Monday, December 21, 2009

டாக்டர் எக்ஸ் இளசுகளின் எழுச்சி நாயகன்

ஆண்மைக் குறைவு , ஜோசியம் ,அதிர்ஷ்ட கல் , சொரியாசிஸ் , அம்மா பகவான் , மந்திரத் தகடு , பஜனை , அழைக்கிறார் & மீட்கிறார் வகையராகளுக்கு நட்ட நடுவில் நச்சென்று நல்ல பாம்பாய் படமெடுத்து நிற்கிறது நமது சன் நியூஸ் நிகழ்ச்சி ஒன்று !


எத்தனையோ மொக்கை புரோகிராம்களை உலகெங்குமுள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சன் குழும செய்தி சேனல் சமீப காலமாக ( ரொம்ப நாளாவே இருக்கு ... இப்போ தான் மெருகேத்தி இருக்காங்க !) தமிழ் இளைஞர்களின் சாட்டர்டே நைட் பார்டிகளை ஓரங்கட்டுமளவுக்கு தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி தான் டாக்டர் எக்ஸ் !


தமிழ் சேனல் களில் விஜய் டிவியில் மறைந்த டாக்டர் மாத்ரு பூதம் வழங்கிக் கொண்டிருந்த புதிரா புனிதமா ! நிகழ்ச்சிக்கு பிறகு வேறெந்த பாலியல் விளக்க நிகழ்ச்சியும் முக்கியத்துவம் பெற்றதில்லை ... ஆனால் இப்போது சன் நியூஸ் தொலைக் காட்சியின் டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர் களின் நெஞ்சில்( ! ) பால் வார்த்து வருகின்றதென்றால் அது மிகையல்ல !

கதா நாயகன் ! :- இந்த நிகழ்ச்சியில் ஆலோசனைக் கென்று தனியொரு மருத்துவர் இல்லையெனிலும் பெரும்பாலான வாரங்களில் பங்கு பெறுபவர் டாக்டர் ராமராஜ் .
இன்முகத்துடன் நேயர்களின் கேள்விகளுக்கு இவர் பதில் அளிக்கும் முறையும் எப்பேர் பட்ட கேவலமான கேள்விக்கும் மெர்சலாகாமல் பொறுமையுடன் விளக்கம் தரும் விதமும் சிலிர்க்க வைக்கின்றன.

தமிழ் இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக உருவெடுத்துள்ள இவரை முன்னணி அரசியல் கட்சிகள் எதிர்வரும் இடைப் பருவத் தேர்தலில் பயன் படுத்தினாலும் வியப்பில்லை .

வளர்ந்து வரும் இவரது செல்வாக்கு தமிழ் சினிமாவின் முன்னணி தளபதிகளுக்கும் , புயல்களுக்கும் அடிவயிற்றில் வெடி வைத்திருப்பதேன்னவோ நிஜம் .

நாம் சற்றும் எதிர் பாராத அளவிற்கு பெண் ரசிகைகளின் ஆதரவு இவருக்கு அமோகமாக உள்ளது . அதுவும் மணமான பெண்களின் மனதில் மன்மதனாக பரிணமித்திருக்கிறார்.

கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டு சிறுவர்களின் துர்க் கனவுகளின் பூசாண்டியான சேலம் சிவராஜ் போன்றவர்களின் பயமுறுத்தல் களால் மிரண்டிருந்த விடலைகளின் பயத்தை போக்கி நல வழிப் படுத்தும் முயற்ச்சியில் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் நமது மதன காமராஜன் ! ( அப்போதெல்லாம் அந்த வைத்தியர் வந்து ராத்திரில கட்டிங் பிளேயரோட கட்டல் பக்கத்துல உக்காந்திருக்கற மாதிரி தெனமும் கனவு வரும் !)

பல நேரங்களில் மொக்கை கேள்விகள் கேட்கப் படுகையில் மற்ற டாக்டர்களைப் போல் டெண்சனாகாமல், அதையே நகைச்சுவையாக மாற்றுவதில் நமது டாக்டர் ஜெகஜ் ஜாலக் கில்லாடி !


கள்ள உறவுகள்
வைத்திருப்போரின் கேள்விகளுக்குத் தெள்ளத் தெளிவாக பதிலளிப்பதில் இவர் ஒரு ஜாம்பவான் !


சுய இன்பம் மற்றும் திரு மனத்திற்கு முன்பான உடலுறவுகள் தொடர்பான வினாக்களுக்கு கருத்து சொல்லி கடுப் பேத்தாமல் ஊக்கமளிக்கும் விதத்தில் நர்சரி குழந்தை களுக்கு பாடம் சொல்லித் தருவது போல கை ஜாடைகளுடன் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அவரது பாங்கு பட்டையை கிளப்புகிறது .


போலி டாகடர்களிடம் தொலைக் காட்சி நேரலை நிகழ்சிகளில் வில்லங்கமான கேள்விகள் கேட்டால் உடனே உங்க ஊருக்கு ஆறாம் தேதி பஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கற மீனா லாட்ஜுக்கு வருவேன் நேர்ல வந்து பாருங்க நன்றி வணக்கம்னு எஸ்கேப் ஆயிடுவானுங்க !
ஆனா நம்ம தல இதுவரை எந்த நேயரையும் தனது கிளினிக்குக்கு வந்து பார்க்கச் சொன்னதே இல்லை!


இந்த நிகழ்ச்சியினை இரண்டு மணி நேரமாக நீட்டிப்பு செய்து, நிகழ்ச்சியின் பெயரை யூத் புல்லாக "காமராஜ் கார்னர்" என்று மாற்ற தினமும் லட்சக் கணக்கான ரசிகர் கடிதங்கள் மேற்ப்படி தொலைக்காட்சி நிறுவனத்தில் தினமும் குவிகின்றன.

