Thursday, December 31, 2009

அனானிகளும் அண்டர் வேரும்!



அனானிகள் மட்டும் இல்லைனா வலையுலகம் என்னவாயிருக்கும்னு கற்பனை கூட பண்ணி பாக்க முடியல ! கும்மியாகட்டும் கோலாட்டமாகட்டும், ஏற்க்கனவே உள்ள வந்து டவுசர் கழண்ட பதிவர்கள் சின்ன கேப்பு விட்டு அனானியா நொழயரப்போ நமக்கு குண்டலினி அப்பிடியே குபீர்னு எழும்பி கும்பிக்கும் குமட்டுக்கும் நடுவுல நங்குன்னு நிக்கும் பாருங்க .... அடா ! அடா ! அடா !
எப்பிடியோ அவர்கள் மட்டும்தான் என்னோட போரடித்து சோம்பியிருந்த பணி நேரங்களை கிளுகிளுப்பாக்கும் கில்லாடிகள் .

பஞ்சர் பாயின்ட் : சொல்ல மறந்துட்டேன் ! அவசரத்துல சொந்த ஐடீலையே கலீஜ் அனானி கமெண்ட கும்மிக்கு நடுவுல கொட்டி மாட்டிக் காதீங்க !

ரெண்டு நாள் முன்னாடி ஒரு கும்மில மரியாதைக் குரிய அண்ணன் சொள் அலகன் நண்பர் வால் பையனுக்கு சேர்க்கை சரியில்லை எனவும் என்னோட எதிர் தாக்குதல் எபக்டிவா இல்லைனும் பின்னூட்டி இருந்தார் . அவரு இதெல்லாம் இரும்புக் கரம்கொண்டு அடக்கனும்னு நெனைக்கறாரு !

அண்ணே ! இருக்கற கரத்துக்கே இன்னும் வழி தெரியல !(எப்ப ஈடு விழுமோ !) இரும்புக் கரமெல்லாம் நமக்கு தாங்காது .

பஞ்சர் பாயின்ட் : வெரலே போதும் ... உட்டு ஆட்டிரலாம்

அப்பறம் குடி காரர்களை தடுக்க நம்ம அனானிகள் படும் பாட்ட பாத்தா எனக்கு ரொம்ப கஷ்ட கஷ்டமா இருக்கு ! அக்பர் கவுசர் தோத்தாரு போங்க ... எதோ இவுங்க அப்பன் வீட்டு காசுல தண்ணியடிச்சா மாதிரி ஓவரா சீனப் போடறானுங்க .
( விடுங்க பாஸு பச்ச போர்ட பாத்தாலே டங்சனாயிருது )

ஓகே நெக்ஸ்ட் என்ன கேள்வி தான் ( பதிலளித்து உதவுவோரை நாலு நாள் மறக்க மாட்டேன் )



1 . இயேசு இளமைக் காலத்தில் என்ன செஞ்சுட்டு இருந்தார் (பத்து - முப்பது வயசு வரை )
2 . இயேசுநாதரும் நபிகளும் ஒரே நபரா ?
3 . கிருஷ்ண பரமாத்மா சாகும்போது அவருக்கு வயசு என்ன ?





Thursday, December 24, 2009

கற்பழிப்பு - ஒரு ஜிலீர் பார்வை

கற்பாவது யாது ? அதற்கான வரையறை என்ன ? என்றெல்லாம் ஆழ அமர விவாதிப்பது மண்டைக் கிறு கிறுப்பை அதிகப் படுத்தக் கூடுமாதலால் அதனை அழிப்பதாக சொல்லப் படும் நிகழ்வான கற்பழிப்பு குறித்த ஒரு பார்வை மட்டுமே அன்றி இங்கு வேறெந்த பலான லிங்கு களும் இங்கு இணைக்கப் படவில்லை .

சமீப காலங்களில் இளம் பெண் ஏமாற்றிக் கற்பழிப்பு ; பருவப் பெண் பயமுறுத்திக் கற்பழிப்பு ; குடும்பப் பெண் குரூரமாக கற்பழிப்பு என்றெல்லாம் கண்ணைக் கவரும் வகையில் பிரசுரிக்கப் படுவதால் பொட்டிக் கடைகளில் தம்மடிக்கச் சென்றால் சென்ற வேலையை மட்டும் பார்க்காது தொங்குவதனைத்தையும் கூர்ந்து பார்த்து ( அட புலனாய்வுப் பத்திரிகை கள சொன்னேங்க !) வாங்கிப் படித்ததால் என் சிறு மூளை கிளைவிட்டு கவட்டை கவட்டையாக வளர்ந்து செவி வழி நீள்வதால் பிறந்த பதிவு இது ....

