Tuesday, February 23, 2010

இந்து மத காவலர்கள் பர்தா போட்ட பரிதாபம் !

கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையான்னே தெரியாம பல பேரு சுத்திட்டு இருக்காங்க ! அவங்க பெரும்பான்மைன்னு கூட சொல்லலாம் ! கேட்டா " தெரியல ! ஆனா நமக்கு மேல ஒன்னு இருக்குங்கறது மட்டும் நெஜம்" அப்பிடின்னு பிலாசபி பேசுவாங்க ... மேல ஒன்னு இருக்கறது கீழ ஒன்னு இருக்கறது எல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் கடவுள்னா என்ன ? பாத்தயான்னு கேட்டா , " அணுவைப் பார்த்திருக்கிறாயா மூலக் கூறைப் பாத்திருக்கிறாயா" ? "அது போல்தான் கடவுளும் " என்று லூசுத் தனமாக உளறுவதைக் கேட்டிருக்கிறோம் . சரி அணுவை என்ன கோயில் கட்டியா கும்பிடறோம்.? நுண்நோக்கில பாத்தா தெரியுமே! என்றால், "சுத்தமான மனசுங்கர நுண்நோக்கில பாத்தா கடவுளும் தெரிவார் " ங்கறானுங்க . என்னத்த சொல்ல சர்ப் எக்ஸ்செல்ல போட வேண்டியது தான் !

சிவ பெருமான் என்ற பாத்திரத்தை அந்தக் காலத்துல ஆக்க்ஷன் கதைகள் எழுத பயன் படுத்தினாங்க , நான் எதோ காமெடி கதை எழுதினேன் . அதுக்கு போயி சிவனின் பக்த ....... மணிகள் இப்பிடி பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர் பாக்கவே இல்ல! ரெண்டு நாளா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சிவ பானம் தான் ஒரே தீர்வு !

அட கோவம் வந்திருந்தா நீங்க பண்ணிருக்க வேண்டிய காரியங்கள் பின் வருமாறு :

*கோவத்துல என்ன பண்றதுன்னு தெரியாம கொசு மருந்த குடிச்சு செத்துருக்கலாம்

* என்னோட குடும்பத்துக்கே சூனியம் வெக்க சாமியார் ஏற்பாடு பண்ணலாம்

* சிவன் பாம்ப ( கழுத்துல தொங்கறது ) என் மேல ஏவி விடலாம்

* பார்வதியின் புலியை ( வேணாம் அதுவும் செத்து போச்சுனா 1410 ஆயிடும் அந்த பாவம் வேற !) அக்கா வேற எதுனா வாகனம் வெச்சு இருக்கா ? பக்தர்களின் பதில் எதிர் நோக்கப் படுகிறது (ஸ்கூட்டி பெப் !)

* முருகனின் கோவணத்தால் என்னை மூர்ச்சை அடையச் செய்திருக்கலாம் ! (பயமா தான் இருக்கு !)

* புள்ளயாரின் எலியை விட்டு பிளேக் நோய் வர வைத்து இருக்கலாம்

இத எதுவுமே பண்ணாம தங்கள் கொள்கைப் பிடிப்பு (வாயுக் கோளாறு இல்ல !) க்கு குந்தகம் விலை விக்கும் வகையில் இஸ்லாம் மதத்தின் அடையாளமான பர்தாவை அணிந்து கொண்டு அனானியாக வந்து காமெடி செய்து விட்டார்கள் .