நிகழ்ச்சியினிடையே ரசிகர்களை பேச விடாமல் பேட்டி காணும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் சொந்த தாம்பத்ய சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர். நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை ! ஆனால் அதை நிகழ்ச்சிக்கு பின்னர் வைத்துக் கொண்டால் இன்னொரு தமிழனின் வீட்டில் சீக்கிரம் விளக்கணையும்! அதுமட்டுமின்றி பங்குபெறும் அப்பாவி நேயர்களின் வாயை பிடுங்கி அவர்களின் அந்தரங்கத்தின் அண்டர்வேர் அவுத்துப் பார்ப்பதில் செய்தி வாசிப்பாளர்கள் மிகுந்த முனைப்பு காட்டுவது நமக்கு ஜாலியாகவும் காமெடியாகவும் இருந்தாலும் , நேயரை நினைத்தால் பாவமாக இருக்கிறது;

எனவே சிற்ச்சில குறைகள் இருந்தபோதும் பொத்தாம்பொதுவாக பார்க்கையில் டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சி தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை தொண்ணூறு டிகிரியில் செங்கூத்தாக தூக்கி நிறுத்தும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை !

டாக்டர் வாழ்க !

ராஜா ! காம ராஜா ! எம் பி பி எஸ் !


18 comments:

♠ ராஜு ♠ said...

\\மருத்துவர் இல்லையெனிலும் பெரும்பாலான வாரங்களில் பங்கு பெறுபவர் டாக்டர் ராமராஜ் .\\

காமராஜ்...?!?1

rajan RADHAMANALAN said...

உங்க பதிவ படிச்ச தால வந்த வென தலைவா ... ராம ராஜன் நெனப்பாவே இருக்கு !

வால்பையன் said...

பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணிட்டிங்க, பார்த்துர வேண்டியது தான்!

rajan RADHAMANALAN said...

அப்ப இது வரைக்கும் பாக்கலையா !

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சனிக்கெழம ராத்திரி பத்து மணிக்கு குளிச்சு ஒரு நாமத்த போட்டுட்டு எடுத்துப் புடிங்க கைல ரிமோட்ட !

மகா said...

ஏன் பாஸு இந்த நாமத்த விட மாட்டிங்க போலிருக்கே ......

கும்க்கி said...

சேலம் சித்தவைத்தியரை விடவா.....?

அவர் இளைஞர்களின் விடி வெள்ளி.
எதிர்கால தமிழகத்தை கட்டிக்காக்க நினைக்கும் மகான்.
இன்னும் என்னென்னமோ வாயில வருது...வேணாம்.

கும்க்கி said...

90டிகிரியா?
சான்ஸே இல்ல...

rajan RADHAMANALAN said...

//90டிகிரியா?
சான்ஸே இல்ல...//

மனமிருந்தால் மார்கமுண்டு

கும்க்கி said...

நானும் சைடுல குந்திக்கினேன் நைனா..

நம்பள மாதிரி எலுதாம தினசரி எதுனா எலுதி தள்ளு நைனா...அப்போதான் இந்த ஊரும் உலகமும் நம்பள மிதிக்கும்..சே.மதிக்கும்.

Anonymous said...

நானும் இந்த நிகழ்ச்சியை இந்த வாரம் தான் பார்த்தேன். மிகவும் எளிமையாகவும், நம் பல்வேறு செக்ஸ் சம்பந்தமான பயத்தையும் / மூட நம்பிக்கைகளையும் போக்கும் வண்ணம் அவரின் விளக்கம் அமைந்துள்ளது. மிகவும் அருமையாக உள்ளது அனைவரும் காணவும்.

ஹேமா said...

அட ராதா இங்க ஒண்ணு இருக்கா.இப்பத்தானே கண்டேன்.

rajan RADHAMANALAN said...

ஹையையோ !

இது ஆண்களுக்கான பிரத்யேக சைட்டு

Anonymous said...

What time the Dr.X programme?

வால்பையன் said...

//நர்சரி குழந்தை களுக்கு பாடம் சொல்லித் தருவது போல கை ஜாடைகளுடன் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அவரது பாங்கு பட்டையை கிளப்புகிறது . //


மற்ற சந்தேகங்களூக்கு பிராக்டிகல் கிளாஸ் எடுப்பாரா தல!

ராஜன் said...

//மற்ற சந்தேகங்களூக்கு பிராக்டிகல் கிளாஸ் எடுப்பாரா தல! //

எடுப்பாரு ! ஆனா நம்ம வீட்டுக்கு வந்து தான் எடுப்பேன்னு அடம் புடிப்பாரு

நாமக்கல் சிபி said...

கலக்குய்யா!

வலைப்பூ தலைப்புக்குக் கீழே

"பெட்ரோமாஸ் வாடகைக்குக் கிடைக்கும்" ... சிம்ப்ளி சூப்பர்ப்!

ராஜன் said...

ஐ ! நீங்களா வாங்க ! உக்காருங்க .... காபியா டீயா .... வெயில் நேரம் பெபுசி சாப்புடுங்கன்னே

வால்பையன் said...

//வலைப்பூ தலைப்புக்குக் கீழே//


வீல் பெண்டெடுக்கப்படும்!

இன்னொரு முக்கியமான மேட்டர், கூடை வச்சிகிட்டு வர்ற பொம்பளைங்களுக்கு பெட்ரமாஸ் லைட் வாடகைக்கு கொடுக்கப்படாது!