பப்ப மழையாக பொழிவது போலவும் //
நல்ல எழுத்துக்கூட்டி சரியா வாசிச்சுப் பாருங்க தேவன் பிரித்தார் என்றுதான் போட்டிருக்கிறது, ஆதியிலே மேலேஇருந்ததாகப் போடவில்லை. இன்றும் நீரை அவர்தான் பிரிக்கிறார் என்றும் என்னலாம் காரணாம் நாளைய தினத்திற்கு இன்று ஆதிதானே.
//உலகமகா முரணான வசனம்.... வெளிச்சம் ஏற்கனவே இருக்கு என்றும், அதனை ஆள சூரியன் படைக்கப்பட்டது என்றும் இந்த வசனம் சொல்கிறது!//
என்ன மடத்தனமான விளக்கம் சூரியன் இல்லாவிட்டாலும் (light energy)ஒளி இல்லை என்று எப்படிக் கூறமுடியும்? அந்த light energyயை ஆளத்தான் சூரியன் சந்திரன் படைத்ததாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? சூரியன் இல்லாமலும் விட்டில் பூச்சிகளும் வெளிச்சத்தை தரும் என்பது உங்கள் பரிணாம அறிவுக்கு இப்போதாவது எட்டட்டும். கொஞ்சம் உங்க டவுசரை பிடித்துக் கொள்ளுங்கள் கிலியத் தொடங்கிவிட்டது.
//முக்கியத்துவம் வாய்ந்த மனிதனை விட சர்ப்பம் தந்திரம் வாய்ந்ததாக இருந்தது என்பது மிகப்பெரிய முரண்பாடு, //
காட்டு ஜீவன்களை விட சார்ப்பம் தந்திரமானது என்று ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது. அதனைப் போய் மனிதனுடன் ஏன் கம்பேர் செய்றீங்க தல? நீங்க இன்னும் காட்டிலதான் இருக்கீங்களா? நேத்துதான் கிழிஞ்ச டவுசருடன் காட்டில் இருந்திருக்கலாம் இன்னைக்காவது தச்சிட்டு ஊரப்பக்கம் வாங்க
//சரி மண்னை தின்பாய் என்றால் என்ன அர்த்தம் பாம்பு இபொழுது என்ன மண்ணையா தின்கிறது!//
அதே மாதிரி மரத்தை தின் என்று மனிதரைப்பார்த்து சொல்வது முழு மரமால்லவே மரத்திலுள்ளவை. அதுபோல மண்ணைத் தின் என்றால் மண்ணை அல்ல மண்ணில் உள்ளதை. இது poetic line என்று நான் சொன்னா நீங்க இளிப்பேங்க நான் என்னசெய்ய?
///பெருசா போச்சு!, இன்னும் நிறைய கிழிக்க வேண்டிருக்கும்படியால் இது தொடராக வரும்!, பின்னால் இவை மட்டுமில்லாமல் அனைத்து வேதங்களும் டவுசரவுக்கப் படும்///
மொக்கை கேள்வியா கேட்டுபுட்டு நக்கல் வேறய்யா?
இதுக்கு தனிப் பதிவாப் போட்டுஇருக்கலாமுனு நெனச்சேன் அப்புறம் அதை இங்கே கொடுத்தா நான் விளம்பரம் கொடுக்கிறேன்னு வேற சொல்லுவீங்க அதான் இங்கையே உங்க டவுசரை கிழிச்சாச்சு. கேள்வின்னு வந்திட்டா கொஞ்சம் நல்லாப் படிச்சுட்டு வந்து பொதுவுல கேளுங்க இல்லாவிட்டா இப்படி பல்பு வாங்கவேண்டிவரும்.
50 வெட்டு என்னோடது.
//நமது தளம் அமீரகத்தில் தடை செய்யபட்டுள்ளதாக அறிந்தேன்!//
அதுக்கு blogline, co.cc. proxy server அப்படின்னு பல வழியிருக்காம் விசாரிச்சுட்டேன். கவலைப்படாமல் வாங்க கொறை டவிச்சரையும் கிழிக்கணும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிர்பாராக
ஆமென்
போரடிக்குது.....கிழிந்த டவுசரை தைக்கவோ அல்லது டவுசர் கிழியவே இல்லைன்னு சொல்ல ஒருத்தரையும் காணும். அப்ப நிஜமாலுமே டவுசர் பங்சர்தானா ?
//நீங்கள் தான் எங்களுக்கு சரியான ஆள்!
ஏனென்று சொல்லிவிட்டு போங்கள்! //
ஏனென்றால் நாம் மற்றவர் மனதை புண்படுத்தக்கூடாது..
followupkku
//நாம் மற்றவர் மனதை புண்படுத்தக்கூடாது.. //
கேள்வி ஒரு புத்தகத்தில் இருப்பது பற்றி தான்! இதில் புண்பட என்ன இருக்கிறது
//கேள்வி ஒரு புத்தகத்தில் இருப்பது பற்றி தான்! இதில் புண்பட என்ன இருக்கிறது//
ஏன் உங்களுக்கு வேற எந்த பொஸ்தமும் கிடைக்கலயா
//ஏன் உங்களுக்கு வேற எந்த பொஸ்தமும் கிடைக்கலயா //
இது ஆரம்பம் மட்டுமே!
//இது ஆரம்பம் மட்டுமே!//
ரொம்ப கஷ்டம்... மக்களுக்கு தாம்பா...
