Friday, December 18, 2009

வகுப்பறையில் கச முசா! & வாத்தியாரு போட்ட தாப்பா !

போன வாரத்துல நானும் நம்ம தோஸ்தும் காலேசுக்குள்ளார ஒவ்வொரு கிளாசா எட்டிப் பாத்துகிட்டு நடந்து வரும்போது
( எங்க கிளாசு போரடிச்சதால வாக்கிங்- அதுவுமில்லாம எங்க காலேசுல யாரு வேணா எந்த கிளாசுல வேணா போயி உக்காந்துக்கலாம் ; வாத்தியாருகிட்ட சந்தேகம் கேக்கலாம் ! யாரும் ஒன்னியும் புடுங்க முடியாது ; எல்லாம் பிரின்சுபாலு பிளாக் ராஜ் புண்ணியம்) புட்பால் கிரவுண்டு ஓரத்துல ஒரு வகுப்பறைல சத்தம் பெருசா இருந்துச்சு !

"அதாண்ட போயி இன்ன விசியம்னு கேக்கலாம் அண்ணாத்தேனு " நா கேக்க ,

"இல்ல நைனா அது அச்ட்ராலாஜி டிபாட்மண்டு ; அந்த வாத்தியாரு அல்லாத்தையும் உக்காத்தி வெச்சுட்டு மை போடுவாரு ; ரேக பாப்பாரு ; அப்பால அந்த வித்தைய எல்லாப் புள்ளைங்களுக்கும் கத்து குட்பாரு! - நமக்கு சரிப் பட்டு வராது வேற எதுனா பேர் அன்டு லவ்லி கிளாசா பாத்து போயி குந்திக்கலாம்" ன்னு நம்ம தோஸ்து சொன்னாரு !


நாந்தான் அத கேக்காத " இல்லபா நமக்கும் ஒரு மாறி கீது ! சிட்டு ஒன்னியும் மாட்ட மாட்டேங்குது ! ஜாதகத்துல எதுனா பிராபளம் கீதானு ஒரு தபா பாத்துனு வந்துரலாம்னு'' நச்சு பண்ணி இஸ்துனு போனா

அந்த கிளாஸ் ரூமு வாசல்லையே ஒரு மெகா சைஸ் போட்டா போட்டு ஒரு பெருசு மூஞ்சிய சிர்ச்சா மாதிரி வெச்சுனு போஸ் குட்துன்னு இருந்திச்சு. அது ஒட்டி லெப்டு சைடுல வகுப்பறைன்னு ஒரு போர்டு வேற !


'' இது யாரு பாஸு இந்த காமெடி பீசு "

'' இதாம்பா வாத்தியாரு - அல்லாத்துக்கும் பாஸு , இவுரு கைல புட்ச்சு பாக்காத ஆளே இல்ல! லட்சம் பேரு இவுராண்ட ஜோசியம் பாத்துருப்பானுங்க ; ஆயரம் பேரு இவராண்ட தொழில் கத்துனுகீறாங்கோ "

" பெர்ய ஆள்தாம் போல; சரி வா என்ட்ரி குட்கலாம் "

அந்த கிளாசுக்குள்ள ஒரு பெரிய போர்டு வெச்சு சந்திரன் எந்திரன்னு எதோ கிருக்கினு இருந்தாரு நம்ம போட்டோல பாத்த அந்த பெர்சு !
ஆடிட்டோரியம் மாறி இர்ந்த கிளாசுல நம்ம தோஸ்து வாலு சொன்னாப்போல சும்மா ஆயரம் பேரு வரிசையா உக்காந்து கவனிச்சுட்டு இருந்தாங்கோ !

வாலு :- எசுச்மி ! வாத்தியாரே ! வண்கம் ! உள்ள வரலாமா ?

வாத்தியாரு எங்க ரெண்டு பேர்த்தையும் மேல இர்ந்து கீழ வரைக்கும் ஒரு தபா உத்து பாத்தாரு !

போச்சுடா ! நம்மாளு ஏற்க்கனவே இங்க வாலாட்டிருக்காரு! இந்த தபா ரெண்டு பேத்துக்கும் சூடம் கொளுத்தி போட்டு சூனியம் வெக்க போறாருன்னு நெனச்சேன் !

ஆனா அந்தாளுக்கு அடையாளம் தெரியல ...


வாத்தியார் :- வாங்க கொளந்தைங்களா போயி உக்காருங்க

( எது கொளந்தைங்களா !)

நானும் வாலும் :- ஒகே சார் !