கருத்து சுதந்திரம் , சமயப் பொறை , சக மனிதர்களின் நம்பிக்கை குறித்த விமர்சனத்தின் போது கைக் கொள்ள வேண்டிய வரை முறைகள், வாதத்தின் போது என் பதில் / கேள்வியின் தொனி , தீவிர இறை மறுப்புக் கொள்கையால் எனக்கென்ன இலாபம், எதிர் கருத்து கொண்டோரின் பார்வையில் இறை மறுப்பு சித்தாந்தம் இவை குறித்து பலவிதமான வினாக்கள் எனக்குள் எழத் துவங்கின . இந்த வலை பூவின் கடைசி சில பதிவுகள் கடவுளை அடுத்த தெரு எதிரி ரேஞ்சில் கேவலப் படுத்தி எழுதப் படுவதால் அவரது இருப்பை நாமே உறுதி செய்வதாக ஆகிவிடாதா ! இவற்றை ஒத்த சந்தேகங்கள் தினம் தினம் உதித்த வண்ணம் உள்ளன.
இதுவரை வெளியிட்ட கருத்துக் களுக்கு பதில் அளிக்க முயன்ற நண்பர்கள் கூறுவதை மனதில் கொள்ளாமல் நான் செய்வதே சரி என்று உரைக்க மனம் ஒப்பவில்லை ! அப்படி செய்யும் பட்சத்தில் கடவுள் இல்லை என முழங்கும் இறை மறுப்பாளர்களின் வாதங்களை சேணம் மூடிய குதிரைபோல் மறுக்கும் ஆத்திகர் களுக்கும் நமக்கும் வேறுபாடின்றி போய்விடக் கூடும். இனி இது போல ஓட்ட வேணாம்னு நெனச்சுட்டு இருந்த சமயத்துல வழில போற ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா பர்தா போட்டுட்டு வந்து அவனுங்க கடவுள் பக்தியோட புனிதத் தன்மைய வெட்ட வெளிச்சமாக்கிட்டானுங்க !வலிக்காமல் போட நான் என்ன கோழி றெக்கையிலா ஊசி போட முடியும். அது முடியாது, இந்த அளவுக்கு பதில் சொல்ல திராணியும் தெம்பும் இருக்கற பசங்கள நாம எதுக்கு பாவம்னு விடனும் ! என்ன ஒன்னு ... இப்பவும் அனானியா வரானுங்க ! எதிர் காலத்துல எப்பவாவது சூடு சொரணை வந்து எங்க மேல பயம் போச்சுனா நெசப் பேர சொல்லுவானுங்கங்கர நம்பிக்கைல புத்துணர்ச்சியோட ரெண்டாவது இன்னிங்க்ச ஆரமிக்கறோம் !

ஊக்கமளித்த அனானிச் செல்லக் குழந்தைகளுக்கு இந்தப் பதிவு சிவார்ப்பணம் !

அச்சில இருக்கற அடுத்த ஐட்டங்கள் !

* "பெருமாள் " லேடி கெட்டப் - சிவனின் செட்டப்

* புள்ளையாரப்பா புள்ளையாரப்பா ! உங்கொப்பன் பேரு என்னப்பா ?

* சிலுக் சிவனின் சபதம் ( தி ஜட்ஜ் மென்ட் டே!)


டோண்டு ஒர்ரி ! பீ ஹேப்பி !

41 comments:

வால்பையன் said...

பர்தா என்ன கலர் தல!?

வால்பையன் said...

போன பதிவுல ஒரு அனானி சாமியாடிட்டு போயிருக்காரே! அது பக்தி பெருக்கால தான் இருக்குமோ!

ராஜன் said...

//பர்தா என்ன கலர் தல!?//

ஜிங்குச்சா ஜிங்குச்சா ! காவிக் கலரு சிங்குச்சா

thamizan said...

கடவுள் இல்லே இல்லேன்னு சொல்லிட்டு ஒரு நாளைக்கு அவன் பெற ஆயிரம் தடவை சொல்ற உங்களுக்கு எவ்வளவு கடவுள் பக்தி. கடவுள் இல்லேன்னு சொல்லிட்டு அவன் பெற சொல்லி நீங்க போடுற பர்தா சூப்பர். ஒரிஜினல் ஆத்திகவாதி வெளியில தெரிஞ்சு கடவுள் பேர சொல்றான் , நீங்க மறஞ்சு நின்னு வேஷம், போடறீங்க . இது தான் உங்களுக்கும் அவங்களுக்கும் உள்ள வித்தியாசம் . கடவுள் இல்லேன்னு சொன்னவன் எல்லாம் ஆபத்து காலத்தில கடவுள வேண்டறவன் தான் .

வால்பையன் said...

//கடவுள் இல்லேன்னு சொன்னவன் எல்லாம் ஆபத்து காலத்தில கடவுள வேண்டறவன் தான் .//

என்ன ஆபத்து!?
யாருக்கு ஆபத்து!?
யாரால் ஆபத்து!?

என் பதிவுலயும், இந்த ப்ளாக்கில் போன பதிவுலயும் வாழ்த்திட்டு போன அனானிக்கு தான் ஆபத்து! எந்த கடவுளை வேணும்னாலும் வேண்டிக்க சொல்லுங்க! யார் வந்து காப்பாத்துறான்னு நாங்களும் பார்க்கிறோம்!

thamizan said...