இன்றைய தேதியில் ஜெயில் பறவைகளிரண்டின் லாக் அப் ரவுசுகள் தான் ஹாட் டாபிக் ! ஒன்னு தாஜ் ஹோட்டல் தாக்குதலில் கைதான காசாப் மற்றொன்று காஞ்சிபுரம் காமச் சாமியார் !
கசாபை பொறுத்த மட்டிலும் ராஜ வாழ்க்கை ! கோழிக் கறி, கொத்து பரோட்டா என குஜாலாக போகிறது அவனது வாழ்க்கை ( இந்தியாவின் ஜீவகாருண்யத்தை இந்த இடத்தில் மெச்சியே ஆகவேண்டும் )
நீதி மன்றத்தில் நிறுத்தி குற்றப் பத்திரிகை தந்தால் " எனக்கு ஆங்கிலம் தெரியாது " என்று சொன்னான் ... அதைத் தொடர்ந்து ஒரு மாதம் மாமியார் வீட்டில் ஓய்வு !
அத்தனை பக்கங்களையும் உருதில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் " எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது " என்று பல்டியடிக்க கண்ணாமுழி பிதுங்கி நிற்கிறது இந்திய அரசு !

அடுத்து , சாமியார்களைப் பொறுத்த மட்டும் நம்ம மக்கள் எதிர்பார்க்கும் அதீத சக்திகளேதும் அவர்களிடம் இல்லாவிடிலும், புத்திர பாக்யத்திற்கு வரம் கொடுக்கும் வித்தை மட்டும் வம்சாவழியாக கைவரப் பெற்றிருக்கின்றனர் .
வேறெந்த பரிகாரத்திற்க்கும் நாள்குறிக்க தாமதமான போதும் , புத்திர பாக்ய மகா ஹோமம் என்று வந்து விட்டால் அன்றிரவே காணிக்கை கூட இல்லாமல் யாக குண்டத்தில் நெய் ஊற்றத் தொடங்கி விடுவார்கள் .
அவர்களை நொந்து என்ன பயன் ? மாவைக் கையில் கொடுத்து கல்லை நீட்டிகிட்டு நின்னா எவனுமே தோச ஊத்ததான் பார்ப்பான் !( இது வினை முற்று !)
ஆனால் இப்போது மாட்டிக் கொண்டு செருப்பிலும் ,சீவக் கட்டையிலும் அடி வாங்கும் நம்ம காஞ்சீபுரம் சாமியாரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது !
பொழைக்கத் தெரியாத பயபுள்ள ! ( இதுவே நம்ம வலையுலக தொலைக் காட்சி புகழ் ஜோதிடர்களாக இருந்தால் தடயமே இல்லாம நேக்கா மேட்டர முடிச்சிருப்பாங்க ! பாவம் நம்மாளுக்கு சூது வாது தெரியல !
கற்பழித்ததாக செருப்படி வைபவத்தை அரங்கேற்றிய மக்கள் யாரைக் கற்பழித்தான் என்று சற்றும் எண்ணிப் பார்க்கவில்லை!

இங்கு தவறென முன்வைக்கப் படும் குற்றங்கள் இவைதான்

* கற்பழிப்பு
* ஆபாச வீடியோ
* கோவிலின் புனிதத்தை கெடுத்தது

சாமியார் கற்பழித் ததாக சொல்லப்படுவதே கிச்சு கிச்சு மூட்டும் ஐட்டமாக இருக்கிறது .
அதுவும் ஹான்ஸ் கொடுத்து போதையேற்றிக் கற்பழித்தாராம். சரி ஹான்சை எடுத்து உதட்டை இழுத்து உருட்டி வைக்கும் வரை பாதிக்கப் பட்ட பெண்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களாம் ? புதினா துவையல் என்று நினைத்து நடுநாக்கில் வைத்து நக்கியிர்க்கக் கூடுமோ ! அதற்கும் வழியில்லை நாசி அரகில் கொண்டு சென்றாலே நாக்கை புரட்டுமளவு நாற்றமடிக்கும் வஸ்து அது
ஆக " போதையேறிப் போச்சு " என்பது நிர்வாணமான பித்தலாட்டம் !
அதற்கு பெயர் "பிகர் மடிப்பது ' இதை தமிழ்நாட்டில் எவனுமே செய்ததில்லையா ?
பிகர் மடித்த சப்பை மேட்டருக்கெல்லாம் செருப்படி கொடுத்தால் நாடு தாங்குமா?
சாமியார் பல நாட்களாக பிளான் பண்ணி ஸ்கெட்ச் போட்டு ஆம்னி வெண் வைத்துக் கடத்திச் சென்று கற்பழித்தது போல சீன கிரியேட் பண்ணி விட்டார்கள் . நிஜத்தில் நடந்தது கற்ப்பழிப்பே இல்லை. கள்ளக் காதல் அவ்வளவுதான் !