அப்பா தான் ஒரு பாடத்த ஆரமிச்சாரு " எப்படிடா கடவுளுக்கு தெரியும் "
அது ஒரு குட்டி கதை ( ரஜினி ஸ்டைல்ல !)

நானு :- கடவுளு வேற எங்கயுமில்ல வாத்யாரே உம்ம வாய்லதான் விரிச்சு வெச்சுட்டு (கால) குந்தினு கீறான் !

வாலு :- அக்காம்பா !

அப்பத்தான் நம்ம தோஸ்து ஒரு மேட்டர கண்டு புடிச்சாரு !....வாத்தியார பாத்து அவரு கை காட்ட, அங்க பாத்தா ,அந்தாளுக்கு பின்னால இன்னொரு ரூம் கதவு இருப்பதை பார்த்தா ... பாதி திறந்திருந்த அந்த கேப்புல ஒரு பத்து பேரு மொட்டய போட்டு கிட்டு பட்டய சாத்திகிட்டு " முருகா ! முருகான்னு " பஞ்சாமிர்தத்த நக்கிட்டு இருந்தாங்க !

வாலு:- இன்னா வாத்யாரே ! பாடத்த மேல சொல்லு

வாத்தியாரு :- இது கழிப்பறை அல்ல நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு !

நானு :- அப்ப கழிப்பறைங்கறது பின்னால கீதே அந்த ரூமா?

இத கேக்க சொல்லோ வாத்தியாரு மூடிக்கினாரு வாய ! பாடங் கேட்டுன்னு இர்ந்த புள்ளீங்கில்க்கு வந்த்சி பாரு காண்டு ! யப்பா லுங்கிய அவுத்து வெச்சுகினு ஆளாளுக்கு கோதாவுல குதிக்க ஆரமிச்சுட்டாங்கோ !

அப்பால இன்னா நல்லா முட்டிகிச்சு ! நாம சவுண்டு உட ! நம்ம தோஸ்து ரவுண்டு உட ! கட்சீல நம்ம சைடு ட்ருத் ( அதாமே வாய்ம!) வெய்ட்டா கீதுன்னு புரிஞ்சு கினு நம்ம வசனத்த அல்லாம் அவை குறிப்பில இர்ந்து டெலிட் பண்டாங்கபா ! அப்பால தம் கட்ட வெளிய வந்த சைடு கேப்புல கதவ சாத்தி தாப்பா போட்டாங்கோ...

சரி விடு நைனா இப்ப நாங்க இன்னா தப்பா கேட்டோம் ...

கரீகிட்டா பேச சொல்ல கக்கூசு கிக்கூசுனு கலீஜ் பண்ணி இப்போ நாங்கதான் கைய புச்சு இஸ்த்தொம்னு கம்ப்ளின்ட் குட்த்தா எப்டி !

எது பேசுனாலும் டீஜன்டா பேசுனும் ; அதாம்பா நமக்கு முக்கியம் !



டிஸ்கி 1 : அனானிங்க அல்லாரும் ஒருதபா கட்சி லைன நல்லா பட்ச்சுகுங்க !
டிஸ்கி 2 : அதுக்கு மேல எதுனா நட்ந்தா அந்த லைன நா எச்சி தொட்டு அழிச்சுடுவேன் !


6 comments:

தமிழ்ப்பறவை said...

நல்லா பொனஞ்சிருக்கீங்க.... ஒரிஜினல் மேட்டரு அவ்வளவாத் தெரியாங்காட்டியும் ஷோக்காத்தான் கீது வாத்யாரே...(நா ஒன்னச் சொன்னேன். அவர இல்ல)....
வாய்த்துக்கள் நயினா...
வரும் உங்கள் பதிவுகள் நல்ல (நகைச்)சுவையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பதிவு...சைடுல ஃபாலோயர் ஆகிக்கிறேன்...

rajan RADHAMANALAN said...

வா நைனா ! குந்து !

♠ ராஜு ♠ said...

செம்ம மெர்சாலாகீதுபா...!
வூடு கட்டாம வுட மாட்டிங்க போலயே..!

Anonymous said...

பொழப்பத்த தட்டாரன் புடுக்கத் தூக்கி நிறுத்தானாம் !

rajan RADHAMANALAN said...

அய்ய! வாத்தியாரு அந்த வேலையெல்லாம் பண்ணலைங்க !

இந்த அனானி இல்லாததையும் , பொல்லாததையும் கெளப்பி விடப் பாக்கறார்

வால்பையன் said...

கலக்கல்!