Tuesday, December 15, 2009

பிரபல வலைப் பதிவர்களிடம் ஒரு பகிரங்க மன்னிப்பு !


கடந்த சில நாட்களாக (சில என்ன பல நாட்களாகவே ) வலையுலகில் ஜோதிட மற்றும் கடவுள் நம்பிக்கை சார்ந்த பதிவுகளில் வலியச் சென்று வாயிழுப்பதும், இது போன்ற கடவுள் , ஜோதிடம் போன்ற நம்பிக்கைகளுக்கெதிராக பதிவுகளிடுவதும் , அவற்றிற்கு ஏராளமான பின் மொழிகளும் அதனூடே வாக்குவாதங்களும் வலுப் பெறுவது தொடர்கின்றது.
குறிப்பாக ஆர் வீ சுப்பையா வாத்தியாரின் வலைத் தளங்களில் நமக்கும் அவர்தம் சிஷ்ய கோடிகளுக்கும் இடையிலான விவாதங்களினூடே மூட நம்பிக்கைகள் குறித்தான வினாக்களை எதிர்கொள்ள கையாலாகாமல் மேற்படி பக்த கோடிகளால் விவாதம் வேறு வகையில் திசைமாறவும் உணர்ச்சி மிகுதியில் அவரது ரசிகர்களை நாமும் சற்று எள்ளல் நடையில் சாடியதும் உண்மை .
அஃதன்றி வேறு சில தளங்களிலும் இதனையொத்த சம்பாஷனைகள் பின்னூட்டங்களில் பொறி பறக்க நடந்தேறிக்கொண்டு இருக்கின்றன.
முதலில் நமக்கும் மேற்காண் ஜோதிட பதிவர்களுக்கும் யாதொரு முன்விரோதாமோ காழ்ப்புணர்ச்சியோ துளியும் கிடையாது ;
இருவேறு நம்பிக்கைகளிடையே இது போன்ற கருத்து மோதல்களில் "பிடிக்காவிடில் ஒதுங்கிக் கொள்வது தானே " எனும் கருத்தின் சாரம் வாத்தியாரின் ரசிகர் தரப்பினின்று வலித் தொலிக்கக் கேட்கிறோம் ;
பிளாகர் போன்ற சமூக வலை தளங்களில் பின்மொழிகளையும் விவாதங்களையும் உத்தேசித்தே கருத்துக்கள் பதிவேற்றப் படுகின்றன . ஆயின் எவரையும் தடுக்கவோ ஒதுக்கவோ பிரியமெனில் ஆகச் சிறந்த முயற்சியில் அங்ஙனம் பிரியம் கொண்ட நபரே ஈடுபடட்டும் , நாம் நுழைவதிலுள்ள நியாயம் குறித்து வினாக்கள் எழுப்புவதில் எந்த பிரயோஜனமும் உள்ளதாகப் படுவதில்லை

அது மட்டுமன்றி வெறும் கும்மி கொட்டுவதற்காக இது போன்ற செயலில் ஈடுபடுவதாகக் கொண்டால் எதற்க்காக உம்மை தெரிவு செய்ய வேண்டும் - நீர் ஊரை ஏமாற்றுவதாகப் படுகிறது - இது எமது ஆழ்ந்த நம்பிக்கை .
அதற்காகவே பின்மொழியிடுகிறோம்
ஆயிரம் பிறை கண்ட அபூர்வ ஜோதிடர்களும் மற்றோரும் பின்னூட்டங்களை மட்டுருத்துவதன் மூலமும் ,அழிப்பதன் மூலமும் உமது முகமூடிக்கு மேல் போர்வை போர்வை போர்த்துவதில் ஒருவகையில் எமக்கு மகிழ்ச்சியே !

இங்ஙனம் ஊரை ஏமாற்றும் வேலையை நீவிர் தெரிந்தே செய்யும் பட்சத்தில் போர்வைஎன்ன பொட்டிக்குள் வேண்டுமானாலும் போய் படுத்துக் கொண்டு தங்கள் திருப் பணியை தொடரலாம் .

அவ்வாறன்றி எதிர் கருத்துகளிருப்பின் மட்டுருத்தல்களை நீக்கி பொதுவான விவாதத்திற்கு வரட்டும்
பதிலளிக்க முயற்சிக்கட்டும்

எதற்க்காக இல்லாவிடிலும் தொடரும் அந்த ஆயிரத்திச் சொச்சம் சிஷ்யர்களின் நாளது வரையிலான நம்பிக்கையினை காப்பாற்றும் நிமித்தமாவது

போர்வை திறமின்
முகமூடி துறமின்

இதுகாறும் சுப்பையா வாத்தியார் மற்றும் இன்னபிற வலை தளங்களில் அவர்தம் நம்ம்பிக்கைக் கெதிராய் கருத்துகளிட்டமைக் காக இப்பதிவின் வழி மன்னிப்புக் கோருகிறேன் ...

இது போன்ற எமது வேலைகள் இனியும் தொய்வின்றி தொடரும் ; மாதமொருமுறை மன்னிப்பும் கோரப்படும் ....






20 comments:

கண்ணா.. said...

sp.vr.சுப்பையா அவர்களின் தளத்தில் நான் தற்போது இட்ட பின்னூட்டம் அங்கு வருமா வராதா என்பது தெரியவில்லை. அதனால் இங்கும்


”மாற்று கருத்துகளுக்கும் மதிப்பளியுங்கள்..

கழிப்பறை, பண்பு இல்லாதவர்கள் என சுடும் வார்த்தைகளை வீசாதீர்கள்.