அடுத்து ஆபாச வீடியோ ! கலா ரசனையுடன் நம்மாளு யோசித்திருக்கிறார் ; எத்தன நாளைக்குதான் அடுத்தவன் நடிச்ச படத்தையே பாக்கறதுன்னு அவரே ஹீரோவாகிட்டாரு! வியாபார நோக்கம் ஏதுமில்லாமல் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு அந்தரங்க வீடியோவை வெளியிட்டது குற்றமென்றால் செல்போனில் ரிப்பேர் வேலையை மட்டும் பார்க்காமல் உள்ளிருந்த படத்தையும் பார்த்த அந்த செல்போன் கடை பார்ட்டியை தான் சொல்ல வேண்டும் . சரி பார்த்தமா .... ம்ம்ம்ம் ந்ஜாய் பண்ணினோமா ! அத்தோட விடாம ஊரு முழுக்க பயபுள்ள பரப்பி விட்டுருச்சு ! பாக்கப் போனா ! இந்த விஞ்ஞானி உள்ள வராம இருந்திருந்தா இத்தன பிரச்சனையே இல்ல !

அடுத்து புனிதம் கெடுத்தது !

என்னமோ அவர் பூஜை நேரத்துல மணியடிக்காம வேற எதோ பண்ணின மாதிரி அவர மட்டும் குத்தம் சொல்றது நல்லாவா இருக்கு ! வெள்ளந்தின்னவன அடிக்கரப்போ வெரல் சூப்பினவளையும் சாத்தரது தான ஒலக வழக்கம் ! அப்பறம் ? சும்மா இருந்தவன சொரிஞ்சு விட்டுட்டு இப்போ என்னவோ நளாயினிக்கு நாத்தனார் லெவலுக்கு பிட்டு ஓட்றாங்க. கோவில் புனிதம் பாழ் பட்டுவிட்டது என்றால் அவர் ஒன்னும் முட்டு சந்தில் உக்காந்து சுய இன்பம் செய்தாரில்லை !சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பல யாகங்களை நடத்தி முடித்திருக்கிறார் ! இதில் நெய் ஊற்றிய சாமியாருக்கு மட்டும் தண்டனை என்பது ஏற்க்க முடியாதது ! குண்டத்தை என்ன செய்வது ? இதில் கற்பழிப்பு என்பதெல்லாம் நம்மை -------------- , ------------------ ஆக்கும் வேலை !

ஊரே தப்பு செய்து விட்டு ஒரு மாங்காய் மடையன் மாட்டினால் அவன் மண்டையில் மொளகா அரைப்பது இங்கு வாடிக்கையாகிப் போய் விட்டது !

நண்பர்களே ! நம்மாளாகாததை ஒரு அரை மண்டையன் சாதித்து விட்டான் என்ற காண்டு ஒரு பக்கமிருந்தாலும் , நியாயம்(!) வெல்ல குரல் கொடுப்போம் !

என்ன பண்றது ? நாமதான் இதெல்லாம் கேக்க வேண்டியிருக்கு !

யாரையாவது ஹெல்ப்புக்கு கூப்பிடனும் தட்டிக் கேக்க ! சோ ' வைக் கூப்பிட்டா சத்தமா கேப்பார் " எங்கே பிராமணன்னு " ?!!!

Monday, December 21, 2009

டாக்டர் எக்ஸ் இளசுகளின் எழுச்சி நாயகன்

ஆண்மைக் குறைவு , ஜோசியம் ,அதிர்ஷ்ட கல் , சொரியாசிஸ் , அம்மா பகவான் , மந்திரத் தகடு , பஜனை , அழைக்கிறார் & மீட்கிறார் வகையராகளுக்கு நட்ட நடுவில் நச்சென்று நல்ல பாம்பாய் படமெடுத்து நிற்கிறது நமது சன் நியூஸ் நிகழ்ச்சி ஒன்று !