(இதுவரைக்கும் இது மாதிரி எழுதியதில்லையோ?)
//
ரொம்ப கஷ்டம்... மக்களுக்கு தாம்பா...
(இதுவரைக்கும் இது மாதிரி எழுதியதில்லையோ?) //
மாற்று பார்வையும், எதிர் கேள்வியும் தவறென்றால் மனித நாகரிகம் இன்றும் இலை, தழைகலுடன் தான் திருந்திருக்கும்! புண்படுத்தாதே என்பதை விட என் கேள்விகளுக்கு உங்களிடம் இருக்கும் பதில் தான் தெளிவுக்கு வழி!
என்ன கேள்வி உங்களுடையது?
//என்ன கேள்வி உங்களுடையது? //
பதிவையே படிக்கலையா!?
ஸ்மார்ட் அண்ணே நீங்க ஸ்மார்ட்டுன்னு காட்ட என்னென்னவோ டிரை பண்றீங்க பட் வொர்க் அவுட் தான் ஆவ மாட்டேங்குது! இங்க வந்து எங்க டவுசர் அவுக்க நெனச்சா வேலை ஆவுமா?!
போங்க போங்க போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க!
//போரடிக்குது.....கிழிந்த டவுசரை தைக்கவோ அல்லது டவுசர் கிழியவே இல்லைன்னு சொல்ல ஒருத்தரையும் காணும். அப்ப நிஜமாலுமே டவுசர் பங்சர்தானா ?//
இதுல டவுட்டு வேறயா சார்!
//பதிவையே படிக்கலையா!? //
பாதி படிச்சேனே... படிக்கும் படியவா இருக்கு...
//மாற்று பார்வையும், எதிர் கேள்வியும் தவறென்றால் மனித நாகரிகம் இன்றும் இலை, தழைகலுடன் தான் திருந்திருக்கும்!//
எல்லாம் ஆசையின் பொருட்டே மாறியது.... எதிர் கேள்வியினால் அல்ல
ராஜன் அவன் ஆள் அட்ரஸ் இல்லாத மனநோயாளி..
ஆனா எல்லாரையும் ஓட்றீங்க.. தனி திறமையா உங்களுக்கு... நமக்கெல்லாம் டென்ஷன் ஆகிடுது
//ராஜன் அவன் ஆள் அட்ரஸ் இல்லாத மனநோயாளி..//
ஸ்மார்ட்டாக முயற்சிப்பவரை பொசுக்குன்னு மென்டல்னு சொல்லிப் புட்டீங்களே தல ! பாவம் அண்ணன் இனி குய்யோ முய்யோன்னு வந்து அனத்துவாரு பாருங்க
//அச்சச்சோ!இது ஆள் இன் ஆல் கடையா?போர்டு பார்க்காம கடைக்குள் புகுந்திட்டேன்:)//
ஹா ஹா ஹா ! அதனால என்ன தல வந்த்தது வந்துட்டீங்க! சைக்கிளுக்கு கொஞ்சம் ஆயில் விட்டுட்டாவது போங்க!
அதயெல்லாம் யாரு படிக்கறது
//அதயெல்லாம் யாரு படிக்கறது//
நாமளும் அவரும் தான் கடைக்கி வர்றவங்க எல்லாம் கண்ட கருமத்தயும் பாக்க மாட்டாங்க தல !
அவருக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு தல ! கடைல ஆள் இருக்கும்போது வரமாட்டாரு! அல்லாரும் தூங்கின பிறகு வந்து கத்துவாரு.....
அதான் சொன்னேன் இல்ல தனியா பேசிக்கற ஆளுன்னு
ஆனா எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கனும் ஆளு கணிப்பொறியில பொறி வைக்கறவரு... எக்கு தப்பா எதாச்சும் பண்ணி வச்சாருன்னா.. என் ப்ளாகு அம்போ தான்
//கணிப்பொறியில பொறி வைக்கறவரு... எக்கு தப்பா எதாச்சும் பண்ணி வச்சாருன்னா.. என் ப்ளாகு அம்போ தான்
//
சரிதான்! எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருப்போம் தல! கண்ட பக்கம் கைய வெச்சுரப் போறாரு
"ஆள் இல்லாத பொது பொறணி பேசும் பொல்லாத உலகமடா! தட்டிவிட்டு நீ செல்லடா"
-------8.3.1935 “குடிஅரசு” இதழில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது
அற்புத சுகம் அளிக்கும் கூட்டத்தில் முகப்பருக்களும் , கரும்புள்ளிகளும் மறையுமா?
இந்த மாதிரி சவுக்கடி கொடுக்கும் கூட்டத்தை தான் நான் எதிர் பார்த்தேன்.
நானும் இன்னிமே இந்த ப்ளாக் பாலோ பண்ண போறேன் .
வெங்காயம் !!!
இந்த மாதிரி சவுக்கடி கொடுக்கும் கூட்டத்தை தான் நான் எதிர் பார்த்தேன்.
நானும் இன்னிமே இந்த ப்ளாக் பாலோ பண்ண போறேன் .
வெங்காயம் !!!
இந்த மாதிரி சவுக்கடி கொடுக்கும் கூட்டத்தை தான் நான் எதிர் பார்த்தேன்.
நானும் இன்னிமே இந்த ப்ளாக் பாலோ பண்ண போறேன் .
வெங்காயம்
Post a Comment