//என் பதிவுலயும், இந்த ப்ளாக்கில் போன பதிவுலயும் வாழ்த்திட்டு போன அனானிக்கு தான் ஆபத்து! எந்த கடவுளை வேணும்னாலும் வேண்டிக்க சொல்லுங்க! யார் வந்து காப்பாத்துறான்னு நாங்களும் பார்க்கிறோம்! //

உங்க பதிவ விமர்சனம் பண்ணவங்களுக்கு ஆபத்தா. இது மிரட்டற மாதிரி இல்ல இருக்கு . போன பதிவ விமர்சனம் பண்ணவர பத்தி எங்கிட்ட பேசாதீங்க . கடவுள் இல்லேன்னு சொன்ன எவ்வளவோ பேர் வீடுக்குள்ள சாமி கும்பிடற கதை தெரியாதா. உங்களுக்கு அதை பத்தி தெரியலேன்ன பொய் தெரிஞ்சுகோங்க . உதரணத்துக்கு சொல்றேன் நம்ம கவிஞர் கண்ண தாசனே கடவுள் இல்லேன்னு சொன்னவரு தான், ஆனா அவரே கடைசி காலத்திலே கடவுள் இருக்கார்னு சொன்னவர் தான்.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

டைரி குறிப்பும், ரெண்டு சாட் டகிலாவும் இங்கே கிடைக்குமா?

வால்பையன் said...

//கடவுள் இல்லேன்னு சொன்ன எவ்வளவோ பேர் வீடுக்குள்ள சாமி கும்பிடற கதை தெரியாதா.//

ஆத்திகன் நாத்திகன் ஆவது போல் இதுவும் ஆங்காங்கே நடக்கலாம்! அதற்காக நாங்கள் மாற வேண்டுமா என்ன!? எங்கள் கேள்விகளுக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள், வேறு கதை எங்களுக்கு எதுக்கு நண்பரே!


//நம்ம கவிஞர் கண்ண தாசனே கடவுள் இல்லேன்னு சொன்னவரு தான், ஆனா அவரே கடைசி காலத்திலே கடவுள் இருக்கார்னு சொன்னவர் தான். //

கண்ணதாசன் அரசியல் சார்புடயவர், ஆரம்ப காலகட்டத்தில் அவர் தி,கவோடு இணைந்து தனது அரசியல் செயல்பாட்டை காட்டினார், பின்னாளில் கட்சி மாறினார்! அவருடய குழப்ப கோட்பாடுகள் போலத்தான் அவரருடய கடவுள் நம்பிக்கையும்! சமூகத்திற்காக தமது நம்பிக்கைகளை மாற்றி கொண்டார்! எதிர் பிரச்சாரமாக நாத்திகர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று பேசி/எழுதி வந்தார்!

அர்த்தமுள்ள இந்துமதம் போலவே அர்த்தமற்ற இந்துமதம் புத்தகமும் எழுதபட்டு விட்டது! அதே போல் பலபல! யாராலும் பதில் சொல்ல முடியாத போது, இம்மாதிரி சொதப்பல் பதில்களும், குடும்பத்தை திட்டுவதும் தான் செய்ய முடியும் அனானிகளால்! ஏன்னா அது தான் அவுங்க கடவுள் சொல்லிகொடுத்தது!

வால்பையன் said...

//டைரி குறிப்பும், ரெண்டு சாட் டகிலாவும் இங்கே கிடைக்குமா? //


எருமைதோல் செருப்பும், கடவுள் மறுப்பும் கிடைக்கும் தல!

thamizan said...

//ஆத்திகன் நாத்திகன் ஆவது போல் இதுவும் ஆங்காங்கே நடக்கலாம்! அதற்காக நாங்கள் மாற வேண்டுமா என்ன!? எங்கள் கேள்விகளுக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள், வேறு கதை எங்களுக்கு எதுக்கு நண்பரே!//


உங்களை யார் மாற சொன்னது . உங்களை மாற்றுவது என் வேலையும் அல்ல நண்பரே. நான் பிடித்த முயலுக்கு பத்து கால் என்பவருக்கு எதுவும் சொல்ல முடியாது.அனால் நீங்கள் தான் கடவுள் இல்லை இல்லை என்று நாள் முழுவதும் கடவுள் பெயரை சொல்லி வருகிறீர்கள்

வால்பையன் said...