எத்தனையோ மொக்கை புரோகிராம்களை உலகெங்குமுள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சன் குழும செய்தி சேனல் சமீப காலமாக ( ரொம்ப நாளாவே இருக்கு ... இப்போ தான் மெருகேத்தி இருக்காங்க !) தமிழ் இளைஞர்களின் சாட்டர்டே நைட் பார்டிகளை ஓரங்கட்டுமளவுக்கு தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி தான் டாக்டர் எக்ஸ் !


தமிழ் சேனல் களில் விஜய் டிவியில் மறைந்த டாக்டர் மாத்ரு பூதம் வழங்கிக் கொண்டிருந்த புதிரா புனிதமா ! நிகழ்ச்சிக்கு பிறகு வேறெந்த பாலியல் விளக்க நிகழ்ச்சியும் முக்கியத்துவம் பெற்றதில்லை ... ஆனால் இப்போது சன் நியூஸ் தொலைக் காட்சியின் டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர் களின் நெஞ்சில்( ! ) பால் வார்த்து வருகின்றதென்றால் அது மிகையல்ல !

கதா நாயகன் ! :- இந்த நிகழ்ச்சியில் ஆலோசனைக் கென்று தனியொரு மருத்துவர் இல்லையெனிலும் பெரும்பாலான வாரங்களில் பங்கு பெறுபவர் டாக்டர் ராமராஜ் .
இன்முகத்துடன் நேயர்களின் கேள்விகளுக்கு இவர் பதில் அளிக்கும் முறையும் எப்பேர் பட்ட கேவலமான கேள்விக்கும் மெர்சலாகாமல் பொறுமையுடன் விளக்கம் தரும் விதமும் சிலிர்க்க வைக்கின்றன.

தமிழ் இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக உருவெடுத்துள்ள இவரை முன்னணி அரசியல் கட்சிகள் எதிர்வரும் இடைப் பருவத் தேர்தலில் பயன் படுத்தினாலும் வியப்பில்லை .

வளர்ந்து வரும் இவரது செல்வாக்கு தமிழ் சினிமாவின் முன்னணி தளபதிகளுக்கும் , புயல்களுக்கும் அடிவயிற்றில் வெடி வைத்திருப்பதேன்னவோ நிஜம் .

நாம் சற்றும் எதிர் பாராத அளவிற்கு பெண் ரசிகைகளின் ஆதரவு இவருக்கு அமோகமாக உள்ளது . அதுவும் மணமான பெண்களின் மனதில் மன்மதனாக பரிணமித்திருக்கிறார்.

கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டு சிறுவர்களின் துர்க் கனவுகளின் பூசாண்டியான சேலம் சிவராஜ் போன்றவர்களின் பயமுறுத்தல் களால் மிரண்டிருந்த விடலைகளின் பயத்தை போக்கி நல வழிப் படுத்தும் முயற்ச்சியில் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் நமது மதன காமராஜன் ! ( அப்போதெல்லாம் அந்த வைத்தியர் வந்து ராத்திரில கட்டிங் பிளேயரோட கட்டல் பக்கத்துல உக்காந்திருக்கற மாதிரி தெனமும் கனவு வரும் !)

பல நேரங்களில் மொக்கை கேள்விகள் கேட்கப் படுகையில் மற்ற டாக்டர்களைப் போல் டெண்சனாகாமல், அதையே நகைச்சுவையாக மாற்றுவதில் நமது டாக்டர் ஜெகஜ் ஜாலக் கில்லாடி !


கள்ள உறவுகள்
வைத்திருப்போரின் கேள்விகளுக்குத் தெள்ளத் தெளிவாக பதிலளிப்பதில் இவர் ஒரு ஜாம்பவான் !


சுய இன்பம் மற்றும் திரு மனத்திற்கு முன்பான உடலுறவுகள் தொடர்பான வினாக்களுக்கு கருத்து சொல்லி கடுப் பேத்தாமல் ஊக்கமளிக்கும் விதத்தில் நர்சரி குழந்தை களுக்கு பாடம் சொல்லித் தருவது போல கை ஜாடைகளுடன் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அவரது பாங்கு பட்டையை கிளப்புகிறது .