இது பூமராங் போல் .. உங்களுக்கே திரும்பி வரும்..”

rajan RADHAMANALAN said...

தலைவா ! கழிப்பறை என்ற பதம் என்னால் முதலில் பயன் படுத்தப் பட்டதல்ல ! மாண்பு மிகு வாத்தியாரின் வேலை அது ...
//வருமா வராதா என்பது தெரியவில்லை. //

வரூம் ஆனா வராது !

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

ஆல் இன் ஆல் அழகு ராஜா அவர்களே,
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என்ற உங்க ஸ்டைல் தூள்.
நானும் தொழில் முறை ஜோதிடன் தான். ஜோதிடம் தொடர்பான பதிவுகளையும் அவ்வப்போது போட்டுள்ளேன். கிழி கிழி என்று கிழிச்சு போட பெர்மிட் தரேன் . வாருமய்யா நம்ம வலைப்பூவுக்கு.உம்மை போன்ற பார்ட்டியை தான் தேடிவந்தேன். உம் புண்ணியத்தில் ஜோதிடம் குறித்த பிரமைகளை
ஒழித்துக்கட்டுகிறேன்

rajan RADHAMANALAN said...

அப்பிடி போடுங்க முருகேசன் சார் !

நீங்க மனுஷன் !

மொதல்ல எதுன்னாலும் தில்லா நிக்கணும் !

வால்பையன் said...

இப்பதிவை நான் வழிமொழிகிறேன்!


<a href="http://valpaiyan.blogspot.com/2009/12/blog-post_15.html”>இது என் உளரல்</a>

டவுசர் பாண்டி... said...

நானும் இதை கன்னாபின்னாவென வழி மொழிகிறேன்.

rajan RADHAMANALAN said...

http://classroom2007.blogspot.com/2009/12/blog-post_15.html

rajan RADHAMANALAN said...

மேற்காண் லிங்கில் மேதகு வாத்தியார் கூறியுள்ளதாவது

"எவன் தன் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ
அவனுக்கு வெப்பமும், குளிர்ச்சியும் ஒன்றுதான்.
இன்பமும், துன்பமும் ஒன்றுதான்.
பெருமையும், சிறுமையும் ஒன்றுதான்.
வறுமையும், செழுமையும் ஒன்றுதான்
நல்லதும் கெட்டதும் ஒன்றுதான்!."
- பரந்தாமன்.//

பதில் கேட்டா பாட்டு பாடறார்

என்னவோ பரந்தாமனுக்கு ஸ்தோத்திரம்

ஸ்ரீ said...

சரி நக்கல் பார்ட்டிங்கய்யா நீங்க.துணைக்கு வாலு வேற .பட்டய கெளப்புங்க.

க‌ரிச‌ல்கார‌ன் said...

போட்டுத்தாக்கு.

//இது போன்ற எமது வேலைகள் இனியும் தொய்வின்றி தொடரும் ; மாதமொருமுறை மன்னிப்பும் கோரப்படும்//
உங்க‌ நேர்மை என‌க்கு பிடிச்சுருக்கு ச‌கா.

rajan RADHAMANALAN said...

துணைக்கு எல்லாம் இல்ல தலைவா ! பிலாகே அவரோடதுதான் ... நான் சும்மா பினாமி

rajan RADHAMANALAN said...

//உங்க‌ நேர்மை என‌க்கு பிடிச்சுருக்கு ச‌கா.//

எங்க ஊர்ல கூட எல்லாரும் அப்பிடிதான் சொல்லுவாங்க !

டம்பி மேவீ said...

raittu.....naan chinna paiyan sagaa....melum naan oru tube light, athanal purinthu kolla konjam time aagum

Anonymous said...

1940-50 வருடங்களில் பிரிண்ட் செய்யப்பட்ட பளைய சோசிய பொஸ்தகத்த படிச்ச மாதிரியே இருக்கு!

rajan RADHAMANALAN said...

எவண்டா என்னமாதிரி எழுதறவன் ? அதுவும் அம்பது வருசத்துக்கு முன்னால !

rajan RADHAMANALAN said...

நீங்க கவலை படாதீங்க தலைவா ! சோசியல் சைன்ஸ்ல நீங்க கண்டிப்பா பாசாயிடுவீங்க

rajan RADHAMANALAN said...

@ டம்பீ மேவி

அப்படில்லாம் சொல்லாதீங்க தல !

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளோ தன்னடக்கம் கூடாது

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இறைவனை நம்பி பொழைப்பை நடத்தும் ஆட்களும் இருக்கிறார்கள்............நாத்திகம் பேசி பொழப்பை ஓட்டுகிறவர்களும் இருக்கிறார்கள்....
உங்கள் கருத்துகளை உங்கள் வலைப்பூவில் எழுதுகிறீர்கள்....வாழ்த்துகள்!
என்னுடைய ஒரு சிறு வேண்டுகோள்.....தயவு செய்து பிறர் மனம் புண்படுமாறு எழுதாதீர்கள்......உங்களுக்கும் "நாத்திக" வியாபாரிகளுக்கும் கொஞ்சம் வேறுபாடு இருக்கட்டும்.

cheena (சீனா) said...

நான் வல்லப்பா இந்த ஆட்டத்துக்கு

Vani said...

இது போன்ற எமது வேலைகள் இனியும் தொய்வின்றி தொடரும் ; மாதமொருமுறை மன்னிப்பும் கோரப்படும் ....//

super!!!!!