//உங்களை யார் மாற சொன்னது . உங்களை மாற்றுவது என் வேலையும் அல்ல நண்பரே. நான் பிடித்த முயலுக்கு பத்து கால் என்பவருக்கு எதுவும் சொல்ல முடியாது.அனால் நீங்கள் தான் கடவுள் இல்லை இல்லை என்று நாள் முழுவதும் கடவுள் பெயரை சொல்லி வருகிறீர்கள் //

நாங்கள் கிண்டல் அடிக்கிறோம், பெயரை வைத்து பிச்சை எடுக்கிறோம்! இருக்கின்ற கடவுள் வந்து தண்டிக்கட்டும் யாரு வேணாம்னா!?

கடவுளால் ஒன்றும் இந்த பூமியில் ஆவதில்லை என்பதற்கக தானே இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு!

சி. கருணாகரசு said...

u turn.

thamizan said...

//நாங்கள் கிண்டல் அடிக்கிறோம், பெயரை வைத்து பிச்சை எடுக்கிறோம்! இருக்கின்ற கடவுள் வந்து தண்டிக்கட்டும் யாரு வேணாம்னா!?

கடவுளால் ஒன்றும் இந்த பூமியில் ஆவதில்லை என்பதற்கக தானே இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு! //

கிண்டல் அடிபதர்காகவோ அல்லது பிச்சை எடுபதர்காகோவோ கடவுள் என் தண்டிக்க போகிறார் . என்னை பொறுத்தவரை அந்த கடவுள் தான் உங்களை இப்படி எழுத செய்து அதற்கு நான் பதிலும் எழுத செய்கிறார் , அவ்வளவுதான் . எல்லாம் அவன் செயல் .குழந்தை தவறு செய்தல் தாய் தண்டிபார்களா . அதே போல் தான் இதுவும் . நீங்கள் ஒவ்வொன்றையும் வைத்து அதன் மூல காரணத்தை அறிய முயற்சி செய்யுங்கள் . அப்பொழுது தெரியும் எங்கிருந்து வந்தது என்று. நாம் பிறந்தது எப்படி ? ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறக்கும் என்பீர்கள் , அப்படி என்றால் எல்லாருக்கும் குழந்தை பிறக்க வேண்டுமே ? ஏன் இல்லை . எதுவுமே நம்மிடம் இல்லை . எல்லாம் கடவுள் அருள் தான்

கும்மி said...

// நான் பிடித்த முயலுக்கு பத்து கால் என்பவருக்கு எதுவும் சொல்ல முடியாது.//

ஒன்னு மூணுன்னு சொல்லுவீங்க! இல்ல பத்துன்னு சொல்லுவீங்க. எப்பதான் நாலுங்கரத ஒத்துக்கப்போறீங்கலோ?

கும்மி said...

//நீங்கள் ஒவ்வொன்றையும் வைத்து அதன் மூல காரணத்தை அறிய முயற்சி செய்யுங்கள் //

நாங்களும் அததானய்யா சொல்லிக்கிட்டு இருக்கோம்! அந்த self proclaimed பிரதிநிதி சொன்னாரு, அந்த புக்குல போட்டுருக்குன்னு சொல்லுறத நிறுத்திட்டு, உண்மை என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்கய்யா!

கும்மி said...

//ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறக்கும் என்பீர்கள் , அப்படி என்றால் எல்லாருக்கும் குழந்தை பிறக்க வேண்டுமே ? ஏன் இல்லை . எதுவுமே நம்மிடம் இல்லை . எல்லாம் கடவுள் அருள் தான் //

அப்போ ஏன் akash infertility centre-ல் இவ்வளவு கூட்டம் கூடுது?

thamizan said...

//அந்த புக்குல போட்டுருக்குன்னு சொல்லுறத நிறுத்திட்டு, உண்மை என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்கய்யா//

ஒருத்தன் தன் அனுபவத்தை எல்லாம் புத்தகத்துல எழுதறது படிச்சி அதலேர்ந்து நாம மேலே என்ன பண்ண முடியுமோ அத பண்ணனும் . அந்த புத்தகம்லாம் பொய் நான் புதுசா கண்டு பிடிக்க போறேன்னு சொன்னா அதுக்கு மேல நாம ஒன்னும் பண்ண முடியாது . வேத காலம் தொல் காப்பிய காலம் சங்க கல இலக்கியம் திருக்குறள்னு நிறைய புத்தகத்துல கடவுள் பத்தி எழுதி இருக்காங்க . அதெல்லாம் கிடையாது அது எல்லாம் தப்புன்னு சொன்னா என்ன பண்றது . அவங்களை விட நாம என்ன பெரிய அறிவு ஜீவியா

கும்மி said...