போலி டாகடர்களிடம் தொலைக் காட்சி நேரலை நிகழ்சிகளில் வில்லங்கமான கேள்விகள் கேட்டால் உடனே உங்க ஊருக்கு ஆறாம் தேதி பஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கற மீனா லாட்ஜுக்கு வருவேன் நேர்ல வந்து பாருங்க நன்றி வணக்கம்னு எஸ்கேப் ஆயிடுவானுங்க !
ஆனா நம்ம தல இதுவரை எந்த நேயரையும் தனது கிளினிக்குக்கு வந்து பார்க்கச் சொன்னதே இல்லை!


இந்த நிகழ்ச்சியினை இரண்டு மணி நேரமாக நீட்டிப்பு செய்து, நிகழ்ச்சியின் பெயரை யூத் புல்லாக "காமராஜ் கார்னர்" என்று மாற்ற தினமும் லட்சக் கணக்கான ரசிகர் கடிதங்கள் மேற்ப்படி தொலைக்காட்சி நிறுவனத்தில் தினமும் குவிகின்றன.

நிகழ்ச்சியினிடையே ரசிகர்களை பேச விடாமல் பேட்டி காணும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் சொந்த தாம்பத்ய சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர். நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை ! ஆனால் அதை நிகழ்ச்சிக்கு பின்னர் வைத்துக் கொண்டால் இன்னொரு தமிழனின் வீட்டில் சீக்கிரம் விளக்கணையும்! அதுமட்டுமின்றி பங்குபெறும் அப்பாவி நேயர்களின் வாயை பிடுங்கி அவர்களின் அந்தரங்கத்தின் அண்டர்வேர் அவுத்துப் பார்ப்பதில் செய்தி வாசிப்பாளர்கள் மிகுந்த முனைப்பு காட்டுவது நமக்கு ஜாலியாகவும் காமெடியாகவும் இருந்தாலும் , நேயரை நினைத்தால் பாவமாக இருக்கிறது;

எனவே சிற்ச்சில குறைகள் இருந்தபோதும் பொத்தாம்பொதுவாக பார்க்கையில் டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சி தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை தொண்ணூறு டிகிரியில் செங்கூத்தாக தூக்கி நிறுத்தும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை !

டாக்டர் வாழ்க !

ராஜா ! காம ராஜா ! எம் பி பி எஸ் !


Friday, December 18, 2009

வகுப்பறையில் கச முசா! & வாத்தியாரு போட்ட தாப்பா !

போன வாரத்துல நானும் நம்ம தோஸ்தும் காலேசுக்குள்ளார ஒவ்வொரு கிளாசா எட்டிப் பாத்துகிட்டு நடந்து வரும்போது
( எங்க கிளாசு போரடிச்சதால வாக்கிங்- அதுவுமில்லாம எங்க காலேசுல யாரு வேணா எந்த கிளாசுல வேணா போயி உக்காந்துக்கலாம் ; வாத்தியாருகிட்ட சந்தேகம் கேக்கலாம் ! யாரும் ஒன்னியும் புடுங்க முடியாது ; எல்லாம் பிரின்சுபாலு பிளாக் ராஜ் புண்ணியம்) புட்பால் கிரவுண்டு ஓரத்துல ஒரு வகுப்பறைல சத்தம் பெருசா இருந்துச்சு !

"அதாண்ட போயி இன்ன விசியம்னு கேக்கலாம் அண்ணாத்தேனு " நா கேக்க ,

"இல்ல நைனா அது அச்ட்ராலாஜி டிபாட்மண்டு ; அந்த வாத்தியாரு அல்லாத்தையும் உக்காத்தி வெச்சுட்டு மை போடுவாரு ; ரேக பாப்பாரு ; அப்பால அந்த வித்தைய எல்லாப் புள்ளைங்களுக்கும் கத்து குட்பாரு! - நமக்கு சரிப் பட்டு வராது வேற எதுனா பேர் அன்டு லவ்லி கிளாசா பாத்து போயி குந்திக்கலாம்" ன்னு நம்ம தோஸ்து சொன்னாரு !


நாந்தான் அத கேக்காத " இல்லபா நமக்கும் ஒரு மாறி கீது ! சிட்டு ஒன்னியும் மாட்ட மாட்டேங்குது ! ஜாதகத்துல எதுனா பிராபளம் கீதானு ஒரு தபா பாத்துனு வந்துரலாம்னு'' நச்சு பண்ணி இஸ்துனு போனா

அந்த கிளாஸ் ரூமு வாசல்லையே ஒரு மெகா சைஸ் போட்டா போட்டு ஒரு பெருசு மூஞ்சிய சிர்ச்சா மாதிரி வெச்சுனு போஸ் குட்துன்னு இருந்திச்சு. அது ஒட்டி லெப்டு சைடுல வகுப்பறைன்னு ஒரு போர்டு வேற !


'' இது யாரு பாஸு இந்த காமெடி பீசு "

'' இதாம்பா வாத்தியாரு - அல்லாத்துக்கும் பாஸு , இவுரு கைல புட்ச்சு பாக்காத ஆளே இல்ல! லட்சம் பேரு இவுராண்ட ஜோசியம் பாத்துருப்பானுங்க ; ஆயரம் பேரு இவராண்ட தொழில் கத்துனுகீறாங்கோ "

" பெர்ய ஆள்தாம் போல; சரி வா என்ட்ரி குட்கலாம் "

அந்த கிளாசுக்குள்ள ஒரு பெரிய போர்டு வெச்சு சந்திரன் எந்திரன்னு எதோ கிருக்கினு இருந்தாரு நம்ம போட்டோல பாத்த அந்த பெர்சு !
ஆடிட்டோரியம் மாறி இர்ந்த கிளாசுல நம்ம தோஸ்து வாலு சொன்னாப்போல சும்மா ஆயரம் பேரு வரிசையா உக்காந்து கவனிச்சுட்டு இருந்தாங்கோ !

வாலு :- எசுச்மி ! வாத்தியாரே ! வண்கம் ! உள்ள வரலாமா ?

வாத்தியாரு எங்க ரெண்டு பேர்த்தையும் மேல இர்ந்து கீழ வரைக்கும் ஒரு தபா உத்து பாத்தாரு !

போச்சுடா ! நம்மாளு ஏற்க்கனவே இங்க வாலாட்டிருக்காரு! இந்த தபா ரெண்டு பேத்துக்கும் சூடம் கொளுத்தி போட்டு சூனியம் வெக்க போறாருன்னு நெனச்சேன் !

ஆனா அந்தாளுக்கு அடையாளம் தெரியல ...


வாத்தியார் :- வாங்க கொளந்தைங்களா போயி உக்காருங்க

( எது கொளந்தைங்களா !)

நானும் வாலும் :- ஒகே சார் !

அப்பா தான் ஒரு பாடத்த ஆரமிச்சாரு " எப்படிடா கடவுளுக்கு தெரியும் "
அது ஒரு குட்டி கதை ( ரஜினி ஸ்டைல்ல !)

நானு :- கடவுளு வேற எங்கயுமில்ல வாத்யாரே உம்ம வாய்லதான் விரிச்சு வெச்சுட்டு (கால) குந்தினு கீறான் !

வாலு :- அக்காம்பா !

அப்பத்தான் நம்ம தோஸ்து ஒரு மேட்டர கண்டு புடிச்சாரு !....வாத்தியார பாத்து அவரு கை காட்ட, அங்க பாத்தா ,அந்தாளுக்கு பின்னால இன்னொரு ரூம் கதவு இருப்பதை பார்த்தா ... பாதி திறந்திருந்த அந்த கேப்புல ஒரு பத்து பேரு மொட்டய போட்டு கிட்டு பட்டய சாத்திகிட்டு " முருகா ! முருகான்னு " பஞ்சாமிர்தத்த நக்கிட்டு இருந்தாங்க !

வாலு:- இன்னா வாத்யாரே ! பாடத்த மேல சொல்லு

வாத்தியாரு :- இது கழிப்பறை அல்ல நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு !

நானு :- அப்ப கழிப்பறைங்கறது பின்னால கீதே அந்த ரூமா?

இத கேக்க சொல்லோ வாத்தியாரு மூடிக்கினாரு வாய ! பாடங் கேட்டுன்னு இர்ந்த புள்ளீங்கில்க்கு வந்த்சி பாரு காண்டு ! யப்பா லுங்கிய அவுத்து வெச்சுகினு ஆளாளுக்கு கோதாவுல குதிக்க ஆரமிச்சுட்டாங்கோ !

அப்பால இன்னா நல்லா முட்டிகிச்சு ! நாம சவுண்டு உட ! நம்ம தோஸ்து ரவுண்டு உட ! கட்சீல நம்ம சைடு ட்ருத் ( அதாமே வாய்ம!) வெய்ட்டா கீதுன்னு புரிஞ்சு கினு நம்ம வசனத்த அல்லாம் அவை குறிப்பில இர்ந்து டெலிட் பண்டாங்கபா ! அப்பால தம் கட்ட வெளிய வந்த சைடு கேப்புல கதவ சாத்தி தாப்பா போட்டாங்கோ...