//அந்த புத்தகம்லாம் பொய் நான் புதுசா கண்டு பிடிக்க போறேன்னு சொன்னா அதுக்கு மேல நாம ஒன்னும் பண்ண முடியாது //

அந்த புத்தகத்துல சொன்னதுக்கு ஆதாரம் இல்லன்னாலும், நான் நம்புவேனுன்னு சொல்றவங்கள நாம என்ன பண்ணலாம்.

thamizan said...

ஆதரமா ? காத்து எப்படி இருக்கும் ? காற்றை பார்திருகீரீர்களா ? தண்ணிக்கு என்ன நிறம் ? நெருப்புக்கு என்ன கலர் ? பூமின்னு நாம வளர இடத்துக்கு ஏன் சொல்றீங்க ? இதுக்கு வேற பெயர் வைக்க வேண்டியது தானே ?

நல்லதந்தி said...

இங்கன இந்துமதக் கடவுளைப் பத்தி மட்டும்தான் பேசுவீங்க போல!... அது சரி இதுதானே உசுருக்கு சேஃப்டி! :)

ராஜன் said...

//இங்கன இந்துமதக் கடவுளைப் பத்தி மட்டும்தான் பேசுவீங்க போல!... அது சரி இதுதானே உசுருக்கு சேஃப்டி! :)//

ஆமா! எனக்கு அப்பிடிதான் ! உலகத்துல இருக்கற மதங்களில் இந்து மதத்துக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கு ! ஏனையவற்றில் இறைவனும் தூதுவர்களும் கொஞ்சம் நல்ல விதமா சித்தரிக்கப் பட்டு இருப்பாங்க ! ஆனா இதுல மட்டும்தான் ஆண்டவனே காமெடி பீசா கோமாளித் தனமா உருவகப் படுத்தப் பட்டிருக்கான் . எனக்கும் இத கிண்டலடிக்க ஜாலியா இருக்கு !

ராஜன் said...

//ஆதரமா ? காத்து எப்படி இருக்கும் ? காற்றை பார்திருகீரீர்களா ? தண்ணிக்கு என்ன நிறம் ? நெருப்புக்கு என்ன கலர் ? பூமின்னு நாம வளர இடத்துக்கு ஏன் சொல்றீங்க ? இதுக்கு வேற பெயர் வைக்க வேண்டியது தானே ?//

சரி வெச்சுட்டா ! நீங்க நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா ?!?!?!

Flower said...

/இஸ்லாம் மதத்தின் அடையாளமான பர்தாவை/single gapla tiruvarur thera ottringala sir, don't have sny symbol in Islam

வால்பையன் said...

//இங்கன இந்துமதக் கடவுளைப் பத்தி மட்டும்தான் பேசுவீங்க போல!... அது சரி இதுதானே உசுருக்கு சேஃப்டி! :) //

நல்லதந்தி நீங்களே இப்படி பொத்தம்பொதுவா சொல்லலாமா!?

இது எதை பற்றி!?

இது எதை பற்றி!?

தர்ஷன் said...

//அச்சில இருக்கற அடுத்த ஐட்டங்கள் !

* "பெருமாள் " லேடி கெட்டப் - சிவனின் செட்டப்

* புள்ளையாரப்பா புள்ளையாரப்பா ! உங்கொப்பன் பேரு என்னப்பா ?

* சிலுக் சிவனின் சபதம் ( தி ஜட்ஜ் மென்ட் டே!)//


ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்

கும்மி said...

//ஆதரமா ? காத்து எப்படி இருக்கும் ? காற்றை பார்திருகீரீர்களா ? தண்ணிக்கு என்ன நிறம் ? நெருப்புக்கு என்ன கலர் ? பூமின்னு நாம வளர இடத்துக்கு ஏன் சொல்றீங்க ? இதுக்கு வேற பெயர் வைக்க வேண்டியது தானே ? //

நீங்க சொல்ற இந்த காற்று, நீர், நெருப்பு போன்றவற்றிற்கெல்லாம் பல attributes, properties இருக்கு. அதை வைத்து அவற்றை அடையாளம் காணவோ, கட்டுப்பாட்டில் வைக்கவோ வழிகள் அறியப்பட்டுள்ளன. உங்கள் கடவுளுக்கு இதுபோல் ஏதேனும் attributes இருக்கின்றனவா?

கும்மி said...

//பூமின்னு நாம வளர இடத்துக்கு ஏன் சொல்றீங்க ? இதுக்கு வேற பெயர் வைக்க வேண்டியது தானே ? //

அதானே?

Terre
पृथ्वी
Toka
Jord
Aarde
Erde
אדמה
โลก
Земля
Föld

இப்படியெல்லாம் சொல்லுறவங்களை என்ன செய்யலாம்?

ஆதிமூலகிருஷ்ணன் said...

ராஜன் என்பது ராஜன் ராதாமணாளன்தானே? முந்தைய கோடீஸ்வரர் பதிவு பிரமாதம். தொடர்ந்து கலக்குங்கள்.. ஆனால் முந்தைய சிவபெருமான் பதிவைக்கண்டேன். அடிப்படைக்கருத்தில், கடவுள் மறுப்பில் மாற்றுக்கருத்து இல்லை எனினும் அது எனக்குப் பிடிக்கவில்லை. அது கண்ணியமாக எழுதப்படவில்லை. எழுத்தில் சற்று கண்ணியம் காத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். விளையாட்டுத்தனம் இல்லாமல் சீரியஸாகவே ஒரு இயக்கமாகச் செய்யலாம். உங்களுக்கும், வால்பையனுக்கும் வாழ்த்துகள்.!

அப்துல் சலாம் said...

அந்த anony பய புள்ள இனி நம்ம bolg பக்கம் வாராது என்று நினைக்கிறன்.
இருந்தாலும் அவர் comment-ஐ சென்சார் செய்து வெளியிட்டு இருக்கலாம்

VIKNESHWARAN said...

//* சிவன் பாம்ப ( கழுத்துல தொங்கறது ) என் மேல ஏவி விடலாம்//

ஹிஹிஹி.... கரெக்டா குறிப்பு போடுறிங்க...

//டோண்டு ஒர்ரி ! //

இங்க தான் சூட்சமமே இருக்கு போல...

thamizan said...

//ஆதரமா ? காத்து எப்படி இருக்கும் ? காற்றை பார்திருகீரீர்களா ? தண்ணிக்கு என்ன நிறம் ? நெருப்புக்கு என்ன கலர் ? பூமின்னு நாம வளர இடத்துக்கு ஏன் சொல்றீங்க ? இதுக்கு வேற பெயர் வைக்க வேண்டியது தானே ?//

//சரி வெச்சுட்டா ! நீங்க நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா ?!?!?! //

நான் செய்யறது இருக்கட்டும். நான் சொல்ல வந்தது இதனுடைய பெயரும் நீங்க புத்தகத்துல படிச்சது தானே ? அதை மட்டும் அப்படியே என் ஏற்றுக் கொண்டீர்கள் என்று தான் கேட்கிறேன் . சரீங்க இது தான் காதுன்னு காமிங்க , அப்பறம் என்ன வேணும்னாலும் பேசலாம் .


//நீங்க சொல்ற இந்த காற்று, நீர், நெருப்பு போன்றவற்றிற்கெல்லாம் பல attributes, properties இருக்கு. அதை வைத்து அவற்றை அடையாளம் காணவோ, கட்டுப்பாட்டில் வைக்கவோ வழிகள் அறியப்பட்டுள்ளன. உங்கள் கடவுளுக்கு இதுபோல் ஏதேனும் attributes இருக்கின்றனவா? //

நான் சொல்ற கடவுள் எல்லா உருவங்களிலும் வருவார், அவர் அன்பாவும் வருவார் , அம்மாவாவும் வருவார் , அப்பவாவும் வருவார். அவர் இந்த உலகம் . அவரை பத்தி சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லே . அவரே கிருஸ்துவர்களுக்கு ஏசு முஸ்லிம்களுக்கு அல்லா இந்துக்களுக்கு பிள்ளையார் . அவர் எல்லா இடத்துலயும் அன்பு மட்டும் தான் சொல்லிருக்கார் . அவரே அன்பா கூப்பிட்ட அவர் நிச்சயம் வருவார் . கடவுளுக்கு மற்றொரு பெயர் அன்பு தான் .