சரி விடு நைனா இப்ப நாங்க இன்னா தப்பா கேட்டோம் ...

கரீகிட்டா பேச சொல்ல கக்கூசு கிக்கூசுனு கலீஜ் பண்ணி இப்போ நாங்கதான் கைய புச்சு இஸ்த்தொம்னு கம்ப்ளின்ட் குட்த்தா எப்டி !

எது பேசுனாலும் டீஜன்டா பேசுனும் ; அதாம்பா நமக்கு முக்கியம் !



டிஸ்கி 1 : அனானிங்க அல்லாரும் ஒருதபா கட்சி லைன நல்லா பட்ச்சுகுங்க !
டிஸ்கி 2 : அதுக்கு மேல எதுனா நட்ந்தா அந்த லைன நா எச்சி தொட்டு அழிச்சுடுவேன் !


Tuesday, December 15, 2009

பிரபல வலைப் பதிவர்களிடம் ஒரு பகிரங்க மன்னிப்பு !


கடந்த சில நாட்களாக (சில என்ன பல நாட்களாகவே ) வலையுலகில் ஜோதிட மற்றும் கடவுள் நம்பிக்கை சார்ந்த பதிவுகளில் வலியச் சென்று வாயிழுப்பதும், இது போன்ற கடவுள் , ஜோதிடம் போன்ற நம்பிக்கைகளுக்கெதிராக பதிவுகளிடுவதும் , அவற்றிற்கு ஏராளமான பின் மொழிகளும் அதனூடே வாக்குவாதங்களும் வலுப் பெறுவது தொடர்கின்றது.
குறிப்பாக ஆர் வீ சுப்பையா வாத்தியாரின் வலைத் தளங்களில் நமக்கும் அவர்தம் சிஷ்ய கோடிகளுக்கும் இடையிலான விவாதங்களினூடே மூட நம்பிக்கைகள் குறித்தான வினாக்களை எதிர்கொள்ள கையாலாகாமல் மேற்படி பக்த கோடிகளால் விவாதம் வேறு வகையில் திசைமாறவும் உணர்ச்சி மிகுதியில் அவரது ரசிகர்களை நாமும் சற்று எள்ளல் நடையில் சாடியதும் உண்மை .
அஃதன்றி வேறு சில தளங்களிலும் இதனையொத்த சம்பாஷனைகள் பின்னூட்டங்களில் பொறி பறக்க நடந்தேறிக்கொண்டு இருக்கின்றன.
முதலில் நமக்கும் மேற்காண் ஜோதிட பதிவர்களுக்கும் யாதொரு முன்விரோதாமோ காழ்ப்புணர்ச்சியோ துளியும் கிடையாது ;
இருவேறு நம்பிக்கைகளிடையே இது போன்ற கருத்து மோதல்களில் "பிடிக்காவிடில் ஒதுங்கிக் கொள்வது தானே " எனும் கருத்தின் சாரம் வாத்தியாரின் ரசிகர் தரப்பினின்று வலித் தொலிக்கக் கேட்கிறோம் ;
பிளாகர் போன்ற சமூக வலை தளங்களில் பின்மொழிகளையும் விவாதங்களையும் உத்தேசித்தே கருத்துக்கள் பதிவேற்றப் படுகின்றன . ஆயின் எவரையும் தடுக்கவோ ஒதுக்கவோ பிரியமெனில் ஆகச் சிறந்த முயற்சியில் அங்ஙனம் பிரியம் கொண்ட நபரே ஈடுபடட்டும் , நாம் நுழைவதிலுள்ள நியாயம் குறித்து வினாக்கள் எழுப்புவதில் எந்த பிரயோஜனமும் உள்ளதாகப் படுவதில்லை

அது மட்டுமன்றி வெறும் கும்மி கொட்டுவதற்காக இது போன்ற செயலில் ஈடுபடுவதாகக் கொண்டால் எதற்க்காக உம்மை தெரிவு செய்ய வேண்டும் - நீர் ஊரை ஏமாற்றுவதாகப் படுகிறது - இது எமது ஆழ்ந்த நம்பிக்கை .
அதற்காகவே பின்மொழியிடுகிறோம்
ஆயிரம் பிறை கண்ட அபூர்வ ஜோதிடர்களும் மற்றோரும் பின்னூட்டங்களை மட்டுருத்துவதன் மூலமும் ,அழிப்பதன் மூலமும் உமது முகமூடிக்கு மேல் போர்வை போர்வை போர்த்துவதில் ஒருவகையில் எமக்கு மகிழ்ச்சியே !