அது சரி , இந்த மாதிரி கடவுள் இல்லேன்னு சொல்லிட்டு இருக்கவங்க நிறைய பேர் ஏன் அம்மா சொன்னா அப்பா சொன்னா , மனைவி சொன்னன்னு கோவிலுக்கு போறீங்க ? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லேன்னா போக இருக்க வேண்டியது தானே .கடவுள் நம்பிக்கை இல்லேன்னு சொல்லிட்டு இந்த மாதிரி கோவிலுக்கு போறது என்னன்னா ஊருக்கு ஒரு நியாயம் தனக்கு ஒரு நியாயம் . ஏன் போனேன்னு கேட்டா மத்தவங்க மேல பழி போடறீங்க

thamizan said...

//பூமின்னு நாம வளர இடத்துக்கு ஏன் சொல்றீங்க ? இதுக்கு வேற பெயர் வைக்க வேண்டியது தானே ? //

அதானே?

Terre
पृथ्वी
Toka
Jord
Aarde
Erde
אדמה
โลก
Земля
Föld

இப்படியெல்லாம் சொல்லுறவங்களை என்ன செய்யலாம்? //

நிறைய மொழிகள் உங்களுக்கு தெரிந்திருகிறது , வாழ்த்துக்கள்

ராஜன் said...

//ராஜன் என்பது ராஜன் ராதாமணாளன்தானே? முந்தைய கோடீஸ்வரர் பதிவு பிரமாதம். தொடர்ந்து கலக்குங்கள்.. ஆனால் முந்தைய சிவபெருமான் பதிவைக்கண்டேன். அடிப்படைக்கருத்தில், கடவுள் மறுப்பில் மாற்றுக்கருத்து இல்லை எனினும் அது எனக்குப் பிடிக்கவில்லை. அது கண்ணியமாக எழுதப்படவில்லை. எழுத்தில் சற்று கண்ணியம் காத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். விளையாட்டுத்தனம் இல்லாமல் சீரியஸாகவே ஒரு இயக்கமாகச் செய்யலாம். உங்களுக்கும், வால்பையனுக்கும் வாழ்த்துகள்.!//

:-)

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

ராஜன் said...

//அந்த anony பய புள்ள இனி நம்ம bolg பக்கம் வாராது என்று நினைக்கிறன்.
இருந்தாலும் அவர் comment-ஐ சென்சார் செய்து வெளியிட்டு இருக்கலாம்//

சரி பண்ணிடலாம் தல

ராஜன் said...

//நான் சொல்ற கடவுள் எல்லா உருவங்களிலும் வருவார், அவர் அன்பாவும் வருவார் , அம்மாவாவும் வருவார் , அப்பவாவும் வருவார். அவர் இந்த உலகம் . அவரை பத்தி சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லே . அவரே கிருஸ்துவர்களுக்கு ஏசு முஸ்லிம்களுக்கு அல்லா இந்துக்களுக்கு பிள்ளையார் . அவர் எல்லா இடத்துலயும் அன்பு மட்டும் தான் சொல்லிருக்கார் . அவரே அன்பா கூப்பிட்ட அவர் நிச்சயம் வருவார் . கடவுளுக்கு மற்றொரு பெயர் அன்பு தான் .

அது சரி , இந்த மாதிரி கடவுள் இல்லேன்னு சொல்லிட்டு இருக்கவங்க நிறைய பேர் ஏன் அம்மா சொன்னா அப்பா சொன்னா , மனைவி சொன்னன்னு கோவிலுக்கு போறீங்க ? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லேன்னா போக இருக்க வேண்டியது தானே .கடவுள் நம்பிக்கை இல்லேன்னு சொல்லிட்டு இந்த மாதிரி கோவிலுக்கு போறது என்னன்னா ஊருக்கு ஒரு நியாயம் தனக்கு ஒரு நியாயம் . ஏன் போனேன்னு கேட்டா மத்தவங்க மேல பழி போடறீங்க//


எங்களுக்கு கடவுள்ங்கற பேரு பிடிக்காம கூவிக்கிட்டு இல்ல தலைவா ! கான்செப்ட் தான்.... காத காதுன்னு சொன்னா என்ன வேற எப்பிடி சொன்னா என்ன ?! அது கேக்குது இல்ல ! அது ஒரு வேலை செய்யுது ! வேற வேற மொழில காதுக்கு வேற வேற பேரு ... கடவுளுக்கும் தான் ! கம்முனாட்டினு நீங்க பேரு வெச்சிருந்தாலும் நாங்க கேள்வி கேக்க தான் செய்வோம் . அன்பே கடவுளா ? ஓகே அன்பு செய்யறத விட்டுட்டு எதுக்கு சூடம் கொளுத்தி மணி ஆட்டறீங்கன்னு தான கேக்கறோம் ?

கோயிலுக்கு நான் போறது இல்ல ! அப்பிடி போக சொல்லி யாரவது கூப்பிட்டா (நல்ல பிகர் !) போவேன் அது ஒரு எடம் அவ்வளவுதான் ! மேடை போட்டு அசிங்க அசிங்கமா திட்ட யோசிக்காதவன் முக்காட்ட போத்திட்டு கோயிலுக்கு போயி பூச பண்ணுவேன்னு நெனைக்கறீங்களா

thamizan said...

//எங்களுக்கு கடவுள்ங்கற பேரு பிடிக்காம கூவிக்கிட்டு இல்ல தலைவா ! கான்செப்ட் தான்....//

நான் யாருக்கும் தலைவன் கிடையாது . என்ன தயவு செய்து தலைவான்னு சொல்லாதீங்க , நண்பர்ன்னு சொன்ன நல்ல இருக்கும் ?



உங்களுக்கு பிடிச்ச கான்செப்ட் படி கும்பிடுங்க . அவ்வளவு தான். கடவுள் தன்னை இப்படி தான் கும்பிடனும்னு சொல்லலை நண்பரே. இது எல்லாம் நாம ஏற்படுதினது தான். அந்த மாதிரி கடைகள் வந்ததுக்கு காரணம் அதன் மூலமா எதாவது செய்தி சொல்லனும்னு தான்.



ஒருத்தனை புகை பிடிகதேன்னு சொன்ன கேட்பானா. ஆனா அதன் மூலம் வர நன்மை தீமை சொன்ன கேட்பான் ? அவ்வளவுதான் ?

thamizan said...

//எங்களுக்கு கடவுள்ங்கற பேரு பிடிக்காம கூவிக்கிட்டு இல்ல தலைவா ! கான்செப்ட் தான்....//

நான் யாருக்கும் தலைவன் கிடையாது . என்ன தயவு செய்து தலைவான்னு சொல்லாதீங்க , நண்பர்ன்னு சொன்ன நல்ல இருக்கும் ?



உங்களுக்கு பிடிச்ச கான்செப்ட் படி கும்பிடுங்க . அவ்வளவு தான். கடவுள் தன்னை இப்படி தான் கும்பிடனும்னு சொல்லலை நண்பரே. இது எல்லாம் நாம ஏற்படுதினது தான். அந்த மாதிரி கதைகள் வந்ததுக்கு காரணம் அதன் மூலமா எதாவது செய்தி சொல்லனும்னு தான்.



ஒருத்தனை புகை பிடிகதேன்னு சொன்ன கேட்பானா. ஆனா அதன் மூலம் வர நன்மை தீமை சொன்ன கேட்பான் ? அவ்வளவுதான் ?

ராஜன் said...

//நான் யாருக்கும் தலைவன் கிடையாது . என்ன தயவு செய்து தலைவான்னு சொல்லாதீங்க , நண்பர்ன்னு சொன்ன நல்ல இருக்கும் ?//

இப்பிடித்தான் கடவுள்னு எதையும் சொல்லாதீங்க அன்புனே சொல்லுங்க ! ஏன்னா எவனும் எவனுக்கும் கடவுள் கெடயாது

ராஜன் said...

//உங்களுக்கு பிடிச்ச கான்செப்ட் படி கும்பிடுங்க . அவ்வளவு தான். கடவுள் தன்னை இப்படி தான் கும்பிடனும்னு சொல்லலை நண்பரே. இது எல்லாம் நாம ஏற்படுதினது தான். அந்த மாதிரி கதைகள் வந்ததுக்கு காரணம் அதன் மூலமா எதாவது செய்தி சொல்லனும்னு தான்.//

என்ன சேதின்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்

ராஜன் said...

//ஒருத்தனை புகை பிடிகதேன்னு சொன்ன கேட்பானா. ஆனா அதன் மூலம் வர நன்மை தீமை சொன்ன கேட்பான் ? அவ்வளவுதான் ?//

அப்ப சாமி கும்பிடாதே யோசின்னு சொல்லக் கூடாது ... சாமி கும்பிட்டா என்னாகும்னு சொல்லணும் இல்லையா ?

ஜெகதீஸ்வரன் said...

சிவனைப் பத்தி மட்டமல்ல. எல்லா கடவுள்களையும் எழுத உங்களுக்கு தகுதி இருக்கு தல. சும்மா பின்னுங்க...