இங்ஙனம் ஊரை ஏமாற்றும் வேலையை நீவிர் தெரிந்தே செய்யும் பட்சத்தில் போர்வைஎன்ன பொட்டிக்குள் வேண்டுமானாலும் போய் படுத்துக் கொண்டு தங்கள் திருப் பணியை தொடரலாம் .

அவ்வாறன்றி எதிர் கருத்துகளிருப்பின் மட்டுருத்தல்களை நீக்கி பொதுவான விவாதத்திற்கு வரட்டும்
பதிலளிக்க முயற்சிக்கட்டும்

எதற்க்காக இல்லாவிடிலும் தொடரும் அந்த ஆயிரத்திச் சொச்சம் சிஷ்யர்களின் நாளது வரையிலான நம்பிக்கையினை காப்பாற்றும் நிமித்தமாவது

போர்வை திறமின்
முகமூடி துறமின்

இதுகாறும் சுப்பையா வாத்தியார் மற்றும் இன்னபிற வலை தளங்களில் அவர்தம் நம்ம்பிக்கைக் கெதிராய் கருத்துகளிட்டமைக் காக இப்பதிவின் வழி மன்னிப்புக் கோருகிறேன் ...

இது போன்ற எமது வேலைகள் இனியும் தொய்வின்றி தொடரும் ; மாதமொருமுறை மன்னிப்பும் கோரப்படும் ....






Saturday, December 12, 2009

கடை திறப்பு விழா !




உ ! இலாபம் !

கூகுளாத்தா துணை !


இன்று வலைய பாளையத்தில் ( அதாங்க பிளாக்கர் )

பஸ்டாப்பு பக்கத்துல ஆல் இன் ஆல் அழகுராஜா கடை தொறக்கப்

பட்டுள்ளது .



மூணு பெஞ்சுகளோடு

தினத் தந்தி பேப்பரும் வாங்கிப் போடப் பட்டு இருக்கிறது !


இங்கு செய்யப்படும் சேவைகள் ;

சைக்கிள் அரை மணி ஒரு மணி மற்றும் நாள் வாடகைக்கு

கிடைக்கும் , ( பஞ்சரானால் நிர்வாகம் பொறுப்பல்ல )


பெட்ரோமாஸ் லைட்டுகள் வாடகைக்கு கிடைக்கும் !

( கூடை வைத்த பெண்களுக்கும் கிடைக்கும் )

பஞ்சர் ! வீல் கோட்டம் ! மற்றும் சைக்கிளுக்கான அனைத்து உதிரி

பாக கோளாறுகளுக்கும் வைத்தியம் பார்க்கப் படும் .


உத்திரவாதங்கள்

இங்கு கண்டிப்பாக ஜோசியம் பார்க்கப் பட மாட்டாது .

அதுக்கு வாத்தியார் போட்டு வகுப்பெடுக்கவும் ஆகாது .

( நான் ஒன்னும் சுப்பையா வாத்தியார சொல்லல )

செக்ஸ் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப் படமாட்டாது .

( பிரியத்தோடு வேண்டுவோர் தொலை பேசியில் தொடர்பு

கொள்ளவும் .)


முருகனருள் ! அவங்கப்பனருள் என்று பக்தி கேசட்டுகள் விற்பனை

செய்யப் படமாட்டாது .)


முக்கிய விஷயம் ! ஒரு போதும் உங்களது கமெண்டுகள் அழிக்கப்

பட மாட்டாது !


வண்டை வண்டையாக பேசினாலும் இன்முகத்தோடு பிரசுரிக்கப்

படும் என மகிழ்ச்சியோடு தெரிவிக்கப் படுகிறது .


சண்டையிட ! கும்மியடிக்க ! மற்ற தளங்களில் நாங்கள் சந்தித்த

அசவுகரியங்களை கருத்தில் கொண்டு சர்வ சுதந்திரத்துடன்

தொறக்கப் பட்டுள்ள இந்த கடைக்கு மற்ற மொக்கை

கடைகளுக்குத் தரும் அதே ஆதரவைத் தந்து என் வயித்துப்

பாட்டுக்கு கொஞ்சம் வழி பண்ணுங்க சாமியோவ் !